Home Blog Page 3752

திஸர பெரேரா அதிரடி – ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி வெற்றிநடை!

திஸர பெரேராவின் அதிரடியால் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி, 66 ஓட்டங்களால் வெற்றிக்கனியை ருசித்துள்ளது.

லங்கா பிரிமியர் லீக் தொடரில் தம்புள்ள வைகிங் மற்றும் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெற்றது.

நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற தம்புள்ள வைகிங் அணி முதலில் களத்தடுப்பை தெரிவுசெய்தது.

இதன்படி துடுப்பெடுத்தாட களமிறங்கிய ஜப்னா அணியினர், 8.3 ஓவர்களில் 64 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர். எனினும், அணித் தலைவர் திஸர பெரேரா அதிரடி காட்டினார்.

7 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகள் அடங்களாக 44 பந்துகளில் 97 ஓட்டங்களை விளாசினார். இதனால் 20 ஓவர்கள் நிறைவில் ஜப்னா அணி 7 விக்கெட்டுகளை இழந்து 218 ஓட்டங்களைப் பெற்றது.

பின்னர் 219 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய தம்புள்ளை அணி, 19.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 152 ஓட்டங்களையே பெற்றது. ஆட்ட நாயகனாக திஸர பெரேரா தெரிவுசெய்யப்பட்டார்.

‘மஹர சிறைச்சாலை கலவரம்’ – விசாரணைக்கு ஐவரடங்கிய குழு!

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட நிலைமை குறித்து விசாரணை நடத்துவதற்காக ஐவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

நீதி அமைச்சர் அலிசப்ரியால் இக்குழு இன்று நியமிக்கப்பட்டது என்று நீதி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

மேற்படி சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்தி, பரிந்துரைகளுடனான அறிக்கையொன்றை ஒரு மாதத்துக்குள் இக்குழு முன்வைக்க வேண்டும்.

மேல் நீதிமன்றத்தின் ஓய்வூப் பெற்ற நீதிபதி குசலா சரோஜனி வீரவர்தன தலைமையிலான இக்குழுவில், நீதி அமைச்சின் பிரதம சட்ட ஆலோசகர், ஜனாதிபதி சட்டத்தரணி யூ.ஆர்.டி.சில்வா, நீதி அமைச்சின் மேலதிக செயலாளர் ரோஹண ஹபுகஸ்வத்த, பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண ,  முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் காமினி ஜயசிங்க ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

காயமடைந்த கைதிகளில் 26 பேருக்கு கொரோனா! 10 பேரின் நிலைமை கவலைக்கிடம்!!

மஹர சிறைச்சாலையில், சிறைச்சாலை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் காயமடைந்து, ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கைதிகளில் 26 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 71 கைதிகளுள் 48 கைதிகளுக்கு இன்று ரெபிட் அன்டிஜன் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

இதில் 26 கைதிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என ராகமை வைத்தியசாலையின் உயர்மட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதேவேளை, காயமடைந்த கைதிகளில் 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

‘மதுபோதையில் நாக பாம்புடன் விளையாடியவர் மரணம்’

மதுபோதையில் நாக பாம்புடன் விளையாடியவர் அது தீண்டியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் வல்வெட்டித்துறையில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
“நேற்றிரவு மதுபோதையில் வீட்டுக்கு வந்த அவர், நாக பாம்பைப் பிடித்து விளையாடியுள்ளார். சில நிமிடங்கள் கழித்து அதனை அயலில் உள்ள வளவில் வீசிவிட்டு தூக்கத்துக்குச் சென்றுள்ளார்.
தூக்கத்தால் திடீரென எழுந்த அந்த நபர், நெஞ்சு வலிப்பதால் குடிதண்ணீர் கேட்டுள்ளார்.  3 செம்பு  குடிதண்ணீரை  அருந்திய அவர், நெஞ்சு வலிப்பதாகக் கூறியுள்ளார்
எனினும் அவர் பருத்தித்துறை – மந்திக்கை வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற நிலையில் உயிரிழந்துள்ளார்.அவரது கையில் பாம்பு தீண்டிய அடையாளம் காணப்படுகின்றது” என்று ஆரம்ப விசாரணைகளின் பின் பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக மந்திகை வைத்திசாலையில் வைக்கப்பட்டுள்ளது.-

2ஆவது அலை – தொற்றாளர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டியது

நாட்டில் மேலும் 178 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பேலியகொடை கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.

அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்து 662 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் இதுவரையில் 116 பேர் உயிரிழந்துள்ளனர். 17 ஆயிரத்து 560 பேர் குணமடைந்துள்ளனர்.

2 ஆவது அலைமூலம் (மினுவாங்கொட, பேலியகொட கொத்தணிகள்) இதுவரையில் 20  ஆயிரத்து 124 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் மேலும் ஆறுபேருக்கு கொரோனா தொற்று!

நுவரெலியா மாவட்டத்தில் மேலும் 6 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இன்று (30.11.2020) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

திம்புள்ள – பத்தன, லிந்துலை, பூண்டுலோயா, தலவாக்கலை மற்றும் அக்கரப்பத்தனை ஆகிய பொலிஸ் பிரிவுகளைச்சேர்ந்த அறுவருக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது. இவர்கள் அனைவரும் கொழும்பில் இருந்துவந்தவர்களென்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து இவர்களுடன் நேரடி தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களிடம் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட அறுவரும் சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.

பூண்டுலோயா , மல்தெனிய பகுதியில் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ள 44 வயதுடைய நபர் கடந்த 19 ஆம் திகதி கொழும்பு புளுமண்டல் பகுதியில இருந்து வந்துள்ளார். இவரிடம் கடந்த 28 ஆம் திகதி பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டுள்ளன.

புறக்கோட்டையில் மொத்த வியாபார விற்பனை நிலையமொன்றில் தொழில்புரிந்த நிலையில் கடந்த 19 ஆம் திகதி திம்புள்ள – பத்தன பொலிஸ் பிரிவிலுள்ள குயின்ஸ்பேரி தோட்டத்துக்கு வந்த 36 வயது நபரொருவருக்கும் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெயாவல் தோட்டத்தில் வலகா பிரிவு மற்றும் தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கூமூட் தோட்டத்தில் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட நபர்கள் இருவரும் கொழும்பில் இருந்தே வந்துள்ளனர்.

அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டொரின்டன் தோட்டத்திலும் இரு இளைஞர்களுக்கு வைரஸ் தொற்று பிசிஆர் பரிசோதனைமூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களில் ஒருவர் கொழும்பு துறைமுகத்தில் வேலை செய்துள்ளார். ஏனையவரும் கொழும்பில் தொழில் புரிந்துள்ளார்.

க.கிசாந்தன்

 

 

 

‘கொரோனா’வின் பிடிக்குள் இருந்து மேலும் 558 பேர் குணமடைவு!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 558 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்து 560 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் 5 ஆயிரத்து 808 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 116  பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்து 484 ஆக அதிகரித்துள்ளது.

மஹர சிறைச்சாலை கலவரம் பற்றி விமல் வெளியிட்டுள்ள பரபரப்பு தகவல்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு சர்வதேச ரீதியில் அவமதிப்பை ஏற்படுத்த ஒழுங்கமைக்கப்பட்ட சதி நடவடிக்கையே மஹர சிறைச்சாலை கலவம் என்று அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் கூறியதாவது,

” கொரோனா நோயாளிகளின் நெரிசலின் விளைவாக இந்த சம்பவம் நடக்கவில்லை. சதுரங்க உள்ளிட்ட குழுவினர் மாத்திரைகளை விநியோகித்துள்ளனர். இந்த மாத்திரைகளை பயன்படுத்தும் போது ​​ஒருவரின் இரத்தத்தைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். இந்த பரிசோதனையை இருவருக்கு செய்தபின், வெலிடை சிறைச்சாலையில் முடிந்தவரை மாத்திரையை விநியோகிக்கவும், ஒரு கொலைகார சூழ்நிலையை உருவாக்கவும் அவர்கள் தயாராக இருந்தனர்.

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டிருந்த கைதிகளால் சதுரங்க வழிநடத்தப்பட்டுள்ளார். புலனாய்வுப் பிரிவினர் இதைப் பற்றி அறிந்து கொண்டு சதுரங்க என்ற இந்த கைதியை வேறு சிறைக்கு மாற்றினர். இதில் சம்பந்தப்பட்ட ஒரு சில கைதிகளையும் மாற்றினர். இதனால் வெலிகடை சிறைச்சாலையில் இந்த சூழ்நிலையை உருவாக்க முடியவில்லை.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக, மஹர சிறைச்சாலையில் இந்த திட்டம் அரங்கேற்றப்பட்டுள்ளது. இது நெரிசலால் ஏற்படும் மன அழுத்தத்தின் காரணமாக ஏற்பட்டதாக கருத முடியாது. அப்படி நினைப்பது இலகுவானது. இதனை நான் அறிந்ததால் கூறுகிறேன்.

இது திட்டமிட்ட செயல். கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்புச் செயலாளராக இருந்த போது சிறையில் கொலைகள் நடந்தன. அவர் ஜனாதிபதியாக இருக்கும் காலத்தில் இப்படியான சம்பவம் நடந்துள்ளது என சித்தரிக்கவும் இது நடத்தப்பட்டுள்ளது. சர்வதேச ரீதியில் ஜனாதிபதிக்கு அவமதிப்பை ஏற்படுத்துவதே இதில் இருக்கும் உண்மையான கதை.” – என்றார்.

ராமாயண கதையில் சீதையாக கீர்த்தி சனான்

ராமாயண கதையை மையமாக வைத்து ஆதிபுருஷ் என்ற பெயரில் தமிழ், தெலுங்கு, இந்தி கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் புதிய படம் தயாராகிறது.
இந்த படத்தை 3 டியில் எடுக்கின்றனர். இதில் ராமராக பிரபாஸ் நடிக்கிறார்.
அவர் கூறும்போது, “ஆதிபுருஷ் படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரமும் சவாலானது. இதில் நடிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்றார்.
இது பிரபாசுக்கு 21-வது படம். இதில் நடிப்பதற்காக வில்வித்தை பயிற்சிகள் எடுத்து வருகிறார். பிரபாஸ் ஏற்கனவே பாகுபலி படத்தில் கதாநாயகனாக நடித்து பிரபலமானவர். தெலுங்கில் முன்னணி கதாநாயகனாக இருக்கிறார். ராவணனாக இந்தி நடிகர் சயீப் அலிகான் நடிக்கிறார். ஓம்ராவத் இயக்குகிறார். ஜனவரியில் படப்பிடிப்பை தொடங்க உள்ளனர்.
இந்த படம் பற்றிய அறிவிப்பையும், முதல் தோற்றத்தையும் ஏற்கனவே வெளியிட்டு உள்ளனர். இந்த நிலையில் பிரபாஸ் ஜோடியாக சீதை வேடத்தில் நடிப்பது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. கீர்த்தி சுரேஷ், அனுஷ்கா சர்மா உள்ளிட்டோர் பெயர்கள் அடிபட்டன. இந்த நிலையில் இந்தி நடிகை கீர்த்தி சனானை தேர்வு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

‘ரஜினி முதல்வர் வேட்பாளராக களமிறங்குவாரா’ – விரைவில் முடிவு அறிவிப்பு

அரசியல் கட்சி தொடர்பாக விரைவில் முடிவு எடுத்து அறிவிக்க உள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவாரா? தொடங்க மாட்டாரா? என்பது தொடர்பான எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நீடித்த நிலையில், மாவட்ட செயலாளர்களுடன் ரஜினிகாந்த் இன்று ஆலோசனை நடத்தினார்.

கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அரசியல் நிலவரம் தொடர்பாக விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இப்போது கட்சி தொடங்கலாமா? கட்சி தொடங்கும் சூழல் உள்ளதா? என்பது குறித்து நிர்வாகிகளிடம் ரஜினிகாந்த் கேட்டறிந்தார்.

நிர்வாகிகள் தங்கள் பகுதி நிலவரங்கள் மற்றும் தங்களின் கருத்துக்களை ரஜினியுடன் பகிர்ந்துகொண்டனர். முதல்வர் வேட்பாளராக ரஜினிகாந்த் போட்டியிட வேண்டும் என்ற கருத்தையும் பலர் முன்வைத்துள்ளனர்.

இந்த ஆலோசனைக் கூட்டம் முடிந்ததும் ரஜினிகாந்த், பால்கனியில் நின்றபடி ரசிகர்களை நோக்கி கையசைத்தும் வணங்கியும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், விரைவில் நல்ல முடிவு எடுத்து அறிவிப்பதாக கூறினார். என்ன முடிவு எடுத்தாலும் ஆதரவு அளிப்பதாக மாவட்ட செயலாளர்கள் உறுதி அளித்திருப்பதாகவும் ரஜினிகாந்த் குறிப்பிட்டார்.

சினிமா

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

செய்தி

இன்றும் வெற்றிநடை போடுமா சிஎஸ்கே?

0
ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெறும் 53 ஆவது லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே , லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இப்போட்டி...

குஜராத் அணி அபார வெற்றி!

0
2026 ஐபிஎல் தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 52-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 77 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற இப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் பந்து...

இன்று முதல்வராகிறார் விஜய்! அமைச்சரவையும் பதவியேற்பு!!

0
தமிழக முதல்வராக விஜய் இன்று பதவியேற்கவுள்ளார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை 10 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 இடங்களை கைப்பற்;றியது. எனினும், விஜய்...