Home Blog Page 3731

பாரதியாரின் வறுமையை போக்கிய ’சிட்டுக் குருவிகள்’ – நடந்தது என்ன?

எட்டயபுரத்து முண்டாசு கவிராஜன் மகாகவி பாரதியாரின் பிறந்த நாள் இன்று (11-12-2020) கொண்டாடப்படுகிறது.

பத்திரிகையாளர்களின் ஆசானும், சமூகப் புரட்சியாளரும், தேசப் பக்தர்களின் முன்னோடியும், கவிஞர்களுக்கெல்லாம் கவிஞனாக விளங்கிய மாபெரும் போராளியான மகாகவி பாரதியார்,  1882ஆம் ஆண்டு இதே நன்னாளில்தான், எட்டயபுரத்தைச் சேர்ந்த சின்னசாமி சுப்ரமணிய ஐயர்- இலக்குமி அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார்.

தன் வாழ்நாள் முழுவதும், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம், பெண் அடிமைத்தனம், ஜாதியக் கொடுமைகள் உட்பட பல அடக்குமுறைகளுக்கு எதிராக, எழுத்துகளால் சாட்டையடி கொடுத்த மாபெரும் எழுத்தாளராக, பாரதியார் திகழ்ந்தார்.

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தனது பேனாவை ஆயுதமாகப் பயன்படுத்திய பத்திரிகையாளர்களில் பாரதியார் முதன்மையானவர். இந்திய பத்திரிகை உலகில் கார்ட்டூனை முதலில் அறிமுகம் செய்தவர். சமூக நலனுக்காகப் பாடுபட விரும்பும் இன்றைய பத்திரிகையாளர்களுக்கு எல்லாம் முன்னோடியான அவரின் பங்களிப்பை வணங்கி போற்றுவோம்.

பாரதியாரின் வறுமையை போக்கிய ’சிட்டுக் குருவிகள்’ – நடந்தது என்ன?

‘விட்டு விடுதலை யாகிநிற் பாயிந்தச் சிட்டுக் குருவியைப் போலே’ என்ற பாரதியாரின் வரிகள் மிகவும் பிரபலம். பறவைகளின் சுதந்திரம் குறித்தும் அதனிடம் இருந்து மானிடர்கள் கற்றுக்கொள்ள வேண்டி பாரதிய எழுதிய அந்த வரிகள் இன்று காலம் கடந்து நிற்கிறது. ஆனால் அந்த வரிகள் பின்னால் நடந்த சம்பவம் மிகவும் சுவாரஸ்யமானது. வறுமையின் பிடியில், பசியின் கொடுமையில் பிறந்த புரட்சிகரமான வரிகள் அவை.

பாரதியார் 10 வருடங்கள் புதுச்சேரியில் இருந்தார். அங்கு அவர் இந்தியா என்ற பத்திரிகையின் பொறுப்பாசிரியராக இருந்தார். அப்போது அந்த பத்திரிகையின் தலைமை ஆசிரியர் மண்டயம் சீனிவாச ஆச்சாரியார். இருவரும் சிறந்த நண்பர்கள். அவர்களின் குடும்பத்தினரும் நெருக்கமானவர்கள். சீனிவாச ஆச்சாரியாருக்கு யதுகிரி என்ற மகளும் உண்டு.

10வயது சிறுமியான யதுகிரி பாரதியாருக்கு செல்லப்பிள்ளை. அடிக்கடி தன்னுடைய கவிதைகளையெல்லாம் யதுகிரிக்கு படித்துக் காட்டுவார் பாரதி. 10வயதான யதுகிரி பாரதியாரின் பாடல்களை குறிப்பெடுத்து வைத்துக்கொள்வார். இன்று பெரிய கவியாக கொண்டாடப்படும் பாரதி, அவர் வாழ்ந்த காலத்தில் வறுமையில் இருந்தவர். பசிக்கும் பட்டினிக்கும் இடையேதான் புரட்சிகளை விதைத்தார் பாரதி.

ஒருநாள் மாலை வழக்கம் போல் யதுகிரி, பாரதி வீட்டுக்கு வருகிறார். அப்போது பாரதி வீட்டில் இல்லை. அவரது மனைவி செல்லம்மாள் சோகமாக இருக்கிறார். அவரின் சோகத்தை முகத்தில் பார்த்த யதுகிரி, சிறுமியின் குரல் மாறாமல் ‘என்ன ஆச்சு?’ என கேட்டுவிடுகிறார். மழலையின் அன்பால் நெகிழ்ந்த செல்லம்மாள், அவரிடம் நடந்த கதையை சொல்கிறார். ”நான் பாரதியிடம் சுதேசமித்திரன் பத்திரிகைக்கு கட்டுரை அனுப்ப சொன்னேன். அவர் அனுப்பவே இல்லை. கட்டுரை அனுப்பினால் பணம் வரும்.குடும்ப நிலவரம் அவருக்கு புரியவில்லை. பால் காசு கொடுக்கவில்லை. உணவுப்பொருட்களும் இல்லை எனக் கூறுகிறார்.

பின்னர் சமையலுக்கு இருந்த கொஞ்ச அரிசியை எடுத்து வைத்துவிட்டு, குளிக்கச்சென்றுவிடுகிறார் செல்லம்மாள். திரும்பி வந்து பார்த்தால், முறத்தில் இருந்த அரிசியில் கால்பங்கை காணவில்லை. அருகில் இருந்த பாரதி அரிசியை அள்ளி முற்றத்தில் குருவிகளுக்கு தூவிக்கொண்டு இருக்கிறார். அரிசியைக் கண்ட குருவிகள் கூட்டமாக வந்து கொத்தித் திங்கின்றன. அதனை அருகில் அமர்ந்து ரசித்துக்கொண்டு இருக்கிறார் பாரதி.

அருகில் செல்லமாள் மிகவும் கோவமாக நின்றுகொண்டு இருக்கிறார். அவரைப்பாரத்து பாரதி பேசுகிறார், ”செல்லம்மா.. நாம் கோவப்பட்டு கொள்கிறோம். முகத்தை திருப்பிக்கொள்கிறோம். ஆனால் இந்த சிட்டுக்குருவிகளை பார். எவ்வளவு இணக்கமாக இருக்கின்றன. அன்பாக இருக்கின்றன. கண்கள் திறந்திருந்தும் நாம் இந்த சிட்டுக்குருவிகளை ரசிக்கவில்லை என்றால் நாம்தான் மூடர்கள். இந்த பறவைகளிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும்” என்கிறார்.

இருந்த அரிசியிலும் கொஞ்சம் வீணாய்போய்விட்டதே என்று கோவப்பட்ட செல்லம்மாள், ”உங்களுக்கு பொறுப்பு இல்லை. உண்மை நிலவரம் புரியவில்லை. சாப்பாட்டுக்கே வழியில்லாதபோது சிட்டுக்குருவி பாடம் முக்கியமா? கட்டுரை அனுப்பினால் பணம் கிடைக்கும். அதை எப்போது செய்வீர்கள்? நமக்கு இரண்டு பெண் குழந்தைகளும் இருக்கு. ஆண்டவன் என்னை சோதிக்கிறான்” என புலம்பித் தள்ளுகிறார்.

செல்லம்மாளின் வார்த்தைகளை அரைகுறையாய் காதில் வாங்கிக்கொண்டே தன்னுடைய இளையமகள் சகுந்தலாபாரதியை அழைக்கிறார், பாரதி. அந்த கணத்திலேயே ஒரு பாடலை பாடுகிறார் பாரதி. அதுதான் ‘விட்டு விடுதலை யாகிநிற் பாயிந்தச் சிட்டுக் குருவியைப் போலே’ பாடல். பாடலைக் கேட்டு சிறுமி சகுந்தலாபாரதி குஷியாகிவிடுகிறார். பாரதி பாட, சகுந்தா ஆட அந்த இடமே கொண்டாட்ட இடமாக மாறுகிறது. தூரத்தில் இருந்து பார்த்துக்கொண்டு இருந்த செல்லம்மாளும் இந்த கொண்டாட்டத்துக்குள் ஐக்கியமாகிவிடுகிறார்.

பசியும்,கோவமுமாக இருந்த ஒரு இடம் பாரதியின் ஒரு பாடலுக்கு பின் கொண்டாட்டக்களமாக மாறிவிடுகிறது. இரவில் பாரதி, செல்லம்மாளிடம் சொல்கிறார், ”நீ கவலைபட வேண்டாம் செல்லம்மா. இந்த குருவிப்பாட்டையே நான் பத்திரிகைக்கு அனுப்புகிறேன். பணம் வரும்” என்கிறார். இப்படியாக குருவிகளின் பசிக்கு அரிசியை தூவினார் பாரதி, பதிலுக்கு அந்த குருவிகள் ஒரு பாடலைக் கொடுத்து பாரதியின் வறுமையை போக்க உதவின என்பது வரலாறு.வறுமையிலும், பசியிலும் தமிழை கொண்டாடிய கவிஞன் பாரதி என்பதுக்கு இந்த சம்பவம் பெரிய உதாரணம்.

இந்த சம்பவம் நடந்த போது சிறுமியாக இருந்த யதுகிரி பின்னாளில் ‘பாரதி நினைவுகள்’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். அதில் இந்த சிட்டுக்குருவி பாடல் உருவான கதை பதிவாகியுள்ளது. சம்பவம் நடந்த அன்று சிறுமி யதுகிரியை அழைத்து தன்னுடைய சிட்டுக்குருவி பாடலை பாடிக்காட்டிய பாரதி கூறினாராம், ”யதுகிரி நீ பார்ப்பாய்.. நான் பார்க்கமாட்டேன்.

என்னுடைய சிறிய பாடல்களும் புகழப்படும். போற்றப்படும், தமிழகம் இன்னும் கண் திறக்கவில்லை. அப்படியே திறந்தாலும் தமிழகம் தற்போது குழந்தை பருவத்தில் இருக்கிறது” என்று கூறுகிறார். இந்த சம்பவத்தை தான் எழுதிய புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள யதுகிரி அம்மையார், பாரதியின் எதிர்கால ஞானத்தை குறிப்பிட்டு மெய்சிலிர்த்துள்ளார்.

பாடல்:

விட்டு விடுதலையாகி நிற்பாய் இந்தச்
சிட்டுக் குருவியினைப் போலே

எட்டுத் திசையும் பறந்து திரிகுவை
ஏறியக் காற்றில் விரைவோடு நீந்துவை
மட்டுப் படாதெங்கும் கொட்டிக் கிடக்குமிவ்
வானொளி என்னும் மதுவின் சுவையுண்டு (விட்டு…)

பெட்டையோடின்பம் பேசிக் களிப்புற்றுப்
பீடையில்லாதோர் கூடு கட்டிக் கொண்டு
முட்டை தருங் குஞ்சைக் காத்து மகிழ்வெய்தி
முந்த உணவு கொடுத்தன்பு செய்திங்கு (விட்டு…)

முற்றத்திலேயுங் கழனி வெளியிலும்
முன்கண்ட தானியம் தன்னைக் கொணர்ந்துண்டு
மற்றப் பொழுது கதை சொல்லித் தூங்கிப் பின்
வைகறை யாகுமுன் பாடி விழிப்புற்று (விட்டு…)

‘விளையாட்டு துறையை மேம்படுத்தி பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வியூகம்’

விளையாட்டு துறையை மேம்படுத்தி அதனூடாக பொருளாதாரத்தினை கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டங்களை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாக பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பிரதேச, மாவட்ட மற்றும் மாகாண மட்டத்தில் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அதிகாரிகளுடன் நேற்று (10) அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது, பசில் ராஜபக்ச மேலும் தெரிவித்தாவது,

 “இளைஞர் யுவதிகளின் விளையாட்டு திறனை மேம்படுத்தி விளையாட்டு பொருளாதாரத்தை ஏற்படுத்துவதற்கு சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்தினூடாக எதிர்பார்க்கின்றோம்.

அதனூடாக நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் பங்களிப்பை பெற்றுக்கொடுப்பதற்கு எதிர்பார்ப்பார்க்கின்றோம்.

இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறைக்கென 8264 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத் திட்ட வரலாற்றில் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறைக்கென அதிக தொகை ஒதுக்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

கொவிட்-19 தொற்று நிலைமை காரணமாக பொருளாதாரம் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ள சந்தர்ப்பத்தில் லங்கா பிரிமீயர் லீக் போட்டியை நடத்துகின்றமை பொருளாதாரத்திற்கு பெரும் பலமாகும்.

கிராம மட்டத்தில் விளையாட்டு மைதானங்களை புனரமைக்கும் போது, இளைஞர் விவகார மற்றும விளையாட்டுத்துறை சார்ந்த அதிகாரிகளின் பூரண ஒத்துழைப்பு அவசியம்.

கிராம சேவகர் பிரிவு மட்டத்தில் விளையாட்டு மைதானங்களை தயாரிக்கும்போது கிராம சேவகர் பிரிவிற்கு விளையாட்டு கழகமொன்றை ஆரம்பித்து அந்த விளையாட்டு கழகத்தின் தலையீட்டுடன் விளையாட்டு மைதானத்திற்கு உகந்த இடத்தை தெரிவுசெய்ய வேண்டும்.

பாடசாலை மட்டத்தில் விளையாட்டு மைதானங்களை புனரமைக்கும்போது மாகாண கல்வி அலுவலகம் மற்றும் கல்வி அமைச்சுடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்” என குறிப்பிட்டார்

அதனைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, எதிர்வரும் ஆண்டளவில் கிராம மற்றும் பாடசாலை மட்டத்தில் விளையாட்டுத்துறையில் வளர்ச்சியை எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

அத்துன், கிராம மட்டத்தில் புரமைக்கப்படும் விளையாட்டு மைதானங்களில் கிராம சேவகர் பிரிவு மட்டத்திலும் பிரதேச மற்றும் மாவட்ட மட்டத்திலும் விளையாட்டு போட்டிகளை நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாகவும் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

விளையாட்டு திறன் கொண்ட கிராம இளைஞர் யுவதிகளை தேசிய மட்டத்திலிருந்து சர்வதேச மட்டத்திற்கு கொண்டு செல்வது இந்த வேலைத்திட்டத்தின் முதன்மையான நோக்கமாகும் எனவும் அமைச்சர் கூறினார்.

குறித்த சந்தர்ப்பத்தில் இராஜாங்க அமைச்சர் தேனுக விதானகமகே, அமைச்சின் செயலாளர்கள், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அதிகாரிகள் மற்றும் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அதிகாரிகள் சிலரும் கலந்து கொண்டனர்.

உலகளவில் 7 கோடிக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 லட்சத்து 88 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

தற்போதைய நிலவரப்படி, 7 கோடியே 7 லட்சத்து 17 ஆயிரத்து 552 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவில் இருந்து 4 கோடியே 91  லட்சத்து 48 ஆயிரத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர்.

உலகளவில் 7 கோடிக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 லட்சத்து 88 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

தற்போதைய நிலவரப்படி, 7 கோடியே 7 லட்சத்து 17 ஆயிரத்து 552 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவில் இருந்து 4 கோடியே 91  லட்சத்து 48 ஆயிரத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர்.

அழிந்துவிடும் அபாயத்தில் மலையக குருவி இனம்!

மலை நாட்டின் வீடுகளில் கடந்த காலங்களில் கூடுகட்டி வாழ்ந்த வீட்டுக் குருவி இனம் (house sparrow) மிக வேகமாக அழிந்து வருவதாக சுற்றாடல் மற்றும் ஜீவகாருண்ய அமைப்புகள் கவலை தெரிவிக்கின்றன.

மனிதர்களோடு மனிதர்களாக வீட்டுக் கூரைகளில் வாழ்ந்து வீடுகளுக்கு வசந்தத்தை கொண்டு வந்த இந்த வீட்டுக் குருவி இனம் தற்போது வீடுகளில் இல்லை என்று சொல்லக்கூடிய அளவுக்கு இலங்கையில் இருந்து முற்றாக அழிந்து விடும் அபாயம் நிலவுவதாக சுற்றாடல் அமைப்புகள் தெரிவிக்கின்றன.

நவீன பயிர்ச் செய்கை முறைமையும் இரசாயன பூச்சி கொல்லி மற்றும் கிருமிநாசினி பாவனைகள் அதிகரித்தமையே இதற்கான காரணமாகும்.
இரசாயன பதார்த்தங்கள் சேர்க்கப்பட்ட விதைகள், பயிர்கள் வளர்ந்த பின் பயிர்களுக்கு தெளிக்கப்படும் பூச்சி மருந்துகள், வளர்ந்த பயிர்களின் பூக்கள் இலை விதைகளை உணவாக கொண்டமையினால் இவை அழிவடைந்துள்ளதாகவும் இவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
லயத்து குருவி, வீட்டுக்குருவி என அக்குருவி இனத்துக்கு பல பெயர்கள் உள்ளன.

47 ஆயிரத்து 193 மாணவர்கள் புதிய பாடசாலை தெரிவுக்கு தகைமை

இம்முறை தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளி அடிப்படையில் திறமைச் சித்தி பெற்றுள்ள ஆறாம் ஆண்டுக்கு உள்வாங்கப்படும் மாணவர்களுக்கு புதிய பாடசாலைகளை பெற்றுக்கொடுக்கும் செயற்பாடுகளை ஒன்லைன் மூலமாக மேற்கொள்வதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் 47 ஆயிரத்து 193 மாணவர்கள் வெட்டுப் புள்ளிக்கு மேலதிகமான புள்ளிகளைப் பெற்று புதிய பாடசாலைகளை பெற்றுக்கொள்வதற்கான தகைமையைப் பெற்றுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
நாட்டில் முதலாவது தடவையாக அதுதொடர்பான ஒன்லைன் மூலமான செயற்பாடு நடைபெறுகின்ற அதேவேளை நேற்றைய தினம் அதற்கான ஆரம்ப நிகழ்வு கல்வியமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தலைமையில் கல்வியமைச்சில் நடைபெற்றுள்ளது.
இம்முறை புலமைப்பரிசில் பரீட்சையில் மாவட்ட ரீதியில் வெட்டுப் புள்ளிக்கு அதிகமாக புள்ளிகளை பெற்ற மாணவர்களுக்கு புதிய பாடசாலைகளுக்கு விண்ணப்பிப்பதற்கான விண்ணப்பப் பத்திரம் பெற்றோர்களிடமிருந்து கோரப்பட்டுள்ளது. அதற்கிணங்க தெரிவுசெய்யப்படும் பாடசாலைகள் உள்ளிட்ட விபரங்களை திரட்டும் நடவடிக்கைகளில் பாடசாலை அதிபர்கள் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று முதல் எதிர்வரும் டிசம்பர் 24ஆம் திகதி வரை அனைத்து சிங்கள தமிழ் மொழிமூல பாடசாலைகளின் அதிபர்களும் மேற்படி தரவுகளை திரட்டும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் கொரோனாவைரஸ் தொற்று அச்சுறுத்தல் சூழ்நிலையிலும் வெற்றிகரமாக ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையைநடத்த முடிந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள கல்வியமைச்சர் பரீட்சைக்கு தோற்றிய 3 லட்சத்து 26 ஆயிரத்து 264 மாணவர்களில் 47 ஆயிரத்து 193 மாணவர்கள் வெட்டுப் புள்ளிக்கு அதிகமான புள்ளிகளைப் பெற்று புதிய பாடசாலைகளுக்காக விண்ணப்பிப்பதற்கு தகைமை பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

‘கொரோனா’வால் கடந்த 10 நாட்களில் 30 பேர் உயிரிழப்பு!

இலங்கையில் கொரோனா வைரஸ் 2ஆவது அலைமூலம் நேற்றிரவுவரை (10) 26 ஆயிரத்து 981 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இவர்களில் இதுவரையில் 133 பேர் பலியாகியுள்ளனர். (ஒக்டோபர் 24 முதல் நேற்றுவரை)

மினுவாங்கொட கொத்தணிமூலம் 3 ஆயிரத்து 59 பேருக்கும், பேலியகொடை கொத்தணிமூலம் 23 ஆயிரத்து 922 பேருக்கும் வைரஸ் தொற்றியுள்ளது. இவர்கில் 18 ஆயிரத்து 922 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மாத்திரம் 538 பேருக்கு வைரஸ் தொற்றியது.

அதேவேளை, இலங்கையில் நேற்றுவரை மொத்தமாக 30 ஆயிரத்து 612 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இவர்களில் 22  ஆயிரத்து 260 பேர் குணமடைந்துள்ளனர்.

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் நேற்றும் இருவர் உயிரிழந்தார். இதன்படி இலங்கையில் கொரோனா தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 146 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள். நவம்பரில் மாத்திரம் 98 பேர் உயிரிழந்துள்ளனர். டிசம்பரில் கடந்துள்ள 11 நாட்களில் 30 பேர் பலியாகியுள்ளனர்.

‘ஜனாஸாக்களை அடக்கம் செய்வது குறித்து ஆலோசனைக் கூட்டம்’

கொவிட்-19 தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடலை அடக்கம் செய்வது தொடர்பில் ஆராயும் வகையில்  பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கும், சுகாதார தரப்பின் பிரதானிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று பாராளுமன்ற வளாகத்திலுள்ள   பிரதமரின் அலுவலகத்தில் இன்று (2020.12.10) நடைபெற்றது.

கொவிட்-19 வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்வதற்கு சுகாதார நிபுணர்களின் பரிந்துரைக்கமைய நிலத்தடி நீர் மட்டம் மிகவும் ஆழமாகக் காணப்படும் வறண்ட நிலப்பரப்பை தெரிவு செய்யுமாறு  பிரதமர் இதன்போது ஆலோசனை வழங்கினார்.

இந்த வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடலில் வைரஸ் சுமார் 36 நாட்களுக்கு தொடர்ந்து காணப்படும் என சுகாதார அதிகாரிகள் இதன்போது பிரதமரிடம் அறிவித்தனர்.

ஆரோக்கியத்தை பாதிக்கின்ற காரணிகளை இனம் மற்றும் மத அடிப்படையில் தீர்மானிக்க முடியாது என சுட்டிக்காட்டிய  பிரதமர், சுகாதார வழிகாட்டல்களை கடைப்பிடிப்பதற்கு அனைத்து இன மக்களதும் ஒத்துழைப்பு அவசியம் என்றும் குறிப்பிட்டார்.

அதற்கான ஒத்துழைப்பை பெற்றுத்தருமாறு அங்கு வருகைத் தந்திருந்த  முஸ்லிம் அமைச்சர்களிடம் கௌரவ பிரதமர் வேண்டுகோள் விடுத்தார்.

குறித்த சந்தர்ப்பத்தில்   அமைச்சர்களான அலி சப்ரி, பவித்ரா வன்னிஆராச்சி, ரோஹித அபேகுணவர்தன, வாசுதேவ நாணயக்கார உள்ளிட்ட அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள், சுகாதார அமைச்சின் செயலாளர் எஸ்.எம்.முணசிங்க உள்ளிட்ட சுகாதார அமைச்சின் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவராக மஹிந்த தேசப்பிரிய

எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் புதிய தவிசாளராக தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தவிசாளரான மஹிந்த தேசப்ரிய நியமிக்கப்பட்டுள்ளார்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழு உறுப்பினர்கள்

தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்கள்

நிதி ஆணைக்குழு உறுப்பினர்கள்

தனிமைப்படுத்தப்பட்ட சனம் ஷெட்டி!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம் வெளியேற்றப்பட்ட சனம் ஷெட்டி தற்போது தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் தற்போது நடந்து வருகிறது. இதில் கடந்த வாரம் சனம் ஷெட்டி வெளியேற்றப்பட்டார். ரசிகர்களின் ஆதரவு இருந்தும் சனம் ஷெட்டி வெளியேற்றப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

சனம் ஷெட்டி வெளியேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர்.

இந்நிலையில், சனம் ஷெட்டி மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏனெனில், பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய சனம் ஷெட்டி, இன்னும் தனது சொந்த வீட்டிற்கு செல்லவில்லையாம். அவர் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆதலால், யாரும் எதிர்பாராத வகையில் சனம் ஷெட்டி விரைவில் மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் வைல்ட் கார்ட் என்ட்ரியாக செல்ல வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த சீசனில் வனிதா வெளியேற்றப்பட்ட ஒரு சில தினங்களில் மீண்டும் வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழைந்தார். அந்த வகையில் தற்போது சனம் ஷெட்டியும் மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

சினிமா

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

செய்தி

தமிழக முதல்வராக பதவியேற்றார் ஜோசப் விஜய்!

0
தமிழக முதல்வராக பதவியேற்றார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை 10 மணியளவில் பதவியேற்பு விழா தொடங்கியது. வந்தே மாதரம் பாடல் இசைக்க பதவியேற்பு...

தவெக முதற்கட்ட அமைச்சரவை பட்டியல் வெளியீடு

0
தமிழக வெற்றிக் கழக அரசின் தவெக முதற்கட்ட அமைச்சர் பட்டியலை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் கீழ்காணும் பெயர்கள் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளன: புஸ்ஸி என்.ஆனந்த் ஆதவ் அர்ஜுனா கே.ஜி.அருண்ராஜ் கே.ஏ.செங்கோட்டையன் வெங்கடரமணன் நிர்மல்குமார் ராஜ்மோகன் டி.கே.பிரபு கீர்த்தனா 120 எம்எல்ஏக்களின் ஆதரவுக் கடிதங்களை ஆளுநரிடம் விஜய் நேற்று...

மரக்கறி விலைப்பட்டியல் (10.05.2026)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (10) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...