Home Blog Page 3753

‘மஹர சிறைச்சாலை கலவரம் – அரசு பொறுப்பு கூறவேண்டும்’!

மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலுக்கு அரசாங்கமே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என ஜே.வி.பி.யின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று திங்கட்கிழமை உரையாற்றிய அவர், “மஹர சிறைச்சாலையில், நேற்றிரவு மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதுவரை 8 பேர்  உயிரிழந்துள்ளனர். 50 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த எண்ணிக்கைகள் அதிகரிக்கும் என்று  வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தண்டனைப் பெறுபவர்கள் சிறைச்சாலைகளில் இருந்தாலும், அவர்கள் அரசாங்கத்தின் பொறுப்பில் இருப்பதாகவே கருதப்படும். எனவே, இந்தச் சம்பவத்திற்கான முழுப் பொறுப்பையும் அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.இது உடனடியாக எழுந்த சர்ச்சை அல்ல. ஏற்கனவே மஹர உள்ளிட்ட சிறைச்சாலையில் உள்ளவர்களை கொரோனா அச்சுறுத்தலை அடுத்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வந்தார்கள்.

மஹர சிறைச்சாலையில் கொரோனாவினால் மட்டும் 183 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். குறிப்பாக சிறைச்சாலைகளில் இருவர் இருக்க வேண்டிய இடத்தில் 8 பேரளவில் இருக்கிறார்கள்.

இதனால்தான் வைரஸ் அங்கு வேகமாக பரவிவருகிறது. இந்த நிலையில், தங்களை பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தான் அவர்கள் கோரியிருந்தார்கள்.இது நியாயமானதொரு கோரிக்கையாகும். இதனை நிராகரித்தமையால்தான் இன்று இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

இது ஜனநாயகத்துக்கு கொஞ்சம்கூட ஏற்புடையதல்ல. இதுதொடர்பாக சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர் உரிய பதிலை வழங்க வேண்டும்.” என கூறினார்.

தம்புள்ளையில் இருந்து தெல்தோட்டை வந்தவருக்கு கொரோனா!

கலஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெல்தோட்டை கிரவனாகெட்டிய – கொலபிஸ்ஸ பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தம்புள்ளையில் தொழில்புரிந்த நிலையில் கடந்த 28 ஆம் திகதி ஊர் திரும்பிய 36 வயதுடைய நபரொருவருக்கே இவ்வாறு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தம்புள்ளையில் வைத்து குறித்த நபரிடம் கடந்த 27 ஆம் திகதி பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டிருந்த நிலையில், பரிசோதனை முடிவு வெளிவருவதற்கு முன்னரே 28 ஆம் திகதி அவர் ஊர் திரும்பியுள்ளார்.

பிசிஆர் பரிசோதனை முடிவில் அவருக்கு வைரஸ் தொற்றியுள்ளமை உறுதியானது. இதனையடுத்து அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தொற்றாளர் பொல்கொல்ல வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.

கந்தப்பளையில் இருவருக்கு கொரோனா – வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை

நுவரெலியா பிரதேச சபைக்குட்பட்ட கந்தப்பளை பகுதியில் இரு கொரோனா தொற்றாளர்கள் இணங்காணப்பட்டுள்ளதால் கந்தப்பளை நகரம் உட்பட கந்தப்பளை பகுதியிலுள்ள அனைத்து பகுதிகளுக்கும் தொற்று நீக்கிகளை தெளிக்க  நுவரெலியா பிரதேச சபை தலைவர் வேலு யோகராஜ் நடவடிக்கை எடுத்துள்ளார்.
அதற்கான   விசேட கூட்டம் 30/11/2020 திங்கட்கிழமை  கந்தப்பளை கிளை  காரியாலயத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு நுவரெலியா பிரதேச சபையின் உப தலைவர் உட்பட உறுப்பினர்கள் கந்தப்பளை பிரதேசத்திற்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் , கிராம உத்தியோகத்தர் கந்தப்பளை பிரதேசத்தில் அமைந்துள்ள பிரதான பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் வர்த்தக சங்கத்தினர்கள் நுவரெலியா பிரதேச சபையின் உத்தியோகஸ்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் கந்தப்பிள்ளை பிரதேசத்தில் 2 தொற்றாளர்களுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களுடன் தொடர்புடைய சகல இடங்களுக்கும் நுவரெலியா பிரதேச சபையின் மூலம் தொற்று நீக்கம் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் அவர்களினால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 15 குடும்பங்களுக்கு கந்தப்பளை வர்த்தக சங்கத்தினரால் உலர் உணவு பொதிகள் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் கந்தப்பளை பிரதேசத்திலுள்ள அனைத்து தோட்ட புறங்களுக்கும் கொவிட் தொற்று தொடர்பான விழிப்புணர்வுகளை மேற்கொள்வதற்கும், தொற்று உறுதி செய்யப்பட்ட இருவரின் பிரதேசங்களில் உள்ள பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் தொடர்பாக உரிய தரப்பினருடன் கலந்துரையாடி பிரச்சினைக்கான தீர்வினை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் கந்தப்பளை நகரில் மரக்கறி வகைகள் ஏற்றுமதி இறக்குமதி செய்பவர்கள் தொடர்பாக கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என வருகை தந்திருந்த அனைவருக்கும் அறிவித்தல் கொடுக்கப்பட்டது.
நீலமேகம் பிரசாந்த்

8 கைதிகள் இதுவரை உயிரிழப்பு – 53 பேருக்கு காயம்! சபையில் தகவல்!!

மஹர சிறைச்சாலை கலவரத்தால் எட்டு கைதிகள் உயிரிழந்துள்ளனர். 53 பேர் காயமடைந்துள்ளனர். உயிரிழப்பு மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்ககூடும் என தகவல் கிடைத்துள்ளன என்று ஜே.வி.பியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அத்துடன், குறித்த சம்பவத்துக்கு கடும் கண்டனத்தையும் வெளியிட்டார். இதன் பின்னணி ஆராயப்படவேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

அதேவேளை, மஹர சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்படவேண்டும் – என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும்  பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.

அமைச்சின் செயலாளர் தலைமையில் விசாரணை குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது என்று இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோ புள்ளே கூறினார்.

போகம்பறை சிறையிலிருந்து தப்பிக்க முயன்ற நான்கு கைதிகள் மடக்கிப் பிடிப்பு!

கண்டியில் உள்ள பழைய போகம்பறை சிறைச்சாலையிலுள்ள தனிமைப்படுத்தப்பட்ட நிலையத்திலிருந்து தப்பியோட முயற்சித்த நான்கு கைதிகள் சிறை அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றுமுன்தினம் நள்ளிரவில் தப்பியோடமுயற்சித்துள்ள கைதிகளே அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவ வேளை, சிறை அதிகாரிகள் ஆகாயத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் செய்து தப்பியோடிய கைதிகளை கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது :

சிறைச்சாலையில் ஒரு பகுதியில் தடுத்து வைக்கப்பட்ட இவர்கள் கதவை உடைத்து அங்கிருந்து திறந்த வெளிக்கு வெளியே வரும் வேளை அதனை கண்காணித்த சிறை அதிகாரிகள் ஆகாயத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் செய்து நிலைமைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

மேலும் குறித்த தனிமைப்படுத்தும் நிலையமான பழைய போகம்பறை சிறைச்சாலையிலிருந்து அண்மையில் தப்பிக்க முயன்ற சந்தர்ப்பத்தில் அவர்களில் ஒருவர் சுவரில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும் .

மேலும் போகம்பறை சிறைச்சாலையில் தற்போது சுமார் 310 கைதிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த சம்பவம் குறித்து சிறைச்சாலை அதிகாரிகள் விசாரணை நடாத்தி வருகிறனர்.

‘கொரோனா’ ஊழித்தாண்டவம்! பலி எண்ணிக்கை 116 ஆக உயர்வு!!

கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2 ஆவது அலையால் இலங்கையில் நேற்றுவரை 103 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப்பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.நேற்று மாத்திரம் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

இலங்கையில் கடந்த மார்ச் மாதம் முதல் ஒக்டோபர் 22 வரையான சுமார் 8 மாத காலப்பகுதியில் கொரோனாவால் 13 பேரே உயிரிழந்திருந்தனர்.31 ஆம் திகதியாகும்போது மரண எண்ணிக்கை 20 ஆக அதிகரித்தது.

எனினும் கடந்துள்ள 28 நாட்களில் மாத்திரம் 96 பேர் உயிரிழந்துள்ளனர். நாளாந்தம் கொரோனா மரணங்கள் நிகழ்ந்த வண்ணமுள்ளன. கொழும்பு மாவட்டத்திலேயே அதிக மரணங்கள் பதிவாகியுள்ளன.

அதேவேளை, இலங்கையில் கொரோனா 2 ஆவது அலைமூலம் ( மினுவாங்கொட, பேலியகொட கொத்தணிகள்) நேற்று வரை 19 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்றியுள்ளனர்.

2 ஆவது அலைமூலம் வைரஸ் தொற்றியவர்களில் நேற்றுவரை 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.

அதேவேளை  இலங்கையில் கடந்த மார்ச் மாதம் முதல் நேற்று நள்ளிரவுவரை 23 ஆயிரத்து 484 பேருக்கு கொரோனா தொற்றியுள்ளது. இவர்களில் 17 ஆயிரத்து இருவர் காயமடைந்துள்ளனர். 116  பேர் உயிரிழந்துள்ளனர்.

மஹர சிறைச்சாலையில் பயங்கரம்! 6 சடலங்கள் மீட்பு!!

மஹர சிறைச்சாலையில் நேற்று மாலை ஏற்பட்ட கலவரத்தால் உயிரிழந்த 6 பேரின் உடல்கள் இதுவரை கிடைக்கப்பெற்றுள்ளன என்று ராகமை வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், காயமடைந்த 43 பேர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் கூறினார்.

மஹர சிறைச்சாலையின் கைதிகள் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து மேலும் சில கைதிகள் சிறைச்சாலையில் இருந்து தப்பிச் செல்ல முயற்சித்த சம்பவத்தை காரணமாக கொண்டு நேற்று (29) மாலை  அமைதியின்மை ஏற்பட்டது. சிறைச்சாலை அதிகாரிகள் துப்பாக்கி பிரயோகமும் மேற்கொண்டுள்ளனர்.

இதனையடுத்து விசேட பொலிஸ் அதிரடிப்படையினரும் களனி மற்றும் ராகம பொலிஸ் நிலையத்தில் இருந்து பொலிஸ் குழுக்களும் அழைக்கப்பட்டிருந்தன. சிறைச்சாலை அதிகாரிகளும் காயமடைந்துள்ளனர்.

 

‘கொரோனா’ மேலும் ஏழு பேர் உயிரிழப்பு! பலி எண்ணிக்கை 116 ஆக உயர்வு!!

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் மேலும் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.

நான்கு ஆண்களும், மூன்று பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இவர்களில் நால்வர் 70 வயதைக்கடந்தவர்கள்.

இதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 116 ஆக அதிகரித்துள்ளது.

அதேவேளை, கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்து 484 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 17 ஆயிரத்து இரண்டு பேர் குணமடைந்துள்ளனர். 6 ஆயிரத்து 373 பேர் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.

2ஆவது அலை – தொற்றாளர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை நெருங்குகிறது!

நாட்டில் மேலும் 173 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பேலியகொடை கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.

இன்று இதுவரையில் 496 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்து 484 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் இதுவரையில் 109 பேர் உயிரிழந்துள்ளனர். 17 ஆயிரத்து  இரண்டு பேர் குணமடைந்துள்ளனர்.

2 ஆவது அலைமூலம் (மினுவாங்கொட, பேலியகொட கொத்தணிகள்) இதுவரையில் 19  ஆயிரத்து 946 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

‘ அடிப்படை சம்பளம் 1000 ரூபா என்பதை அரசு சட்ட ரீதியாக உறுதி செய்ய வேண்டும்’

” நாட் கூலி தொழிலாளி ஒருவரின் அடிப்படைச் சம்பளம் ஆயிரம் ரூபாய்க்குக் குறையாமல் இருக்க வேண்டும் என்பதை அரசாங்கத்தினால் வர்த்தமானியின் மூலம் உறுதிப்படுத்தப்படுத்துகின்ற போதே தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளம் ஆயிரம் ரூபாய் என்பது சாத்தியமாகும்.” என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான சோ. ஸ்ரீதரன் தெரிவித்தார்.

பொகவந்தலாவை மேற்பிரிவு தோட்டத்தின் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தோட்டக் கமிட்டி உறுப்பினர்களுக்கிடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் கருத்து தெரிவித்தப் போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஹற்றன் பணிமனையில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதிப் பொதுச் செயலாளர் ப. கல்யாணகுமார், இளைஞரணி தலைவர் பா. சிவனேசன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

சோ. ஸ்ரீதரன் தொடர்ந்து கருத்துக் கூறுகையில் ,

” இலங்கையில் தற்போது நாட் கூலித் தொழிலாளி ஒருவரின் அடிப்படை சம்பளம் 400 ரூபாயாக வரையறுக்கப்பட்டுள்ளது.இதனை அரசாங்கம் தொழில் அமைச்சின் ஊடாக வர்த்தமானி அறிவித்தலில் வெளியிட்டுள்ளது.இவ்வாறான சூழ்நிலையில் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஜனவரி மாதம் முதல் ஆயிரம் ரூபாய் வேதனம் தோட்டக் கம்பனிகள் வழங்க வேண்டும் என்று நிதி அமைச்சராகிய பிரதம மந்திரியால் முன்மொழியப்பட்டுள்ளது.

எனினும் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள மீளாய்வானதுபெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்துக்கும் கூட்டொப்பந்தத் தொழிற்சங்கங்களுக்கும் இடையில் இடம் பெறுவதொன்றாகும்.

இந்தப் பேச்சு வார்த்தை இடம் பெறுவதற்கு முன்பு நாட்கூலி தொழிலாளர்களின் அடிப்படை நாட்சம்பளம் 1000 ரூபாய் என்று அரசாங்கம் உரிய முறையில் அறிவிக்கும் பட்சத்தில் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தையும் ஆயிரம் ரூபாய் அடிப்படை சம்பளம் என்ற அடிப்படையில் பேச்சுவார்த்தைகளை தொடர முடியும்.இந்த விடயம் தொடர்பில் தோட்டத் தொழிலாளர்கள் தெளிவாக இருக்க வேண்டும்.

ஜனவரி முதலாம் திகதி முதல் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பள உயர்வு கிடைக்கப் போவதாக தற்போது பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.தற்போது தோட்டத் தொழிலாளர்கள் அடிப்படை நாள் சம்பளமாக 700 ரூபாவைப் பெற்று வருகின்றனர்.

எந்த விதமான நிபந்தனை கொடுப்பனவுகளும் இன்றி தோட்டத் தொழிலாளர்களுக்கு 300 ரூபாய் கிடைக்கும் பட்சத்தில் தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளத்தை 1000 ரூபாயாக அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதனை விடத்து தோட்டத் தொழிலாளர்களைஏமாற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கக் கூடாது.இவ்விடயம் தொடர்பில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தோட்டக்கமிட்டி உறுப்பினர்கள் தமது சக தொழிலாளர்களிடத்தில் இவ்விடயத்தை தெளிவுபடுத்த வேண்டும்.” – என்றார்.

 

சினிமா

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

செய்தி

இன்று முதல்வராகிறார் விஜய்! அமைச்சரவையும் பதவியேற்பு!!

0
தமிழக முதல்வராக விஜய் இன்று பதவியேற்கவுள்ளார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை 10 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 இடங்களை கைப்பற்;றியது. எனினும், விஜய்...

மலையக தியாகி சிவனு லெச்சுமணன் நினைவேந்தல்….!

0
மலையகத் தமிழர்களுக்கான உரிமைப் போராட்டத்தின் உயிர்க்கொடையாளி மலையக தியாகி சிவனு லெச்சுமணனின், 49 ஆம் ஆண்டு நினைவுதினத்தில் செவ்வஞ்சலி நிகழ்வு எதிர்வரும் 11 ஆம் திகதி நடைபெறவுள்ளது. ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் ஏற்பாட்டில் அன்றைய...

யாழ்.வைத்தியசாலையில் தீ விபத்து: விசாரணை தீவிரம்!

0
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதான மருந்து களஞ்சியசாலையில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில், பல கோடி ரூபா பெறுமதியான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் தீக்கிரையாகியுள்ளன. இன்று அதிகாலை வேளையில் மருந்து...