Home Blog Page 3724

மாகாணசபைத் தேர்தல் வேண்டாம் – பௌத்த தேரர்கள் கூட்டாக வலியுறுத்து!

” இலங்கைக்கு மாகாணசபை முறைமை அவசியமில்லை. எனவே, அதற்கான தேர்தலை அரசாங்கம் நடத்தக்கூடாது.” – என்று பௌத்த தேரர்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.

ஜனாதிபதித் தேர்தலின்போது கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவாக பரப்புரைகளில் ஈடுபட்ட எல்லே குணவங்க தேரர், முருத்தெட்டுவே ஆனந்த தேரர், பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் ஆகியோரே இவ்வாறு வலியுறுத்தியுள்ளனர்.

மாகாணசபைத் தேர்தலை பழையமுறைப்படி விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் தயாராகிவருகின்றது என செய்திகள் வெளியாகியுள்ள நிலையிலேயே அதற்கு தேரர்கள் இவ்வாறு போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட முருத்தெட்டுவே ஆனந்த தேரர்,

” அமைச்சு மற்றும் எம்.பி. பதவியை பெறமுடியாமல்போன சிலர், மாகாணசபையிலாவது தமக்கு பதவி கிடைக்கும் என்ற எதிர்ப்பார்ப்புடன் உள்ளனர். ஆனால் இலங்கைக்கு மாகாணசபைகள் அவசியமில்லை என்பதே எமது நிலைப்பாடாகும். ” – என்றார்.

அதேவேளை, ” மாகாணசபைக்கு ஒதுக்கப்படும் மக்களின் பணத்தில் 80 வீதமானவை அரசியல்வாதிகளை நடத்துவதற்கான செலவீனங்களுக்கே பயன்படுத்தப்படுகின்றன. எனவே, மாகாணசபைகள் தேவையில்லை.” – என்று பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் வலியுறுத்தினார்.

அத்துடன், இது தொடர்பில் கருத்து வெளியிட்ட எல்லே குணவங்ச தேரர்,

” மாகாணசபைகள் வெள்ளை யானை என்பதே மக்களின் நிலைப்பாடாக இருக்கின்றது. வடக்கு, கிழக்கு மக்கள்கூட மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு கோரவில்லை. அங்குள்ள மாகாணசபை உறுப்பினர்களும் இந்த கோரிக்கையை விடுக்கவில்லை. எனவே, எதற்காக தேர்தல் நடத்த அவசரப்படவேண்டும்?

மூன்றிலிரண்டு பலத்தை பெற்றுக்கொடுத்தோம், 69 லட்சம்பேர் வாக்களித்தனர். 20 ஆவது திருத்தச்சட்டம்மூலம் அதிகாரம் மேலும் பலப்படுத்தப்பட்டது. தற்போது மாகாணசபைத் தேர்தலை நடத்துவதன்மூலம் என்ன செய்யபோகின்றனர்? அரசியல்வாதிகளை திருப்திப்படுத்தி, அவர்களுக்கு வரப்பிரதாசங்களை வழங்கும் முயற்சியே இது. எனவே, தேர்தலை நடத்தும் முடிவுக்கு நாம் அரசுக்கு கடும் அதிருப்தியை தெரிவித்துக்கொள்கின்றோம்.” – என்று குறிப்பிட்டார்.

நாட்டில் மேலும் 356 பேருக்கு கொரோனா தொற்று!

நாட்டில் மேலும் 356 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பேலியகொடை கொத்தணிமூலம் 302 பேருக்கும் சிறைச்சாலை கொத்தணிமூலம்54 பேருக்குமே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.

அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்து 146 ஆக அதிகரித்துள்ளது.

 2 ஆவது அலைமூலம் (மினுவாங்கொட, பேலியகொட,சிறைச்சாலை கொத்தணிகள்) இதுவரையில் 29 ஆயிரத்து 508 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

48 மணி நேரத்துக்குள் நுவரெலியா மாவட்டத்தில் 32 பேருக்கு கொரோனா!

நுவரெலியா மாவட்டத்தில் கடந்த 48 மணி நேரத்துக்குள் மேலும் 32 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று மாவட்ட சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

கினிகத்தேன பகுதியில் 18 பேருக்கும், பொகவந்தலாவயில் ஐவருக்கும்  மற்றும் தலவாக்கலை, வட்டகொடை உட்பட ஏனைய சில பகுதிகளில் 9 பேருக்குமே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களை கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு கொண்டுசெல்வதற்கான நடவடிக்கைகளை பொதுசுகாதார அதிகாரிகள் முன்னெடுத்தனர். அத்துடன், இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அம்பகமுவ சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட கினிகத்தேன பகுதியில் அம்பதலாவ, குறுந்துகொள்ள, யாஹிந்ந, பிடவல, கலுகல்ல,  பொல்பிட்டிய, மற்றும் கீக்கியனகெதர ஆகிய பகுதிகளில் இருந்தே தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மெலினப் எனும் தொழிற்சாலையிலும் ஐவருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

பொகவந்தலாவ, தலவாக்கலை, கொட்டகலை, மடக்கும்பரை ஆகிய பகுதிகளிலும் வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2ஆவது அலைமூலம் நுவரெலியா மாவட்டத்தில் ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் இன்று காலைவரை 298 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது. அத்துடன் 500 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக சில தோட்டப்பகுதிகளில் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

க.கிசாந்தன்

குயினா தோட்டத்தில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று!

பொகவந்தலாவ குயினா தோட்டத்தில் மேலும் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஆண்கள் இருவருக்கும், பொகவந்தலாவ சென்மேரிஸ் மத்திய கல்லூரியில் தரம் 6 இல் கல்வி பயிலும் மாணவி ஒருவருக்குமே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.

ஆண்கள் இருவரில் 20 வயதுடைய இளைஞன் போவத்தலாவ மரக்கறி பண்ணையில் தொழில் புரிபவர் எனவும், 50 வயதுடையவர் தோட்டத் தொழிலாளி எனவும் தெரியவருகின்றது.

குயினா தோட்டத்தில் 150 பேரிடம் பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டிருந்த நிலையில் அவற்றின் முடிவுகள் இன்று வெளியாகின. இதில் மூவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தொடர்பான தகவல்கள் திரட்டப்பட்டுவருகின்றன.

பொகவந்தலாவ பொது சுகாதார அதிகாரி அலுவலகத்தின் அதிகாரத்துக்குட்பட்ட பகுதிகளில் இதுவரை 31 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நுவரெலியா மாவட்டத்தில் 298 தொற்றாளர்கள் – 572 குடும்பங்கள் சுயதனிமையில்!

” நுவரெலியா மாவட்டத்தில் இன்று (14.12.2020) காலை 9 மணிவரை வெளியான சுகாதார பிரிவினரின் தகவலின் அடிப்படையில் இதுவரையில் 298 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். 572 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன்,  வலப்பனை சுகாதார பிரிவு பொது சுகாதார அதிகாரி ஒருவருக்கும் நேற்று தொற்று உறுதியாகியுள்ளது என்று  நுவரெலியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் இமேஸ் பிரதாப்சிங் தெரிவித்துள்ளார்.
நுவரெலியா மாவட்டத்தில் அதிகமான தொற்றாளர்கள் கொழும்பில் இருந்து வந்தவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.அந்த அடிப்படையில் பெலியகொடை மீன் சந்தை ஊடாக 52 பேருக்கும் கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட 245 பேருக்கும் கொழும்பு துறைமுகத்தில் கடமையில் இருந்த ஒருவருக்குமாகவே மொத்தமாக நுவரெலியா மாவட்டத்தில்  298 பேர் இனம் காணப்பட்டுள்ளனர்.
அம்பேகமுவ 34 பொகவந்தலாவ 01  கொட்டகலை 73 கொத்மலை 89 லிந்துலை 57 மஸ்கெலியா 03 நுவரெலியா மாநகர சபை எல்லைக்குட்பட்ட 214 நவதிஸ்பனே 01 நுவரெலியா 38 இராகலை 34 வலப்பனை 28 என மொத்தமாக 572 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளன.
அம்பேகமுவ 141 பொகவந்தலாவ 35  ஹங்குரன் கெத்த 4 கொட்டகலை 27 கொத்மலை 07 லிந்துலை 22 மஸ்கெலியா 33 நுவரெலியா மாநகர சபை எல்லைக்குட்பட்ட 01 நவதிஸ்பனே 07 நுவரெலியா 07 இராகலை 09 வலப்பனை 05 என  மொத்தமாக 298 பேர் தொற்றாளர்களாக இனம் காணப்பட்டு இவர்கள் அனைவரும் கொரோனா மத்திய நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன்.இவர்களில் ஒரு சிலர் 14 நாட்களை நிறைவு செய்து வீடு திரும்பியுள்ளனர்.
நுவரெலியா மாவட்டத்தில் இன்று (14.12.2020)  காலை 9. மணிவரை கிடைத்த தகவல்களின் அடிப்படையில் 6713 பேர் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அதே நேரம் நுவரெலியா மாவட்டத்தில் இதுவரை 4891 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்த போதிலும் அவற்றில் 4319 குடும்பங்கள் 14 நாட்களை நிறைவு செய்து விடுவிக்கப்பட்டுள்ளன.
நுவரெலியா மாவட்டத்தில் அதிக தொற்றாளர்கள் இனம் காணப்பட்ட பிரதேசமாக அம்பேகமுவ பிரதேசம் இனம் காணப்பட்டுள்ளதுடன் இங்கு 141 பேர் தொற்றாளர்களாக இனம் காணப்பட்டுள்ளனர் அதே நேரம் குறைவான தொற்றாளர்கள் இனம் காணப்பட்ட பிரதேசமாக நுவரெலியா மாநகர சபை எல்லைக்குட்பட்ட பிரதேசம் இனம் காணப்பட்டுள்ளது.இங்கு ஒரு தொற்றாளரே இனம் காணப்பட்டுள்ளார்.
மேலும் நுவரெலியா மாவட்டத்திற்கு ஏனைய மாவட்டங்களில் இருந்து வருகை தருகின்றவர்களுக்காக சுற்றுலா விடுதிகளோ சுற்றுலா இடங்களோ இன்னும் திறக்கப்படவில்லை எனவும் நுவரெலியாவிற்கு ஏனைய மாவட்டங்களில் இருந்து வருகை தருவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் நுவரெலியா மாவட்ட செயலாளர் ஆர்.எம்.பி.புஸ்பகுமார தெரிவிக்கின்றார்.
நுவரெலியா மாவட்டத்தில் நாளுக்கு நாள் தொற்றாளர்கள் இனம் காணப்படுவதன் காரணமாகவே சுற்றுலா பிரயாணிகளை இங்கு வருகை தருவதை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்கப்படுகின்றனர் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நுவரெலியா நிருபர் எஸ்.தியாகு

‘கொரோனா’வின் பிடிக்குள் இருந்து 24,309 பேர் மீண்டனர்!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 516 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்து 309  ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் 8 ஆயிரத்து 329 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 152 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

‘தோட்டத்தொழிலாளர்களுக்கு ஓய்வுபெறும் அறை’

கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட பத்தனை, ஸ்டோனிகிளிப் தோட்டத்தில் தொழிலாளர்கள் ஓய்வு பெறும் அறைக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று (14.12.2020) திங்கட்கிழமை இடம்பெற்றது. இதற்கென தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின் கீழ் 6 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நாட்டில் அந்நிய செலவாணியை ஈட்டிதரும் உன்னதமான உழைப்பாளிகளாக பெருந்தோட்ட தொழிலாளர்கள் மதிக்கப்படிடுகின்றார்கள். கடந்த காலங்களில் கூட்டு ஒப்பந்த முறையில் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு மற்றும் நலன்புரி சேவைகளை துாட்ட நிர்வாகங்கள் முன்னெடுக்க வேண்டும் என ஒப்பந்தங்கள் செய்யப்பட்டிருந்தது.

ஆனால் தற்போது தோட்ட நிர்வாகங்கள் தோட்ட தொழிலாளர்களின் நலன்புரி சேவைகளில் அக்கறை காட்டுவதில்லை என்பது வெளிப்படையாக தெரிகின்றது.

இந்த நிலலையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பெருந்தோட்ட மக்களின் பாதுகாப்பு அமைப்பு என்ற வகையில் அமைச்சின் நிதி ஊடாக தொழிலாளர்கள் நலன் பேணும் வகையில் முதல் நடவடிக்கையாக இந்த தொழிலாளர் ஓய்வு அறை தோட்டப்பகுதியில் அமைக்கும் நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்ச்சியாக தோட்ட பகுதிகளில் அமைக்கப்படும் என்பது குறிப்பிடதக்கது.

கொட்டகலை பிரதேச சபை தலைவர் ராஜமணி பிரசாத் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சபை உப தலைவர், உறுப்பினர்கள், தோட்ட அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்தனர்.

க.கிசாந்தன்

கொரோனா சிகிச்சை நிலையத்தில் கொள்ளை – மஸ்கெலியாவாசி உட்பட நால்வர் கைது!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் பூரணமாக குணடைந்த நால்வர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

வாழைச்சேனை புனானி கொரோனா சிகிச்சை நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த மின் உபகரணங்கள் உட்பட மேலும் சில பொருட்களை கொள்ளையடித்துச்செல்ல முற்பட்டவேளையிலேயே அவர்கள் வாழைச்சேனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு, கொம்பெனிதெருவை சேர்ந்த மூவரும், மஸ்கெலியா பகுதியைச் சேர்ந்த ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு வழைச்சேனை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

75 ஆவது பட்ஜட்டிலும் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஏமாற்றம்!

75ஆவது வரவு – செலவுத் திட்டத்திலும் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் திட்டமிட்ட அடிப்படையில் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

” பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 2021 ஜனவரி முதல் ஆயிரம் ரூபா கிடைக்கும் என்ற அறிவிப்பை அரசாங்கம் விடுத்தது. ஏதோ, பட்ஜட்டில் அதற்கான நிதியை தாமே ஒதுக்கி தீர்வை தருகின்றோம் என பாசாங்கு காட்டியுள்ளது. பட்ஜட்டில் தோட்டத் தொழிலாளர்களுக்கென எவுதும் ஒதுக்கப்படவில்லை.

ஆயிரம் ரூபாவை வழங்குமாறே யோசனை மட்டுமே முன்வைக்கப்பட்டுள்ளது. கம்பனிகளே அது பற்றி முடிவெடுக்கவேண்டும். அறிவிப்பை மாத்திரம் விடுத்து இதுவிடயத்தில் அரசாங்கம் நழுவியுள்ளது. ” – என்றும் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டார்.

‘அலட்சியமாக இருந்துவிடாதீர்’ – கொரோனா தொற்றிலிருந்து மீண்ட சரத்குமார் தெரிவிப்பு

கொரோனாவை அலட்சியமாகக் கருத வேண்டாம் என்று சிகிச்சையின் பின் குணமடைந்து திரும்பிய சரத்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நடிகர் சரத்குமார், நேற்று வீடு திரும்பினார். இதையடுத்து அவர் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது,

“டிசம்பர் 8 அன்று கொரோனா உறுதி செய்யப்பட்டு ஹைதரபாத் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நான், 6 நாட்களுக்கு பிறகு மருத்துவமனையில் இருந்து குணமடைந்து திரும்புகிறேன்.

உடல்நலம் குணமடைய உதவிய சுகாதார துறையினருக்கு நன்றிகூட கடமைப்பட்டிருக்கிறேன். மருத்துவ நிர்வாகம் மற்றும் சிகிச்சையில் பங்கெடுத்த அனைவரது மிகப்பெரிய முயற்சியாலும், உதவியாலும் தான் எனது தேகநிலை சீராகியிருக்கிறது.

மேலும் 2 வாரங்கள் நான் தனிமைப்படுத்தி இருக்க வேண்டும். என்னுடைய ரசிகர்கள் சமத்துவ சொந்தங்கள், உறவினர்கள், உடன் பணியாற்றியவர்கள், நண்பர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், அமைச்சர்கள் அனைவருடைய பிரார்த்தனைகளாலும் வழிபாடுகளாலும் இறை அருளால் மீண்டு நலமுடன் இருக்கிறேன்

இருப்பினும், கொரோனா தொற்று உலகில் பல மக்களை தற்போதும் பாதித்து வருகிறது. கொரோனாவை அலட்சியமாக கருதாமல், அவசியம் இருந்தால் மட்டும் மக்கள் வெளியில் செல்ல கேட்டுக் கொள்கிறேன். எந்தவொரு மனிதருக்கும், பிற மனிதருக்கு பாதிப்பு ஏற்படுத்த உரிமையில்லை என்பதை மனதில் கொண்டு வெளியில் செல்லும் போது, மாஸ்க் அணிந்து, சானிடைசர் உபயோகித்து, தனிமனித இடைவெளி கடைபிடித்து, சுயபாதுகாப்பை உறுதிசெய்து நோய்தொற்று பரவாமல் தடுத்திடுவோம்”. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சினிமா

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

செய்தி

தமிழக முதல்வராக பதவியேற்றார் ஜோசப் விஜய்!

0
தமிழக முதல்வராக பதவியேற்றார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை 10 மணியளவில் பதவியேற்பு விழா தொடங்கியது. வந்தே மாதரம் பாடல் இசைக்க பதவியேற்பு...

தவெக முதற்கட்ட அமைச்சரவை பட்டியல் வெளியீடு

0
தமிழக வெற்றிக் கழக அரசின் தவெக முதற்கட்ட அமைச்சர் பட்டியலை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் கீழ்காணும் பெயர்கள் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளன: புஸ்ஸி என்.ஆனந்த் ஆதவ் அர்ஜுனா கே.ஜி.அருண்ராஜ் கே.ஏ.செங்கோட்டையன் வெங்கடரமணன் நிர்மல்குமார் ராஜ்மோகன் டி.கே.பிரபு கீர்த்தனா 120 எம்எல்ஏக்களின் ஆதரவுக் கடிதங்களை ஆளுநரிடம் விஜய் நேற்று...

மரக்கறி விலைப்பட்டியல் (10.05.2026)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (10) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...