Home Blog Page 3729

‘மலையக வீடு திட்டம் குறித்து போலி பிரச்சாரம் முன்னெடுக்கும் கோமாளிகள்’

நல்லாட்சி அரசாங்கத்தின் ஊடாக மலையகத்தில் முறையாக முன்னெடுக்கப்பட்ட வீடமைப்புத் திட்டங்களைத் தற்போது விமர்சிக்கின்ற கோமாளிகள் குறித்து மலையக மக்கள் நன்கு அறிந்து வைத்துள்ளனர் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளரும் மத்திய மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருமான சோ. ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

தொழிலாளர் தேசியசங்கத்தின் அக்கரப்பத்தனை ,டிக்கோயா, டயகம ஆகிய பணிமனைகளில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடல் நிகழ்வுகளில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

” நல்லாட்சி அரசாங்கம் ஏற்படுத்துவதற்கு முன்பு நூறு நாள் அபிவிருத்தி வேலைத் திட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கான முறையான வீடமைப்புத் திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டன. இந்த வீடமைப்புத் திட்டங்கள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து நல்லாட்சி அரசாங்கம் ஏற்படுத்தப்பட்ட பின்பும் தோட்டப் பகுதிகளில்முறையான வீடமைப்பு கிராமங்கள் ஏற்படுத்தப்பட்டன.

இந்த வீடமைப்புத் திட்டங்கள் குறித்து மகிழ்ச்சி அடைந்த இந்திய அரசாங்கம் கிடப்பில் கிடந்த மலையகத்துக்கான இந்திய வீடமைப்பு திட்டத்தை அமுல்படுத்தும் பொறுப்பை முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம் பொறுப்பு வைத்து அமைச்சிடம் கையளிக்கப்பட்டது.

நுவரெலியா மாவட்டம் உட்பட தோட்டத் தொழிலாளர்கள் வாழ்கின்ற சில மாவட்டங்களில் இந்த வீடமைப்புத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இந்திய வீடமைப்பு கிராமங்களுக்கான உட்கட்டமைப்பு வசதிகள் மலையக புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வந்தன.

நல்லாட்சி அரசாங்கத்தைத் தொடர்ந்து வந்த புதிய அரசாங்கத்தினால் இந்திய வீடமைப்பு திட்டங்களுக்கான உட்கட்டமைப்பு வசதிகளுக்கான நிதியொதுக்கீடுகளை தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு இல்லாமல் செய்து தொழிலாளர்களைப் பழிவாங்கி உள்ளது. இதனை மூடி மறைப்பதற்காகவே சில கோமாளிகள் பொய்யான அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர். கோமாளிகளின் பிரச்சாரங்களை மக்கள் நம்புவதற்கு தயாரில்லை.

கட்டுவதற்காக அடிக்கல் நாட்டப்பட்ட இடங்களில் தற்போது புற்கள் முளைத்து காணப்படுகின்றன. மேலும்நுவரெலியா மாவட்டத்தில் தோட்டப் பகுதிகளில் காபட் பாதைகள் நல்லாட்சி அரசாங்க காலத்திலேயே அறிமுகப்படுத்தப்பட்டன.

இதற்கு முன்பு கொட்டகலையில் உள்ள காங்கிரஸ் தொழில்நுட்ப நிறுவனத்துக்கு செல்லுகின்ற 2 கிலோ மீற்றர் பாதை மாத்திரமே காபட் பாதையாக போடப்பட்டமையை மலையக மக்கள் நன்கு அறிவர். ஆகவே தற்போது ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் நல்லாட்சி அரசாங்கத்திற்கு முன்பு மலையகப் பகுதிகளில் மேற்கொள்ளப்படாத அபிவிருத்தித் திட்டங்களை தற்போதாவது மலையக மக்களுக்கு நேர்மையாக செய்வதற்கு முன்வர வேண்டும். அதைவிடுத்து கோமாளித்தனமான பேச்சுகளால் எதையும் சாதித்து விட மமுடியாது.” – என்றார்.

 

நாட்டில் இன்று மாத்திரம் 762 பேருக்கு கொரோனா

நாட்டில் மேலும் 226 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடையவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது. நாட்டில் இன்று மாத்திரம் 762 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 31 ஆயிரத்து 375 ஆக அதிகரித்துள்ளது.

2 ஆவது அலைமூலம் (மினுவாங்கொட, பேலியகொட,சிறைச்சாலை கொத்தணிகள்) இதுவரையில் 27 ஆயிரத்து 747 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

உலகப்புகழ் பெற்ற இயக்குநர் கொரோனாவால் உயிரிழப்பு!

உலகப் புகழ்பெற்ற தென்கொரிய திரைப்பட இயக்குநர் கிம் கி டுக் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 59.

தெற்காசிய சினிமா ரசிகர்கள் மத்தியில் தனி இடமும் பிடித்த பிரபல இயக்குநர்களில் ஒருவர் கிம் கி டுக். கொரியாவைச் சேர்ந்த இவர் இயக்கிய ’சமாரிடன் கேர்ள்’, ’3 அயர்ன்’, ’ஒன் ஆன் ஒன்’ உள்ளிட்டப் படங்கள் சர்வதேச அளவில் கவனம் ஈர்த்தவை.

வெனிஸ், பெர்லின் என சர்வதேச திரைப்பட விழாக்களில் இவரின் படம் பல்வேறு விருதுகளை குவித்திருக்கிறது. இப்படி பல்வேறு பெருமைகளுக்குச் சொந்தக்காரரான கிம் கி டுக், கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தார் என்ற தகவல் உலக சினிமா ரசிகர்களை அதிர்ச்சியையும் கவலையையும் கொள்ளச் செய்திருக்கிறது.

சமீபத்தில், சொந்தமாக வீடு வாங்குவதற்காக நவம்பர் 20இல் லட்வியா நாட்டுக்கு சென்றிருந்திருக்கிறார் கிம். இதற்காக ஜுர்மலா என்கிற கடல் பகுதியில் வீடு பார்த்து வைத்திருந்தவர், அதனை பேசி முடிப்பதற்காக சென்றுள்ளார். நவம்பர் 20ஆம் திகதி சென்ற கிம் குறித்து அடுத்தகட்ட தகவல் ஏதும் வெளியாகததால் அச்சம் அடைந்த அவரின் நண்பர்கள் அவரை தேட ஆரம்பித்துள்ளனர்.

இதன்பிறகுதான் அவர் கொரோனா பாதிப்பின் காரணமாக அவதிப்படும் தகவல் வெளிவந்த நிலையில், இன்று அதிகாலை 1 மணி அளவில் அவர் உயிரிழந்தார் என்று தகவலை தென்கொரிய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. அவரின் மறைவு செய்தியை அறிந்த உலக சினிமா ரசிகர்கள் வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நாட்டில் மேலும் 536 பேருக்கு கொரோனா தொற்று!

நாட்டில் மேலும் 536 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பேலியகொடை கொத்தணிமூலம் 461 பேருக்கும் சிறைச்சாலை கொத்தணிமூலம் 75 பேருக்குமே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.

அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 31 ஆயிரத்து 149 ஆக அதிகரித்துள்ளது.

 2 ஆவது அலைமூலம் (மினுவாங்கொட, பேலியகொட,சிறைச்சாலை கொத்தணிகள்) இதுவரையில் 27 ஆயிரத்து 5214 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

ஆலய மணியின் கயிறு இறுகியதால் சிறுவன் பலி! டிக்கோயாவில் சோகம்!!

ஆலய மணியின் கயிறு கழுத்து பகுதியில் இறுகியதால் 7 வயது சிறுவனொருவர் பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவமொன்று டிக்கோயா, டங்கல் தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

டங்கல் தோட்டத்தின் மேல்பிரிவிலுள்ள ஶ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முற்றத்தில் குறித்த சிறுவன் விளையாடிக்கொண்டிருக்கையில் இன்று முற்பகல் 10 .30 மணியளவில் இத்துயர் சம்பவம் இடம்பெற்றுள்ளது .

தரம் 2 இல் கல்வி பயிலும் விக்னேஸ்வரன் டிலுக்சன் என்ற 7 வயது சிறுவனே உயிரிழந்துள்ளார்.

பெற்றோர் வேலைக்கு சென்றிருந்தவேளை, குறித்த சிறுவன் இன்று தனியாகவே இருந்துள்ளார் எனக் கூறப்படுகின்றது.

மஸ்கெலியா நிருபர் – பெருமாள்

கம்பளையில் கிணற்றில் விழுந்த சிறுத்தை புலி பாதுகாப்பாக மீட்பு

கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இலங்கவத்த பகுதியில் வீடொன்றின் கிணற்றிலிருந்து சிறுத்தைப்புலியொன்று இன்று (12.11.2020) முற்பகல் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளது.

வீடொன்றின் புன்புறத்தில் உள்ள கிணற்றில் சுமார் 5 அடி நீளமான சிறுத்தை புலியொன்று விழுந்து கிடப்பதை வீட்டு உரிமையாளர்கள் கண்டுள்ளனர். இது தொடர்பில் நுவரெலியா வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள், கிணற்றுக்குள் பொறியொன்றை போட்டு, பாதுகாப்பான முறையில் சிறுத்தைப்புலியை மீட்டு , வாகனமொன்றில் எடுத்துச்சென்றனர்.

சிகிச்சைகளுக்கு பின்னர் சிறுத்தைப்புலி விடுக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

‘மாகாணசபைத் தேர்தலை விரைவில் நடத்த ஏற்பாடு செய்யவும்’

மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துவது தொடர்பில் கவனம் செலுத்தி, அதற்கான சட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராயுமாறு  பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று (2020.12.11) தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தினார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கும் , பிரதமருக்கும் இடையே இன்று முற்பகல் விஜேராமவிலுள்ள கௌரவ பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

பழைய அல்லது புதிய முறைக்கு அமைவாக தேர்தலை நடத்துவதற்கான சந்தர்ப்பம் குறித்து ஆராயுமாறும்பிரதமர் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களிடம் தெரிவித்தார்.

அதன் காரணமாக இம்முறை மாகாண சபை தேர்தலை பழைய முறைக்கு அமைய நடத்தி, எதிர்காலத்தில் தேவையான சட்டங்கள் உருவாக்கப்பட்டதன் பின்னர் புதிய முறையின் கீழ் தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்வது எளிதாக அமையும் என அவர்கள் சுட்டிக்காட்டினர்.

அதற்கு பதிலளித்த  பிரதமர் ஏற்கனவே அது தொடர்பில் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக குறிப்பிட்டார்.

குறித்த சந்தர்ப்பத்தில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி நிமல் ஜீ. புஞ்சிஹேவா உள்ளிட்ட ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் மற்றும் கௌரவ பிரதமரின் மேலதிக செயலாளர் திரு.சமிந்த குலரத்ன உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

‘கொரோனா’ – மேலும் 570 பேர் குணமடைவு! நாவலப்பிட்டியவில் மாணவிக்கு வைரஸ் தொற்று!!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 570 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்து 831  ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் 7 ஆயிரத்து 636  பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 146 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை, நாவலப்பிட்டிய பகுதியில் உயர்தர மாணவியொருவருக்கு நேற்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நாவலப்பிட்டிய கதிரேசன் மத்திய கல்லூரியில் கல்வி பயிலும் மாணவியொருவருக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது. அவர் பேராதனை, பெனிதெனில பகுதியில் உள்ள கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். அவருடன் தொடர்பைபேணியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

ஊட்டுவள்ளி தோட்டத்தில் தீ விபத்து – இரு வீடுகளுக்கு சேதம்! ஒருவர் காயம்!!

அக்கரப்பத்தனை ஊட்டுவள்ளி தோட்டத்தில் நேற்றிர (10)  9 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் மூன்று வீடுகள் கொண்ட தொடர் குடியிருப்பில் ஒரு வீடுமுற்றாக எரிந்து நாசமாகியுள்ளதுடன், மற்றுமொரு வீடு பகுதியளவில் சேதமாகியுள்ளது.

இரு வீடுகளிலும் இருந்த 07 பேர் தற்காலிகமாக உறவினர்கள் வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தீ விபத்தின் போது, வீட்டின் உரிமையாளர் ஒருவர் சிறு சிறு எரி காயங்களுக்கு உள்ளாகி அக்கரப்பத்தனை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இத்தீக்கான காரணம் இதுவரை உறுதி செய்யாத போதிலும் எரிவாயு கசிவின் காரணமாக இத் தீ ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

தீ ஏற்பட்ட போது வீட்டில் இருந்தவர்கள் எரிவதை கண்டு கூச்சலிட்டதாகவும், அதன் பிறகு அயலவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் பல மணி நேரத்திற்கு பின்பு தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

பெருமளவிலான வீட்டு உபகரணங்கள்,  உடுதுணிகள் மற்றும் பாடப் புத்தகங்கள் என பெருமளவிலான பொருட்கள் தீக்கிரையாகியுள்ளன.

க.கிசாந்தன்

நோர்வூட் பிரதேச சபையின் பட்ஜட் நிறைவேற்றம் – நழுவியது முற்போக்கு கூட்டணி!

2021 ஆம் நிதியாண்டுக்கான நோர்வூட் பிரதேச சபையின் வரவு – செலவுத் திட்டம் இன்று (11) நிறைவேற்றப்பட்டது.

நோர்வூட் பிரதேச சபை அதன் தவிசாளர் ரவி குழந்தைவேல் தலைமையில் இன்று கூடியது. இதன்போது தவிசாளரால் பாதீடு முன்வைக்கப்பட்டது.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர்கள் 11 பேர், மொட்டு கட்சி உறுப்பினர் ஒருவர், சுயேட்சைக்குழு உறுப்பினர் ஒருவர் என 13 பேர் ஆதரவாக வாக்களித்தனர். தமிழ் முற்போக்கு கூட்டணி உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.

சினிமா

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

செய்தி

தமிழக முதல்வராக பதவியேற்றார் ஜோசப் விஜய்!

0
தமிழக முதல்வராக பதவியேற்றார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை 10 மணியளவில் பதவியேற்பு விழா தொடங்கியது. வந்தே மாதரம் பாடல் இசைக்க பதவியேற்பு...

தவெக முதற்கட்ட அமைச்சரவை பட்டியல் வெளியீடு

0
தமிழக வெற்றிக் கழக அரசின் தவெக முதற்கட்ட அமைச்சர் பட்டியலை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் கீழ்காணும் பெயர்கள் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளன: புஸ்ஸி என்.ஆனந்த் ஆதவ் அர்ஜுனா கே.ஜி.அருண்ராஜ் கே.ஏ.செங்கோட்டையன் வெங்கடரமணன் நிர்மல்குமார் ராஜ்மோகன் டி.கே.பிரபு கீர்த்தனா 120 எம்எல்ஏக்களின் ஆதரவுக் கடிதங்களை ஆளுநரிடம் விஜய் நேற்று...

மரக்கறி விலைப்பட்டியல் (10.05.2026)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (10) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...