Home Blog Page 3735

‘இலங்கையில் திறமைக்கு இடமில்லை – இனத்திற்கே முன்னுரிமை! ராதா கவலை!

இந்தியாவில் தமிழ் நாட்டில் சேலம் சின்னப்பட்டி கிராமத்தை சேர்ந்த இளைஞன் ஒரு தமிழனாக இந்திய கிரிக்கட் அணியில் தெரிவு செய்யப்பட்டு சாதிக்கின்றார். ஆனால் எங்களுடைய இலங்கையில் 2 கோடி மக்களில் ஒருவரை தெரிவு செய்வதற்கான வாய்ப்பு இல்லை. இதுதான் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இருக்கின்ற வித்தியாசமாகும் என்று நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,

” கடந்த சில நாட்களாக அனைவரும் பேசுகின்ற ஒருவிடயம்தான் தமிழ்நாட்டு சேலம் சின்னப்பட்டி கிராமத்தை சேர்ந்த தமிழன் நடராஜன் பற்றியது. அவர்  ஒரு தமிழனாக இந்திய கிரிக்கட் அணியில் தெரிவு செய்யப்பட்டு தன்னுடைய திறமையை சர்வதேச அரங்கில் நிரூபித்துக்கொண்டிருக்கின்றான்.

அதுமட்டுமல்லாமல் அவர் சர்வதேச தொலைக்காட்சி ஒன்றிற்கு ஆஸ்திரோலியா மண்ணில் இருந்து தமிழ் மொழியில் தன்னுடைய செவ்வியை வழங்குகின்றார். இதன் மூலம் உலகத் தமிழர்கள் அனைவருக்கும் பெருமை சேர்த்திருக்கின்றார்.மேலும் எங்களில் ஒரு சிலர் கடந்த காலத்தில் கிரிக்கட்டில் சாதனை செய்திருந்தாலும் அவர்கள் எனக்கு தமிழ் தெரியாது என கூறுவதை நாங்கள் பார்த்திருக்கின்றோம். ஆனால் அவர்களுக்கெல்லாம் ஒரு பாடம் புகட்டுவது போல நடராஜன் தமிழில் பேசி அசத்திவிட்டார்.

இன்று இலங்கையில் நடைபெறுகின்ற எல்.பி.எல் போட்டிகளில் எத்தனை தமிழர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருக்கின்றது.ஒரு சிலருக்கு மாத்திரமே.ஏன் திறமையானவர்கள் இல்லையா? திறமை இருந்தாலும் அவன் தமிழனாக இருந்தால் வாய்ப்பு கிடைக்காது என்பதே உண்மை. இது விளையாட்டில் மட்டுமல்ல அனைத்து துறைகளிலும் இதே நிலைதான். அது அரசியலாக இருக்கட்டும் அல்லது வேறு எந்த துறையாகவும் இருக்கட்டும் தமிழனுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை.

இந்தியாவில் ஒரு முஸ்லிம் சமூகத்தை சார்ந்த ஒருவர் ஜனாதிபதியாக வர முடியும். இந்தியாவின் இரும்பு பெண்மணி என போற்றப்பட்ட இந்திராகாந்தியை கொலை செய்த சீக்கிய இனத்தை சார்ந்த ஒருவர் பிரதமராக வர முடியும்.இன்னும் பல சமூகத்தை சார்ந்தவர்கள் உயர் பதவியை வகிக்க முடியும்.அவர்களின் திறமைக்கு மாத்திரமே அங்கே முதலிடம் கொடுக்கப்படுகின்றது.ஆனால் இலங்கையில் இனரீதியாகவே இவை அனைத்தும் பார்க்கப்படுகின்றது. இது ஒரு பெரும் சாபக்கேடாகும்.

இன்று இலங்கை பாராளுமன்றத்தில் 100 வீதம் இனத்துவேசம் பேசப்படுகின்றது. ஆனால் இதனை அரசாங்கம் தடுத்து நிறுத்துவதோ அல்லது சம்பந்தபட்ட அமைச்சர்களையோ பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராகவோ எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றது.இது மிகவும் கவலைக்குறிய ஒரு செயற்பாடாகும்.

இது ஆளும் கட்சியில் மாத்திரம் அல்ல.எதிர்கட்சியில் இருக்கின்ற ஒரு சில பாராளுமன்ற உறுப்பினர்களும் இனத்துவேசமாகவே பேசுகின்றார்கள்.இந்த விடயங்களை ஒரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் வண்மையாக கண்டிக்கின்றேன் .” – என்றுள்ளது.

‘சிறைச்சாலை கலவரம்’ – விசாரணை அறிக்கை சபையில் சமர்ப்பிப்பு!

மஹர சிறைச்சாலை மோதல் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காகவும், பரிந்துரைகளை முன்வைப்பதற்காகவும் நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய விசாரணைக்குழுவின் இடைக்கால அறிக்கை இன்று (9) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

பாராளுமன்றம் இன்று முற்பகல் சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. இதன்போது நீதி அமைச்சரால் மேற்படி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

அத்துடன், முழுமையான அறிக்கை ஒரு மாதத்துக்குள் முன்வைக்கப்படும் எனவும் நீதி அமைச்சர் கூறினார்.

லிந்துலை சுகாதார பிரிவில் 9 பேருக்கு கொரோனா தொற்று!

நுவரெலியா மாவட்டத்தில் லிந்துலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக அதிகாரத்துக்குட்பட்ட பகுதிகளில் மேலும் 9 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

அக்கரப்பத்தனை பகுதிகளில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு பிசிஆர் பரிசோதனைமூலம் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்றாளர் ஒருவருடன் தொடர்பில் இருந்த தந்தை, தாய் மற்றும் மகள் ஆகியோருக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.

இதன்படி அக்கரபத்தனை தோட்டப்பகுதியில் அறுவருக்கும், கிரேட் வெஸ்டன் தோட்டத்தில் ஒருவருக்கும், லிந்துலை தோட்டத்தில் இருவருக்கும் பிசிஅர் பரிசோதனைமூலம் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும், குடும்ப உறுப்பினர்களும் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்கள் கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சை நிலையங்களுக்கு கொண்டுசெல்லப்படவுள்ளனர்

தீபாவளி பண்டிகைக்காக உறவினர்கள் வீடுகளுக்கு சென்றவர்களுக்கும், மரண வீடுகளுக்கு சென்றவர்களுக்குமே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.

க.கிசாந்தன்

கொழும்பில் 12,604 பேருக்கும், கண்டியில் 883 பேருக்கு கொரோனா!

நாட்டில் நேற்று அடையாளம் காணப்பட்ட 798 கொரோனா தொற்றாளர்களில் 526 பேர் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.

அத்துடன், ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் நேற்றுவரை கொழும்பு மாவட்டத்தில் 12 ஆயிரத்து 604 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

அதேவேளை, நுவரெலியா மாவட்டத்தில் நேற்றுவரை 206 தொற்றாளர்களும், கண்டி மாவட்டத்தில் 883 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கண்டியில் நேற்று மாத்திரம் 40 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

‘நடராஜன் இந்திய அணிக்கு கிடைத்த சொத்து’ – கோஹ்லி புகழாரம்!

“ரி – 20 உலக கிண்ண போட்டித்தொடருக்கு எங்களுக்கு கிடைத்த சொத்து நடராஜன்.” என இந்திய கிரிக்கெட் அணி தலைவர் விராட் கோஹ்லி புகழ்ந்து சூட்டியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 நிலைகளிலான போட்டிகளில் விளையாடிவருகிறது. இதில், ஒரு நாள் போட்டி தொடரை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது. இதனை தொடர்ந்து நடந்த இருபது ஓவர் போட்டியில் இடதுகை பந்து வீச்சாளர் நடராஜன் இந்திய அணியில் சேர்க்கப்பட்டார்.

இந்திய அணியின் முகமது சமி மற்றும் பும்ரா விளையாடாத நிலையில் நடராஜன் தனக்கு கிடைத்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்தினார். தனது அறிமுக போட்டியிலேயே அவரது அற்புதமான ஆட்டம் வெளிப்பட்டது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட  விராட் கோஹ்லி, பும்ரா மற்றும் சமி இல்லாத சூழலில் சிறந்த முறையில் நடராஜன் விளையாடினார். நெருக்கடியான நிலையில் உண்மையில் நின்று விளையாடினார். சர்வதேச அளவில், நடைபெற்ற போட்டியில் சிறந்த ஆட்டத்தினை அவர் வெளிப்படுத்தி உள்ளார்.

அவர் மிக தேர்ந்தவராக, கடின உழைப்பு மற்றும் பணிவு கொண்டவராகவும் இருக்கிறார். அவருக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். இடதுகை பந்து வீச்சாளர் என்பவர் எப்பொழுதும் அணிக்கு கிடைக்க கூடிய ஒரு சொத்து. இதேபோன்று களத்தில் அவரது ஆட்டம் தொடர்ந்து வெளிப்பட்டால், அடுத்த ஆண்டு நடைபெறும் சர்வதேச ரி – 20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு சிறந்த ஒன்றாக இருக்கும்.” – என்றார்.

 

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை!

சின்னத்திரை நடிகை சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வி.ஜே.வாக தனது பயணத்தை தொடங்கிய சித்ரா, பல்வேறு சீரியல்களில் நாயகியாக நடித்துள்ளார்.

சமீபத்தில் இவருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சென்னை நசரத்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தகவலறிந்து வந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அவரது தற்கொலை முடிவுக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நடிகை சித்ராவின் இந்த முடிவு அவரது ரசிகர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

‘சிறைச்சாலை கலவரம்’ – 165 பேரிடம் வாக்குமூலம்! இடைக்கால அறிக்கை இன்று சபைக்கு!!

மஹர சிறைச்சாலை மோதல் சம்பவம் தொடர்பில் சி.ஐ.டியினர் இதுவரை 165 இற்கும் மேற்பட்டோரிடம் வாக்குமூலங்களை பதிவுசெய்துள்ளனர்.

சிறைச்சாலை வைத்தியசாலையில் பணியாற்றிய வைத்தியர்கள், தாதியர்கள், சிறைக் கைதிகள் , சிறைச்சாலை அதிகாரிகள்ஆகியோரிடமே இவ்வாறு வாக்குமூலங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

மோதல் சம்பவத்தில் உயிரிழந்த 11 கைதிகளில் இதுவரை 7 பேரின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அதேவேளை, மஹர சிறைச்சாலை மோதல் சம்பவம் தொடர்பில் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவின் இடைக்கால அறிக்கை இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.நீதி அமைச்சர் அலிசப்ரியால் குறித்த அறிக்கை முன்வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

HNB Finance PLC இன் வெலிமடை கிளை புதிய இடத்திற்கு

19 வருடங்களாக இலங்கையிலுள்ள வர்த்தக பெருமக்களிடம் நன்மதிப்பு மிக்க நிதிச் சேவையை வழங்கிய HNB Finance PLC வெலிமடை கிளையை இல. 44, நுவரெலிய வீதி வெலிமடை என்ற விலாசத்தில் அமைந்துள்ள சகல வசதிகள் கொண்ட கட்டடத்திற்கு அண்மையில் மாற்றியுள்ளது.

HNB Financeஇன் புதிய வெலிமடை கிளையானது HNB Financeஇன் பிராந்திய முகாமையாளர் காமினி ஆரியசிங்க மற்றும் பிரதி பிராந்திய முகாமையாளர் குஷாந்த வீரசிங்க ஆகியோரின் தலைமையில் அண்மையில் திறந்து வைக்கப்பட்டதுடன் நாட்டில் நிலவும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு விதிமுறைகளுக்கு அமைய சுகாதார பிரிவினால் நடைமுறைப்படுத்தப்பட்ட தனிமைப்படுத்தல் விதிமுறைகளுக்கு ஏற்றபடி HNB Financeஇன் உயர்மட்ட பிரிவினரின் பங்களிப்புடன் எளிமையான விதத்தில் கிளை திறப்பு நிகழ்வு இடம்பெற்றது.

வெலிமடை கிளை புதிய இடத்திற்கு மாற்றப்பட்டு திறக்கப்பட்டமை குறித்து கருத்து தெரிவித்த HNB Finance PLC இன் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சமிந்த பிரபாத், ‘விசேடமாக விவசாய மற்றும் கால்நடை தொழிலை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரம் நிலவும் வெலிமடை நகரில் எமது சேவைகள் இந்த பிரதேசத்திலுள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக முன்னரை விட அதிகமான பங்களிப்பை வழங்கும் என நான் எதிர்பார்க்கின்றேன். அத்துடன் நீண்டகாலமாக வாடிக்கையாளர் பெருமக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ள நம்பிக்கைப் பிணைப்புடன் மிகவும் இடவசதிகளைக் கொண்ட புதிய அலுவலக சூழல் ஒன்றுக்கு செல்வதற்கு HNB Finance புதிதாக ஆரம்பித்த தங்கக் கடன் சேவைகள் மற்றும் ஏனைய நிதி சேவைகளுடன் அனைத்து நிதி சேவைகளையும் ஒரே கூரையின் கீழ் பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பம் எமது வாடிக்கையாளர்களுக்கு பெற்றுக் கொடுக்க எமக்கு சந்தர்ப்பம் உள்ளது.’ என தெரிவித்தார்.

2000ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட HNB FINANCE LIMITED இலங்கை மத்திய வங்கியின் நிதிச் சபையின் கீழ் பதிவு செய்யப்பட்ட உரிமம் பெற்ற நிதி நிறுவனமாகும். 48 கிளைகள் மற்றும் 21 சேவை மத்திய நிலையக் கொண்டு நாடு முழுவதிலும் அமைக்கப்பட்ட HNB FINANCE தற்போது புதிய வர்த்தகத் துறைகள் வரை விஸ்தீரமடைந்துள்ளது. சேமிப்பு, தங்கக் கடன், மேற்படிப்புக்கான கடன், வீட்டுக் கடன், தனிப்பட்டக் கடன், நீண்டகால வைப்பு வசதிகள் மற்றும் குத்தகை சேவை போன்ற நிதி திட்டங்களுக்கு மேலதிகமாக HNB FINANCE சிறிய மற்றும் நடுத்தர வியாபார (SME) கடன்களையும் வழங்குகிறது.

 

 

தொற்றாத நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதை உறுதிப்படுத்தும் SLCPI

உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு நாட்டில் தொற்றாத நோய்கள் (NCDs) பரவுவதை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகு சங்கம் முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்குமென இலங்கை மருந்தாக்கல் கைத்தொழில் சம்மேளம் (SLCPI) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. தொற்றாத நோய்களுக்கு மருந்து வழங்கும் நடவடிக்கை குறித்து மீண்டும் கவனம் செலுத்தியுள்ள சம்மேளனம் தமது உறுப்பினர்கள் நாட்டில் அதிகரித்துள்ள நீரிழிவு நோயாளர்களின் விகிதத்தை கட்டுப்படுத்துவதற்காக சுகாதார பழக்கவழக்கங்களை பின்பற்றுவதற்கும் கவனம் செலுத்துமாறும் அனைத்து இலங்கையர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடதத்தக்கது.

அண்மையில் நீரிழிவு நோய் இலங்கையில் சமூக நோயாக உருவெடுத்துள்ளது. உலக வங்கியின் அறிக்கை படி (2019) ஒட்டுமொத்த இலங்கையர்களில் சுமார் 11%மானோர் நீரிழிவு நோயினால் பாதிக்ப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளதுடன் உலகளாவிய ரீதியில் இந்த சுகாதார நிலையானது அதிகரித்துச் செல்வதை காணக்கூடியதாகவுள்ளது. அதன்படி நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கு தேவையான விதிமுறைகளை புரிந்து கொள்வதற்கும் மற்றும் இவ்வாறான தொற்றாத நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக வசதிகளை வழங்குவதற்கு நாட்டின் சுகாதார கட்டமைப்பை மேலும் பலப்படுத்த சர்வதேச நீரிழிவு தினம் சிறந்த சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளது.

SLCPIஇன் தலைவரான கஸ்தூரி செல்வராஜா இந்த வருடத்தின் ஆரம்பத்தில் சம்மேளனத்தின் வருடாந்த பொதுக் கூட்டத்தில் முதலாவது லொக்டவுன் காலப்பகுதியில் பெற்றுக் கொள்ளப்பட்ட அனுபவத்தை சுட்டிக்காட்டினார். தொற்றாத நோய் குறித்து கதைக்கும் போது நீரிழிவு என்பது குறிப்பிடத்தக்க அளவு பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும் அந்த நிலைமை இலங்கைக்குள் அதிகரித்துச் செல்வதையும் காணக்கூடியதாக இருப்பதாக அவர் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், “இலங்கையில் தொற்றாத நோய்கள் ஏற்படுவதை தடுப்பதற்கும் அதற்கு சிகிச்சை அளிப்பதற்கும் எமது ஒத்துழைப்புக்கள் அரசாங்கத்திற்கு அவசியமாகும். இலங்கை சுகாதார கட்டமைப்பிலுள்ள பிரதான பிரிவுகளாக கருதப்படும் எமது மக்கள் மத்தியில் சிறந்த சுகாதார பழக்கங்கள் மற்றும் நெறிமுறைகள் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும். நாட்டில் நாளுக்கு நாள் நீரிழிவு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு செல்லும் நிலை காணப்படுகின்றது. அதனால் அன்றாடம் அவர்கள் சிகிச்சை பெறுவதும் அதிகரிக்கும்.” என தெரிவித்தார்.

இந்த நீரிழிவு நோயிலுள்ள பாரதூரம் மற்றும் அது பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக ‘சுகப்படுத்துவதற்கு முன்னர் தவிர்த்துக் கொள்ளுதல்’ போன்ற முறைமைகளை பின்பற்ற வேண்டுமென அவர் விசேடமாக சுட்டிக்காட்டினார். தொற்றாத நோய் ஏற்படுவதற்கான அபாயத்தை கட்டுப்படுத்துவதற்காக நாள்தோறும் உடற்பயிற்சி மற்றும் போஷாக்கு நிறைந்த உணவுப் பழக்கம் (உதாரணம்: கலோரி அளவு குறைந்த உணவு) போன்ற ஆரோக்கியமான வாழ்க்கையை பின்பற்றுவதை சர்வதேச நீரிழிவு சங்கம் பரிந்துரை செய்கிறது. இவ்வாறான வாழ்க்கை முறையை பின்பற்றும் தனி நபர்கள் உலகளாவிய ரீதியில் பதிவாகும் நீரிழிவு நோய்களில் இருந்து 90% வீதம் வரை உள்ள இரண்டாம் நிலை நீரிழிவு (Type 2 Diabetes) நோய் ஏற்படும் அபாயத்திலிருந்து குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளதாக ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விசேடமாக இவ்வாறான கொவிட் தொற்றுநோய்க்கு ஈடுகொடுக்கக் கூடிய சுகாதார கட்டமைப்பை இடையூறுகளும் இன்றி மருந்துகளை விநியோகிக்கும் முறையொன்றுடன் இணைந்து சுகாதார மேம்பாடு மற்றும் நோயைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக SLCPI உறுப்பினர்கள் கவனம் செலுத்தியுள்ளனர். கொவிட்-19 காரணமாக பொருட்கள் விநியோத்தை ஒழுங்குபடுத்துவதற்காக ஏற்பட்டள்ள இடையூறுகளுக்கு மத்தியில் மருந்து விநியோக வலைப்பின்னல் எவ்வித தடைகளும் இன்றி தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக SLCPI உறுப்பினர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். அதன்படி திட்டமிடப்பட்ட வலைப்பின்னல் நடவடிக்கையில் தொற்றாத நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காகவும் மற்றும் நோயைக் கட்டுப்படுத்துவதற்காகவும் ஒத்துழைப்புக்களை வழங்கும் வகையில் வியூகங்கள் வகுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் நீரிழிவு மற்றும் தொற்றாத நோயாளர்களின் அத்தியாவசிய மருந்துகளை அவர்களது வீட்டிற்கே கொண்டுவந்துகொள்வதற்கு தேவையான விதத்தில் Online Pharmacies மற்றும் வீடுகளுக்கு விநியோகித்தல் போன்ற முறைமைகள் அறிமுகம் செய்யப்பட்டன. இதற்கு முன்னர் இருந்து இந்த நோயினால் பாதிக்கப்பட்ட நபர்கள் கொவிட்-19 தொற்றால் மிகவும் அவதானமாக இருக்க வேண்டுமென புரிந்துகொள்ளப்பட்டுள்ளதுடன் இந்த மருந்து விநியோக வசதிகள் மூலம் இந்த அவதானத்தைக் குறைந்துகொள்ள முடியும்.

மீண்டும் கொவிட்-19 தொற்று அதிகரித்துச் செல்வதுடன் SLCPI மற்றும் அதன் உறுப்பினர்கள் நீரிழிவு நோய் குறித்து எவ்வித இடையூறுகளும் இல்லாமல் மருந்து விநியோத்தை உறுதிப்படுத்துவதற்காக அவர்களது அர்ப்பணிப்பு குறித்து கவனம் செலுத்தியுள்ளனர். “சம்மேளனம் மற்றும் அதன் உறுப்பினர்கள் தொடர்ச்சியாக விநியோக சங்கிலி நடவடிக்கையின் போது தொற்றாத நோய்களுக்காக முக்கியத்துவம் அளித்து செயற்படுகிறார்கள். இலங்கையில் நீரிழிவு நோய்க்கு உரிய நேரத்தில் சிகிச்சைப் பெற்றுக் கொள்வதை உறுதி செய்துகொள்வது மிகவும் முக்கியமானது.” என கஸ்தூரி செல்வராஜா தெரிவித்துள்ளார்.

‘சிறைச்சாலை கலவரம்’ – 145 பேரிடம் வாக்குமூலம்! இடைக்கால அறிக்கை இன்று சபைக்கு!!

மஹர சிறைச்சாலை மோதல் சம்பவம் தொடர்பில் சி.ஐ.டியினர் இதுவரை 145 இற்கும் மேற்பட்டோரிடம் வாக்குமூலங்களை பதிவுசெய்துள்ளனர்.

சிறைச்சாலை வைத்தியசாலையில் பணியாற்றிய வைத்தியர்கள், தாதியர்கள், சிறைக் கைதிகள் , சிறைச்சாலை அதிகாரிகள்ஆகியோரிடமே இவ்வாறு வாக்குமூலங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

மோதல் சம்பவத்தில் உயிரிழந்த 11 கைதிகளில் இதுவரை 7 பேரின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அதேவேளை, மஹர சிறைச்சாலை மோதல் சம்பவம் தொடர்பில் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவின் இடைக்கால அறிக்கை இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.நீதி அமைச்சர் அலிசப்ரியால் குறித்த அறிக்கை முன்வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

செய்தி

தமிழக முதல்வராக பதவியேற்றார் ஜோசப் விஜய்!

0
தமிழக முதல்வராக பதவியேற்றார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை 10 மணியளவில் பதவியேற்பு விழா தொடங்கியது. வந்தே மாதரம் பாடல் இசைக்க பதவியேற்பு...

தவெக முதற்கட்ட அமைச்சரவை பட்டியல் வெளியீடு

0
தமிழக வெற்றிக் கழக அரசின் தவெக முதற்கட்ட அமைச்சர் பட்டியலை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் கீழ்காணும் பெயர்கள் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளன: புஸ்ஸி என்.ஆனந்த் ஆதவ் அர்ஜுனா கே.ஜி.அருண்ராஜ் கே.ஏ.செங்கோட்டையன் வெங்கடரமணன் நிர்மல்குமார் ராஜ்மோகன் டி.கே.பிரபு கீர்த்தனா 120 எம்எல்ஏக்களின் ஆதரவுக் கடிதங்களை ஆளுநரிடம் விஜய் நேற்று...

மரக்கறி விலைப்பட்டியல் (10.05.2026)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (10) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...