Home Blog Page 3726

நோர்வூட் மாணவர்கள் இருவரும் கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பிவைப்பு!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நோர்வூட் தமிழ் மகா வித்தியாலய மாணவர்கள் இருவரும், கொவிட் – 19 தனிமைப்படுத்தல் சிகிச்சை நிலையங்களுக்கு, சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் இன்று (13.12.2020) கொண்டுசெல்லப்பட்டனர்.

இதன்படி வைரஸ் தொற்றியுள்ள மாணவி மாத்தறை கம்புறுபிட்டியவில் உள்ள சிகிச்சை நிலையத்துக்கும், மாணவன் அம்பாந்தோட்டையிலுள்ள சிகிச்சை நிலையத்துக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தில் பணியாற்றும் ஆசிரியையொருவருக்கு அண்மையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதனையடுத்து அவருடன் தொடர்பில் இருந்த மாணவர்களும், ஆசிரியர்களும் தனிமைப்படுத்தப்பட்டனர்.

அவர்களிடம் பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டன. பிசிஆர் பரிசோதனை முடிவுகள் நேற்று 12 ஆம் திகதி வெளியாகின. இதில் குறித்த பாடசாலையில் தரம் 9 இல் கல்வி பயிலும் நோர்வூட் வெஞ்சர் அப்பலோரன்ஸ் பகுதியைச் சேர்ந்த மாணவர் ஒருவருக்கும், மாணவி ஒருவருக்கும் வைரஸ் தொற்றிருப்பது கண்டறியப்பட்டது.

இந்நிலையிலேயே அவர்கள் சிகிச்சை நிலையங்களுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர். அவர்களுடன் தொடர்பில் இருந்த சுமார் 12 குடும்பங்களைச் சேர்ந்த 60 இற்கும் மேற்பட்டோர் சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

க.கிசாந்தன்

LPL தொடர் – அரையிறுதி ஆட்டம் இன்று ஆரம்பம்!

லங்கா பிரிமியர் லீக்தொடரின் அரையிறுதி ஆட்டம் இன்று ஆரம்பமாகவுள்ளது.

முதலாவது அரையிறுதிப்போட்டியில் கொழும்பு கிங்ஸ் மற்றும் காலி அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.இன்றிரவு 7 மணிக்கு இப்போட்டி ஆரம்பமாகின்றது.

நாளை  14 ஆம் திகதி இரண்டாவது அரையிறுதிப்போட்டி நடைபெறவுள்ளது. இதில் தம்புள்ள வைகீங்,  ஜப்னா ஸ்டாலியன்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன.

‘கொரோனாவுக்கான உள்ளூர் சிகிச்சை, மருந்து குறித்து பிரதமர் பிறப்பித்துள்ள கட்டளை’

கொவிட்-19 இற்காக தேசிய மட்டத்தில்  கண்டுபிடிக்கப்பட்டுள்ள சிகிச்சை முறை மற்றும் ஒளடதங்களை விஞ்ஞான ரீதியில் உறுதிபடுத்தும் நடவடிக்கையை துரிதப்படுத்துமாறு   பிரதமர் மஹிந்த ராஜபக்ச, தேசிய ஆராய்ச்சி சபைக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இதன்படி கொழும்பு பல்கலைக்கழகத்தினால் பரிந்துரைக்கப்பட்ட உள்ளூர் மருத்துவம், கலாநிதி ஹர்ஷ சுபசிங்க , இந்திக ஜாகொட ஆகியோரினால் கொவிட் இற்காக விசேடமாக தயாரிக்கப்பட்ட உள்ளூர் சிகிச்சை முறை மற்றும் கேகாலை தம்மிக பண்டார ஆயுர்வேத வைத்தியரின் ஒளடத பானி  ஆகியவற்றை விஞ்ஞான ரீதியில் ஆய்விற்கு உட்படுத்தி உறுதிபடுத்துவதற்கு  பிரதமர் தேசிய ஆராய்ச்சி சபைக்கு பரிந்துரைத்துள்ளார்.

கேகாலை தம்மிக பண்டார ஆயுர்வேத வைத்தியரின் ஒளடத பானி தொடர்பான ஆராய்ச்சி பத்திரமொன்று ரஜரட பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீட பேராசிரியர்களின் தலையீட்டுடன் முன்வைக்கப்படுவதுடன்,

அது தொடர்பான ஆய்விற்கு இந்நாட்டின் அனைத்து மருத்துவ கல்லூரிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் உடலியல் விஞ்ஞானம் தொடர்பான நிபுணத்துவ அறிவுமிக்க சிரேஷ்ட பேராசிரியர்கள் ஐந்து பேர் மற்றும் தேசிய ஆராய்ச்சி சபைக்காக தேசிய ஆராய்ச்சி சபையின் தலைவர் மகப்பேறியல் மற்றும் பெண்ணோயியல் வைத்திய நிபுணர் பேராசிரியர் ஹேமந்த தொடம்பஹல அவர்கள் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில், உலகில் கொவிட்-19 தொடர்பில் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசி வகைகள் குறித்து ஆராய்ந்து அது தொடர்பிலான அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு இதற்கு முன்னர்   பிரதமர் மஹிந்த ராஜபக்ச தேசிய ஆராய்ச்சி சபைக்கு அறிவுறுத்தியிருந்தார்.

அதற்கமைய தயாரிக்கப்பட்ட அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு கொவிட்-19 இற்கு இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட சிறந்த மூன்று தடுப்பூசிகள் தொடர்பான சீ.டீ.ஏ. அறிக்கை தேசிய ஆராய்ச்சி சபையினால் சுகாதார அமைச்சர் கௌரவ பவித்ரா வன்னிஆராச்சியிடம் கையளிக்கப்பட்டது.

பம்பலப்பிட்டியவில் கரையொதுங்கிய ஆணின் சடலம்!

கொழும்பு, பம்பலப்பிட்டிய கடற்கரை பகுதியில் ஆணொருவரின் சடலம் இன்று (13) பகல் கரையொதுங்கியுள்ளது.

கடலில் நீராடசென்றவேளை இவர் உயிரிழந்திருக்கலாம் என அப்பகுதியில் உள்ளவர்கள் தெரிவித்தனர்.

சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கான வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் பணி இடம்பெற்றுவருகின்றது. இது தொடர்பில் பம்பலப்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

 

 

மஸ்கெலியா நோக்கிசென்ற லொறி 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து

ஹட்டன் – பொகவந்தலா பிரதான வீதியில், தியசிரிகம பகுதியில் இன்று காலை லொறியொன்று 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.

கொட்டகலையிலிருந்து மஸ்கெலியா நகரிலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு பொருட்களை ஏற்றிச்சென்ற லொறியே இவ்வாறு விபத்துக்குள்ளானது. பொருட்களுக்கு தேசம் ஏற்பட்டிருந்தாலும், எவ்வித காயமுமின்றி சாரதி உயிர் தப்பியுள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

படம் – கழுகுப்பார்வை இணையம் (நன்றி)

இலங்கையில் இன்றும் நாளையும் ‘விண்கல் மழை’!

இலங்கை மக்களால் எதிர்வரும் இரண்டு நாட்களுக்கு விண் கற்கள் மழைவீழ்ச்சியை தெளிவாக பார்வையிட முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி ,இன்றும் நாளையும் இதனை இலங்கையின் வான்பரப்பில் காணமுடியும் என ஆதர் சி கிளார்க் நிறுவகம் தெரிவித்துள்ளது.

இந்த முறை மணிக்கு 130 எரிகற்கள் அளவில் வீழ்வது இலங்கை வான்பரப்பில் தெளிவாக காட்சியளிக்கும் என்பதோடு இவை பல வண்ணங்களில் பயணிக்கும் என்பதாலும்,

இதற்கு ஜெமினிட்ஸ் எரிகல்வீழ்ச்சி என்று பெயரிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வாள் நட்சத்திரங்கள் விட்டுச்சென்ற துகல்களின் வழியே புவி பயணிக்கும் போது இந்த காட்சிகள் தென்படும்.

விண்கற்களானது மணித்தியாலயத்திற்கு ஒரு இலட்சத்து 35 ஆயிரம் கிலோமீற்றர் வேகத்தில் விழும் என குறிப்பிடப்படுகிறது.

எனவே இன்றும் நாளையும் இந்த விண்கல் மழைவீழ்ச்சியினை பார்வையிட முடியும் என விண்ணாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும் இந்த எரிகற்கள் நேரடியாக பூமியில் விழாது என்றும் அதனால் ஆபத்துகள் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று இரவு 9 மணிக்குப் பின்னர் கிழக்கு வானிலும், நள்ளிரவில் தலைக்கு மேலான வான்பரப்பிலும், அதிகாலைப் பொழுதில் சூரியன் உதிப்பதற்கு முன்னர் மேற்கு வானிலும் இதனை தெளிவாக காணமுடியும்.

அடிப்படை நாட்சம்பளமாகவே ஆயிரம் ரூபா அவசியம் – ஜே.வி.பி. போராட்டம்!

பெருந்தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்றாமல் அவர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்படவேண்டும் என வலியுறுத்தி மஸ்கெலியாவில் இன்று (13.12.2020) அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) பெருந்தோட்ட தொழிற்சங்கப்பிரிவான, அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கமே இதற்கான ஏற்பாட்டை செய்திருந்தது.

சங்கத்தின் தலைவர், செயலாளர் உள்ளிட்ட பிரமுகர்கள் சுகாதார நடைமுறைகளை முழுமையாக பின்பற்றி விழிப்புணர்வு பதாதைகளை ஏந்தியவாறு குறித்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.

நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன, கொரோனா நெருக்கடியால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனினும், தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை வழங்குவதற்கு வரவு – செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்படவில்லை. இதனை வன்மையாகக்கண்டிக்கின்றோம்.

எனினும்,2021 ஜனவரி முதல் 1000 ரூபா சம்பள உயர்வு வழங்கப்படவேண்டும் என்ற யோசனை முன்மொழியப்பட்டுள்ளது. இதன்படி தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாகவே ஆயிரம் ரூபா வழங்கப்படவேண்டும். அதனை விடுத்து தொழிலாளர்களை மீண்டும் ஏமாற்றும் விதத்தில் சம்பள உயர்வு இடம்பெறக்கூடாது என்று இதன்போது போராட்டக்காரர்கள் கருத்து தெரிவித்தனர்.

க.கிசாந்தன்

விஸ்வநாதன் ஆனந்தின் வாழ்க்கைக் கதை படமாகிறது

இந்தியாவின் முதல் செஸ் கிராண்ட்மாஸ்டரான விஸ்வநாதன் ஆனந்தின் வாழ்க்கைக் கதையை தனுஷ் பட இயக்குனர் படமாக எடுக்க உள்ளார்.

விளையாட்டு நட்சத்திரங்கள் வாழ்க்கை குறித்து சினிமா எடுப்பது வழக்கமாக உள்ளது. அதன்படி மில்கா சிங், மேரி கோம், தோனி குறித்து வெளியான படங்கள் வசூலில் சாதனை படைத்தன. சச்சின் படமும் வெளியானது.

தற்போது கபில் தேவ் (கிரிக்கெட்), பேட்மிண்டன் வீராங்கனைகள் சாய்னா நேவல், பிவி சிந்து, கிரிக்கெட் வீராங்கனைகள் மிதாலி ராஜ், ஜூலன் கோஸ்வாமி, டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, பளு தூக்கும் வீராங்கனை கர்ணம் மல்லேஸ்வரி ஆகியோரது வாழ்க்கை கதைகளும் படமாக தயாராகி வருகின்றன.

இந்நிலையில், இந்தியாவின் முதல் செஸ் கிராண்ட்மாஸ்டரான விஸ்வநாதன் ஆனந்தின் வாழ்க்கைக் கதையை படமாக எடுக்க உள்ளனர். இந்த பயோபிக்கை பிரபல பாலிவுட் இயக்குனரான ஆனந்த் எல் ராய் இயக்க உள்ளார். இவர், தனுஷ் இந்தியில் அறிமுகமான ராஞ்சனா படத்தை இயக்கிவர். தற்போது தனுஷ், அக்‌ஷய் குமார் நடிக்கும் அத்ரங்கி ரே படத்தை இயக்கி வருகிறார்.

விஸ்வநாதன் ஆனந்த் பயோபிக்கின் படப்பிடிப்பு அடுத்தாண்டு தொடங்க உள்ளது. இதில் விஸ்வநாதன் ஆனந்தின் கதாபாத்திரத்தில் நடிக்கப்போவது யார் என்பது குறித்த அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2ஆவது அலையால் கொழும்பில் 14,107 பேருக்கு கொரோனா!

கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2ஆவது அலையால் ஒக்டோபர் 4 ஆம் திகதியில் இருந்து நேற்றுவரை கொழும்பு மாவட்டத்தில் 14 ஆயிரத்து 107பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. நேற்று மாத்திரம் 397 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் தாக்கத்தால் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவானவர்கள் உயிரிழந்துள்ளனர். அத்துடன் வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக கொழும்பில் சில பகுதிகள் தொடர்ந்தும் முடக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மஹர சிறைச்சாலை கலவரம் – இதுவரை 255 பேரிடம் வாக்குமூலம்

மஹர சிறைச்சாலை மோதல் சம்பவம் தொடர்பில் சி.ஐ.டியினர் இதுவரை 255 பேரிடம் வாக்குமூலங்களை பதிவுசெய்துள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன இன்று தெரிவித்தார்.

சிறைச்சாலை வைத்தியசாலையில் பணியாற்றிய வைத்தியர்கள். சம்பவத்தின்போது சிறையில் இருந்த கைதிகள் , சிறைச்சாலை அதிகாரிகள்  பேர் உட்பட மேலும் சிலரிடமே இவ்வாறு வாக்குமூலங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.  நேற்று மாத்திரம் 27 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

 

சினிமா

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

செய்தி

தமிழக முதல்வராக பதவியேற்றார் ஜோசப் விஜய்!

0
தமிழக முதல்வராக பதவியேற்றார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை 10 மணியளவில் பதவியேற்பு விழா தொடங்கியது. வந்தே மாதரம் பாடல் இசைக்க பதவியேற்பு...

தவெக முதற்கட்ட அமைச்சரவை பட்டியல் வெளியீடு

0
தமிழக வெற்றிக் கழக அரசின் தவெக முதற்கட்ட அமைச்சர் பட்டியலை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் கீழ்காணும் பெயர்கள் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளன: புஸ்ஸி என்.ஆனந்த் ஆதவ் அர்ஜுனா கே.ஜி.அருண்ராஜ் கே.ஏ.செங்கோட்டையன் வெங்கடரமணன் நிர்மல்குமார் ராஜ்மோகன் டி.கே.பிரபு கீர்த்தனா 120 எம்எல்ஏக்களின் ஆதரவுக் கடிதங்களை ஆளுநரிடம் விஜய் நேற்று...

மரக்கறி விலைப்பட்டியல் (10.05.2026)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (10) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...