Home Blog Page 3733

‘சிறப்பாக சேவையாற்றுங்கள்’ – பட்டதாரி பயிலுனர்களிடம் ஜீவன் கோரிக்கை

தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சுக்கு 50 இற்கும் மேற்பட்ட பட்டதாரி பயிலுனர்கள் இன்று பணிக்காக இணைத்துக்கொள்ளப்பட்டனர்.

அவர்களுடனான சந்திப்பொன்று அமைச்சின் கேட்போர் கூடத்தில் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது உரையாற்றிய ஜீவன் தொண்டமான்,

”  பட்டதாரி பயிலுனர்களாகிய நீங்கள் கடமையில் இணைந்துக்கொண்டமை மகிழ்ச்சி, நீங்கள் அனைவரும் எமது சமூகத்திற்கு மிகவும் பெருமதியானவர்கள். உங்களின் சேவை பெருந்தோட்ட சமூக மக்களுக்கும் இந்நாட்டிற்கும் பெருமதியானது, நீங்கள் அனைவரும் இளைஞர்கள் எனவே அனைவரும் தங்களது கடைமைகளை நேர்த்தியாக செய்வீர்கள் என நம்புகின்றேன்.

மேலும், அமைச்சின் ஊடாக மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்களை மக்கள் மத்தியில் எவ்வாறு கொண்டு செல்வது, மக்கள் மத்தியில் எவ்வாறு தொடர்பினை ஏற்படுத்திக்கொள்வது, போன்ற விடயங்கள் தொடர்பாக அவர்களுடன் கலந்துரையாடியதுடன் அவர்களுடைய பணிகளை மேற்கொள்வதற்கு ஏதேனும் இடர்பாடுகள் ஏற்படும் பட்சத்தில் அதனை நிவர்த்திசெய்து தருகின்றேன்.” – என்றார்.

இக்கலந்துரையாடலின்போது, அமைச்சின் செயலாளர் D.P.G குமாரசிறி, அமைச்சின் ஏனைய அதிகாரிகள் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

30,075 பேருக்கு கொரோனா – 22,261 பேர் குணமடைவு – 7,670 பேர் சிகிச்சையில்!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 461 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்து 261 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் 7 ஆயிரத்து 670 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 144 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்து 75 ஆக அதிகரித்துள்ளது.

மஹிந்த தொடம்பே நுவரெலியா மாநகரசபை உறுப்பினராக பதவியேற்பு!

நுவரெலியா மாநகரசபையின் புதிய உறுப்பினராக முன்னாள் மாநகர முதல்வர் மஹிந்த தொடம்பே கமகே இன்று (10) வியாழக்கிழமை நுவரெலியா மாநகரசபை
ஆணையாளர் திருமதி சுஜிவ போதிமான முன்னிலையில் சத்தியபிரமாணம் செய்துக்கொண்டார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பில் நுவரெலியா மாநகர சபை உறுப்பினராக இருந்த மோமட் பளீல் இராஜினாமா செய்ததையடுத்து அந்த வெற்றி இடத்திற்கு மஹிந்த தொடம்பே கமகே உறுப்பினராக சத்தியபிரமாணம் செய்துக்கொண்டார்.

நுவரெலியா மாநகரசபை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இவ்வைபவத்தில் நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி இணைப்பு குழு தலைவரும் முன்னாள் அமைச்சருமான எஸ். பீ. திஸாநாயக்க, நுவரெலியா மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.  யோகராஜா, ஜெயராம் வினோஜ், விஸ்னுவர்தன் மற்றும் முன்னாள் நுவரெலியா மாநகர பிரதிமுதல்வர் கிருஸ்ணசாமி சந்திரசேகரன் உட்பட கட்சி ஆதரவாளர்களும் கலந்துக்கொண்டனர்.

 நுவரெலியா நிருபர் எஸ்.தியாகு

‘முல்லோயாவில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் இல்லை’

ஹங்குரென்கெத்த  பிரதேச செலயகத்துக்குட்பட்ட முல்லோயா தோட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 16 குடும்பங்களுக்கு இதுவரை நிவாரணப் பொதிகள் வழங்கப்படவில்லை என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஹங்குரென்கெத்த பிரதேச சபை உறுப்பினர் சதானந்தன் குற்றம் சுமத்தியுள்ளார்.

முல்லோயா தோட்ட மேற்பிரிவு  மற்றும் கீழ்ப்பிரிவில் தலா ஒரு கொரோனா தொற்றாளர் இனங்காணப்பட்டு அவர்கள் இருவரும் தற்போது அம்பாந்தோட்டையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை முல்லோயா தோட்டத்தில் 16 தொழிலாளர் குடும்பங்கள் தனிமைப் படுத்தப் பட்டுள்ளன. இவர்களுக்கு பிரதேச செயலகத்தின் ஊடாக வழங்கப்படவேண்டிய நிவாரண பொதிகள் இதுவரை வழங்கப்படவில்லை என்று
ஹங்குரென்கெத்த பிரதேச உறுப்பினர் சதானந்தன் மேலும் தெரிவித்தார்.

மரண வீட்டுக்கு வந்த பெண்ணுக்கு கொரோனா!

கம்பளை, புப்புரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்டலன்ட்பேர்க் மேல் பிரிவில் 46 வயதுடைய பெண்ணொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் களனி பிரதேசத்தில் தொழில் புரிந்த இப்பெண்ணிடம் கடந்த 7 ஆம் திகதி பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டுள்ளன. பிசிஆர் பரிசோதனை முடிவுகள் வெளிவரும்வரை தனிமைப்படுத்தலில் இருக்கவேண்டும் என சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

எனினும், சுகாதார அதிகாரிகளின் உத்தரவையும்மீறி இப்பெண் அங்கிருந்து ஊருக்கு வந்துள்ளார். தனது தாய் உயிரிழந்துவிட்டதால் இறுதிக்கிரியைகளில் பங்கேற்பதற்காக தனது கணவருடன் கடந்த 8 ஆம் திகதி வாடகை ஆட்டோவிலேயே வந்துள்ளார். அத்தோட்டத்தில் உள்ள பலரும் மரண வீட்டுக்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில் 9 ஆம் திகதி பிசிஆர் பரிசோதனைக்கான முடிவுகள் வந்தநிலையில் அப்பெண்ணுக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த பெண்ணுடன் நேரடி தொடர்பில் இருந்த 6 குடும்ப உறுப்பினர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மரண வீட்டுக்கு வந்துசென்றவர்களின் விபரமும் திரட்டப்பட்டுவருகின்றது.

தொற்றுக்குள்ளான அவர் பெனிதெனிய பகுதியில் உள்ள கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.

ஸ்டலன்பேர்க் மேல் பிரிவுகளுக்கு செல்லும் பிரதான பாதை குன்று குழியுமாக காணப்படுவதால் கொரோன தொற்றாளர் இருக்கும் இடத்துக்கு வாகனத்தை கொண்டுசெல்லமுடியாத நிலை ஏற்பட்டது. இதனால் சுமார் 600 மீற்றர்வரை நடந்துவந்தே அன்புலன்ஸ் வண்டியில் ஏறியுள்ளார்.

பட்ஜட்மீது இன்று இறுதி வாக்கெடுப்பு! இ.தொ.கா. ஆதரவு – முற்போக்கு கூட்டணி எதிர்ப்பு!!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தின் கன்னி வரவு – செலவுத்திட்டம்மீதான இறுதி வாக்கெடுப்பு இன்று (10.12.2020) மாலை நடைபெறவுள்ளது.

அரசாங்கமும் அதன் தோழமைக்கட்சிகளும் பாதீட்டை ஆதரித்து வாக்களிக்கவுள்ளதுடன், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்த்து வாக்களிக்கவுள்ளன.

2021 ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத்திட்டம் கடந்த 17 ஆம் திகதி நிதி அமைச்சர் மஹிந்த ராஜபக்சவால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

18 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதிவரை இரண்டாம்வாசிப்புமீதான விவாதம் நடத்தப்பட்டு, மூன்றிலிரண்டு பெரும்பான்டையுடன் இரண்டாம் வாசிப்பு நிறைவேற்றப்பட்டது.

அதன்பின்னர் அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதம் ஆரம்பமானது. இந்நிலையிலேயே பாதீடுமீது இறுதி வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

சிற்சில திருத்தங்கள் சகிதமே பாதீடு நிறைவேற்றப்படவுள்ளது.

பாதீட்டு கூட்டத்தொடர் முடிவடைந்த பின்னர் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்படும்.  அதன்பின்னர் 2021 ஆம் ஆண்டுக்கான முதலாவது அமர்வு ஜனவரி 5 ஆம் திகதி ஆரம்பமாகும்.

காணி உறுதிப்பத்திரம் சட்டவலுவுடையது – ஆதாரத்தை வெளியிட்டது திகா அணி

நல்லாட்சியின்போது மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட காணி உறுதிப்பத்திரங்கள் சட்டவலுவற்றது என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஊடகப்பிரிவு நிராகரித்துள்ளது.

அத்துடன், வழங்கப்பட்டுள்ள காணி உறுதிப்பத்திரத்தின் மாதிரியையும் வெளியிட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான நல்லாட்சியின்போது மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் தனிவீட்டுத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. அத்துடன், தோட்டத் தொழிலாளர்களுக்கு காணி உரிமை பெற்றுக்கொடுக்கும் விதத்தில் ஏழு பேர்ச்சஸ் காணிக்கான உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டன.

எனினும், அவ்வாறு வழங்கப்பட்ட உறுதிப்பத்திரங்கள் சட்டவலுவற்றது எனவும், காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின்கீழ் அவை வரவில்லை எனவும் இ.தொ.கா. தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. எனினும், குறித்த உறுதிப்பத்திரத்தை வங்கியில் வைத்து கடன்கூட பெறலாம் என பழனி திகாம்பரம் அண்மையில் பாராளுமன்றத்தில் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனாவால் மேலும் இருவர் உயிரிழப்பு! பலி எண்ணிக்கை 144 ஆக உயர்வு!!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர். இதன்படி கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 144 ஆக அதிகரித்துள்ளது.

2ஆவது அலைமூலம் இதுவரை 131 பேர் உயிரிழந்துள்ளனர். கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை, நாட்டில் இன்று மாத்திரம் 694 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்து 72 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 21 ஆயிரத்து 800 பேர் குணமடைந்துள்ளனர்.

2 ஆவது அலைமூலம் (மினுவாங்கொட, பேலியகொட,சிறைச்சாலை கொத்தணிகள்) இதுவரையில் 26 ஆயிரத்து 516 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியது!

நாட்டில் மேலும் 335 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.பேலியகொடை கொத்தணிமூலமே இவர்களுக்கு வைரஸ் தொற்றியுள்ளது. இன்று மாத்திரம் 694 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்து 72 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 21 ஆயிரத்து 800 பேர் குணமடைந்துள்ளனர்.

2 ஆவது அலைமூலம் (மினுவாங்கொட, பேலியகொட,சிறைச்சாலை கொத்தணிகள்) இதுவரையில் 26 ஆயிரத்து 516 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

‘சபையில் பொங்கியெழுந்த சாமர, சட்ட புத்தகத்தையும் வீசியெறிந்தார்’

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க நாடாளுமன்ற நிலையியற் கட்டளைச் சட்டப் புத்தகத்தை இன்று சபையில் வீசியெறிந்ததினால் நாடாளுமன்றத்தில் பெரும் அமைதியின்மை ஏற்பட்டது.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி மனுச நாணயக்கார, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினர்களுக்கு எதிரான வழக்குகள் அனைத்தும் தீர்க்கப்பட்டு சந்தேக நபர்களாக இருந்த அனைவரும் விடுதலை செய்யப்பட்டு வருவதாக விமர்சித்தார்.

இதற்கு எதிராக கடும் எதிர்ப்பை வெளியிட்ட ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினர் நீதிமன்றத் தீர்ப்பை விமர்சிக்க இயலாது என்று குறிப்பிட்டதுடன், நாடாளுமன்றத்தில் அல்லாமல் வெளியிடங்களில் இதனைக்கூறும் படியும் சவால் விடுத்தனர்.

இந்த சந்தர்ப்பத்தில் குறுக்கீடு செய்த எதிர்கட்சி பிரதம கொறடா லக்ஸ்மன் கிரியெல்ல, உச்சநீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களைக்கூட நீக்குவதற்கான அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு உள்ளதாலும், மக்களின் தீர்ப்புக்களை விசாரிக்க நாடாளுமன்றத்தினால் நீதிமன்றத்திற்கு அதிகாரம் வழங்கப்படுவதால் நீதிமன்ற தீர்ப்பு பற்றி சபையில் பேச முடியும் என்பதை சுட்டிக்காட்டினார்.

எனினும் இதனைப் பொருட்படுத்தாமல் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் அடிக்கடி குறுக்கீடு செய்தும், போலியாக நிலையியற் கட்டளைச் சட்டத்தைப் பயன்படுத்தி குறுக்கீடு செய்ததாலும் சபையில் மேலும் அமளிதுமளி ஏற்பட்டது.

இந்த சந்தர்ப்பத்தில் சபையில் எழுந்து நிலையியற் கட்டளைச் சட்டத்தை சுட்டிக்காட்டி கருத்து தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் நளின் பண்டார, நிலையியற் கட்டளைச் சட்டங்களை தேவையற்ற வகையில் பயன்படுத்தி நாடாளுமன்ற செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் உறுப்பினர்களின் உறுப்புரிமையை இரத்து செய்யவும் நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் இருப்பதால் அவ்வாறு செய்யும்படி சபைக்குத் தலைமைதாங்கிய உறுப்பினரிடம் கோரினார்.

இதனையடுத்து சபை அமைதியின்மை நிறைவுக்கு வந்தது. நிலையியற் கட்டளை புத்தகத்தை சாமர சம்பத் தூக்கி வீசினார்.

சினிமா

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

செய்தி

தமிழக முதல்வராக பதவியேற்றார் ஜோசப் விஜய்!

0
தமிழக முதல்வராக பதவியேற்றார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை 10 மணியளவில் பதவியேற்பு விழா தொடங்கியது. வந்தே மாதரம் பாடல் இசைக்க பதவியேற்பு...

தவெக முதற்கட்ட அமைச்சரவை பட்டியல் வெளியீடு

0
தமிழக வெற்றிக் கழக அரசின் தவெக முதற்கட்ட அமைச்சர் பட்டியலை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் கீழ்காணும் பெயர்கள் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளன: புஸ்ஸி என்.ஆனந்த் ஆதவ் அர்ஜுனா கே.ஜி.அருண்ராஜ் கே.ஏ.செங்கோட்டையன் வெங்கடரமணன் நிர்மல்குமார் ராஜ்மோகன் டி.கே.பிரபு கீர்த்தனா 120 எம்எல்ஏக்களின் ஆதரவுக் கடிதங்களை ஆளுநரிடம் விஜய் நேற்று...

மரக்கறி விலைப்பட்டியல் (10.05.2026)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (10) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...