Home Blog Page 3728

கொழும்பு மாவட்டத்தில் 13,710 பேருக்கு கொரோனா

கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2ஆவது அலையால் ஒக்டோபர் 4 ஆம் திகதியில் இருந்து நேற்றுவரை கொழும்பு மாவட்டத்தில் 13 ஆயிரத்து 710 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. நேற்று மாத்திரம் 445 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் தாக்கத்தால் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவானவர்கள் உயிரிழந்துள்ளனர். அத்துடன் வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக கொழும்பில் சில பகுதிகள் தொடர்ந்தும் முடக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 

2ஆவது அலைமூலம் மத்திய மாகாணத்தில் 1,259 பேருக்கு கொரோனா!

கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2ஆவது அலைமூலம் கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் நேற்றுவரை மத்திய மாகாணத்தில் ஆயிரத்து 259 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

மினுவாங்கொட மற்றும் பேலியகொட கொத்தணிகள்மூலமே இவர்களுக்கு இவ்வாறு வைரஸ் பரவியது.

நுவரெலியா மாவட்டத்தில் நேற்று மாத்திரம் 8 பேருக்கு வைரஸ் தொற்றியது. அம்மாவட்டத்தில் நேற்றுவரை 218 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கண்டி மாவட்டத்தில் கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் நேற்றுவரை 978 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது. மாத்தளை மாவட்டத்தில் 63 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

முடக்கப்பட்ட கனவரல்லை பகுதியை கட்டங்கட்டமாக விடுவிக்க ஆலோசனை!

பசறை பகுதியின் 13ஆவது மைல் கனவரல்லைப் பிரதேசத்தை தனிமைப்படுத்தல் திட்டத்திலிருந்து படிப்படியாக விடுவிக்க ஆலோசித்திருப்பதாக, பிரதேசத்திற்கு பொறுப்பான பொது சுகாதாரப் பரிசோதகர் வி. இராஜதுரை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“13ஆவது மைல் கனவரல்லைப் பிரதேசத்தில் 195 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளில் எவருக்கும் கோவிட் 19 தொற்று இல்லையென்பது ஊர்ஜிதப்படுத்தப்பட்டிருக்கின்றது. ஆனாலும் தற்போதைய நிலையில் 95 குடும்பத்தினர் மட்டும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் இதுவரையில், இப் பிரதேசத்தில் 11 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா தொற்றுக்கு இலக்கானவர்களில் 10 வயது நிரம்பிய மாணவியொருவரும், 07 வயது நிரம்பிய மாணவரொருவரும் உள்ளடங்கியுள்ளனர்.

கொழும்பில் கட்டிட நிருமாணப் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் விடுமுறையில் தமது இருப்பிடமான கனவரல்லைக்கு வந்துள்ளனர். அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்தே, இப் பிரதேசத்தில் கொரோனா தொற்று இந்தளவில் 11 பேர் வரையில் உயர்ந்துள்ளது.

இத்தொற்று மேலும் பரவாத வகையில் சுகாதார நடைமுறைகள் முறையாகவும், கிரமமாகவும் பின்பற்றப்பட்டு வருகின்றன. மக்கள் இதனை ஆர்வமாக முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. அத்துடன், தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் இப்பிரதேசத்தை படிப்படியாக விடுவிக்கவும் ஆலோசித்து வருகின்றோம்” என்றும் கூறினார்.

எம்.செல்வராஜா, பதுளை

கொரோனாவால் உலகளவில் 16 லட்சம்பேர் உயிரிழப்பு!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 லடசத்தை தாண்டியுள்ளது.

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

தற்போதைய நிலவரப்படி, 7 கோடியே 14 லட்சத்து 38 ஆயிரத்து 206 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவில் இருந்து 4 கோடியே 96  லட்சத்து 38 ஆயிரத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர்.

யானை – மனித மோதலினால் அதிகமான யானைகள் இறக்கும் நாடாக இலங்கை

யானை – மனித மோதலால் உலகில் அதிக எண்ணிக்கையிலான யானைகள் இறக்கும் நாடாக இலங்கை மாறியுள்ளது என்பது பொதுக் கணக்குகள் பற்றிய குழுவின் கூட்டத்தில் (கோபா) தெரியவந்துள்ளது.

யானை – மனித மோதலால் அதிகளவான மனித உயிரிழப்புக்கள் இடம்பெறும் நாடுகளில் இலங்கை இரண்டாவது இடத்தில் காணப்படும் நிலையில், முதலாவதிடத்தில் இந்தியா காணப்படுகிறது.

இலங்கையில் யானை – மனித மோதல் தொடர்பில் விசேட கணக்காய்வு அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவில், யானை – மனித மோதல் தொடர்பில் பல வருடகால ஆராய்ச்சி ரீதியிலான அனுபவம் கொண்ட கலாநிதி பிரித்விராஜ் பெர்னாந்து குறிப்பிட்டார்.

இலங்கையில் யானை – மனித மோதல் காரணமாக சராசரியாக வருடமொன்றுக்கு உயிரிழக்கும் யானைகளின் எண்ணிக்கை 271 ஆகக் காணப்பட்ட நிலையில் கடந்த வருடத்தில் 407 யானைகள் உயிரிழந்திருப்பதாக அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரன தெரிவித்தார்.

அத்துடன், யானை – மனித மோதல் காரணமாக வருடமொன்றுக்கு உயிரிழக்கும் மனிதர்களின் எண்ணிக்கை 85 ஆகக் காணப்பட்டதுடன், 2019ஆம் ஆண்டில் 122 பேர் உயிரிழந்திருப்பது பற்றிய தகவலும் இங்கு வெளியானது.

இலங்கையில் பாரிய பிரச்சினையாக மாறியுள்ள யானை – மனித மோதலைத் தீர்ப்பதற்கு வனஜீவராசிகள் திணைக்களம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் ஒன்றிணைந்து இதனைவிட வினைத்திறனானவேலைத்திட்டத்துடன் செயற்படுவதன் அவசியத்தை குழுவின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரன மற்றும் குழு உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.

 இந்த யானை – மனித மோதலைத் தீர்க்க 60 ஆண்டுகளாக முயற்சித்த போதிலும், எண்ணிக்கைகள் அதிகரித்துச் செல்கின்றனவே தவிர குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை என்றும் புதிய முறையில் அதற்கு தீர்வு காணப்பட வேண்டும் என்றும் கோபா குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.

எனவே, யானை – மனித மோதலைக் குறைப்பதற்கான முதல் படியாக சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களையும் விரைவில் இணைத்து ஒரு தேசிய ஒருங்கிணைப்புக் குழுவை அமைக்குமாறு கோபா குழு, வனஜீவராசிகள் திணைக்களத்துக்குப் பரிந்துரைத்தது.

யானை – மனித மோதலைக் கட்டுப்படுத்துவதில் ஒரு வெற்றிகரமான முறையாக அடையாளம் காணப்பட்ட யானைகளுக்கு வேலி அமைக்கும் முறையின் கீழ் 2016 ஆம் ஆண்டுவரை 4211 கிலோ மீற்றர் வேலிகள் அமைக்கப்பட்டிருந்தபோதும், குறுகிய காலத்தில் அவற்றை முறையாக பராமரிக்கத் தவறியது கடுமையான பிரச்சினையாக இருந்தது என்று இக்குழு சுட்டிக்காட்டியது.
இதற்கு 86 மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டுள்ள போதும் வனஜீவராசிகள் திணைக்களம் இவற்றின் முன்னேற்றத்தைக் கண்காணிக்க வேண்டிய அவசியம் பற்றியும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

சஜித் அணியின் ஆட்டம் ஜனவரியில் ஆரம்பம்! 19 ஆம் திகதி வியூகம் வகுப்பு!!

ஐக்கிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழுக் கூட்டம் எதிர்வரும் 19 ஆம் திகதி பண்டாரவளையில் நடைபெறவுள்ளது.

கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள் பங்கேற்கவுள்ளனர்.

இதன்போது ஐக்கிய மக்கள் சக்திக்கான யாப்புக்கு அங்கீகாரம் பெறப்படவுள்ளது. அதன்பின்னர் கட்சியை பலப்படுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பமாகும்.

சிவனொளிபாத மலை யாத்திரை 29 இல் ஆரம்பம்! பூஜைகள், அன்னதானங்களுக்கு தடை!!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சிவனொளிபாத மலை யாத்திரை இம்முறை சுகாதார பாதுகாப்புகளுடன் ஆரம்பமாகவுள்ளது.

சிவனொளிபாத மலை யாத்திரைக்காக இரத்தினபுரி மாவட்டத்தின் 4 வழிகளில் புனித புத்தர் சிலை மற்றும் புனித பொருட்களைத் தாங்கி செல்லும் பெரஹராக்களில் கடும் சுகாதார வழிமுறை சட்ட திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன் வீதிகளில் வாகனங்களை நிறுத்தி அன்னதானங்கள், பூஜைகள் நடத்துவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.

சப்ரகமுவ ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தலைமையில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
அதற்கிணங்க இம்முறையும் குருவிட்ட, அவிசாவளை, பலாங்கொைட, பலாபத்வல வழிகள் ஊடாகச் செல்லும் பெரஹரா ஊர்வலங்களை கடந்த வருடங்களைப் போல் வீதிகளில் நிறுத்தாமல் இருக்கவும் வீதிப் பூஜைகள் மற்றும் அன்னதானகளை நடத்துவதை தடை செய்யவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டுள்ளன.
அத்துடன் பெரஹராக்கள் செல்வதில் வாகனங்கள் மற்றும் பக்தர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதுடன், மேற்படி பெரஹரா ஊர்வலங்களில் செல்ல விரும்புவோர் தத்தமது பிரதேச செயலகங்களில் தமது பெயரைப் பதிவு செய்து அதற்கான அனுமதி சான்றிதழை பெறுவது அவசியமாகும்.
வழமையான பூஜைகள், அன்னதானங்களுக்குப் பதிலாக முகக்கவசங்கள் மற்றும் செனிடைசர் உபகரணங்களை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கலாம் எனவும் இங்கு ஆலோசிக்கப்பட்டது.
சிவனொளிபாதமலை யாத்திரை இம்மாதம் 29 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

2ஆவது அலைமூலம் 27,743 பேருக்கு கொரோனா – 134 பேர் உயிரிழப்பு!

இலங்கையில் கொரோனா வைரஸ் 2ஆவது அலைமூலம் நேற்றிரவுவரை (11) 27ஆயிரத்து 743 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இவர்களில் இதுவரையில் 134 பேர் பலியாகியுள்ளனர். (ஒக்டோபர் 24 முதல் நேற்றுவரை)

மினுவாங்கொட கொத்தணிமூலம் 3 ஆயிரத்து 59 பேருக்கும், பேலியகொடை கொத்தணிமூலம் 24 ஆயிரத்து 648பேருக்கும் வைரஸ் தொற்றியுள்ளது. இவர்களில் 22 ஆயிரத்து 830 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மாத்திரம் 762 பேருக்கு வைரஸ் தொற்றியது.

அதேவேளை, இலங்கையில் நேற்றுவரை மொத்தமாக 31 ஆயிரத்து 374 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இவர்களில் 22  ஆயிரத்து 830 பேர் குணமடைந்துள்ளனர்.

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் நேற்று  ஒருவர் உயிரிழந்தார். இதன்படி இலங்கையில் கொரோனா தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 147 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.

‘எங்கள் நிகழ்காலமே! தமிழகத்தின் எதிர்காலமே!! ரஜினியின் வீட்டை சுற்றி விதவிதமான போஸ்டர்கள்

ரஜினிகாந்தின் பிறந்தநாளையொட்டி, அவரது வீட்டை சுற்றி வித விதமான போஸ்டர்களில் வித்தியாசமான வாசகங்களுடன் அவரது ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து ஒட்டியுள்ளனர்.

ரசிகர்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் நடிகர் ரஜினிகாந்த் புதிய கட்சியை ஜனவரி மாதம் தொடங்க இருப்பதாக அண்மையில் அறிவித்தார்.

புதிதாக தொடங்க உள்ள கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜூன மூர்த்தியையும், மேற்பார்வையாளராக தமிழருவி மணியனையும் ரஜினிகாந்த் நியமித்தார். தற்போது தனது புதிய கட்சியை பதிவு செய்வது தொடர்பாக சட்டதரணிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

மேலும், கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர், மேற்பார்வையாளர் ஆகியோருடன் அவ்வப்போது ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். நேற்றும் போயஸ்கார்டனில் உள்ள ரஜினிகாந்தின் இல்லத்தில், இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

ரஜினிகாந்த் அரசியலுக்கு வரஉள்ளதை வரவேற்கும் விதமாக அவரது பிறந்தநாளையொட்டிய வாழ்த்து போஸ்டர்களில் வித்தியாசமான வாசகங்களுடன் விதம் விதமாக அச்சிட்டு ரஜினிகாந்தின் வீடு அமைந்து உள்ள போயஸ்கார்டன் பகுதி மற்றும் சென்னையின் பல்வேறு இடங்களில் ஒட்டி உள்ளனர்.

அவற்றில், ‘ரஜினி எனும் நான் என்று விரைவில் சட்டசபையில் ஒலிக்கும்! அன்று தமிழக மக்களின் வாழ்வு செழிக்கும்!’, ‘மக்கள் தலைவரே!’, ‘மக்களின் முதல்வரே’, ‘ஆன்மிக அரசியலின் ஆளுமையே’, ‘அரசியலின் தூய்மையே’, ‘வெள்ளை மனமே’, ‘எவருக்கும் அஞ்சாதவரே’, ‘எங்கள் நிகழ்காலமே! தமிழகத்தின் எதிர்காலமே!’, ‘தமிழக மக்களின் கடைசி நம்பிக்கையே!’ ‘மக்களின் நெஞ்சம் நிறைந்தவரே!’ என வித்தியாசமான வாசகங்கள் அடங்கி இருந்தன.

நடிகர் ரஜினிகாந்த் ஏற்கனவே அறிவுறுத்தியபடி, வாழ்த்து போஸ்டர்கள் அனைத்திலும் ரஜினியின் புகைப்படத்துடன் போஸ்டர் அடித்தவர்களின் புகைப்படங்கள் மட்டும் இடம் பெற்றனவே தவிர மாநில நிர்வாகிகளின் புகைப்படங்கள் எந்த போஸ்டர்களிலும் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LPL தொடர் – அரையிறுதி ஆட்டம் நாளை ஆரம்பம்!

லங்கா பிரிமியர் லீக்தொடரின் அரையிறுதி ஆட்டம் நாளை ஆரம்பமாகின்றது.

முதலாவது அரையிறுதிப்போட்டியில் கொழும்பு கிங்ஸ் மற்றும் காலி அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. நாளை இரவு 7 மணிக்கு இப்போட்டி ஆரம்பமாகின்றது.

நாளை மறுதினம் 14 ஆம் திகதி இரண்டாவது அரையிறுதிப்போட்டி நடைபெறவுள்ளது. இதில் தம்புள்ள வைகீங்,  ஜப்னா ஸ்டாலியன்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன.

சினிமா

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

செய்தி

தமிழக முதல்வராக பதவியேற்றார் ஜோசப் விஜய்!

0
தமிழக முதல்வராக பதவியேற்றார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை 10 மணியளவில் பதவியேற்பு விழா தொடங்கியது. வந்தே மாதரம் பாடல் இசைக்க பதவியேற்பு...

தவெக முதற்கட்ட அமைச்சரவை பட்டியல் வெளியீடு

0
தமிழக வெற்றிக் கழக அரசின் தவெக முதற்கட்ட அமைச்சர் பட்டியலை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் கீழ்காணும் பெயர்கள் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளன: புஸ்ஸி என்.ஆனந்த் ஆதவ் அர்ஜுனா கே.ஜி.அருண்ராஜ் கே.ஏ.செங்கோட்டையன் வெங்கடரமணன் நிர்மல்குமார் ராஜ்மோகன் டி.கே.பிரபு கீர்த்தனா 120 எம்எல்ஏக்களின் ஆதரவுக் கடிதங்களை ஆளுநரிடம் விஜய் நேற்று...

மரக்கறி விலைப்பட்டியல் (10.05.2026)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (10) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...