Home Blog Page 3744

பொன்சேகாவுக்கு பதிலடி கொடுக்க தயாராகிறார் மனோ!

” சரத் பொன்சேகாவுக்கு இரண்டொரு தினங்களில் உரிய பதிலை வழங்குவேன்.” – என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட எம்.பியுமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

“மாவீரர் நாள் நினைவேந்தல் தொடர்பில் மனோ கணேசன் வெளியிட்டுள்ள கருத்து அவரின் தனிப்பட்ட அறிவிப்பாகும். அது ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு கிடையாது. புலிகளையும், ஜே.வி.பியினரையும் ஒன்றாக ஒப்பிடமுடியாது.” – என்று சரத் பொன்சேகா நேற்று பாராளுமன்றத்தில் அறிவித்திருந்தார்.

இது தொடர்பில் மனோ கணேசன் இன்று முகநூலில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார். அப்பதிவு வருமாறு,

” சரத் பொன்சேகா MP, என்னை பற்றி நேற்று சபையில் நானில்லாத வேளையில், “பேசி”யுள்ளார் என்பது என் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மரக்கொத்தி, மரம் மரமாக கொத்தி விட்டு, கடைசியில் வாழை மரத்துக்கு “குத்தி” மாட்டிக்கொள்ளுமாம். அதுபோல், இவர் என்னிடம் மாட்டிக்கொண்டுள்ளார்.

நான் அரசியல் “பொடியன்” அல்ல, அவரைவிட “சீனியர்” என்ற அடிப்படையில், அவருக்கு உரிய பதிலை, “சிங்கள பெளத்த வாக்குகள் எமக்கு தேவை, ஆனால் அது தமிழ், முஸ்லிம் வாக்குகளை இழந்து, இனவாதம் பேசி பெற முடியாது” என சிங்கள மொழியில், அவருக்கு புரியும் முகமாக இரண்டொரு தினங்களில், நான் பகிரங்கமாக தருவேன்.

இது பற்றி சற்று முன் ஐமச தலைவர் சஜித் பிரேமதாசாவிடம் விளக்கி கூறியுள்ளேன்.

பொறுத்திருங்கள்..!” – என்றுள்ளது.

இன்று மாத்திரம் 517 பேருக்கு கொரோனா தொற்று!

நாட்டில் மேலும் 265 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பேலியகொடை கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.

இன்று மாத்திரம் இதுவரையில் 517 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 26 ஆயிரத்து 555 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் இதுவரையில் 129 பேர் உயிரிழந்துள்ளனர். 19 ஆயிரத்து 438 பேர் குணமடைந்துள்ளனர்.

2 ஆவது அலைமூலம் (மினுவாங்கொட, பேலியகொட கொத்தணிகள்) இதுவரையில் 23 ஆயிரத்து 5 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

நாட்டில் மேலும் 252 பேருக்கு கொரோனா தொற்று!

நாட்டில் மேலும் 252 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பேலியகொடை கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.

அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 26 ஆயிரத்து 290 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் இதுவரையில் 129 பேர் உயிரிழந்துள்ளனர். 19 ஆயிரத்து 438 பேர் குணமடைந்துள்ளனர்.

2 ஆவது அலைமூலம் (மினுவாங்கொட, பேலியகொட கொத்தணிகள்) இதுவரையில் 22 ஆயிரத்து 740 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

கண்டியில் 45 பாடசாலைகளுக்கு மேலும் ஒரு வாரம் பூட்டு!

கண்டி நகரிலுள்ள அனைத்து பாடசாலைகளையும் மேலும் ஒரு வார காலத்துக்கு மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று மத்திய மாகாண ஆளுநர் தெரிவித்தார்.

கண்டி நகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 45 பாடசாலைகளை கடந்த 26ஆம் திகதி முதல் இன்று வரைமூடப்பட்டிருந்தன. இந்நிலையிலேயே மேலும் ஒரு வாரகாலம் விடுமுலை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கண்டியில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகின்றது. எனவே, வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அக்குறணை பகுதியிலும் 5 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.

 .

கிளைமோர் குண்டுடன் முன்னாள் போராளி கைது! பலகோணங்களில் விசாரணை!!

கிளைமோர் குண்டுடன் முன்னாள் பெண் போராளியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் இயக்கச்சி பகுதியில் இருந்து கிழக்கை நோக்கி எடுத்து செல்கையிலேயே இராணுவ புலனாய்வுப் பிரிவினரால் அவரின் திட்டம் முறியடிக்கப்பட்டது எனவும் அவர் கூறினார். கணவன் மற்றும் குழந்தை சகிதமே குறித்த பெண் சென்றுள்ளார்.

அதேவேளை இச்சம்பவம் தொடர்பில் பொலிஸாரும், இராணுவத்தினரும் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர். இலங்கையில் தாக்குதலொன்றுக்கு திட்டமிடப்பட்டதா என்ற கோணத்திலும் இவர்களை இயக்கியது யார் என்பதை கண்டறிவதற்கான புலன் விசாரணைகளும் ஆரம்பமாகியுள்ளன.

புலிகளின் வலயமைப்பு ஊடாகவே இவருக்கு உதவி கிடைத்துள்ளது எனவும், சுவிட்ஸர்லாந்தில் இருந்தே சிலர் இயக்கி இருக்ககூடும் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

” உள்நாட்டில் புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட்டாலும், அவ்வமைப்பின் செயற்பாட்டாளர்கள் வெளிநாட்டில் உள்ளனர். அவர்கள்தான் இவ்வாறான செயல்களுக்கு தூண்டுதலாக இருக்கின்றனர். எனினும், அவ்வாறான செயல்களுக்கு ஒருபோதும் இடமளிக்கப்படாது.” என்றும் இராணுவ தளபதி குறிப்பிட்டார்.

இவர்களை கைது செய்த இராணுவ அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்படவுள்ளது என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகர இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி வெற்றி! தமிழக வீரர் நடராஜன் அசத்தல்!!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிவருகிறது. ஒரு நாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்த இந்திய அணி அடுத்ததாக 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது.

முதலாவது 20 ஓவர் போட்டி கான்பெர்ராவில் உள்ள மனுகா ஓவல் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி இந்திய அணி துடுப்பெடுத்தாடியது.

இந்திய அணி முன்னணி வீரர் ஷிகர் தவான் ஒரு ஓட்டத்தில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். தலைவர் விராட் கோஹ்லி 9 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்தார். சஞ்சு சம்சன் 23 ஓட்டங்களிலும், மனிஷ் பாண்டே 2 ஓட்டங்களிலும், ஹர்திக் பாண்ட்யா 16 ஓட்டங்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கே.எல்.ராகுல் 51 ஓட்டங்களை எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய ஜடேஜா 23 பந்துகளில் 44 ஓட்டங்களை விளாசினார்.

இதனையடுத்து இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 161 ஓட்டங்கள் எடுத்தது. இதன்னடி 162 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது.

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய டி ஆர்சி 34 ஓட்டங்களிலும், அணித் தலைவர் ஆரோன் பின்ச் 35 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.  சிறப்பான ஆரம்பத்தை வழங்கினர். இதற்கடுத்து வந்த ஸ்டீவ் ஸ்மித் 12 ஓட்டங்களில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

இன்றைய ஆட்டத்தில் தமிழக வீரர் நடராஜனின் யார்க்கர் பந்துவீச்சில் டி ஆர்சி( 34 ஓட்டங்கள்), க்ளென் மேக்ஸ்வெல்( 2 ஓட்டங்கள்) மற்றும் மிட்செல் ஸ்டார்க்(1 ஓட்டம்) ஆகியோர் விக்கெட்டுகளை இழந்தனர். இதன் மூலம் நடராஜன் தனது சர்வதேச டி-20 விக்கெட் கணக்கை துவங்கியுள்ளார்.

இதற்கு அடுத்து வந்த ஹென்ரிக்ஸ் 30 ஓட்டங்களிலும், மேத்யூ வேய்ட் 7 ஓட்டங்களிலும், ஷான் அபோட் 12 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதியாக ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 150 ஓட்டங்கள் எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

26,038 பேருக்கு கொரோனா – 19,438 பேர் குணமடைவு – 129 பேர் உயிரிழப்பு!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும்  406 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 438 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் 6 ஆயிரத்து 471 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 129  பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 ஆயிரத்து 38 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் கொரோனா வைரஸ் 2 ஆவது அலைமூலம் நேற்றிரவுவரை (03) 22 ஆயிரத்து 484 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இவர்களில் இதுவரையில் 116 பேர் பலியாகியுள்ளனர். (ஒக்டோபர் 24 முதல் நேற்றுவரை)

‘உள்நாட்டு இறைவரித் திணைக்கள வருமானத்தில் 1.3 ட்ரில்லியன் ரூபா பற்றாக்குறை’

2018 ஆம் ஆண்டு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் வருமானத்தில் 1.3 ட்ரில்லியன் ரூபா பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரன தலைமையில்  நடைபெற்ற அரசாங்க கணக்குகள் பற்றிய குழுக் கூட்டத்தில் புலப்பட்டது.

வருமான பற்றாக்குறையில் பெரும்பகுதியானவை அரசாங்க நிறுவனங்களினால் செலுத்தப்பட வேண்டியவை என்றும், இவற்றில் சில நிறுவனங்கள் நிலுவைகளைச் செலுத்தக்கூடிய நிதி நிலமையில் இல்லையென சுயாதீன சபை தீர்மானித்திருப்பதாகவும் உள்நாட்டு வரித் திணைக்களத்தின்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதன்படி, இந்த நிறுவனங்கள் குறித்து முழு அறிக்கையை சமர்ப்பிக்குமாறு அரசாங்க கணக்குகள் பற்றிய குழு, உள்நாட்டு வரித் திணைக்களத்தை வலியுறுத்தியது. இந்த வருமானப் பற்றாக்குறைக்கு மற்றுமொரு காரணம் 3 பில்லியன் ரூபா பெறுமதியான 8060 மறுக்கப்பட்ட காசோலைகள் என்று கணக்காய்வாளர் திணைக்களம் சுட்டிக்காட்டியது.

அரசாங்க கணக்குகள் பற்றிய குழு முன்னிலையில் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அழைக்கப்பட்டிருந்தது. இதில் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், திறைசேரி மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல, இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளர் சி.பி.ஜே.சிறிவர்த்தன மற்றும் உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

2017ஆம் ஆண்டு முதல் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் ரமிஸ் என அழைக்கப்படும் ஒன்லைன் முறையொன்றை ஆரம்பித்திருப்பதாகவும், இதன் ஊடாக வரி சேகரிப்பை வினைத்திறனாக மேற்கொள்ள முடியும் என அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

குறித்த பொறிமுறை 4 பில்லியன் ரூபா செலவில் நிறுவப்பட்டபோதும் ஒவ்வொரு முறையும் வரி திருத்தங்கள் செய்யும்போதும் ரமிஸ் முறையில் குறித்த மாற்றங்களை மேற்கொள்ள 3 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணம் செலவிடப்பட்டிருப்பது பிரச்சினைக்குரியது என   பாராளுமன்ற உறுப்பினர்கள் இங்கு சுட்டிக்காட்டியிருந்தனர். எனவே, நிறுவனத்துடன் ஒரு முறை பணம் செலுத்தும் வழிமுறைக்கு வரி திருத்தங்கள் தொடர்பான ஒப்பந்தம் வர வேண்டும் என்று அமைச்சர் துமிந்த திஸாநாயக்க பரிந்துரைத்தார்.

எனினும், வரி செலுத்துனர்கள் மற்றும் வரி அறவீட்டாளர்களின் சௌகரியத்தைக் கருத்தில் கொண்டு ஐந்து வருடங்களுக்கு மாறாத வரிக் கொள்கையொன்று வரவுசெலவுத்திட்டத்தின் ஊடாக முன்மொழியப்பட்டிருப்பதாக திறைசேரி மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆர்ட்டிகல தெரிவித்தார்.

‘அதிகாரிகள்மீது எச்சில் துப்பிய நபருக்கு மறியல்’

அட்டுளுகம பகுதியில் பொது சுகாதார பரிசோதகர்கள் மீது எச்சில் துப்பிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை எதிர்வரும் 17 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாணந்துரை நீதவான் முன்னிலையில் குறித்த சந்தேகநபர் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்தே விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அட்டுளுகம பகுதியில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளரை அழைத்துவர செல்ல முயற்சித்த போது, குறித்த நபர் பொது சுகாதார பரிசோதகர்கள் மீது எச்சில் துப்பியதோடு, வாகனத்தில் செல்லவும் மறுப்பு தெரிவித்திருந்தார்.

இந்நிலையிலேயே அவர் இன்று கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

கொழும்பு மாவட்டத்தில் நேற்று 402 பேருக்கு கொரோனா!

நாட்டில் நேற்று 628 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இதில் 402 பேர் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 2ஆவது அலைமூலம் கொழும்பு மாவட்டத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

அத்துடன், கம்பஹா மாவட்டத்தில் 66 தொற்றாளர்களும், இரத்தினபுரி மாவட்டத்தில் 35 தொற்றாளர்களும் நேற்று அடையாளம் காணப்பட்டனர்.

இலங்கையில் கடந்த மார்ச் மாதம் முதல் நேற்று நள்ளிரவுவரை 26 ஆயிரத்து 37 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது. இவர்களில் 19 ஆயிரத்து 31 பேர் குணமடைந்துள்ளனர். 129 பேர் உயிரிழந்துள்ளனர்.

சினிமா

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

செய்தி

தமிழக முதல்வராக பதவியேற்றார் ஜோசப் விஜய்!

0
தமிழக முதல்வராக பதவியேற்றார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை 10 மணியளவில் பதவியேற்பு விழா தொடங்கியது. வந்தே மாதரம் பாடல் இசைக்க பதவியேற்பு...

தவெக முதற்கட்ட அமைச்சரவை பட்டியல் வெளியீடு

0
தமிழக வெற்றிக் கழக அரசின் தவெக முதற்கட்ட அமைச்சர் பட்டியலை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் கீழ்காணும் பெயர்கள் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளன: புஸ்ஸி என்.ஆனந்த் ஆதவ் அர்ஜுனா கே.ஜி.அருண்ராஜ் கே.ஏ.செங்கோட்டையன் வெங்கடரமணன் நிர்மல்குமார் ராஜ்மோகன் டி.கே.பிரபு கீர்த்தனா 120 எம்எல்ஏக்களின் ஆதரவுக் கடிதங்களை ஆளுநரிடம் விஜய் நேற்று...

மரக்கறி விலைப்பட்டியல் (10.05.2026)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (10) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...