Home Blog Page 3721

வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற கொவிட் நோயாளி : பொலிசார் வலைவீச்சு

இராகம, வெலிசரை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றவந்த கொவிட் நோயாளி ஒருவர் வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிசார் அறிவித்துள்ளனர்.

43 வயதான இந்த நபர், கொழும்பு கிரான்ட்பாஸ் பகுதியை சேர்ந்தவர் என்று தெரிவித்துள்ள பொலிஸார் குறித்த நபரை கண்டுபிடிப்பதற்காக தேடுதல்களை ஆரம்பித்துள்ளனர்.

உத்தரவு அமுல்படுத்துவதற்கு இதுவரை விரும்பவில்லை : மக்களுக்கு 7 நாள் அவகாசம் : இராணுவத் தளபதி

 

கிறிஸ்மஸ் வார நீண்ட விடுமுறையில் மேல் மாகாணத்திற்குள் நுழையவோ அல்லது வெளியேறவோ மற்றும் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்துவதற்கு இதுவரை விரும்பவில்லை என இராணுவத் தளபதியும், கோவிட் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா ஊடகம் ஒன்றுக்கு நேற்று இந்த தகவலை அவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், பண்டிகை வார இறுதிக்கு இன்னும் ஒரு வாரம் இருப்பதால் நிலைமை மறுபரிசீலனை செய்யப்படும் என்று அவர் கூறினார்.

ஆனால் தற்போதுள்ள நிலை தொடர்ந்தால், எந்தவிதமான கட்டுப்பாடுகளும் விதிக்கப்படாது.

“ஆனால் இது எல்லாம் மக்களின் கைகளில் உள்ளது, அடுத்த ஏழு நாட்கள் அவகாசம். அதில் அவர்கள் எவ்வாறு நடந்துகொள்கிறார்கள் என்பதைப் பொறுத்தது” என்று கூறினார்.

கொழும்பில் தற்போதுள்ள COVID-19 நிலைமை குறித்து கூறுகையில்,

சில பகுதிகள் கடுமையான முன்னேற்றத்தைக் காட்டியுள்ளன, தனிமைப்படுத்தப்பட்ட 13 வீட்டுத் திட்டங்களில், 10 வீடமைப்புத் திட்டங்கள் இந்த வாரம் விடுவிக்கப்பட்டன.

அனைத்து முக்கிய கொத்தணிகளையும் கட்டுப்படுத்த முடிந்தது.

அதிகமான கொத்தணிகள் உருவாகாமல் தடுக்க அனைத்து சுகாதார வழிகாட்டுதல்களையும் பராமரிக்க பொது உதவியை அவர் கேட்டுக்கொண்டார்.

தினசரி அதிக எண்ணிக்கையிலான நோயாளிகளை கொழும்பு தொடர்ந்து பதிவு செய்து வருகிறதாகவும் கூறினார்.

‘தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்றினால் போராட்டம் வெடிக்கும்’ – ஜே.வி.பி. எச்சரிக்கை!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஜனவரி மாதம் முதல் கட்டாயம் ஆயிரம் ரூபா வழங்கப்படவேண்டும். இம்முறையும் தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்றினால் ஜனவரி முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்குவதற்கு தோட்டத் தொழிலாளர்கள் தயாராகவே இருக்கின்றனர் – என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் எம்.பி. தெரிவித்தார்.

ஹட்டனில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்அவர் மேலும் கூறியவை வருமாறு,

” இலங்கையின் பொருளாதாரத்துக்கு பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பெரும் பங்களிப்பை செய்தனர். இன்றும் செய்து வருகின்றனர். ஆனால் அவர்களின் வாழ்க்கை நிலைமை மேம்படவில்லை. சுகாதார வசதிகள் இல்லை. தமது பிள்ளைகளுக்கு கல்வியை வழங்குவதற்கு உரிய வகையிலான கல்வி கட்டமைப்பு இல்லை. மாத சம்பளத்தை பெறுவதற்கான உரிமை இருந்தும் நாட்கூலிகளாகவே நடத்தப்படுகின்றனர். இந்நிலைமை மாறவேண்டும். நாட்டில் ஏனைய பிரஜைகளுக்குள்ள உரிமை அவர்களுக்கும் வழங்கப்படவேண்டும்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு காணி உரிமை வழங்கப்படும் என அரசாங்கங்கள் உறுதிமொழி வழங்கியிருந்தாலும் இன்னும் அது வழங்கப்படவில்லை. சட்டபூர்வமான பத்திரத்துக்கு பதிலாக மாற்று பத்திரமே வழங்கப்பட்டுள்ளது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தற்போது 750 ரூபா நாட் சம்பளம் வழங்கப்படுகின்றது. அது அடிப்படை சம்பளம் இல்லை.  தற்போது ஆயிரம் ரூபா வழங்கப்படும் எனக் கூறப்படுகின்றது. அந்ததொகைகூட போதாது. குறைந்தபட்சம் நாளொன்றுக்கு ஆயிரத்து 281 ரூபா வழங்கப்படவேண்டும்.

2021 ஜனவரி முதல் ஆயிரம் ரூபா பெற்றுக்கொடுக்கப்படும் என அரசாங்கம் பட்ஜட்டில் முன்மொழிந்துள்ளது. ஆனால் தோட்டக் கம்பனிகள் இணங்கினால்தான் இந்த சம்பள உயர்வு கிடைக்கும். அவ்வாறு இணங்காவிட்டால் கிடைக்காது. கம்பனிகள் இணங்காவிட்டாலும் அந்த தொகையை அரசாங்கம் வழங்குவதற்கான நிதி பட்ஜட்டில் ஒதுக்கப்படவில்லை. கம்பனிகள் சுவீகரிக்கப்படும் எனக் கூறப்பட்டாலும் அதற்கான சட்ட ஏற்பாடுகளும் இடம்பெறவில்லை. எது எப்படியிருந்தாலும் இம்முறை தோட்டத் தொழிலாளர்கள் ஏமாற்றப்படும் பட்சத்தில் தொழிற்சங்க நடவடிக்கைக்கு அவர்கள் தயாராகவே இருக்கின்றனர்.

அதேவேளை, தோட்டத்தொழிலாளர்களின் வீட்டுரிமை, காணி உரிமை, சம்பள உரிமை ஆகியன உறுதிப்படுத்தப்படவேண்டும். சுகாதார உரிமை, பிள்ளைகளுக்கான கல்வி உரிமை ஆகியனவும் வழங்கப்படவேண்டும்.” – என்றார்.

கம்பளையில் மேலும் அறுவருக்கு கொரோனா தொற்று!

கம்பளையில் மேலும்  அறுவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கம்பளை வைத்தியசாலையில் பணிபுரியும் பெண் வைத்தியரொருவருக்கு அண்மையில் கொரோனா வைரஸ் தொற்றியது. இதனையடுத்து அவரின் குடும்ப உறுப்பினர்களிடமும், அவர்களுக்கு சொந்தமான வர்த்தக நிலையங்களில் தொழில் புரிந்தவர்களிடமும் கடந்த 12 ஆம் திகதி பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டன.  பிசிஆர் பரிசோதனை முடிவுகள் நேற்று (15) வெளியாகின.

இதில் குறித்த வைத்தியரின் தந்தை, தாய், மகள் மற்றும் பேரப்பிள்ளைக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், தந்தையால் நடத்தப்படும் கோழி இறைச்சி விற்பனை நிலையத்தில் பணிபுரிந்த ஊழியர்கள் இருவருக்கும் வைரஸ் தொற்றியுள்ளது.

குறித்த வர்த்தகருக்கு சொந்தமான நான்கு கடைகள் மூடப்பட்டுள்ளன. ஹோட்டலொன்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களுக்கு வைரஸ் தொற்றிய விதம் பற்றியும் சுகாதார அதிகாரிகள் ஆராய்ந்துவருகின்றனர். வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளவர்கள் கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் நேற்று கொண்டுசெல்லப்பட்டனர்.

‘வருடாந்தம் தலைவர் பதவியில் மாற்றம்’ – ஐக்கிய மக்கள் சக்தியின் யாப்பு தயார்!

தலைவர் உட்பட  கட்சி நிர்வாகிகளை வருடா வருடம் தெரிவுசெய்யும் விதத்திலான ஜனநாயக வியூகத்தின் அடிப்படையிலேயே ஐக்கிய மக்கள் சக்தியின் யாப்பு தயாரிக்கப்பட்டுள்ளது – என்று அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” எமது கட்சிக்கான யாப்பு இறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்தவாரம் நிறைவேற்றுக்குழுகூடி அதற்கான ஒப்புதலை வழங்கும். அதன்பின்னர் கட்சி யாப்பின் பிரகாரம் சில நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

முதலாவதாக செயற்குழுவின் ஊடாக சகல பதவிகளுக்குமான நிர்வாகிகளை கட்சி தலைவர் தெரிவுசெய்வார். இதற்கு முகாமைத்துவக்குழு, நிறைவேற்றுக்குழுவின் அனுமதியும் பெறப்படும்.

இரண்டாவதாக கட்சியை பலப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும். தேர்தல் தொகுதிகளில் முன்னெடுக்கவேண்டிய விடயங்கள், கீழ்மட்ட அரசியல் இயந்திரத்தை பலப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் திட்டங்கள் வகுக்கப்படும்.

அத்துடன் புத்திஜீவிகள் குழு, சட்டத்தரணிகள் குழு, தொழிற்சங்க பிரிவுகள் என கிளை அமைப்புகள் கட்டியெழுப்படும். அதற்கான பூர்வாங்க பணிகள் இடம்பெற்றுள்ளன. நிறைவேற்றுக்குழுவின் அனுமதி கிடைத்தபின்னர் இறுதிப்படுத்தப்படும்.

2021 ஆம் ஆண்டுக்காக அங்கத்தவர்களை இணைக்கும் நடவடிக்கையும் ஆரம்பமாகியுள்ளது. அதேபோல் அடுத்தவாரம் முதல் ‘வெற்றிபெறுவோம்’ எனும் தொனிப்பொருளின்கீழான வேலைத்திட்டமும் 6 மாவட்டங்களில் முன்னெடுக்கப்படும். 2021 ஜனவரி மாதத்துக்குள் இதற்கான பணிகளை நிறைவுசெய்வதற்கு எதிர்ப்பார்க்கின்றோம்.

அதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய யாப்பில் தலைவர் உட்பட நிர்வாக உறுப்பினர்களின் பதவி காலம் ஒரு வருடமாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. வருடா, வருடம் நிறைவேற்றுக்குழு ஊடாக தலைவர் பதவி உட்பட நிர்வாக பதவிகளுக்கு உறுப்பிர்கள் தெரிவுசெய்யப்பட்டு, வருடாந்த சம்மேளனத்தில் அதற்கு அனுமதி பெறவேண்டும். இவ்வாறு ஜனநாயக வியூகத்தின் அடிப்படையிலேயே யாப்பு தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நம்பிக்கையும் கட்டியெழுப்பட்டுள்ளது.

செயற்குழு இருந்தாலும் நிறைவேற்றுக்குழுவே பலம்பொருந்திய கட்டமைப்பாக கட்சியில் விளங்கும்.” – என்றார்.

2021 மார்ச் மாதத்துக்குள் மாகாணசபைத் தேர்தல்!

2021 மார்ச் மாதத்துக்கு முன்னர் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசு எதிர்ப்பார்க்கின்றது எனவும், தேர்தல் தொடர்பில் ஆராய்வதற்காக  ஆராய்வதற்காக கட்சி தலைவர்கள் கூட்டமொன்று நடத்தப்படவுள்ளது எனவும் அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று முற்பகல் அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதன்போது மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் எழுப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” மாகாணசபைத் தேர்தலை நடத்தும் முறைமை குறித்து நீண்டகாலமாக கருத்தாடல்கள் இடம்பெற்றுவருகின்றன. தேர்தல் முறைமை மாற்றம் என்ற போர்வையில் கடந்த ஆட்சியின்போது மாகாணசபைகளுக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. தேர்தலை எதிர்கொள்வதற்கு ஏற்பட்ட அச்சத்தாலேயே எல்லை நிர்ணயம், பெண் பிரதிநிதித்துவம் உட்பட பல விடயங்களை ஆயுதமாகப் பயன்படுத்தி  திட்டமிட்ட அடிப்படையில் அது பிற்போடப்பட்டது.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலும் மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது. இதன்படி விரைவில் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை நடத்துவதற்கு முடிவெடுக்கப்பட்டது. கட்சி தலைவர்களுடன் நடைபெறும் கலந்துரையாடலின் பின்னர் எட்டப்படும் இணக்கப்பாட்டின் அடிப்படையில் மீண்டும் அமைச்சரவை பத்திரமொன்றை முன்வைப்பதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு முன்வைக்கப்படும் யோசனை குறித்து அமைச்சரவையும் ஆராய்ந்த பின்னர் இறுதி முடிவு எடுக்கப்படும்.

தேர்தல் முறைமை பற்றி ஆராயவேண்டும் என்பதனால் கட்சி தலைவர்கள் கூட்டத்தை நடத்தி முடிவெடுப்பதே சிறப்பானதாக இருக்கும். நல்லாட்சி என்பதே தேர்தலை பிற்போடவே மூன்றிலிரண்டு பெரும்பான்மையை பயன்படுத்தியது. ஆனால் மக்களின் ஜனநாயக உரிமையை உறுதிப்படுத்துவதற்கே நாம் எதிர்ப்பார்க்கின்றோம்.

அந்தவகையில் மார்ச் மாதத்துக்கு முன்னர் தேர்தலை நடத்துவதற்கு எதிர்ப்பார்க்கின்றோம். அதனை அடிப்படையாகக்கொண்டே பேச்சுகள் இடம்பெற்றன.

‘தீ விபத்தால் நீதிமன்ற கோப்புகளுக்கு எவ்வித சேதமும் இல்லை’

உயர்நீதிமன்றம் அமைந்துள்ள கட்டிட வளாகத்தில் ஏற்பட்ட தீயினால் உயர் நீதிமன்றத்தின் எந்தவொரு அலுவலகத்திற்கோ அல்லது கோப்புகள் உள்ளிட்ட எந்தவொரு பொருட்களுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று அரச தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வறிக்கை வருமாறு,

நாட்டில் இன்று மாத்திரம் 622 பேருக்கு கொரோனா தொற்று!

நாட்டில் மேலும் 202 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி இன்று மாத்திரம் 622 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 34 ஆயிரத்து 121 ஆக அதிகரித்துள்ளது.

2 ஆவது அலைமூலம் (மினுவாங்கொட, பேலியகொட,சிறைச்சாலை கொத்தணிகள்) இதுவரையில் 30 ஆயிரத்து 459  பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

பிள்ளையானை வரவேற்க பாடசாலை மாணவர்களா? ஆசிரியர் சங்கம் கடும் சீற்றம்!

பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசன்துறை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) அரசியல் வரவேற்பு நிகழ்வுக்கு பாடசாலை மாணவர்களைப் பயன்படுத்தியமை தொடர்பாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தமது கடும் எதிர்ப்பை தெரிவித்து கல்வி அமைச்சர் ஜி எல் பீரிசுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது என்று அச்சங்கத்தின் உபதலைவர் சுந்தரலிங்கம் பிரதீப்  தெரிவித்துள்ளார்.

இக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,

” மட்டக்களப்பு மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானின் வரவேற்பு நிகழ்வுக்கு மட்டக்களப்பு மாவட்டப் பாடசாலை மாணவர்களைப் பாடசாலைச் சீருகையுடன் கலந்துகொள்ள வைத்துள்ளமை ஊடகங்களின் வாயிலாக நாட்டின் பெரும்பாலான மக்களுக்கு தெளிவாகக் காணக்கிடைத்தது.

கடந்த சனி அன்று (2020/12/12)மட்டக்களட்பில் இந்த வரவேற்பு நிகழ்வு நடைபெற்றுள்ளதோடு அன்றைய தினம் பாடசாலை விடுமுறையில் இருந்த பிள்ளைகளை பாடசாலைச் சீருடையோடு அழைத்துவந்து அந்த மாணவர்களின் வாண்ட் (பேன்ட்) வாத்திய வரவேற்புச் செயற்பாடுகளுக்கு பிள்ளையான் மூலகாரணமாக இருந்துள்ளார்.

கொலைக்குற்றவாளியாக சிறை தண்டனை அனுபவித்த இந்தப் பாராளுமன்ற உறுப்பினர் தான் விடுதலையான மகிழ்ச்சியில் மட்டக்களப்பில் இந்த நிகழ்வை நடத்தியிருப்பதோடு அவரை வரவேற்பதற்கு பாடசாலை மாணவர்களைப் பயன்படுத்தியிருப்பது ஏற்றுக் கொள்ளமுடியாத பிழையாகும். கல்விச் செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்களுக்கும், பாடசாலை மாணவர்களுக்கும் இது ஒரு தவறான முன்மாதிரியாகும்.

இவ்வாறான அரசியல் நிகழ்வுகளுக்குப் பாடசாலை மாணவர்களைப் பயன்படுத்தியமை சம்மந்தமாக எமது சங்கத்தினூடாகக் கடுமையான எதிர்ப்பினை நடப்பு அரசாங்கத்துக்கும், கல்வி அதிகாரிகளுக்கும் தெரிவிக்கிறோம்.

மேலும் நாட்டில் தற்போதுவரை தொடரும் கொரோனா நோய் அச்சுறுத்தல் தொடர்பாக எந்தவொரு அக்கறையுமின்றி கொரோனா சட்ட விதிமுறைகளை மீறி பாடசாலை மாணவர்கள் இந்த நிகழ்வுக்கு அழைக்கப் பட்டுள்ளனர்

இந்த நிகழ்வுக்குப் பாடசாலை மாணவர்களை அழைத்து வந்து அவர்களுக்குத் தவறான முன்மாதிரியை வழங்கியமைக்கு அதற்குப் பொறுப்பான பாடசாலைப் பிரதானிகள் மற்றும் கல்வி அதிகாரிகளுக்கு ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சிடமும் பொறுப்பு வாய்ந்த கல்வி அதிகாரிகளிடமும் இலங்கை ஆசிரியர் சேவைச்சங்கம் சார்பாக வலியுறுத்தி நிற்கிறோம் என கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்ற கட்டடத் தொகுதியில் தீ – விசாரணைக்கு 3 சி.ஐ.டி. குழுக்கள்!

உயர்நீதிமன்ற கட்டடத் தொகுதியில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக 3 சி.ஐ.டி. குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன என்று  பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொலிஸ் மாஅதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.

பொலிஸ்மா அதிபரின் ஆலோசனையின் பிரகாரமே இக்குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

உயர்நீதிமன்ற கட்டடத் தொகுதியில் இன்று மாலை பாரிய தீ பரவியிருந்தது. தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக 9 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டிருந்தன.

தீ முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. அத்துடன் வழக்குகளுடன் தொடர்புடைய எந்தவொரு ஆவணமும் தீக்கிரையாகவில்லை என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டார்.

உயர்நீதிமன்றத்தின் கழிவுப் பொருட்கள் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த பகுதியிலேயே தீ பரவியுள்ளது.

சினிமா

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

செய்தி

தமிழக முதல்வராக பதவியேற்றார் ஜோசப் விஜய்!

0
தமிழக முதல்வராக பதவியேற்றார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை 10 மணியளவில் பதவியேற்பு விழா தொடங்கியது. வந்தே மாதரம் பாடல் இசைக்க பதவியேற்பு...

தவெக முதற்கட்ட அமைச்சரவை பட்டியல் வெளியீடு

0
தமிழக வெற்றிக் கழக அரசின் தவெக முதற்கட்ட அமைச்சர் பட்டியலை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் கீழ்காணும் பெயர்கள் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளன: புஸ்ஸி என்.ஆனந்த் ஆதவ் அர்ஜுனா கே.ஜி.அருண்ராஜ் கே.ஏ.செங்கோட்டையன் வெங்கடரமணன் நிர்மல்குமார் ராஜ்மோகன் டி.கே.பிரபு கீர்த்தனா 120 எம்எல்ஏக்களின் ஆதரவுக் கடிதங்களை ஆளுநரிடம் விஜய் நேற்று...

மரக்கறி விலைப்பட்டியல் (10.05.2026)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (10) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...