Home Blog Page 3725

ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதித் தலைவர் பதவி சம்பிக்கவுக்கு?

ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து, நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க விலகியுள்ள நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியில் அவருக்கு புதிய பதவியொன்று வழங்கப்படவுள்ளது என தெரியவருகின்றது.

இதன்படி அவர் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதித் தலைவராக நியமிக்கப்படலாம் என அறியமுடிகின்றது.

ஐக்கிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழுக் கூட்டம் எதிர்வரும் 19 ஆம் திகதி பண்டாரவளையில் நடைபெறவுள்ளது. இதன்போது இது பற்றி இறுதி முடிவு எடுக்கப்படலாம்.

இறக்குவானை உக்குவத்த பகுதியில் நால்வருக்கு கொரோனா!

இறக்குவானை உக்குவத்த பிரதேசத்தில் நான்கு பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அத் தொற்றாளர்களில் பாடசாலை மாணவனும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து இறக்குவானை உக்குவத்த பிரதேசம் உட்பட டெல்வின் ஏ பிரிவு, மஸ்இம்புல வீதி, இறக்குவானை உக்குவத்த வீதி மூடப்பட்டுள்ளது.

கடந்த 29 ம் திகதி இறக்குவானை உக்குவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற திருமண வைபவத்தில் கலந்துக் கொண்ட இரத்தினபுரி மல்வல பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஒருவர் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு செல்வதற்காக PCR பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து உக்குவத்த பிரதேசத்தில் 45 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து எடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் நான்கு பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.இதையடுத்து நேற்றுமுன்தினம் இரவு 10 மணியளவில் இறக்குவானை பொலிசார் உக்குவத்த பிரதேசம் மூடப்பட்டுள்ளதாக ஒலி பெருக்கி மூலம் அறிவித்தனர்.இதனால் இப் பகுதியில் தற்காலிக பயணத்தடை விடுக்கப்பட்டுள்ளது.

மக்கள் விழிப்புடன் செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்ட சுகாதார நடைமுறைகளை கடைபிடிக்குமாறு பொலிஸார் உத்தரவிட்டுள்ளனர். குறித்த மாணவன் இ/அஸ்ஸலாம் மகா வித்தியாலயத்தின் கல்வி பயில்வதால் பாடசாலை மூடப்படாத போதிலும் அச்சம் காரணமாக இப்பாடசாலைக்கு மாணவர்கள் வருகை தராமையினால் பாடசாலை வெறிச்சோடியுள்ளதாகப் தெரிவிக்கப்படுகிறது.

32,790 பேருக்கு கொரோனா – 8,845 பேர் சிகிச்சையில் – 152 பேர் உயிரிழப்பு!

இலங்கையில் கொரோனா வைரஸ் 2ஆவது அலைமூலம் நேற்றிரவுவரை (13) 29 ஆயிரத்து 148 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இவர்களில் இதுவரையில் 139 பேர் பலியாகியுள்ளனர். (ஒக்டோபர் 24 முதல் நேற்றுவரை)

மினுவாங்கொட கொத்தணிமூலம் 3 ஆயிரத்து 59 பேருக்கும், பேலியகொடை கொத்தணிமூலம் 26 ஆயிரத்து 89 பேருக்கும் வைரஸ் தொற்றியுள்ளது. இவர்களில் 20 ஆயிரத்து 385  பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மாத்திரம் 655 பேருக்கு வைரஸ் தொற்றியது.

அதேவேளை, இலங்கையில் நேற்றுவரை மொத்தமாக 32 ஆயிரத்து 789 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இவர்களில் 23  ஆயிரத்து 792 பேர் குணமடைந்துள்ளனர்.

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் நேற்று  மூவர் உயிரிழந்தார். இதன்படி இலங்கையில் கொரோனா தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 152 ஆக அதிகரித்துள்ளது.

ஜப்னா, தம்புள்ள அணிகள் இன்று பலப்பரீட்சை!

லங்கா பிரிமியர் லீக்தொடரின் இரண்டாவ அரையிறுதி ஆட்டம் இன்று நடைபெறுகின்றது.

இறுதிப்போட்டிக்கு தெரிவாகும் எதிர்ப்பார்ப்புடன் தம்புள்ள வைகீங்,  ஜப்னா ஸ்டாலியன்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. இரவு 7 மணிக்கு இப்போட்டி ஆரம்பமாகின்றது.

கொழும்பு கிங்ஸ் அணியை தோற்கடித்து காலி அணி இறுதிப்போட்டிக்கு தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பு கிங்ஸ் அணிக்கு ஏமாற்றம் – இறுதி போட்டிக்குள் நுழைந்தது காலி அணி!

கொழும்பு கிங்ஸ் அணிக்கு ஏமாற்றம் – இறுதி போட்டிக்குள் நுழைந்தது காலி அணி!

லங்கா பிரிமியர் லீக் தொடரின் முதலாவது அரையிறு ஆட்டத்தில் காலி கிளாடியேட்டர்ஸ் அணி, இரண்டு விக்கெட்டுகளால் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு தெரிவாகியது.

கொழும்பு கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற காலி கிளாடியேட்டர்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தெரிவுசெய்தது.

இதற்கமைய துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய கொழும்பு கிங்ஸ், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 150 ஓட்டங்களைப்பெற்றது.

Bell-Drummond 53 பந்துகளில் 70 ஓட்டங்களையும், உதான 19 ஓட்டங்களையும், சந்திமால் 14 ஓட்டங்களையும் பெற்றனர். சந்தகன் 3 விக்கெட்டுகளையும், லக்‌ஷான், துஷார ஆகியோர் தலா இரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பின்னர் 151 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய காலி அணி, 19.5 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து வெற்றியிலக்கை அடைந்து ,இறுதிப்போட்டிக்கு தெரிவாகியது.

அவ்வணி சார்பாக ராஜபக்ச 33 ஓட்டங்களையும், லக்‌ஷான் 31 ஓட்டங்களையும், ஜயசூரிய 22 ஓட்டங்களையும் பெற்றனர். ஆட்டநாயகனாக லக்‌ஷான் தெரிவுசெய்யப்பட்டார்.

எல்.பி.எல். தொடரில் ஆரம்பம் முதலே கொழும்பு கிங்ஸ் சிறப்பாக செயற்பட்டது, தொடர் வெற்றிகளையும் குவித்தது. காலி அணி தடுமாற்றங்களுக்கு மத்தியிலேயே அரையிறுதிபோட்டிக்கு தெரிவாகியது. இந்நிலையில் ஏமாற்றமளிக்கும் வகையில் கொழும்பு அணியின் வெறியேற்றம் அமைந்துள்ளது.

 

மத்துகம தமிழ் பாடசாலை கனவு என்று நனவாகும்?

களுத்துறை மாவட்டத்தில் 1 AB தரத்திலான 22 சிங்களமொழி பாடசாலைகளும், 7 முஸ்லிம் பாடசாலைகளும் இயங்கி வருகின்ற போதிலும் தமிழ்ப்பாடசாலை ஒன்றுகூட இல்லை.

மத்துகம கல்வி வலயத்தில் க.பொ.த சாதாரண தரம் வரையில் சென் மேரிஸ் தமிழ்ப்பிரிவும் க.பொ.த சாதாரண தரம் வரையில் சி. டபிள்யூ.டபிள்யூ. கன்னங்கர தமிழ்ப்பிரிவும் இயங்கி வருகின்றன. இருப்பினும் இப்பாடசாலைகளின் நடவடிக்கைகள் குறித்து பெற்றோர், பழைய மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கு திருப்தி இல்லை.
இங்கு போதிய இடவசதி மற்றும் தேவையான வளங்கள் கிடையாது பல்வேறு குறைபாடுகள், பிரச்சினைகள், சிக்கல்கள், சவால்களுக்கு முகங்கொடுத்த நிலையில் குறிப்பிட்ட கட்டிடங்களுக்குள் முடங்கிய நிலையில் தமிழ்மொழிமூல கல்வி நடவடிக்கைகள் மட்டும் ஓரளவுக்கு முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
முறையான, சரியான, ஒழுங்கான, வசதியான, தரமான, வளமான தமிழ்ப் பாடசாலையொன்று இல்லாத காரணத்தால் தமிழ் மாணவர்கள் பலர் சிங்கள, முஸ்லிம் பாடசாலைகளிலும், வெளிப்பிரதேச பாடசாலைகளிலுமே கல்வி கற்று வருகின்றனர்.
இதனால் சகல வசதிகளுடனும் கூடிய தனியானதொரு தமிழ்ப்பாடசாலை அமைக்கப்பட வேண்டும் என்ற தீர்மானத்துக்கு வந்த புத்திஜீவிகள், சமூக ஆர்வலர்கள், பழைய மாணவர்கள் பலரும் ஒன்றிணைந்து பல வருடங்களுக்கு முன்னர் அதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கினர். எனினும் அம்முயற்சி கைகூடாது தோல்வியில் முடிவடைந்தமையால் முயற்சிகளில் ஈடுபட்டவர்கள் மனம் தளர்ந்து போனார்கள்.
அன்று அமைச்சராக இருந்த அமரர் ஆறுமுகன் தொண்டமானிடம் முன்வைக்கப்பட்ட இக்கோரிக்கை தந்திருக்கலாம். ஆனால் அவர் அதை கவனத்தில் கொள்ளவில்லை. 2014ஆம் ஆண்டு நடைபெற்ற மேல் மாகாணசபைத்தேர்தலில் களுத்துறை மாவட்டத்தில் தனித்து களமிறங்கிய இ.தொ.காவிடம் இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டு அதன் தலைவர் ஆறுமுகன் தொண்டமானின் கவனத்துக்கு மீண்டும் கொண்டு செல்லப்பட்டது. ஆனால் அதுவும் வெற்றியளிக்கவில்லை.

 

தமிழ்ப்பாடசாலையொன்று அமைக்கப்பட வேண்டும் என்ற தமிழ் மக்களின் நீண்டகால கனவை நனவாகக் காணவேண்டும் என்பதால் பாடசாலை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தவர்கள் தம் முயற்சியைக் கைவிடவில்லை.

2015இல் பதவிக்கு வந்த நல்லாட்சியில் அமைச்சரவை அந்தஸ்து பெற்ற அமைச்சரான மனோகணேசனிடம் இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அவரும் இதனை ஏற்று நிறைவேற்றி வைப்பதாக உறுதியளித்து அதற்கான முயற்சியில் ஈடுபட்டார். முதற் கட்டமாக அன்றைய மேல் மாகாண ஆளுநராக இருந்த கே. சீ. லோகேஷ்வரனிடம் மனு சமர்ப்பிக்கப்பட்டு தரம் 6 முதல் உயர்தரம் வரையிலான தமிழ்ப்பாடசாலை அமைப்பதற்கான அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்டது. இதனையடுத்து அமைச்சரவையின் அனுமதியும் பெற்றுக்கொள்ளப்பட்டது.

பாடசாலை அமைப்பதற்கென இந்திய அரசு 300 மில்லியன் தந்துதவ தயாராக இருப்பதாகவும் கூறப்பட்டது. 16.12.2016 இல் களுத்துறை காடன்பீச் ஹோட்டலில் நடைபெற்ற களுத்துறை மாவட்ட ஒருங்கிணைப்புக் கமிட்டிக் கூட்டத்தில் விசேட அழைப்பின் பேரில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் களுத்துறை மாவட்ட தமிழ் மக்களின் நீண்டகால கோரிக்கையான மத்துகம நகரில் தமிழ்ப்பாடசாலை அமைக்கும் கோரிக்கையை வலியுறுத்தியே இன்று நான் இந்த மாவட்ட ஒருங்கிணைப்புக் கமிட்டிக் கூட்டத்தில் கலந்து கொள்கின்றேன் என்றார்.

கோரிக்கையை ஏற்று தமிழ்ப்பாடசாலை அமைக்க ஐந்து ஏக்கர் காணி ஒதுக்கித்தர இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து கட்சி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் ஏகமனதாக முடிவெடுத்தாகவும் நாளை வரும் எனது பிறந்தநாளைக்கு முன்கூட்டியே தனக்கு கிடைத்த பரிசு இதுவாகும் என்றும் அவர் மகிழ்ச்சியுடன் கூறவும் செய்தார்.

“ஏழைக் குழந்தைகளின் கல்விக் கண்களைத் திறந்துவிடுவதை விட வேறு ஒரு சிறந்த பரிசு எனக்கு கிடைக்கப்போவதில்லை. இது எங்கள் தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் பங்களிப்பினால் கிடைத்த வெற்றியாகும். வட களுத்துறையில் எடுக்கப்பட்ட இந்த இன நல்லுறவுத் தீர்மானம் வட இலங்கைக்கும் நல்லுறவுச் செய்தியை அது கொண்டுவரும் என எதிர்பார்க்கிறேன்” என்றும் அக்கூட்டத்தில் ஆற்றிய தமது உரையின்போது குறிப்பிடவும் செய்தார்.

முன்னாள் அமைச்சரினால் விடுக்கப்பட்ட இந்தச் செய்தி களுத்துறை மாவட்ட தமிழ் மக்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தியது. தமிழ்ப்பாடசாலை நிச்சயம் உருவாகும். அமைச்சர் மனோ கணேசன் தொட்ட காரியத்தை இடைநடுவில் கைவிடுபவர் அல்லர். அதன் முடிவைக் காணும் வரையில் போராடுபவர். சொன்னதைச் செய்பவர். செய்வதைச் சொல்பவர். தமிழ்ப்பாடசாலை அமைக்கும் விடயத்தை அவர் ஆரம்பித்து விட்டார்.

இதில் அவர் வெற்றிகண்டு தமிழ் மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பை நிச்சயம் நிறைவேற்றி வைப்பார். 2017ம் ஆண்டு டிசம்பர் அவரது பிறந்த நாளன்றோ அல்லது அதற்கு முன்னரோ பாடசாலைக்கான அடிக்கல் நாட்டு வைக்கப்பட்டும் என தமிழ் மக்கள் நம்பிக்கை வைத்து எதிர்பார்த்திருந்தனர்.

பாடசாலை அமைப்பதற்குத் தேவையான காணி மத்துகம, யட்டதொல தோட்டம், மத்துகம பிரிவில் 5 ஏக்கர் இறப்பர் காணி அடையாளங் காணப்பட்டு காணிக்குரிய இழப்பீட்டுத் தொகையாக சுமார் 13 லட்ச ரூபாவை தமது அமைச்சினுௗடாக குறித்த நமுனுகுல பெருந்தோட்டக் கம்பனிக்கு செலுத்துவதற்கான நடவடிக்கையையும் முன்னாள் அமைச்சர் மேற்கொண்டிருந்தார்.

ஆனால் சட்டரீதியாக காணியைப் பொறுப்பேற்றுக் கொள்வதில் தடையும், தாமதமும், இழுபறியும் ஏற்பட்டு காலம் கழிந்தது. மறுபுறத்தில் தமிழ்ப்பாடசாலையொன்று உருவாவதை விரும்பாத இனவாதப் போக்கு படைத்த சிலர் ஏன் தமிழ் சமூகத்தைச் சேர்ந்த சில பிற்போக்குவாதிகளும் கூட நேரடியாகவும், மறைமுகமாகவும் பல விமர்சனங்களை முன்வைத்து எதிர்ப்புத் தெரிவித்து முட்டுக்கட்டை போட்டு வந்தனர்.

2017ஆம் ஆண்டு டிசம்பர் முன்னாள் அமைச்சரின் பிறந்தநாளன்றோ அல்லது அதற்கு முன்னரோ அடிக்கல் நாட்டி வைக்கப்படும் என எதிர்பார்த்திருந்த மக்களுக்கு அந்த நிகழ்வு இடம்பெறாதது ஏமாற்றத்தைத் தந்தது.

24.7.2018இல் களுத்துறை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு கமிட்டிக் கூட்டத்தில் மீண்டும் ஒருதடவை கலந்துகொண்ட மனோ கணேசன் “தமிழ்ப்பாடசாலையொன்று சுயாதீனமாக இயங்க இடமளிக்க வேண்டும்” என சற்று கடுந்தொனியில் கேட்டுக் கொண்டார்.

தமிழ்ப்பாடசாலையொன்று அமைக்கும் பொருட்டு மனோ கணேசன் எடுத்துள்ள முடிவுக்கு இடமளித்து ஆதரவு வழங்க வேண்டும் என முன்னாள் அமைச்சர்களான குமாரவெல்கம மற்றும் மகிந்த சமரசிங்க உள்ளிட்ட பலர் கூட்டத்தில் வலியுறுத்தி பேசினர்.

ஆனால் 2018ம் ஆண்டு அவரது பிறந்தநாளும் கடந்துவிட்டது. எனினும் அடிக்கல் நாட்டப்படவில்லை. 19.02.2019இல் இங்கிரிய றைகம் கீழ்ப்பிரிவு ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலய தேர்த்திருவிழாவில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் ”விரைவில் தமிழ்ப்பாடசாலைக்கான அடிக்கல் தமது தலைமையில் விமரிசையாக நாட்டி வைக்கப்படும் என சூளுரைத்தார்.

2019ம் ஆண்டு அவரது பிறந்தநாளும் கடந்துவிட்டது. ஆனால் அவரது கூற்று பலிக்கவில்லை. அடிக்கல் நாட்டப்படாத நிலையில் ஆட்சி மாற்றமும் ஏற்பட்டு அமைச்சர் பதவியையும் அவர் இழந்தார்.

அடையாளங்காணப்பட்ட காணியை சட்டரீதியாகப் பொறுப்பேற்றுக் கொள்வதில் மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டன. ஏற்பட்ட தடை தாமதத்துக்கான காரணம் என்ன? சாமிவரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடார்” என்ற கதையாகிவிட்டது. தமிழ்ப்பாடசாலை அமைப்பதில் ஏற்பட்ட தடை தாமதத்துக்கான காரணத்தை முன்னாள் அமைச்சர் தான் தெளிவுபடுத்த வேண்டும்.

தோட்டத் தொழிலாளருக்கான வீட்டுத்திட்டம் மற்றும் பாடசாலை அமைப்பதற்குத் தேவையான காணியை ஒதுக்கீடு செய்வதில் ஏற்பட்டுவரும் தடை, தாமதம், இழுபறி, முட்டுக்கட்டைகள் வரவேற்கத்தக்க விடயமல்ல. தமிழ்ப்பாடசாலை அமைப்பதில் அன்று அதிகாரத்தில் இருந்த ஆறுமுகன் தொண்டமான் காலத்திலும் கைகூடி வரவில்லை. நல்லாட்சியிலிருந்த மனோ கணேசனின் பதவிக்காலத்திலும் கைகூடவில்லை.

இனி இந்த விவகாரத்தைப் பொறுப்பேற்று முன்னெடுத்துச் செல்ல முன்வரப் போவது யார்? மத்துகமவில் தமிழ்ப்பாடசாலை அமைத்தல் மற்றும் களுத்துறை மாவட்ட தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைக்கவும் தற்போதைய ஆட்சியின் பங்காளராக இருந்துவரும் இ.தொ.காவே முன்வரவேண்டும்.

இங்கிரிய மூர்த்தி

நன்றி தினகரன்

நாட்டில் இன்று மாத்திரம் 650 பேருக்கு கொரோனா தொற்று!

நாட்டில் மேலும் 135 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி இன்று மாத்திரம் 650 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 32 ஆயிரத்து 385 ஆக அதிகரித்துள்ளது.

2 ஆவது அலைமூலம் (மினுவாங்கொட, பேலியகொட,சிறைச்சாலை கொத்தணிகள்) இதுவரையில் 29 ஆயிரத்து 152 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

‘நுவரெலியா மாவட்டத்தில் கோப்பி பயிர்செய்கையை மேம்படுத்துவது குறித்து ஆய்வு’

நுவரெலியா மாவட்டத்தில் கோப்பி பயிர்ச் செய்கையை அபிவிருத்தி செய்வது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று நுவரெலியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று (13) நடைபெற்றது.

இதன்போது கோப்பி பயிர்ச்செய்கையை நுவரெலியா மாவட்டத்தில் எவ்வாறு அபிவிருத்தி செய்வது மற்றும் கோப்பி பயிர்செய்கையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.

வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன, இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன, நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவர் எஸ் .பி. திசாநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் ராமேஸ்வரன், மாவட்ட செயலாளர் புஸ்பகுமார மற்றும் கோப்பி செய்கையாளர்கள் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

‘மலையக தொழிற்சங்க அரசியலை நன்கு கரைத்து குடித்தவன் நான்’ -ஜீவன் சூளுரை!

“ஆயிரம் ரூபா சம்பள பிரச்சினையை தீர்த்து வைப்பது எமது பொறுப்பு. அதற்குரிய காலம் விரைவில் வரும். மலையக அரசியல் தொடர்பாக எனக்கு சிலர் பாடம் கற்பிக்க முயல்கிறார்கள். என்னைப் பொறுத்தவரையில் மலையக தொழிற்சங்க அரசியலை எனது தந்தையார் காலத்தில் இருந்து கரைத்துக் குடித்தவன் நான். மலையக மக்களின் அடிப்படைத் தேவைகள் முதல் அவர்களது சகலவிதமான தேவைகள் குறித்தும் எனக்கு நன்கு தெரியும்.

எனவே நான் சிறியவன், அனுபவம் போதாது அல்லது கத்துக்குட்டி என நினைத்து எவரும் எனக்கு பாடம் கற்பிக்க முனைய வேண்டாம்.” என்று இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

1000 ரூபா சம்பளம் எப்போது சாத்தியமாகும் என கேட்டபோது அவர் இந்த கருத்தினை தெரிவித்தார். என்னைப் பொறுத்தவரையில் நாங்கள் சொல்வதைதான் செய்வோம். வெறுமனே அரசியலுக்காக வாய் சவால்களை விடுபவர்கள் அல்ல நாம்.

செய்தித்தாள்களிலும், ஊடகங்களிலும், முகநூல்களிலும் போலியான வாதப்பிரதிவாதங்களை நடத்தி அரசியல் செய்பவர்கள் இதனை நன்கு விளங்கிக் கொள்ள வேண்டும். நமது பாரம்பரிய தொழிற்சங்கம் தோட்டத் தொழிலாளர்களின் சகல பிரச்சினைகளையும் தீர்த்து வந்துள்ளமை சரித்திரமாகும்.

அவ்வப்போது தோன்றி முளைக்கும் சில தொழிற்சங்கங்களும் சில மலையக அரசியல்வாதிகளும் எமது தொழிற்சங்கத்தை சவால் விடும் வகையில் செயற்பட்டு காணாமலே போய் உள்ளனர். இதுவே வரலாறு.

எனவே நிலவைப் பார்த்து ஏதோ குரைப்பது போல் எமது செயற்பாடுகளை எவராலும் தடுத்து விட முடியாது.

1000 ரூபா சம்பள பிரச்சனையை தீர்த்து வைப்பது எமது பொறுப்பு. அதற்குரிய காலம் விரைவில் வரும். அதற்குரிய பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகிறது. எனவே அது தொடர்பாக எதுவுமே செய்ய முடியாதவர்கள் தேவையற்ற பிரசாரத்தில் ஈடுபட்டு தமது நேரத்தையும் காலத்தையும் வீணடிக்க வேண்டாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

சிலர் நான் சிறுவன் கத்துக்குட்டி தொழிற்சங்க அனுபவம் அற்றவன் என்றெல்லாம் கூறி வருகிறார்கள். அது தவறு நான் எனது தந்தையார் காலத்திலிருந்தே தொழிற்சங்க அனுபவங்களை நிறையவே பெற்றுள்ளவன்.

எனவே அவ்வாறு கூறுபவர்கள் தமது கருத்துக்களை மாற்றிக்கொள்ள வேண்டும் என ஜீவன் தொண்டமான் கடுமையான தொனியில் தெரிவித்துள்ளார்.

நன்றி – தினகரன்

 

நாட்டில் மேலும் 515 பேருக்கு கொரோனா தொற்று!

நாட்டில் மேலும் 515 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பேலியகொடை கொத்தணிமூலம் 368 பேருக்கும் சிறைச்சாலை கொத்தணிமூலம் 147பேருக்குமே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.

அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 32 ஆயிரத்து 650 ஆக அதிகரித்துள்ளது.

 2 ஆவது அலைமூலம் (மினுவாங்கொட, பேலியகொட,சிறைச்சாலை கொத்தணிகள்) இதுவரையில் 29 ஆயிரத்து 17 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

சினிமா

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

செய்தி

தமிழக முதல்வராக பதவியேற்றார் ஜோசப் விஜய்!

0
தமிழக முதல்வராக பதவியேற்றார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை 10 மணியளவில் பதவியேற்பு விழா தொடங்கியது. வந்தே மாதரம் பாடல் இசைக்க பதவியேற்பு...

தவெக முதற்கட்ட அமைச்சரவை பட்டியல் வெளியீடு

0
தமிழக வெற்றிக் கழக அரசின் தவெக முதற்கட்ட அமைச்சர் பட்டியலை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் கீழ்காணும் பெயர்கள் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளன: புஸ்ஸி என்.ஆனந்த் ஆதவ் அர்ஜுனா கே.ஜி.அருண்ராஜ் கே.ஏ.செங்கோட்டையன் வெங்கடரமணன் நிர்மல்குமார் ராஜ்மோகன் டி.கே.பிரபு கீர்த்தனா 120 எம்எல்ஏக்களின் ஆதரவுக் கடிதங்களை ஆளுநரிடம் விஜய் நேற்று...

மரக்கறி விலைப்பட்டியல் (10.05.2026)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (10) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...