Home Blog Page 3748

‘கொரோனா’ மேலும் இருவர் உயிரிழப்பு! பலி எண்ணிக்கை 124 ஆக உயர்வு!!

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர்.

புத்தளம் பகுதியைச் சேர்ந்த 66 வயது பெண்ணொருவரும், கொழும்பு 13 ஐ சேர்ந்த 67 வயதுடைய ஆணொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 124 ஆக அதிகரித்துள்ளது.

 

இன்று மாத்திரம் 878 பேருக்கு கொரோனா தொற்று!

நாட்டில் மேலும் 528 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பேலியகொடை கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.

இன்று இதுவரையில் 878 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்து 410 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் இதுவரையில் 124 பேர் உயிரிழந்துள்ளனர். 18 ஆயிரத்து 304 பேர் குணமடைந்துள்ளனர்.

2 ஆவது அலைமூலம் (மினுவாங்கொட, பேலியகொட கொத்தணிகள்) இதுவரையில் 21 ஆயிரத்து  861  பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

‘எந்த வங்கியில் லோன் வாங்கலாம்’ – திகாவிடம் ஜீவன் கேள்வி!

” மலையகத்தில் பெருந்தோட்டப்பகுதிகளில் வாழும் மக்களுக்கு நிச்சயம் 10 பேர்ச்சஸ் காணி வழங்கப்படும். 7 பேர்ச்சஸ் வீடமைப்பதற்கும் மூன்று பேர்ச்சஸ் அவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்திக்கொள்வதற்கும் பயன்படுத்தலாம்.” – என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று வீடமைப்பு மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு இராஜாங்க  அமைச்சின் மீதான வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் ஜீவன் தொண்டமான் மேலும் கூறியவை வருமாறு,

” எனது அமைச்சுக்கு போதுமாளனவு நிதி ஒதுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை சிலர் முன்வைத்தனர். ஆனால் வீட்டுத்திட்டம் உட்பட மக்களுக்கு சேவையாற்றுவதற்கு தேவையான அளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆட்சியின்போது காணி உறுதிப்பத்திரம் வழங்கப்பட்டது என கூறப்பட்டது. ஆனால் அது சட்டப்பூர்வமானது அல்ல. வங்கியில் வைத்து கடன் வாங்கலாமாம். அது எந்த வங்கியில் எனக் குறிப்பிட்டால் சிறப்பாக இருக்கும்.

மலையக மக்கள் தொடர்பில் விஜித ஹேரத் உணர்வுப்பூர்வமாக உரையாற்றினார். வரவேற்கின்றோம். ஆனால் அவரது கட்சிதான் மலையக மக்களை ஒருகாலகட்டத்தில் கொடுமைப்படுத்தியது என்பதையும் நினைவூட்ட விரும்புகின்றோம்.

மலையகத்துக்கு பல்கலைக்கழகம் வரும். தோட்டத்தொழிலாளர்களுக்கு நிச்சயம் சம்பளம் கிடைக்கும்.” – என்றார் ஜீவன் தொண்டமான்.

 

மலையகத்தில் தனிவீடா, மாடிவீடா? அரசின் நிலைப்பாடு என்ன?

” மலையகத்தில் முன்னாள் அமைச்சர் திகாம்பரம் காலத்தில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்ட தனி வீட்டுத் திட்டமா ? அல்லது ஏற்கனவே தோல்வி கண்ட மாடி வீட்டுத் திட்டமா புதிய  அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படவுள்ளது என்பதை இந்த சபையில் கேட்க விரும்புகிறேன்.”

இவ்வாறு தொழிலாளர் தேசிய முன்னணியின் பிரதித் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் உதயகுமார்  வலியுறுத்தினார்.

வீடமைப்பு மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு இராஜாங்க  அமைச்சின் மீதான வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவரின் உரை வருமாறு,

” நமது நாட்டில் வாழும் சுமார் 15 லட்சம் இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களை பிரதிநிதிதித்துவப்படுத்தி அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு இல்லாத மலையக மக்கள் சம்மந்தமான அமைச்சின்  மீதான வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடு குழு நிலை விவாத்த்தில் வேதனையுடன் உரையாற்றுவதாக இந்த உயரிய சபையில் தெரிவித்து கொள்கிறேன்.

அமைச்சரவையில் இருந்து மலையக மக்களின் பிரநிதித்துவத்தை இல்லாது செய்துள்ள இந்த அரசாங்கத்திற்கு நாம் எமது மன வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

மலையக மக்களின் முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்டு தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு உருவாக்கப்பட்டது. பல தசாப்த காலமாக தோட்ட மக்கள் என்றே இவர்கள் அழைக்கப்பட்டு வந்தனர்.

ஆனால் கடந்த ஆட்சி காலத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் பலத்தால் இந்த சொற்பதம் மாற்றப்பட்டு மலையக மக்கள் என்று கௌரவத்துடன் அழைக்கக்கூடிய நிலை ஏற்படுத்தப்பட்டது. நல்லாட்சி அரசாங்காக கால வரவு செலவுத் திட்டம் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களில் மலையக மக்கள் என்ற கௌரவப் பெயரே பயன்படுத்தப்பட்டது.

அது மாத்திரமன்றி மலைநாட்டு புதிய கிராமங்கள் என்று கௌரவ பெயர் கொண்டு புதிய அமைச்சு உருவாக்கப்பட்டு நான்கரை வருட காலத்தில் சாதனை படைக்கும் அளவுக்கு அபிவிருத்தி திட்டங்கள் முன்னேடுக்கப்பட்டன.

அமைச்சுக்கு ஒதுக்கிடப்படும் நிதியை முறையாகக் கையாள்வதில் முன்னாள் அமைச்சர் கௌரவ பழனி திகாம்பரம் அவர்கள் தலைமையில் மலைநாட்டு புதிய கிராமங்கள் அமைச்சு விருது பெற்ற அமைச்சாக உச்சத்தில் இருந்தது. ஹட்டன் தொழிற்பயிற்சி நிலையமும் விருது பெற்றது.

ஆனால் இன்று மலைநாடு என்ற கௌரவ பெயர் நீக்கப்பட்டு மீண்டும் தோட்டம் என்ற நிலைக்கு மலையக மக்கள் கீழிறக்கப்பட்டுள்ளனர். அமைச்சின் பெயர் மாற்றத்தில் கூட அரசியல் காழ்ப்புணர்ச்சி காட்டப்பட்டுள்ளது.  அது மாத்திரமன்றி மலைநாட்டு புதிய கிராமங்கள் அமைச்சினால் முன்னெடுக்கப்பட்ட வேலைத் திட்டங்களை தற்போது தடை செய்துள்ளனர்

கடந்த அரசாங்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் ஒரு வருட காலமாக எவ்வித கட்டுமான பணிகளும் இன்றி முடங்கிக் கிடக்கிறது. கட்டி முடிக்கப்பட்ட மூவாயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் மின்சாரம், குடிநீர் வசதிகள் இன்றி பூட்டிக் கிடக்கின்றன.

அது மாத்திரமன்றி இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த ஆரம்ப காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்ட இடங்களில் வீடுகளுக்கு பதிலாக புற்கள் முளைத்துள்ளன. மெராயாவில் 100 வீடுகள், நானுஓயாவில் 100 வீடுகள், பொகவந்தலாவையில் 100 வீடுகள் என அடிக்கல் நாட்டினர். 8 மாதங்கள் கடந்து இன்னும் வீடுகள் கட்டப்படவில்லை.

அப்படி இருக்கையில் இந்த வரவு செலவுத் திட்டத்தில் வீடமைக்கு என மிகவும் குறைந்தளவு நிதியே ஒதுக்கப்பட்டுள்ளதுமக்களுக்கு தனி வீடுகள் அமைக்கப்படும் என்று கூறுகின்றனர்.

ஆனால் இந்த பாராளுமன்றில் சமர்பிக்கப்பட்டு சட்ட ரீதியாக ஏற்றக் கொள்ளப்பட்ட நிதி அமைச்சின் 2021ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட கணக்கு அறிக்கையில் “பெருந்தோட்டங்களைச் சார்ந்ததாக குறைந்த மாடிகளைக் கொண்ட வீடமைப்புத் திட்டங்களை தோட்ட உரிமையாளர்களின் பங்களிப்புடன் அறிமுகப்படுத்தல்”
Introducing Low Rise Housing schemes with the support of Estate owners
என மலையகத்திற்கு மாடி வீடுகள் அமைப்பது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே தனி வீடுகள் கட்டப்படும் என மக்களுக்கு  சொல்லப்படுவதன் உண்மைதன்மை என்ன ? இதில் பலந்த  சந்தேகம் எழுகிறது.
.
எனவே மலையகத்தில் முன்னாள் அமைச்சர் திகாம்பரம் அவர்கள் காலத்தில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்ட தனி வீட்டுத் திட்டமா ? அல்லது ஏற்கனவே தோல்வி கண்ட மாடி வீட்டுத் திட்டமா புதிய  அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படப் போகிறது என்பதை இந்த சபையில் கேட்க விரும்புகிறேன்.

மாடி வீடு கட்டுவதானால், மலையக மக்களின் காணி உரிமை எவ்வாறு உறுதிப்படுத்தப்படும் என்பதை அரசாங்கம் சபையில் அறிவிக்க வேண்டும்.

எத்தனை சதுர அடியில் ஒரு வீடு கட்டப்படும் என்பதையும், ஒரு வீட்டின் கட்டுமான பணிக்கு ஒதுக்கப்படும் நிதியின் அளவும், எத்தனை பேர்சஸ் நிலத்தில் ஒரு வீடு கட்டப்படும் எனவும், இந்த உயரிய சபை    ஊடாக மலையக மக்களுக்கு சம்பந்தப்பட்டவர்கள் தெளிவு படுத்தவேண்டும்.

தேர்தல் காலத்தில் வாக்குறுதி அளிக்கப்பட்ட 20 பேர்ச் காணியில் ஸ்லெப் போட்ட வீடுகள் எப்போது கட்டிக் கொடுக்கப்படும் என்பதை மலையக மக்கள் மிகவும் எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர்.

இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியில் நான்காயிரம் வீட்டுத் திட்டமே இன்னும் செயற்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் இந்திய அரசாங்கத்துடன் செய்து கொள்ளப்பட்ட பத்தாயிரம் வீட்டுத் திட்டத்திற்கு என்ன நடந்தது?

அந்த வீடமைப்புத் திட்டம் தொடர்பில் எதுவும்     கூறப்படவில்லை. அப்படியானால் அந்த பத்தாயிரம் வீடமைப்புத் திட்டம் கைவிடப்பட்டு விட்டதா?

ஏற்கனவே இந்த பத்தாயிரம் வீடுகள் கட்டப்பட வேண்டிய இடங்கள் அடையாளம் காணப்பட்டு இந்திய உயர்ஸ்தானிகருக்கு கடந்த ஆட்சி காலத்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நல்லாட்சி அரசாங்க காலத்தில் மலையக மக்களை நிலவுடமை சமூகமாக மாற்றி 7 பேர் நிலத்திற்கு காணி உறுதிப்பத்திரம் வழங்கப்பட்டது. அந்த காணி உறுதிப் பத்திரத்தினை வெற்று கடதாசி என அரசாங்க தரப்பை சேர்ந்தவர்கள் சிலர் அண்மையில் கூறியுள்ளனர்.

எனவே குறித்த காணி உறுதிப் பத்திரம் பொய்யானது என்ற கருத்தை இராஜாங்க அமைச்சர் ஏற்றுக் கொள்கிறாரா? என்பதை இந்த சபையில் அறிவிக்க வேண்டும்.

அமைச்சரவைப் பத்திரம் தாக்கல் செய்து உருவாக்கப்பட்ட மலையக அபிவிருத்தி அதிகார சபை தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது. கடந்த வருடம் குறித்த அதிகார சபைக்கு வெறும் 63 லட்சம் மாத்திரமே ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த வருடம் அதிகார சபைக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. அது தொடர்பில் வரவு செலவுத் திட்ட அறிக்கையில் எதுவும் கூறப்படவில்லை.

எல்லா அரச நிறுவனங்களுக்கும் கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கி விட்டு இந்த அதிகார சபைக்கு மாத்திரம் ஏன் இந்த பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது என்பது புரியவில்லை.

இந்த நாட்டின் சட்டத் திட்டங்களுக்கு உட்பட்டு உருவாக்கப்பட்ட மலையக அபிவிருத்தி அதிகார சபைக்கு நிதி ஒதுக்கப்படாதது ஏன் என தெரிந்து கொள்ள விரும்புகிறோம்.

மலையக அபிவிருத்தி அதிகார சபையின் முதலாவது திட்டமாக நுவரெலியா ஸ்கரப் தோட்டத்தில் 50 வீடுகள் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால் அந்த வீடமைப்புத் திட்டம் கைவிடப்பட்டு மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

மலையக அபிவிருத்தி அதிகார சபை என்பது மலையக மக்களுக்காக  பெற்றுக்  கொடுக்கப்பட்ட அரச நிறுவனம் ஆகும்.அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக இந்த மலையக அபிவிருத்தி அதிகார சபையை மெல்ல மெல்ல அழித்துவிட வேண்டாம் என இந்த சபையிலே கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.

மலையக தொழிலாளர் குடும்பங்களுக்கு இன்று சுமார் ஒரு லட்சத்து 60 ஆயிரம் வீடுகள் தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் மலைநாட்டு புதிய கிராமங்கள் அமைச்சுடன் இணைந்து மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. மலையகத்தின் அபிவிருத்திக்கென தயாரிக்கப்பட்ட ஐந்தாண்டு அபிவிருத்தித் திட்ட ஆவணத்தில் இவ்விடயம் கூறப்பட்டுள்ளது.

Transform Plantation Community into a Village Community with Dignity, Self – respect and Social Status, to be par with other Communities.
அப்படி இருக்கையில் கடந்த 2020ம் ஆண்டு இந்த அமைச்சின் ஊடாக புதிதாக ஒரு வீடேனும் கட்டப்படவில்லை. 2021ம் ஆண்டு வீடமைப்புக்கு என வெறும் 1622  மில்லியன் ரூபாவே ஒதுக்கப்பட்டுள்ளது.
(1522 மில்லியன் ரூபா தோட்ட மக்களின் வீடுகளுக்கான தேவையை பூர்த்தி செய்தல்) (100 மில்லியன் ருபா கிராம்ப் பிரதேசங்களில் வாழ்வாதார மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்தல்)

இது மிகவும் குறைந்த ஒதுக்கீடாகும். மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களை ஒரு இரண்டாம் தர பிரஜைகளாக கருதி இந்த அளவு குறைந்த தொகையை அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளதாக என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

வீடமைப்பு மாத்திரமன்றி குடிநீர், மின்சாரம், மலசலகூட வசதிகள், வீதி உட்கட்டமைப்பு வசதிகள் போன்றவற்றுக்கான தேவை மலையகத்தில் அதிகமாகவே உள்ளது.

(714 மில்லியன் ரூபா பின்னடைந்த  பிரதேச மக்களின் வாழ்க்கை தரத்தை கட்டியேழுப்புதல் ) இதில் 214 மில்லியன் ரூபா Hatton தொழில் பயிற்சி நிலையத்தை மேம்ப்படுத்தல் ஆகவே மிகுதி 500  மில்லியன் ரூபாவே பின்னடைந்த பிரதேசங்களில் சமூக பொருளாதார அபிவிருத்தியை எற்ப்படுத்தல்)

இந்த குறைந்தளவு நிதியை வைத்துக் கொண்டு மலையக மக்கள் வாழும் நுவரெலியா, பதுளை, கண்டி. கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை, காலி, மாத்தறை, மொனராகலை, குருநாகல் போன்ற மாவட்டங்களுக்கு எவ்வாறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க முடியும் என்பதை இந்த தருணத்தில் கேட்க விரும்புகிறேன்.

எமக்குள் அரசியல், கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனால் எமது மலையக மக்களின் அபிவிருத்தியும் எதிர்காலமும் எமக்கு முக்கியமாகும். எனவே தோட்ட வீடமைப்பு உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இந்த குறைந்தளவான நிதி தொடர்பில் அரசாங்கம் மீள் பரிசீலனை செய்து  நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டு விடைபெறுகிறேன்.

நாட்டில் மேலும் 350 பேருக்கு கொரோனா தொற்று!

நாட்டில் மேலும் 350 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பேலியகொடை கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.

அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்து 882 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் இதுவரையில் 122 பேர் உயிரிழந்துள்ளனர். 18 ஆயிரத்து 304 பேர் குணமடைந்துள்ளனர்.

2 ஆவது அலைமூலம் (மினுவாங்கொட, பேலியகொட கொத்தணிகள்) இதுவரையில் 21 ஆயிரத்து 333 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

இந்திய அணிக்கு ஆறுதல் வெற்றி!தொடரை கைப்பற்றியது ஆஸி.அணி!!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில் 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் சிட்னியில் நடந்த முதல் 2 ஆட்டங்களில் முறையே 66 ஓட்டங்கள் மற்றும் 51 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்ததுடன் தொடரையும் 0-2 என்ற கணக்கில் பறிகொடுத்து விட்டது.

இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் 3ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி ஆஸ்திரேலிய தலைநகரான கான்பெர்ராவில் உள்ள மனுகா ஓவல் மைதானத்தில் இன்று நடைபெற்றது. ஆறுதல் வெற்றியை பெறும் நோக்கில் இந்திய அணி இந்தப் போட்டியை எதிர்கொண்டு வருகிறது.

நாணயச்சுழற்சியில் வென்ற இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி, ஆஸ்திரேலிய அணியை பந்து வீசுமாறு பணித்தார். இதன்படி, இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 302- ஓட்டங்களைக் குவித்தது. தலைவர் விராட் கோஹ்லி 63 ஓட்டங்கள், ஜடேஜா 66- ஓட்டங்களை எடுத்தனர். அதிரடியாக ஆடிய ஹர்திக் பாண்ட்யா 76- பந்துகளில் 92 ரன்கள் குவித்தார்.

303 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 289 ஓட்டங்கள் மட்டும் எடுத்து தோல்வியைத் தழுவியது. இதன் மூலம் 3 வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா – ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டிகள் தொடரை ஆஸ்திரேலியா 2-1 என்ற அளவில் வென்றது.

LPL தொடரில் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி முன்னிலை!

லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் புள்ளி பட்டியலில் திஸர பெரேரா தலைமையிலான ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி முதலிடம் வகிக்கின்றது.

இதுவரை 3 போட்டிகளில் விளையாடியுள்ள அவ்வணி அனைத்திலும் வெற்றிபெற்று 6 புள்ளிகளைப்பெற்றுள்ளது.

கொழும்பு கிங்ஸ் அணி 2 போட்டிகளில் வெற்றிபெற்று 4 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. ஒரு போட்டியில் அவ்வணி தோல்வியடைந்துள்ளது.

தம்புள்ள வைகிங் அணி மூன்றாம் இடத்திலும், கண்டி அணி நான்காம் இடத்திலும், காலி அணி ஐந்தாம் இடத்திலும் உள்ளன.

‘கொரோனா’வின் பிடிக்குள் இருந்து 18,304 பேர் மீண்டனர்!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும்  487 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 304 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் 6 ஆயிரத்து 106 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 122  பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்து 532 ஆக அதிகரித்துள்ளது.

வழங்குவதாக கூறிய 20 பேர்ச்சஸ் காணி எங்கே? இ.தொ.காவிடம் திகா கேள்வி!

நல்லாட்சியில்தான் மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சட்டப்பூர்வமான காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டன. அந்த பத்திரத்தை வங்கியில் வைத்து கடன்கூட பெறலாம் – என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (2) நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” மலையக பெருந்தோட்டப்பகுதிகளில்வாழும் மக்களுக்கு எமது ஆட்சியின்போதே 7 பேர்ச்சஸ் காணி வழங்கப்பட்டது. எனினும், இது போதாது,எமது ஆட்சிவந்தால் 20 பேர்ச்சஸ் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சிலர் சூளுரைத்தனர். தற்போது அவர்களின் ஆட்சிவந்துள்ளது. அமைச்சும் கைவசம் இருக்கின்றது. அப்படி இருந்தும் ஏன் அதனை செய்யமுடியாமல் உள்ளது?

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா வழங்குமாறு யோசனை மாத்திரமே முன்வைக்கப்பட்டுள்ளது. அது அடிப்படை நாட் சம்பளமா அல்லது எல்லாவற்றையும் சேர்த்த பின்னர் வரும் தொகையா என்பதை அறிவிக்கவேண்டும். அவ்வாறு இல்லாமல் ஆயிரம் ரூபா என மட்டும்கூறுவது மக்களை ஏமாற்றும் செயலாகும்.” – என்றார்.

‘புரவி புயல் நாட்டு எல்லையைக் கடக்கும் நேரம் அறிவிப்பு’

புரவி சூறாவளி திருகோணமலை மற்றும் பருத்தித்துறைக்கிடையிலான முல்லைத்தீவினை அண்மித்த கடற்பரப்பில் இன்று இரவு 7.10 இற்கு நாட்டிற்குள் பிரவேசிக்கும் என எதிர்பார்த்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்போது கிழக்கு, வடக்கு, வடமத்திய, வடமேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

சில இடங்களில் 200 மி.மீ க்கும் அதிகமான மிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் வடக்கு, வடமத்திய, கிழக்கு, வடமேல், மேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 80-90 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் மிகப் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

சினிமா

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

செய்தி

தமிழக முதல்வராக பதவியேற்றார் ஜோசப் விஜய்!

0
தமிழக முதல்வராக பதவியேற்றார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை 10 மணியளவில் பதவியேற்பு விழா தொடங்கியது. வந்தே மாதரம் பாடல் இசைக்க பதவியேற்பு...

தவெக முதற்கட்ட அமைச்சரவை பட்டியல் வெளியீடு

0
தமிழக வெற்றிக் கழக அரசின் தவெக முதற்கட்ட அமைச்சர் பட்டியலை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் கீழ்காணும் பெயர்கள் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளன: புஸ்ஸி என்.ஆனந்த் ஆதவ் அர்ஜுனா கே.ஜி.அருண்ராஜ் கே.ஏ.செங்கோட்டையன் வெங்கடரமணன் நிர்மல்குமார் ராஜ்மோகன் டி.கே.பிரபு கீர்த்தனா 120 எம்எல்ஏக்களின் ஆதரவுக் கடிதங்களை ஆளுநரிடம் விஜய் நேற்று...

மரக்கறி விலைப்பட்டியல் (10.05.2026)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (10) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...