Home Blog Page 3742

இன்று மாத்திரம் 669 பேருக்கு கொரோனா தொற்று

நாட்டில் மேலும் 168 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பேலியகொடை மற்றும் சிறைச்சாலை கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது. இன்று மாத்திரம் 669 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 27 ஆயிரத்து 396 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் இதுவரையில் 130 பேர் உயிரிழந்துள்ளனர். 20 ஆயிரத்து 90 பேர் குணமடைந்துள்ளனர்.

2 ஆவது அலைமூலம் (மினுவாங்கொட, பேலியகொட கொத்தணிகள்) இதுவரையில் 23 ஆயிரத்து 674 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

தம்புள்ள வைகிங் அணி 9 ஓட்டங்களால் வெற்றி!

லங்கா பிரீமியர் லீக் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் தம்புள்ள வைகிங் அணி 9 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

காலி கிளாடியேட்டர்ஸ், தம்புள்ள வைகிங் ஆகிய ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற தம்புள்ள அணி, முதலில் துடுப்பாட்டத்தை தெரிவுசெய்தது.

இதன்படி களமிறங்கிய அவ்வணி 20 ஒவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 207 ஓட்டங்களைக் குவித்தது. உபுல் தரங்க 77 ஓட்டங்களையும், திக்வெல்ல 60 ஓட்டங்களையும், சசங்க 37 ஓட்டங்களையும் பெற்றனர். மொஹமட் அமீர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் 208 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய காலி கிளாடியேட்டர்ஸ் 20  ஓவர்கள் நிறைவில் 7  விக்கெட்டுக்களை 198 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. இதன்படி தம்புள்ள அணி ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

குணதிலக்க 78 ஓட்டங்களையும், அஸாம் கான் 55 ஓட்டங்களையும் பெற்றனர். புஷ்பகுமார 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

67 ஓட்டங்களைப்பெற்ற ஏ.கே. பெரோரா ஆட்ட நாயகனாக தெரிவுசெய்யப்பட்டார்.

நிலவில் கொடி நாட்டிய 2ஆவது நாடு என்ற சாதனையை படைத்தது சீனா!

அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக நிலவில் தங்கள் தேசிய கொடியை நாட்டிய இரண்டாவது நாடு என்ற பெருமையை சீனா பெற்றுள்ளது.

1969 ஆம் ஆண்டு நீல் ஆம்ஸ்ட்ராங் உட்பட அமெரிக்க விண்வெளி வீரர்கள் அப்பல்லோ விண்கலம் மூலம் நிலவுக்கு பயணம் மேற்கொண்டனர். இவர்கள் 1969 ஜூலை 20-ம் திகதி நிலவில் தரையிறங்கினர்.

அங்கு ஆராய்ச்சியை மேற்கொண்ட அமெரிக்க விண்வெளி வீரர்கள் அங்கு அமெரிக்க தேசிய கொடியை நாட்டினர். எட்வின் பஸ் ஆல்ட்ரின் அமெரிக்க கொடியை நிலவில் நாட்டினார். அதன் பின் ரஷியா, சீனா ஆகிய நாடுகள் நிலவில் ஆராய்ச்சி செய்த போதும் தனது நாட்டின் கொடியை நிலவில் நாட்டாமல் இருந்தது.

இதற்கிடையில், அமெரிக்கா, ரஷியாவுக்கு அடுத்தபடியாக நிலவில் ஆராய்சி செய்வதில் கடந்த சில ஆண்டுகளாக சீனா தீவிர கவனம் செலுத்தி வருகிறது.அந்த வகையில் 1976-ம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக நிலவிலிருந்து பாறை துகள்ளை பூமிக்கு எடுத்து வந்து ஆய்வு செய்ய சீனா திட்டமிட்டுள்ளது.

இதற்காக சேஞ்ச் 5 என்கிற ஆளில்லா விண்கலத்தை கடந்த 24ஆம் திகதி சீனா விண்ணில் செலுத்தியது. லாங் மார்ச் 5 ராக்கெட் என்ற ராக்கெட் மூலம் சேஞ்ச் 5 விண்கலம் நிலவுக்கு புறப்பட்டது.

இந்நிலையில், சேஞ்ச் 5 விண்கலம் நேற்று (டிசம்பர் 4) நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. அதன்பின் விண்கலத்தில் இருந்து வெளியே வந்த ரோவர் இயந்திரம் நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக இயங்கத்தொடங்கியது.

அதன் முதல் நடவடிக்கையாக ரோவரில் சீன விண்வெளி விஞ்ஞானிகளால் அமைக்கப்பட்டிருந்த சீன தேசிய கொடி நிலவின் மேற்பரப்பில் நாட்டப்பட்டது.

இதன் மூலம், நிலவில் கொடி நாட்டிய இரண்டாவது நாடு என்ற பெருமையை சீனா பெற்றது. நிலவில் பாறை துகள்களை எடுத்துக்கொண்டு சேஞ்ச் 5 விண்கலம் இம்மாத இறுதிக்குள் பூமிக்கு திரும்ப உள்ளது.

சீனாவின் இந்த திட்டம் வெற்றிகரமாக அமைந்தால் அமெரிக்கா, ரஷியாவிற்கு பிறகு நிலவில் உள்ள பாறைகளை ஆராய்ச்சிக்காக பூமிக்கு கொண்டுவரும் 3-வது நாடு என்ற பெருமையை சீனா பெறும்.

இதற்கிடையில், நிலவில் தங்கள் நாட்டின் கொடி நாட்டப்பட்ட புகைப்படத்தை சீன விண்வெளி ஆராய்சி நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. மேலும், ரோவர் இயந்திரம் மூலம் நிலவில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களையும் சீனா வெளியிட்டுள்ளது.

புதிய கட்சியின் ஆரம்ப விழா குறித்து ரஜினி ஆலோசனை!

டிசம்பர் 31ஆம் திகதி புதிய கட்சி தொடக்க விழா குறித்து அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தினார்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக 2017ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி அறிவித்தார். 3 ஆண்டுகளுக்கு பிறகு அவர் ஜனவரியில் கட்சி தொடக்கம், டிச.31 ஆம் திகதி அறிவிப்பு என டுவிட்டரில் அறிவித்தார். தொடர்ந்து அளித்த பேட்டியில்

தமிழகத்தின் தலை எழுத்தை மாற்ற வேண்டும், அனைத்தையும் மாற்ற வேண்டும், இப்போது இல்லைன்னா எப்போதும் இல்லை. தேர்தலில் நான் வெற்றி பெற்றால் அது மக்களின் வெற்றி. அரசியல் மாற்றம் தேவை… கட்டாயம் நிகழும். தமிழக மக்களுக்காக என் உயிரே போனாலும் சந்தோஷம் தான் என புதிய கட்சி அறிவிப்பை வெளியிட்டார்.

அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன்னோட்டமாக மக்கள் மன்ற பணிகளை ரஜினிகாந்த் துரிதப்படுத்துகிறார். இதுவரை 47,520 பூத் கமிட்டிகளுக்கு ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நடிகர் ரஜினிகாந்த் புதிய கட்சி தொடக்க விழா குறித்து இன்று ஆலோசனை நடத்தினார். இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்ஜுன மூர்த்தி,
மேற்பார்வையாளர் தமிழருவி மணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நாட்டில் மேலும் 501 பேருக்கு கொரோனா தொற்று!

நாட்டில் மேலும் 501 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பேலியகொடை மற்றும் சிறைச்சாலை கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.

அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 27 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

கொரோனாவால் இதுவரையில் 129 பேர் உயிரிழந்துள்ளனர். 20 ஆயிரத்து 90 பேர் குணமடைந்துள்ளனர்.

2 ஆவது அலைமூலம் (மினுவாங்கொட, பேலியகொட கொத்தணிகள்) இதுவரையில் 23 ஆயிரத்து 506 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

மேலும் 16 பேருக்கு கொரோனா! தண்டுகலா தோட்டம் ‘லொக்டவுன்’!!

ஹட்டன்,நோட்டன்பிரிட்ஜ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தண்டுகலா தோட்டத்தில் மேலும் 16 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து தண்டுகலா பகுதி முடக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் இருந்து எவரும் வெளியேறமுடியாது என்பதுடன் வெளியிடங்களில் இருந்து அங்கு வருவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

ஹத்துடன், வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கரபத்தனை பகுதியிலும் கொரோனா தொற்றாளர்கள் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தண்டுகலா தோட்டத்தில் ஏற்கனவே ஐந்து கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இதனையடுத்து அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவுகள் நேற்று இன்று (05.12.2020) வெளியாகின. இதில் 16 பேருக்கு வைரஸ்
தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்களை கொரோனா தனிமைப்படுத்தல் சிகிச்சை நிலையங்களுக்கு கொண்டுசெல்வதற்கு சுகாதார அதிகாரிகளால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் தொழில்செய்த நிலையில் ஊர் திரும்பியவர்கள்மூலமே இவர்களுக்கு வைரஸ் தொற்றியுள்ளது என சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

க.கிசாந்தன்

‘கொரோனா’வின் பிடிக்குள் இருந்து 20 ஆயிரத்து 90 பேர் மீண்டனர்!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 652 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 90 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் 6 ஆயிரத்து 339 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 130  பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 ஆயிரத்து 559 ஆக அதிகரித்துள்ளது.

மேபீல்ட் சாமஸ் தோட்ட காவல் தெய்வம் மருதை வீரசுவாமி

ஹெட்டன் மேபீல்ட் தோட்டத்தின் ஒரு பிரிவு சாமஸ்.செல்வ செழிப்பான ஊர். இந்த ஊருக்கு செல்வகந்தை என்ற தமிழ் பெயரும் உண்டு.இங்கு முத்து மாரியம்மனுக்கும் விநாயகப்பெருமானுக்கும் தனி,தனியே பெரிய ஆலயங்கள் உண்டு.இவற்றுக்கிடையே கறுப்புசாமி,ரோதமுனி,வாள்முனி, காளி,மருதைவீரன் போன்ற காவல் தெய்வங்களும் உண்டு. அவற்றில் மருதை வீரனுக்கு தனி சிறப்புண்டு.

சாமஸ் தோட்ட மக்களின் நம்பிக்கைக்குரிய காவலானாகவும் இந்த மக்களின் பல்வேறு வேண்டுதல்களை நிவர்த்திப்பவராகவும் மருதை வீரன் இருப்பது மட்டுமன்றி பலரின் குல தெய்வ வழிபிடகவும் மருதை வீரன் சுவாமி விளங்குகின்றார்.

மருதை வீரன் கோவில் சாமஸ் தோட்டத்துக்கு செல்லும் பிரதான பாதையில் இடதுபக்கமாக உள்ள மலையடிவாரத்தில் மலையில் இருந்து ஊற்றெடுத்து ஓடி வரும் நீரோடைக்கு அருகில் வானை முட்டும் மரங்கள் சூழ இயற்கை எழில் நிறைந்த இடத்தில் அமைந்துள்ளது.

இங்கு மதுரை வீரன் குதிரை வாகனத்தில் வெள்ளையம்மா,பொம்மியம்மா உடன் சமேதராய் அருள் பாலிக்கிறார். ஆலயத்தின் உள்ளே கல்லிலான பதிவு ஒன்றும் வேல்,சூலாயுதம் ,ஈட்டி என்பனவும் குதிரையின் பக்கத்தில் மதுரை வீரனின் காவலுக்கு துணைபுரிந்ததாக கருதப்படும் நாய் உருவம் ஒன்றும் உள்ளது.

இந்த ஆலயம் நமது மக்கள் இந்த பகுதிகளில் குடியமர்த்தப்பட்ட காலப்பகுதியில் அமைக்கப்பட்டதாகவும் அன்று தொடக்கம் இந்த தோட்ட மக்களால் வழிபடப்பட்டு வருவதாகவும் இந்த ஆலயத்தில் தற்போது பூசை வழிபாடுகளை மேற்கொண்டு வரும்
அறுபது வயதான நல்லு மாணிக்கவாசகம் என்பவர் குறிப்பிடுகிறார்.

இவருக்கும் பக்கபலமாக இவருடைய மருமகன் ஜெயகாந்த் திவாகர் என்ற இருபத்தொன்பது வயதான இளைஞர் இருப்பது குறிப்பிடத்தக்கது.இவரோடு தோட்டத்தில் உள்ள சாமஸ் சமூகநல மன்றத்தின் பங்களிப்பும் இளைஞர்களின் பங்களிப்பும் இன்றியமையாதது.

ஆரம்ப காலங்களில் அமரர் சிவனடியான் சின்னையா என்பவரே இந்த ஆலயத்தை அமைக்க இதற்கான பதிவுகளை வைத்ததாகவும் இந்த ஆலயத்தில் வழிபாடுகளை செய்து வந்ததாகவும் அறியமுடிகிறது இவரின் வழித்தோன்றல்களே இந்த ஆலயத்தை தோட்ட மக்களின் பங்களிப்போடு நிர்வகித்து வருகின்றனர்.

மதுரைவீரன் ஆலயத்தில் ஒவ்வொரு நாளும் விளக்கிட்டு கற்பூரம் ஏற்றப்படுகிறது. வெள்ளிக்கிழமைகளில் விசேட நேர்த்தி பூசைகள் இடம்பெறும்.

மதுரைவீரசுவாமிகளுக்கு வருடாந்தம் ஆடிமாதம் இரண்டு நாள் திருவிழா எடுக்கின்றனர் முதல்நாள் முகூர்தக்கால் ஊன்றி, சாமி அழைத்து, குறுப்பெடுத்து,
நள்ளிரவிலே விசேட பூசைகள் இடம்பெறும். மறுநாள் தப்பு, உடுக்கிசைத்து பெரிய பூசைகள் இடம்பெறு அன்னதானம் வழங்கப்படும்.

சாமஸ் தோட்ட மக்கள் மட்டுமன்றி இதனோடு சேர்ந்த மேபீல்ட்,லொக்கீல்,பிட்டவீன் போன்ற தோட்டங்களை சேர்ந்த மக்களும் இந்த ஆலய வழிபாடுகளில் கலந்து சிறப்பிப்பது குறிப்பிடத்தக்கது.

மதுரைவீரன் தமிழ் காவல் தெய்வங்களில் ஒருவராவார். இவர் வெள்ளையம்மாள், பொம்மி என்று இரு பெண் தெய்வங்களுடன் தம்பதி சமேதிரராக காட்சியளிப்பவர் பெரும்பாலான இந்துக் கோயில்களில் இவர்களுக்கென தனிச்சந்நிதி காணப்படுகிறது. மதுரைவீரனோடு அவருடைய இரு மனைவியரைம் சேர்த்தே பக்தர்கள் வழிபடுவர்.இவர் வீரத்திற்கும் காதலுக்கும் அடையாளமாக இருப்பவர்.

எழுத்து அ.ரெ.அருட்செல்வம்.

இந்தியாவுக்கு பதிலடி கொடுக்குமா ஆஸி? நாளை 2ஆவது T-20 போட்டி!

இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான இரண்டாவது ரி – 20 போட்டி நாளை நடைபெறவுள்ளது.

விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

இரு அணிகள் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. சிட்னியில் நடந்த முதல் போட்டியில் 66 ரன் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 51 ரன் வித்தியாசத்திலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. கான்பெராவில் நடந்த 3-வது போட்டியில் இந்தியா 13 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மூன்று 20 ஓவர் போட்டி தொடரில் கான்பெராவில் நேற்று நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 11 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் போட்டி சிட்னியில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

இந்திய அணி இந்த ஆட்டத்திலும் வென்று தொடரை கைப்பற்றுமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். ஒருநாள் தொடரை இழந்ததற்கு பதிலடி கொடுக்க 20 ஓவர் தொடரை வெல்வது அவசியமாகும்.

இந்திய அணி கடைசியாக ஆடிய 10 இருபது ஓவர் போட்டிளில் 9-ல் வெற்றி பெற்றது. ஒரே ஒரு ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.

காயம் அடைந்த ஆல் ரவுண்டர் ஜடேஜா எஞ்சிய 2 ஆட்டத்திலும் ஆட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக ‌ஷர்துல் தாகூர் 20 ஓவர் அணிக்கு தெரிவாகியுள்ளார்.

நாளைய ஆட்டம் இலங்கை நேரப்படி பிற்பகல் 1.40 மணிக்கு தொடங்குகிறது.

மோகினி எல்ல பகுதியில் மண்சரிவு – போக்குவரத்து ஸ்தம்பிதம்!

மஸ்கெலியா – நல்லதண்ணி பிரதான வீதியில் மோகினி எல்ல பகுதியில் இன்று காலை மண்டேமொன்று சரிந்து விழுந்ததால் பலமணிநேரம் போக்குவரத்தும் ஸ்தம்பிதமடைந்தது.

கடும் மழையுடன்கூடிய சீரற்ற காலநிலையாலேயே மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இதனால் மறே – மஸ்கெலியா, நல்லதண்ணி – மஸ்கெலியா, கெடஸ் – மஸ்கெலியா ஆகிய பகுதிகளுக்கான போக்குவரத்து சேவைகள் இடம்பெறவில்லை. இதனையடுத்து மண்திடலை அகற்றும் பணி இடம்பெற்றது.

மஸ்கெலியா நிருபர் – பெருமாள்

சினிமா

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

செய்தி

தமிழக முதல்வராக பதவியேற்றார் ஜோசப் விஜய்!

0
தமிழக முதல்வராக பதவியேற்றார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை 10 மணியளவில் பதவியேற்பு விழா தொடங்கியது. வந்தே மாதரம் பாடல் இசைக்க பதவியேற்பு...

தவெக முதற்கட்ட அமைச்சரவை பட்டியல் வெளியீடு

0
தமிழக வெற்றிக் கழக அரசின் தவெக முதற்கட்ட அமைச்சர் பட்டியலை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் கீழ்காணும் பெயர்கள் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளன: புஸ்ஸி என்.ஆனந்த் ஆதவ் அர்ஜுனா கே.ஜி.அருண்ராஜ் கே.ஏ.செங்கோட்டையன் வெங்கடரமணன் நிர்மல்குமார் ராஜ்மோகன் டி.கே.பிரபு கீர்த்தனா 120 எம்எல்ஏக்களின் ஆதரவுக் கடிதங்களை ஆளுநரிடம் விஜய் நேற்று...

மரக்கறி விலைப்பட்டியல் (10.05.2026)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (10) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...