Home Blog Page 3723

‘தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய1,445 பேர் கைது’

தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய ஆயிரத்து 445 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.

முகக்கவசம் அணியாத, சமூக இடைவெளியை பேணாத மற்றும் முடக்கப்பட்ட பகுதிகளில் பொதுவெளியில் நடமாடியமை ஆகிய குற்றச்சாட்டுகளுக்காக கடந்த ஒக்டோபர் 30 முதல் நேற்றுவரை 1,445 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று மாத்திரம் 55 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மொனறாகலை, படல்கும்பர நகரத்துக்கு 3 நாட்களுக்கு பூட்டு!

மொனறாகலை, படல்கும்பர நகரின் சகல வர்த்தக நிலையங்களும் இன்று முதல் தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு மூடுவதற்கு படல்கும்பர வர்த்தக சங்கம் தீர்மானித்துள்ளது.
 
இதன்படி மீண்டும் நகரின் வர்த்தக நிலையங்கள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை திறக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
கடந்தசில நாட்களில் படல்கும்பர பிரதேச அலுபொத்த பகுதியில் இருபதுக்கு மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள் பி.சி.ஆர் பரிசோதனையில் கண்டறியப்பட்டதை பொதுமக்கள் சுகாதார பாதுகாப்பு நலன் கருதி குறித்த பகுதியை அண்மித்த படல்கும்பர நகரவர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடுவதற்கான நடவடிக்கைகளை சுகாதார அதிகாரிகள் மேற்கொண்டனர்.
 
நடராஜா மலர்வேந்தன்

2ஆவது அலை – மத்திய மாகாணத்தில் 1,420 பேருக்கு கொரோனா!

கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2ஆவது அலைமூலம் கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் நேற்றுவரை மத்திய மாகாணத்தில் ஆயிரத்து 420 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

மினுவாங்கொட மற்றும் பேலியகொட கொத்தணிகள்மூலமே இவர்களுக்கு இவ்வாறு வைரஸ் பரவியது.

நுவரெலியா மாவட்டத்தில் நேற்று மாத்திரம் 38 பேருக்கு வைரஸ் தொற்றியது. அம்மாவட்டத்தில் இதுவரை 263 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கண்டி மாவட்டத்தில் கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் நேற்றுவரை 1,078பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது. மாத்தளை மாவட்டத்தில் 79 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ரிஷாட் கட்சியின் முன்னாள் எம்.பி. அப்துல்லா மஹ்ரூப் கைது!

திருகோணமலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் இன்று (15) காலை 6.30 மணியளவில் காலை அவரது கிண்ணியாவில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சதோச நிறுவனத்தின் வாகனம் ஒன்றினை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ள உள்ளதாகவும் இதனால் இவரை கொழும்புக்கு அழைத்துச் செல்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்படும் வேளையில் தனது வாகனத்தில் கொழும்பிற்கு வருவதாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் குற்றத் தடுப்புப் பிரிவினருக்கு தெரியப்படுத்தியும் தங்களுடைய வாகனத்தில் அழைத்துச் செல்வதாக கூறப்பட்டுள்ளது எனவும் அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

இவர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளராக செயற்படுகின்றார்.

ரஜினியின் புதிய கட்சி பெயர் வெளியானது! சின்னம் ஆட்டோவா?

நடிகர் ரஜினிகாந்த் தரப்பில் மக்கள் சேவைக் கட்சி என்ற பெயரில் தேர்தல் ஆணையத்தில் பெயர்ப்பதிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் கடந்த 23 ஆண்டுகளுக்கு மேலாக வலியுறுத்தி வந்தனர். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு இந்த கோரிக்கை அவரது ரசிகர்கள் மத்தியில் மேலும் வலுத்தது.

இதைத்தொடர்ந்து கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ரசிகர்கள் சந்திப்பை ரஜினிகாந்த் நடத்தினார். அப்போது தான் அரசியலுக்கு வருவதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.

இந்த அறிவிப்பை வெளியிட்டு, 1½ ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும், ரஜினிகாந்த் தனிக்கட்சி தொடங்காதது அவரது ரசிகர்கள் மத்தியில் சற்று ஏமாற்றத்தையும், வருத்தத்தையும் அளித்து வந்தது. நாடாளுமன்ற தேர்தலிலும், சட்டசபை தொகுதி இடைத்தேர்தலிலும் எந்த முடிவையும் அறிவிக்காமல் ரஜினிகாந்த் தனது ரசிகர்களுக்கு மௌனத்தையே பரிசாக தந்தார்.

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் பற்றிய தனது அறிவிப்பினை டுவிட்டர் வழியே உறுதிப்படுத்தினார். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், ஜனவரியில் கட்சித் துவக்கம், டிசம்பர் 31 இல் திகதி அறிவிப்பு என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று,

#மாத்துவோம்_எல்லாத்தையும்_மாத்துவோம் #இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல என்ற ஹேஷ்டாக்குகளும் இடம் பெற்று இருந்தன.

கட்சியின் பெயர் என்ன…?

கட்சிக்கு ரஜினி என்ன பெயர் வைக்கப் போகிறார், கட்சிக் கொடியின் நிறம் என்ன, அதில் இடம்பெறும் சின்னம் என்ன என்பது குறித்த விவாதங்கள் ஏற்கனவே தொடங்கி விட்டன. அந்த வகையில் ‘படை’ என்று முடியும் வகையில் ரஜினியின் கட்சி பெயர் அமையலாம் என்றும், கொடியில் பாபா முத்திரை இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

அனைத்து தொகுதிகளிலும் களம் காணுவதாக அறிவித்துள்ள ரஜினி,அம்மா மக்கள் முன்னேற்றகழகம் டிடிவி தினகரன் கோரியது போன்று பொதுவான சின்னத்தை கோரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சின்னமாக எதை தேர்வு செய்யலாம் என்று ரஜினி ஆலோசனை நடத்தி உள்ளார்.

சின்னம் என்ன..?

அடுத்த ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட தமிழ் ரஜினிகாந்த் தனது ஏற்கனவே பதிவுசெய்யப்பட்ட ஆனால் அங்கீகரிக்கப்படாத கட்சியான மக்கள் சேவை கட்சியைப் பயன்படுத்தலாம் என கூறப்படுகிறது.

முதலில் தேர்தல் ஆணையத்தில் அனைத்திந்தியா மக்கள் சக்தி கழகம் என்று பதிவு செய்யப்பட்ட இந்த கட்சி, இரண்டு மற்றும் ஒரு மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட திருத்தப்பட்ட தேர்தல் ஆணைய அறிவிப்பின் மூலம் ‘மக்கள் சேவை கட்சி’ என்று மறுபெயரிடப்பட்டு உள்ளது. தேர்தல் சின்னமாக ஆட்டோ ரிக்‌ஷா இருக்க அதிகமான சாத்தியகூறுகள் உள்ளன.

ஏற்கனவே கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனது அரசியல் பிரவேசம் பற்றி அறிவித்தபோது மன்ற கொடியையும் அதன் சின்னமாக பாபா படத்தில் பிரபலமடைந்த பாபா முத்திரையையும் அறிமுகப்படுத்தினார். ரசிகர்கள் மத்தியில் பாபா முத்திரை பிரபலமானது. சைக்கிள் சின்னம் கேட்கலாம் என்றும் யோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

அண்ணாமலை படத்தில் பால்காரர் பாத்திரத்தில் சைக்கிளில் வலம் வருவார் ரஜினி. அதுவும் மக்களிடம் பிரபலமானதுதான்.ஏற்கனவே சைக்கிள் சின்னம் த.மா.கா.விடம் இருந்தது. பின்னர் அந்த சின்னம் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LPL வெற்றிக் கிண்ணம் யாருக்கு? ஜப்னா, காலி அணிகள் நாளை பலப்பரீட்சை!

லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நாளை நடைபெறவுள்ளது. இப்போட்டி இரவு 7 மணிக்கு அம்பாந்தோட்டையிலுள்ள மஹிந்த ராஜபக்ச சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகும்.

காலி கிளாடியேட்டர்ஸ் மற்றும் ஜப்னா ஸ்ராலியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

அதுவேளை, லங்கா பிரீமியர் லீக் தொடரில் நேற்றிரவு நடைபெற்ற  இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் யாழ்ப்பாணம் ஸ்ராலியன்ஸ் அணி 37 ஓட்டங்களால் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.

இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற தம்புள்ள வைக்கீங் அணி முதலில் களத்தடுப்பைத் தெரிவுசெய்தது.

இதன்படி முதலில் களமிறங்கிய யாழ்ப்பாண அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் ஒன்பது விக்கெட்டுகள் இழப்பிற்கு 165 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

அணி சார்பாக ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாகக் களமிறங்கிய சார்ளஸ் 76 ஓட்டங்களையும் அவிஸ்க பெர்னாண்டோ 39 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இந்நிலையில், பதிலுக்கு 166 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய தம்புள்ள அணி, 19.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 128 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. இந்நிலையில், 37 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

அணிசார்பாக, உபுல் தரங்க 33 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்ததுடன் பந்துவீச்சில் வனின்டு கசரங்க மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

 

‘கொரோனா’ – மேலும் இருவர் உயிரிழப்பு! பலி எண்ணிக்கை 154 ஆக உயர்வு!!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர். இதன்படி கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 154 ஆக அதிகரித்துள்ளது.

2 ஆவது அலைமூலம் இதுவரை 141 பேர் உயிரிழந்துள்ளனர். கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை, நாட்டில் இன்று மாத்திரம் 685 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்து 478 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 24  ஆயிரத்து 309 பேர் குணமடைந்துள்ளனர்.

இன்று உயிரிழந்த இருவரின் விபரம்….

 

நாட்டில் இன்று மாத்திரம் 685 பேருக்கு கொரோனா!

நாட்டில் மேலும் 329 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி இன்று மாத்திரம் 685 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்து 478 ஆக அதிகரித்துள்ளது.

2 ஆவது அலைமூலம் (மினுவாங்கொட, பேலியகொட,சிறைச்சாலை கொத்தணிகள்) இதுவரையில் 29 ஆயிரத்து 837 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

‘ரஜினியின் அரசியல் முடிவின் பின்னணியில் பா.ஜ.க. இல்லை’

நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பதன் பின்னணியில் பா.ஜ.க. இல்லை என்று அக்கட்சியின் முன்னாள் தமிழக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் தமிழகத்தில் அரசியல் பிரவேசம் செய்வது பற்றிய தனது அறிவிப்பினை டுவிட்டர் வழியே கடந்த 3 ஆம் திகதி உறுதிப்படுத்தினார். அவர் வெளியிட்ட செய்தியில், ஜனவரியில் கட்சி துவக்கம், டிசம்பர் 31 ஆம் திகதி அறிவிப்பு என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அவரது டுவிட்டரில் வெளியிடப்பட்ட மற்றொரு செய்தியில், வர போகிற சட்டசபை தேர்தலில் மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மத சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம். அற்புதம்… அதிசயம்… நிகழும்!!! என்றும் பதிவிட்டார்.

இதனை தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கி, வருகிற சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் முடிவை உறுதி செய்துள்ளார். இதனால், அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

இந்த நிலையில், தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறும்பொழுது, ரஜினி கட்சி தொடங்குவது மகிழ்ச்சி. நல்லவர்கள் அரசியலுக்கு வருவது நாட்டிற்கு நல்லது என கூறியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதன் பின்னணியில் பா.ஜ.க. இல்லை என கூறிய அவர், பா.ஜ.க. எப்போதுமே பின்னணியில் இருக்காது, முன்னணியில் தான் இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

‘சட்டசபைத் தேர்தலில் போட்டி – ரஜினியுடனும் பேச்சு நடத்துவேன்’ – கமல் அறிவிப்பு

வரும் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவேன் என்றும் ரஜினியுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து நேரம் வரும்போது முடிவு செய்யப்படும் என்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

‘சீரமைப்போம் தமிழகத்தை’ எனும் பெயரில் மதுரையில் கமல்ஹாசன் தனது முதல் பிரச்சாரத்தை நேற்று தொடங்கினார். தொடர்ந்து இளைஞர்கள், மகளிர், மாணவர்கள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இரண்டாவது நாளான இன்றும் மதுரையில் கமல்ஹாசன் பிரச்சாரம் மேற்கொண்டார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கமல்ஹாசன், “ மதுரையில் நேற்று தொடங்கிய தேர்தல் பிரச்சாரம் எழுச்சியாக இருந்தது. இது தொடர்பாக எனது சந்தோஷத்தை தொண்டர்களிடம் டுவிட்டரில் பகிர்ந்தேன். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சியின் மத்தியில் எங்களது நேர்மையை மக்களிடம் சொல்லி தேர்தலை சந்திப்போம்.

நேர்மையானவர்கள் எல்லாக் கட்சியிலும் இருக்கின்றனர். அவர்களுக்கென ஒரு கட்சி ஏன் இருக்கக்கூடாது என்பதற்காக மக்கள் நீதி மய்யம் ஆரம்பித்தோம். ஆளுங்கட்சியினர் பதற்றத்தில் உள்ளனர். தங்களுக்கு எதிரான விமர்சனங்களுக்குப் பயந்து, எனது பிரச்சாரத்தில் பேசுவதற்கு தடை விதித்தாலும், அவர்களுக்கு எதிராக ஏற்கெனவே எல்லா இடத்திலும் விமர்சனங்கள் எழுந்து கொண்டு இருக்கிறது. எங்களுக்கான மக்கள் ஆதரவை தடுக்கவே அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

திரையுலகில் நானும், ரஜினியும் சாதனை புரிந்துள்ளோம். அரசியலிலும் அதற்கான வாய்ப்பு இருக்கிறது என, ஓராண்டுக்கு முன்பே சொல்லி இருந்தேன். சந்தர்ப்பம் வரும். மூன்றாவது கூட்டணி குறித்து தற்போது கூற முடியாது. அது பற்றி விரைவில் அறிவிப்பேன். மதுரையிலுள்ள ஒரு மலைமேல் நின்று சத்தமிட்டால் பரமக்குடிக்கு கேட்கும். ஒருகாலத்தில் மதுரைக்கு வந்த பின்னரே பரமக்குடிக்கு செல்லவேண்டும்.

அதனால் மதுரையின் மீது எனக்கு அக்கறை அதிகம் என்பதால் 2-வது தலைநகராக மாற்றுவேன். 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் கட்டாயம் போட்டியிடுவேன். எங்கே என்பது பற்றி இப்போது கூற முடியாது. நான் நாத்திகவாதி என்பதைவிட, எதையும் அறிந்து, புரிந்து கொள்ளும் மனப்பக்குவம் கொண்ட பகுத்தறிவாளன். மத்திய அரசு விவசாயிகளின் வயிற்றில் அடிக்கிறது. அவர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், எங்களது பிரதிநிதிகள் டெல்லிக்குச் சென்று, அவர்களுடன் போராடிவிட்டும் வந்துள்ளனர்.

நடிகர் என்ற முறையில் எனக்கு மக்கள் கூடுகிறது என்றாலும், அதையும் தாண்டி மக்கள் வருகிறார்கள். அப்படி வந்ததால் தான் எம்ஜிஆர் புரட்சித் தலைவரானார். நானும், அவரும் ஒரே இனம் (நடிகர்). அதிமுக அமைச்சர்கள் தூங்கவேண்டும் என்பதற்காக எனக்கு கூடும் கூட்டத்தை பார்த்து விமர்சனம் செய்கின்றனர்.

நாங்கள் மூன்றாவது தேர்தலை சந்தித்தாலும், எங்களது பயணம் நேர்வழி, நேர்மை. ஊழல் இல்லாத அரசு அமைய முன்னிலைப்படுத்தி தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படும். ஒரு நாடு, மாநிலம் வளரவேண்டும் என்றால், கார்ப்பரேட்டு கம்பெனிகளும் முக்கியம். இதை வரவேற்கிறோம். எம்ஜிஆரை நான் முன்னிலைப்படுத்தவில்லை. அவர் மட்டுமே எம்ஜிஆர். நான் கமலஹாசன். என்னை கா்ப்பரேட் இயக்குவதாக கூறுவது தவறு.

நான் இளைஞராக இருந்தபோது, அரசியலுக்கு வருவது பற்றி யோசிக்கவில்லை. நானும், ரஜினியும் கடுமையாக உழைத்த தொழிலிலேயே எங்களுக்குள் போட்டியில்லை. இருவரும் தெளிவான பாதையில் செல்கிறோம். மத்திய, மாநில அரசுகளுக்குள் ஒப்பந்தம் இருப்பதால் தமிழகம் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குகிறது என, மத்திய அரசு விருது வழங்குகிறது. நாங்கள் யாருக்கும் பி-டீம் அல்ல. காந்தியின் பி- டீம்” என்று அவர் கூறினார்.

சினிமா

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

செய்தி

தமிழக முதல்வராக பதவியேற்றார் ஜோசப் விஜய்!

0
தமிழக முதல்வராக பதவியேற்றார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை 10 மணியளவில் பதவியேற்பு விழா தொடங்கியது. வந்தே மாதரம் பாடல் இசைக்க பதவியேற்பு...

தவெக முதற்கட்ட அமைச்சரவை பட்டியல் வெளியீடு

0
தமிழக வெற்றிக் கழக அரசின் தவெக முதற்கட்ட அமைச்சர் பட்டியலை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் கீழ்காணும் பெயர்கள் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளன: புஸ்ஸி என்.ஆனந்த் ஆதவ் அர்ஜுனா கே.ஜி.அருண்ராஜ் கே.ஏ.செங்கோட்டையன் வெங்கடரமணன் நிர்மல்குமார் ராஜ்மோகன் டி.கே.பிரபு கீர்த்தனா 120 எம்எல்ஏக்களின் ஆதரவுக் கடிதங்களை ஆளுநரிடம் விஜய் நேற்று...

மரக்கறி விலைப்பட்டியல் (10.05.2026)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (10) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...