Home Blog Page 3730

‘மலையகத்தை பாதுகாக்க கூட்டு ஒப்பந்தம் அவசியம்’ – ரமேஷ்

கூட்டு ஒப்பந்தம் அமுலில் இருப்பதால்தான் மலையகம் பாதுகாக்கப்படுகின்றது. எனவே, அவ்வொப்பந்தம் தொடர்ந்தும் இருக்க வேண்டும் – என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” இந்தியா அரசாங்கத்தால் வடக்கு, கிழக்குக்கு வழங்கப்பட்ட 50 ஆயிரம் வீட்டுத்திட்டத்தில் 4 ஆயிரம் வீடுகளை மறைந்த தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமான், இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி, மலையகத்துக்கு பெற்றுக்கொடுத்தார்.

திட்டம் சிறப்பாக செய்யப்பட்டுவந்தது. ஆனால் ஆட்சிமாற்றம் ஏற்பட்ட பின்னர் சிலர் அத்திட்டத்தை தமக்கு ஏற்றவகையில் செய்தனர். உட்கட்டமைப்பு வசதிகள்கூட ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை. வீடுகள் மட்டுமே கட்டப்பட்டன. இலங்கை அரசாங்கம்தான் உட்கட்டமைப்பு வசதிகளை வழங்கவேண்டும் என்பது ஒப்பந்தமாகும்

தற்போது குறைகளை நிவர்த்தி செய்து பயனாளிகளுக்கு வீடுகளை முழுமையாக கையளிப்பதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கான நடவடிக்கையை ஜீவன் தொண்டமான் முன்னெடுப்பார்.

அத்துடன் 10 ஆயிரம் வீட்டுத்திட்டம் ஜனவரியில் ஆரம்பிக்கப்படும். எந்தவொரு திட்டத்தையும் நிறுத்தாமல் தொடர்ந்தும் முன்னெடுப்போம். நல்லாட்சியின்போதுதான் அரசியல் பழிவாங்கல்கள் இடம்பெற்றன. துமிந்த சில்வா போன்றவர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டனர். சௌமியமூர்த்தி தொண்டமானின் பெயர் இருந்த கட்டத்துக்குகூட பெயரை மாற்றுவதற்கு முயற்சித்தனர்.

அதேவேளை, கூட்டு ஒப்பந்தம் இருப்பதால்தான் மலையகம் காப்பாற்றப்படுகின்றது. அந்த ஒப்பந்தம் இல்லாவிட்டால் காணிகள் பறிபோயிருக்கும். இன்று தொழில்சார் பிரச்சினைகளை இலகுவில் தீர்ப்பதற்கு கூட்டு ஒப்பந்தமே காரணமாக இருக்கின்றது. எதிரணியில் இருப்பவர்களுக்கு வேண்டுமானால் ஒப்பந்தம் இல்லாமல் இருப்பது நன்மையாக இருக்கலாம். ஆனால் தோட்டத் தொழிலாளர்களுக்கும், காங்கிரஸசுக்கும் அது அவசியம்.  பெருந்தோட்டத்துறை கௌரவமானதொரு தொழில்துறையாக மாற்றியமைக்கப்படும். அதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.” – என்றார்.

க.கிசாந்தன்

இலங்கையிலிருந்து கடத்திசெல்லப்பட்ட 10 கிலோ தங்கத்துடன் ஐவர் கைது!

இலங்கையிலிருந்து கடத்திவரப்பட்ட 10 கிலோ தங்கத்துடன் ஐவர்   மத்திய வருவாய் புலனாய்வுத் துறை மற்றும் கடலோர காவல்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையில் இருந்து தங்கம் கடத்தி வருவதாக தமிழகம், திருச்சியில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து இரவோடிரவாக மண்டபம் வந்த வருவாய் புலனாய்வுத் துறையினர் , மண்டபம் கடலோர காவல் படையினருடன் இணைந்து கடலோர காவல் படைக்கு சொந்தமான கப்பலில் மன்னார் வளைகுடா தீவுப் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் அந்தப் படகை வழிமறித்து சோதனை செய்ததில் படகில் தங்கம் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து படகை மண்டபம் சுங்கத்துறை அலுவலதிற்கு கொண்டு வந்து நிறுத்தியதுடன் தங்கத்தை கடத்தி வந்த ஐந்து நபர்களையும் தங்கத்தையும் கடலோர காவல் படை முகாமிற்கு கொண்டுசென்று கடத்தல்காரர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதல் கட்ட விசாரணையில் கடத்தி வரப்பட்டது 10 கிலோ தங்கம் என்றும் படகில் வந்தவர்கள் மண்டபம் மரைக்காயர் பட்டிணத்தில் சேர்ந்தவர்கள் என்பதும் விசாரணையில் தெரிய வருகிறது. கடத்தி வரப்பட்ட தங்கத்தின் மதிப்பு சுமார் 5 கோடி இருக்கும் என தெரியவருகிறது.

ராகலையில் துப்பாக்கி ரவைகளும், வெடிகுண்டுகளும் மீட்பு! மூவர் கைது!!

ராகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா – உடபுஸ்ஸல்லாவ பிரதான வீதியில் ராகலை புரூக்சைட் பகுதியில் துப்பாக்கிக்கு பயன்படுத்தும் 10 ரவைகள் மற்றும் கற்களை உடைக்க பயன்படுத்தும் வெடிகுண்டு 12 என்பனவுடன் மூன்று சந்தேக நபர்களை இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிபடையினர் கைது செய்துள்ளனர்.

ராகலை பகுதியிலிருந்து நுவரெலியா பகுதிக்கு கார் ஒன்றில் 10.12.2020 அன்று இரவு சந்தேக நபர்கள் சென்றுக் கொண்டிருந்த வேளையில் இராணுவத்தின் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய மேற்படி காரை இராகலை புரூக்சைட் பகுதியில் வைத்து மடக்கி பிடித்து சோதனை செய்யும் பொழுது இவைகள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த சந்தேக நபர்கள் ராகலை பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும், அவர்களை இராகலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்ததாகவும் இராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனையடுத்து பொலிஸ் நிலைய அதிகாரிகள் சந்தேக நபர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டு நுவரெலியா நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

க.கிசாந்தன்

 

‘மலையக பல்கலைக்கழகம்’ – அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் புத்திஜீவிகளுடன் பேச்சு!

மலையக பல்கலைக்கழகம் அமைப்பதற்கான இடம் கொட்டகலையில் ஒதுக்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில் மலையக புத்திஜீவிகளுடன் கலந்துரையாடி பாடத்திட்டங்கள் தொடர்பில் முடிவெடுக்கப்படும். அதேபோல மலையகத்துக்கான தனி வீட்டுத் திட்டம் ஜனவரி முதல் உத்தியோகப்பூர்வமாக ஆரம்பிக்கப்படும் – என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

தலவாக்கலை, வட்டகொடையில் அமைந்துள்ள பிரஜாசக்தி நிலையத்தில் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் 13 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ் தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் ஊடாக மலையக மக்களின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்யும் நோக்கில் கூட்டுப்பண்ணை அபிவிருத்தி செயற்திட்டத்திற்கான பயிற்சி நிலையம் அமைப்பதற்கான கட்டிட தொகுதிக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது, நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ராமேஷ்வரன், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர், கொட்டகலை பிரதேச சபை தலைவர் ராஜமணி பிரசாத், உள்ளிட்ட பிரஜாசக்தி பணிப்பாளர் மற்றும் அதிகாரிகளும் பங்கேற்றனர்.

இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” ஜனவரி மாதம் ஆயிரம் ரூபா வழங்கப்படும் என ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் அறிவித்துள்ளனர். எனவே கிடைக்கும் என நம்புகின்றோம். தற்போதைய சூழ்நிலையால் தான் இழுபறி நிலைமை ஏற்பட்டுள்ளது என்றாலும் பேச்சுகள் இடம்பெற்றுள்ளன. ஆயிரம் ரூபாவைவிட அதிக சம்பளம் கிடைக்கவேண்டும் என்பதே எமது எதிர்ப்பார்ப்பாகும்.

அப்படியானால் இந்த கூட்டுஒப்பந்த முறையில் புதிய வகையில் விடயங்கள் உள்ளடக்கப்பட வேண்டும். குறித்த முறையில் குறைப்பாடுகள் உள்ளன என்பதை ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர்கூட ஏற்றுக்கொண்டுள்ளனர். அது பற்றியும் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.

கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் வெளியில் பேசுவதை நிறுத்துமாறு தொழிற்சங்கங்களிடம் கேட்டுக்கொள்கின்றேன். அவ்வாறு பேசுவது கம்பனிகளுக்கே சாதகமாக அமைகின்றன.கொரோனா வைரஸ் தொற்றால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான நிவாரணங்கள் நிச்சயம் வழங்கப்படும். ஏற்கனவே வழங்கியும் உள்ளோம்.

மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள தரிசு நிலங்கள் தோட்டத் தொழிலாளர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும். அதற்கான கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சிலருக்கு வழங்கப்பட்டும் உள்ளன.

மலையகத்துக்கான இந்திய வீட்டுத்திட்டம் ஜனவரியில் ஆரம்பிக்கப்படும். அதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நில ஒதுக்கீடு உள்ளிட்ட ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஜனவரியில்தான் பணிகள் உத்தியோகப்பூர்வமாக ஆரம்பிக்கப்படும். அறைகுறையாக உள்ள வீடுகளை புனரமைப்பதற்கும் வரவு செலவு திட்டத்தின் ஊடாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மலையக பல்கலைக்கத்துக்கான இடம் கொட்டகலை ரொசீட்டா பாம் பகுதியில் ஒதுக்கப்பட்டுள்ளது. விவசாய கல்லூரி ஒன்றும் அமைக்கப்படும். விரைவில் மலையக புத்திஜீவிகளுடன் கலந்துரையாடி, பாடத்திட்டங்கள் பற்றி தீர்மானிக்கப்படும். எனது அப்பா கண்ட முக்கிய கனவொன்றை நிறைவேற்றியுள்ளேன்.” – என்றார்.

க.கிசாந்தன்

சுயாதீன ஆணைக்குழுக்கள் அரசியல் மயம் – ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல்!

நாட்டில் சுயாதீன ஆணைக்குழுக்கள் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

” தேர்தல் முடிவடைந்த பின்னர் அரசியல் ரீதியில் சில நியமனங்கள் வழங்கலாம். திணைக்களங்களின் பணிப்பாளர் பதவிகளுக்கு உறுப்பினர்கள் நியமிக்கப்படலாம். ஆனால் சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு அரசியல் ரீதியான நியமனங்கள் வழங்கப்படக்கூடாது. அவ்வாறு செய்வது ஜனநாயக விரோதச்செயலாகும். அதனையே இந்த அரசாங்கம் செய்துள்ளது.  இதன்மூலம் ஜனநாயகத்துக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. ” – என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மவுசாகல தோட்டத்துக்கான வீட்டுத்திட்டத்தை முன்னெடுக்குமாறு பணிப்பு

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும், பிரதமரின் பெருந்தோட்ட இணைப்பாளருமான செந்தில் தொண்டமான், மண்சரிவு அச்சுறுத்தலுக்கு உள்ளான மவுசாகல தோட்டத்திற்கு கண்காணிப்பு பயணத்தை மேற்கொண்டார்.

பேரிடர் அமைச்சினால் அங்கு வசிக்கும் 64 குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட மாற்று வீட்டுவசதி திட்ட வீடுகளை செந்தில் தொண்டமான்  பார்வையிட்டார்.

மேலும் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட வீட்டுத் திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்குமாறு தியதலாவ AG, NBRO NHDA அதிகாரிகள்  மற்றும் தோட்ட முகாமையாளர் ஆகியோறுக்கு பணிப்ப்புரை வழங்கினார்.

 

பாரதியாரின் 138 வது பிறந்த தின நினைவு நிகழ்வு யாழ்ப்பாணத்தில்

மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் 138ஆவது பிறந்த தின நினைவு நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்றது.

யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதுவர் அலுவலகத்தில் ஏற்பாட்டில் நல்லூர் ஆலயத்திற்கு பின்பக்க வீதியிலுள்ள பாரதியார் நினைவுச் சிலை அடியில் இந்நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது பாரதியார் நினைவுச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

பாரதியார் நினைவுத் தூபிக்கு இந்திய துணைத் தூதுவர் மலர்மாலை அணிக்க, தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்டிருந்தவர்கள் பாரதியாருக்கு மலர்மாலை அணிவித்தனர்.

இதன் பின்னர் பாரதியாரின் திருவுருவப் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் வடக்கு மாகாணசபையின் அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் யாழ் மாநகரசபை முதல்வர் இமானுவேல் ஆர்னால்ட், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான பா.கஜதீபன், எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் அனந்தி சசிதரன், சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

 

LPL கிரிக்கெட் தொடர் -அரையிறுதிக்கு தெரிவான அணிகள்

லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரில் நான்கு அணிகள் அரையிறுதிப்போட்டிக்கு தெரிவாகியுள்ளன.

தம்புள்ள வைகிங், கொழும்பு கிங்ஸ்,  ஜப்னா ஸ்டாலியன்ஸ் மற்றும் காலி ஆகிய அணிகளே இவ்வாறு தெரிவாகியுள்ளன.

சித்ராவின் தற்கொலைக்கான காரணம் வெளியானது!

நடிகை சித்ரா தற்கொலைக்கு கணவர், தாய் என இரண்டு தரப்பிலும் கொடுத்த மன அழுத்தமே காரணம் என பொலிஸார்  தகவல் வெளியிட்டுள்ளனர்.

சென்னை நசரத்பேட்டையில் இருக்கும் தனியார் விடுதியில் சின்னத்திரை நடிகை சித்ரா தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

நடிகை சித்ராவின் மரணம் கொலையா தற்கொலையா என விவாதிக்கப்பட்ட நிலையில், பிரேத பரிசோதனையின் முதல்கட்ட தகவலின்படி சித்ரா தற்கொலைதான் செய்துக்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் சித்ராவின் கன்னத்தில் இருந்த நகக்கீறல் அவருடையதுதான் என்றும் அறிவித்தனர்.

இந்நிலையில் நடிகை சித்ரா தற்கொலைக்கு கணவர், தாய் என இரண்டு தரப்பிலும் கொடுத்த மன அழுத்தமே காரணம் என பொலிஸ் தகவல் தெரிவித்துள்ளது. கணவர் ஹேம்நாத் குடித்துவிட்டு சித்ராவிடம் பிரச்னை செய்துள்ளதாகவும் பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.

சினிமா

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

செய்தி

தமிழக முதல்வராக பதவியேற்றார் ஜோசப் விஜய்!

0
தமிழக முதல்வராக பதவியேற்றார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை 10 மணியளவில் பதவியேற்பு விழா தொடங்கியது. வந்தே மாதரம் பாடல் இசைக்க பதவியேற்பு...

தவெக முதற்கட்ட அமைச்சரவை பட்டியல் வெளியீடு

0
தமிழக வெற்றிக் கழக அரசின் தவெக முதற்கட்ட அமைச்சர் பட்டியலை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் கீழ்காணும் பெயர்கள் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளன: புஸ்ஸி என்.ஆனந்த் ஆதவ் அர்ஜுனா கே.ஜி.அருண்ராஜ் கே.ஏ.செங்கோட்டையன் வெங்கடரமணன் நிர்மல்குமார் ராஜ்மோகன் டி.கே.பிரபு கீர்த்தனா 120 எம்எல்ஏக்களின் ஆதரவுக் கடிதங்களை ஆளுநரிடம் விஜய் நேற்று...

மரக்கறி விலைப்பட்டியல் (10.05.2026)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (10) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...