நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிக்க உள்ளதால், அண்ணாத்த தான் அவரின் கடைசி படமாக இருக்கக்கூடும் என தகவல் பரவி வருகிறது.
வருகிற ஜனவரி மாதம் அரசியல் கட்சி தொடங்க உள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். இதனால் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு பாதிக்கப்படுமா என்ற கேள்வி ரஜினியிடம் எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பை திட்டமிட்டபடி முடித்து கொடுப்பது எனது கடமை. இன்னும் 40 சதவீத படப்பிடிப்பு எஞ்சியுள்ளது என கூறினார்.
ரஜினிகாந்த் முழுமையாக அரசியலில் இறங்கிவிட்டால் படங்களில் நடிக்க மாட்டார் என கூறப்படுகிறது. மேலும் அண்ணாத்த படம் தான் அவரின் கடைசி படமாக இருக்கக்கூடும் என தகவல் பரவி வருகிறது. தற்போது ரஜினியின் கைவசம் அண்ணாத்த படம் மட்டுமே உள்ளது. தற்போதைய நிலவரப்படி அவர் வேறு எந்த படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
191 பேரின் உயிரை காவுகொண்ட பாரிய விமானவிபத்து இடம்பெற்று இன்றுடன் 46 வருடங்களாகின்றன.
விமலசுரேந்திர நீர் மின்சார நிலையம் அமைந்துள்ள பகுதியான நோட்டன்பிரிஜ் நகரை அண்டிய பகுதியில் இவ்விபத்து 1974 இல் இடம்பெற்றது.
1974ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 4ஆம் திகதி இந்தோனேசியா சுராபயாவிலிருந்து 182 ஹஜ் பயணிகளை ஏற்றிக்கொண்டு மக்கா நோக்கிய பயணித்த மார்டின் எயார் டீ.சீ. 8 ரக பயணிகள் விமானமே சப்த கன்னியா என அறியப்படும் ஏழு கன்னியர் மலையில் ஐந்தாவது குன்றின் மீது மோதி சிதறியது. விமானமோட்டிகள் உட்பட 191 பேரும் அதே இடத்தில் உடல் சிதறி பலியாகினர்.
191 பேரின் உயிரை பலியெடுத்த இந்த ஏழு கன்னியர் மலையை ஆங்கிலத்தில் வில்கின் ஹில்ஸ் என அழைப்பர். விமானத்தின் கறுப்பு பெட்டியில் ஏற்பட்ட கோளாறே விபத்துக்கான காரணம் என கூறப்படுகின்றது. இவ்விபத்தில் பலியான 190 பேரின் உடலை தெப்பன் தோட்ட கொத்தலென என்ற இடத்தில் புதைத்தனர்.
அடையாளம் காணமுடியாதவாறு இருந்த விமானப் பெண்ணின் உடலை அவரது காதலர் விமானம் மூலம் இந்தோனோசியாவுக்கு கொண்டுச் சென்ற நெகிழ்ச்சியான சம்பவமும் இதன்போது இடம்பெற்றது. விபத்து ஏற்பட்ட மறுநாள் அதிகாலையில் இலங்கை இராணுவம்,விமானப்படையினர் மற்றும் பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விமானத்தின் கருப்பு பெட்டியை தேடிய போதிலும் அப்பாகம் கிடைக்கவில்லை.
விமான பாகங்களில் இரண்டு டயர்கள் மட்டுமே இன்றுவரை பாதுகாக்கப்பட்டுவருகின்றது. ஒரு டயர் பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது. இன்னொரு டயர் விமலசுரேந்திர நீர் மின்சார நிலையத்திற்கு செல்லும் வழியில் மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் உயிரிழந்தவர்களின் நினைவாக நினைவுதூபியும் அமைக்கப்பட்டுள்ளது.
தற்போதும் இந்த நினைவு தூபியை இறந்தவர்களின் உறவினர்கள் வருடாந்தம் வருகை தந்து பிராத்தனைகள் மேற்கொண்டு செல்கின்றனர். கொரோனா வைரஸ் தாக்கத்தால் இம்முறை அவ்வாறு நடைபெறவில்லை. இலங்கையில் நடந்த மிக மோசமான விமான விபத்தாக இது கருதப்படுகின்றது.
லங்கா பிரீமியர் லீக் தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 10 ஆவது ஆட்டத்தில் தம்புள்ள வைகிங் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.
கண்டி டஸ்கர்ஸ் , தம்புள்ள வைகிங் ஆகிய ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற கண்டி அணி, முதலில் துடுப்பாட்டத்தை தெரிவுசெய்தது.
இதன்படி களமிறங்கிய அவ்வணி 20 ஒவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 156 ஓட்டங்களைக் குவித்தது. குசல் மெண்டிஸ் 55 ஓட்டங்களையும், குசல் ஜனித் பெரேரா 41 ஓட்டங்களையும் பெற்றனர்.
பின்னர் 197 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய கண்டி அணி 19.2 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
67 ஓட்டங்களைப்பெற்ற ஏ.கே. பெரோரா ஆட்ட நாயகனாக தெரிவுசெய்யப்பட்டார்.
“இந்து கலாச்சார திணைக்களத்தில் இந்து பண்டிகைகள் பற்றிய நாட்காட்டியை பெற்றுக்கொண்டு, செயற்படும்படி, வடக்கு, கிழக்கு மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர்களுக்கும், யாழ், வன்னி பிராந்திய இராணுவ கட்டளை தளபதிகளுக்கும் கூறுங்கள்.”
இவ்வாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி., அமைச்சர்களான சரத் வீரசேகர, சமல் ராஜபக்ச ஆகியோரிடம் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இது தொடர்பில் மனோ கணேசன் கூறியதாவது,
” கடந்த வாரம் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வுகளையும், நவம்பர் 29 பெளர்ணமியன்று நடந்த “கார்திகை தீப” இந்து பண்டிகையையும், பொலிஸும், இராணுவமும் போட்டு குழப்பியடித்துள்ளன.
இராணுவத்தினரும், பொலிஸாரும், கார்த்திகை தீப விளக்கேற்றல்களை தடை செய்துள்ளார்கள். இத்தகைய நடைமுறைகள் மூலம் இந்நாட்டில் பெளத்தர்கள், இந்துகள் மத்தியில் ஒருபோதும் ஒருமைப்பாட்டை ஏற்படுத்த முடியாது.
இங்கே சபையில் வந்து, கார்த்திகை தீப நிகழ்வுகளை பாதுகாப்பு பிரிவினர் குழப்பும் சம்பவங்கள் நடைபெறவில்லை என சொல்ல வேண்டாம். இவை நடந்துள்ளன. இதற்கு எதிராக பொலிஸ் புகார்கூட செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி இங்கு வன்னி எம்பி சார்ல்ஸ் நிர்மலநாதன் சொல்வது முற்றிலும் உண்மை.
கடைசியாக எமது ஆட்சியில் எனது பொறுப்பிலேயே இந்து சமய துறை இருந்தது. ஆகவே மக்கள் என்னிடம் முறையிட்டுள்ளார்கள். அவை பற்றி இந்த சபையில் பேச வேண்டிய கடப்பாடு எனக்கு இருக்கிறது.” – என்றார்.
இலங்கையில் கொரோனா வைரஸ் 2 ஆவது அலைமூலம் நேற்றிரவுவரை (03) 22 ஆயிரத்து 484 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இவர்களில் இதுவரையில் 116 பேர் பலியாகியுள்ளனர். (ஒக்டோபர் 24 முதல் நேற்றுவரை)
நாட்டிலுள்ள 28 ஆயிரத்து 541 சிறைக்கைதிகளுள் 11 ஆயிரத்து 500 பேருக்கு இதுவரை பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று நீதி அமைச்சர் அலிசப்ரி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” 2020 நவம்பர் 29 ஆம்திகதிவரை இந்நாட்டில் 28 ஆயிரத்து 541 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 7 ஆயிரத்து 818 பேர் தண்டனை அனுபவிக்கும் கைதிகளாவர்.
நவம்பர் 29 ஆம் திகதியன்று மஹர சிறைச்சாலையில் 2 ஆயிரத்து 891 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 731 பேர் தண்டனை அனுபவிக்கும் கைதிகள் .மஹர சிறைச்சாலை சம்பவத்தில் இதுவரை 11 கைதிகள் உயிரிழந்துள்ளனர். 106 பேர் காயமடைந்துள்ளனர். இரு சிறைச்சாலை அதிகாரிகளும் காயமடைந்துள்ளனர்.
இதுவரை 11 ஆயிரத்து 500 கைதிகளுக்கு பிசிஆர் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. என்டிபொடி பரிசோதனையும் இடம்பெறுகின்றது.
அதேவேளை, சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி பரிந்துரைகளை முன்வைப்பதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. சம்பவத்துக்கான காரணம் என்ன, எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் இருப்பதற்கு முன்னெடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் எவை என்பன தொடர்பில் அந்த குழு பரிந்துரைகளை முன்வைக்கும். ‘- என்றார்.
HNB ஆரம்ப 9 மாதங்களுக்காக 7.7 வரிக்கு பின்னரான இலாபமாக (PAT) அறிக்கை செய்துள்ளதுடன் அந்த காலப்பகுதியில் HNB குழுமம் 8.8 பில்லியன் ரூபாவை வரிக்கு பின்னரான இலாபமாக அறிக்கை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
HNBஇன் தலைவர் தினேஷ் வீரக்கொடி
2020இன் முதல் 9 மாதங்களுக்காக பெற்றுக் கொண்ட நிதி செயல்திறன் குறித்து கருத்து தெரிவித்த HNBஇன் தலைவர் தினேஷ் வீரக்கொடி, ‘கொவிட்;-19 தொற்றுநோயின் முதல் அலை இலங்கையில் மிகவும் வெற்றிகரமாக கட்;டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. என்றபோதிலும் உலகளாவிய ரீதியில் தொற்றுநோய் படிப்படியாக அதிகரித்ததன் விளைவாக தற்போது நம் தேசம் என்ற வகையில் மீண்டுமொருமுறை தீர்மானம் மிக்க ஒரு கட்டத்திற்கு வந்துள்ளோம். தொற்றுநோயினால் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க சவால்களுக்கு மத்தியிலும் HNB தமது நிதிப் பலத்தின் நிலையான தன்மை மற்றும் சமாளிக்கக் கூடிய தன்மையைக் காட்டியது. அண்மையில் முடிஸ் இன்வெஸ்ட்மென்ட்ஸ் சேர்விஸ் நிறுவனத்தினால் முன்னெப்போதும் இல்லாத வகையில் இலங்கையின் இறையாண்மை தரப்படுத்தலில் இரு இடங்களால் வீழ்ச்சியடைந்தமையினால் நாடு பின்னடைவை சந்தித்தது. இந்த பின்னடைவின்போது நாட்டிலுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முனைவோருக்கு ஒத்துழைப்புக்களை வழங்குவதற்காக பிரான்ஸ் அபிவிருத்தி நிதி நிறுவனமான PROPARCO உடன் 60 மில்லியன் அமெரிக்கன் டொலர் நீண்டகால கடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட HNB க்கு முடிந்துள்ளதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.’ என தெரிவித்தார்.
இந்த வருடத்தின் ஆரம்பத்தில் நிதி நிலைமைகள் குறித்து இலேசான கொள்கையொன்றை பின்பற்றுவதை அடிப்படையான 400 லட்சம் சராகரி எடையுள்ள அத்தியாவசிய கடன் விகிதம் (AWPLR) வீழ்ச்சியடைந்தது. 2019ஆம் ஆண்டின் இதே காலப்பகுதிக்கு சமாந்திரமாக வட்டி விகிதம் 8.7% ஆல் குறைவடைந்து வங்கியின் வட்டி வருமானம் 79.6 பில்லியன் ரூபாவால் வீழ்ச்சியடைந்தது. கடந்த வருடத்திற்கு சமாந்திரமாக வட்டி செலவீனம் 7.3% ஆல் குறைந்து 45.8 பில்லியன் ரூபாவாக பதிவானது. அதன் விளைவாக தேறிய வட்டி வருமானம் (NII) கடந்த வருடம் முதல் 9 மாதங்களுக்கு சமாந்திரமாக 10.6% ஆல் குறைந்து 33.8 பில்லியன் ரூபாவாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கொவிட்-19 தொற்றுநோயின் தொடர்ச்சியான அழுத்தங்கள் இறக்குமதி தொடர்பில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள், வெளிநாட்டு கார்ட் கொடுக்கல் வாங்கல் அளவு குறைவடைந்தமை, இலங்கை மத்திய வங்கி ஆரம்பித்த கொவிட் நிவாரண யோசனை முறைமையின் ஒரு அங்கமாக பல்வேறு கட்டண குறைப்பு மற்றும் பொருளாதாரம் தொடர்பில் கீழ் மட்டத்திலுள்ளவர்களின் நடவடிக்கை போன்றவற்றின் விளைவாக தேறிய கட்டணம் மற்றும் தரகுப்பண (Commission) வருமானம் கடந்த வருடத்திற்கு சமாந்திரமாக 18.9% ஆல் குறைவடைந்து 5.4 பில்லியன் ரூபாவாக அமைந்திருந்தது. என்றபோதிலும், வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளி மற்றும் சுகாதார விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு டிஜிட்டல ஊடகங்களுக்கு மாறியமை காரணமாக டிஜிட்டல் வங்கி சேவைகள் மற்றும் தளங்களினால்; பெற்ற வருமானத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பை வங்கி வெளிக்காட்டியுள்ளது.
HNBஇன் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஜொனதன் அலஸ்
HNBஇன் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஜொனதன் அலஸ் கருத்து தெரிவிக்கையில், ‘கொவிட்;-19இன் இரண்டாவது அலை ஆரம்பிப்பதற்கு முன்னர் கடந்த சில மாதங்களில் சிறந்த பாதையில் பயணித்துக் கொண்டிருந்தது. என்றபோதிலும், இது உலகம் முழுவதிலும் ஏற்பட்டுள்ள பொதுவான நிலைமையாகவே கருதப்படுகிறது. அதனால் நாட்டில் கீழ் மட்டத்திலுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முனைவோரை மீண்டும்; கட்டியெழுப்புவதற்காக ‘புதிய பொது நிலைமைக்கு வடிவமைப்பதற்கு தேவையான ஒத்துழைப்புக்களை வழங்குவது முக்கியமாகும். அதன்படி, வங்கி செப்டெம்பர் மாதம் ஆகும் போது கொவிட்-19 தொற்றுநோயினால் அழுத்தங்களுக்கு உள்ளான தனிநபர்கள் மற்றும் தொழில்முனைவோர் 85,000க்கும் அதிகமானவர்களுக்கு கடன் தாமத நிவாரணம் வழங்குவதற்கு மேலதிகமாக, இலங்கை மத்திய வங்கியுடன் இணைந்து சௌபாக்கியா கடன் யோசனை முறையின் கீழ் 24 பில்லியன் ரூபா பணி மூலதன கடன் வசதிகள் வழங்கப்பட்டன. கடந்த இரு வருடங்களாக எதிர்கொண்ட பேராபத்தான நிலைமையினால் இடையூறுகளை எதிர்கொண்ட பிரிவுகளுக்கு தேவையான நிதி ஒத்;துழைபபுக்களை பெற்றுக் கொடுக்க நாட்டிலுள்ள வங்கித்;துறையினர் நடவடிக்கை எடுத்தனர். அதன்படி எமது
பொருளாதாரத்தில் மிகவும் கவனம் செலுத்தப்பட்ட பிரிவுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு குறித்த அதிகாரிகள் நிலையான, நீண்டகால தீர்வுகள் மற்றும் மிகவும் நிலையான தீர்வு நிதி முறைமைகளை அறிமுகம் செய்துள்ளதாக நாம் நம்புகிறோம்.’ என தெரிவித்தார்.
கொவிடின் தாக்கத்தை நிர்வகிப்பது, வாடிக்கையாளர்கள் மற்றும் சமூகத்திற்கான உதவிகளை உள்ளடக்குதல் தொடர்பாக HNBஇன் முயற்சிகளை அங்கீகரிக்கும் வகயைில்; டிஜிட்டல் தளங்கள் மூலம் பரிமாற்றங்களை இயக்குதல்; இடர்களை நிர்வகித்தல், டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்ப தளங்களை மேம்படுத்துதல் போன்றவற்றில் தீவிரம் காட்டியமை போன்றவற்றிற்கு ஆசிய வங்கியாளர் 2020ஆம் ஆண்ற்கான விருதுவழங்கும் நிகழ்வில் HNBஐ ‘கொவிட்-19இன் போது இலங்கையில் சிறந்த நிர்வகிக்கப்பட்ட வங்கி’ என அண்மையில் அறிவித்தது.
மேலும் கருத்து தெரிவித்த ஜொனதன் அலஸ், “தொற்றுநோய்க்கு மத்தியில் எமது நம்பிக்கையான வாடிக்கையாளர்களுக்கு தொடர்ச்சியான சேவையை உறுதி செய்வதற்காக பல தடைகளை துணிவுடன் தாண்டிய HNBஇன் நிர்வாகத்திற்கும் பணியாளர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், எமது மதிப்பு மிக்க வாடிக்கையாளர்களுக்கு எனது ஆழ்ந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இந்த சோதனை நிறைந்த காலங்களில் எம்மீது நம்பிக்கை வைத்திருந்த முதலீட்டாளர்கள் மற்றும் ஏனைய பங்குதாரர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என தெரிவித்தார்.
2020ஆம் ஆண்டின் முற்பகுதியில், ‘த பேங்கர்’ சஞ்சிகையினால் உலகில் சிறந்த 1000 வங்கிகள் பெயர் பட்டியலில் இடம்பிடித்தமைக்கு மேலதிகமாக இலங்கையின் விசேட வாடிக்கையாளர் வங்கியென்ற விருதினை 11வது தடவையாகவும் வென்றது. உள்ளுரில் பிஸ்னஸ் டுடே Top 10 தரப்படுத்தலில் முதல் 30 நிறுவனங்களில் முதலாம் இடத்தில் HNB உள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டில் மேலும் 278 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பேலியகொடை கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.
இன்று இதுவரையில் 628 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 26 ஆயிரத்து 38 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவால் இதுவரையில் 129 பேர் உயிரிழந்துள்ளனர். 19 ஆயிரத்து 32 பேர் குணமடைந்துள்ளனர்.
2 ஆவது அலைமூலம் (மினுவாங்கொட, பேலியகொட கொத்தணிகள்) இதுவரையில் 22 ஆயிரத்து 499 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.
இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் மேலும் ஐவர் உயிரிழந்துள்ளனர்.
நான்கு ஆண்களும், பெண்ணொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இவர்களில் நால்வர் 70 வயதடைக்கடந்தவர்கள். அத்துடன், அனைவரும் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 129 ஆக அதிகரித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 லட்சத்து 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.
தற்போதைய நிலவரப்படி, 6 கோடியே 50 லட்சத்து 75 ஆயிரத்து 137 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனாவில் இருந்து 4 கோடியே 51 லட்சத்து 36 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...
தமிழக முதல்வராக பதவியேற்றார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய்.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை 10 மணியளவில் பதவியேற்பு விழா தொடங்கியது. வந்தே மாதரம் பாடல் இசைக்க பதவியேற்பு...