Home Blog Page 3743

புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான விசேட அறிவித்தல்

2020 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்குமேல் புள்ளிகளைப்பெற்று சித்தியடைந்த மாணவர்கள், தரம் 6 இற்கு புதிய பாடசாலைக்குசெல்ல விரும்பின் அதற்கான விண்ணப்படிவம் தற்போது கோரப்பட்டுள்ளது.

விண்ணப்படிவத்தையும், வழிகாட்டல் அறிக்கையையும் பாடசாலை அதிபர்கள் ஊடாக பெற்றோர் பெற்றுக்கொள்ளலாம் என்று கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 10 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பங்கள் கையளிக்கப்படவேண்டும் என்றும், மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றிய பாடசாலை அதிபர்களிடம் அதனை கையளிக்கவேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மூடப்பட்டுள்ள பாடசாலைகளின் மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை பெறும்போது சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறும் கோரப்பட்டுள்ளது.

புரெவி புயலால் வடக்கில் 68 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு! இருவர் உயிரிழப்பு!!

புரெவி புயல் தாக்கம் மற்றும் சீரற்ற காலநிலையால் வடக்கு மாகாணத்தில் 20 ஆயிரத்து 717 குடும்பங்களைச் சேர்ந்த 68 ஆயிரத்து 630 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் நேற்று (4) மாலை விடுத்த நிலைவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருவர் உயிரிழந்துள்ளதுடன் அறுவர் காயமடைந்துள்ளனர்.  57 வீடுகள் முழுமையாகவும், 2 ஆயிரத்து 753 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 ஆயிரத்து 604 பேர் 58 பாதுகாப்பு மத்திய நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

யாழ்.மாவட்டம்
புரெவி புயலால் யாழ் மாவட்டத்தில் 16 ஆயிரத்து 250 குடும்பங்களைச்சேர்ந்த 54 ஆயிரத்து 163 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இருவர் உயிரிழந்துள்ளனர். அறுவர் காயமடைந்துள்ளனர். 55 வீடுகள் முழுமையாகவும், 2 ஆயிரத்து 443 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளன. 477 வர்த்தக நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 941 குடும்பங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்து 393 பேர் 36 பாதுகாப்பு மத்திய நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

மன்னார் மாவட்டம்

மன்னார் மாவட்டத்தில் 2 ஆயிரத்து 227 குடும்பங்களைச் சேர்ந்த 7 ஆயிரத்து 784 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 வீடுகள்
பகுதியளவு சேதமடைந்துள்ளன. 6 ஆயிரத்து 795 பேர் 18 பாதுகாப்பு மத்திய நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி

கிளிநொச்சி மாவட்டத்தில் புரெவி புயலால் ஆயிரத்து 462 குடும்பங்களைச் சேர்ந்த 4 ஆயிரத்து 334 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1 வீடு முழுமையாகவும், 210 வீடுகள் பகுதிளவும் சேதமடைந்துள்ளன. 4 வர்த்தக நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ன. 2 பாதுகாப்பு மத்திய நிலையங்களில் 88 குடும்பங்களைச் சேர்ந்த 134 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு

முல்லைத்தீவு மாவட்டத்தில் 641 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 925 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 37 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன. 282 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா மாவட்டத்தில் 137 குடும்பங்களைச் சேர்ந்த 424 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு மாவட்டத்தில் நேற்று 342 பேருக்கு கொரோனா!

நாட்டில் நேற்று அடையாளம் காணப்பட்ட 521 கொரோனா தொற்றாளர்களில் 342 பேர் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள். அத்துடன் கண்டி மாவட்டத்திலும் 91 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொழும்பில் கிராண்ட்பாஸ் பகுதியில் 81 பேருக்கும் வெலிக்கடையில் 73 பேருக்கும் தெமட்டகொடவில் 59 பேருக்கும் மருதானையில் 38 பேருக்கும் மட்டக்குளியில் 31 பேருக்கும் வெள்ளவத்தையில் 19 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், 44 பேர் களுத்துறையைச் சேர்ந்தவர்கள் என்றும் அம்பாறையில் 17 பேரும் கம்பஹாவில் 11 பேரும் புத்தளத்தில் 04 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் புத்தளத்தில் 03 பேரும் நுவரெலியா மற்றும் இரத்தினபுரியில் மேலும் 02 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மொரட்டுவ விபத்தில் இரு சிறுமிகள் பலி – கர்ப்பிணி தாய் படுகாயம்!

மொரட்டுவ பகுதியில் புதிய காலி வீதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் இரு சிறுமிகள் உயிரிழந்துள்ளனர். அத்துடன் அவர்களின் தாயான கர்ப்பிணி பெண்ணும் படுகாயமடைந்துள்ளார்.

இவர்கள் பாதையை கடக்க முற்பட்டவேளை, வேகமாக வந்த மோட்டார் சைக்கிளொன்று அவர்கள்மீது மோதுண்டதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் ஒன்று மற்றும் 7  வயதுடைய சிறுமிகளே உயிரிழந்துள்ளனர்.

படுகாயமடைந்த கர்ப்பிணிப் பெண் பானந்துறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

வட்டவளை, பொகவந்தலாவை உட்பட 4 பகுதிகளில் 6 பேருக்கு கொரோனா

ஹட்டனில் வட்டவளை, பொகவந்தலாவை உட்பட நான்கு பகுதிகளில் ஆறு கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நேற்று (4) வெளியான பிசிஆர் பரிசோதனை முடிவுகளிலேயே இவர்களுக்கு வைரஸ்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்கள்  மாத்தறை, ஹம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளிலுள்ள கொரோனா தனிமைப்படுத்தல் சிகிச்சை நிலையங்களுக்கு சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் கொண்டுசெல்லப்பட்டுள்ளனர் என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களிடமும் பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்படவுள்ளன.
ஹட்டன், சென்பகவத்தையில் ஒருவருக்கும், வட்டவளை லொனக் தோட்டதில் ஒருவருக்கும், பொகவந்தலாவை லின்போல்ட் தோட்டத்தில் ஒருவருக்கும், நோட்டன் தண்டுகலா கீழ் பிரிவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்குமே (தாய்,இரு மகள்மார்) இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.

அமளி துமளிக்கு மத்தியில் பன்விலை பிரதேச சபையின் பட்ஜட் நிறைவேற்றம்

கண்டி, பன்விலை பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் பெரும் அமளி துமளிக்கு மத்தியில் ஒரு மேலதிக வாக்கினால் நிறைவேற்றப்பட்டது.

வரவு – செலவுத் திட்டம் நேற்று வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு சபையின் தவிசாளர் ஏ.ஜீ.செனவிரட்ணவினால்  சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
இதனை கடுமையாக எதிர்த்த எதிர்த் தரப்பினர், வரவு செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பு ஒன்றைக் கோரினர். இதனை நிராகரித்த அவை முதல்வர் திருத்தங்களை எதிர்த்தரப்பினர் முன் வைக்கும் போது அதனை திருத்தங்களுடன் அடுத்த அமர்வில் முன் வைப்பதாகக் கூறினார். இதனை நிராகரித்த எதிர்த்தரப்பினர் மீண்டும் வாக்கெடுப்பைக் கோரி நின்றனர்.

இதனை நிராகரித்த தவிசாளர் சபை நடவடிக்கைகளை ஒத்தி வைக்க முனைந்த போது சபைத் தலைவர் பொறுப்பிலிருந்து விலக முடியாது என்று கூறி சபையை ஒத்தி வைக்க முடியாது என்று எதிர்த்தரப்பினர் ஆர்ப்பரித்தனர். கடும் எதிர்ப்புக்கு மத்தியில் சபை நடவடிக்கைகளை சபைத் தலைவர் ஒத்திவைத்தார்.

சபை நடவடிக்கைகள் சூடுபிடித்தால் பிரதேச சபையை சூழ்ந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதால் பன்விலை பொலிஸார் பாதுகாப்புக்கு அழைக்கப்பட்டனர்.பதற்றம் ஏற்படாதவாறு பாதுகாப்புக்கடமைகளில் அவர்கள் ஈடுபட்டனர்.

இதனிடையே மீண்டும் சபை நடவடிக்கைகளை கூட்டுமாறு செயலாளரிடம் எதிர்த்தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். மீண்டும் சபை நடவடிக்கைகளைக் கூட்டிய சபைத் தலைவர் எதிர்வரும் ஒன்றரை வருடங்களுக்காக அபிவிருத்தி கருதி வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு கோரிக்கை விடுத்தார்.

பொதுஜன பெரமுனவின் பங்காளிக்கட்சியான இ.தொ.கா உறுப்பினரும் உப தலைவருமான எம்.சிவகுமார் உள்ளிட்ட இ.தொ.கா உறுப்பினர்கள் பாதீட்டுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர். பின்னர் வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் பகிரங்க வாக்கெடுப்பு இடம் பெற்றது.

வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 8 வாக்குகளும்,எதிராக 7 வாக்குகளும் பிரயோகிக்கப்பட்டன. ஐக்கிய இடதுசாரி முன்னணியின் உறுப்பினர் பிரியந்த பதிரன நடு நிலைமை வகித்தார். இதன் காரணமாக ஒரு மேலதிக வாக்கினால் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டது.

கண்டி, போகம்பறை பகுதி ‘லொக்டவுன்’!

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக, கண்டி மாவட்டத்தில் போகம்பறை கிராமம் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கண்டி– போகம்பறை கிராமத்தில் 25பேர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக மத்திய மாகாண சுகாதார சேவைகள் அதிகாரி வைத்தியர் நிஹால் வீரசூரிய தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “மத்திய மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்கள் 568பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கண்டி மாவட்டத்தில் 301பேர், மாத்தளை மாவட்டத் தில் 52பேர், நுவரெலியா மாவட்டத்தில் 63பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கண்டி மாவட்டத்தில் போகம்பரை கிராமத்தில் 10பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன் போகம்பறை கிராமத்தில் 13குடும்பங்களைச் சேர்ந்த 25பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

எனவேதான் குறித்த பகுதியைத் தனிமைப்படுத்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்க இடமளியோம்’ – இராணுவத் தளபதி

வெளிநாடுகளில் உள்ள புலி உறுப்பினர்கள், இலங்கையில் ஸ்தீரமற்ற நிலைமையை உருவாக்குவதற்கு தொடர்ச்சியாக முயற்சிக்கின்றனர்.இதற்காக முன்னாள் போராளிகளையும், வறுமையில் இருப்பவர்களையும் அவர்கள் இலக்குவைக்கின்றனர். ஆனால் அவர்களின் திட்டங்கள் கடந்தகாலங்களைப்போன்றே முறியடிக்கப்படும்.”

இவ்வாறு இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா சூளுரைத்தார்.

முன்னாள் பெண் போராளியொருவர் கிளைமோருடன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில்  விபரிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” புலிகள் அமைப்பில் சிறது காலம் இருந்த பெண்ணொருவரே யாழ்ப்பாணம் இயக்கச்சி பகுதியில் இருந்து கிழக்கை நோக்கி குறித்த கிளைமோரை தனது கணவர் குழந்தை சகிதம் எடுத்துசென்றுள்ளார்.

இலங்கை இராணுவத்தின் புலனாய்வு பிரிவினர்தான் இதனை கண்டுபிடித்தனர். அதன்பின்னர் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் குறித்த பெண்ணின் வீட்டிற்கு பின்பகுதியில் இருந்து கைக்குண்டும் மீட்கப்பட்டுள்ளது.

2009 இல் புலிகள் அமைப்பை இலங்கை நிலப்பரப்பில் நாம் தோற்கடித்தோம். எனினும், வெளிநாட்டில் வாழும் புலி உறுப்பினர்கள் புலிகளின் பிரிவினைவாத கருத்தாடலுக்கு உயிர்கொடுக்கின்றனர். உள்நாட்டிலுள்ள சிலரும் அதற்கு ஒத்துழைக்கின்றனர்.  வடக்கில் ஸ்தீரமற்றதொரு நிலையை உருவாக்குவதே அவர்களின் இலக்கு. இதற்கு முன்னரும் முயற்சித்தனர். அந்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டன. இனியும் அதற்கு இடமளிக்கப்படாது. அவர்களால் முன்னெடுக்கப்படும் அனைத்து முயற்சிகளையும் தோற்கடித்து நாட்டையும், மக்களையும் பாதுகாப்போம்.

முன்னாள் போராளிகள் புனர்வாழ்வின் பின்னர் சமூகமயப்படுத்தப்பட்டுள்ளனர். வறுமையில் வாடுபவர்களும் இருக்கின்றனர். அவ்வாறானவர்களுக்கு பணம் வழங்கியே ஸ்தீரமற்ற நிலைமையை உருவாக்குவதற்கு முயற்சிக்கப்படுகின்றது.” – என்றார்.

‘கொரோனா’ மேலும் ஒருவர் உயிரிழப்பு! பலி எண்ணிக்கை 130 ஆக உயர்வு!!

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளனர்.

பிலியந்தல பகுதியைச் சேர்ந்த 72 வயதுடைய ஆணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 130 ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதிலுமுள்ள 103 ஆறுகளை தூய்மைப்படுத்துவதற்கு புதிய திட்டம்

நாடு முழுவதிலுமுள்ள 103 ஆறுகளின் தூய்மையைப் பாதுகாப்பதற்காக ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச தலைமையில் சிறப்புத் திட்டமொன்று ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்படும் என்று சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர  தெரிவித்தார்.

சுற்றாடல் அமைச்சுத் தொடர்பான ஆலோசனைக் குழுக் கூட்டம்  பாராளுமன்றத்தில் நடைபெற்றது. இதில் கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

நாட்டில் உள்ள பல ஆறுகள் வேகமாக மாசுபடுவதாகவும், இதன் விளைவாக ஏராளமான கழிவுகள் கடலிலும் அதைச் சுற்றியுள்ள சூழலிலும் ஆறுகள் வழியாக வெளியேற்றப்படுவதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

எனவே, குறித்த திட்டம் மக்களின் ஆதரவோடு செயல்படுத்தப்படும். ஆறுகள் உருவாகும் பகுதிகளின் தூய்மைப்படுத்துவதற்கான பொறுப்பு உரிய அதிகாரிகளுக்கு அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதன்படி, இது எதிர்காலத்தில் ‘ஆறுகளைப் பாதுகாப்போம்’ என்ற முதன்மைத்திட்டமாக இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் வலியுறுத்தினார்.

வடமேற்கு மாகாணத்தில் ஒரு பெரிய அளவிலான மணல் சுரங்கத் தொழில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதன் விளைவாக மதிப்புமிக்க தெங்கு நிலங்கள் விரைவாக இழக்கப்படுவதாகவும் இராஜாங்க அமைச்சர் டி.பி.ஹேரத் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவந்தார். குறித்த செயற்பாட்டுக்கு அனுமதி வழங்குவதை உடனடியாக நிறுத்துமாறு புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க அலுவலக அதிகாரிகளுக்கு அமைச்சர் இதன்போது உத்தரவிட்டார்.

குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துக் கொண்ட சுற்றுச்சூழல் அமைச்சின் செயலாளர் வைத்திய கலாநிதி அனில் ஜாசிங்க, இலங்கையில் கட்டிடங்கள் கட்டுவதற்கு மணல், கல் மற்றும் பிற பொருட்கள் உள்ளிட்ட மூலப்பொருட்களை வழங்குவதற்கான செயல்முறை மிகவும் முறைசாரா செயல்முறையாக மாறியுள்ளது என்றார்.

இதனால் கல், மணல் போன்ற கட்டுமானப் பொருட்களையும், களிமண் போன்ற தொழில்துறை மூலப்பொருட்களையும் இடைத்தரகர்கள் இல்லாமல் மக்களுக்கு குறைவான விலையில் வழங்குவதற்கான ஒரு வழிமுறையை வகுக்க ‘ஜனாதிபதி செயலணி’ ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அமைச்சின் செயலாளர் மேலும் குறிப்பிடுகையில், குறித்த செயலணியில் உறுப்பினராக உள்ளவர் என்ற வகையில் செயலணியின் அறிக்கையை எதிர்காலத்தில் வெளியிட எதிர்ப்பார்ப்பதாகவும் குறித்த விடயங்கள் செயல்படுத்தப்பட்ட பின்னர், கட்டுமான மூலப்பொருட்கள் துறையில் புரட்சிகர மாற்றம் ஏற்படும் என்றும் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் குறித்த பிரச்சினைக்கு அரசாங்கம் ஒரு நிரந்தர தீர்வை வழங்கும் என்றும், கடத்தல் காரர்களுக்கு பதிலாக அப்பகுதியில் வாழும் மக்களுக்கு பொருளாதார ரீதியில் நன்மைகளை பெற்றுத்தர முறையான திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் இதன்போது அமைச்சர் தெரிவித்தார்.

சினிமா

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

செய்தி

தமிழக முதல்வராக பதவியேற்றார் ஜோசப் விஜய்!

0
தமிழக முதல்வராக பதவியேற்றார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை 10 மணியளவில் பதவியேற்பு விழா தொடங்கியது. வந்தே மாதரம் பாடல் இசைக்க பதவியேற்பு...

தவெக முதற்கட்ட அமைச்சரவை பட்டியல் வெளியீடு

0
தமிழக வெற்றிக் கழக அரசின் தவெக முதற்கட்ட அமைச்சர் பட்டியலை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் கீழ்காணும் பெயர்கள் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளன: புஸ்ஸி என்.ஆனந்த் ஆதவ் அர்ஜுனா கே.ஜி.அருண்ராஜ் கே.ஏ.செங்கோட்டையன் வெங்கடரமணன் நிர்மல்குமார் ராஜ்மோகன் டி.கே.பிரபு கீர்த்தனா 120 எம்எல்ஏக்களின் ஆதரவுக் கடிதங்களை ஆளுநரிடம் விஜய் நேற்று...

மரக்கறி விலைப்பட்டியல் (10.05.2026)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (10) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...