Home Blog Page 3722

நாட்டில் மேலும் 420 பேருக்கு கொரோனா தொற்று!

நாட்டில் மேலும் 420 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பேலியகொடை கொத்தணிமூலம் 352 பேருக்கும் சிறைச்சாலை கொத்தணிமூலம் 68 பேருக்குமே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.

அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்து 898 ஆக அதிகரித்துள்ளது.

 2 ஆவது அலைமூலம் (மினுவாங்கொட, பேலியகொட,சிறைச்சாலை கொத்தணிகள்) இதுவரையில் 30 ஆயிரத்து 257 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

‘கொரோனா’வின் பிடிக்குள் இருந்து 24,867 பேர் மீண்டனர்!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 558 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்து 867 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் 8 ஆயிரத்து 457  பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 154 பேர் உயிரிழந்துள்ளனர்.

PT6 ரக பயிற்சி விமானம் விபத்து – விமானி பலி!

திருகோணமலை சீனன்குடா விமானப்படை தளத்திலிருந்து விமானி ஒருவருடன் பயணித்த PT6 ரக பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதில் விமானி உயிரிழந்துள்ளார்.

கந்தளாய், சூரியபுர பகுதியில் வானில் பறந்துகொண்டிருந்தபோதே, விமானத்துடனான தொடர்பு திடீரன் துண்டிக்கப்பட்டது. இதன்பின்னர் விமானம் விபத்துக்குள்ளானமை கண்டறியப்பட்டது.

இது தொடர்பில் விமானப்படையினர் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

நுவரெலியா மாநகரசபையின் பட்ஜட் நிறைவேற்றம்! இ.தொ.கா. நடுநிலை!!

நுவரெலியா மாநகர சபையின் 2021 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் மேலதிக 12 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நுவரெலியா மாநகர சபையின் 2021 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தை நுவரெலியா மாநகர சபை முதல்வர் சந்தனலால் கருணாரத்ன இன்று செவ்வாய்க்கிழமை (15.12.2020) நடைபெற்ற மாநகர சபை விசேட வரவு செலவு கூட்டத்தில் சமர்ப்பித்தார்.

இதன்போது வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக ஜக்கிய தேசிய கட்சியின் 12 உறுப்பினர்களும் முதல்வர் உட்பட 13 பேர் ஆதரவாக வாக்களித்தனர்.

வரவு செலவு திட்டத்திற்கு எதிராக பொதுஜன ஜக்கிய முன்னணி உறுப்பினர் மகிந்த தொட்மபே கமகே  வாக்களித்தார்.பொதுஜன ஜக்கிய முன்னணியின் ஏனைய –  சபைக்கு வருகை தந்திருந்த எம்.பி.நவரட்ணம் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. இவருடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பான இரண்டு உறுப்பினர்களான சட்டத்தரணி சிவன்ஜோதி யோகராஜ், ஜெயராம் வினோஜி ஆகியோர் வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் நடுநிலை வகித்தனர்.

இந்த வரவு செலவு திட்டத்திற்கு பொதுஜன முன்னணி சார்பில் 4 உறுப்பினர்களும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 2 உறுப்பினர்களும் சபைக்கு வருகை தரவில்லை.பொதுஜன முன்னணி சார்பாக திருமதி.சிவரஞ்சனி, திருமதி.அனுசா சாமலி இந்திக முனவீர திருமதி.தமரா திசாநாயக்க ஆகியோரே வரவு செலவு கூட்டத்திற்கு வருகை தராதவர்கள் ஆவர்.

இவர்களுடன் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவம் செய்கின்ற வணக்கற்குறிய மாகந்துரே ரத்ன வன்ச தேரர் மற்றும் நலீன் கீர்த்தி சமரஜீவ ஆகியோரும் நேற்றைய கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.இவர்கள் விடுமுறை கோரி சபைக்கு கடிதங்கள் அனுப்பியிருந்ததுடன் அந்த கடிதங்கள் சபையில் மாநகர முதல்வர் சபைக்கு சமர்ப்பித்து அங்கீகாரம் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

அதே நேரம் இங்கு கருத்து தெரிவித்த மாநகர சபை முதல்வர் சந்தணலால் கருணாரத்ன இந்த வரவு செலவு திட்டமானது மக்கள் நலன் சார்ந்த திட்டம் எனவும் 2021 ஆம் ஆண்டு மிகவும் சவால் மிகுந்த ஆண்டாக அமையும் எனவும் குறிப்பிட்டார்.

நுவரெலியா நிருபர் எஸ்.தியாகு

விபத்துக்குள்ளானது PT6 ரக பயிற்சி விமானம்! விசாரணைகள் ஆரம்பம்!!

திருகோணமலை சீனன்குடா விமானப்படை தளத்திலிருந்து விமானி ஒருவருடன் பயணித்த PT6 ரக பயிற்சி விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.

கந்தளாய், சூரியபுர பகுதியில் வானில் பறந்துகொண்டிருந்தபோதே, விமானத்துடனான தொடர்பு திடீரன் துண்டிக்கப்பட்டது. இதன்பின்னர் விமானம் விபத்துக்குள்ளானமை கண்டறியப்பட்டது.

இது தொடர்பில் விமானப்படையினர் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இலங்கையில் திடீரென மாயமான விமானம்!

திருகோணமலை சீனன்குடா விமானப்படை தளத்திலிருந்து விமானி ஒருவருடன் பயணித்த PT6 ரக பயிற்சி விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

கந்தளாய், சூரியபுர பகுதியில் வானில் பறந்துகொண்டிருந்தபோதே, விமானத்துடனான தொடர்பு இவ்வாறு துண்டிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் விமானப்படையினர் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

லிந்துலை விபத்தில் ஒருவர் பலி! 10 பேர் தெய்வாதீனமாக உயிர் தப்பினர்!!

நுவரெலியா மாவட்டத்திலுள்ள லிந்துலை, ஊவாகலை பகுதியில் இன்று (15.12.2020) முற்பகல் 10 மணியளவில் கெப் ரக வாகனமொன்று 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் 10 பேர் தெய்வாதீனமாக உயிர் தப்பினர்.

லிந்துலை, ஊவாகலை பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான எம். இன்ஸமாம் (வயது – 32) என்பவரே விபத்தில் உயிரிழந்தவராவார். அவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக லிந்துலை வைத்தியசாலையிலிருந்து, நுவரெலியா வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.

லிந்துலை ஊவாகலை பகுதியில் வீதியொன்றை புனரமைப்பதற்காக சீமெந்து மூடைகளை ஏற்றிச்சென்ற கெப் ரக வாகனமே, இயந்திரகோளாறு காரணமாக இவ்வாறு விபத்துக்குள்ளானது. வாகனம் பள்ளத்தை நோக்கி சாயும்வேளையில் சாரதி உட்பட அதில் இருந்தவர்கள் வெளியே பாய்ந்து உயிர் தப்பினர். ஒருவர் மாத்திரம் வாகனத்துடன் கீழேசென்று உயிரிழந்துள்ளார்.

வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். லிந்துலை பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

க.கிசாந்தன்

இரஜவலை இந்து தேசிய கல்லூரிக்கு விளையாட்டு பயிற்றுவிப்பாளர்கள் நியமனம்!

கண்டி – திகனை இரஜவலை இந்து தேசிய கல்லூரியின், பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில், கல்லூரி மாணவர்களுக்கு  மென் பந்து, வன் பந்து Cricket, வலைப் பந்து, கரப்பந்து, குறுந்தூரம், நெடுந்தூர ஓட்டப் போட்டி, தற்காப்பு கலை, Carom, Hockey, ஆண் மாணவர்களுக்கான மேலைத்தேய இசை போன்ற விளையாட்டுக்களுக்குரிய பயிற்சிகளை வழங்குவதற்கான ஆரம்ப நிகழ்வு கடந்த 12 ஆம் திகதி நடைபெற்றது.  இதில் பயிற்றுவிப்பாளர்களுக்கு அனுமதி கடிதமும் வழங்கி வைக்கப்பட்டது.

பழைய மாணவர்சங்க குழாமின் அயராத முயற்சியினால் இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கல்லூரியின் அதிபர் திருமதி ஆர். கோகிலேஸ்வரி,  பழைய மாணவர்சங்க பிரதி தலைவர் ஆர். சரண்ஜீவன், செயலாளர் கே. சிவச்சந்திரன், பொருளாளர் சிவரூபன், உபதலைவி என். சுபாஷினி மற்றும் பாடசாலையின் பிரதி அதிபர் ஆசியர்கள் மாணவர்கள் பழைய மாணவச்சங்கத்தின் உறுப்பினர்கள் என பலரும் நிகழ்வில் பங்கேற்றனர்.

 

வாகன இலக்கத் தகட்டிலிருந்து மாகாணக் குறியீட்டு எழுத்துக்களை நீக்க அமைச்சரவை அனுமதி!

மாகாணக் குறியீட்டு எழுத்துக்களை அகற்றுவதன் மூலம் பயனாளிகளுக்கு இலகுவான முறையில் வாகன இலக்கத் தகடுகளை வழங்கும் பொறிமுறையை தயாரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில்போது இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.

” வாகனங்களைப் பதிவு செய்யும்போது வாகன இலக்கத் தகடுகளுக்கு மாகாணத்தை இனங்கண்டு கொள்வதற்கான குறியீட்டு எழுத்துக்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன்மூலம் புகைப்பரிசோதனை மற்றும் வருடாந்த வருமானவரிப் பத்திரம் வழங்குவதற்கு இலகுவாக இருக்கின்றது.

எனினும், மாகாணங்களுக்கிடையிலான வாகன உரித்தை மாற்றும் ஒவ்வொரு தடவையும் வாகன இலக்கத்தகட்டை மாற்ற வேண்டியுள்ளதால், சேவை பெறுநர்களும் மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களமும் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளது.

மோட்டார் வாகனங்களைப் பதிவு செய்யும் போது ஒவ்வொரு வாகனத்திற்கும் தனித்துவமான வாகன இலக்கம் வழங்கப்படுவதால், திணைக்களத்தின் தரவுக் களஞ்சியத்தின் மூலம் சரியான வகையில் தனித்துவத்தை அடையாளங் காணக்கூடிய வசதிகள் உண்டு. குறித்த விடயங்களைக் கருத்தில் கொண்டு, வாகன இலக்கத் தகடுகள் வழங்கும் போது மாகாணக் குறியீட்டு எழுத்துக்களை நீக்குவதற்காக போக்குவரத்து அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.” – என்றும் கூறப்பட்டது.

மாகாணசபைத் தேர்தல் குறித்து ஆராய கட்சி தலைவர்கள் கூட்டம்!

மாகாணசபைத் தேர்தல் குறித்து ஆராய்வதற்கு விரைவில் கட்சி தலைவர்கள் கூட்டம் நடத்தப்படும் என்று அமைச்சரவை பேச்சாளரும், ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதன்போது கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

” மாகாணசபைத் தேர்தல் பற்றி அமைச்சரவைக் கூட்டத்தில் ஆராயப்பட்டது. அதனை நடத்தும் விதம் பற்றி நீண்டகாலம் விவாதம் நடைபெற்றுவருகின்றது. எனவே, கட்சி தலைவர்கள் கூட்டத்தை நடத்தி, அதன்போது எட்டப்படும் இணக்கப்பாட்டின் அடிப்படையில் மீண்டுமொரு அமைச்சரவை பத்திரத்தை முன்வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.

அதன்பின்னர் அந்த யோசனை குறித்த ஆராயப்பட்டு, இறுதி முடிவு எடுக்கப்படும். எனினும், நல்லாட்சிபோல் தேர்தலை ஒத்திவைக்கும் திட்டம் எமது அரசாங்கத்துக்கு கிடையாது. மக்களின் நன்மைகளுக்காகவே மூன்றிலிரண்டு பெரும்பான்மைபலம் பயன்படுத்தப்படும்.” – என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

சினிமா

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

செய்தி

தமிழக முதல்வராக பதவியேற்றார் ஜோசப் விஜய்!

0
தமிழக முதல்வராக பதவியேற்றார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை 10 மணியளவில் பதவியேற்பு விழா தொடங்கியது. வந்தே மாதரம் பாடல் இசைக்க பதவியேற்பு...

தவெக முதற்கட்ட அமைச்சரவை பட்டியல் வெளியீடு

0
தமிழக வெற்றிக் கழக அரசின் தவெக முதற்கட்ட அமைச்சர் பட்டியலை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் கீழ்காணும் பெயர்கள் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளன: புஸ்ஸி என்.ஆனந்த் ஆதவ் அர்ஜுனா கே.ஜி.அருண்ராஜ் கே.ஏ.செங்கோட்டையன் வெங்கடரமணன் நிர்மல்குமார் ராஜ்மோகன் டி.கே.பிரபு கீர்த்தனா 120 எம்எல்ஏக்களின் ஆதரவுக் கடிதங்களை ஆளுநரிடம் விஜய் நேற்று...

மரக்கறி விலைப்பட்டியல் (10.05.2026)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (10) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...