Home Blog Page 3734

ஜப்னா அணியை பந்தாடியது கண்டி டஸ்கர்ஸ்!

லங்கா பிரீமியர் லீக் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் கண்டி டஸ்கர்ஸ் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.

கண்டி டஸ்கர்ஸ், ஜப்னா ஸ்டாலியன்ஸ்  ஆகிய ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற ஜப்னா அணி, முதலில் துடுப்பாட்டத்தை தெரிவுசெய்தது.

இதன்படி களமிறங்கிய அவ்வணி 20 ஒவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களை இழந்து 150 ஓட்டங்களை பெற்றது. சொயிப் மலிக் 59 ஓட்டங்களையும், பானுக்க 21 ஓட்டங்களையும், அசலங்க 18 ஓட்டங்களையும் பெற்றனர். பிரதீப் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் 151 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய கண்டி அணி  19.1 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை  மாத்திரம் இழந்து 151 ஓட்டங்களைப்பெற்று வெற்றிபெற்றது.

கண்டி அணி சார்பாக அசேல குணரத்ன 52 ஓட்டங்களையும், குசல் ஜனித் பெரேரா 42 ஓட்டங்களையும் பெற்றனர்.ஆட்டம் இலக்காமல் 52 ஓட்டங்களைப்பெற்ற அசேல குணரத்ன ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.

‘எங்கள் சங்கத்தில் இணைபவர்களுக்கு ஆயுள் காப்புறுதி’ – அனுசா

அண்ணா சந்திரசேகரன் தொழிலாளர் முன்னணியின் அங்கத்தவர்கள் ஒவ்வொருவரும் ஆயுள் காப்புறுதி செய்யும் திட்டத்தினை வகுத்து வருவதாக சட்டத்தரணியும் அண்ணா சந்திரசேகரன் தொழிலாளர் முன்னணியின் பொதுச்செயலாளருமான அனுஷா சந்திரசேகரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” கடந்த 70 வருட காலமாக பல தொழிற்சங்கங்கள் இயங்கி வந்த போதிலும் தொழிலாளர்களுக்கு தன்னிறைவான சேவைகளை வழங்கிய தொழிற்சங்கங்கள் விரல் விட்டு எண்னக்கூடிய அளவிலேயே செயற்பட்டன.

எனது தந்தையும் மாபெரும் தொழிற்சங்கவாதியுமாகிய அமரர் சந்திரசேகரன் மலையக தொழிலாளர் முன்னணியை தோற்றுவித்ததே தொழிலாளர்களுக்கு தன்னிறைவான சேவைகளை வழங்குவதற்கே ஆகும்.

1994-2009க்கு இடைப்பட்ட காலப்பகுதியில் 35, 000க்கும் மேற்பட்ட தனி வீடுகளையும் தோட்டங்கள் தோறும் மின்சாரம் குடிநீர் வசதி என ஒவ்வொரு மலையகத்தவரும் சுயமாக எழுந்து நிற்கக்கூடிய ஒரு சூழ்நிலையை உருவாக்கியிருந்தார். ஆனால் அமரர் சந்திரசேகரனின் மறைவுக்கு பின்னர் முன்னணியின் நிலை குரங்கு கையில் சிக்கிய பூமாலை போல் சிக்கி சின்னா பிண்ணமாகியிருக்கிறது.

தேர்தல் காலங்களிலும் தொழிற்சங்க சந்தாவை பெறும் ஜீன், டிசம்பர் மாதங்கள் தவிர்த்து தொழிலாளர்களின் நலனில் அக்கறை கொள்ளாத தொழிலாளர்களை கண்டுக்கொள்ளாத இது போன்ற தொழிற்சங்கங்களை விமர்சித்து விமர்சித்து காலத்தை கடத்துவதை விட தொழிலாளர்களின் நலனில் அக்கறை கொண்ட எம் தொழிலாளர்களுடன் ஒன்றிப்பயணிக்கும் ஒரு தொழிற்சங்கமாக அண்ணா சந்திரசேகரன் தொழிலாளர் முன்னணியை நடாத்திச் செல்வதே ஒரு தலைவராக நாம் அமரர் சந்திரசேகரனுக்கு செய்யும் நன்றிக்கடனாகும்.

எனது சேவைகள் அனைத்தும் சகல தொழிலாளர்களின் நலன் சார்ந்ததாக அமையும் இதற்காக பல வேலைத்திட்டங்களை வடிவமைத்துள்ளேன். இதன் ஒரு அம்சமாக என் அமைப்பு சார்ந்த அங்கத்தவர்களைக் காப்புறுதி செய்யும் திட்டத்தினை நடைமுறை படுத்தவுள்ளேன்.

விபத்துக்களினால் குறிப்பாக தொழில் செய்யும் போது ஏற்படும் மரணங்கள் மற்றும் விபத்துக்களுக்கு எமது தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணமோ அல்லது காப்பீடோ கிடைப்பதில்லை என்பது தொடர்ச்சியாக தொடரும் அவலமாகும்.

ஆகவே அண்ணா சந்திரசேகரன் தொழிலாளர் முன்னணியின் ஆரம்ப கட்டமாக எமது தொழிற்சங்கத்தில் உறுப்புரிமை பெற்று அங்கத்துவம் வகிக்கும் அனைத்து தொழிலாளர்களுக்கும் ஆயுள் காப்புறுதியை பேணுவது கட்டாயமாக்கப்படும்.

இயற்கையுடன் போராடி தொழில் செய்யும் போது ஏற்படும் விபத்துக்கள் உயிர் அச்சுறுத்தல்கள் தவிர்க்க முடியாது என்றாலும் அதன் பின்னர் எமது அங்கத்தவர்கள பின்னடைவை சந்திக்காது முன்னோக்கி செல்வதற்கான ஒரு உந்துசக்தியாக செயற்படவே இந்த திட்டத்தினை நடைமுறைப்படுத்தவுள்ளேன்.

இதுவரை காலமும் பெருந்தோட்டத்துறையில் இவ்வாறு ஏற்பட்ட மரணங்களும் விபத்துக்களும் வெறுமனே அனுதாபம் தெரிவிப்பதோடு மாத்திரமே முற்றுப்பெற்று விட்டன. இனியும் இது போன்ற மரணங்களும் விபத்துக்களும் அவலங்களாக தொடரக்கூடாது.

இதைப்போன்றே தீ விபத்தால் பாதிக்கப்படும் தொழிலாளர் குடியிருப்புகளையும் காப்புறுதி செய்வது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தியும் உள்ளதாக தெரிவித்தார்.

கார் ரயர் வெடித்து விபத்து! இருவர் பலி – மூவர் படுகாயம்!!

யாழ்.தென்மராட்சி நுணாவில் A9 வீதியில் கார் ஒன்றின் ரயர் வெடித்து விபத்துக்குள்ளானதில் நான்கு வயதுச் சிறுவன் உட்பட இருவர் உயிரிழந்துள்ளதோடு, மூவர் படுகாயமடைந்துள்ளனர்.  இந்தச் சம்பவம் இன்று முற்பகல் 11.50 மணியளவில்  இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து சாவகச்சேரி நோக்கியப் பயணித்த  கார் ஒன்றின் ரயர் வெடித்து, திருத்த வேலைக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எரிபொருள் தாங்கி வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது.

சம்பவநேரத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சிறுவர்கள் உட்பட  ஐவர் காரில் பயணித்துள்ளனர்.அவர்களில் நான்கு வயதுடைய சிறுவன், 35 வயதுடைய  பெண் ஆகியோர் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார். ஏனையவர்கள் மூவரும் படுகாயமடைந்த நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

நாட்டில் மேலும் 359 பேருக்கு கொரோனா தொற்று!

நாட்டில் மேலும் 359 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பேலியகொடை கொத்தணிமூலம் 316 பேருக்கும் சிறைச்சாலை கொத்தணிமூலம் 43 பேருக்குமே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.

அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்து 737 ஆக அதிகரித்துள்ளது.

 2 ஆவது அலைமூலம் (மினுவாங்கொட, பேலியகொட,சிறைச்சாலை கொத்தணிகள்) இதுவரையில் 26 ஆயிரத்து 186 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

29,378 பேருக்கு கொரோனா – 21,800 பேர் குணமடைவு – 7,436 பேருக்கு சிகிச்சை!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 542 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்து 800 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் 7 ஆயிரத்து 436 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 142  பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்து 378 ஆக அதிகரித்துள்ளது.

யாழில் விபத்து – ஒருவர் பலி! இருவர் படுகாயம்!!

யாழ்ப்பாணம் தென்மராட்சி நுணாவில் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த எரிபொருள் தாங்கி மீது கார் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். இச்சம்பவம் நண்பகல் 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
 
நுணாவில் சந்திக்கு அண்மையில் ரயர் கடைக்கு முன்பாக ரயர் திருத்த வேலைக்காக எரிபொருள் தாங்கி வாகனம் ஒன்று நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.
 
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிய திசையில் பயணித்த கார் ஒன்று அந்த வாகனத்தின் பின் பகுதியில் மோதியதில் மூவர் படுகாயம் அடைந்துள்ளனர்.
 
அவர்கள் மூவரும் உடனடியாகவே வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் பெண் உயிரிழந்துள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
www.kuruvi.lk 

எல்பியன் தோட்டத்தில் தோன்பீல்ட் பிரிவு முடக்கம்!

தலவாக்கலை, அக்கரபத்தன – எல்பியன் தோட்டத்தில் தோன்பீல்ட் பிரிவு இன்று (9.12.20202) முழுமையாக முடக்கப்பட்டு பயணக்கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

தோன்பீல்ட் தோட்டத்தில் நேற்று (9) கொரோனா வைரஸ் தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட நபர், குறித்த தோட்டத்தில் பல இடங்களுக்கும் சென்றுவந்துள்ளார், நிகழ்வொன்றிலும் பங்குபற்றியுள்ளார் என சுகாதார அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்தே கொரோனா வைரஸ பரவலைக்கட்டுப்படுத்தும்நோக்கில் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. மறுஅறிவித்தல் விடுக்கப்படும்வரை தனிமைப்படுத்தல் நடைமுறை அமுலில் இருக்கும் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதேவேளை, குறித்த தோட்டத்தில் சுமார் 150 பேர் சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களிடம் பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்படவுள்ளன என்றும் சுகாதார அதிகாரிகள்
தெரிவித்தனர்.

பிசிஆர் பரிசோதனை முடிவுகள் வெளியான பின்னரே தனிமைப்படுத்தலை தொடர்வதா அல்லது பயணக்கட்டுப்பாடுகளை தளர்த்துவதா என்பது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

க.கிசாந்தன்

கண்டி ,மஹியாவ பகுதிக்கு பயணக்கட்டுப்பாடு!

கண்டி, மஹியாவ பகுதி இன்று தனிமைப்படுத்தப்பட்டு, பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

மஹியாவ பகுதியில் 28 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இப்பகுதியில் இருந்து வெளியேறுவதற்கும், வெளியாட்கள் இங்குவருவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

 

தமிழ்க் கூட்டமைப்பை தடை செய்தால், அடுத்து என்ன?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தடைசெய்தாலும் தாம் தமது கொள்கைகளை முன்னிறுத்தி வேறு கட்சியில் போட்டியிடுவோம் என வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஜானம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கஜேந்திரகுமார், விக்னேஸ்வரன், சாணக்கியன் மற்றும் சுமந்திரன் போன்றோர் பொது இலக்கில் ஒன்றாக செயற்படுகின்றார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே சீ.வீ.கே.சிவஜானம் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

” தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் முதல் இரு கூட்டங்களில் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் வரவில்லை. அவர்கள் புறக்கணிக்கிறார்களா? அல்லது வரவில்லையா என்பதை அவர்களிடம் தான் கேட்க முடியும்.

அவர்களுக்குரிய அறிவித்தல் முறையாகவே கிடைக்கின்றது. பாராளுமன்றில் 13 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒத்திசைவாகவே செயற்படுகின்றனர். சாணக்கியன், விக்கினேஸ்வரன், கஜேந்திரகுமார் போன்றவர்கள் கூட பொது இலக்கில் செயற்படுகின்றனர்.

கஜேந்திரகுமார், விக்னேஸ்வரன், சுமந்திரன், சிறிதரன், சாணக்கியன் போன்றோர் சபைகளில் ஆவேசமாக பேசுகின்றனர். முன்னர் அடக்கி வாசித்தார்கள். நாட்டில் அடக்குமுறை அதிகரித்ததால் அவர்களும் ஆவேசமடைந்துள்ளனர்.

கஜேந்திரகுமார், சாணக்கியன் போன்றோர் சரத் வீரசேகரவிற்கு எதிராக நாடாளுமன்றில் பதிலளிக்கும் போதே கூட்டமைப்பை தடைசெய்ய வேண்டும், புணர்வாழ்வு அளிக்கப்பட வேண்டும் என கூறப்பட்டது. இதற்கு பொன்சேகாவும் தனது கடும் எதிர்பை வெளியிட்டிருந்தார்.

கூட்டமைப்பை தடை செய்வதென்பது மேலோட்டமான பேச்சே ஜனநாயக நாட்டில் நினைத்தபாட்டில் ஒரு கட்சியை தடைசெய்ய முடியாது. தடைசெய்தாலும் நாம் எமது கொள்கைகளை முன்னிறுத்தி வேறு கட்சியில் போட்டியிடுவோம்.” – என்றார்.

 

கொலைசெய்யப்படாரா சித்ரா? பலகோணங்களில் விசாரணை!

தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நடிகை சித்ராவின் முகத்தில் 2 இடங்களில் காயம் உள்ளதாகவும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் முல்லை வேடத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை சித்ரா. 28 வயதான இவர், தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக அறிமுகமாகி பின்னர் சின்னத்திரை நடிகையாக புகழ்பெற்றார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் படப்பிடிப்பு செம்பரம்பாக்கத்தில் உள்ள தனியார் பிலிம்சிட்டி வளாகத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் பங்கேற்பதற்காக அதன் அருகில் பழஞ்சூர் பகுதியில் இருக்கும் பிரபல ஹோட்டலில் சித்ரா தங்கி இருந்தார். இவரது வீடு திருவான்மியூரில் உள்ளது. தினமும் அங்கிருந்து படப்பிடிப்புக்கு சென்று வரமுடியாது என்பதால், படப்பிடிப்பு குழுவினரே இவர் தங்குவதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். இதன்படி தினமும் ஹேட்டலில் இருந்து சென்று படப்பிடிப்பில் சித்ரா பங்கேற்று வந்தார்.

இந்தநிலையில் நடிகை சித்ரா தான் தங்கியிருந்த ஹேட்டலில் இன்று அதிகாலை திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். சித்ராவுக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நிச்சயம் ஆனது. கரையான்சாவடி பகுதியை சேர்ந்த ஹேம்நாத் என்பவரோடு வருகிற ஜனவரி மாதம் திருமணம் நடைபெற இருந்தது.

இந்தநிலையில் தான் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். சித்ராவின் வருங்கால கணவரான ஹேம்நாத்தும் ஓட்டலில் தங்கியிருந்துள்ளார். இன்று அதிகாலை 2 மணியளவில் படப்பிடிப்பு முடிந்து ஓட்டலுக்கு திரும்பிய சித்ரா, குளிக்கப் போவதாக கூறியுள்ளார். இதற்காக ஹேம்நாத்தை அறைக்கு வெளியே இருக்குமாறு கூறி உள்ளார். இதையடுத்து ஹேம்நாத் வெளியே சென்றதும் சித்ரா அறையின் கதவை பூட்டிக்கொண்டார்.

குளிக்க சென்ற சித்ரா நீண்ட நேரமாக கதவை திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ஹேம்நாத் கதவை தட்டினார். நீண்ட நேரமாகியும் சித்ரா கதவை திறக்காததால், இதுபற்றி ஓட்டல் வரவேற் பறையில் ஹேம்நாத் தகவல் தெரிவித்தார். உடனடியாக ஓட்டல் ஊழியர் கணேஷ் விரைந்து வந்தார். அவர் மாற்றுச்சாவியால் அறையின் கதவை திறந்தார். அப்போது மின்விசிறியில் நைட்டி அணிந்த நிலையில், சித்ரா தூக்கில் பிணமாக தொங்கினார்.

இதைப்பார்த்து ஹேம்நாத் கடும் அதிர்ச்சி அடைந்தார். என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த அவர், உடனடியாக பொலிஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். நசரத்பேட்டை பொலிஸ் இன்ஸ்பெக்டர் விஜயராகவன் உடனடியாக ஓட்டலுக்கு விரைந்து சென்று உடலை மீட்டார். பின்னர் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு சித்ராவின் உடல் ஆம்புலன்சில் அனுப்பி வைக்கப்பட்டது.

சித்ரா தற்கொலை செய்து கொண்ட தகவல் கிடைத்ததும் அவரது பெற்றோரும், உறவினர்களும் கதறி அழுதனர். கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று அவரது உடலை பார்த்து கண்ணீர் வடித்தனர்.

தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நடிகை சித்ராவின் முகத்தில் 2 இடங்களில் காயம் உள்ளது. வலது பக்க கன்னத்திலும், நாடி பகுதியிலும் காயங்கள் உள்ளன. இதுபற்றி பொலிஸார் கேட்ட போது, இந்த காயங்கள் எப்படி ஏற்பட்டன என்பது பற்றியும் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தனர்.

தற்கொலை செய்த போது அறையில் சித்ராவின் வருங்கால கணவரான ஹேம்நாத் மட்டுமே உடன் இருந்துள்ளார். அவரிடம் விசாரணை நடத்தி வருகிறோம். சித்ரா தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு ஹேம்நாத்திடம் கருத்து வேறுபாடு காரணமாக தகராறில் ஈடுபட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றியும் ஹேம்நாத்திடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சித்ரா கொலை செய்யப்பட்டு இருக்கலாமோ என்கிற கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது. பிரேத பரிசோதனையில்தான் சித்ரா மரணம் அடைந்தது எப்படி? என்பது உறுதியாக தெரியவரும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகே சித்ரா தற்கொலை வழக்கில் அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்க முடியும் என்றும் போலீசார் கூறினார்கள்.

சினிமா

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

செய்தி

தமிழக முதல்வராக பதவியேற்றார் ஜோசப் விஜய்!

0
தமிழக முதல்வராக பதவியேற்றார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை 10 மணியளவில் பதவியேற்பு விழா தொடங்கியது. வந்தே மாதரம் பாடல் இசைக்க பதவியேற்பு...

தவெக முதற்கட்ட அமைச்சரவை பட்டியல் வெளியீடு

0
தமிழக வெற்றிக் கழக அரசின் தவெக முதற்கட்ட அமைச்சர் பட்டியலை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் கீழ்காணும் பெயர்கள் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளன: புஸ்ஸி என்.ஆனந்த் ஆதவ் அர்ஜுனா கே.ஜி.அருண்ராஜ் கே.ஏ.செங்கோட்டையன் வெங்கடரமணன் நிர்மல்குமார் ராஜ்மோகன் டி.கே.பிரபு கீர்த்தனா 120 எம்எல்ஏக்களின் ஆதரவுக் கடிதங்களை ஆளுநரிடம் விஜய் நேற்று...

மரக்கறி விலைப்பட்டியல் (10.05.2026)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (10) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...