Home Blog Page 3747

மனோவின் கருத்துக்கு எதிராக பொன்சேகா போர்க்கொடி!

“மாவீரர் நாள் நினைவேந்தல் தொடர்பில் மனோ கணேசன் வெளியிட்டுள்ள கருத்து அவரின் தனிப்பட்ட அறிவிப்பாகும். அது ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு கிடையாது. புலிகளையும், ஜே.வி.பியினரையும் ஒன்றாக ஒப்பிடமுடியாது. புலிகள் தடைசெய்யப்பட்ட அமைப்பாகும். அவ்வமைப்பினர் தனி நாட்டை உருவாக்கவே போராடினர்.”

இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட்மார்ஷல் சரத்பொன்சேகா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அத்துடன், போரினால் 40 ஆயிரம் சிவிலியன்கள் கொல்லப்பட்டுள்ளனர் என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டையும் அவர் நிராகரித்தார்.

சினிமா பாணியில் கொள்ளை! இளைஞன் மடக்கிப்பிடிப்பு!!

கம்பளை குறுந்துவத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெட்டகேதெனிய பகுதியில் தொடர்ச்சியாக கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட 19 வயது இளைஞர் ஒருவர் குறுந்துவத்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெட்டகேதெனிய பகுதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றுக்குள் பட்டபகலில் மிகவும் சூட்சுமமான முறையில் நுழைந்து பணத்தை கொள்ளையடித்து தப்பிச்சென்றுள்ளார். இது தொடர்பில் வர்த்தக நிலையத்தின் உரிமையாளரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இதனையடுத்து சிசிரிவி கமராக்களின் உதவியுடன் பொலிஸார் தேடுதல் வேட்டையில் இறங்கி, குறுந்துவத்த – மாரகந்த பகுதியில் சந்தேக நபர் தலைமறைவாகியிருந்த நிலையில் மடக்கிப்பிடித்துள்ளனர். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் பல தகவல்கள் அம்பலமாகியுள்ளன.

வெட்டகேதெனிய உட்பட அதனை அண்மித்த பகுதிகளில் உள்ள கிராமங்களில் வீடுகளுக்கு புகுந்து இவரே தங்க ஆபணரம் உள்ளிட்ட பெறுமதிமிக்க பொருட்களை களவாடியுள்ளார் என்பது கண்டறியப்பட்டது.

இவ்வாறு களவாடப்பட்ட தங்க ஆபரணங்களை நபரொருவரின் உதவியுடன் கம்பளை நகரிலுள்ள தங்கநகை அடகுபிடிக்கும் நிலையங்களில் அடகுவைத்து பணம் பெற்றுள்ளார். அப்பணத்தில் சொகுசு மோட்டார் சைக்கிளொன்றையும் வாங்கியுள்ளார். தவறான நடத்தைகள் காரணமாக இவர் ஒன்றரை வருடங்கள் சிறையில் இருந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.

19 வயதான குறித்த இளைஞரிடமிருந்து மோட்டார் சைக்கிள், அடகுவைக்கப்பட்ட தங்க நகைகள், களவாடப்பட்ட மஞ்சள் உள்ளிட்டவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர். அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறுந்துவத்த பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி விஜேரத்தினவின் வழிக்காட்டலுக்கு அமைய, குற்றத்தடுப்பு விசாரணை பிரிவின் பொறுப்பதிகாரி ஜ.பி. முனசிங்க தலைமையில் பொலிஸ் அதிகாரி அதநாயக்க, உப பொலிஸ் பரிசோதகர் புத்திகவரத்தன, பொலிஸ் உத்தியோகத்தர்களான அக்கலங்க 59856 , ஏராத் 55041, கொடிதுவக்கு 70509, விஜேசிறி 74768, சேனாரத்தின 80903  ஆகியோரே இதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

O/L பரீட்சையை மார்ச்சில் நடத்தலாம் என கல்வி அமைச்சர் நம்பிக்கை!

கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையை எதிர்வரும் மார்ச் மாதம் அளவில் நடத்துவதற்கு எதிர்ப்பார்ப்பதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ எல் பீரிஸ் இன்று தெரிவித்துள்ளார்.

2021 ஜனவரி 18 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதிவரையான காலப்பகுதியில் சாதாரணதரப்பரீட்சையை நடத்தவதற்கு முன்னதாக திட்டமிடப்பட்டிருந்தது.

எனினும், கொரோனா வைரஸ் தாக்கத்தால் அது ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையிலேயே குறித்த பரீட்சை மார்ச்சில் நடைபெறும் என்ற அறிவிப்பு கல்வி அமைச்சரால் விடுக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்து பாராளுமன்றில் தமிழ், சிங்கள மொழிகளில் உரையாற்றிய எம்.பி.!

நியூஸிலாந்து பாராளுமன்றத்துக்கு தெரிவான முதல் இலங்கையைச் சேர்ந்த பெண் வனுஷி வால்டர்ஸ் நேற்று புதன்கிழமை (02) பாராளுமன்றில் தனது முதல் உரையினை நிகழ்த்தியுள்ளார்.

தனது உரையில் அவர் சிங்கள மற்றும் தமிழில் சுருக்கமான அறிக்கைகளை வெளியிட்டதுடன், மனித உரிமைகள் அனைவருக்கும் சொந்தமானது என்பதையும் நினைவுபடுத்தினார்.

வனுஷி வால்டர்ஸ், கொழும்பின் முதல் மேயராக இருந்த சரவணமுத்துவின் பேத்தியாவார்.அதன்படி ,நியூசிலாந்து பாராளுமன்றத் தேர்தலில் பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் தலைமையிலான தொழிலாளர் கட்சி அமோக வெற்றியை பெற்றது.

இத்தேர்தலில் வனுஷி வால்டர்ஸ் வெற்றி பெற்றுள்ளார். நியூசிலாந்து பாராளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்படும் முதல் தமிழர் என்ற பெருமையை பெற்றுள்ளார் வானுஷி வால்டர்ஸ்.

நியூசிலாந்தின் வடமேற்கு ஆக்லாந்தில் ஹாமில்டன் கிரிக்கெட் வீரர் ஜேக் பெசன்ட்டை எதிர்த்து போட்டியிட்டார் வனுஷி. பெசன்ட் 12,272 வாக்குகளையும் வனுஷி வால்டர்ஸ் 14,142 வாக்குகளையும் பெற்றார். இலங்கையில் இருந்து பெற்றோருடன் 5 வயதில் நியூசிலாந்தில் குடியேறியவர் வனுஷி வால்டர்ஸ்.

மேலும் ,இலங்கையில் யாழ்ப்பாணம் மானிப்பாயை பூர்வீகமாகக் கொண்டவர் வனுஷி. இவரது தந்தை வழி பாட்டி லூசியா சரவணமுத்து, 1931இல் இலங்கை அரசு பேரவையின் வடக்கு தொகுதி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

மலையக காந்தி கே. இராஜலிங்கத்தின் 111 ஆவது ஜனன தினம் இன்று!

அடக்குமுறையாலும், வறுமையின் கோரத்தாண்டவத்தாலும் வாழ்க்கையை இழந்து தவிக்கும் மக்களின்  வாழ்வில் ஒளிபிறக்கவேண்டி தமது வாழ்வையே அர்ப்பணிப்பவர்களையும், சொத்து, பணமென அனைத்தையும் மக்களுக்காகவே வாரிவழங்கிய எவ்வித பந்தாவும் கட்டாமல் எளிமையாகவே வாழ்ந்து மடியும் மனிதர்களை இன்றைய நவீன உலகில் சினிமாப்படங்களில் மட்டுமே காணக்கூடியதாக இருக்கின்றது.

ஆனால், நிஜவாழ்விலும் இப்படியான மகான்கள் வாழ்ந்திருந்தாலும் அவர்கள்  தற்புகழை தேடிச்செல்லாததால் வரலாற்றிலிருந்து இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளனர் என்பது கசப்பான உண்மையாகும். அத்தகையவர்களை இன்றைய தலைமுறையினருக்கு அறியப்படுத்துவதுதான் பச்சை தங்கத்தின் பிரதான நோக்கங்களுள் ஒன்றாகும்.

இப்படிதான் மலையக மக்களுக்கு கல்விகண் திறப்பதற்காகவும், தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும் சொத்துகளையெல்லாம் விற்று, கிடைத்த அரச சேவையையும் துறந்து – திருமணம்கூட முடிக்காமல் செத்து மடியும்வரையும் மக்களுக்காகவே வாழந்தவர்தான் மலையக காந்தியென போற்றப்படும் கே. இராஜலிங்கம்.

இன்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸாகவும் அன்று இலங்கை, இந்திய காங்கிரஸாகவும் இருந்த அமைப்பின் ஸதாபகப் பொதுச்செயலாளர் இவர்தான். அவ்வமைப்பின் தலைமைப்பதவியையும் அலங்கரித்தவர். நாடாளுமன்ற உறுப்பினராகவும் செயற்பட்டவர். புஸல்லாவை – சரஸ்வதி மத்தியக் கல்லூரியின் ஸ்தாபகர். தோட்டத்தொழிலாளர்களுக்காக இவர் செய்த சேவைகளையும், தியாகங்களையும் வெறும் வார்த்தைகளால் மட்டும் விபரித்துவிடமுடியாது.

இப்படியானதொரு மகானை வரலாற்று ஏற்றில் இடம்பெறவைக்கும் நோக்கில் அவர் வாழ்ந்த வீடுதேடி சென்று தகவல்களை திரட்டியது பச்சை தங்கம் குழு. பல வியக்கவைக்கும் தகவல்களை கிடைத்ததுடன், அட, நம் மலை மண்ணில் இப்படியும் தலைவர்கள் வாழ்ந்துள்ளனரேயென நெஞ்சமும்  நிமிர்ந்துநின்றது.

பிறப்பும்
கல்வியும்

18 ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் தலைவிரித்தாடிய பெரும் பஞ்சத்தை தமக்கு சாதகமாகப் பயன்படுத்தி தொழிலாளர்களை கைக்கூலிகளாக இலங்கை அழைத்துவந்தது முதலாளி வர்க்கம்.

இவ்வாறு இடம்பெயர்ந்து வந்தவர்களில் ராமன் என்பவரும் ஒருவர். ( 1930 – ராஜலிங்கத்தின் தாத்தா) கம்பளையிலிருந்து புஸல்லாவை நோக்கி செல்லும் வழியிலுள்ள சங்குவாரி தோட்டத்தில் குடியேறினார். கடின உழைப்பால் காலப்போக்கில் பெரிய கங்காணியாகவும் நியமிக்கப்பட்டார். இவரின் மூத்த மகன்தான் காளிமுத்து. இவரும் சங்குவாரி தோட்டத்தில் பெரிய கங்காணியாக பதவிவகித்தார்.

காளிமுத்து கங்காணிக்கும், காளியம்மாலுக்கும் பிறந்த ஆறுக்குழந்தைகளில் மூத்தவர்தான் நமது நாயகன் கே. ராஜலிங்கம். 1909 ஆம் ஆண்டு டிசம்பர் 3 ஆம் திகதி பிறந்த அவர், சிறுவயது முதலே கல்விமீதும், சமூகம்மீதும் அதிக பற்று வைத்திருந்தார். தனது தந்தை பெரிய கங்காணியென்பதால் ஆரம்பக் கல்வியை கம்பளை, அன்றூஸ் கல்லூரியில் பயின்றார்.

உயர்கல்வியை கண்டி, புனித அந்தனீஸ் கல்லூரியில் கற்றார். கல்வியில் சிறந்து விளங்கிய இவர், தமிழ், ஆங்கிலமென இரண்டு மொழிகளிலும் பாண்டித்தியம் பெற்றிருந்தார். சர்வதேச பரீட்சைகளிலும் சித்தியடைந்தார். இதனால், தமது பாடசாலைக்கே இவரை ஆசிரியராக நியமித்தது பாடசாலை நிர்வாகம்.

சரஸ்வதி பாடசாலை 
உதயம் – 1932

தொழிலுக்கு இவர் பாடசாலை செல்லும்போது, தோட்டப்பகுதியிலுள்ள பிள்ளைகள், தேயிலை மலைகளுக்கோரம் காலை முதல் மாலைவரை இருப்பதை கண்டுள்ளார். ஏன் எமது மக்கள் இவ்வாறு ஒதுக்கப்படுகின்றனர், ஓரங்கட்டப்படுகின்றனர் என சிந்தித்த அவர், தோட்டப்பகுதி பிள்ளைகளுக்கு கல்வி அமுதூட்டும் முடிவுக்கு வந்தார். இதனால், ஆசிரியர் பதவியை துறந்து – சங்குவாரி தோட்டத்தில் கூடாரம் அமைத்து பாடசாலை அமைத்தார். தோட்டங்களுக்கு சென்று கல்வி விழிப்புணர்ச்சியையும் ஏற்படுத்தினார்.

இதற்காக தனது தந்தையிடமும், சகோதரர்களிடமுமே பணம் பெற்றார். ஏனைய தோட்டப்பகுதிகளிலுமுள்ளவர்கள் பயிலவேண்டும் என்ற நோக்கில் புஸல்லாவை  சரஸ்வதி வித்தியாலயத்தை 1932 இல் ஆரம்பித்தார்.

தனது தந்தைக்கு சொந்தமான தேயிலை தோட்டமொன்றை விற்பனை செய்தே பாடசாலை நிறுவினார். ( கம்பளையிலிருந்து, புஸல்லாவை செல்லும் வழியில், அட்டபாகை எனும் நகரம் தாண்டியதும் உள்ள பாஸ்ரோக் தோட்டமே விற்கப்பட்டது). அதன்பின்னர் ஆசிரியர்களுக்கான சம்பளம் உள்ளிட்ட சேவைகளுக்காக வீட்டிலிருந்து தங்க ஆபரணங்கனை விற்பனை செய்தார்.

குடும்ப உறுப்பினர்கள் ஆரம்பத்தில் எதிர்த்துள்ளனர். எனினும், மக்களுக்காக அனைத்தையும் அவர் செய்தார். இதனால், அவரது தந்தையும், சகோதரர்களும் பொருளாதாரமட்டத்தில் கீழிறங்கினர். இவரால் ஆரம்பிக்கப்பட்ட சரஸ்வதி வித்தியாலயம், இன்று ஒரு தேசிய பாடசாலையாக சிறந்து விளங்குகின்றது.

தோட்டப்பகுதிகளிலுள்ள ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயில்கின்றனர். சமூக மாற்றத்துக்கு கல்விபுரட்சியே சிறந்த வழி. அதை அன்றே உணர்ந்தவர்தான் கே. இராஜலிங்கம்.

இலங்கை, இந்திய காங்கிரஸ்
உதயம் – 1939

இலங்கை, இந்திய காங்கிரஸ் 1939 ஆம் ஆண்டு உதயமானது. மகாத்மா காந்தியின் சிறப்பு பிரதிநிதியாக நேரு கொழும்பு வந்திருந்தார். அவரின் மத்தியஸ்தத்துடனேயே அவ்வமைப்பு உதயமானது. அதன் ஸ்தாபகப் பொதுச்செயலாளராக இராஜலிங்கமே நியமிக்கப்பட்டார்.

காந்தி, நேரு ஆகியோர் இலங்கை வந்தபோதெல்லாம் அவர்களை சந்தித்து பெரும் வரவேற்றை பெற்றிருந்ததால்,  இவர்களின் ஆசியுடனேயே பொதுச்செயலாளர் பதவி அவருக்கு வழங்கப்பட்டது. தனது பேச்சை உரைபெயர்ப்பதற்கு இராஜலிங்கத்தையே நேரு அழைப்பார்.

1940 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7 ஆம் திகதி இலங்கை, இந்திய காங்கிரஸின் முதலாவது மாநாடு கம்பளையில் நடைபெற்றது. தொண்டமானுடன் இணைந்து இவரே மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தார். 47 முதல் 50 வரை இதொகாவின் தலைவராகவும் பதவிவகித்தார். அன்று சந்தாப்பணம் இருக்கவில்லை. இதனால், சொந்த பணத்தை பயன்படுத்தியே இவர் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டார். ஜெனிவா மாநாடு உட்பட பல இடங்களுக்கு சொந்த பணத்திலேயே தொழிலாளர்களுக்காக சென்றுள்ளார்.

சௌமியமூர்த்தியின் நம்பிக்கைக்குரிய பாத்திரமாக திகழ்ந்தவர். ஏன், தளபதி என்றுகூட சொல்லாம். அஸீஸ், வெள்ளையன், வேலுப்பிள்ளையென முக்கிய தலைவர்கள் கட்சிலிருந்து வெளியேறும்போது தொண்டமானுக்கு பக்கபலமாக இவரே கைகொடுத்தார். 42 இல் அஸீஸ் காங்கிரஸை கைப்பற்றியபோது – தொண்டமான் பக்கம் நின்று குரல்கொடுத்தார். இப்படி இன்றுள்ள இ.தொ.காவின் வளர்ச்சியில் இவருக்கு பெரும் பங்குண்டு.

போராட்டக்களத்திலிருந்தவர்களுக்காக
காரைவிற்று பணம்கொடுத்த கர்ணன்

தொழிலாளர்களுக்காக அவர் பல இடங்களுக்கு செல்வதால், தந்தையால் காரொன்று வாங்கிக்கொடுக்கப்பட்டுள்ளது. நாவலப்பட்டிய, லட்சுமி தோட்டத்தில் நடைபெற்ற போராட்டத்துக்கு சென்றிருந்த அவர், அங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாப்பிடாமல் இருப்பதை அறிந்தார். உடனே காரை விற்பனை செய்த அவர், அந்த பணத்தை தொழிலாளர்களுக்கு வழங்கிவிட்டு, பாதி தூரம் கால்நடையாகவும், மீதி தூரம் பஸ்ஸிலூமாக வீடுவந்து சேர்ந்தார். தொழிலாளர்களின் பல போராட்டங்களில் பங்கேற்றுள்ளார்.

1947 ஆம் ஆண்டு நாவலப்பிட்டி  தேர்தல் தொகுதி ஊடாக நாடாளுமன்றத்துக்கு தெரிவான அவர், எந்தவொரு சலுகையையும் பெற்றதில்லை. திருமண வாழ்வில் இணைந்தால் குடும்பத்தை சுமக்கவேண்டிவரும் என்பதால் அதை நிராகரித்தவர். இப்படி மக்களுக்காகவே வாழ்ந்த அவர், 1963 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதமம்  11 ஆம் திகதி எம்மைவிட்டு பிரிந்தார்.

காந்தியின் காங்கிரஸ் கொள்கைகளையும், அணுகுமுறைகளையும் இலங்கையில் அமுல்படுத்தியதால் மலையக காந்தியென போற்றிப்புகழப்பட்டார். அவரின் சமாதி சங்குவாரி தோட்டத்தில், நுவரெலியா பிரதான வீதிக்கு மேழுள்ளது. வீதி அபிவிருத்தியின்போது அதை உடைப்பதற்கு முயற்சிக்கப்பட்டாலும் பின்னர் அது கைவிடப்பட்டது.

தனது குடும்பத்துக்காக அவர் எதையுமே சேமித்துவைக்கவில்லை. வீடொன்று மாத்திரமே இருக்கின்றது. அதற்கும் சட்டபூர்வமான ஆவணம் இல்லை. அதையாவது பெற்றுதருவதற்கு மலையக அரசியல்வாதிகள் நடவடிக்கையெடுக்கவேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும். இதை செய்யாவிட்டால் வரலாறு எம்மை ஒருபோதும் மன்னிக்காது என்பதையும் கூறியாகவேண்டும்.

சின்னையா, தங்கவேல்,  ராஜரட்னம், தவமணியம்மாள், ராஜமணியம்மாள் ஆகியோர் N. இராஜலிங்கத்தின் சகோதர, சகோதரிகளாவர். இதில் தவமணியம்மாள் என்பவரே இவரின் அனைத்து தகவல்களையும் ஆணவப்படுத்தி வைத்துள்ளார். அதை தற்போது சீ. இராஜலிங்கம் என்பவர் பராமரித்துவருகிறார்.

இராஜலிங்கத்தின் தம்பியின் மகனே இவர். இராஜலிங்கம் தொடர்பில் ‘சிங்களத் தீவினில் தீனர்களின் தெண்டர் கே. இராஜலிங்கம்’ எனும் நூல் வெளியிடப்பட்டுள்ளது.

ஆர்.எஸ்.

புரெவி புயலால் கிளிநொச்சியில் பல பகுதிகள் பாதிப்பு

புரெவி புயலினால் ஏற்பட்ட கடும்மழை, பலத்தகாற்று மற்றும் வெள்ள அனர்த்தங்களினால் கோப்பாய் பிரதேசசெயலகத்திற்கு உட்பட்ட இருபாலை தெற்கு, இருபாலை கிழக்கு கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட பல பிரதேசங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

ஆனந்தபுரம், ஞானவைவரவர்கோயிலடி, வசந்தபுரம், மடத்தடி போன்ற கிராமங்கள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
வீடுகளில் வெள்ளம் புகுந்துள்ளதால் மக்களின் இயல்புவாழ்க்கை முற்றாக செயலிழந்துள்ளது.

புதிய செம்மணிவீதி, கட்டப்பிராய் கலைமணிவீதி, சின்னக்கோவில்வீதி மற்றும் பலவீதிகள்,ஒழுங்கைகள் மழை வெள்ளம் தேங்கியுள்ளதால் மக்கள் போக்குவரத்து செய்யமுடியாமல் வீடுகளுக்குள் முடங்கியிருக்கின்றார்கள். பயன்தரு மரங்கள் பலவும் முறிந்துவீழ்ந்துள்ளதுடன் வீதிப்போக்குவரத்தும் ஸ்தம்பிதமடைந்துள்ளது.

இன்று காலை முதல் குறித்த பிரதேசங்களின் பாதிப்புக்களை நேரில் சென்று பார்வையிட்ட பிரதேசசபை உறுப்பினர் நடேசபிள்ளை கஜேந்திரகுமார் மக்களின் நலன்களை பேணும் வகையிலும்,இயல்பு நிலைமைகளை ஏற்படுத்துவதற்கும் கிராமசேவையாளர் ஊடாகவும்,பிரதேசசபையின் ஊடாகவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் மக்களை வீடுகளுக்குள் பாதுகாப்பாக இருக்கும் படியும் கேட்டுக்கொண்டுள்ளார்.

அத்துடன் நீர்நிலைகள் நிரம்பியுள்ளதால் சிறுவர்கள் எவரையும் வெளியானபிரதேசங்களுக்கு நடமாட அனுமதிக்க வேண்டாமெனவும் அறிவுறுத்தியுள்ளார்.

போகம்பறைச் சிறைச்சாலையில் மேலும் 25 கைதிகளுக்கு கொரோனா!

கண்டியில் உள்ள பழைய போகம்பறைச் சிறைச்சாலையில் கடமையிலிருந்த பிரதான சிறைச்சாலை அதிகாரி உள்ளிட்ட மேலும் 26 கைதிகள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். பி.சி.ஆர் பரிசோதனை மூலம் இவர்கள் தொற்றாளர்களாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர் .

இவ்வாறு தொற்றுதலுக்கு உள்ளாகியுள்ள பிரதான சிறைச்சாலை அதிகாரி தெல்தெனிய விசேட சிகிச்சை நிலையத்திற்கு நேற்று(2) அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக கண்டி மாவட்டத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி சுதத் மாரசிங்க தெரிவித்தார்.

மற்றும்  கைதிகள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

சிறைச்சாலை திணைக்களத்தின் அனுமதியுடன் கண்டியிலுள்ள பழைய போகம்பறை சிறைச்சாலை, கைதிகளின் தனிமைப்படுத்தும் நிலையமாக செயற்படுத்தப்பட்டுவருகின்றது.

தற்பொழுது இங்கு,மூன்று சிறைச்சாலை அதிகாரிகள், 182 கைதிகளும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் மூலம் தெரியவருகின்றது.

மேலும் மத்திய மாகாணத்தில் நேற்று (02) காலை வரை 501 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்தியமாகாண சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் கண்டி மாவட்டத்திலேயே அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதன்படி கண்டி மாவட்டத்திலிருந்து 303 பேரும், நுவரெலியா மாவட்டத்திலிருந்து 146 பேரும் மற்றும் மாத்தளை மாவட்டத்திலிருந்து 52 பேரும் தொற்றாளர்களாக பதிவாகியுள்ளனர்.

மஹர சிறைச்சாலைக்கு இன்று செல்கின்றது விசாரணைக்குழு!

சிறைச்சாலை மோதல் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஐவரடங்கிய குழு, இன்று (03) மஹர சிறைச்சாலைக்கு களப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.

சிறைச்சாலை வளாகம், தீக்கிரையாக்கப்பட்டுள்ள பகுதிகள், மருந்தகம் உள்ளிட்ட பகுதிகளை குறித்த குழுவினர் கண்காணிக்க உள்ளனர்.

அத்துடன் சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் கைதிகளிடம் தனித்தனியாக சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் சம்பவம் குறித்தான தகவல்களை விசாரணை அதிகாரிகள் திரட்டவுள்ளனர்.

மஹர சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி, ஒரு மாதத்துக்குள் முழுமையானதொரு அறிக்கையை முன்வைப்பதற்காக நீதி அமைச்சர் அலி சப்ரியால் ஐவரடங்கிய குழுவொன்று கடந்த 30 ஆம் திகதி அமைக்கப்பட்டது. இக்குழு ஒருவாரத்துக்குள் இடைக்கால அறிக்கையொன்றையும் சமர்ப்பிக்கவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேல் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி குசலா சரோஜனி வீரவர்தன தலைமையிலான இக்குழுவில்நீதி அமைச்சின் பிரதம சட்ட ஆலோசகர், ஜனாதிபதி சட்டத்தரணி யூ.ஆர்.டி.சில்வா,நீதி அமைச்சின் மேலதிக செயலாளர் (நிர்வாகம்)  ரோஹண ஹபுகஸ்வத்த, முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் காமினி ஜயசிங்க ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர். பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹனவுக்கு பதிலாக புதிய ஒருவர் நியமிக்கப்படவுள்ளார்.

மஹர சிறைச்சாலை கைதி தப்பியோட்டம்!

மஹர சிறைச்சாலை மோதல் சம்பவத்தில் காயமடைந்து, ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கைதி ஒருவர் வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.

குறித்த கைதி நேற்றிரவு வைத்தியசாலையில் இருந்து தப்பிச்சென்றுள்ளார் எனவும், அவரை தேடும் பணி தொடர்கின்றது எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மஹர சிறைச்சாலையை சூழ பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழ்.மாவட்டத்தில் 2,941 பேர் பாதிப்பு! 153 இற்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்!!

தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மாழை மற்றும் காற்று காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போதுவரை 756 குடும்பங்களை சேர்ந்த 2941 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்து பிரிவின் உதவி பணிப்பாளர் ரீ.என்.சூரியராஜா தெரிவித்தார்.

அத்தோடு காணாமல் போன மூன்று நபர்களில் இருவர் வீடு திரும்பியுள்ளதாகவும், 4 நபர்கள்  காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாதாகவும் அவர் கூறினார்.

மாவட்டத்தில் 15 வீடுகள் முழு அளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், 153வீடுகள் பகுதியளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும்,  இதுவரை 5 இடைத்தங்கல் முகாம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் ரீ.என்.சூரியராஜா கூறியுள்ளார்.

குறிப்பாக சண்டிலிப்பாய், சாவகச்சேரி, பருத்தித்துறை, தெல்லிப்பழை மற்றும் வேலணை ஆகிய பகுதிகளிலேயே குறித்த இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

சினிமா

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

செய்தி

தமிழக முதல்வராக பதவியேற்றார் ஜோசப் விஜய்!

0
தமிழக முதல்வராக பதவியேற்றார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை 10 மணியளவில் பதவியேற்பு விழா தொடங்கியது. வந்தே மாதரம் பாடல் இசைக்க பதவியேற்பு...

தவெக முதற்கட்ட அமைச்சரவை பட்டியல் வெளியீடு

0
தமிழக வெற்றிக் கழக அரசின் தவெக முதற்கட்ட அமைச்சர் பட்டியலை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் கீழ்காணும் பெயர்கள் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளன: புஸ்ஸி என்.ஆனந்த் ஆதவ் அர்ஜுனா கே.ஜி.அருண்ராஜ் கே.ஏ.செங்கோட்டையன் வெங்கடரமணன் நிர்மல்குமார் ராஜ்மோகன் டி.கே.பிரபு கீர்த்தனா 120 எம்எல்ஏக்களின் ஆதரவுக் கடிதங்களை ஆளுநரிடம் விஜய் நேற்று...

மரக்கறி விலைப்பட்டியல் (10.05.2026)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (10) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...