Home Blog Page 3751

மடுல்சீமை டைனாவத்தையில் கள்ள சாராயம் விற்றவர் கைது!

மடுல்சீமை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டைனாவத்தை பகுதியில் கள்ளசாராயம் ( கசிப்பு) விற்பனையில் ஈடுபட்ட நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மடுல்சீமை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து சம்பவ விரைந்த  பொலிஸார் ஒரு தொகை கள்ளசாராயத்தை கைப்பற்றியதோடு சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 3 ம் திகதி பசறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மடூல்சீமை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 பசறை நிருபர் –  ராமு தனராஜா

மஹர சிறைச்சாலை கலவரம் ! 4 பிரிவுகளால் விசாரணை முன்னெடுப்பு!!

மஹர சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் நான்கு வெவ்வேறான விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று அமைச்சரவை இணைப்பேச்சாளரும், அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று காணொளி தொழில்நுட்பம்மூலம் நடைபெற்றது. இதன்போது கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” மஹர சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் விசாரணை அறிக்கை வெளியான பின்னரே அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் முடிவு அறிவிக்கப்படும். சம்பவத்தின் பின்புலம் பற்றி ஆராயவேண்டும்.

சம்பவம் தொடர்பில் சிறைச்சாலை திணைக்களம் விசாரணை முன்னெடுக்கின்றது. சிறைச்சாலை இராஜாங்க அமைச்சும் விசாரணை நடத்துகின்றது. நீதி அமைச்சும் ஐவரடங்கிய குழுவொன்றை அமைத்துள்ளது. சி.ஐ.டியினரும் தனியான விசாரணையை முன்னெடுக்கின்றனர். ” – எனவும் அவர் குறிப்பிட்டார்.

‘மத்திய மாகாணத்தில் நேற்றுவரை 408 பேருக்கு கொரோனா’

மத்திய மாகாணத்தில் நேற்று 30ஆம் திகதிவரை 408 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது என மாகாண சுகாதார சேவை திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி கண்டி மாவட்டத்தில் 235 பேருக்கும், நுவரெலியா மாவட்டத்தில் 121 பேருக்கும், மாத்தளை மாவட்டத்தில் 52 பேருக்கும் வைரஸ் தொற்றியுள்ளது.

இதில் குறிப்பாக கண்டி மாவட்டத்தில் அக்குரண சுகாதார சேவையின் பிரிவில் 71 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நுவரெலியா மாவட்டத்தில் அம்பகமுவ சுகாதார பிரிவில் 40 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மழையால் 3ஆவது போட்டி ரத்து – தொடரை வென்றது நியூசிலாந்து!

நியூசிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான கடைசி 20 ஓவர் போட்டி மழையால் இரத்து செய்யப்பட்டது.

நியூசிலாந்துக்கு சென்றுள்ள மே. தீவுகள் கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது.

நியூசிலாந்து- மே. தீவுகள் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மவுன்ட் மாங்கானுவில் நேற்று நடைபெற்றது.

போட்டி தொடங்குவதற்கு முன்பே மழை பெய்ததால் ஆட்டம் தாமதமாக தொடங்கியது. நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி, முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

இதன்படி முதலில் ஆடிய தே. தீவுகள் அணி 2.2 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 25 ஓட்டங்கள் எடுத்து இருந்த போது மழை குறுக்கிட்டது.

தொடர்ந்து மழை பலமாக கொட்டியதால் போட்டியை ரத்து செய்வதாக நடுவர்கள் அறிவித்தனர்.

ஏற்கனவே முதல் 2 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று இருந்த நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் போட்டி தொடரை கைப்பற்றியது. நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் பெர்குசன் தொடர்நாயகன் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார். இவ்விரு அணிகள் இடையிலான 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் முதலாவது டெஸ்ட் போட்டி ஹாமில்டனில் நாளை மறுநாள் ஆரம்பமாகின்றது.

பொகவந்தலாவயில் மேலும் ஐவருக்கு கொரோனா!

பொகவந்தலாவ குயினா தோட்டத்தில் கீழ்பிரிவில் மேலும் ஐவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இன்று (01.12.2020) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 09, 13, 34, 65 மற்றும் 75 வயதுடைய நபர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களை கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு கொண்டுசெல்வதற்கான ஏற்பாடுகள் சுகாதார அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

பொகவந்தலாவ குயினா தோட்டத்தில் கீழ்பிரிவில் கடந்த 28 ஆம் திகதி கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டார். இதனையடுத்து அவரின் குடும்ப உறுப்பினர்கள் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களிடம் பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டன.

பிசிஆர் பரிசோதனை முடிவுகள் இன்று வெளியாகின. இதில் அறுவருக்கு வைரஸ் தொற்றிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை, பொகவந்தலாவ பொது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்துக்குட்பட்ட பகுதிகளில் இதுவரை 20 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கம்பளையில் தளபாடங்களை களவாடி தலைமறைவானர் கைது!

கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜயமாலப்புர பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலையொன்றில் தளபாடங்களை களவாடிய நபரொருவர் கம்பளை பொலிஸாரால் நேற்று (30.11.2020) கைது செய்யப்பட்டுள்ளார்.

சில நாட்களுக்கு முன்னர் தளபாடங்களை களவாடிய குறித்த நபர் தலைமறைவாகியுள்ளார். பொலிஸாரின் தேடுதல் வேட்டை தொடர்ந்தது. இந்நிலையில் கம்பளை பொலிஸின் குற்றத்தடுப்பு பிரிவினர் அவர் ஒளிந்திருக்கும் இடத்தை கண்டுபிடித்து, சந்தேகநபரையும் நேற்று கைது செய்தனர்.

மேசை, கதிரைகள் உட்பட களவாடப்பட்ட பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.கொரக்கொய டொன்சைட் எனும் பகுதியில் மறைந்திருந்தவேளையிலேயே அவர் மடக்கிப்பிடிக்கப்பட்டார் என பொலிஸார் தெரிவித்தனர்.

கம்பளை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி சம்பத் சம்பத் விக்கிரமரத்தினவின் வழிகாட்டலுக்கமைய, குற்றத்தடுப்பு பிரிவின் பிரதான பொலிஸ் பரிசோதகர் கபில பண்டார தலைமையிலேயே இதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

2ஆவது அலைமூலம் 20,448 பேருக்கு கொரோனா – 14,152 பேர் குணமடைவு – 105 பேர் உயிரிழப்பு!

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2 ஆவது அலைமூலம் இதுவரையில் 20 ஆயிரத்து 448 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது. நேற்று மாத்திரம் 503 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

2ஆவது அலைமூலம் (மினுவாங்கொட, பேலியகொட கொத்தணிகள்) வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களில் 14 ஆயிரத்து 152 பேர் குணமடைந்துள்ளனர்.

நாட்டில் நேற்று மாத்திரம் 12 ஆயிரத்து 31 பிசிஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் கொரோனா மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்து 986ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 17 ஆயிரத்து 559 பேர் குணமடைந்துள்ளனர். 6 ஆயிரத்து 309 பேருக்கு சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. 118 பேர் உயிரிழந்துள்ளனர்.

சிறைச்சாலை கலவரத்தால் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 107 ஆக உயர்வு!

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தால் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 107 ஆக அதிகரித்துள்ளது என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அத்துடன், சிகிச்சைபெற்றுவரும் கைதிகளில் 10 பேரின் நிலமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதேவேளை, காயமடைந்த 71 பேரில் 48 பேருக்கு துரித என்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவர்களுள் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ராகம வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

மஹர சிறைச்சாலை கலவரத்தால் இதுவரை 8 கைதிகள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

‘உலகளவில் 37 மில்லியனுக்கும் மேற்பட்டோருக்கு எயிட்ஸ்’

கொவிட்-19 தொற்று காரணமாக உலகளாவிய ரீதியில் பெரிதும் பாதிக்கப்பட்டு, அது தொடர்பில் மாத்திரம் கவனம் செலுத்திவரும் ஒரு சூழ்நிலையிலும், இன்றைய எயிட்ஸ் தினம் குறித்து கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.

1987ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவாவில் அமைந்துள்ள உலக சுகாதார அமைப்பில் எயிட்ஸ் தொடர்பான உலகளாவிய நிகழ்ச்சியின் பொது தகவல் அதிகாரிகளான ஜேம்ஸ் பன்ஸ் மற்றும் தாமஸ் நெட்டேர் ஆகிய இருவருக்கு தோன்றிய யோசனைக்கு அமைக்கு சர்வதேச எயிட்ஸ் தினம் பிரகடனப்படுத்தப்பட்டது.

அதற்கமைய 1988ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் டிசம்பர் முதலாம் திகதி கடைப்பிடிக்கப்படும் சர்வதேச எயிட்ஸ் தினம், எச்.ஐ.வி. தொற்று பரவலினால் ஏற்படும் எயிட்ஸ் தொற்றுநோய் தொடர்பில் விழிப்பூட்டுவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

அரச மற்றும் சுகாதார அதிகாரிகளினால் எயிட்ஸ் தொடர்பான எண்ணக்கருக்களில் பேச்சுக்கள், மாநாடுகள், பேரணிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இலங்கையில் இத்தினம் அனுஸ்டிக்கப்பட்டு வருகிறது.

‘எச்.ஐ.வி. தொற்றை முடிவுக்கு கொண்டுவருதல், எதிர்ப்பு திறன் மற்றும் தாக்கத்தை குறைத்தல்’ என்பதே 2020ஆம் ஆண்டின் எயிட்ஸ் தினத்தின் கருப்பொருளாகும். உலகளாவிய நிலையான அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு 2030ஆம் ஆண்டளவில் உலகளாவிய ரீதியில் எயிட்சை இல்லாதொழிப்பதே நோக்கமாகும். அதற்கமைய 2025ஆம் ஆண்டளவில் இந்நாட்டிலிருந்து எயிட்ஸ் நோயை இல்லாதொழிப்பதை இலக்காகக் கொண்டு செயற்படுகின்றோம்.

அதற்கான தயார்ப்படுத்தல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ள போதிலும், தயார்ப்படுத்தல்களின் மூலம் எயிட்சை இல்லாதொழிக்க முடியாததுடன், அதற்கு தேவையான பலம் மனித சமூகத்தினால் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்பதை நினைவுபடுத்துகின்றேன். அது அனைத்து மனித சமூகத்தினரதும் பொறுப்பாகும். அப்பொறுப்பை நிறைவேற்றுவதற்கு நாம் அனைவரும் கட்டுப்பட வேண்டும்.

உலகளாவிய ரீதியில் எச்.ஐ.வி. தொற்றாளர்களின் எண்ணிக்கை இதுவரை 37 மில்லியனை தாண்டியுள்ளது. ஆண்டுக்கு 1.7 மில்லியன் பேர் புதிதாக எச்.ஐ.வி. தொற்றுக்கு உள்ளாவதுடன், இலங்கையில் அது ஒரு சதவீதத்திற்கும் குறைவாகும்.

எது எவ்வாறாயினும் எயிட்சுக்கு எதிராக போராடுவதற்கும், தடுப்பதற்கும் நாம் உறுதியாக இருக்க வேண்டியதுடன், அது தொடர்பில் பொறுப்புடன் செயற்பட வேண்டும். எச்.ஐ.வி. தொற்றுடைய நபர்கள் சமூகத்தினால் ஒதுக்கப்படாதிருப்பதற்கும், அவர்களை தேவையான சிகிச்சைக்கு உட்படுமாறும் நாம் அறிவிக்க வேண்டும்.

அதனால் எச்.ஐ.வி. தொற்றாளர்கள் தேவையான சிகிச்சைகளை முறையாக முன்னெடுத்து, நோயை கட்டுப்படுத்திக் கொள்வதற்கு எயிட்ஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ள அனைவரும் அது தொடர்பில் கவனம் செலுத்துவதற்கு இன்றைய தினத்தில் மேற்கொள்ளப்படும் அரசாங்கத்தின் விழிப்பூட்டலை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தகவல் – பிரதமரின் ஊடகப்பிரிவு

‘கொரோனா’ – கலஹாவை சேர்ந்த ஒருவர் மரணம்!

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர்.

கண்டி, கலஹா பகுதியைச் சேர்ந்த 72 ஆணொருவரும்,  அட்டுலுகம பகுதியைச் சேர்ந்த 81 வயதான பெண்ணொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 118 ஆக அதிகரித்துள்ளது.

அதேவேளை, கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்து 987 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 17 ஆயிரத்து 560 பேர் குணமடைந்துள்ளனர். 6 ஆயிரத்து 309 பேர் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.

சினிமா

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

செய்தி

யாழ். போதனா தீ விபத்து: மீட்சிப் பணிகள் தீவிரம்!

0
யாழ். போதனா தீ விபத்து: மீட்சிப் பணிகள் தீவிரம்! 9 பாரவூர்திகளில் மருந்துகளை ஏற்றிவரத் துரித ஏற்பாடு நோயாளர் சேவைகள் பாதிக்கப்படாது என்று அறிவிப்பு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருந்துக் களஞ்சியசாலையில் இடம்பெற்ற தீ விபத்தால் ஏற்பட்ட இழப்புகளை...

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு: 262 என்புத் தொகுதிகள் அடையாளம்

0
யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் முதலாம் பகுதி நேற்று நிறைவடைந்தது. 12 நாள்கள் இடம்பெற்ற இந்த ஆய்வின் முடிவில், இதுவரை மொத்தம் 262 மனித என்புத் தொகுதிகள் அடையாளம்...

இன்றும் வெற்றிநடை போடுமா சிஎஸ்கே?

0
ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெறும் 53 ஆவது லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே , லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இப்போட்டி...