Home Blog Page 3720

இன்று மாத்திரம் 611 பேருக்கு கொரோனா! மூவர் உயிரிழப்பு!!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் மூவர் உயிரிழந்துள்ளனர்.

50 மற்றும் 43 வயதுகளுடைய இரு பெண்களும், 78 வயதுடைய ஆணொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதன்படி கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 160 ஆக அதிகரித்துள்ளது.

2 ஆவது அலைமூலம் இதுவரை 147 பேர் உயிரிழந்துள்ளனர். கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவானவர்கள்  உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை, நாட்டில் இன்று மாத்திரம் 611 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 34 ஆயிரத்து 732 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 25 ஆயிரத்து 652 பேர் குணமடைந்துள்ளனர்.

ரஜினியுடன் கூட்டணி அமைந்தால் முதல்வர் வேட்பாளர் யா?

ரஜினியோடு கூட்டணி அமையும் பட்சத்தில் இருவரில் யார் முதல்வர் என்பதை பேசி முடிவெடுப்போம் என மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

தென்மாவட்டங்களில் தேர்தல் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன், இளைஞர்கள் மற்றும் பெண்களை சந்தித்து கலந்துரையாடினார்.

அதன்பின்னர் ஊகடங்களிடம் கருத்து வெளியிட்ட அவர்,

” கூட்டணி வைப்பது குறித்து இதுவரை எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை ஓவைசியோடு எந்த பேச்சுவார்த்தையும் நடைபெற வில்லை, ரஜினியோடு கூட்டணி அமையும் பட்சத்தில் இருவரில் யார் முதல்வர் என்பதை பேசி முடிவெடுப்போம்.

ஆன்மீகத்தை நோக்கி நான் செல்லவில்லை. என்னை நோக்கியும் அது வரத்தேவையில்லை. மக்களிடத்தில் ஆன்மீகம் இருக்கிறது என்றால் அதுவும் என் வாழ்வில் ஒரு அங்கமாகத்தான் இருக்கும். எனக்கு தேவையா இல்லையா என்பது என்னுடைய பிரச்சினை.

ஒரு நபரின் அன்புக்கும், கட்சியில் சேருவதற்கும் நாங்கள் நெற்றியை பார்த்து முடிவு செய்வதில்லை. கண்களை பார்த்துதான் முடிவு செய்கிறோம். அதில் நேர்மை தெரிந்தால் அதுதான் முதல் தகுதி.

அரசியலில் குதிப்பது, இறக்கிவிடப்படுவது என்பதெல்லாம் எனக்கு பொருந்தாது. யாராவது பிடித்து கொண்டு வந்து இறக்கி விடும் அளவிற்கு தள்ளாமை இல்லை. நான் பி டீம் என்றால் அது காந்திக்குதான். மற்றபடி நாங்கள்தான் ஏ டீம். கொள்கை இல்லாமல் வேறு வழியில்லாமல் அரசியலுக்கு வரவில்லை. இதில் எனக்கு அசௌகரியம்தான் அதிகம்.

இருந்தாலும் இந்த முடிவுகளை எடுப்பதற்கு 12 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஒரு சினிமா எடுத்தால் கூட எனக்கு பிடித்ததும் மக்களுக்கு பிடித்ததைத் தான் எடுப்பேன். என்னை யாரும் சொல்லி படம் எடுக்க வைக்க முடியாது. அப்படியென்றால் என் படத்தின் கதையெல்லாம் வேற மாதிரி இருந்திருக்கும். எனக்கு நியாயம் என்று தோன்றுவதை மக்களுக்கு நல்லது என்று தோன்றுவதைதான் செய்வேன். என்னை இயக்கவோ தள்ளவோ முடியாது.

எம்.ஜி.ஆரை தேர்தலுக்காக உரிமை கொண்டாடவில்லை எம்.ஜி.ஆரை பற்றி இப்போது பேசவில்லை. 40 ஆண்டுகளுக்கு முன்பே பேசி இருக்கிறேன். இப்போது நீங்கள் என்னை உன்னிப்பாக கவனிப்பதால் தெரிகிறது. எம்.ஜி.ஆர் என்னை கொஞ்சியுள்ளார். நெற்றியில் முத்தமிட்டுள்ளார். தொலைபேசியில் நீண்ட உரையாடல் நடத்தியிருக்கிறார். இதையெல்லாம் நான் மார்த்தட்டி சொல்லிக்கொள்ளவில்லை அவ்வளவுதான்.

போஸ்டரில் எம்.ஜி.ஆர் படத்தை சிறியதாக போட்டவர்கள்தான் இந்த அதிமுக கோஷ்டி. யார் அவரை அரசியலுக்காக கையில் எடுக்கிறார்கள். யார் அன்பிற்காக கையில் எடுக்கிறார்கள் என்பது அவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. உங்களுக்காவது அது தெரிய வேண்டும்.

கண்டிப்பாக மூன்றாவது அணி அமைய வாய்ப்பு இருக்கிறது. நல்லவர்கள் எங்கள் பக்கம் சேருவார்கள் என்று எண்ணிக்கொண்டிருக்கிறோம்.

எனக்கு பல தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என அழைப்பு வருகிறது. அது எந்த தொகுதி என கலந்தாலோசித்துக் கொண்டிருக்கிறோம். அதனால் கொஞ்சம் நிதானித்து வெளிப்படுத்தலாம் என்று நினைக்கிறேன்.

நான் ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிட எண்ணிக்கொண்டிருக்கிறேன். ஏனென்றால் அந்த தொகுதி மக்களிடம் சுற்றி குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்ய ஏதுவாக இருக்கும் என நினைக்கிறேன்.

தேர்தல் வாக்குறுதியில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் இலவசமாக வழங்குவது உள்ளிட்டவைகள் இடம்பெறும்.

இதுவரை இல்லாத அரசியலை நடத்த வேண்டும் என்பதே மக்கள் நீதி மய்யத்தின் ஆசை. நல்ல விஷயங்கள் எந்த சித்தாந்தத்தில் இருந்து வந்தாலும் ஏற்றுக்கொள்ளும் தன்மை மய்யத்தாருக்கு உண்டு. இல்லத்தரசிகளுக்கு ஊதியம் என்ற திட்டத்தை நிறைவேற்றுவோம்.

டார்ச் லைட் சின்னம் மறுக்கப்பட்டுள்ளது. நான்கு அல்லது 5 நாட்களில் நீதிமன்றத்தை நாடுவோம். அதை போராடி பெறுவோம். தேர்தல் ஆணையத்திடம் எடுத்துரைப்போம் என கூறினார்.

2ஆவது அலைமூலம் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா!

நாட்டில் மேலும் 326 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பேலியகொடை கொத்தணிமூலமே இவர்களுக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 34 ஆயிரத்து 447 ஆக அதிகரித்துள்ளது.

2 ஆவது அலைமூலம் (மினுவாங்கொட, பேலியகொட,சிறைச்சாலை கொத்தணிகள்) இதுவரையில் 30 ஆயிரத்து 785 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

‘உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு’

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பிரச்சினைகளை தீர்த்து அவர்களுக்கு நிவாரணங்களை பெற்றுக் கொடுத்தமை தொடர்பில்   பிரதமர் உள்ளிட்ட அரசாங்கத்தை பாராட்டுவதாக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இன்று (2020.12.16) தெரிவித்தார்.

2019 உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பிரச்சினைகளை தீர்த்தல் மற்றும் தாக்குதலுக்கு இலக்கான தேவாலயங்களின் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து கௌரவ பிரதமரின் பங்கேற்புடன் அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் நிறைவிலேயே பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இவ்வாறு குறிப்பிட்டார்.

உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்காக கடுவபிடிய பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுவரும் 24 வீடுகள் திட்டத்தின் பணிகள் இதுவரை நிறைவடைந்த இடத்திலிருந்து மீண்டும் ஆரம்பித்து விரைவில் நிறைவுசெய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அரச பொறியியலாளர் கூட்டுத்தாபனத்திற்கு கௌரவ பிரதமர் இதன்போது அறிவுறுத்தினார்.

மேலும், காணி உரிமை கொண்டுள்ளவர்களுக்காக மேலும் 5 வீடுகள் கடுபிடிய பிரதேசத்தில் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் நிர்மாணிக்கப்படவுள்ளது.

தாக்குதலில் பாதிக்கப்பட்டு கொழும்பை அணிமித்த பகுதிகளில் வாடகை வீடுகளில் குடியிருக்கும் 33 குடும்பங்களுக்காக வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் திட்டமிடப்பட்ட வீட்டுத் திட்டத்திலிருந்து 33 வீடுகளை ஒதுக்கித் தருமாறு  பிரதமர் இதன்போது தகவல் வழங்கினார்.

இம்மக்களுக்கு மேலதிகமாக பதுளை, கண்டி உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள தாக்குதலினால் பாதிக்கப்பட்ட 11 குடும்பங்களுக்காக அந்தந்த பிரதேசங்களில் வீட்டுத் தேவைகளை பூர்த்தி செய்து கொடுப்பது தொடர்பில் இதன்போது உடன்பாடு எட்டப்பட்டது.

பாதிக்கப்பட்டவர்களுக்காக ஸ்ரீ ஜயவர்தன வைத்தியசாலையினால் பெற்றுக் கொடுக்கப்படும் மருத்துவ வசதிகளை விரிவுபடுத்துவது தொடர்பில் அறிவுறுத்திய பிரதமர், அவர்களுக்கு தேவையான சிகிச்சைகள் மற்றும் சிகிச்கை அறை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அவர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

இதற்கு மேலதிகமாக நிதி அமைச்சின் ஒதுக்கீடுகளை கொண்டு தற்போது நிர்மாணப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ள கடுபிடிய அறநெறி பாடசாலையை 60 மில்லியன் ரூபாய்க்கும் அதிக தொகையை செலவிட்டு நிர்மாணப் பணிகளை நிறைவுசெய்தல், தாக்குதலில் சேதமடைந்த கொச்சிகடை தேவாலயத்தில் ஏற்கனவே திட்டமிட்டபடி கடற்படைக்கு ஒதுக்கீடுகளை மேற்கொண்டு நிர்மாணப் பணிகளை நிறைவுசெய்வதற்கும் கௌரவ பிரதமர் இதன்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

கடந்த அரசாங்கம் கொச்சிகடை தேவாலயத்தை ஒரு புதிய வடிவமைப்பில் நிர்மாணித்து தருவதாக குறிப்பிட்ட போதிலும், அந்தவகையில் நிறைவுசெய்யப்படாமை குறித்த சந்திப்பின் போது வெளிப்படுத்தப்பட்டது.

கடந்த அரசாங்கம் பல வாக்குறுதிகளை வழங்கியதை மாத்திரமே செய்தது. ஆனால், நாம் உண்மையாக தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச இதன்போது குறிப்பிட்டார்.

தாக்குதலினால் பாதிக்கப்பட்டு கடன் தவணைகளை செலுத்த முடியாத, அது குறித்து இதுவரை கோரிக்கைகளை முன்வைத்துள்ள நபர்களுக்கு பெற்றுக் கொடுக்கக்கூடிய கடன் நிவாரணங்கள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தனியார் வங்கிகளுடன் கலந்துரையாடுமாறு கௌரவ பிரதமர், நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல  அறிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் தாக்குதலுக்கு இலக்கான தேவாலயங்களில் காணப்படும் பிரச்சினைகள் அருட்தந்தை லோரன்ஸ் ராமநாயக்க அவர்களினால் இச்சந்திப்பின்போது முன்வைக்கப்பட்டது.

கலந்துரையாடலின் நிறைவில் அங்கு கருத்து தெரிவித்த பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அவர்கள் குறிப்பிட்டதாவது,

” பிரதமரே , நான் உங்களுக்கும் அரசாங்கத்திற்கும் தனிப்பிட்ட ரீதியில் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை பெற்றுக் கொடுத்து, அவர்களது பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு முயற்சிக்கும் இந்த வேலைத்திட்டத்திற்கு எமக்கு வழங்கிய ஆதரவு தொடர்பில், விசேடமாக இந்த விடயத்தில் தலையீடு செய்து நடவடிக்கை மேற்கொள்ளும் அமைச்சர்களுக்கும், இராஜாங்க அமைச்சர்களுக்கும் நான் எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.

எமது மக்கள் பாதிக்கப்பட்டமையினாலேயே நாம் இந்த அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்கின்றோம். எதிர்காலத்தில் அவ்வாறான தாக்குதல்கள் இடம்பெறாத பாதுகாப்பான இடமாக மாற்றுவதற்கு உங்களது அரசாங்கம் மற்றும் ஜனாதிபதியின் தலையீட்டுடன் நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என நாம் நம்புகின்றோம்.

அது குறித்து நாம்  பிரதமர் மீது நம்பிக்கை கொண்டுள்ளோம். இவ்வாறானதொரு சந்திப்பை ஏற்பாடு செய்தமை குறித்தும்  பிரதமர்,  வ அமைச்சர்கள் உள்ளிட்ட அனைத்து ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன் எனக் குறிப்பிட்டார்.

‘குடிக்க தண்ணீர் கேட்டால் சுடும் அரசாங்கமே இது’ – மனோ சாட்டையடி

” மஹர சிறைமில் மரணமடைந்த கைதிகளில் நால்வர் துப்பாக்கி சூட்டில் மரணம் என்று விசாரணை அறிக்கை கூறுகிறது.  ஆகவே கைதிகள் தங்களுக்குள் அடித்து கொண்டே செத்தார்கள் என அரசாங்கம் ஆரம்பத்தில் அறிவித்தது பச்சை பொய்.”   என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவத,

” கைதிகள் இறப்பினால் கவலையடைந்தாலும், விசாரணை குழு உறுப்பினர்கள், துணிச்சலாக உண்மையை வெளிக்கொண்டு வந்ததையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்.
இதன்மூலம், இந்த அரசின் மீதான “அச்சம் அகழ்கிறது” என தெரிகிறது.
இந்த கைதிகளின் பல கோரிக்கைகளில் ஒன்று “குடிக்க தண்ணீர் தாருங்கள்” என்பதாகும். இதற்கு முன் ரதுபஸ்வல ஊரில் தண்ணீர் கேட்ட மக்களை இதே கட்சி அரசு சுட்டு கொன்றது. இப்போதும் அப்படிதான்.

ஆகவே குடிக்க தண்ணீர் கேட்டால் சுடும் அரசாங்கம் இதுவாகும். 69 இலட்ச வாக்குகளை பெற்று பதவிக்கு வந்த இந்த ராஜபக்ச அரசாங்கம், இந்த துப்பாக்கி சூடு மூலம் மக்களுக்கு ஒரு எச்சரிக்கையை அறிவிக்கிறது. அதாவது, “தங்கம் கேட்டால்கூட, நாங்கள் தந்தாலும் தருவோம். ஆனால், தண்ணீர் கேட்டால் கட்டாயம் சுடுவோம்”.”

‘கொரோனா’வின் பிடிக்குள் இருந்து மேலும் 785 பேர் மீண்டனர்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 785 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 25  ஆயிரத்து 652  ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் 8 ஆயிரத்து 312 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 157 பேர் உயிரிழந்துள்ளனர்.

வெல்லவாய நகருக்கும் 3 நாட்களுக்கு பூட்டு!

மொனறாகல மாவட்ட வெல்லவாய நகரம் இன்றுமுதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை மூன்று நாட்களுக்கு மூடுவதற்கு வெல்லவாய நகர வர்த்தக சங்கம் தீர்மானித்துள்ளது.

கடந்தசில நாட்களாக வெல்லவாய பிரதேசத்தில் 15 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்து வர்த்தக நிலையங்களை மூடுவதற்கு வர்த்தக சங்கத்தினர் தாமாகவே இவ்வாறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை படல்கும்பர பிரதேச சபைக்குட்பட்ட அலுபொத்த கிராம பகுதி தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் 24 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதையடுத்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக படல்கும்பர பிரதேச பொது சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தனிமைப்படுத்தப்பட்ட அலுபொத்த பகுதியில் (15/12)நேற்றைய தினம் 159 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு படல்கும்பர நகர வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

நடராஜா மலர்வேந்தன்

சாமிமலை பகுதியில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று!

மஸ்கெலியா பொது சுகாதார அதிகாரி பிரிவுக்குட்பட்ட  பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சாமிமலை, மல்லியப்பு தோட்டத்தில் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  46 வயதுடைய பெண்ணொருவருக்கும், 50 வயதுடைய ஆணொருவருக்குமே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.

கொழும்பிலிருந்து இவர்களின் வீட்டுக்கு வந்திருந்த பெண்ணொருவருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதனையடுத்து அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களிடம் பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டன. அம்முடிவுகளின் அடிப்படையிலேயே வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், சாமிமலை பெயர்லோன் தோட்டத்தில்  54 வயதுடைய பெண்ணொருவருக்கும் வைரஸ் தொற்றியுள்ளது.  இவர்கள் மூவரும் கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.

20 அடி பள்ளத்தில் வீழ்ந்து பெக்கோ இயந்திரம் விபத்து – ஒருவர் பலி!

வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெலிஓயா ஆக்ரோயா பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்குவாரி ஒன்றில் இடம்பெற்ற பெக்கோ இயந்திர விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.

இவ்விபத்து 16.12.2020 இன்று மதியம் கல்குவாரி வளாகத்திலேயே இடம்பெற்றுள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் பெக்கோ இயந்திரத்தை செலுத்துகையில் அதன் கட்டுப்பாட்டை இழந்து 20 அடி பள்ளத்தில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதனையடுத்து, குறித்த சாரதியை மீட்டு, உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இவ்வாறு உயிரிழந்தவர், மஸ்கெலியா கோர்த்தி பகுதியை சேர்ந்த மொஹமட் அலீம் (வயது – 36) ஒரு பிள்ளையின் தந்தை என பொலிஸாரின் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளன.

உயிரிழந்தவரின் சடலம் வட்டவளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு அனுப்பப்படும் என தகவல்கள் தெரியவந்துள்ளன.

இவ்விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை வட்டவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

விமான நிலையங்களுக்கான சுகாதார வழிகாட்டி தயார்

விமான நிலையங்களை திறப்பதற்கான சுகாதார வழிகாட்டி தயாரிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.

விமான நிலையங்களின் ஊடாக நாட்டிற்கு வருகைத் தரும் பயணிகளினால் வைரஸ் பரவாதிருக்கும் வகையிலான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் பொதுமக்கள் சுகாதாரம் தொடர்பான பிரதி சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவிக்கின்றார்.

கொவிட் வைரஸ் தாக்கம் நாட்டிற்குள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டாலும், விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களின் ஊடாக மீண்டும் வைரஸ் தாக்கம் ஏற்படுவதற்கான சாத்தியம் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

அவ்வாறு நாட்டிற்கு வைரஸ் உட்பிரவேசிக்கும் விதம் குறித்து தாம் முழுமையாக ஆராய்ந்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

வைரஸ் தொற்றுவதற்கான சாத்தியங்களை தவிர்ப்பதற்கான ஆலோசனைகளை தாம் வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

விமான நிலையங்களின் ஊடாக பெருமளவிலான மக்கள் வருகைத் தருவார்களாயின், அவர்களிடமிருந்து வைரஸ் பரவாதிருப்பதற்கான நடவடிக்கைகளை தாம் முன்னெடுத்துள்ளதாகவும் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவிக்கின்றார்.

சினிமா

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

செய்தி

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் ஜோசப் விஜய் ஆலோசனை

0
பு​திய முதல்​வ​ராக பொறுப்​பேற்ற பின்​னர் ஜோசப் விஜய் தலை​மைச் செயல​கத்​துக்கு சென்​று, முதல் நாளில் சட்​டம் ஒழுங்கு விவ​காரம் குறித்து அதி​காரி​களு​டன் ஆலோ​சனை நடத்தினார். தமிழகத்​தில் புதிய முதல்​வ​ராக ஜோசப் விஜய் நேற்று பதவி​யேற்றுக்...

தமிழக முதல்வராக பதவியேற்றார் ஜோசப் விஜய்!

0
தமிழக முதல்வராக பதவியேற்றார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை 10 மணியளவில் பதவியேற்பு விழா தொடங்கியது. வந்தே மாதரம் பாடல் இசைக்க பதவியேற்பு...

தவெக முதற்கட்ட அமைச்சரவை பட்டியல் வெளியீடு

0
தமிழக வெற்றிக் கழக அரசின் தவெக முதற்கட்ட அமைச்சர் பட்டியலை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் கீழ்காணும் பெயர்கள் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளன: புஸ்ஸி என்.ஆனந்த் ஆதவ் அர்ஜுனா கே.ஜி.அருண்ராஜ் கே.ஏ.செங்கோட்டையன் வெங்கடரமணன் நிர்மல்குமார் ராஜ்மோகன் டி.கே.பிரபு கீர்த்தனா 120 எம்எல்ஏக்களின் ஆதரவுக் கடிதங்களை ஆளுநரிடம் விஜய் நேற்று...