Home Blog Page 3749

மலையகத்திலும் அடை மழை – கடும் பனிமூட்டம்! இயல்பு வாழ்க்கை ஸ்தம்பிதம்!!

நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டம் உட்பட மலையகத்தில் பல பகுதிகளிலும் தற்போது மழை பெய்துவருகின்றது.
மழை, காற்று மற்றும் கடும் குளிரால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பலர் வீடுகளுக்குள்ளேயே முடங்கியிருப்பதை காணமுடிகின்றது.
நுவரெலியா மாவட்டத்தில் கடும் பனிமூட்டம் நிலவுவதால்   அவதானமாக வாகனம் செலுத்துமாறு சாரதிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காலநிலை அறிக்கை……
அதேவேளை, தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் விருத்தியடைந்த தாழமுக்கம் ஒரு ஆழமான தாழமுக்கமாக வலுவடைந்து பெரும்பாலும் மேற்கு – வடமேற்கு திசையில் நகரக்கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் மட்டக்களப்புக்கும் பருத்தித்துறைக்கும் இடையேயான இலங்கையின் கிழக்கு கரையை இன்று (டிசம்பர் 02ஆம் திகதி) மாலையில் அல்லது இரவில்கடக்கக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இத் தொகுதியின் தாக்கம் காரணமாக நாடு முழுவதும் மழையுடனான வானிலையும் காற்று நிலைமையும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கிழக்கு, வடக்கு, வடமத்திய, வடமேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் இடையிடையே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சில இடங்களில் 200 மி.மீ க்கும் அதிகமான மிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு, வடமேல், மேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 80-90 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் மிகப் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘தரிசு நிலங்களின் உரித்து தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படாது’

பெருந்தோட்டப்பகுதிகளிலுள்ள தரிசு நிலங்களின் உரித்து தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படாது. அவர்களுக்கு அதில் விவசாயம் செய்வதற்கு வாய்ப்பளிக்கப்படும் என்று அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

அத்துடன், மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியின்போதுதான், ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் தோட்டத்தொழிலாளர்களுக்கு காணி உரிமை வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று வேலுகுமார் எம்.பியால் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” பெருந்தோட்டத்தொழிலாளர்களுக்கு வீடுகள் அமைப்பதற்கான காணி உரிமை வழங்கப்படும். அவ்வாறான இடங்கள் தற்போது அடையாளம் காணப்பட்டுவருகின்றன. மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியின்போதுதான், ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் தோட்டத்தொழிலாளர்களுக்கு காணி உரிமை வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.

நல்லாட்சியின் கொள்கைத்திட்டங்களை எமது ஆட்சியில் முன்னெடுக்கமுடியாது. பெருந்தோட்டப்பகுதியில் உள்ள தரிசு நிலங்கள் விவசாயம் செய்வதற்கு வழங்கப்படும். ஆனால் அதன் உரித்து தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படாது.” – என்றார் மஹிந்தானந்த அளுத்கமகே.

வடக்கு மாகாணத்தில் பாடசாலைகள் 2 நாட்களுக்கு பூட்டு!

வடக்கு மாகாணத்தில் 4 மாவட்டங்களில் நாளை வியாழக்கிழமையும் மறுநாள் வெள்ளிக்கிழமையும் பாடசாலைகள் மூடப்படும் என்று மாகாண ஆளுநர், திருமதி பி.எம்.எஸ். சார்ள்ஸ் அறிவித்துள்ளார்.

சீரற்ற காலநிலை காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள் ஏற்கனவே மூடப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டப் பாடசாலைகளுக்கு இரண்டு நாள்கள் விடுமுறை நாளை தொடக்கம் விடப்படுகிறது.

மாவட்டச் செயலாளர்களால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக வடக்கு மாகாண ஆளுநரால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

தோட்டத் தொழிலாளர்களுக்கு 10 பேர்ச்சஸ் காணி எப்போது வழங்கப்படும்?

” பெருந்தோட்டப்பகுதியில் உள்ள தரிசு நிலங்களை தோட்டத்தொழிலாளர்களுக்கு தலா 2 ஏக்கர் வீதம் பிரித்துகொடுப்பதற்கு நல்லாட்சியின்போது நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. அத்திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமா?” – என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றத்தில் இன்று (2) நடைபெற்ற வாய்மூல விடைக்கான கேள்விநேரத்தின்போதே அவர் இவ்வாறு வினா தொடுத்தார். இது தொடர்பில் வேலுகுமார் எம்.பி., மேலும் கூறியவை வருமாறு,

” பெருந்தோட்டத் தொழிலாளர்களை லயன் யுகத்திலிருந்து விடுவிப்பதற்காக அவர்களுக்கு 7 பேர்ச்சஸ் வீதம் காணி வழங்கி தனி வீடு அமைக்கும் திட்டம் எமது ஆட்சியின்போது முன்னெடுக்கப்பட்டது. முதற்கட்டமதாக 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களில் 2 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டது.

எனினும், இந்த அரசாங்கம் ஆட்சிக்குவந்து ஓராண்டு முடிவடைந்துள்ளது. 10 பேர்ச்சஸ் காணி வழங்கப்படும் என்றனர். ஆனால் இன்னும் அது வழங்கப்படவில்லை. எனவே, குறித்த திட்டம் எப்போது ஆரம்பமாகும், எப்போது நிறைவடையும் என்பதை அரசாங்கம் அறிவிக்கவேண்டும்.

கடந்த எந்தவொரு ஆட்சியின்போது பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சட்டபூர்வமாக காணி உரிமை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. நல்லாட்சியின்போதுதான் லக்‌ஷ்மன் கிரியல்ல பெருந்தோட்டத்துறை அமைச்சராக இருக்கையில அமைச்சரவையில் தீர்மானம் எடுக்கப்பட்டு சட்டபூர்வமாக அதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

அதுமட்டுமல்ல பெருந்தோட்டப்பகுதியில் உள்ள தரிசு நிலங்களை, தோட்டத் தொழிலாளர்களுக்கு உற்பத்தி நடவடிக்கைகளுக்காக தலா 2 ஏக்கர் வீதம் பகிர்ந்தளிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டிருந்தன. அத்திட்டம் தொடருமா” – என்றார்.

‘3.5 கிலோ எடைகொண்ட மழைக்காளான் தொடர்பில் ஆராய்ச்சி’

கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில் அடையாளம் காணப்பட்ட 3.5 கிலோ எடை கொண்ட மழைக்காளான் விவசாய ஆராய்ச்சிக்கு எடுத்து செல்லப்பட்டது. இரணைமடு சந்தியில் அமைந்துள்ள விவசாய ஆராய்ச்சி நிலையத்துக்கு குறித்த காளான் எடுத்து செல்லப்பட்டது.

விவசாய ஆராய்ச்சி உதவி ஆணையாளர் கலாநிதி அரசகேசரி,நேற்று மாலை விவசாயியின் வீட்டுக்கு சென்று பார்வையிட்டதுடன், விவசாய ஆராய்ச்சிக்காக அதனை எடுத்து சென்றுள்ளார்.

குறித்த காளானிலிருந்து மாதிரிகள் விவசாய ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்படவுள்ளதுடன், அது தொடர்பான ஆய்வுகளும் மேற்கொள்ளப்படவுள்ளது.  காளான் தொடர்பான தகவல்களை ஆராய்ச்சியின் பின்னர் வெளியிடுவதாக கலாநிதி அரசகேசரி தெரிவிக்கின்றார்.

கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில் விவசாயி ஒருவர் வீட்டில் குறித்த மழைக்காளான் அறுவடை செய்யப் பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

‘கல்வி அபிவிருத்தியில் நுவரெலியா மாவட்டத்துக்கு அதிக கவனம் தேவை’

கல்வி அபிவிருத்தியில் நுவரெலியா மாவட்டம் குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் வீ.இராதா கிருஸ்ணன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 2021ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் கல்வி அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் அருகிலுள்ள ‘பாடசாலை சிறந்த பாடசாலை’ திட்டத்தின் கீழ் 964 பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன. 13697 வேலைத்திட்டங்களை 53 பில்லியன் செலவில் செய்திருந்தோம். ‘பாடசாலை சிறந்த பாடசாலை’ திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட பல பாடசாலைகள் இன்னமும் முழுமைப்படுத்தப்படாதுள்ளது. இவற்றை நிறைவுசெய்ய வேண்டும்.

மலையக பகுதிகளில் பல பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்பட்டிருந்தன. 3,126 ஆசிரியர்களை மலையக பாடசாலைகளுக்கு நியமித்திருந்தோம். ஆனால், அவர்கள் பயிற்சியை நிறைவுசெய்துவந்தப் பின்னர் அவர்களை ஆசிரியர் தரத்துக்கு உயர்த்துவதில் தாமதம் ஏற்பட்டுவந்தது. கடந்த சில நாட்களாக நாம்தான் நியமனங்களை வழங்கியதாக சிலர் கூறுகின்றனர். இது பொய்யான பிரசாரமாகும்.

மலையக பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகிறது. கிட்டதட்ட 3,000 பேர் அவசியமாகவுள்ளது. பட்டதாரி ஆசிரியர்களுக்கும் பாரிய பற்றாக்குறை உள்ளது. பாடசாலைகள் தரம் தொடர்பிலும் பல சிக்கல்கள் உள்ளன. இவையும் தீர்க்கப்பட வேண்டும்.

புலமைப் பரீட்சை பெறுபேறுகள் நாட்டின் ஏனைய மாவட்டங்களில் 75 சதவீதமாகவுள்ள நிலையில் நுவரெலியா மாவட்டத்தில் 64 சதவீதமாகவுள்ளது. க.பொ.த. சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் ஏனைய மாவட்டங்களில் 69.94 சதவீதமாகவுள்ள நிலையில் நுவரெலியா மாவட்டத்தில் 61 சதவீதமாகவுள்ளது. அதேபோன்று உயர்தர பெறுபேறுகள் ஏனைய மாவட்டங்களில் 63 சதவீதமாகவும் நுவரெலியா மாவட்டத்தில்43 சதவீதமாகவும் உள்ளது. ஆகவே, நுவரெலியா மாவட்டம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும்.

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் மூன்று மாதிரி பாடசாலைகளை உருவாக்கத் திட்டமிட்டிருந்தோம். அதில் ஒன்றை ஜனாதிபதியாகவிருந்த மைத்திரிபால சிறிசேன, பொலனறுவையில் அமைத்துக்கொண்டார். மற்றுமொரு பாடசாலையை குளியாப்பிட்டியில் அமைக்கப்பட்டது.

நுவரெலியாவில் அமைப்பதற்கு சந்தர்ப்பம் அளிக்கப்படவில்லை. இப் பாடசாலையை நுவரெலியாவில் அமைப்பதற்கு அனுமதியளிக்க வேண்டும். அதற்காக 400 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், காணியும் தெரிவுசெய்யப்பட்டுள்ளது. ஜப்பான் அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் பல்கலைக்கழக கல்லூரி ஒன்றை அமைக்கும் வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்திருந்தோம். அதனை அமைக்க நடவடிக்கையெடுக்க வேண்டும் என்றார்.

பசறை – கனவரல்ல தோட்டத்தில் மேலும் இருவருக்கு கொரோனா!

பசறை பிரதேசத்திற்குட்பட்ட கனவரல்ல தோட்டத்தில் மேலும் இருவருக்கு (வயது 4 மற்றும் 17) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொழும்பிலிருந்து வருகை தந்து அடையாளம் காணப்பட்ட முதலாவது கொரோனா தொற்றாளருடன் தொடர்புடையவர்களில் தனிமைப்படுத்தப்பட்டிருப்போரிடையே மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கையின்படி புதிய தொற்றாளர்கள் இருவர் அடையாளம் காணப்பட்டதாக பிரதேச பொது சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதன்படி இப்பகுதியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்வடைந்துள்ளது.
இத்திட்டத்தில் 107 குடும்பங்களை சேர்ந்த மக்கள் தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இவர்களுக்கான உலர்உணவு பொருட்கள் உட்பட்ட அத்தியாவசிய தேவைகளை பூர்த்திசெய்வதற்கான பசறை பிரதேச செயலகம் ஊடாக நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது.

நடராஜா மலர்வேந்தன்

உயிரிழந்த 11 கைதிகளில் 9 பேருக்கு கொரோனா தொற்று!

மஹர சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த 11 கைதிகளில் 9 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது என ராகம வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் காயமடைந்துள்ள கைதிகளுள் 40 இற்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்றியுள்ளது எனவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அதேவேளை, மஹர சிறைச்சாலை கலவரம் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ள நிலையில், உள்ளக விசாரணைகளும் ஆரம்பமாகியுள்ளன என்று பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்தனர்.

‘ சிறைச்சாலை கலவரம்’ – சபையில் அனைத்து தகவல்களும் முன்வைக்கப்படும்

” மஹர சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் கவலையடைகின்றோம். அச்சம்பவம் தொடர்பான அனைத்து தகவல்களும் விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.” – என்று நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில்  உறுப்பினர்களால் எழுப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” மஹர சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஐவரங்கிய குழுவினர்  தமது பணிகளை முன்னெடுப்பார்கள். ஒரு மாதத்துக்குள் முழுமையான விசாரணை அறிக்கையையும், ஒரு வாரத்துக்குள் இடைக்கால அறிக்கையையும் சமர்ப்பிக்குமாறு கோரியுள்ளேன்.

அத்துடன், மேற்படி சம்பவம் தொடர்பில் சி.ஐ.டியினரும் தனியாக விசாரணை நடத்துவார்கள். இதற்கான பணிப்புரையை பொலிஸ்மா அதிபர் விடுத்துள்ளார்.

இப்படியொரு சம்பவம் நடந்திருக்ககூடாது என்பதுதான் அனைவரினதும் எதிர்ப்பார்ப்பு. அரசாங்கம் என்ற வகையில் எமது கவலையை வெளியிடுகின்றோம். பின்னணி தொடர்பில் முழுமையாக ஆராயந்த பின்னர் தகவல்கள் முன்வைக்கப்படும். இதற்காக சிறிதுகாலம் வழங்குமாறு கோருகின்றேன்.” – என்றார்.

இன்று மாத்திரம் 541 பேருக்கு கொரோனா தொற்று!

நாட்டில் மேலும் 273 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பேலியகொடை கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.

இன்று மாத்திரம் இதுவரை 541 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்து 532 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் இதுவரையில் 122 பேர் உயிரிழந்துள்ளனர். 17 ஆயிரத்து 817 பேர் குணமடைந்துள்ளனர்.

2 ஆவது அலைமூலம் (மினுவாங்கொட, பேலியகொட கொத்தணிகள்) இதுவரையில் 20 ஆயிரத்து 983 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

சினிமா

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

செய்தி

தமிழக முதல்வராக பதவியேற்றார் ஜோசப் விஜய்!

0
தமிழக முதல்வராக பதவியேற்றார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை 10 மணியளவில் பதவியேற்பு விழா தொடங்கியது. வந்தே மாதரம் பாடல் இசைக்க பதவியேற்பு...

தவெக முதற்கட்ட அமைச்சரவை பட்டியல் வெளியீடு

0
தமிழக வெற்றிக் கழக அரசின் தவெக முதற்கட்ட அமைச்சர் பட்டியலை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் கீழ்காணும் பெயர்கள் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளன: புஸ்ஸி என்.ஆனந்த் ஆதவ் அர்ஜுனா கே.ஜி.அருண்ராஜ் கே.ஏ.செங்கோட்டையன் வெங்கடரமணன் நிர்மல்குமார் ராஜ்மோகன் டி.கே.பிரபு கீர்த்தனா 120 எம்எல்ஏக்களின் ஆதரவுக் கடிதங்களை ஆளுநரிடம் விஜய் நேற்று...

மரக்கறி விலைப்பட்டியல் (10.05.2026)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (10) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...