Home Blog Page 3746

‘பதுளையில் 5 தோட்ட வைத்தியசாலைகளுக்கு புதிய வைத்தியர்கள்’

பதுளை மாவட்டத்தில் பெருந்தோட்ட வைத்தியசாலைகளில் நிலவும் குறைப்பாடுகள் மற்றும் வைத்தியர் பற்றாக்குறையை தீர்ப்பதற்காக பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்பு செயலாளர் செந்தில் தொண்டமான் தொடர்ச்சியாக முயற்சிகளை எடுத்து வருகிறார்.

வைத்தியர் பற்றாக்குறைக்கு தீர்வுகாண பதுளை மாவட்டத்திற்கு பொறுப்பான அரச மருத்து அதிகாரிகளுடன் செந்தில் தொண்டமான் நீண்டகாலமாக கலந்துரையாடல்களை நடத்தி வந்ததுடன், இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஐந்து தோட்டங்களில் நிலவும் வைத்தியர் வெற்றிடங்களை பூர்த்திசெய்ய அரச மருத்துவ அதிகாரிகள் இணக்கம் வெளிட்டுள்ளனர்.

அதன் பிரகாரம் சாரணியா, ஒக்டன், மாஹதேவ, மெடிக்கத்தன, ரோபரி ஆகிய தோட்டங்களுக்கு புதிய வைத்தியர்கள் நியமிக்கப்படவுள்ளனர். எதிர்வரும் 8அம் திகதிக்குள் இந்த நியமனங்கள் வழங்கப்படுமென மருத்துவ அதிகாரிகள் செந்தில் தொண்டமானிடம் உறுதியளித்துள்ளனர்.

சாரணியா, ஒப்டன், மாதேவ, மெடிக்கத்தன, ரோபரி உள்ளிட்ட தோட்டங்களில் வாழும் ஆயிரக்கணக்கான மக்கள் நீண்டகாலமாக வைத்தியரின்றி பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வந்தனர். புதிய வைத்தியர்களின் நியமனத்துடன், இவர்கள் வெளி இடங்களுக்கு செல்லாது தமது மருத்துத் தேவைகளை பூர்த்திசெய்துக்கொள்ள முடியும்.

கடந்த காலத்தில் பல தேர்தல் மேடைகளில் இத்தோட்டங்களுக்கு வைத்தியர்கள் நியமிக்கப்படுவார்கௌ பல அரசியல்வாதிகள் வாக்குறுதிகளை அள்ளி வீசியிருந்த போதிலும் எவராலும் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாது போனது. என்றாலும், செந்தில் தொண்டமான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

‘மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம்’ – ரஜினி அதிரடி அறிவிப்பு!

நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ரஜினி தனது மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆலோசனை நடத்தினார். ஆனால் அரசியல் கட்சி துவங்குவது குறித்த எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் மௌனமாக இருந்து விட்டார். அறிவிப்பையும் வெளியிடவில்லை. விரைவில் முடிவு எடுப்பதாக தெரிவித்தார்.

இந்நிலையில் ரஜினிகாந்த் இன்று டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

ஜனவரியில் கட்சித் துவக்கம்,
டிசம்பர் 31ல் திகதி அறிவிப்பு.
#மாத்துவோம்_எல்லாத்தையும்_மாத்துவோம்
#இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல

வரப்போகிற சட்டமன்ற தேர்தலில், மக்களுடைய பேராதரவுடன் வெற்றிப்பெற்று, தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மதச்சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம்.

அற்புதம்… அதிசயம்… நிகழும்!!!

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

‘கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தையில் வெளிப்படைதன்மை அவசியம்’

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை நிர்ணயிக்கின்ற கூட்டு ஒப்பந்தப் தொடர்பான பேச்சுவார்த்தை இரகசியமாக இடம்பெற கூடாது என ஐக்கிய தொழிலாளர் ஒன்றியத்தின் தலைவர் சண்முகம் திருச்செல்வம் வலியுறுத்தினார்.

ஐக்கிய தொழிலாளர் ஒன்றியத்தின் காரியாலயத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் விடயம் தொடர்பான பேச்சிவார்த்தையினை கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாதிடும் தொழிற்சங்கங்கள் இரகசியமாக நடத்தாமல் மக்கள் மத்தியில் வெளிப்படையாக நடத்த வேண்டும்.

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா என்பது அடிப்படை சம்பளமாக இருக்க வேண்டுமே தவிர சகல கொடுப்பனவுகளையும் உள்ளக்கிய சம்பளமாக இருக்ககூடாது.

2021ஆம் ஆண்டிற்கான வரவு – செலவு திட்டத்தில் பிரதமர் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ருபாய் வழங்கப்படுமென முன்மொழிந்தார். ஆனால் இதுவரையிலும் பெருந்தோட்ட நிறுவனங்கள் எவ்வித இணக்கபாட்டுக்கும் வரவில்லை.

தொழிலாளர்களுக்கு வழங்கபட உள்ள ஆயிரம் ரூபா சம்பளம் அடிப்படை சம்பளமாக வழங்கபடாவிட்டால் தோட்ட தொழிலாளர்களின் உரிமைக்காக வீதியில் இறங்கி போராட ஐக்கிய தொழிலாளர் ஒன்றியம் தயாராக உள்ளது.” – என்றார்.

 

கொழும்பு மாவட்டத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா!

கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2ஆவது அலையால் ஒக்டோபர் 4 ஆம் திகதியில் இருந்து நேற்றுவரை கொழும்பு மாவட்டத்தில் 10 ஆயிரத்து 140 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. நேற்று மாத்திரம் 402 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன், 2ஆவது அலைமூலம் நுவரெலியா மாவட்டத்தில் 147 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இலங்கையில் மொத்த தொற்றாளர்கள் – 25,760

குணமடைவு – 19,032

உயிரிழப்பு – 124

சிகிச்சை – 6604

மாவட்ட ரீதியில் தொற்றாளர்களின் விபரம்

4ஆவது போட்டியிலும் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி வெற்றிநடை!

காலி கிளாடியேட்டர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில்  ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி, 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

லங்கா பிரிமியர் லீக் தொடரில் காலி கிளாடியேட்டர்ஸ் மற்றும் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெற்றது.

நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற காலி கிளாடியேட்டர்ஸ் அணி துடுப்பாட்டத்தை தெரிவுசெய்தது. இதன்படி துடுப்பெடுத்தாட அவ்வணி  , 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 170 ஓட்டங்களை குவித்தது. குணதிலக்க 56 ஓட்டங்களைப் பெற்றார்.

பின்னர் 171 என்ற வெற்றியிலக்கை நோக்கு துடுப்பெடுத்தாடிய ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி 19.4 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றிபெற்றது. பெர்ணான்டோ 84 ஓட்டங்களைப்பெற்றார்.

4ஆவது போட்டியிலும் வெற்றிபெற்றுள்ள ஜப்னா அணி 8 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முன்னிலை வகிக்கின்றது.

நாட்டில் மேலும் 350 பேருக்கு கொரோனா தொற்று!

நாட்டில் மேலும் 350 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பேலியகொடை கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.

அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்து 760 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் இதுவரையில் 124 பேர் உயிரிழந்துள்ளனர். 19 ஆயிரத்து 32 பேர் குணமடைந்துள்ளனர்.

2 ஆவது அலைமூலம் (மினுவாங்கொட, பேலியகொட கொத்தணிகள்) இதுவரையில் 22 ஆயிரத்து  221 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

26 ஆயிரத்தை தாண்டியது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

நாட்டில் மேலும் 350 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பேலியகொடை கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.

அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 26 ஆயிரத்து 110 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் இதுவரையில் 124 பேர் உயிரிழந்துள்ளனர். 19 ஆயிரத்து 32 பேர் குணமடைந்துள்ளனர்.

2 ஆவது அலைமூலம் (மினுவாங்கொட, பேலியகொட கொத்தணிகள்) இதுவரையில் 22 ஆயிரத்து  221 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகமாக குஷானி ரோஹணதீர நியமனம்!

சட்டத்தரணி  குஷானி ரோஹணதீர, பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் மற்றும் பணியாட்கள் தொகுதியின் பிரதானியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்கவின் பரிந்துரைக்கு அமைய,  சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, அதற்கான அனுமதியை வழங்கியுள்ளார்.

பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் மற்றும் பணியாட்கள் தொகுதியின் பிரதானியாக பணியாற்றிய நீல் இத்தவல, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்ததை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு   குஷானி ரோஹணதீர அவர்கள் இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளார்.

ரோஹணதீர  2012 ஆம் ஆண்டு முதல் பாராளுமன்றத்தின் உதவிச் செயலாளர் நாயகமாக (நிர்வாகம்) பதவி வகித்ததுடன், 1999 ஆம் ஆண்டில் பாராளுமன்ற அதிகாரியாக இலங்கை பாராளுமன்ற சேவைக்கு இணைந்துகொண்டார்.

அம்பலாக்கொட தர்மாஷோக்க வித்தியாலயத்தின் புகழ்பெற்ற பழைய மாணவியான இவர், கொழும்பு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான இளமானிப் பட்டத்தைப் பூர்த்தி செய்துள்ளார். அதனை அடுத்து இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் சட்டத்துறை இளமானிப்பட்டத்தை பூர்த்தி செய்த இவர் சட்டக் கல்லூரியில் பரீட்சைக்குத் தோற்றி சட்டத்தரணியாக உயர்நீதிமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்துள்ளார்.

‘கொரோனா’ – இன்று 728 பேர் குணமடைவு!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும்  728 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 32ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் 6 ஆயிரத்து 254 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 124  பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்து 410 ஆக அதிகரித்துள்ளது.

புரெவி புயலால் வடக்கில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

புரெவி புயலினால் வடக்கு மாகாணத்தில் 12 ஆயிரத்துக்கும்  மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று மதியம் 12 மணிக்கு வெளியிட்டுள்ள நாளாந்த நிலைவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி மன்னார் மாவட்டத்தில் 2 ஆயிரத்து 236 குடும்பங்களைச் சேர்ந்த7 ஆயிரத்து 749 பேரும், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 829 குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 986 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சியில் 41 பேரும், முல்லைத்தீவில் 405 பேரும், வவுனியாவில் 236 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேவெளை, புரெவி புயலால் 15 வீடுகள் முழுமையாகவும், 173 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளன. 7 ஆயிரத்து 778 பேர் 27 பாதுகாப்பு நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

சினிமா

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

செய்தி

தமிழக முதல்வராக பதவியேற்றார் ஜோசப் விஜய்!

0
தமிழக முதல்வராக பதவியேற்றார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை 10 மணியளவில் பதவியேற்பு விழா தொடங்கியது. வந்தே மாதரம் பாடல் இசைக்க பதவியேற்பு...

தவெக முதற்கட்ட அமைச்சரவை பட்டியல் வெளியீடு

0
தமிழக வெற்றிக் கழக அரசின் தவெக முதற்கட்ட அமைச்சர் பட்டியலை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் கீழ்காணும் பெயர்கள் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளன: புஸ்ஸி என்.ஆனந்த் ஆதவ் அர்ஜுனா கே.ஜி.அருண்ராஜ் கே.ஏ.செங்கோட்டையன் வெங்கடரமணன் நிர்மல்குமார் ராஜ்மோகன் டி.கே.பிரபு கீர்த்தனா 120 எம்எல்ஏக்களின் ஆதரவுக் கடிதங்களை ஆளுநரிடம் விஜய் நேற்று...

மரக்கறி விலைப்பட்டியல் (10.05.2026)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (10) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...