Home Blog Page 3736

தேசிய மெய்வல்லுநர் போட்டிகளில் மலையக வீரர்கள்!

கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் இம்மாதம் 26ஆம் திகதியிலிருந்து 29ஆம் திகதிவரை நடைபெறவுள்ள தேசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டிகளில் பங்குபற்றுவதற்கு தகுதி உடையவர்களின் குறும்பட்டியலை இலங்கை மெய்வல்லுநர் சங்கம் அறிவித்துள்ளது.

இலங்கையின் முன்னணி மெய்வல்லுநர்கள் பங்குபற்றவுள்ள இந்தப் போட்டித் தொடரில் சுமார் 300 வீர வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர்.

கடந்த காலங்களில் திறமைகளை வெளிப்படுத்திய வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தைச் சேர்ந்த 23 தமிழ் பேசுகின்ற வீரர்கள் குறித்த குறும்பட்டியலில் இடம்பெற்றுள்ளமை சிறப்பம்சமாகும். இதில் 16 வீரர்களும் 7 வீராங்கனைகளும் இடம்பெற்றுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இவ்வருடம் இதுவரை எந்தவொரு தேசிய ரீதியிலான மெய்வல்லுநர் போட்டிகளும் நடைபெறவில்லை. முன்னதாக ஒக்டோபர் மாதம் நடைபெறவிருந்த தேசிய மெய்வல்லுநர் குழாத்துக்கான தகுதிகாண் போட்டிகள் மற்றும் தேசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகள் என்பன ஒத்திவைக்கப்பட்டன.

 

ந்த நிலையில், டிசம்பர் மாதம் முற்பகுதியில் நடத்தப்படவிருந்த இந்த வருடத்துக்கான தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இம்மாதம் 26ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

கொரோனா தொற்றுநோய் காரணமாக இவ்வருட தேசிய மெய்வல்லுநர் போட்டிகளில் திறமைவாய்ந்த மெய்வல்லநர்களை மாத்திரம் பங்குபற்றச் செய்வதற்கு சங்கம் தீர்மானித்துள்ளது.

குறித்த தொடரில் பங்குபெற தகுதிபெற்ற வீரர்களின் பெயர் பட்டியலை இலங்கை மெய்வல்லுநர் சங்கம் அண்மையில் வெளியிட்டிருந்தது.

இலங்கை மெய்வல்லுநர் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற சுப்பர் குழுவில் இடம்பெற்றுள்ள 26 வீரர்களும், தேசிய குழுவில் இடம்பெற்றுள்ள 66 வீரர்களும் இடம்பிடித்துள்ளனர்.

தேசிய மட்டப் போட்டிகளில் அண்மைக்காலத்தில் திறமைகளை வெளிப்படுத்திய வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் தமிழ் பேசுகின்ற வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.

இதில் ஆண்களுக்கான 10 ஆயிரம் மீற்றரில் தேசிய சம்பியனாக வலம்வருகின்ற மலையகத்தைச் சேர்ந்த குமார் சண்முகேஸ்வரன் ஆண்களுக்கான 5,000 மீற்றர் மற்றும் 10,000 மீற்றர் போட்டிகளுக்கான வீரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

இவருடன் குறித்த இரண்டு போட்டிகளிலும் அண்மைக்காலமாக பிரகாசித்து வருகின்ற மற்றுமொரு மலையக வீரரான வொட்சனும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

மற்றுமொரு மலையக வீரரான சி. அரவிந்தன் மற்றும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மொஹமட் நிப்ராஸ் ஆகிய இருவரும் ஆண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதில் மொஹமட் நிப்ராஸ் ஆண்களுக்கான 1,500 மீற்றர் ஓட்டப் போட்டியிலும் களமிறங்கவுள்ளார்.

ஆண்களுனக்கான 100 மீற்றரில் கிழக்கின் நட்சத்திர வீரரான மொஹமட் அஷ்ரப், பாசில் உடையார் மற்றும் மொஹமட் சபான் ஆகிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இதில் ஆண்களுக்கான 200 மீற்றரில் பாசில் உடையார் மற்றும் மொஹமட் சபானுடன் மற்றுமொரு கிழக்கு மாகாண வீரரான ராஜாஸ்கானும் இடம்பெற்றுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

ஆண்களுக்கான 400 மீற்றர் தடை தாண்டல் போட்டியில் மன்னார் பாத்திமா மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த என்.எம் நசாத்கான் இந்தக் குறும்பட்டியலில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

மைதான நிகழ்ச்சிகளைப் பொறுத்தமட்டில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஏ. புவிதரன் மற்றும் எஸ். சுகிகேரதன் ஆகிய இருவரும் கோலூன்றிப் பாய்தல் போட்டிகளில் பங்குபெற தேர்வாகியுள்ளனர். இதில் மற்றுமொரு வட மாகாண வீரரான ஆர்.பி முருகய்யாவும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த வருடம் நடைபெற்ற தேசிய கனிஷ்ட மெய்வல்லுநரில் 20 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான நீளம் பாய்தலில் தங்கப் பதக்கம் வென்று குறித்த வயதுப் பிரிவில் அதிசிறந்த வீரராகவும், வருடத்தின் அதிசிறந்த கனிஷ்ட மெய்வல்லுநராகவும் தெரிவாகிய, வத்தளை லைசியம் சர்வதேச பாடசாலை மாணவரான கமல் ராஜ், தேசிய மெய்வல்லுநர் தொடருக்கான குறும்பட்டியலில் முதல்தடவையாக இடம்பெற்றுள்ளார்.

மறுபுறத்தில் ஆண்களுக்கான முப்பாய்ச்சலில் தேசிய சம்பியனாக வலம்வந்து கொண்டிருக்கின்ற சப்ரின் அஹமட், தட்டெறிதலில் முதல் நிலை வீரர்களில் ஒருவராக வலம்வந்து கொண்டிருக்கின்ற கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இஸட்.ரி.எம் ஆஷிக் மற்றும் ஆண்களுக்கான டெகத்லனில் பிரகாசித்து வருகின்ற மொஹமட் அசாம் உள்ளிட்ட வீரர்களும் தேசிய மெய்வல்லுநர் தொடருக்கான குறும்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

பெண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் கண்டி விஹார மகாதேவி மகளிர் கல்லூரி மாணவி சபியா யாமிக்கும், பெண்களுக்கான குண்டு போடுதலில் களுத்துறையைச் சேர்ந்த எப்.எஸ் றிசாட்டும் இடம்பெற்றுள்ளனர்.

பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் தேசிய சம்பியனான அனித்தா ஜெகதீஸ்வரன் மற்றும் என். டக்சிதா, சி. தீபிகா, சி. ஹெரினா மற்றும் வி. விசோபிதா ஆகிய ஐந்து வீராங்கனைகளும் கோலூன்றிப் பாய்தலுக்கான குறும்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

தேசிய மெய்வல்லுநர் தொடருக்காக அறிவிக்கப்பட்ட குறும்பட்டியலில் இடம்பெறாதவர்கள், போட்டியில் பங்குபற்ற விரும்பினால் இம்மாதம் 8ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.

விண்ணப்பிப்போரின் அண்மைக்காலங்களில் வெளிப்படுத்திய திறமைகள் மற்றும் பெறுபேறு தராதரங்களுக்கு அமைய மட்டுப்படுத்தப்பட்டவர்கள் மாத்திரம் தெரிவு செய்யப்படுவார்கள் என இலங்கை மெய்வல்லுநர் சங்கம் அறிவித்துள்ளது.

குழந்தை பருவ மேம்பாட்டிற்கு முதலீடு செய்யும் பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்கள்

உலக சிறுவர் தினம் 2020ஐ முன்னிட்டு 21 பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்களின் (RPC’s) உறுப்பினர்களுக்குச் சொந்தமான தோட்டங்களில் 35 குழந்தைகள் மேம்பாட்டு நிலையங்களை (CDC’s) அமைப்பதற்கான உறுதிமொழியை பெருந்தோட்ட துரைமார் சங்கம் அளித்துள்ளது. இதன்படி, பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்களிலுள்ள மொத்த குழந்தைகள் மேம்பாட்டு நிலையங்களின் எண்ணிக்கை 258ஆக அதிகரிக்கும். இந்த நிலையங்களை அமைப்பதற்கு பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்களின் தொழிற்சங்கங்கள் மற்றும் அரசாங்கத்தின் முத்தரப்பு அமைப்பான பெருந்தோட்ட மனித மேம்பாட்டு அறக்கட்டளை (PHDT) மூலம் மேற்கொள்ளப்படவுள்ளது.

ஆரம்பத்தில் குழந்தைகளுக்கான பராமரிப்பு நிலையங்களை 2015ஆம் ஆண்டில் மாத்திரமே ஆரம்பிக்கப்பட்டபோதிலும், தற்போது இதுபோன்ற 223 நிலையங்களில் 30,000க்கும் அதிகமான குழந்தைகள் உள்ளனர். இங்கு தகுதிவாய்ந்த ஆசிரியர்களால் இவர்கள் கவனித்துக் கொள்ளப்படுகிறார்கள், இவர்கள் அனைவரும் குழந்தை பருவ வளர்ச்சி குறித்து டிப்ளோமா தகைமை பெற்றவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

“எமது கண்ணோட்டம் என்னவென்றால், எந்தவொரு குழந்தையும் ஒதுக்கப்படுவதில்லை, எங்களது தோட்டங்களில் குழந்தைகளின் ஆரம்பகால வளர்ச்சிக்காக நாங்கள் மேற்கொண்டுள்ள அனைத்து முதலீடுகளினால் குழந்தைகள் சிறப்பாக வளரவும், அவர்களது பெற்றோரிடம் கிடைக்காத அரவணைப்பையும் நாம் வழங்குகின்றோம்.” என பெருந்தோட்ட துரைமார் சங்கத்தின் தலைவர் பாத்திய புலுமுல்ல தெரிவித்துள்ளார்.

“அர்ப்பணிப்புள்ள எமது அதிகாரிகளின் மிகச்சிறந்த முயற்சிகள் மூலம் எமது மேம்பட்ட குழந்தை பராமரிப்பு நிலையங்களில் மேற்கொள்ளப்படும் பணிகள், ஆரம்பத்தில் பாதுகாப்பு கட்டமைப்பிலிருந்து பெரும் முன்னேற்றத்தைக் குறிக்கிறது. பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்களின் தாராளமான முதலீடுகளால் ஆதரிக்கப்படும் எமது தோட்டங்களில் குழந்தை மேம்பாடு மற்றும் பாதுகாப்பு எவ்வளவு தூரம் முன்னோக்கி வந்துள்ளது என்பதற்கு இதுவொரு சான்றாகும். எமது இளம் பிள்ளைகளின் வளர்ச்சியை தொடர்ந்து ஊக்குவிப்போம் – எமது எதிர்கால முதலீடு என்பது நம் குழந்தைகளின் முதலீடாகும்.” என அவர் மேலும் தெரிவித்தார்.

“இந்த திறமையான மற்றும் தகுதிவாய்ந்த அதிகாரிகள் CDCsகளை நடத்துகின்றனர், மேலும் இந்த ஊழியர்களில் 365 அதிகாரிகளும் தங்களது கட்டுப்பாட்டிலுள்ள இளைஞர் சமூகம் மற்றும் கல்வி ரீதியாக வளர்ச்சியடைவதை உறுதி செய்வதற்காக சிறுவர் மேம்பாட்டு மதிப்பீடுகளை மேற்கொள்ள பயிற்சி பெற்றவர்கள் என PHDT தெரிவித்துள்ளது.

டிப்ளோமா பயிற்சி வகுப்புக்களை நடத்துவதற்கும், குழந்தைகள் மேம்பாட்டில் தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட டிப்ளோமாக்களை வழங்குவதற்கும் PHDTஇல் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டில், புதிதாக டிப்ளோமா கற்கை நெறியை வைத்திருந்தவர்கள் 672 காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும், ஆரம்பகாலத்தில் குழந்தை பருவ மேம்மாட்டுத் திட்டமும் தங்கள் குழந்தைகளின் உணர்ச்சி, சமூக மற்றும் உடல் வளர்ச்சியில் பெற்றோரின் பங்கைக் குறித்தது. RCPக்கள், PHDT மூலம் தோட்டத் தொழிலாளர்களின் குழந்தைகளை மேலும் பாதுகாக்க பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு திட்டங்களை செயற்படுத்தினர். 57,000க்கும் அதிகமான பெற்றோர்கள் இதுவரை இந்த விழிப்புணர்வு திட்டத்திலிருந்து பயனடைந்துள்ளனர், இந்த விழிப்புணர்வு திட்டத்தில் அறிவு, திறன் மேம்பாடு மற்றும் வீட்டு வன்முறைகளைத் தடுப்பது உள்ளிட்ட ஐந்து பகுதிகளைக் கொண்டுள்ளமை குறிப்பிடதத்தக்கது.

1995இல் தனியார்மயமாக்கல் மற்றும் பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்களின் உரிமை, ஆகியன குழந்தைகளின் மேம்பாட்டு வளர்ச்சியை மேற்கொள்வதற்கான திட்டங்களில் பெருந்தோட்டத்துறை பெரும் முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. ஆரம்பத்தில் ‘பிள்ளைமடு’ பாதுகாப்பு வசதிகள் பெருந்தோட்டப் பகுதிகளில் மேம்படுத்தப்பட்டன. அதன் பின்னர் RPC’s மற்றும் PHDT ஆகியவற்றின் செல்வாக்கால் சிறுவர் மேம்பாட்டு நிலையங்கள் அமைக்கப்பட்டன.

பெருந்தோட்டத் துறையில் குழந்தைகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான குறிக்கோளுடன் CDC’sகளை கட்டமைக்கும் மற்றும் புதுப்பிக்கும் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2015ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆரம்பகால குழந்தை பருவ மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு அங்கமாக, RPC’s களின் முதலீடு மற்றும் அயராத முயற்சிகள் புதிதாகக் கட்டப்பட்ட 65 மற்றும் புனரமைக்கப்பட்ட 158 மத்திய நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. தோட்டங்கள் முழுவதிலும் பராமரிப்புக்காக 30,000 குழந்தைகள் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பூண்டுலோயா கீழ்பிரிவு தோட்டத்தில் டெங்கு பரவும் அபாயம்!

கொத்மலை பிரதேச சபைக்குட்பட்ட வடக்கு பூண்டுலோயா கீழ்ப்பிரிவு தோட்டத்தில் குப்பைக்குழிகள் உரிய வகையில் பராமரிக்கப்படாமையால் டெங்கு நோய் பரவுவதற்கான சூழல் அதிகரித்துள்ளதாக தோட்டமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

குறித்த தோட்டம் மஸ்கன்ஸ் எனும் தனியார் கம்பனியின் கீழ் இயங்குவதால் இத்தோட்டத்தை உரியமுறையில் தோட்ட நிர்வாகம் பராமரிக்காத சூழ்நிலை காணப்படுகின்றது. மேலும் தோட்ட நிர்வாகத்தால் குப்பைகள் கொட்டுவதற்கோ அல்லது கொட்டப்பட்ட குப்பைகளை முறையாக அகற்றுவற்கோ எவ்வித வழிவகைகளையும் செய்யாதிருப்பதால் வீசப்பட்ட குப்பைகளை நிரம்பி கிடப்பதோடு துர்நாற்றமும் வீசத்தொடங்கியுள்ளது.

மேலும் குறித்த குப்பைக்குழியால் நுளம்புகள் அதிகரித்துள்ளதாக தோட்ட மக்கள் குறிப்பிடுவதோடு அடிக்கடி நோய்வாய்ப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

காலநிலை மாறி மாறி நிலவுவதால் டெங்கு நுளம்பு பெருகிவிடுமோ என்ற அச்சத்தில் வாழ்கின்றனர்.எனவே தோட்டநிர்வாகம் தலையிட்டு முறையாக குப்பைக்குழியை பராமரிக்க நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு பூண்டுலோயா மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

தகவல் – நீலமேகம் பிரசாந்த்

நாட்டில் மேலும் 797 பேருக்கு கொரோனா! தொற்றாளர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்தை தாண்டியது!!

நாட்டில் மேலும் 797 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பேலியகொடை கொத்தணிமூலம் 567 பேருக்கும் சிறைச்சாலை கொத்தணிமூலம் 230 பேருக்குமே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.

அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்து 378 ஆக அதிகரித்துள்ளது.

 2 ஆவது அலைமூலம் (மினுவாங்கொட, பேலியகொட,சிறைச்சாலை கொத்தணிகள்) இதுவரையில் 25 ஆயிரத்து 882  பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

ஆஸி. அணிக்கு ஆறுதல் வெற்றி! ரி – 20 தொடரை வென்றது இந்தியா!

இந்தியாவுக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஆறுதல் வெற்றியை பெற்றது.

விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. ஒருநாள் போட்டி தொடரை 1-2 என்ற கணக்கில் பறிகொடுத்த இந்திய அணி அதன்பின்னர் 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டியில் பங்கேற்றது.

இதில் கான்பெர்ராவில் நடந்த முதலாவது 20 ஓவர் போட்டியில் 11 ரன்கள் வித்தியாசத்திலும், சிட்னியில் நேற்று முன்தினம் நடந்த 2அவது போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியதுடன் 2-0 என்ற கணக்கில் ஆதிக்கம் செலுத்தியது.

இந்த நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சிட்னி நகரில் இன்று நடைபெற்றது. இதில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங்கை துவக்கிய ஆஸ்திரேலிய அணியில் துவக்க வீரர் ஆரோன் பிஞ்ச் ரன் எதுவும் இன்றி நடையைக் கட்டினார். மற்றொரு துவக்க வீரரான மேத்யூ வேட் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

3-வது விக்கெட்டுக்கு களம் இறங்கிய ஸ்மித் 24 ரன்களில் வெளியேறினார். பின்னர் கிளென் மேக்ஸ்வெல் உடன் ஜோடி சேர்ந்த வேட் இந்திய அணியின் பந்து வீச்சை விளாசித்தள்ளினார். 53- பந்துகளில் 7 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் உள்பட 80 ரன்கள் அடித்த நிலையில், வேட் ஆட்டமிழந்தார்.

மறுமுனையில் அதிரடி காட்டிய மேக்ஸ்வெல் 54 ரன்களில் நடராஜன் பந்தில் வெளியேறினார். ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 186- ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 187-ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி பேட்டிங்கை துவக்கியது.

இந்திய அணியின் துவக்க வீரர் கேஎல் ராகுல் ரன் எதுவும் இன்றி வெளியேறி அதிர்ச்சி அளித்தார். இதையடுத்து, 3-வது விக்கெட்டுக்கு களம் இறங்கிய கேப்டன் விராட் கோஹ்லி அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். எனினும் மறு முனையில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன.

ஷிகர் தவான் ( 28 ரன்கள்), சஞ்சு சாம்சன் (10 ரன்கள்) ஷ்ரேயாஸ் ஐயர் (0) ஹர்திக் பாண்ட்யா (20 ரன்கள்) என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால், விராட் கோலி தனி ஒருவராக வெற்றிக்கு போராட வேண்டிய நிலை ஏற்பட்டது. அதிரடியாக ஆடி வந்த விராட் கோலி 18.1 ஓவரில் 85 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். 61 பந்துகளை சந்தித்த விராட் கோலி 4 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் விளாசினார். விராட் கோலி ஆட்டமிழந்ததும் இந்திய அணியின் வெற்றிக்கனவும் தகர்ந்து போனது.

20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணியால் 174 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. இதன் மூலம் 12 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வென்றது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி 20 தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றது.

கொரோனாவால் கொழும்பில் பச்சிளம் குழந்தை உயிரிழப்பு!

பிறந்து 20 நாட்களேயான குழந்தையொன்று கொரோனா வைரஸ் தொற்றால் இன்று உயிரிழந்துள்ளது.

கொழும்பு, தொட்டலங்க பகுதியைச் சேர்ந்த குழந்தையொன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

கடும் காய்ச்சல் காரணமாக குறித்த குழந்தை நேற்றிரவு கொழும்பு சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. எனினும், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தது. பிசிஆர் பரிசோதனையில் குழந்தைக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையின் முதலாவது காற்றாலை மின் உற்பத்தி நிலையம் திறந்து வைப்பு!

நாட்டின் தேசிய மின் கட்டமைப்பில் 103.5 மெகாவொட் திறனை இணைக்கும் மன்னார் தம்பபவனி இலங்கையின் முதலாவது காற்றாலை மின் உற்பத்தி நிலையம் இன்று (2020.12.08) பிரதமர் மஹிந்த ராஜபக்சவால் திறந்து வைக்கப்பட்டது.
சர்வ மதத் தலைவர்களின் ஆசீர்வாதத்தை பெற்றுக் கொண்ட பிரதமர் நினைவு பலகையை திறந்து வைத்தார்.
அதனை தொடர்ந்து இலங்கையின் முதலாவது காற்றாலை மின் உற்பத்தி நிலையமான தம்பபவனி மக்கள் பாவனைக்காக கையளிக்கப்படும் வகையில் காற்றாடிகள் செயற்படுத்தப்பட்டன.
மன்னார் முதல் நடுகுடா வரையான 30 கிலோமீற்றர் அடி சக்தி பரிமாற்ற அமைப்புடனான இந்த மின் உற்பத்தி நிலையத்தின் ஊடாக நடுகுடா முதல் அநுராதபுரம் வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் உள்ளிட்ட முழு மின் கட்டமைப்பிற்கும் 103.5 மெகாவொட் திறன் இணைக்கப்படவுள்ளது.
மன்னார் கடற்கரையில் 13 கிலோமீற்றர் தூரத்திற்கு, 150 ஹெக்டேயர் நிலப்பரப்பில் இந்த மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆண்டிற்கு 400 மில்லியன் மின் அலகுகளை உற்பத்தி செய்ய எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான குடும்பங்களுக்கு மின்சாரம் விநியோகிக்கும் வகையிலான இந்த தம்பபவனி காற்றாலை மின் உற்பத்தி நிலையமானது, இதுவரை அமைக்கப்பட்ட மிகப்பாரிய புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி நிலையமாகும்.

சரத்குமாருக்கு கொரோனா தொற்று!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகிறது. விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், சினிமா பிரபலங்கள் என யாரையும் கொரோனா விட்டு வைக்கவில்லை.

இந்நிலையில் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும் நடிகருமான சரத்குமாருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக அவரது மனைவி ராதிகா சரத்குமார் மற்றும் மகள் வரலட்சுமி சரத்குமார் இருவரும் உறுதி செய்து இருக்கிறார்கள்.

மேலும் ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

அரசியல் களத்துக்கு வரும் ரஜினி அண்ணனிடம் ஆசி பெற்றார்

நடிகர் ரஜினிகாந்த் அடுத்த மாதம் தனிக்கட்சி தொடங்கி அரசியலில் குதிக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் ரஜினிகாந்த் திடீரென்று நேற்று பெங்களூரு புறப்பட்டு சென்றார். அங்கு தனது அண்ணன் சத்ய நாராயணாவை சந்தித்து வணங்கி புதிதாக கட்சி தொடங்குவதற்கு ஆசி பெற்றார்.

ரஜினி வருகையை அறிந்த ரசிகர்கள் பெங்களூரு வீட்டின் முன்னால் திரண்டு வாழ்த்து கோஷமிட்டனர். அவர்களை பார்த்து வீட்டின் மாடியில் நின்றபடி ரஜினி கையசைத்தார். வருகிற 12 ஆம் திகதி ரஜினிகாந்தின் பிறந்த நாள் ஆகும். அன்றைய தினம் பெங்களூருலேயே தங்கி இருப்பார் என்று தெரிகிறது.

ரஜினி நடிக்கும் அண்ணாத்த படப்பிடிப்பை வருகிற 15ஆம் திகதி ஐதராபாத்தில் மீண்டும் தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளனர். படப்பிடிப்பில் ரஜினியும் கலந்து கொண்டு நடிக்கிறார். ஜனவரியில் இருந்து முழுநேர அரசியலில் ஈடுபட உள்ளதால் இந்த மாத இறுதிக்குள் அண்ணாத்த படத்தில் தனது சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தையும் படமாக்கி முடிக்கும்படி இயக்குனர் சிவாவை ரஜினி அறிவுறுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.

அண்ணாத்த ரஜியின் கடைசி படமாக இருக்கும் என்றும் அரசியலுக்கு வருவதால் இனிமேல் புதிய படங்களில் நடிக்க மாட்டார் என்றும் கூறப்படுகிறது.

உலகில் முதலில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 90 வயது பாட்டி!

இங்கிலாந்தில் பைசர் மற்றும் பயோடெக் நிறுவனம் இணைந்து தயாரித்த தடுப்பூசி பொது மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. உலகில் முதலில் கொரோனா தடுப்பூசியை 90 வயது பாட்டி போட்டுக்கொண்டார்.

கொரோனா வைரஸ் நோய்க்கு எதிரான தடுப்பு மருந்தை தயாரிக்கும் ஆய்வுப்பணிகள் பல்வேறு உலக நாடுகளில் நடந்து வருகிறது. சோதனை முயற்சியில் சில நாடுகள் தடுப்பூசியை மனிதர்களின் உடலில் செலுத்தி ஆய்வு நடத்தி வருகின்றன.

இந்த நிலையில் இங்கிலாந்து அரசு முதன் முதலில் கொரோனா தடுப்பூசியின் பயன்பாட்டுக்கு அண்மையில் ஒப்புதல் அளித்தது. அமெரிக்காவின் பைசர் நிறுவனமும், ஜெர்மனியின் பயோஎன்டெக் நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி 95 சதவிகிதம் செயல் திறன் கொண்டது என அறிவிக்கப்பட்டு உள்ளது.

பைசர் மற்றும் பயோஎன்டெக் நிறுவனங்கள் இணைந்து தயாரித்த இந்தத் தடுப்பூசி விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என இங்கிலாந்து அரசு அறிவித்திருந்தது. இரண்டு டோஸ்களாக வழங்கப்படவேண்டிய இந்த தடுப்பூசியின் நான்கு கோடி டோஸ்களை இங்கிலாந்து ஏற்கனவே ஆர்டர் செய்துள்ளது.

இந்த நிலையில் இங்கிலாந்தில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தற்போது தொடங்கியுள்ளது. 90 வயதான மார்கரெட் கீனன் என்பவருக்கு முதலில் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

வழக்கமாக தடுப்பூசி ஒன்று உற்பத்தி செய்ய உத்தேசிக்கப்பட்டு, ஆராய்ச்சி நிலையில் இருந்து பயன்பாட்டுக்கு வர 10 ஆண்டுகள் வரை ஆகும். ஆனால் பைசர் மற்றும் பயோஎன்டெக் தயாரித்துள்ள இந்த கொரோனா வைரஸ் தடுப்பூசி வெறும் பத்தே மாதங்களில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்தில் உள்ள மையங்களில் 80 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் சில சுகாதார மற்றும் பராமரிப்பு ஊழியர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.இந்த தடுப்பூசி திட்டம் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களைப் பாதுகாத்து வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இங்கிலாந்தில் வடக்கு அயர்லாந்தை சேர்ந்த 90 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பைசர்-பயோஎன்டெக் கொரோனா தடுப்பூசியை பெற்ற முதல் நபராக ஆகியுள்ளார்.

வடக்கு அயர்லாந்தின் என்னிஸ்கில்லன் பகுதியைச் சேர்ந்த மார்கரெட் கீனன் என்ற 90 வயது மதிக்கத்தக்க பெண், முதல் கொரோனா தடுப்பூசியை பெற்றுள்ளார். இவருக்கு தடுப்பூசி கோவென்ட்ரியில் இருக்கும் பல்கலைக்கழக மருத்துவமனையில் போடப்பட்டுள்ளது.

இது குறித்து மார்கரெட் கீனன் கூறுகையில், கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போட்ட முதல் நபராக இருப்பதை நான் மிகவும் பாக்கியமாக கருதுகிறேன். ஏனென்றால் புதிய ஆண்டில் எனது குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் நேரத்தை செலவழிக்க நான் செல்ல முடியும். என்னைப் பெரிதும் கவனித்துக்கொண்ட தேசிய சுகாதார ஊழியர்களுக்கு நான் நன்றிசொல்லி முடித்துவிட முடியாது என்று தெரிவித்துள்ளார்.

சினிமா

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

செய்தி

தமிழக முதல்வராக பதவியேற்றார் ஜோசப் விஜய்!

0
தமிழக முதல்வராக பதவியேற்றார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை 10 மணியளவில் பதவியேற்பு விழா தொடங்கியது. வந்தே மாதரம் பாடல் இசைக்க பதவியேற்பு...

தவெக முதற்கட்ட அமைச்சரவை பட்டியல் வெளியீடு

0
தமிழக வெற்றிக் கழக அரசின் தவெக முதற்கட்ட அமைச்சர் பட்டியலை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் கீழ்காணும் பெயர்கள் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளன: புஸ்ஸி என்.ஆனந்த் ஆதவ் அர்ஜுனா கே.ஜி.அருண்ராஜ் கே.ஏ.செங்கோட்டையன் வெங்கடரமணன் நிர்மல்குமார் ராஜ்மோகன் டி.கே.பிரபு கீர்த்தனா 120 எம்எல்ஏக்களின் ஆதரவுக் கடிதங்களை ஆளுநரிடம் விஜய் நேற்று...

மரக்கறி விலைப்பட்டியல் (10.05.2026)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (10) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...