Home Blog Page 3740

தெற்காசிய ‘சவாட் கிக் பொக்சிங்’ போட்டிக்கு வடக்கிலிருந்து 12 பேர் தெரிவு!

‘ஓஸ்ரியா’ நாட்டில் எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தெற்காசிய கிண்ண சவாட் கிக் பொக்சிங் போட்டிக்கு வடக்கிலிருந்து 12 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

வடக்கு மாகாண சவாட் கிக் பொக்சிங் சங்கத்தின் தலைவரும், வடக்கு மாகாண சவாட் கிக் பொக்சிங் தலைமை பயிற்றுவிப்பாளருமான நந்தகுமார் தலைமையில் பயிற்சி பெற்ற 12 வீரர்கள் வடக்கிலிருந்து ஒஸ்ரியா நாட்டில் நடைபெறவுள்ள ‘தெற்காசிய சவாட் கிக் பொக்சிங்’ போட்டிக்கு பயணமாகவுள்ளனர்.

தெற்காசிய சவாட் கிக்பொக்சிங் அமைப்பின் பணிப்பாளரும், பயிற்றுவிப்பாளரும், இலங்கை சவாட் கிக் பொக்சிங் அமைப்பின் தலைவருமான சீ.பூ.பிரசாத் விக்கிரமசிங்க தலைமையில் இலங்கையை பிரதிபலித்து சவாட் கிக்பொக்சிங் வீரர்கள் ஒஸ்ரியா நாட்டைநோக்கி பயணமாகவுள்ளனர்.

பாகிஸ்தானில் கடந்த 2020 ஜனவரி நடைபெற்ற சர்வதேச சவாட் கிக்பொக்சிங் (திறந்த) போட்டிகளில் இலங்கையை பிரதிபலித்து கலந்து கொண்ட வடக்கை சேர்ந்த வீரர்களான ஸ்ரீதர்சன், நிரோஜன், ராகுல், வசிகரன், சஞ்சயன், நாகராஜா, கெவின் ஆகியோர் கலந்து கொண்டு இலங்கைக்கு ஏழு பதக்கங்களை பெற்றுக் கொடுத்த நிலையில் 2021 ஒஸ்ரியா நாட்டில் நடைபெறவுள்ள தெற்காசிய சவாட் கிக் பொக்சிங் போட்டிகளில் பங்குகொள்ள இவ்வீரர்களுடன்

மேலும் வடக்கிலிருந்து ஐந்து வீர, வீராங்கனைகள் இலங்கையில் நடைபெற்ற சர்வதேச போட்டியின் மூலமாக தெரிவு செய்யப்பட்டு, (பிரவீந்த், கிஷாளினி , விதுஷா கிருபாலினி, இமேஷா ஆகிய வீர, வீராங்கனைகள்)

ஒஸ்ரியா நாட்டில் நடைபெறவுள்ள சவாட் கிக் பொக்சிங் தெற்காசிய கிண்ணத்திற்கான போட்டிக்கு செல்ல உள்ளனர்

இப்போட்டிக்கு நான்கு பெண் வீராங்கனைகள் பங்குற்ற உள்ளனர் இதில் வவுனியா மாட்டத்தை சேர்ந்த ஒரு சகோதர மொழியைச் சேர்ந்த வீரங்கனையும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.வட மாகாணத்திலிருந்து 03 வீராங்கனைகளும், 09 வீரர்களும் பங்குபற்றவுள்ளனர்.

இப் போட்டி தொடர்பாக கருத்து தெரிவித்த வடக்கு மாகாண சவாட் கிக்பொக்சிங் அமைப்பின் தலைவரும், பயிற்றுவிப்பாளருமான எஸ்.நந்தகுமார் கருத்து தெரிவிக்கையில்….

இலங்கையில் ‘சவாட் கிக் பொக்சிங்’ அமைப்பின் தலைவர் சீ.பூ.பிரசாத் விக்கிரமசிங்க வின் தலைமையில் இயங்கி வருகின்றது. வடக்கின் ‘சவாட் கிக் பொக்சிங்’ பயிற்றுவிப்பாளராக செயற்பட்டு வரும் நத்தகுமாராகிய நான் வடக்கிலுள்ள திறமையான வீர, வீராங்கனைகளை இனங்கண்டு அவர்களை பயிற்றிவித்து சர்வதேச போட்டிகளுக்கு தயார்படுத்தி வருகின்றேன்.

அதிலும் வடமாகாணத்திலுள்ள எங்கள் தமிழ் இளைஞர், யுவதிகளுக்கு தற்காப்புக்கலை விளையாட்டுக்களின் ஊடாக சர்வதேச ரீதியிலான பல சாதனைகளை அடையச்செய்து சிறந்த எதிர்காலத்தை ஏற்ப்படுத்தி கொடுப்பதோடு, வடக்கில் சீரான ஒழுக்கமுடைய இளைஞர் சமுதாயத்தினை உருவாக்க துனைபுரிவோம் என்றும் இப்போட்டிக்கு செல்லும் வீர,வீராங்கனைகள் இப் போட்டிக்கு செல்வதற்கான அனைத்துவிதமான ஒத்துளைப்பினையும், அனுசரனையினையும் பெற்று தருவதற்கு வழிவகுக்குமாறும் கூறினார்.

அந்தவகையில் எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு ஒஸ்ரியா நாட்டில் நடைபெறவுள்ள ‘சவாட் கிக் பொக்சிங்’ போட்டிகளுக்கு நாட்டில் ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழ்நிலைக்கு மத்தியிலும் வீர, வீராங்கனைகளை தகுந்த அனுமதியுடனும், சுகாதார பாதுகாப்பின் பிரகாரமும் தகுந்த முறையில் தயார்படுத்தி வருகின்றேன். வடக்கிலிருந்து எனது தலைமையில் 12 வீர,வீராங்கனைகள் ‘தெற்காசிய சவாட் கிக் பொக்சிங்’ போட்டிகளில் கலந்து கொள்ள பயணமாகவுள்ளனர் என தெரிவித்தார்.

2ஆவது அலைமூலம் 24,318 பேருக்கு கொரோனா – 127 பேர் உயிரிழப்பு!

கொரோனா வைரஸ் 2 ஆவது அலைமூலம் நேற்றிரவுவரை (06) 24 ஆயிரத்து 318 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இவர்களில் இதுவரையில் 127 பேர் பலியாகியுள்ளனர்.

மினுவாங்கொட கொத்தணிமூலம் 3 ஆயிரத்து 59 பேருக்கும், பேலியகொடை கொத்தணிமூலம் 21 ஆயிரத்து 259 பேருக்கும் வைரஸ் தொற்றியுள்ளது. இவர்களில் 17 ஆயிரத்து 52 பேர்வரை குணமடைந்துள்ளனர். நேற்று மாத்திரம் 649பேருக்கு வைரஸ் தொற்றியது.

அதேவேளை, இலங்கையில் நேற்றுவரை மொத்தமாக 27 ஆயிரத்து 876 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இவர்களில் 20  ஆயிரத்து 459 பேர் குணமடைந்துள்ளனர்.

கொரோனாவால் நேற்று மூவர் உயிரிழந்தனர். இதன்படி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 140 ஆக அதிகரித்துள்ளது. 2ஆவது அலை உருவாவதற்கு முன்னர் 13 பேரே மரணித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நவீன், அர்ஜுன ரணதுங்க சஜித்துடன் சங்கமம்! 9 ஆம் திகதி யாப்பு வெளியீடு!!

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்க, ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச்செயலாளர் பாட்டளி சம்பிக்க ரணவக்க, முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க ஆகியோர் ஐக்கிய மக்கள் சக்தியுடன் சங்கமிக்கவுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பான இறுதி முடிவு எதிர்வரும் 9 ஆம் திகதி எடுக்கப்படவுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழுக் கூட்டம் சஜித் பிரேமதாச தலைமையில் எதிர்வரும் 9 ஆம் திகதி கட்சி தலைமையகத்தில் நடைபெறவுள்ளது. இதன்போது கட்சி யாப்பு தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது.

கட்சி யாப்பை கடந்த 30 ஆம் திகதி வெளியிடுவதற்கே தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும், சம்பிக்க, நவீன் போன்றவர்களின் வருகை தொடர்பில் வெளியான சமிக்ஞைகளையடுத்து அது பிற்போடப்பட்டது.

சம்பிக்க ரணவக்க, நவீன் திஸாநாயக்க ஆகியோர் ஐக்கிய மக்கள் சக்தியில் அங்கத்துவம்பெறும் பட்சத்தில் அவர்களுக்கு முக்கிய பதவிகள் வழங்கப்படவுள்ளன.

கொரோனா – மேலும் மூவர் உயிரிழப்பு! பலி எண்ணிக்கை 140 ஆக உயர்வு!!

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் மேலும் மூவர் உயிரிழந்துள்ளனர்.

மூன்று ஆண்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இவர்கள் மூவரும் 70 வயதைக் கடந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 140 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மாத்திரம் 648 பேருக்கு கொரோனா!

நாட்டில் மேலும் 286 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இன்று மாத்திரம் 648 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பேலியகொடை மற்றும் சிறைச்சாலை கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.

அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 27 ஆயிரத்து 877 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் இதுவரையில் 137 பேர் உயிரிழந்துள்ளனர். 20 ஆயிரத்து 460 பேர் குணமடைந்துள்ளனர்.

2 ஆவது அலைமூலம் (மினுவாங்கொட, பேலியகொட கொத்தணிகள்) இதுவரையில் 24 ஆயிரத்து 322  பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

ஆஸி.அணியை தோற்கடித்து தொடரை வென்றது இந்தியா – இன்றும் நடராஜன் அசத்தல்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2ஆவது ரி-20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. ஒரு நாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்த இந்திய அணி அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது.

இதில் கான்பெர்ராவில் நடந்த முதலாவது 20 ஓவர் போட்டியில் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்த நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி சிட்னி நகரில் இன்று நடைபெற்றது. இதில் நாணயச்சுழற்சியில் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதையடுத்து ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது.

ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் எடுத்துள்ளது. பந்து வீச்சை பொருத்தவரை நடராஜன் 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதையடுத்து, 195 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட் செய்த இந்திய அணி சிறப்பான தொடக்கம் பெற்றது. துவக்க வீரர் ஷிகர் தவான் 58 ரன்கள் எடுத்தார். இந்திய அணி 19.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி 20 தொடரையும் இந்திய அணி வென்றுள்ளது.

ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி தொடர்ந்தும் முன்னிலை!

லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் புள்ளி பட்டியலில் திஸர பெரேரா தலைமையிலான ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி முதலிடம் வகிக்கின்றது.

இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள அவ்வணி 4 போட்டிகளில் வெற்றிபெற்று 8 புள்ளிகளைப்பெற்றுள்ளது.

கொழும்பு கிங்ஸ் அணி 4 போட்டிகளில் வெற்றிபெற்று 8 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. ஒரு போட்டியில் அவ்வணி தோல்வியடைந்துள்ளது.

தம்புள்ள வைகிங் அணி மூன்றாம் இடத்திலும், கண்டி அணி நான்காம் இடத்திலும், காலி அணி ஐந்தாம் இடத்திலும் உள்ளன.

ஜப்னா, கொழும்பு ஆகிய அணிகள் அரையிறுதியை உறுதிப்படுத்தியுள்ளன.

கொழும்பிலிருந்து கெட்டபுலா தோட்டம் வந்த பெண்ணுக்கு கொரோனா!

நாவலப்பிட்டிய கெட்டபுலா நடுப்பிரிவு தோட்டத்தில் இன்று (6) கொரோனா வைரஸ் தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கொழும்பிலிருந்து கடந்த 25ஆம் திகதி வீட்டுக்கு வந்துள்ள பெண்ணொருவருக்கே பிசிஆர் பரிசோதனைமூலம் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த பெண்ணுடன் தொடர்பில் இருந்தவர்கள் சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களிடமும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

பசறை,கனவரல்ல பகுதியில் தந்தைக்கும், மகளுக்கும் கொரோனா!

பசறை பிரதேச சபைக்கு உட்பட்ட கனவரல்ல 13 ஆம் கட்டை பகுதியில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

டிசம்பர் 3ஆம் திகதி 22 பேரிடம் மேற்கொள்ள பட்ட பிசிஆர் பரிசோதனைகளின் முடிவுகளின் படி இன்று 36 வயதுடைய ஆணொருவருக்கும் 6 வயதுடைய சிறுமி ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் வீ. ராஜதுரை தெரிவித்தார்.

தொற்றாளர்கள் இருவரும் தந்தையும் மகளும் ஆவர். இவர்களை காகொல்ல தனிமைப் படுத்தல் முகாம்களுக்கு அழைத்து செல்வதற்காக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.

செய்தி ராமு தனராஜா

நாட்டில் மேலும் 362 பேருக்கு கொரோனா தொற்று!

நாட்டில் மேலும் 362 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பேலியகொடை மற்றும் சிறைச்சாலை கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.

அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 27 ஆயிரத்து 590 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் இதுவரையில் 130 பேர் உயிரிழந்துள்ளனர். 20 ஆயிரத்து 460 பேர் குணமடைந்துள்ளனர்.

2 ஆவது அலைமூலம் (மினுவாங்கொட, பேலியகொட கொத்தணிகள்) இதுவரையில் 24 ஆயிரத்து 36 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

சினிமா

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

செய்தி

தமிழக முதல்வராக பதவியேற்றார் ஜோசப் விஜய்!

0
தமிழக முதல்வராக பதவியேற்றார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை 10 மணியளவில் பதவியேற்பு விழா தொடங்கியது. வந்தே மாதரம் பாடல் இசைக்க பதவியேற்பு...

தவெக முதற்கட்ட அமைச்சரவை பட்டியல் வெளியீடு

0
தமிழக வெற்றிக் கழக அரசின் தவெக முதற்கட்ட அமைச்சர் பட்டியலை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் கீழ்காணும் பெயர்கள் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளன: புஸ்ஸி என்.ஆனந்த் ஆதவ் அர்ஜுனா கே.ஜி.அருண்ராஜ் கே.ஏ.செங்கோட்டையன் வெங்கடரமணன் நிர்மல்குமார் ராஜ்மோகன் டி.கே.பிரபு கீர்த்தனா 120 எம்எல்ஏக்களின் ஆதரவுக் கடிதங்களை ஆளுநரிடம் விஜய் நேற்று...

மரக்கறி விலைப்பட்டியல் (10.05.2026)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (10) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...