Home Blog Page 3739

‘மினுவாங்கொட கொத்தணி பற்றி விசாரணை நடத்திய 20 சி.ஐ.டியினருக்கு கொரோனா!

மினுவாங்கொடை கொரோனா வைரஸ் கொத்தணியின் ஆரம்ப மூலத்தை கண்டறிவதற்கான விசாரணைகளை முன்னெடுத்த சி.ஐ.டி. அதிகாரிகள் 20 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று 27/2இன்கீழ் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவால் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

” கொழும்பு குற்றதடுப்பு பிரிவிடமிருந்து நவம்பர் 5 ஆம் திகதியே விசாரணைகள் சி.ஐ.டியிடம் ஒப்படைக்கப்பட்டது. அது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்த சி.ஐ.டி. அதிகாரிகள் 20 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது. விசாரணைகள் இன்னும் நிறைவுபெறவில்லை.

சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவின் ஆலோசனையின் பிரகாரம் நடவடிக்கைகள் இடம்பெற்று விரைவில் விசாரணை நிறைவுசெய்யப்படும்.” என்றும் அவர் கூறினார்.

அதேவேளை, உக்ரைன் நாட்டவர்கள் ஊடாகவே 2ஆவது அலை உருவாகியிருக்கலாம் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோ புள்ளே இன்று சபையில் கருத்து வெளியிட்டார்.

‘கொரோனா’வில் இருந்து மீள பிரவுன்லோ தோட்டத்தில் மகா யாகம்’

மஸ்கெலியா, புரவுன்லோ தோட்டத்திலுள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் இன்று  (07.12.2020) காலை 8 மணி முதல் மதியம் 12.30 வரையான காலப்பகுதியில் மகா யாகம் வளர்க்கப்பட்டது.

மேற்படி தோட்டத்திலும் அதனை அண்மித்த பகுதியான கங்குவத்தை பிரிவிலும் சிலர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகினர். அவர்களின் குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தன. தற்போது அப்பகுதிகளில் வைரஸ் பரவல் தாக்கல் கட்டுக்குள் வந்துள்ளது.

இந்நிலையிலேயே தோட்ட ஆலய பரிபாலன சபையினரும், தோட்ட இந்து இளைஞர் மன்றத்தினரும் இணைந்து இந்த யாகத்தை நடத்தினர். சர்வமத தலைவர்களும் இந்நிகழ்வுக்கு அழைக்கப்பட்டிருந்தமை விசேட அம்சமாகும்.

நாடும், நாட்டு மக்களும் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மீளவேண்டும் எனவும் யாசத்தின்போது இறைவனிடம் வேண்டப்பட்டது.

மஸ்கெலியா நிருபர் – பெருமாள்

‘நோர்வூட் பகுதியில் பாடசாலை மாணவர்கள் திருப்பி அனுப்பட்டனர்’

ஹட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட நோர்வூட் நிவ்வெளி தமிழ் வித்தியாலயம், அயரபி தமிழ் வித்தியாலயம் ஆகியவற்றுக்கு இன்று (07.12.2020) வருகை தந்த மாணவர்கள் வீடுகளுக்கு திருப்பி அனுப்பட்டுள்ளனர்.

மாணவர்களின் வருகை வெகுவாக குறைந்திருந்ததாலும், வருகை தந்திருந்த மாணவர்களின் சுகாதார பாதுகாப்பை கருத்திற் கொண்டுமே இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டது என பாடசாலைகளின் அதிபர்கள் தெரிவித்தனர்.

நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தில் கடமையாற்றிய ஆசிரியை ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதையடுத்து அவருடன் தொடர்பில் இருந்த ஆசிரியர்களும், மாணவர்களும் சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் பாடசாலையும் மூடப்பட்டுள்ளது.

இதனால் நோர்வூட் பகுதியில் உள்ள ஏனைய பாடசாலைக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை 90 வீதத்தால் குறைவடைந்துள்ளது. ஒரு சிலரே பாடசாலைக்கு வந்துள்ளனர்.

இந்நிலையிலேயே அவர்கள் திருப்பி அனுப்பட்டுள்ளனர். நோர்வூட் தமிழ் மகா பாடசாலை வளாகம் மற்றும் நோர்வூட் நகரம் தொற்றுநீக்கம் செய்யப்பட்டது.இதற்கான நடவடிக்கையை நோர்வூட் பிரதேச சபையின் தவிசாளர் ரவி குழந்தைவேலு தலைமையிலான குழுவினர் முன்னெடுத்தனர்.

க.கிசாந்தன்

‘கொரோனா அச்சம்’ – நோர்வூட் ஆடைத்தொழிற்சாலை மூடப்பட்டது!

நோர்வூட் பகுதியிலுள்ள ஆடைத்தொழிற்சாலையொன்று இன்று (07.12.2020) தற்காலிகமாக மூடப்பட்டது.  சுகாதார பாதுகாப்பு நலனைக்கருத்திற்கொண்டே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது என நிர்வாகத்தினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

நோர்வூட் பகுதியில் ஆசிரியையொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து அவருடன் தொடர்பில் இருந்த ஆசிரியர்களும், மாணவர்களும் சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

எனவே, இம்மாணவர்களின் பெற்றோர் யாராவது குறித்த தொழிற்சாலையில் பணிபுரிகின்றனரா என்பதனை கண்டறிவதற்காகவும், அவ்வாறு இனங்காணப்பட்டால் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்காகவுமே இன்று தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இன்று மாலை சுகாதார அதிகாரிகளுடன் முக்கிய கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது. அதன்பின்னர் வழமைபோல் தொழிற்சாலை, சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் இயங்கும் என கூறப்பட்டுள்ளது.

குறித்த தொழிற்சாலையில் இதுவரையில் 70 பேர் வரை பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். எனினும், எவருக்கும் வைரஸ் தொற்று இல்லை என்பது பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

க.கிசாந்தன்

0/L பரீட்சைக்கான திகதி அறிவிப்பு!

2021 மார்ச் முதலாம் திகதி முதல் மார்ச் 11 ஆம் திகதிவரை கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை நடைபெறும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் இன்று (7) தெரிவித்தார்.

2021 ஜனவரி 18 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதிவரையான காலப்பகுதியில் சாதாரணதரப்பரீட்சையை நடத்தவதற்கு முன்னதாக திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், கொரோனா வைரஸ் தாக்கத்தால் பரீட்சை ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையிலேயே இன்று புதிய திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவால் வறுமையில் வாழும் மக்கள் தொகை 100 கோடியை தாண்டும்!

கொரோனாவால் 2030 ஆம் ஆண்டுக்குள் கொடிய வறுமையில் வாழும் மக்கள் எண்ணிக்கை 100 கோடியை தாண்டி விடும் என்று ஐ.நா. சபை கணித்துள்ளது.

கொரோனா வைரஸ் என்னும்   வைரஸ் பரவலை தடுக்க உலகமெங்கும் ஊரடங்கு, பொதுமுடக்கம் அமுல்படுத்தப்பட்டதால் நாடுகளின் பொருளாதாரமும், மக்களின் வாழ்வாதாரமும் பெரிதும் பாதித்துள்ளது.

இந்த தருணத்தில், ஐ.நா. சபை மேம்பாட்டு திட்டத்தின் ஆய்வு நடந்து முடிந்துள்ளது.

இந்த ஆய்வு அறிக்கையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* கொரோனாவின் கடுமையான நீண்டகால விளைவுகள், கூடுதலாக 20 கோடியே 70 லட்சம்பேரை கொடிய வறுமையில் தள்ளிவிடும். இதன் காரணமாக 2030 ஆம் ஆண்டுக்குள் கொடிய வறுமையில் வாழ்வோர் எண்ணிக்கை மொத்தம் 100 கோடிக் கும் அதிகமாக இருக்கும்.

* கொரோனாவால் தூண்டப்பட்ட பொருளாதார நெருக்கடியின் 80 சதவீதம், உற்பத்தித்திறன் இழப்பு காரணமாக 10 ஆண்டுகளுக்கு நீடிக்கும்.

* வறுமைக்கு கொரோனா ஒரு முக்கிய அம்சமாக உள்ளது. மேலும் தலைவர்கள் எடுக்கிற முடிவுகள், உலகை மிகவும் மாறுப்பட்ட திசைகளில் கொண்டு செல்லக்கூடும்.

* நிலையான வளர்ச்சி இலக்குகள், 14 கோடியே 60 லட்சம் பேரை தீவிர வறுமையில் இருந்து வெளியேற்றும்.

‘கொரோனா’ தாக்கம் – இங்கிலாந்து – தென்னாபிரிக்க கிரிக்கெட் போட்டி ரத்து!

இங்கிலாந்து கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

20 ஓவர் போட்டித் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றிய இங்கிலாந்து அணி அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாட திட்டமிட்டு இருந்தது. கடந்த வெள்ளிக்கிழமை கேப்டவுனில் நடக்க இருந்த இங்கிலாந்து- தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி தென்ஆப்பிரிக்க வீரர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் பார்ல் நகரில் நேற்று நடக்க இருந்த முதலாவது ஒரு நாள் போட்டி ஒரு பந்து கூட வீசப்படாமல் இரத்து செய்யப்பட்டது. இங்கிலாந்து குழுவில் இடம் பெற்றுள்ள 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதால் மற்ற வீரர்கள் மற்றும் அதிகாரிகளின் நலன் கருதி ரத்து முடிவு எடுக்கப்பட்டதாக இரு நாட்டு கிரிக்கெட் சபை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் பாதிக்கப்பட்டது வீரர்களா? அல்லது பயிற்சி உதவியாளர்களா? என்பது பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. முன்னதாக அவர்கள் தங்கியிருந்த ஓட்டலில் உள்ள ஊழியர்கள் 2 பேர் கொரோனாவில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

தற்போது இங்கிலாந்து வீரர்களும், பயிற்சியாளர்களும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். மறுபடியும் ஒரு முறை கொரோனா சோதனை நடத்தப்பட்டு, மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைக்கு பிறகே எஞ்சிய இரு போட்டிகளும் நடக்குமா? என்பது தெரிய வரும்.

மணமகளுக்கு கொரோனா – பாதுகாப்பு உடையுடன் திருமணம் முடித்த ஜோடி!

இந்தியாவில், ராஜஸ்தானில் மணமகளுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், பாதுகாப்பு உடை அணிந்து ஜோடி ஒன்று திருமணம் செய்து கொண்டது.

ராஜஸ்தானில் ஷாபாத் நகரில் பரா பகுதியில் ஜோடி ஒன்று திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தது. திருமணத்துக்கு முன்னர் மணமக்களுக்கு கொரோனா பாதிப்பு பற்றிய பரிசோதனை நடத்தப்பட்டது.

இதன் முடிவுகள் வெளியானதில், மணமகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. எனினும், திருமணம் செய்து கொள்வதில் இருவரும் உறுதியாக இருந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து மணமக்கள் இருவரும் கொரோனா தடுப்புக்கான தனிநபர் பாதுகாப்பு உடைகளை அணிந்து கொண்டனர். பின்பு இருவரும் சடங்குகளை முறையாக பின்பற்றி திருமணம் செய்து கொண்டனர்.

அவர்களுக்கு திருமணம் நடத்தி வைத்த நபரும் தனிநபர் பாதுகாப்பு உடைகளை அணிந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் மணமகன் பாரம்பரிய தலைப்பாகை மற்றும் கையுறைகளை அணிந்து கொண்டார். இதேபோன்று மணமகளும், முக கவசம் மற்றும் கையுறைகளை அணிந்தபடி காணப்பட்டார்.

கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடித்து இந்த ஜோடி திருமணம் செய்து கொண்டது. இவர்களின் இந்த திருமணம் பற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலாக பரவி வருகிறது.

சந்திரசேகரனின் படத்தை பயன்படுத்தாதீர்! ராதாவுக்கு அனுசா விடுத்துள்ள எச்சரிக்கை!!

” எனது தந்தையான அமரர் பி. சந்திரசேகரனின் உருவப் படத்தையோ அல்லது அவரின் பெயரையோ, மலையக மக்கள் முன்னணி பயன்படுத்தக்கூடாது.” என்று  அண்ணா சந்திரசேகரன் தொழிலாளர் முன்னணியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி அனுஷா சந்திரசேகரன் வலியுறுத்தினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” எனது தந்தை அமரர் சந்திரசேகரன் ஆரம்பித்த தொழிற்சங்கத்தை தற்போது வியாபாரத்திற்காக தலைமைகள் பயன்படுத்துகின்றனர்.

தொழிற்சங்க செயற்பாடுகளை சிலர் தங்களது வயிற்றுப்பிழைப்பு வியாபாரமாக்குவதை நான் எதிர்க்கின்றேனே தவிர, தொழிற்சங்க செயற்பாட்டுக்கு ஒருபோதும் எதிரியல்ல. தொழிற்சங்கம் தொழிலாளர்களின் பாதுகாப்பிற்காக உருவாக்கப்படும் அமைப்பாகும்.

ஆனால், அவர்களுக்காக எதுவுமே செய்யாமல், தேர்தல் காலங்களிலும், அங்கத்துவ படிவம் சேர்க்கும் காலங்களிலும், பணத்தைக்காட்டி தம்மை வளர்த்துக்கொள்ளும் சில வியாபார தொழிற்சங்கங்களையே நான் எதிர்க்கின்றேன்.

எனது தந்தை அமரர் சந்திரசேகரன் ஆரம்பித்த தொழிற்சங்கத்தை தற்போது வியாபாரத்திற்காக தலைமைகள் பயன்படுத்துகின்றன.மக்களுக்காக தொழிற்சங்கம் ஊடாக எத்தனை வேலைத்திட்டங்கள் அல்லது சேவைகளை செய்தார்கள்?

எனவே, இனியும் வியாபார நோக்கத்திற்காக எனது தந்தையின் படத்தையோ அல்லது அவரின் பெயரை பயன்படுத்தி அங்கத்துவம் சேர்க்க வேண்டாம் என மலையக மக்கள் முன்னணிக்கும் மலையக தொழிலாளர் முன்னணிக்கும் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

துணிவிருந்தால் கட்சியைச் சேர்ந்தவர்களின் படத்தை காட்சிப்படுத்தி, அதன் கொள்கைகளைக் கூறி மக்களை சந்தியுங்கள்.”  – என்றும் அனுசா சவால் விடுத்துள்ளார்.

போகம்பறை சிறைச்சாலையில் மேலும் 181 கைதிகளுக்கு கொரோனா!

கண்டி போகம்பறை பழைய சிறைச்சாலையின் தனிமைப்படுத்தும் நிலையத்தில் உள்ள கைதிகளில் மேலும் 181 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி பழைய சிறைச்சாலையின் தனிமைப்படுத்தும் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள 363 கைதிகளுக்கு இதுவரை வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கண்டியிலுள்ள பழைய சிறைச்சாலையானது, தற்பொழுது தனிமைப்படுத்தும் நிலையமாக சிறைச்சாலைத் திணைக்களத்தினால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்கு கைதிகள் மாத்திரமே தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் சிறைச்சாலையின் தலைமை சிறை அதிகாரிக்கு கடந்த வார இறுதியில் கொவிட் வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டதுடன் அவர், தெல்தெனியவிலுள்ள கொவிட் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரியவருகிறது.

 

கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மேற்படி கைதிகளை தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களுக்கு அனுப்ப சிறைச்சாலை திணைக்களம் தற்பொழுது நடவடிக்கை எடுத்துள்ளதெனவும் மேலும் குறித்த பழைய சிறைச்சாலையில் சுமார் 300 கைதிகள் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சினிமா

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

செய்தி

தமிழக முதல்வராக பதவியேற்றார் ஜோசப் விஜய்!

0
தமிழக முதல்வராக பதவியேற்றார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை 10 மணியளவில் பதவியேற்பு விழா தொடங்கியது. வந்தே மாதரம் பாடல் இசைக்க பதவியேற்பு...

தவெக முதற்கட்ட அமைச்சரவை பட்டியல் வெளியீடு

0
தமிழக வெற்றிக் கழக அரசின் தவெக முதற்கட்ட அமைச்சர் பட்டியலை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் கீழ்காணும் பெயர்கள் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளன: புஸ்ஸி என்.ஆனந்த் ஆதவ் அர்ஜுனா கே.ஜி.அருண்ராஜ் கே.ஏ.செங்கோட்டையன் வெங்கடரமணன் நிர்மல்குமார் ராஜ்மோகன் டி.கே.பிரபு கீர்த்தனா 120 எம்எல்ஏக்களின் ஆதரவுக் கடிதங்களை ஆளுநரிடம் விஜய் நேற்று...

மரக்கறி விலைப்பட்டியல் (10.05.2026)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (10) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...