Home Blog Page 3750

‘மின் கட்டமைப்பில் ஏற்படும் கோளாறு காரணமாக இறப்பவர்களுக்கு 10 லட்சம் ரூபா இழப்பீடு’

மின்சார சபையின் மின் கட்டமைப்பில் ஏற்படும் கோளாறு மற்றும் குறைபாடுகள் காரணமாக ஏற்படும் இறப்புக்கு 10 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கும் வகையில் காப்புறுதித் திட்டமொன்றை தயாரிக்க மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும காப்புறுதி கூட்டுத்தாபனத்துடன் நடத்திய கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது.

திடீர் மின் தடை காரணமாக வீட்டு உபகரணங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு இந்த காப்புறுதி திட்டத்தை அறிமுகப்படுத்த இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்துடன் கலந்துரையாடப்பட்டதாக மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

மின்சக்தி தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்கூட்டம் நேற்று (30) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

பராமரிப்பு நடவடிக்கைகளுக்காக மின் தடை ஏற்படுத்தும் போது அதனை ஒரு வாரத்திற்கு முன்னர் பாவனையாளர்களுக்கு அறியப்படுத்துவதற்கான நடைமுறையொன்றை ஆரம்பிக்குமாறும் அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.

உள்ளூராட்சிமன்ற நிறுவனங்களுக்கு சொந்தமான பகுதிகளில் வீதி மின்விளக்கு வழங்கும் செயன்முறையை முறைமைப்படுத்தவும் அவ்வாறு வழங்கப்படும் வீதி விளக்குகளின் தரத்தை மேம்படுத்துவது தொடர்பிலும் ஆலோசனைக் குழுவில் தீர்மானிக்கப்பட்டது.

வீதி விளக்குகளுக்கு ஒரு வருடத்துக்கு மின்சார சபையினால் இரண்டு பில்லியன் ரூபாய் நிதி செலவிடப்படுகிறது. மின்சக்தியினால் இயங்கும் வீதி விளக்குகளை பொருத்துவதற்கு முடியாத பகுதிகளில் சூரிய சக்தியால் இயங்கும் வீதி விளக்குகள் பொருத்தும் அவசியம் பற்றியும் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது.

மின்னல் தாக்கும் பகுதிகளில் மின்னல் காரணமாக ஏற்படும் பாரிய அளவிலான சொத்து சேதங்கள் குறித்து குழு கவனம் செலுத்தியதுடன், இது தொடர்பாக இடர்முகாமைத்துவ திணைக்களத்துடன் கலந்தாலோசித்து தீர்வுகாண முடிவு செய்யப்பட்டது.

நாட்டில் சூரிய மின் கலங்களை (Solar Panel) பொருத்தும் போது உரிய பொறிமுறையொன்றை உருவாக்குதல் மற்றும் பாவனையாளர்களை அசௌகரியப்படுத்தாத முறையொன்றை உருவாக்குவது தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

இதற்காக நிலைபெறுதகு வலு அதிகாரசபை ஊடாக ஒழுங்குபடுத்தும் முறைமையொன்றை உருவாக்குவதாக சூரிய சக்தி, காற்று மற்றும் நீர் மின்னுற்பத்தி கருத்திட்ட இராஜாங்க அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்தார்.

இதற்கு மேலதிகமாக, அரச நிறுவனங்களுக்கு சூரிய மின் கலங்களை வழங்குவதற்கும் இந்திய கடன் திட்டத்தின் கீழ் 100 மில்லியன் ரூபாய் நிதி பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதன்மூலம் அரச நிறுவனங்களின் மின்சார கட்டணங்களுக்காக செலவு செய்யப்படும் பாரிய நிதியை படிப்படியாக குறைக்க முடியும். இதேவேளை, அரச நிறுவனங்களின் கூரைகளில் சூரிய மின் கலங்களை பொருத்துவதற்கு வாடகைக்கு வழங்குவதன் ஊடாக இலாபமீட்டும் வேலைத்திட்டமொன்றும் முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் அமைச்சர் மஹிந்த அமரவீர, பாராளுமன்ற உறுப்பினர்களான சாரதீ துஷ்மந்த, பீ.வை.ஜீ. ரத்னசேக்கர, சமன்பிரிய ஹேரத், சார்ள்ஸ் நிர்மலநாதன் மற்றும் மின்சக்தி அமைச்சின் செயலாளர் வசந்தா பெரேரா, சூரிய சக்தி, காற்று மற்றும் நீர் மின்னுற்பத்தி கருத்திட்ட இராஜாங்க அமைச்சின் செயலாளர் ஹேமந்த சமரகோன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

‘கொரோனா’ – உலகளவில் 14 லட்சத்து 77 ஆயிரம் பேர் உயிரிழப்பு!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 லட்சத்து 77 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

தற்போதைய நிலவரப்படி, 6 கோடியே 37 லட்சத்து 47 ஆயிரத்து 750 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவில் இருந்து 4 கோடியே 41 லட்சத்து 43 ஆயிரத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர்.

‘நுவரெலியா மாவட்டத்தில் கல்வியில் அரசியல் தலையீடு அதிகரிப்பு’

“நுவரெலியா மாட்டத்தில் மாத்திரமே கல்வியில் அரசியல் தலையீடுகள் மிகவும் அதிகரித்துக் காணப்படுகிறது. அதிபர்கள், ஆசிரியர்கள் சுயாதீனமான, சுதந்திரமாக செயற்படுவதற்கு இந்த அரசியல் பெரிதும் இடையூறாக இருக்கிறது. இந்த நிலைமை மாற்றி அமைக்கப்பட வேண்டும். அதற்கு நுவரெலியா மாவட்டத்தில் தமிழ் மொழி மூலமான தேசிய பாடசாலைகைள் உருவாக்கப்பட வேண்டும்.”

இவ்வாறு தொழிலாளர் தேசிய முன்னணியின் பிரதித் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம். உதயகுமார் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

எம். உதயகுமார் எம்.பியின் பாராளுமன்ற உரைவருமாறு,

” ஒரு நாட்டின் வளர்ச்சியில்,முன்னேற்றத்தில் அச்சாணியாகத் திகழ்வது கல்வியாகும். அதனால்தான் கல்வியின் சிறப்பு பற்றி கூறும் போது பார்வையை வழங்கக்கூடிய கண்களுக்கு ஒப்பிட்டு ‘எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்’ என்பர்.

மத்திய மாகாணத்தில் ஆசிரியர் உதவியாளர்கள் நிரந்தர நியமனம் இன்றி சிரமத்தை எதிர்நோக்கிய போது பலரும் அதனை கண்டுகொள்ளவில்லை. ஆனால் இந்த உயரிய பாராளுமன்றில் எதிர்கட்சி ஊடாக பிரேரணை முன்வைத்து உங்களது கவனத்திற்கு இந்த விடயத்தை நாம் கொண்டு வந்தோம்.

நீங்களும் உடனடியாக செயற்பட்டு மத்திய மாகாண கல்வி அதிகாரிகளுக்கு தேவையான ஒத்துழைப்புக்களை வழங்கி ஆசிரியர் உதவியாளர்களுக்கு நியமனம் கிடைக்க உறுதுணையாக இருந்தீர்கள். அதற்காக உங்களுக்கு எமது நன்றிகளை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறோம்.

நுவரெலியா மாவட்டத்தின் இன்றைய கல்வி தேவைகள் குறித்து இந்த சபையில் உரையாற்றினால் அதற்கு ஒரு நாள் போதாது. அந்த அளவு பிரச்சினைகள் மற்றும் குறைகள் நிரம்பிக் கிடக்கின்றன. எனினும் அதில் உள்ள முக்கிய சில விடயங்கள் மீது உங்கள் கவனத்தை ஈர்க்கலாம் என விரும்புகிறேன்.

நுவரெலியா மாவட்ட கல்வித் துறையில் குறிப்பாக தமிழ் கல்விப் பிரிவில் தேசிய பாடசாலை என்ற விடயம் இன்னும் எட்டக்கணியாகவே இருந்து வருகிறது. கடந்த அரசாங்கத்தில்தேசிய பாடசாலைகள் உருவாக்க முயற்சி எடுத்த போதும் அரசியல் ரீதியான காரணங்களாள் அதனை செய்ல் படுத்த முடியவில்லை.

அனைத்து பாடசாலைகளையும் மாகாண கல்வி அமைச்சின் கீழ் வைத்துக் கொண்டு தமது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளும் நோக்கில் சிலர் செயற்படுவதை காண முடிகிறது.

நுவரெலியா மாட்டத்தில் மாத்திரமே கல்வியில் அரசியல் தலையீடுகள் மிகவும் அதிகரித்துக் காணப்படுகிறது. அதிபர்கள், ஆசிரியர்கள் சுயாதீனமான, சுதந்திரமாக செயற்படுவதற்கு இந்த அரசியல் பெரிதும் இடையூறாக இருக்கிறது.

இந்த நிலைமை மாற்றி அமைக்கப்பட வேண்டும். அதற்கு நுவரெலியா மாவட்டத்தில் தமிழ் மொழி மூலமான தேசிய பாடசாலைகைள் உருவாக்கப்பட வேண்டும். திறமையான அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ள பாடசாலைகள் தேசிய அளவிற்கு செல்ல முடியாமல் மாகாணத்திற்குள் முடங்கி கிடக்கின்றனர்.

நுவரெலியா மாவட்டத்தில் 8 தேசிய பாடசாலைகள் உள்ளன. அதில் ஒன்றுகூட தமிழ் மொழி மூல தேசியப் பாடசாலை இல்லை என்பது வருத்தம் அளிக்கிறது.

நுவரெலியா மாவட்டத்தை எடுத்துக் கொண்டால், நுவரெலியா வலயத்தில் 123 தமிழ் மொழி மூல பாடசாலைகளும் ஹட்டன் வலயத்தில் 112 தமிழ் மொழி மூல பாடசாலைகளும் கொத்மலை வலயத்தில் 36  தமிழ் மொழி மூல பாடசாலைகளும் வலப்பனை வலயத்தில் 24 தமிழ் மொழி மூல பாடசாலைகளும் ஹங்குராங்கெத்தை வலயத்தில் 12 தமிழ் மொழி மூல பாடசாலகைளுமாக மொத்தம் 443 தமிழ் மொழி மூல பாடசாலைகள் காணப்படுகின்றன.

இவற்றில் ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை, கல்விப் பொதுத் தராதர சாதார மற்றும் உயர் தர பரீட்சைகளில் சாதனை பெறுபேறுகளை வௌியிடும் பாடசாலைகள் உள்ள போதும் ஒன்றுகூட தமிழ் மொழி மூல தேசிய பாடசாலை கிடையாது என்பதை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனவே   உங்களின் காலத்திலாவது நுவரெலியா மாவட்டத்தில் தமிழ் மொழி மூலமான தேசிய பாடசாலைகள் எந்த அரசியல் தலையீடும் இன்றி உருவாக்கப்பட வேண்டும் என இந்த சந்தர்ப்பத்தில் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.

நுவரெலியா மாவட்டத்தில் உள்ள தமிழ் மொழி மூலமான பாடசாலைகளில் இன்னும் கணிதம், ஆங்கிலம், விஞ்ஞானம் போன்ற பாடங்களுக்கான ஆசியர்களின் பற்றாக்குறை காணப்படுகிறது. அதனை முழுமையாக பூர்த்தி செய்ய வேண்டும். மேலும் ஆசிரியர் ஆலோசகர்களுக்கு பற்றாக்குறை காணப்படுகிறது.

ஆசிரியர் ஆலோசகர்களாக நியமனம் பெற தகுதி உடையவர்கள் பலர் உள்ள போதும் ஏதோ காரணத்தால் அவர்களுக்கு நியமனம் கிடைக்கவில்லை. இந்த ஆசிரியர் ஆலோசகர் நியமன விடயத்தில் அமைச்சர் அவர்கள் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என வினயமாகக் கேட்டுக் கொள்கிறேன்.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் கம்பெரலிய வேலைத் திட்டத்தின் ஊடாக அநேகமான பாடசாலைகளுக்கு குடிநீர், மலசலகூட வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டன. அதுபோன்று நுவரெலியா மாவட்டத்தில் பாடசாலைகளுக்கு காணிகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் அதில் கட்டிடங்களை கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை என்ற திட்டத்தின் கீழ் சில பாடசாலைகளுக்கு கட்டிடம் பெற்றுக் கொடுக்கப்பட்டது. ஆனால் தூர பிரதேச பாடசாலைகள் குறிப்பாக தோட்டப் பாடசாலைகள் இன்னும் முறையான கட்டிட வசதி இன்றி இயங்கிக் கொண்டிருக்கின்றன. சில பாடசாலைகள் கொழுந்து நிறுக்கப்படும் மடுவத்தில் இயங்குகிறது. சில இடங்களில் வகுப்புகள் ஆதி காலத்தைப் போன்று மரத்திற்கு அடியில் நடத்தப்படுகிறது.

எனவே இவ்விடயத்தை கருத்திற் கொண்டு தோட்டப் புற பாடசாலைகளில் காணப்படும் கட்டிட குறைப்பாட்டை நிவர்த்த செய்ய கெளரவ கல்வி அமைச்சர்கள் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

நுவரெலியா மாவட்டத்தில் கல்வித்துறையில் தற்போது பிள்ளைகள் முன்னேற்றத்தை கண்டுள்ள போதும் பாடசாலை இடைவிலகள் நிலைமையை கட்டுப்படுத்த முடியாதுள்ளது.

இலவசக் கல்வி உள்ள நாட்டில் மாணவர்களின் பாடசாலை இடைவிலகல் என்பது கவலையளிக்கும் நிலையாகும். இதனை கட்டுப்படுத்த கொள்கை ரீதியான திட்டங்கள் செயற்படுத்தப்பட வேண்டும். கட்டாயக் கல்விக் கொள்கை செயற்படுத்தப்பட வேண்டும். இதற்குத் தேவையான சட்டங்கள் அல்லது சட்டத் திருத்தங்களை கொண்டு வர வேண்டும்.

நுவரெலியா மாவட்டத்தில் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளதை வரவேற்கிறோம். அந்த திட்டத்தை முறையாக முன்னெடுத்துச் செல்வதற்கு நாம் ஒத்துழைப்பு வழங்கத் தயாராகவே இருக்கிறோம்.

நாட்டில் இன்று கொரோனா தொற்று காரணமாக பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில்ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஆனாலும் சில மாவட்டங்களில் பாடசாலை மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருப்பதால் மீண்டும் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில் பெற்றோர் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப அஞ்சுகின்றனர். இதனால் மாணவர்களின் வரவு மிகவும் குறைந்துள்ளது. இவ்விடயத்தை கருத்திற் கொண்டு முறையான சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை பூர்த்தி செய்து பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். ” – என்றார்.

‘கொரோனா’ தொற்றாளர்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்தை தாண்டியது!

நாட்டில் மேலும் 268 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பேலியகொடை கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.

அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்து 255 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் இதுவரையில் 118 பேர் உயிரிழந்துள்ளனர். 17 ஆயிரத்து 817 பேர் குணமடைந்துள்ளனர்.

2 ஆவது அலைமூலம் (மினுவாங்கொட, பேலியகொட கொத்தணிகள்) இதுவரையில் 20  ஆயிரத்து 710  பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

மேலும் இரு கைதிகள் உயிரிழப்பு! பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு!!

மஹர சிறைச்சாலை கலவரத்தால் காயமடைந்த கைதிகளில் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர். இதன்படி குறித்த சம்பவத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, காயமடைந்தோரின் எண்ணிக்கை 117 ஆக உயர்வடைந்துள்ளது. இதில் சிறைச்சாலை அதிகாரிகளும் உள்ளடங்குகின்றனர்.

 

23,987 பேருக்கு கொரோனா – 17,817 பேர் குணமடைவு – 118 பேர் உயிரிழப்பு

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும்  257 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்து 817 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் 6 ஆயிரத்து 52 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 118  பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்து 987 ஆக அதிகரித்துள்ளது.

‘சூர்யாவுடன் நடிக்க பயந்தேன்’ – மனம் திறந்தார் அபர்ணா

சூரரை போற்று படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமான அபர்ணா பாலமுரளி, அப்படம் தொடர்பான தனது அனுபவங்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.

“நான் மலையாளத்தில் அதிக படங்களில் நடித்து இருக்கிறேன். சூர்யா படத்துக்கு நடிகை தேர்வு நடப்பது தெரிந்து அங்கு போனேன். நடிப்புக்கு பெயர்போன சூர்யாவுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் பெரிய அதிர்ஷ்டம் என்று கருதினேன். வாய்ப்பு கிடைத்த தகவல் வந்ததும் ஆகாயத்திலேயே பறக்க ஆரம்பித்தேன்.

சீனியர் நடிகர் சூர்யா. எனது பெயர் கூட யாருக்கும் தெரிந்து இருக்காது. நான் புதுப்பெண். என்னை அவர் ஜோடியாக்க ஒப்புக்கொண்டதே பெரிய விஷயம். முதலில் அவருடன் நடிக்க மிகவும் பயந்தேன். ஆனால் பயிற்சியில் கதையை இருவரும் சேர்ந்து படித்தோம். எனக்கு மிகவும் உதவி செய்தார். அவரது ஒத்துழைப்பை என்றும் மறக்க முடியாது.

சூர்யாவின் பொறுமையை பார்த்தால் எல்லோரும் அதிசயிப்பார்கள். சக நடிகர்களை ஊக்குவிப்பார். படத்தில் வரும் எல்லா நடிகர்களும் அவர்கள் பங்கை சிறப்பாக செய்ய வேண்டும் என்பதில் அக்கறை எடுப்பார்.

நடிகர்களாக இருப்பவர்கள் நடித்து முடித்ததும் போய் விடுவார்கள். ஆனால் சூர்யா அப்படி இல்லை. ஒவ்வொருவர் நடிப்பையும் உன்னிப்பாக கவனிப்பார். மிகவும் நல்ல மனிதர். எனது அம்மாவும், அப்பாவும் இசை கலைஞர்கள். எனது ஊர் கேரளாவில் உள்ள பாலக்காடு.” இவ்வாறு அபர்ணா பாலமுரளி கூறினார்.

‘தனிமைப்படுத்தப்பட்டிருந்த பெண் யாழில் திடீர் மரணம்’

யாழ்ப்பாணம் காரைநகரில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவர் திடீர் சுகயீனம் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

காரைநகரில் கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்ட நிலையில் அவரது வீட்டுக்கு அண்மையில் வசித்த வந்த 60 வயதுடைய வயோதிபரே உயிரிழந்துள்ளார். வயோதிபர் கடந்த சனிக்கிழமை முதல் வீட்டில் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

மூச்சுத் திணறல் காரணமாக அவர் நேற்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். அவரை கோவிட் -19 நோய்த் தொற்று தனிமைப்படுத்தல் விடுதியில் வைத்து சிகிச்சையளிக்கப்பட்டது.எனினும் அவர் உயிரிழந்துள்ளார். மருத்துவர்களின் குறிப்பேட்டின் படி குருதியின் அளவு அரைவாசியாகக் குறைந்ததால் உயிரிழந்துள்ளார்.

அவரது இறப்புத் தொடர்பில் உடற்கூற்றுப் பரிசோதனையை செய்வதா? அல்லது பிசிஆர் பரிசோதனையின் அறிக்கை கிடைத்த பின்னர் உற்கூற்றுப் பரிசோதனையைச் செய்வதா? என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகம் ஆராய்ந்து வருகிறது.

பொகவந்தலாவயில் வெற்றிலை வியாபாரிக்கு கொரோனா!

பொகவந்தலாவ குயினா தோட்டத்தில் மேலும் 06 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  குறித்த தோட்டத்தில் நான்கு தோட்டத்தொழிலாளர் குடியிருப்புக்கள் தனிமைப்படுத்தப்பட்டள்ளன. அத்துடன், பொகவந்தலாவ நகரில் உள்ள வெற்றிலை கடை ஒன்றுமூடப்பட்டுள்ளது என்று நோர்வூட் பிரதேச சபையின் தலைவர் கே.கே.குழந்தவேல் தெரிவித்தார்.

கொழும்பிலிருந்து பொகவந்தலாவ குயினா தோட்டத்திற்கு வருகை தந்த நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்ததனையடுத்து,  கடந்த 28 ஆம் திகதி அவரின் குடும்ப உறுப்பினர்களுக்கும், தொடர்பில் இருந்தவர்களுக்கும் பி.சி.ஆர். பிரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. அதன் முடிவு இன்று வெளியான நிலையில் அறுவருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி குயினா தோட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேரும் பொகவந்தலாவ நகரில் வெற்றிலை விற்பனையில் ஈடுபடும் நபர் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுடன் நெருக்கமான தொடர்பினை பேணியவர்கள் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

குறித்த கொரோனா தொற்றுக்குள்ளான நபர்கள் கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு சிகிச்சைக்காக அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

குறித்த வெற்றிலை வியாபாரியிடம் பல தோட்டங்களைச் சேர்ந்த மக்கள் வெற்றிலை வாங்கி சென்றுள்ளதாக சுகாதார தரப்பினர் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இது குறித்து நோர்வூட் நகர சபையின் தவைர் கே.கே.குழந்தைவேல் கருத்து தெரிவிக்கையில்,

 கொரோனா தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்ட தோட்டத்தின் குடியிருப்புக்களுக்கும்,  குறித்த வெற்றிலை கடை பிரதேசதிற்கும் தொற்று நீக்கம் செய்யதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாகவும், பொகவந்தலாவையில் இதற்கு முன்  14 கொரோனா தொற்றாளர்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாகவும் அதனால் இப்பிரதேசம் முடக்குவதா இல்லையா என்பது தொடர்பாக சுகாதார பிரிவினர் பாதுகாப்பு பிரிவினர், பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளிடம் கலந்தாலோசித்து வருவதாகவும் தெரிவித்தார்.

டயகமவில் ‘வட்டி’ மாபியா! சினிமாப்பாணியில் பெண் அராஜகம்!!

நுவரெலியா மாவட்டத்தில் டயகம பகுதியில் மேற்கு 5ஆம் பிரிவிலுள்ள பெண்ணொருவர் வட்டிக்கு பணம் கொடுத்து மோசடியான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றார் எனவும், அவருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளபோதிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் பாதிக்கப்பட்ட மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

வழங்கும் பணத்துக்கு அதிக வட்டி அறவிடப்படுவதாகவும், இது தொடர்பில் வினவினால் அடியாட்களை வைத்து அப்பெண் தாக்குவதாகவும் அவருக்கு எதிராக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

சில காவல்துறை அதிகாரிகளின் ஒத்துழைப்போடும் – அடியாட்களையும் வைத்துக்கொண்டும் சினிமாப்பாணியில் வட்டி வர்த்தகம் நடத்தும் இப்பெண் தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்கள் தினமும் உள்ளக்குமுறல்களை வெளிப்படுத்தினர். அவர்களின் சார்பில் எமக்கு கீழ்வரும் பதிவு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது. அதனை உங்கள் பார்வைக்கு முன்வைக்கின்றோம்.

தனிநபரகளின் செயல்கள் சமூகத்துக்கு அல்லது மக்களுக்கு பாதிப்பெனில் அவற்றை செய்தியாக வெளியிடுவது தவறில்லை என்ற அடிப்படையில் பதிவிடுகின்றோம்.

“கடன் வாங்கிறது நம்ம அம்மாமார் பழக்கம்தான். அதை திருப்பிக் கொடுக்கத்தான் வேணும். ஆனா இங்கு பெரிய அநியாயம் நடக்குது. ஒரு பெண் ரொம்ப அடாவடி நடத்திக்கிட்டு இருக்காங்க.

வட்டிக்கு காசு எடுக்கும்போது வெத்து காகிதத்தில கையெழுத்து வாங்கிறது, அப்படி வெத்து காகிதத்தில கையெழுத்து போட முடியாதுனு சொன்னா, தொகைய எழுத்தில எழுதாமல் இலக்கத்தில மட்டும் எழுதிக்கிறது.

அப்புறம் வட்டி கொடுக்க கொஞ்சம் லேட் ஆகிச்சினா அந்த இலக்கத்தில தொகை கூட்டி போடுறதுனு அடாவடி பண்ணிக்கிட்டு இருக்கிறாங்க. உதாரணமாக 40,000 வாங்கியிருந்து, வட்டிக்கொடுக்க லேட் ஆகிட்டா, அதை 4 லட்சமாக மாத்தி, மிரட்டுறது.

பொலிஸ் நிலையத்தில அந்த பெண்மீது ஏகப்பட்ட முறைப்பாடு இருக்கு. ஆனால் பொலிஸ் பொறுப்பதிகாரி பல தடவை கண்டிச்சி இருக்கிறாரு. இப்போது பொலிஸ் நிலையத்தில இரண்டாவது மூனாவது உள்ள பொலிஸ் அதிகாரிகளை கைக்குள்ள போட்டுக்கிட்டு, பொலிஸ் நிலையத்தில யாராவது முறைப்பாடு செய்யப்போனா அவங்களுக்கு எதிராக ரொம்ப அடாவடி பண்ணுறது. இப்படி ரொம்ப அடாவடி பண்ணிக்கிட்டு இருக்காங்க.

அத்துடன், தன்னிடம் பணம் பெற்று திரும்பி செலுத்த தாமதிக்கும் பெண்களை தரக்குறைவாக பேசுவதுடன், ஆண்களைக்கூட ஆள்வைத்து மிரட்டும் அளவுக்கு குறித்த பெண் நடந்துகொள்வதாக கூறப்படுகிறது.

சினிமாவில பண்ணுற மாதிரியே அந்த பெண் பண்ணிக்கிட்டு இருக்கு. ஒரு தம்பதிக்கு ரொம்ப நாளா குழந்தை இல்லை. அவங்க ஒரு பிள்ளைய எடுத்து வளர்க்கிறாங்க. அதில் அந்த பெண் கொழும்பில் வேலை செய்கிறார்.

அந்தப் பிள்ளை வீட்டில் இருக்கும்போது, உங்க உண்மையான அம்மா, அப்பா இவங்க இல்லை. உங்க அம்மா, அப்பா வேற என்று அந்த பிள்ளைக்கிட்ட சொல்லியிருக்கிறாங்க. தங்கட அம்மா, அப்பா என்டு நினைச்சு வாழ்த்துக்கிட்டு இந்த அந்தப் பிள்ளை இப்போ ரொம்ப மனசு உடைஞ்சு போய் இருக்கு. இதை கேட்கப்போன அப்பாவை, ரொம்ப கெட்ட வார்த்தையால திட்டி, மிளகாய் தண்ணிய ஊத்தி, இதை தனது பிள்ளைக்கிட்ட கொடுத்து வீடியோ எடுத்து, பயமுறுத்திறாங்க. பொலிசில முறையிட்டா, தன்னுடைய பிள்ளைய மானபங்கப்படுத்த முயற்சித்ததா சொல்லுவேனு மிரட்டுராங்க.

தமது பெண்கள் குடும்ப பொருளாதார சுமையினால் அதனை சமாளிக்க கடன் வாங்கி இவ்வாறு சிக்கிக் கொள்ளும் பல சந்தர்ப்பங்கள் அமைகின்றன. எனினும், அவற்றை கையாள்வதற்கு சில வழிமுறைகளைப் பின்பற்றுவது அவசியமாகிறது. குறிப்பாக கடன் வாங்குபவரும், கொடுப்பவரும்கூட இந்த வழிமுறைகளைப் பின்பற்றி, ஒரு ஒழுங்கை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

அத்துடன், இவ்வாறு பணத்திற்காக மனிதர்களைக் கீழ்த்தரமாக நடத்தும், பேசும் நபர்களுக்கு எதிராகவும் மக்கள் முறைப்பாடுகளை செய்ய வேண்டும்.
டயகம அல்லது அண்டிய பிரதேசங்களில் இருக்கும் சட்டம் படித்தவர்கள் அல்லது மனித உரிமை, சமூக செயற்பாட்டாளர்கள் இவ்வாறான செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முன்வர வேண்டும்.

அல்லது தொண்டு நிறுவனங்களின் இலவச சட்ட ஆலோசனைப் பெற்று இவ்வாறான சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முன்வர வேண்டும். இந்தப் பதிவைப் பார்க்கும் யாராவது ஒருவர் இவ்வாறான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான வழிகாட்டல்களை வழங்க முன்வர வேண்டும்.” – என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பு : (குறித்த பெண் நடந்துகொள்ளும் விதம், வார்த்தைப் பிரயோகங்கள் உள்ளிட்ட பல வீடியோக்கள் வந்துள்ள போதிலும், நாகரீகம் கருதி அவற்றை நாம் வெளியிடவில்லை)

சினிமா

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

செய்தி

யாழ். போதனா தீ விபத்து: மீட்சிப் பணிகள் தீவிரம்!

0
யாழ். போதனா தீ விபத்து: மீட்சிப் பணிகள் தீவிரம்! 9 பாரவூர்திகளில் மருந்துகளை ஏற்றிவரத் துரித ஏற்பாடு நோயாளர் சேவைகள் பாதிக்கப்படாது என்று அறிவிப்பு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருந்துக் களஞ்சியசாலையில் இடம்பெற்ற தீ விபத்தால் ஏற்பட்ட இழப்புகளை...

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு: 262 என்புத் தொகுதிகள் அடையாளம்

0
யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் முதலாம் பகுதி நேற்று நிறைவடைந்தது. 12 நாள்கள் இடம்பெற்ற இந்த ஆய்வின் முடிவில், இதுவரை மொத்தம் 262 மனித என்புத் தொகுதிகள் அடையாளம்...

இன்றும் வெற்றிநடை போடுமா சிஎஸ்கே?

0
ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெறும் 53 ஆவது லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே , லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இப்போட்டி...