Home Blog Page 3737

21,258 பேர் குணமடைவு! 7,180 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சை!!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும்  454 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்து 258 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் 7 ஆயிரத்து 180 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 142  பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்து 580 ஆக அதிகரித்துள்ளது.

ஆயுர்வேத மருந்தை பெறுவதற்காக சமூக இடைவெளியை மறந்து அணிதிரண்ட மக்கள்!

கொரோனா வைரஸ் தொற்றுக்கான ஆயுர்வேத மருந்து எனக் கூறப்படும் மருத்தை பெற்றுக்கொள்வதற்கு பெருமளவானவர்கள் திரண்டதால் கேகாலை பகுதியில் பெரும் நெருக்கடி நிலைமை இன்று உருவானது.
சமூகஇடைவெளியை பின்பற்றாது, ஆயுர்வேத மருந்தை பெற்றுக்கொள்வதற்காக மக்கள் திரண்டதால் பொலிஸ் பாதுகாப்பும் போடப்பட்டது.
கொரோனா வைரஸ் தொற்றுக்கான ஆயுர்வேத மருந்தொன்று கண்டுபிடிக்கப்பட்டு, அந்த மருந்து தொடர்பிலான மூன்றாம் கட்ட ஆய்வுகள் தற்போது நடத்தப்பட்டு வருகின்றன.
கேகாலை பகுதியிலுள்ள ஆயுர்வேத வைத்தியரான தம்மிக்க பண்டாரவே இந்த மருந்தை கண்டுபிடித்துள்ளார்.
இன்று மருந்து இலவசமாக வழங்கப்படும் எனக் கூறப்பட்ட நிலையிலேயே பெருமளவானவர்கள் சென்றிருந்தனர். பாதுகாப்பு படையினர், பிக்குகள் என பெருமளவானவர்கள் திரண்டிருந்தனர்.

நுவரெலியாவில் 72 குடும்பங்கள் சுய தனிமையில்! 2 கடைகளுக்கு பூட்டு!!

நுவரெலியா நகரில் அமைந்துள்ள இரண்டு வியாபார நிலையங்களையும் நுவரெலியா மாநகர சபைக்கு உட்பட்ட 72 குடும்பங்களையும் இன்று முதல் (08.12.2020) சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

நுவரெலியா நகரில் பிரதான வீதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றையும் புடவை கடை ஒன்றையுமே சுய தனிமைக்கு உட்படுத்தியுள்ளனர்.

இந்த இரண்டு வியாபார நிலையங்களுக்கும் வைத்தியர் ஒருவர் வந்து சென்ற நிலையிலேயே அவருக்கு பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டு அவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து இந்த இரண்டு வியாபார நிலையங்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

குறித்த வைத்தியர் கம்பளையில் இருந்து நுவரெலியா வைத்தியசாலைக்கு இடமாற்றம் பெற்று வந்த நிலையிலேயே அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதே வேளை நுவரெலியா லவர்ஸ்லிப் தோட்டத்தில் விநாயகர் புரத்தை சேர்ந்த 22 குடும்பங்களை சேர்ந்த 90 பேர் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த பகுதியில் வசித்த நபர் ஒருவர் தனக்கு காய்ச்சல் காரணமாக நுவரெலியா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார்.இதன்போது இவருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்ட பொழுது இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பின்பு இவரை கண்டியில் அமைந்துள்ள கொரோனா தடுப்பு மத்திய நிலையம் ஒன்றுக்கு கொண்டு சென்று அங்கு அவருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்ட பொழுது அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவரை இவருடைய வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.இருந்தாலும் பாதுகாப்பு கருதி இவரையும் இவர் வசிக்கின்ற பகுதியில் அமைந்துள்ள 22குடும்பங்களையும் எதிர்வரும் 16 ஆம் திகதிவரை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியுள்ளனர்.16 ஆம் திகதிக்கு பின்பு இவர்களை சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைக்கு அமைய விடுவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதே வேளை அரசாங்கத்தால் வழங்கப்படுகின்ற எந்தவிதமான உதவிகளும் தங்களுக்கு இதுவரை கிடைக்கவில்லை எனவும் இங்குள்ள மக்கள் குற்றம் சுமத்துகின்றார்கள்.

அத்துடன் நுவரெலியா வஜிரபுர கொளனியை சேர்ந்த 50 குடும்பங்களை சுகாதார பிரிவினர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியுள்ளனர்.அண்மையில் இந்த பகுதியில் இறந்தவருக்கு தானம் வழங்கும் நிகழ்விற்கு மாத்தரை பகுதியில் இருந்து பெண் ஒருவர் வருகை தந்துள்ளார்.

இந்த பெண்ணிற்கு ஹட்டன் கலுகல்லை பகுதியில் வைத்து பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.ஆனாலும் இவரை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த சுகாதார பிரிவினர் நடவடிக்கை எடுக்காத நிலையில் இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட பி.சி.ஆர் முடிவு கிடைத்துள்ளது.

இதன் காரணமாக இந்த தான நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து குடும்பங்களையும் 14 நாட்களுக்கு சுய தனிமைப்படுத்தலுக்கு சுகாதார பிரிவினரால் உட்படுத்தப்பட்டுள்ளனர்.

நுவரெலியாவில் கடந்த ஒரு சில நாட்களில் மூன்று வியாபார நிலையங்களும் 72 குடும்பங்களும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நுவரெலியா நிருபர் எஸ்.தியாகு

மேலும் 19 பேருக்கு கொரோனா! முடக்கப்பட்டது பிளக்வோட்டர் தோட்டம்!!

நுவரெலியா மாவட்டத்துக்குட்பட்ட  கினிகத்தேன, பிளக்வோட்டர் தோட்டத்தில் மேலும் 19 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் அப்பகுதி முழுமையாக முடக்கப்பட்டுள்ளது.

தோட்டத்தில் இருந்து எவரும் வெளியேறுவதற்கும் அத்தோட்டத்தின் கீழ் மற்றும் மேல் பிரிவுகளுக்கு வெளியார் வருவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுவருகின்றனர்.

கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கும் சுகாதார அதிகாரிகள், மறுஅறிவித்தல் விடுக்கப்படும்வரை தனிமைப்படுத்தல் நடைமுறைகள் தொடரும் எனவும் கூறினர்.

எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் ஐவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் மேலும் 600 பேரிடம் பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகளை பெறும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது.

ஹட்டன், அம்பகமுவ பொது சுகாதார காரியாலயத்துக்குட்பட்ட பகுதியில் நேற்று மாத்திரம் 25 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

க.கிசாந்தன்

முடக்கப்பட்ட பசறை கனவரல்ல பகுதியை விடுவிப்பது குறித்து பரீசிலனை!

பசறை பகுதியின் 13ஆவது மைல் கனவரல்லைப் பகுதியை தனிமைப்படுத்தல் திட்டத்திலிருந்து பூரணமாக விடுவிப்பது தொடர்பில் ஆலோசித்து வருவதாக  பிரதேசத்திற்கு பொறுப்பான பொது பரிசோதகர் வி. இராஜதுரை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“13ஆவது மைல் கனவரல்லைப் பிரதேசத்தில் 195 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளில் எவருக்கும் கோவிட் 19 தொற்று இல்லையென்பது ஊர்ஜிதப்படுத்தப்பட்டிருக்கின்றது.

ஆனாலும் தற்போதைய நிலையில் 95 குடும்பத்தினர் மட்டும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் இதுவரையில்  இப்பிரதேசத்தில் 16 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு  அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா தொற்றுக்கு இலக்கானவர்களில் 10 வயது நிரம்பிய மாணவியொருவரும்,  07 வயது நிரம்பியமாணவரொருவரும் உள்ளடங்கியுள்ளனர்.

கொழும்பில் கட்டிட நிருமாணப் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் விடுமுறையில் தமது
இருப்பிடமான கனவரல்லைக்கு வந்துள்ளனர்.அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்தே இப் பிரதேசத்தில் கொரோனா தொற்று இந்தளவில் 16 பேர் வரையில் உயர்ந்துள்ளது.

இத் தொற்று மேலும் பரவாத வகையில் சுகாதார நடைமுறைகள் முறையாகவும், கிரமமாகவும்பின்பற்றப்பட்டு வருகின்றன.

மக்கள் இதனை ஆர்வமாக முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. அத்துடன், தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் இப்பிரதேசத்தை விடுவிக்கவும் ஆலோசித்து வருகின்றோம்” என்றும் கூறினார்.

எம். செல்வராஜா, பதுளை

1000 ரூபா கிடைக்கும் – சதாசிவம் நம்பிக்கை

அரசாங்கம் அறிவித்துள்ள தொழிலாளர்களின் சம்பள உயர்வை நான் வரவேற்கின்றேன். அதனை பிரதமர் நிதி அமைச்சர் என்ற வகையில் பெற்றுக் கொடுப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது என இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் தலைவரும் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமான எஸ் சதாசிவம் தெரிவித்துள்ளார்.

நுவரெலியாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் பொழுதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.தொடர்ந்து அவர் இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில்.

வெளிநாட்டவர்களின் நிர்வாகத்திற்கு பின்னர் பெருந்தோட்டங்களை அரசாங்கம் சுவீகரித்த போது தேயிலை தோட்டங்களின் முழு நிலமும் நிர்வாகமும் அரச பெருந்தோட்ட யாக்கம் ஜனவசம போன்ற நிறுவனங்களுக்கு பகிர்ந்து நிர்வகிக்கப்பட்டு வந்தது.

இக்காலப்பகுதியில் கூட தொழிலாளர்களுடைய சில நலன்புரி திட்டங்களும் வேதனமும் தொழிலாளர்களின் வாழ்க்கைச் செலவு புள்ளி அதிகரிப்புக்கு ஏற்ற வகையில் உயர்வு பெற்றிருந்தது. இதுவும் பல தொழிற்சங்க போராட்டத்திலேயே பெற்றுத்தரக் கூடியதாக இருந்தது என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.

கம்பனிகளின் ஒழுங்கற்ற நிர்வாகத்தால் தேயிலை காடாகி தேயிலை தோட்டத்தில் தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கும் தேன் பூச்சி கடிக்கும் சிறுத்தைகளின் தொல்லைகளுக்கு மத்தியிலும் பலர் உயிரிழந்ததையும் நாம் அறிவோம். இன்று தேயிலை தோட்டங்கள் இருக்கின்ற சூழ்நிலையில் தேயிலை கொழுந்தை அதிகரித்துத் தருமாறு கேட்பது வரட்டு மாட்டில் பால் கரப்பது போன்றதாகும்.

அதுமட்டுமல்லாது தோட்ட பிள்ளைகளுக்கு தான் அதிகமான மந்த போசனை இருப்பதாக சுகாதார அறிக்கைகள் கூறுகின்றன. தனியார் கம்பெனிகளில் தற்போது நலன்புரி வேலைகளை செய்வதில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

கேகாலை, இரத்தினபுரி மாவட்டங்களில் 724 பேருக்கு கொரோனா!

சப்ரகமுவ மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 724 ஆக அதிகரித்துள்ளதாக சப்ரகமுவ மாகாண சுகாதார சேவைகள் அத்தியட்சகர் கபில கன்னங்கர நேற்று தெரிவித்தார்.

இது குறித்து நேற்று ஊடகவியலாளர்களை அறிவுறுத்தும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இவ்விடயமாக அவர் தொடர்ந்து தகவல் தருகையில்,

இரத்தினபுரி மாவட்டத்தில் 397 பேரும் கேகாலை மாவட்டத்தில் 367 பேருமாக கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

இவற்றில் திவுரும்பிட்டிய ஆடைத் தொழிற்சாலை மற்றும் சீதாவக தொழிற்பேட்டை ஆகியவற்றில் இருந்து உருவான அல்லது தொடர்புடையவர்களின் ஊடாகவே அதிகமான கொரோனா தொற்றாளர்கள் உருவாகியுள்ளனர்.அத்துடன் கடந்த ஐந்து தினங்களில் இரத்தினபுரி மாவட்டத்தில் 126 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதில் 98 பேர் எஹலியகொடை பிரதேசத்தை சேர்ந்தவர்களாவர்.

இரத்தினபுரி மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள 397 தொற்றாளர்களில் 173 பேர் திவுரும்பிடிய ஆடை த்தொழிற்சாலையில் பணிபுரியும் மற்றும் இவர்களுடன் தொடர்புடையவர்களாவர்.மேலும் கேகாலை மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள 367 பேரில் 70 பேர் சீதாவக்க தொழிற்பேட்டையில் பணிபுரிபவர்கள் அல்லது தொடர்புடையவர்கள் ஆவர்.

இந்த ஏற்றுமதி தொழில் வலயங்கள் சப்ரகமுவ மேல் மாகாண எல்லையில் அமைந்திருந்தாலும் இவற்றில் பணிபுரிவோரில் கணிசமான தொகையினர் இரத்திபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாவர்.

எகிறும் தொற்றாளர்களின் எண்ணிக்கையால் மருத்துவ கட்டமைப்பும் முடங்கும் அபாயம்!

” கொரோனா வைரஸ் தாக்கத்தால் இலங்கையில் 6 மணிநேரத்துக்கு ஒருவர் மரணிக்கின்றனர். நாளாந்தம் இனங்காணப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவருகின்றது. எனவே, வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்தாவிடின் நாட்டின் வைத்தியசாலை கட்டமைப்பும் ஸதம்பிதமடையக்கூடிய அபாயம் இருக்கின்றது.” – என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில்  கருத்து வெளியிட்ட அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பிரதம செயலாளர், வைத்தியர் ஹரித அளுத்கே மேலும் கூறியவை வருமாறு,

” கொரோனா வைரஸ் தாக்கத்தால் குளிர் காலமான டிசம்பர் மாதம் அவதானம்மிக்க காலப்பகுதி என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் குளிர்காலம் ஆரம்பமாகியுள்ள நிலையில் தொற்றாளர்களின் எண்ணிக்கையும், மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளன. அமெரிக்காவில் 5 நாட்களில் 10 லட்சம் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஆயிரமாக இருந்த மரண எண்ணிக்கை 2 ஆயிரம் என்ற கட்டத்துக்கு சென்றுள்ளது. வைத்தியர்கள்கூட மக்களின் மரணங்களைக்கண்டு கதறிஅழும் காட்சிகளையும் கண்டோம்.

இலங்கையும் இன்னும் எச்சரிக்கையான – அவதானம்மிக்க கட்டத்திலேயே இருக்கின்றது. ஆனாலும் நிலைமையைக்கட்டுப்படுத்தக்கூடிய சாத்தியமும் இருக்கின்றது. அதற்கு பொது மக்கள் தரப்பில் இருந்து முழுமையான ஒத்துழைப்பு அவசியமாகும்.

இலங்கையில் கடந்த மார்ச் மாதம் முதல் ஒக்டோபர் ஆரம்பம்வரையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆகவே காணப்பட்டது. தற்போது அந்த எண்ணிக்கை 140 ஆக அதிகரித்துள்ளது. நவம்பரில் மட்டும் 100 பேர்வரை உயிரிழந்துள்ளனர். அதாவது 6 மணிநேரத்துக்கு ஒருவர் மரணிக்கின்றனர். சில நாட்களில் 3 மணிநேரத்துக்கு ஒரு மரணம்கூட நிகழ்கின்றது.

நாளொன்றுக்கான தொற்றாளர்களின் எண்ணிக்கையும் 200 என்ற கட்டத்திலிருந்து 600 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சைபெறும் தொற்றாளர்களின் எண்ணிக்யை 7 ஆயிரத்துக்குள் வைத்திருந்து சவாலை எதிர்கொண்டுவருகின்றோம். நாளொன்றில் குணமடைபவர்களின் எண்ணிக்கை 300 – 400 ஆக இருக்கின்றபோது தொற்றாளர்களின் எண்ணிக்கை 700 – 800 என்ற கட்டத்துக்கு சென்றால் நிலைமையை சமாளிக்கமுடியாது. வைத்தியசாலை கட்டமைப்பு ஸ்தம்பிதமடைந்துவிடும்.

எனவே, சாதகம், பாதகம் என்பது மக்களின் கைகளிலேயே இருக்கின்றது. அதனால்தான் சுகாதார நடைமுறைகளை முழுமையாக பின்பற்றுமாறு கோருகின்றோம். அநாவசியமாக வெளியேறுவதை தவிர்க்கவும். முடிந்தளவு கூட்டங்களை ஒன்லைன்மூலம் நடத்தவும். கடைகளுக்கு செல்லும்போது மாற்றிய பணங்களை எடுத்துசெல்லவும்.

அட்டுலுகம, பண்டாரகம ஆகிய பகுதிகள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்படவேண்டும். ” – என்றார்.

20 ஐ ஆதரித்த முஸ்லிம் எம்.பிக்கள் பட்ஜட் வாக்கெடுப்பில் நழுவ முடிவு!

2021 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டம்மீதான இறுதி வாக்கெடுப்பு டிசம்பர் 10 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.

மொட்டு அரசாங்கத்தின் முதலாவது பட்ஜட் கடந்த நவம்பர் 17 ஆம் திகதி நிதி அமைச்சர் மஹிந்த ராஜபக்சவால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. நவம்பர் 18 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதிவரை  2 ஆம் வாசிப்புமீதான விவாதம் நடைபெற்று அன்று மாலை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

அரசாங்கமும், அதன் தோழமைக்கட்சிகளும் ஆதரித்து வாக்களித்தன. ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிரணிகள் எதிர்த்து வாக்களித்தன.

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எம்.பிக்கள் நால்வர்,பட்ஜட் தொடர்பான வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் சடலத்தை அடக்கம் செய்வதற்கு தொடர்ச்சியாக அனுமதி மறுக்கப்படுவதாலேயே அவ்வாறானதொரு முடிவை முஸ்லிம் காங்கிரஸ் எம்.பிக்கள் எடுத்திருந்தனர். எனினும், 20 ஐ ஆதரித்த ரிஷாட் கட்சி உறுப்பினர்கள் பட்ஜட்டுக்கும் நேசக்கரம் நீட்டினர்.

ஆனால் வரவு – செலவுத்திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பின்போது ரிஷாட் கட்சி உறுப்பினர்களும் பட்ஜட்டை எதிர்க்ககூடும் என தெரியவருகின்றது.

பட்ஜட்டை நிறைவேற்றிக்கொள்வதற்கு சாதாரணப்பெரும்பான்மை போதுமாதனது. எனவே, எதிரணியின் ஆதரவு ஆளுங்கட்சிக்கு அவசியமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, வரவு – செலவுத் திட்டத்தில் எவ்வாறான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதை பிரதமர் 10 ஆம் திகதி சபைக்கு அறிவிப்பார்.

கொரோனாவால் நவம்பரில் மட்டும் 100 பேர் உயிரிழப்பு!

இலங்கையில் கொரோனா வைரஸ் 2ஆவது அலைமூலம் நேற்றிரவுவரை (07) 25 ஆயிரத்து 25 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இவர்களில் இதுவரையில் 129 பேர் பலியாகியுள்ளனர். (ஒக்டோபர் 24 முதல் நேற்றுவரை)

மினுவாங்கொட கொத்தணிமூலம் 3 ஆயிரத்து 59 பேருக்கும், பேலியகொடை கொத்தணிமூலம் 21 ஆயிரத்து 259 பேருக்கும் வைரஸ் தொற்றியுள்ளது. இவர்கில் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். நேற்று மாத்திரம் 703 பேருக்கு வைரஸ் தொற்றியது.

அதேவேளை, இலங்கையில் நேற்றுவரை மொத்தமாக 28 ஆயிரத்து 580 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இவர்களில் 20  ஆயிரத்து 804 பேர் குணமடைந்துள்ளனர்.

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் நேற்றும் இருவர் உயிரிழந்தார். இதன்படி இலங்கையில் கொரோனா தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 142 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள். நவம்பரில் மாத்திரம் 98 பேர் உயிரிழந்துள்ளனர். டிசம்பரில் கடந்துள்ள 8 நாட்களில் 24  பேர் பலியாகியுள்ளனர்.

சினிமா

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

செய்தி

தமிழக முதல்வராக பதவியேற்றார் ஜோசப் விஜய்!

0
தமிழக முதல்வராக பதவியேற்றார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை 10 மணியளவில் பதவியேற்பு விழா தொடங்கியது. வந்தே மாதரம் பாடல் இசைக்க பதவியேற்பு...

தவெக முதற்கட்ட அமைச்சரவை பட்டியல் வெளியீடு

0
தமிழக வெற்றிக் கழக அரசின் தவெக முதற்கட்ட அமைச்சர் பட்டியலை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் கீழ்காணும் பெயர்கள் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளன: புஸ்ஸி என்.ஆனந்த் ஆதவ் அர்ஜுனா கே.ஜி.அருண்ராஜ் கே.ஏ.செங்கோட்டையன் வெங்கடரமணன் நிர்மல்குமார் ராஜ்மோகன் டி.கே.பிரபு கீர்த்தனா 120 எம்எல்ஏக்களின் ஆதரவுக் கடிதங்களை ஆளுநரிடம் விஜய் நேற்று...

மரக்கறி விலைப்பட்டியல் (10.05.2026)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (10) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...