Home Blog Page 3698

சிவனொளிபாதமலை யாத்திரை இன்று ஆரம்பம்

2021 ஆம் ஆண்டுக்கான சிவனொளிபாதமலை யாத்திரை பூரணை தினமான இன்று 29.12.2020 ஆரம்பமாகியது.

சிவனொளிபாதம் (சிங்களவர்கள் ஸ்ரீபாத என்றும் அழைப்பர்) கடல் மட்டத்திலிருந்து (7,359 அடி) உயரமான கூம்பு வடிவிலான மலையாகும். இம்மலையானது சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களுக்கிடையிலான எல்லையில் அமைந்துள்ளது.

மலையுச்சியில் காணப்படும் 1.8 மீட்டர் அளவான பாறை அமைப்பு கௌதம புத்தரின் காலடி சுவடாக பௌத்தர்களால் கருதப்படுகிறது.

இந்து சமயங்களின் நம்பிக்கைகளின் படி சிவனின் காலடி சுவடாக கருதப்படுவதோடு இஸ்லாமியர்கள் இதை (பாவா ஆதம் மலை) ஆதாமின் காலடி சுவடாக கருதுகின்றனர்.

இரத்தினபுரி பெல்மதுளை கல்பொத்த ரஜமகா விகாரையிலிருந்து புனித விக்கிரகங்கள் நல்லதண்ணி பாதை வழியாக 28.12.2020 அன்று நள்ளிரவு மலையுச்சிக்கு எடுத்து செல்லப்பட்டதாக சிவனொளிபாதமலை நாயக்க தேரர் பெங்கமுவே தம்மதின்ன தெரிவித்தார். இந்த முறை 4 வீதிகளின் ஊடாக ஊர்வலம் பயணித்தது.

அந்தவகையில் பலாங்கொடை – பொகவந்தலாவ வீதியில் ஊர்வலம் பயணித்து, அவிசாவளை, அட்டன் – நல்லதண்ணி ஊடாக சிவனொளிபாதமலைக்கு ஒரு ஊர்வலம் சென்றது. மற்றைய ஊர்வலம் குருவிட்ட – இரத்தினபுரி வீதி ஊடாக பயணித்தது. மற்றது, பெல்மதுளை இரத்தினபுரி – ரஜமாவத்தை வழியாக சென்றது.

மேலும், சிவனொளிபாதமலை பருவகால யாத்திரையில் பங்கேற்கும் பக்தர்களுள் ஒரே தடவையில் 200பேருக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் யாத்திரையில் பங்கேற்கும் அடியார்கள் தத்தமது பிரதேச செயலகங்களில் பதிவு செய்வதுடன் தனிமைப்படுத்தப்படுத்தலுக்கு உட்படுத்தப்படவில்லை என்பதைனை பொதுசுகாதார பரிசோதகர்களினால் உறுதிப்படுத்தப்பட்ட அனுமதி பத்திரமொன்றை தம்வசம் வைத்திருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை எதிர்வரும் ஜனவரி மாதம் சிவனொளிபாதமலை பருவகால யாத்திரையில் பங்கேற்பதை தவிர்த்து செயற்படுமாறு நுவரெலியா மாவட்ட செயலகம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

க.கிசாந்தன்

கொரோனா அச்சம் – கம்பளையில் 100 இற்கும் மேற்பட்ட கடைகளுக்கு பூட்டு!

கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக கம்பளை நகரில் 100 இற்கும் மேற்பட்ட வர்த்தக நிலையங்கள் நேற்று முதல் (29) மூடப்பட்டுள்ளன.

மேற்படி வர்த்தக நிலையங்களுக்கு வியாபாரநிமித்தம் வந்துசென்ற பிஸ்கட் கம்பனியொன்றின் விற்பனை முகவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்தே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களும், அங்கு தொழில் புரிந்தவர்களும் சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

பிஸ்கட் கம்பனியின் விற்பனை முகவர் காய்ச்சல் காரணமாக கடந்த 24 ஆம் திகதி கம்பளை வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். இதன்போது எழுமாறாக அவருக்கு பிசிஆர் பரிசோதனை நடத்தப்பட்டது. பரிசோதனை முடிவுகள் 26 ஆம் திகதி வெளியாகின. இதில் கம்பளை, அட்டபாகை பகுதியைச் சேர்ந்த 29 வயதான விற்பனை முகவருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே குறித்த விற்பனை முகவர், வியாபாரம் நிமித்தம்வந்துசென்ற வியாபார நிலையங்கள் நேற்று முதல் இழுத்து மூடப்பட்டுள்ளன.

கம்பளை நகரப்பகுதியில் கொரோனா வைரஸ் அண்மைக்காலமாக வேகமாக பரவிவருகின்றது.

கம்பளை நிருபர் – லாவண்யா

2024 இலும் சஜித் பிரேமதாசவே ஜனாதிபதி வேட்பாளர்!

2024 ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையில் அமையவுள்ள கூட்டணியின் வேட்பாளராக சஜித் பிரேமதாசவே போட்டியிடுவார் – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

கொழும்பில்  நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போது 2024 ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னரே எமது தரப்பு வேட்பாளரின் பெயர் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படும். கட்சி மற்றும் கூட்டணியின் தலைவர்தான் வேட்பாளராக களமிறங்குவது சம்பிரதாயம்.

அந்தவகையில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவராக சஜித் பதவி வகிக்கின்றார். எதிர்காலத்தில் அமையவுள்ள கூட்டணியின் தலைவராகவும் அவரே செயற்படுவார். எனவே, சஜித்தான் ஜனாதிபதி வேட்பாளர் என்பது தெளிவு. தேர்தலை எதிர்கொள்வதற்கான பலமான வேட்பாளரும் அவரே. அவரைவிட மாற்றுவழி இல்லை. அதற்கான தேவையும் எழாது.

அதேவேளை, இந்த அரசாங்கம் நாட்டை வங்குரோத்து நிலைக்கு அழைத்துச்செல்கின்றது. பொருளாதாரம் மற்றும் நிதித்துறைகள் வீழ்ச்சியடைந்துள்ளன. நாட்டை மீட்டெடுக்க வேண்டுமானால் அதற்கான அணி ஐக்கிய மக்கள் சக்தியாகும். அந்த சக்தியின் பின்னால் மக்கள் அணிதிரளவேண்டும். ” – என்றார்.

பசறை பகுதியில் மேலும் இருவருக்கு கொரோனா!

பசறை பகுதியில் டெமேரியாவில் 42 வயதுடைய நபர் ஒருவருக்கும், இங்குருகடுவ வீதி பொல்காலந்த எனும் இடத்தைச் சேர்ந்த 36 வயதுடைய நபர் ஒருவருக்கும் கொரோனா தொற்று நேற்று (28) உறுதி செய்யப்பட்டுள்ளது.

டெமேரியா தோட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அடையாளம் காணப்பட்ட பெண்ணின் கணவருக்கும் நேற்றைய தினம் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து பொல்காலந்த இங்குருகடுவ பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவருக்குமே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர் கொழும்பிலிருந்து வருகை தந்து தனிமைப் படுத்தப்பட்டு PCR பரிசோதனை மேற்கொண்ட பின்னரே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.மேலும் இவர்களை தனிமைப்படுத்தல் முகாமுக்கு இன்றைய தினம் அழைத்து செல்லப்பட உள்ளதாக சுகாதார பரிசோதகர் V. ராஜதுரை தெரிவித்தார்.

 

‘கொரோனா’ மேலும் மூவர் உயிரிழப்பு! பலி எண்ணிக்கை 194 ஆக உயர்வு!!

கொரோனா’ வைரஸ் தொற்றால் மேலும் மூவர் உயிரிழந்துள்ளனர்.

இதன்படி கொரோனா வைரஸ் தாக்கத்தால் இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 194 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2ஆவது அலைமூலம் இதுவரை 37 ஆயிரத்து 890பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது. 2ஆவது அலைமூலம் 181 பேர் உயிரிழந்துள்ளனர். கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவு உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளன.

இன்று மாத்திரம் 530 பேருக்கு கொரோனா தொற்று

நாட்டில் மேலும் 164 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டில் இன்று மாத்திரம் 530 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 41 ஆயிரத்து 584 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 33 ஆயிரத்து 221 பேர் குணமடைந்துள்ளனர். 8 ஆயிரத்து 8 பேர் சிகிச்சைபெற்றுவருகின்றனர். 194 பேர் உயிரிழந்துள்ளனர்.

2 ஆவது அலைமூலம் (மினுவாங்கொட, பேலியகொட,சிறைச்சாலை கொத்தணிகள்) இதுவரையில் 37 ஆயிரத்து 890 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

காட்மோர் தோட்டத் தொழிலாளர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டம்!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட காட்மோர் தனியார் தோட்டத்தில் 4 பிரிவுகளில் வசிக்கும் தோட்டத் தொழிலாளர்கள் இன்று பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமக்கான சேவை கொடுப்பனவைக் கோரியும், ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி ஆகியன முறையாக செலுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுமே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மேற்படி கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்ட பின்னரே, தோட்டத்தை புதிய நிர்வாகத்திடம் கையளிக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். தோட்ட முகாமையாளரிடம் மனுவொன்றும் கையளிக்கப்பட்டது.

நிர்வாகத்திடமிருந்து உரிய பதில் கிடைக்கும்வரை போராட்டம் தொடரும் எனவும் தொழிலாளர்கள் குறிப்பிட்டனர்.

 மஸ்கெலியா நிருபர் – பெருமாள்

ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் செந்தில் தொண்டமான் முன்வைத்த சிறப்பு யோசனை

பண்டாரவளை பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம், நாடாளுமன்ற உறுப்பினர் மேஜர் தெனிபிட்டிய , இ.தொ.காவின் உப தலைவர் செந்தில் தொண்டமான் ஆகியோர் தலைமையில் இன்று நடைபெற்றது.

காவல்துறை, வனத்துறை, சாலை, சுரங்கம், விவசாய சேவைகள், இலங்கை போக்குவரத்து சபை, சுகாதாரம், மின்சாரம், கல்வி, விளையாட்டு, அனர்த்த முகாமைத்துவ அமைச்சு ஆகிய பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளுடன் பிரதேச செயலாளர் இக் கூட்டத்தை ஏற்பாடு செய்தார்.

2015 ஆம் ஆண்டு முதல் கடந்த ஐந்து ஆண்டுகளாக இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பண்டாரவளை பகுதியைச் சேர்ந்த பெருந்தோட்டத் துறை மக்களுக்கு மாற்று வசதிகள் எதுவும் வழங்கப்படவில்லை.

அம்மக்களை உமா ஓயா திட்டத்தால் பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களுக்காக தொடங்கப்படவுள்ள வீட்டுவசதிகள் இடமாற்றம் திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட வேண்டும் என்ற சிறப்பு கோரிக்கையை செந்தில் தொண்டமான் இக்கூட்டத்தில் முன்வைத்தார்.

மரக்கறி மாபியாக்களுக்கு ஆப்பு – அரசின் வேலைத்திட்டத்துக்கு விவசாயிகள் ஆதரவு!

லிந்துலை பிரதேசத்திலுள்ள விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே நடவடிக்கை எடுத்தார்.

நுவரெலியா மாவட்டத்தில் லிந்துலை பிரதேசத்திலுள்ள விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், விவசாயிகள் மற்றும் விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு ஒன்று 28.12.2020 இன்று லிந்துலையில் நடைபெற்றது.

இதன்போது, விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறியப்பட்டது.

இதன்போது, விவசாயிகளிடமிருந்து, விவசாய அமைச்சு நேரடியாகவே காய்கறிகளை கொள்வனவு செய்வது குறித்தும், இத்திட்டத்தை முன்னெடுக்கும்போது எழக்கூடிய பிச்சினைகள் சம்பந்தமாகவும் இதன்போது ஆராயப்பட்டதுடன், விவசாயிகளின் யோசனைகளும் உள்வாங்கப்பட்டன.

தாம் உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபட்டாலும் இடைத்தரகர்களே அதிக இலாபம் ஈட்டுகின்றனர். எனவே, இதற்கு எதிராக அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்துக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என இச்சந்திப்பில் விவசாயிகள் உறுதியளித்துள்ளனர்.

குறிப்பாக கொழும்பிலே ஒரு கிலோ லீக்ஸ் 100 ரூபாவுக்கு விற்கப்படுகின்றதெனில் தம்மிடமிருந்து 20 முதல் 25 ரூபாவுக்கே லீக்ஸ் கொள்வனவு செய்யப்படுகின்றது எனவும், தரகர்கூலி, போக்குவரத்து செலவு ஆகியவற்றை கழித்தால் இறுதியில் ஒரு கிலோவுக்கு தமக்கு 12 ரூபாவே எஞ்சுகின்றது எனவும் விவசாயிகள் சுட்டிக்காட்டினர்.

எனவே, அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் புதிய வேலைத்திட்டம் வெற்றியளிக்கவேண்டுமெனில் எவ்வாறு அத்திட்டம் முன்னெடுக்கப்படவேண்டும் எனவும் விவசாயிகள் ஆலோசனைகளை முன்வைத்தனர்.

அத்துடன், லிந்துலை பகுதியில் விவசாயிகளின் விளைச்சலை சேகரிப்பதற்கு மத்திய நிலையமொன்று அமைக்கப்படவேண்டும், உரம் வகைகளை சேமிப்பதற்கு களஞ்சியசாலை அவசியம் என விவசாயி அபிவிருத்தி அதிகாரிகள் இச்சந்திப்பின்போது கோரிக்கை விடுத்தனர்.

இதனை நிறைவேற்றுவதற்கு விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே நடவடிக்கை எடுத்தார்.

சிவனொளிபாத மலை யாத்திரை நாளை ஆரம்பம்!

2021ஆம் ஆண்டுக்கான சிவனொளிபாதமலை பருவகால யாத்திரை, பூரணை தினமான நாளை (29) ஆரம்பமாகின்ற நிலையில், புனித சின்னங்களை எடுத்துச்செல்லும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

இரத்தினபுரி பெல்மதுளை கல்பொத்த ரஜமகா விகாரையிலிருந்து புனித விக்கிரகங்கள், நல்லதண்ணி பாதை வழியாக 28.12.2020 இன்று நள்ளிரவு மலையுச்சிக்கு எடுத்து செல்லப்படவுள்ளது என சிவனொளிபாதமலை நாயக்க தேரர் பெங்கமுவே தம்மதின்ன தெரிவித்தார்.

இதன்படி பலாங்கொடை – பொகவந்தலாவ வீதியில் ஊர்வலம் பயணித்து, அவிசாவளை, ஹட்டன் – நல்லதண்ணி ஊடாக சிவனொளிபாதமலைக்கு ஒரு ஊர்வலம் சென்றது. மற்றைய ஊர்வலம் குருவிட்ட – இரத்தினபுரி வீதி ஊடாக பயணித்தது. மற்றது, பெல்மதுளை இரத்தினபுரி – ரஜமாவத்தை வழியாக சென்றது.

இதேவேளை சிவனொளிபாதமலைக்கு பிரவேசிக்கும் அனைத்து மார்க்கங்களும் பொதுசுகாதார பரிசோதகர்களினால் 24 மணிநேர கண்காணிப்புக்குட்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிவனொளிபாதமலை பருவகால யாத்திரையில் பங்கேற்கும் பக்தர்களுள் ஒரே தடவையில் 200பேருக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் யாத்திரையில் பங்கேற்கும் அடியார்கள் தத்தமது பிரதேச செயலகங்களில் பதிவு செய்வதுடன் தனிமைப்படுத்தப்படுத்தலுக்கு உட்படுத்தப்படவில்லை என்பதைனை பொதுசுகாதார பரிசோதகர்களினால் உறுதிப்படுத்தப்பட்ட அனுமதி பத்திரமொன்றை தம்வசம் வைத்திருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை எதிர்வரும் ஜனவரி மாதம் சிவனொளிபாதமலை பருவகால யாத்திரையில் பங்கேற்பதை தவிர்த்து செயற்படுமாறு நுவரெலியா மாவட்ட செயலகம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

க.கிசாந்தன்

சினிமா

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

செய்தி

சிவனு லெச்சுமணன் நினைவேந்தல் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிப்பு!

0
மலையக மண்ணுரிமைப் போராட்டத்தின் முதல் உயிர்க்கொடையாளி சிவனு லெச்சுமணனின் 49-ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் ஏற்பாட்டில் இன்று உணர்வுப்பூர்வமாக நடைபெற்றது. டெவன் தோட்டத்திலுள்ள லெச்சுமணனின் நினைவிடத்திலும், அவரின் பிறப்பிடமான யொக்ஸ்போர்ட்...

“நாடு முழுவதும் 23,000 மில்லியன் ரூபாய் மதிப்பிலான அபிவிருத்தித் திட்டங்களுக்கு அனுமதி”

0
  “சமூக சக்தி” தேசிய திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி மேற்பார்வை - 13,977 சமூக அபிவிருத்தி சபைகள் நிறுவப்பட்டுள்ளன - நாடு முழுவதும் 23,000 மில்லியன் ரூபாய் மதிப்பிலான அபிவிருத்தித் திட்டங்களுக்கு அனுமதி “சமூக சக்தி” வறுமை...

சீமானை சந்தித்தார் முதல்வர் விஜய்!

0
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் , நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை அவரது இல்லத்தில் இன்று சந்தித்து வாழ்த்து பெற்றார். சென்னை நீலாங்கரையில் உள்ள சீமானின் இல்லத்துக்கு சென்ற ஜோசப் விஜய்யை,...