Home Blog Page 3738

LPL நடுவர்களுக்கு Cycle Pure Agarbathi அனுசரணை

இந்தியாவின் முன்னணி மற்றும் சான்றிதழ் அளிக்கப்பட்ட காபன் நடுநிலை ஊதுபத்தி உற்பத்தியாளர்களான Cycle Pure Agarbathi, My11Circle லங்கா பிரிமியர் லீக் போட்டிகளில் நடுவர்களுக்கு உத்தியோகபூர்வ அனுசரணை வழங்குகின்றது. இந்த அனுசரணையுடன் லங்கா பிரிமியர் லீக் இலச்சினையுடன் பங்குபற்றும் நடுவர்களின் உடைகளிலும், மூன்றாவது நடுவரின் முடிவுகளை வழங்கும் டிஜிட்டல் திரையிலும் அந்த இலச்சினை திரையிடப்படும். மேலும், பவுன்டரி எல்லையில் மற்றும் அதன் வெளிப்புறத்தில் அமைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகளிலும் காட்சிப்படுத்தப்படும். அத்துடன், My11Circle லங்கா பிரிமியர் லீக் போட்டித் தொடரில் ஃபெயார் ப்ளே விருதுகளுக்காகவும் Cycle Pure Agarbathi நிறுவனம் அனுசரணை வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த அனுசரணை குறித்து கருத்து தெரிவித்த Cycle Pure Agarbathi நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் அர் ஜு ரங்கா, “My11Circle லங்கா பிரிமியர் லீக் போட்டிகளில் நடுவர்களுக்காக உத்தியோகபூர்வ அனுசரணை வழங்கக் கிடைத்தமை எமக்குக் கிடைத்த பாக்கியமாக கருதுவதுடன் இலங்கை கிரிக்கெட்டுக்காக எமது ஒத்துழைப்புக்களை வழங்கும் முக்கியமான தருணமாக கருத முடியும். Cycle Pure Agarbathi நிறுவனத்தின் ஆரம்பத்தில் இருந்தே கிரிக்கெட் போட்டி தொடர்பில் அனுசரணை வழங்குவதுதுடன் எமது இலச்சினையை மேம்படுத்துவதற்காக கிரிக்கெட் விளையாட்டால் கிடைக்கும் பிரதிபலிப்பானது மிகவும் விஷாலமாகும்.” என தெரிவித்தார்.

இந்த அனுசரணை குறித்து கருத்து தெரிவித்த IPGஇன் பிரதம நிறைவேற்று அதிகாரி அனில் மொஹான், “சர்வதேச ரீதியில் வெற்றிபெற்றுள்ள பாரிய இலச்சினைகள் பல லங்கா பிரிமியர் லீக் போட்டிகளுக்கு பங்குபற்றுவது எமக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கும் ஒரு விடயமாகும். இலச்சினைகளின் அனுசரணையாளர்களை வர்த்தக ரீதியில் இந்த போட்டிகளுக்கு எம்மால் உள்வாங்க எதிர்பார்த்துள்ள எமது இலக்கை அடைய இந்த நிலைமை பாரிய ஒத்துழைப்புக்களை வழங்குவதுடன் விளையாட்டின் மேம்பாட்டிற்காகவும் இந்த விசேட சேவையை வழங்கும் என்பதே எனது கருத்தாகும்.” என தெரிவித்தார்.

Cycle Pure Agarbathi நிறுவனத்தின் அனுசரணை குறித்து கருத்து தெரிவித்த இலங்கை கிரிக்கெட்டின் துணை தலைவரும் மற்றும் My11Circle லங்கா பிரிமியர் லீக் போட்டிகளின் பணிப்பாளர் ரவீன் விக்ரமரத்ன, “My11Circle லங்கா பிரிமியர் லீக் போட்டிகளின் நடுவர்கள் மற்றும் ஃபெயார் பிளே விருதுகளுக்காக உத்தியோகபூர்வ அனுசரணை வழங்குவதற்கு Cycle Pure Agarbathi நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளமை குறித்து எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதுடன் இலங்கை கிரிக்கெட் மற்றும் இந்த போட்டித் தொடரை வெற்றிகரமாக மேற்கொள்வதற்காக இந்த அநுகரணை எமக்கு பாரிய பலமாக அமையுமென்பதே எனது கருத்தாகும்.” என தெரிவித்தார்.

இன்று மாத்திரம் 703 பேருக்கு கொரோனா! இருவர் உயிரிழப்பு!!

நாட்டில் மேலும் 377 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இன்று மாத்திரம் 703 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பேலியகொடை மற்றும் சிறைச்சாலை கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.

அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்து 580 ஆக அதிகரித்துள்ளது.

 2 ஆவது அலைமூலம் (மினுவாங்கொட, பேலியகொட,சிறைச்சாலை கொத்தணிகள்) இதுவரையில் 25 ஆயிரத்து 25  பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்தால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர். இதன்படி கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 142 ஆக அதிகரித்துள்ளது.

கிராம அபிவிருத்தி திட்டம் 14 முதல் மீண்டும் ஆரம்பம்!

நாட்டின் கிராமப்புற மக்களின் உண்மையான தேவைகளையும் முன்னுரிமைகளையும் அடையாளம் காணும் பொருட்டு புதிய திட்டமான ”வேலையோடு மீண்டும் கிராமத்திற்கு” (வெட சமக யலி கமட) செயற்திட்டத்தை 14 ஆம் திகதி முதல் தொடங்கப்படும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று (07) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நிதி அமைச்சின் ஆலோசனைக் குழுவுக்குத் தலைமை தாங்கிய பிரதமர், இந்தத் திட்டத்தை முறையாக அடையாளம் கண்டு கிராமப்புற மற்றும் புறநகர்ப்புறங்களில் உள்ள மக்களின் உண்மையான தேவைகளை அடையாளம் கண்டு குறித்த திட்டத்தை தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இக்குழுவில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச மேலும் தெரிவிக்கையில், கிராமப்புற மற்றும் புறநகர்ப்புறங்களில் உள்ள 72% இலங்கையர்களின் வாழ்க்கைத் தரத்தில் சாதகமான மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என்பதோடு அதிகாரத்துவத்துக்கு அப்பாற்பட்டு பொதுமக்களின் முன்னுரிமைகளுக்கு அவசியம் அளிக்கப்பட வேண்டும் என்று ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டாராவின் பரிந்துரைக்கு பதிலளிக்கும்போது இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

இதன்போது நிதி அமைச்சு மற்றும் திரைச்சேரியின் செயலாளர் எஸ். ஆர். ஆர்ட்டிகல குறிப்பிடும்போது, சம்பந்தப்பட்ட இடங்கள் தொடர்பாக அரசு நிறுவனங்களிடையே சிறந்த ஒருங்கிணைப்பு காணப்பட வேண்டும் என்றார். இதன்படி, நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் மற்றும் ஷெஹான் சேமசிங்க ஆகியோரின் உதவியுடன் முன்னுரிமைகள் பட்டியலைத் தயாரிக்க அமைச்சின் செயலாளர் இதன்போது ஒப்புக்கொண்டார்.

தற்போதைய சூழ்நிலை காரணமாக நாட்டில் சுற்றுலாத்துறை பல பிரச்சினைகளை எதிர்கொண்டு வருவதால் நிதி அமைச்சு விரைவில் குறித்த விடயத்திற்கு உதவி வழங்க வேண்டும் என்று அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்தார். குறித்த விடயம்தொடர்பாக நிதி அமைச்சு எடுத்த பல நடவடிக்கைகளை இதன்போது அமைச்சின் செயலாளர் குழுவிற்கு விளக்கினார்.

அரசாங்கத்துக்கு எதிராக தீப்பந்தமேந்தி போராட்டம் முன்னெடுப்பு

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தின் ஜனநாயக விரோதச்செயற்பாடுகளுக்கு கடும் எதிர்ப்பையும், கண்டனத்தையும் வெளியிடும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தியின் இன்று தீப்பந்தமேந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் அமைதியான முறையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் இதில் பங்கேற்றனர்.

நாட்டில் அரசாங்க பயங்கரவாதம் தலைதூக்கியுள்ளது எனவும், இதன் வெளிப்படாகவே சிறைக்கைதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என  போராட்டத்தின் பின்னர் ஊடகங்களிடம் சஜித் கருத்து வெளியிட்டார்.

மனித உரிமைகள் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளன, சிறைச்சாலை சம்பவத்துக்கு அரசாங்கம் பொறுப்புக்கூறவேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

அரசாங்கத்தின் அடக்குமுறை செயற்பாடுகள் நிறுத்தப்படவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

‘மஹர சிறைச்சாலை கலவரம்’ – இடைக்கால அறிக்கை கையளிப்பு!

மஹர சிறைச்சாலை மோதல் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய விசாரணைக்குழு, நீதி அமைச்சர் அலி சப்ரியிடம் இன்று (7) இடைக்கால விசாரணை அறிக்கையொன்றை கையளித்தது.

மஹர சிறைச்சாலையில் கடந்த 29 ஆம் திகதி இடம்பெற்ற மோதலால் 11 கைதிகள் உயிரிழந்தனர். 108 பேர் காயமடைந்தனர். இச்சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நீதி அமைச்சரால் மேல் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி குசலா சரோஜனி வீரவர்தன தலைமையில் குழுவொன்று அமைக்கப்பட்டது.

மாதத்துக்குள் முழுமையானதொரு அறிக்கையையும், ஒரு வாரத்துக்குள் இடைக்கால அறிக்கையொன்றையும் முன்வைக்கவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.  இந்நிலையிலேயே இன்று அறிக்கை கையளிக்கப்பட்டது.

அதேவேளை, மஹர சிறைச்சாலை மோதல் சம்பவம் தொடர்பில் சி.ஐ.டியினரும் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

‘கொரோனா’ தொற்றாளர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்தை தாண்டியது!

நாட்டில் மேலும் 326 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பேலியகொடை மற்றும் சிறைச்சாலை கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.

அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்து  203 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் இதுவரையில் 140 பேர் உயிரிழந்துள்ளனர். 20 ஆயிரத்து 804 பேர் குணமடைந்துள்ளனர்.

2 ஆவது அலைமூலம் (மினுவாங்கொட, பேலியகொட கொத்தணிகள்) இதுவரையில் 24 ஆயிரத்து 648  பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

விவசாயிகளின் போராட்டத்துக்கு பிரியங்கா சோப்ரா ஆதரவு!

வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்திற்கு நடிகை பிரியங்கா சோப்ரா ஆதரவு தெரிவித்துள்ளார்.

இந்திய மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இன்று 12ஆவது நாளாக விவசாயிகள் போராட்டம் தொடர்கிறது.

விவசாயிகளுக்கு ஆதரவாக பல்வேறு அரசியல் கட்சிகளும் போராட்டம் நடத்தி வருகின்றன. வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி நாடு முழுவதும் நாளை முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் விவசாயிகள் போராட்டத்துக்கு நடிகை பிரியங்கா சோப்ரா ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: நமது விவசாயிகள், இந்தியாவின் உணவு வீரர்கள். அவர்களின் அச்சங்களை தீர்க்க வேண்டும். அவர்களின் நம்பிக்கையை பூர்த்தி செய்ய வேண்டும். வளர்ந்து வரும் ஜனநாயக நாடு என்ற வகையில் விவசாயிகளுக்கான நெருக்கடிகள் விரைவில் தீர்க்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

‘அண்ணாத்த’ படத்தில் அரசியல் வசனங்கள் – அதிரடிக்கு தயாராகும் ரஜினி

சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘அண்ணாத்த’ படத்தில் அரசியல் வசனங்கள் ஏராளமாக இடம்பெறும் என கூறப்படுகிறது.

தமிழக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. ரஜினி அரசியல் கட்சி தொடங்கி சட்டசபை தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவிப்பு வெளியிட்டார். ஜனவரி மாதம் கட்சி தொடங்கப்போவதாகவும் தெரிவித்தார். கட்சி தொடங்கும் முன்பு ‘அண்ணாத்த’ படப்பிடிப்பை முடித்துக்கொடுக்கவும் திட்டமிட்டுள்ளார்.

அண்ணாத்த படத்தின் எஞ்சியுள்ள படப்பிடிப்பு ஐதராபாத்தில் வருகிற 15 ஆம் திகதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வருகிற 12 ஆம் திகதி தனது பிறந்தநாளை ரஜினி பெங்களூரில் உள்ள தனது அண்ணன் சத்யநாராயணா வீட்டிலேயே கொண்டாடுகிறார். அதன்பிறகு 15 ஆம் திகதி அவர் ஐதராபாத்தில் நடைபெறும் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா பரவல் காலகட்டம் என்பதால் ரஜினி மிகவும் பாதுகாப்புடன் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார். படப்பிடிப்பு தளத்திலும் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. ஜனவரி மாதம் ரஜினி கட்சி தொடங்கும் முன்பு ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிடும். ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டு அன்று ‘அண்ணாத்த’ படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

‘அண்ணாத்த’ படத்தில் அரசியல் சரவெடி வசனங்கள் இடம்பெறுகின்றன. தமிழ் புத்தாண்டு நேரத்தில் தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் மிகவும் உச்சகட்டத்தில் இருக்கும். அப்போது ‘அண்ணாத்த’ படம் திரைக்கு வருவது அவரின் அரசியல் பிரசாரத்துக்கு மிகவும் கை கொடுக்கும் என்று நம்பப்படுகிறது. எனவே படத்தில் அரசியல் வசனங்கள் ஏராளமாக இடம்பெறும் என்று தெரிகிறது.

பொன்சேகாவுக்கு அதிஉயர் சபையில் சிங்கள மொழியிலேயே பதிலடி கொடுத்த மனோ!

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு, பாராளுமன்றத்தில் இன்று தக்க வகையில் பதிலடி கொடுத்தார் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட எம்.பியுமான மனோ கணேசன்.

மனோ  கடும் சினத்துடன் சிங்கள மொழியில் உரையாற்றுகையில் சரத் பொன்சேகாவும் சபையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆளுங்கட்சியினரும் மனோவின் உரையை கவனமாக செவிமடுத்துக்கொண்டிருந்தனர்.

மனோ கணேசன் ஆற்றிய உரையின் ஒருபகுதி வருமாறு,

” 2010 ஜனாதிபதி தேர்தலில் சரத் பொன்சேகா போட்டியிட்டபோது அவருக்கு ஆதரவாக வடக்கு, கிழக்கு பகுதிகளுக்குச்சென்று பிரச்சாரம் முன்னெடுத்தவன் நான். ரணில் விக்கிரமசிங்க உட்பட பலர் பொன்சேகாவை கைவிட்டுசெல்ல கடைசிவரை நான் அவருடன் இருந்தேன். இன்றும் பொன்சேகாவை மதிக்கின்றேன். ஆனால் அவர் நன்றி மறந்து உரையாற்றியுள்ளார்.

புலிகள் அமைப்பு இலங்கையில் தடைசெய்யப்பட்ட அமைப்பாகும். எனவே, அவ்வமைப்பை இங்கு நினைவுகூரமுடியாது. புலிக்கொடி மற்றும் புலிக்கொள்கைகளை முன்னிறுத்தி நிகழ்வுகளை நடத்தமுடியாது. ஆனால் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் உரிமை அவர்களின் உறவினர்களுக்கு இருக்கின்றது. அது போராளியாக இருந்தால்கூட நினைவுகூரலாம்.

புலிகள் அமைப்பு தடைசெய்யப்பட்டுள்ள அமைப்பு என்பதால் அதனை நீக்குமாறுகோரி தமிழ் அரசியல்வாதிகள் நீதிமன்றம் சென்று வழக்கு தாக்கல் செய்யலாம். இவ்வாறு நான் கூறிய தகவலை தெளிவாக புரிந்து கொள்ளமுடியாமல், மேல் நோக்கி பார்த்து உமிழ்வதுபோல் பொன்சேகா கருத்து வெளியிட்டுள்ளார்.

நினைவேந்தல் குறித்து நான் வெளியிட்ட கருத்தையும், மாவீரர் நாள் நினைவேந்தலையும் தொடர்புபடுத்தி, மனோவின் கருத்து எமது கட்சியின் கருத்து அல்ல எனவும் கூறியுள்ளார்.ஐக்கிய மக்கள் சக்தியை நாம்தான் உருவாக்கினோம். பொன்சேகா நேற்று வந்தவர். அரசியலில் நான் சிறுபையன் கிடையாது. ஜே.வி.பிக்கும், புலிகளுக்கும் இடையில் இருக்கும் வேறுபாடு குறித்து எமக்கு எவரும் பாடம் எடுக்கவேண்டியதில்லை.

அதேபோல புரெவி புயல் மாவீரர் நாளன்று வந்திருந்தால் மகிழ்ச்சி என்ற தொனியில் பொன்சேகா வெளியிட்ட கருத்தும் தவறானது.  என்னை அமைச்சர் ஒருவர் முட்டாள் என விமர்சித்தார். நீங்களும் அந்த நிலைக்கு விழுந்துவிடாதீர்கள்.

மாவீரர் தின நிகழ்வில்கூட தமிழ் மற்றும் சிங்கள மக்கள் இணைந்து வாழ்வதற்கு இன்னமும் வாய்ப்பு உள்ளது என்ற விடயத்தையே நான் வலியுறுத்தியிருந்தேன். ஆனால் அரச தொலைக்காட்சியொன்று அதனை பெருப்பித்து மக்களை திசைதிருப்பும் விதத்தில் செய்தி வெளியிட்டது. ” – என்றார்.

 

27,877 பேருக்கு கொரோனா – 20,804 பேர் குணமடைவு – 140 பேர் உயிரிழப்பு!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும்  344 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 804 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் 6 ஆயிரத்து 933 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 140  பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 ஆயிரத்து 877 ஆக அதிகரித்துள்ளது.

சினிமா

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

செய்தி

தமிழக முதல்வராக பதவியேற்றார் ஜோசப் விஜய்!

0
தமிழக முதல்வராக பதவியேற்றார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை 10 மணியளவில் பதவியேற்பு விழா தொடங்கியது. வந்தே மாதரம் பாடல் இசைக்க பதவியேற்பு...

தவெக முதற்கட்ட அமைச்சரவை பட்டியல் வெளியீடு

0
தமிழக வெற்றிக் கழக அரசின் தவெக முதற்கட்ட அமைச்சர் பட்டியலை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் கீழ்காணும் பெயர்கள் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளன: புஸ்ஸி என்.ஆனந்த் ஆதவ் அர்ஜுனா கே.ஜி.அருண்ராஜ் கே.ஏ.செங்கோட்டையன் வெங்கடரமணன் நிர்மல்குமார் ராஜ்மோகன் டி.கே.பிரபு கீர்த்தனா 120 எம்எல்ஏக்களின் ஆதரவுக் கடிதங்களை ஆளுநரிடம் விஜய் நேற்று...

மரக்கறி விலைப்பட்டியல் (10.05.2026)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (10) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...