Home Blog Page 3732

‘நடிகை சித்ராவின் மரணம் தற்கொலையே’

பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் நடிகை சித்ராவின் மரணம் தற்கொலை தான் என பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.

சின்னத்திரை நடிகை சித்ரா நேற்று நசரத்பேட்டையில் உள்ள தனியார் ஹோட்டலில் தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்கப்பட்டார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று காலை சித்ராவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. தற்போது பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகி உள்ளது.

பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் நடிகை சித்ராவின் மரணம் தற்கொலை தான் என பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர். அவரது கன்னத்தில் இருந்த நகக்கீறல்களும் சித்ராவின் நகக்கீறல்கள்தான் என அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். தற்கொலை என தெரியவந்துள்ளதால், அதற்கு யார் காரணம் என்ற கோணத்தில் அடுத்தகட்ட விசாரணையை நடத்த பொலிஸார் திட்டமிட்டுள்ளனர்.

‘கொரோனா’ – மேலும் இருவர் உயிரிழப்பு! பலி எண்ணிக்கை 146 ஆக உயர்வு!!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர்.

கொழும்பு மற்றும் வெலிகம பகுதிகளைச் சேர்ந்த இரு பெண்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதன்படி கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 146 ஆக அதிகரித்துள்ளது.

2ஆவது அலைமூலம் இதுவரை 133 பேர் உயிரிழந்துள்ளனர். கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை, நாட்டில் இன்று மாத்திரம் 469 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்து 613 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 22 ஆயிரத்து 261 பேர் குணமடைந்துள்ளனர்.

2 ஆவது அலைமூலம் (மினுவாங்கொட, பேலியகொட,சிறைச்சாலை கொத்தணிகள்) இதுவரையில் 26 ஆயிரத்து 985  பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

நாட்டில் இன்று மாத்திரம் 469 பேருக்கு கொரோனா தொற்று!

நாட்டில் மேலும் 169 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடையவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது. நாட்டில் இன்று மாத்திரம் 469 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்து 613 ஆக அதிகரித்துள்ளது.

2 ஆவது அலைமூலம் (மினுவாங்கொட, பேலியகொட,சிறைச்சாலை கொத்தணிகள்) இதுவரையில் 26 ஆயிரத்து 985  பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

ஆயுர்வேத பாணி மருந்து சபாநாயகருக்கு வழங்கப்பட்டது

கொரோனா வைரஸ் தொற்றுக்கான ஆயுர்வேத மருந்து எனக் கூறப்படும் பாணி மருந்து இன்று சபாநாயகருக்கு வழங்கப்பட்டது.
 
கொரோனா வைரஸ் தொற்றுக்கான ஆயுர்வேத மருந்தொன்று கண்டுபிடிக்கப்பட்டு, அந்த மருந்து தொடர்பிலான மூன்றாம் கட்ட ஆய்வுகள் தற்போது நடத்தப்பட்டு வருகின்றன.
 
கேகாலை பகுதியிலுள்ள ஆயுர்வேத வைத்தியரான தம்மிக்க பண்டாரவே இந்த மருந்தை கண்டுபிடித்துள்ளார்.
 
இந்நிலையிலேயே அம்மருந்து இன்று சபாநாயகருக்கு வழங்கப்பட்டது. சபாநாயகரின் அலுவலகம் வந்த ஆளுங்கட்சி உறுப்பினர்களும் குறிந்த ஆயுர்வேத பாணி மருந்தை பருகினர். 

LPL தொடரில் முதல் சதம் – கொழும்பு கிங்ஸ் அணி வெற்றி!

லங்கா பிரீமியர் லீக் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் கொழும்பு கிங்ஸ் அணி 6 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

கொழும்பு கிங்ஸ் , ஜப்னா ஸ்டாலியன்ஸ் ஆகிய ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற ஜப்னா அணி, முதலில் களத்தடுப்பை தெரிவுசெய்தது.

இதன்படி துடுப்பெடுத்தாட களமிறங்கிய கொழும்பு கிங்ஸ் அணி  20 ஒவர்கள் 4  விக்கெட்டுக்களை இழந்து 174 ஓட்டங்களை பெற்றது. இனவ்னஸ் 65 பந்துகளில் 108 ஓட்டங்களையும், ரசல் 21 ஓட்டங்களையும், மெத்யூஸ் 15 ஓட்டங்களையும் பெற்றனர். லக்மால், அசரங்க ஆகியோர் தலா ஒரு விக்கெட்வீதம் கைப்பற்றினர்.

பின்னர் 175 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஜப்னா அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 167  ஓட்டங்களைப்பெற்று தோல்வி கண்டது.

ஜப்னா அணி சார்பாக அசலங்க 32 ஓட்டங்களையும், சொயிப் மாலிக் 29 ஓட்டங்களையும் பெற்றனர். ரசல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

சதமடித்த இவனஸ் ஆட்டநாயகனாக தெரிவுசெய்யப்பட்டார். அத்துடன் எல்.பி.எல். தொடரில் அடிக்கப்பட்ட முதல் சதமும் இதுவாகும்.

 

மலையக மண்ணுக்கு பெருமை சேர்த்துள்ள நீதியரசர் பிரபாகரன் குமாரட்ணம்

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக பிரபாகரன் குமாரட்ணம், கடந்த முதலாம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸமுன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்திருந்தார்.

14 நீதியரசர்கள் புதிதகா நியமிக்கப்பட்ட நிலையில் ஒரேயொரு தமிழர் பிரபாகரன் குமாரட்ணம் என்பது விசேட அம்சமாகும்.

எழில் கொஞ்சும் மத்திய மலைநாட்டில்,  கண்டி மாவட்டத்தின் புஸ்ஸல்லாவ நகரில் பிறந்த இவர், இலங்கைச் சட்டத்துறைக்கு ஆற்றிய பணிகள் அளப்பெரியவை. இவர் தலவாக்கலை, தேவிசிறிபுரவில் வசித்த குமாரரட்ணம் மற்றும் காலஞ்சென்ற லீலாவதி அவர்களின் கனிஸ்ட புதல்வராவார்.

புஸல்லாவ பரிசுத்த திருத்துவக்கல்லூரியில் ஆரம்பக்கல்வியையும், தலவாக்கலை சுமண மகா வித்தியாலயத்தில் உயர்தரக்கல்வியையும் கற்ற இவர், சிறந்த பெறுபேறுகளைப் பெற்று கொழும்புப்பல்கலைக்கழக சட்டப்பீடத்திற்கு தெரிவாகி சட்டஇளமாணிப்பட்டத்தை பெற்றதுடன் 1993ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற சட்டத்தரணியாகவும் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். அதன்பின்னர் காலஞ்சென்ற ஜனாதிபதி சட்டத்தரணி ஏ.ஊ மோதிலால் நேரு அவர்களின் கனிஸ்ட சட்டத்தரணியாகப் பணியாற்றினார்.

கல்வியில் மாத்திரமின்றி 1990-1991ஆண்டுகளில் கொழும்பு பல்கலைக்கழக காற்பந்தாட்ட அணியின் தலைவராகவும் விளங்கிய பெருமையும் இவரைச் சாரும்.
கொழும்பு பல்கலைக்கழகத்தில் தொழிற்சட்டம், குற்றவியல் நீதி, சர்வதேச மனித உரிமைகள் சட்டம் ஆகியவற்றைப்பயின்று தனது சட்டமுதுமாணிப்பட்டத்தை நிறைவு செய்ததுடன் பீஜித்தீவு நீதிமன்றங்களில் பரிஸ்ரராகவும் (Barrister) சொலிசிற்றராகவும் (Solicitor) பதவிப்பிரமாணம் பெற்றுள்ளார்.

1995ஆம் ஆண்டு சட்டமா அதிபர் திணைக்களத்தில் அரச சட்டவாதியாக இணைந்து கொண்ட  பி.குமாரட்ணம்  தனது மும்மொழி ஆற்றலாலும், விடாமுயற்சியாலும் 2005ஆம் ஆண்டு சிரேஸ்ட அரச சட்டவாதியாகவும், 2014ஆம் ஆண்டு பிரதி சொலிசிற்றர் ஜெனரலாகவும் 2018ஆம் ஆண்டு சிரேஸ்ட பிரதி சொலிசிற்றர் ஜெனரலாகவும் பதவி உயர்வுகளைப் பெற்றுக் கொண்டார்.

சட்ட மாஅதிபர் திணைக்களத்தில் கடமையாற்றிய காலப்பகுதியில் மோட்டார் போக்குவரத்துப்பிரிவு, பொதுமக்கள் பிராதுப்பிரிவு, சிறுவர்களுக்கெதிரான துஸ்பிரயோகப்பிரிவு, குடியவரவு மற்றும் குடியகல்வுப்பிரிவு ஆகிய பிரிவுகளை மேற்பார்வை புரிந்ததுடன் வடக்கு, கிழக்கு, களுத்துறை மற்றும் நீர்கொழும்பு மேல்நீதிமன்ற வலயங்களை மேற்பார்வை செய்யும் பணியையும் செவ்வனே நிறைவேற்றியுள்ளார்.

இவர் நாடாளவிய ரீதியில் நீதிவான் நீதிமன்றம் முதற்கொண்டு உயர்நீதிமன்றம் வரை பல நீதிமன்றங்களிலும் தோன்றி ஆயிரக்கணக்கான வழக்குகளில் தன் வாதத்திறனால் நீதியை எட்ட வழிசமைத்துள்ளார். பொலிஸ் திணைக்களம், மதுவரித்திணைக்களம் உள்ளிட்ட பல திணைக்களங்களுக்கு பயிற்சிக் கருத்தரங்குகளை வழங்கியுள்ளார்.

2017ஆம் ஆண்டு இவரது பெயர் ஊடகங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும் பிரபல்யமாகப் பேசப்பட்டது. 2015ஆம் ஆண்டு புங்குடுதீவில் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வித்யா சிவலோகநாதன் வழக்கில் யாழ்ப்பாணத்தில் மூன்று நீதிபதிகள் முன்னிலையில் தீர்ப்பாயத்தில் (Trial at Bar )தோன்றி எண்மருக்கு மரணதண்டனையை பெற்றுக் கொடுத்த பெருமையையும் இவரையே சாரும்.

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர் தியாகராசா மகேஸ்வரன் கொலை செய்யப்பட்ட வழக்கிலும் சிறப்பு வழக்குத்தொடுநராகத் தோன்றியதுடன் மட்டக்களப்பு மயிலந்தனை படுகொலைகள் வழக்கிலும் கனிஸ்ட சட்டவாதியாகத் தோன்றியுள்ளார்.

உள்நாட்டில் மாத்திரமின்றி வெளிநாட்டிலும் தனது சேவையை ஆற்றியுள்ளார். 2012 -2014 வரையான காலப்பகுதியில் பீஜித்தீவின் மேல்நீதிமன்றம் மற்றும்  மேன்முறையீட்டு நீதிமன்றங்களில் நீதிபதியாகக் கடமையாற்றி முந்நூறுக்கும் மேற்பட்ட கட்டளைகளையும், தீர்ப்புக்களையும் வழங்கியுள்ளார். 2014ஆம் ஆண்டு ஏப்ரல் மாதகாலப்பகுதியில் பீஜித்தீவின் உயர் நீதிமன்ற நீதிபதியாகவும் பணிபுரிந்துள்ளார்.

2000ஆம் ஆண்டு தொடக்கம் 2011ஆம் ஆண்டு வரை இலங்கைசட்டக்கல்லூரி நுழைவுத்தேர்வின் பரீட்சகராகவும் 2016ஆம் ஆண்டு தொடக்கம் 2020 ஆம் ஆண்டு வரை இலங்கை சட்டக்கல்லூரியின் சட்டமாணவர்களின் பரீட்சகராகவும் பணிபுரிந்துள்ளார்.

இவர் சுதர்சனி குமாரரட்ணம் அவர்களுடன் மணவாழ்வில் இணைந்து மிதுசனா, தக்சனா ஆகிய இரு புதல்விகளைப் பெற்றுள்ளார்.

திரு.பி. குமாரரட்ணம் அவர்கள் சட்டமாஅதிபரால் ஜனாதிபதி விசேட ஆணைக்குழுவிற்கு உதவிபுரிய பல்வேறு சந்தர்ப்பங்களில் சட்டவாதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய அமெரிக்கா, அவுஸ்திரேலியா,இங்கிலாந்து, ஜப்பான், வியட்னாம், இந்தோனேசியா மற்றும் இந்தியா உள்ளிட்ட பல சர்வதேச நாடுகளில் இடம்பெற்ற கருத்தரங்குகள், சர்வதேச சட்ட மாநாடுகள், பயிற்சிகளில் பங்கேற்று தனது கட்டுரைகளையும் சமர்ப்பித்துள்ளார். சட்டமாஅதிபர் திணைக்களத்தில் பல சட்டவாதிகளுக்கும்  வழிகாட்டியாகத்திகழ்ந்ததுடன் பயிலுனர் சட்டத்தரணிகள் பலருக்கும் பயிற்சிகளையும்  வழங்கியுள்ளார். தற்போது மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு பதவியேற்று தன் புகழாரத்தை நீதித்துறையிலும் பதித்துள்ளார்.

 

நாட்டில் மேலும் 300 பேருக்கு கொரோனா தொற்று

நாட்டில் மேலும் 300 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பேலியகொடை கொத்தணிமூலம் 279 பேருக்கும் சிறைச்சாலை கொத்தணிமூலம் 21 பேருக்குமே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.

அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்து 375 ஆக அதிகரித்துள்ளது.

 2 ஆவது அலைமூலம் (மினுவாங்கொட, பேலியகொட,சிறைச்சாலை கொத்தணிகள்) இதுவரையில் 26 ஆயிரத்து 816  பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

‘பட்ஜட்’ நிறைவேற்றம்! ஜனவரி 5வரை நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தின் கன்னி வரவு – செலவுத்திட்டம்மீதான இறுதி வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டது.

அரசாங்கமும் அதன் தோழமைக்கட்சிகளும் பாதீட்டை ஆதரித்து வாக்களிக்கவுள்ளதுடன், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்த்து வாக்களிக்கவுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

பட்ஜட்டுக்கு ஆதரவாக 151 பேரும், எதிராக பேரும் 54 வாக்களித்தனர்.

2021 ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத்திட்டம் கடந்த 17 ஆம் திகதி நிதி அமைச்சர் மஹிந்த ராஜபக்சவால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

18 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதிவரை இரண்டாம்வாசிப்புமீதான விவாதம் நடத்தப்பட்டு, மூன்றிலிரண்டு பெரும்பான்டையுடன் இரண்டாம் வாசிப்பு நிறைவேற்றப்பட்டது.

அதன்பின்னர் அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதம் ஆரம்பமானது. இந்நிலையிலேயே பாதீடுமீது இறுதி வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது.

அதேவேளை, 2021 ஆம் ஆண்டுக்கான முதலாவது நாடாளுமன்ற அமர்வு ஜனவரி 5 ஆம் திகதி ஆரம்பமாகும்.

இஸ்ரேலில் 27 ஆம் திகதி முதல் கொரோனா தடுப்பூசி

இஸ்ரேலில் வரும் 27 ஆம் திகதி முதல் பொது மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று இஸ்ரேல் பிரதமர் அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் நோய்கான தடுப்பு மருந்தை தயாரிக்கும் பணியில் பல்வேறு உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இங்கிலாந்தில் பைசர்-பயோன்டெக் நிறுவனங்கள் இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசியை அவசர தேவைகளுக்கு பயன்படுத்த பிரிட்டன் அரசு அனுமதி வழங்கியுள்ளதையடுத்து, அங்கு தற்போது பொது மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் பைசர் நிறுவனத்திடம் இஸ்ரேல் அரசாங்கம் ஆர்டர் செய்திருந்த கொரோனா தடுப்பூசிகளின் முதல் தொகுதி தற்போது வந்து சேர்ந்துள்ளதாக, அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹு தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து வரும் 27 ஆம் திகதி முதல் இஸ்ரேலில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.

நாள் ஒன்றுக்கு சுமார் 60,000 பேருக்கு கொரோனா தடுப்பூசியை செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் மக்கள் மீண்டும் சுதந்திரமாக பயணங்களை மேற்கொள்ளலாம் என்றும் நாட்டின் பொருளாதரம் மீண்டும் முன்னேற்றமடையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கதறி அழுது போராட்டம்

சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள் யாழ். நாவலா் வீதியில் உள்ள ஐ.நா. அலுவலகம் முன்பாக கவனயீா்ப்புப் போராட்டம் ஒன்றை நடத்தினர்.

இன்று காலை 9 மணி தொடக்கம் காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினர்கள் இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தினை நடத்தினர். அத்துடன், மகஜா் ஒன்றையும் ஐ.நாவுக்கு கையளித்திருக்கின்றனா்.

போராட்டத்தின்போது கதறி அழுத காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள்,

”சா்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட்டு உண்மைகளை வெளிப்படுத்துங்கள். உண்மைகளை கண்டறிந்து சொல்லாவிட்டால் நாங்களே தற்கொலை செய்வோம். இல்லையென்றால் எங்கள் மீது குண்டுகளை போட்டு கொலை செய்துவிடுங்கள்” என கதறி அழுதனா்.

இன்றைய போராட்டத்தில் கொரோனா பரவல் காரணமாக குறைந்தளவு மக்களே கலந்துகொண்டிருந்தனர். மேலும் வட மாகாணசபை முன்னாள் உறுப்பினா் எம்.கே.சிவாஜிலிங்கம் கலந்துகொண்டு ஆதரவளித்தார்.

சினிமா

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

செய்தி

தமிழக முதல்வராக பதவியேற்றார் ஜோசப் விஜய்!

0
தமிழக முதல்வராக பதவியேற்றார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை 10 மணியளவில் பதவியேற்பு விழா தொடங்கியது. வந்தே மாதரம் பாடல் இசைக்க பதவியேற்பு...

தவெக முதற்கட்ட அமைச்சரவை பட்டியல் வெளியீடு

0
தமிழக வெற்றிக் கழக அரசின் தவெக முதற்கட்ட அமைச்சர் பட்டியலை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் கீழ்காணும் பெயர்கள் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளன: புஸ்ஸி என்.ஆனந்த் ஆதவ் அர்ஜுனா கே.ஜி.அருண்ராஜ் கே.ஏ.செங்கோட்டையன் வெங்கடரமணன் நிர்மல்குமார் ராஜ்மோகன் டி.கே.பிரபு கீர்த்தனா 120 எம்எல்ஏக்களின் ஆதரவுக் கடிதங்களை ஆளுநரிடம் விஜய் நேற்று...

மரக்கறி விலைப்பட்டியல் (10.05.2026)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (10) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...