Home Blog Page 3754

‘கொரோனா’ தொற்றாளர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்தை தாண்டியது!

நாட்டில் மேலும் 323 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பேலியகொடை கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.

அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்து 311 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் இதுவரையில் 109 பேர் உயிரிழந்துள்ளனர். 19 ஆயிரத்து இரண்டு பேர் குணமடைந்துள்ளனர். 6 ஆயிரத்து 200 பேர் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.

 

ஐக்கிய மக்கள் சக்தியின் முதலாவது மாநாடு நாளை!

ஐக்கிய மக்கள் சக்தியின் முதலாவது சம்மேளனம் நாளை   (30.11.2020) கொழும்பிலுள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்தால் கட்சி உறுப்பினர்களும், தோழமைக்கட்சிகளின் பிரதிநிதிகள் மட்டுமே மாநாட்டில் பங்கேற்கவுள்ளனர்.

இதன்போது ஐக்கிய மக்கள் சக்திக்கான புதிய யாப்பும் வெளியிடப்படவுள்ளது.

‘சிறைச்சாலை கொத்தணி’ – தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,091 ஆக உயர்வு!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் உருவான சிறைச்சாலை கொத்தணிமூலம் இதுவரை ஆயிரத்து 91 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

இன்று இதுவரையில் 183 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர் என்று சிறைச்சாலைகள் நிர்வாக ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார். இவர்கள் அனைவரும் மஹர சிறைச்சாலையில் உள்ளவர்கள்.

வெலிக்கடை சிறைச்சாலையில் இதுவரை 386 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் 157 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.

அதேவேளை, 58 சிறைச்சாலை அதிகாரிகளுக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 06 பேர் குணமடைந்துள்ளனர்.

கொரோனா தொற்றுக்குள்ளான கைதிகளுள் இதுவரை 113 கைதிகள் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

‘ஐயப்ப பக்தர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு’

இலங்கையில் சபரிமலை ஐயப்ப பக்தர்கள் எதிர்நோக்கியிருக்கும் நடைமுறைப் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதாக பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

அகில இலங்கை ஐயப்ப குரு சுவாமிகள் ஒன்றியத்தினருக்கும் செந்தில் தொண்டமானுக்கும் இடையிலான கலந்துரையாடல் கொழும்பில் அமைந்துள்ள இந்துகலாசார அலுவல்கள் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று  (28) நடைபெற்றது.

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ஏ.உமாமகேஸ்வரனின் பங்கேற்புடன் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில் இலங்கையில் உள்ள ஐயப்ப பக்தர்கள் எதிர்நோக்கியுள்ள நடைமுறை பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.

கொவிட் 19 தொற்று காரணமாக இம்முறை சபரிமலையில் ஐயப்ப படிபூஜையில் கலந்துகொள்வதில் தடைகள் காணப்படுவதாக பிரதம குருசுவாமி சுப்பிரமணியம் ரவீந்திரகுமார் சுட்டிக்காட்டினார். அரசாங்கம் இது குறித்து உரிய கவனம் எடுத்து விரத மாலை அணிந்துள்ள பக்தர்களின் நலன் கருதி இந்தியாவுக்குச் செல்வதற்கான பயண ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

அத்துடன் ஐயப்ப விரதமாலை அணிந்து இந்தியாவுக்குச் செல்ல முடியாத பக்தர்களுக்கான மாற்று வழிமுறைகள் குறித்தும் இலங்கை முழுவதும் ஐயப்ப வழிபாடுகளை முன்கொண்டு செல்வது பற்றியும் குரு சுவாமிமார் தமது கருத்துகளையும் வேண்டுகோள்களையும் முன்வைத்தனர்.

இலங்கையில் 18 வருடங்களுக்கு மேலாக சபரிமலை ஐயப்ப படிபூஜைகளில் பங்கேற்ற குருசுவாமிமார்களுக்கு அரசாங்க அங்கீகாரம் பெற்றுக்கொடுப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் இதன்போது முன்வைக்கப்பட்டது.

இது குறித்து பிரதமரின் இணைப்புச்செயலாளர் செந்தில் தொண்டமான் கருத்து வெளியிடுகையில்,

கொவிட் 19 பிரச்சினையால் இலங்கை மாத்திரமல்ல உலக நாடுகள் பல்வேறு சவால்களை எதிர்கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் இலங்கையில் உள்ள ஐயப்ப பக்தர்கள் இந்தியாவுக்கு யாத்திரை செல்வதிலும் பிரச்சினைகள் உண்டு.

அரசாங்க தரப்பினருடன் நான் இது தொடர்பில் பேச்சுவார்த்தை நடாத்தியிருக்கிறேன். வழமைபோல் செல்வதற்கு இந்த வருடம் கொவிட் பிரச்சினை தடையாக உள்ளதால் உள்நாட்டில் மாற்று ஏற்பாடுகள் சுகாதார வழிமுறைகளுக்கு அமைவாக கொழும்பு, அளுத்மாவத்தை அருள்மிகு ஸ்ரீ ஆனந்த ஐயப்பன் தேவஸ்தானத்தில் செய்யப்படும்.

இது தொடர்பில் இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் உயரதிகாரிகள் சுகாதார நடைமுறைகள் தொடர்பாக பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் சுகாதார அமைச்சுடன் பேச்சுவார்த்தை பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், இனி வரும் காலங்களில் கொவிட் 19 பிரச்சினை கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பிறகு இந்தியாவுக்கு யாத்திரைக்காக குறைந்த செலவில் விமான சீட்டுகளை வழங்குதல், பயண ஏற்பாடுகள் குறித்து வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும்.

அத்துடன் பக்தர்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருக்கும் சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு வழிபாடுகளை மேற்கொள்ள முடியாத சூழ்நிலை காணப்பட்டால், தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகளை சுகாதாரப் பிரிவு, பாதுகாப்புப் பிரிவு ஆகியவற்றுடன் கலந்துரையாடி செய்யவுள்ளோம்.

மேலும் இலங்கை முழுவதும் ஐயப்பன் பக்தர்கள் செறிவாக இருக்கக் கூடிய இடங்களில் ஐயப்ப வழிபாடுகளை முன்னெடுப்பதை நோக்காகக் கொண்டு இந்துகலாசார அலுவல்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட ஆலயங்களுக்கு ஐயப்பன் சுவாமி சிலைகளை வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் ஐயப்ப பஜனைகளை நடாத்துவதற்குத் தேவையான இசைக்கருவிகள் கொள்வனவு உள்ளிட்ட இதர செலவுக்காக அடுத்த வருடம் முதல் ஒருதொகை நிதியை ஒதுக்கீடு செய்வது தொடர்பில் பணிப்பாளருடன் நான் பேச்சுவார்த்தை நடாத்தியிருக்கிறேன்.

இவ்வாறான பஜனை செயற்பாடுகளை அறநெறிப்பாடசாலைகளுடன் இணைந்து நடாத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையில் இருந்து சபரிமலை ஐயப்ப தேவஸ்தான படி பூஜையில் 18 வருடங்களுக்கு மேல் பங்கேற்ற குருசுவாமிமார்களுக்கு அரசாங்க அங்கீகாரத்துடனான சான்றிதழ் வழங்கப்படும். அதற்கு செந்தில் தொண்டமானின் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

அவர்கள் இந்துகலாசார அலுவல்கள் திணைக்களத்துடன் தொடர்பினை ஏற்படுத்தி உரிய கடவுச்சீட்டு பிரதி மற்றும் உரிய ஆவணங்களை சமர்ப்பிப்பது அவசியமாகும்.

ஐயப்ப குருசுவாமிகள் விரதகாலமான இரண்டு மாதங்களில் மாத்திரமல்லாது தொடர்ச்சியாக தமது தேவைப்பாடுகள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் இயங்க வேண்டியது அவசியமாகும். அவ்வாறு இயங்கும் பட்சத்திலேயே நாம் நீண்டகால நோக்கங்களை அடையக் கூடியதாகவும் ஒருசில செயன்முறைகளை மிக இலகுவாகச் செய்யக் கூடியதாகவும் இருக்கும்.

இதன்மூலமே ஐயப்பன் புகழை இன்னும் மேலோங்கச் செய்ய முடியும் எனத் தெரிவித்தார்.

‘கொரோனா’வின் பிடிக்குள் இருந்து 17 ஆயிரம் பேர் மீண்டனர்!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 346 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்து இரண்டாக அதிகரித்துள்ளது.

அத்துடன் 5 ஆயிரத்து 877 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 109 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்து 988 ஆக அதிகரித்துள்ளது.

தம்புள்ள கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளுக்கு பூட்டு!

மாத்தளை மாவட்டத்திலுள்ள, தம்புள்ள கல்வி வலயத்துக்குட்பட்ட அனைத்து பாடசாலைகளும் நாளை முதல் ஒரு வாரத்துக்கு மூடப்படும் என்று தம்புள்ள நகரசபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் கொரோனா நோயாளர்கள் மூன்று பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

எனவே, கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

‘முடியாது – கிடைக்காது – நடக்காது என்பதே உங்கள் அரசியல்’ – திகாவுக்கு ஜீவன் பதிலடி

” சம்பள உயர்வு கிடைக்காது, பல்கலைக்கழகம் வராது, எதுவுமே நடக்காது என குறைகைள மட்டுமே கூறிக்கொண்டு அரசியல் நடத்துபவர்களுக்கு மத்தியில்,  நிச்சயம் நடக்கும் எனக்கூறி அதற்கான தடைகளை உடைத்தெறிந்து வெற்றியை நோக்கி பயணிப்பதே எமது உறுதியான கொள்கையாகும்.” – என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

நீண்டகாலமாக  குன்றும் குழியுமாக பேரவலங்களை தாங்கி காட்சியளித்த கொட்டகலை டெரிக்கிளயார் தோட்டத்துக்கான வீதியை அகலப்படுத்தி புனரமைக்கும் பணி இன்று (29.11.2020) ஆரம்பித்துவைக்கப்பட்டது.

இராஜங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கமைய இவ்வீதியை புனரமைப்பதற்கு 78 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே ஜீவன் தொண்டமான் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” மலையகத்திலுள்ள அரசியல்வாதியொருவர் வானொலியொன்றுக்கு நேர்காணல் வழங்கியிருந்தார்.ஆயிரம் ரூபா கிடைக்குமா என கேட்டனர், கிடைக்காது என்றார். பல்கலைக்கழகம் பற்றியும் வினா எழுப்பட்டது, அதற்கும் வராது என பதிலளித்துள்ளார். மலையக மக்களுக்காக பட்ஜட்டில் நிதி ஒதுக்கீடு இடம்பெறவில்லை எனவும் விமர்சித்துள்ளார்.

வராது, கிடைக்காது, முடியாது என குறைகளைமட்டும் கூறிக்கொண்டிருப்பது தலைமைத்துவ பண்பு கிடையாது. தீர்வுகளை அடைவதற்காக தடையாக உள்ள காரணிகளைஉடைத்தெறியவேண்டும்.அதனை எவ்வாறு செய்ய வேண்டும் என திட்டம் வகுக்குவேண்டும். இதனை எம்மால் நிச்சயம் செய்யமுடியும். அரசியலுக்கு அப்பால் சிறந்த நிர்வாகியாக செயற்படுவதையே நான் விரும்புகின்றேன்.

மலையக மக்களும் இலங்கையர்களே, அபிவிருத்தி திட்டங்களுக்காக வரவு – செலவுத்திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள நிதி அவர்களுக்கும் உரித்துடையாது. மத்திய அரசாங்கத்தின் பட்ஜட் என்பது முழு நாட்டுக்குமானது, அதில் ஒவ்வொரு பிரிவுகளுக்கான ஒதுக்கீடுகள் இருக்காது என்பதை புரிந்துகொள்ளவேண்டும். பல்கலைக்கழகம் அமைப்பதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

நான் பதவிக்கு வந்து குறுகிய காலப்பகுதிதான் ஆகின்றது. அதற்கு பல அபிவிருத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு தற்போது முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. வீட்டுத்திட்டமும் விரைவில் ஆரம்பிக்கப்படும். அதற்கு முன்னர் அரைகுறையாக உள்ள வீடுகளை முழுமைப்படுத்தி பயனாளிகளிடம் கையளித்துவிடவேண்டும்.

அதேவேளை, ஆயிரம், ஆயிரம் என்று ஆயிரம் ரூபாவை பற்றி மட்டுமே கதைக்கின்றனர், தற்போதைய சூழ்நிலையில் ஆயிரம் ரூபா போதாது, தற்போதைய சிஸ்டம் மாற்றப்படவேண்டும் என்பதே எனது கருத்தாக இருக்கின்றது. பேச்சுவார்த்தைகளின்போதும் இதனை வலியுறுத்தியுள்ளோம். தொழிற்துறையை நவீனமயப்படுத்தி எவ்வித தொழில் நிபந்தனைகளும் இன்றி மாத சம்பளம் பெறுவதற்கு முயற்சிக்கவேண்டும்.

சீனா மற்றும் ஆபிரிக்க நாடுகளில் ஆரம்பத்தில் வெள்ளையர்கள்தான் தேயிலை தோட்டங்களை நிர்வகித்தனர். தற்போது நிலைமைமாறியுள்ளது. மக்களிடம் அவை ஒப்படைக்கப்பட்டுள்ளன. எனவே, எமது மக்களையும் சிறுதோட்ட உரிமையாளர்களாக்கவேண்டும். அதற்காகவே நாம் முயற்சிக்கின்றோம். எனவே, தொழிற்சங்க ரீதியிலாவது நாம் ஒன்றுபடவேண்டும்.” – என்றார்.

இந்நிகழ்வில் மேற்படி நகர சபை, பிரதேச சபை தலைவர்கள், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர்கள், வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

க.கிசாந்தன்

கசிப்பு காய்ச்சிய இருவர் தொலஸ்பாகையில் கைது!

கம்பளை, குறுந்துவத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொலஸ்பாகை – கந்தகடை பகுதியில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட இருவர் நேற்று மதியம் (28.11.2020) கைது கைதுசெய்யப்பட்டனர்.

சிறிய வனப்பகுதியிலேயே மிகவும் சூட்சுமமான முறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர் எனவும், கசிப்பு காய்ச்சிவதற்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளன எனவும் குறுந்துவத்த பொலிஸார் தெரிவித்தனர்.

குறுந்துவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விஜேரத்தினவின் வழிகாட்டலுடனேயே குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

சுற்றிவளைப்பில் பங்கேற்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் விபரம் வருமாறு,

பொலிஸ் அதிகாரி மதநாயக்க,
உப பொலிஸ் அதிகாரி புத்திவர்தன,
பொலிஸ் சார்ஜன்ட் ஹக்கலங்க – 59856
பொலிஸ் சார்ஜன்ட் ஹேரத் – 55041
பொலிஸ் சார்ஜன்ட் கொடிதுவக்கு – 70509
பொலிஸ் சார்ஜன்ட் விஜேசிறி -74768
பொலிஸ் சார்ஜன்ட் சேனாரத்தின 80903

ரசலின் அதிரடியால் கொழும்பு கிங்ஸ் வெற்றி!

எல்.பி.எல். கிரிக்கெட் தொடர்பில் நேற்றிரவு நடைபெற்ற 4ஆவது ஆட்டத்தில் கொழும்பு கிங்ஸ் அணி 34 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

சீரற்ற காலநிலையால் 5 ஓவர்களுக்கு போட்டி மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற Galle Gladiators அணி முதலில் களத்தடுப்பை தெரிவுசெய்தது.

இதன்படி துடுப்பெடுத்தாட களமிறங்கிய Colombo Kings அணி நிர்ணயிக்கப்பட்ட 5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 96 ஓட்டங்களைப்பெற்றது. 19 பந்துகளில் 9 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் அடங்களாக 65 ஓட்டங்களை ரஸல் பெற்றார்.

66 என்ற வெற்றியிலக்கை நோக்கி களமிறங்கிய காலி அணியால் 5 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகளை இழந்து 62 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

நேற்றைய போட்டியில் மூன்று சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன.

 

கொழும்பில் 10 பொலிஸ் பிரிவுகள் தொடர்ந்தும் முடக்கம்! 3 பிரிவுகள் நாளை விடுவிப்பு!!

கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் முடக்கப்பட்டிருந்த பகுதியில் நாளை (30) காலை 5 மணி முதல் விடுவிக்கப்படவுள்ளன.

அத்துடன் கொழும்பு மாவட்டத்தில் 12 பொலிஸ் பிரிவுகளும், கம்பஹா மாவட்டத்தில் 3 பொலிஸ் பிரிவுகளிலும் தொடர்ந்தும் முடக்கப்பட்டிருக்கும்.

கொழும்பு மாவட்டத்தில் நாளை விடுவிக்கப்படும் பகுதிகள்

1.மட்டக்குளிய பொலிஸ் பிரிவு

2.கரையோர பொலிஸ் பிரிவு (வெரலபட)

3.புறக்கோட்டை பொலிஸ் பிரிவு

கொழும்பு மாவட்டத்தில் தனிமைப்படுத்தல் தொடரும் பகுதிகள்

1.மோதரை பொலிஸ் பிரிவு

2.புளூமண்டல் பொலிஸ் பிரிவு

3.கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவு

4.கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவு

5.ஆட்டுப்பட்டித்தெரு பொலிஸ் பிரிவு

6.வெல்லவீதிய பொலிஸ் பிரிவு

7.வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவு

8.மாளிகாவத்தை பொலிஸ் பிரிவு

9.தெமட்டகொடை பொலிஸ் பிரிவு

10.மருதானை பொலிஸ் பிரிவு

11.கொம்பனிவீதி பொலிஸ் பிரிவின் செகந்த கிராம உத்தியோகத்தர் பிரிவு மற்றும் பொரள்ளை பொலிஸ் பிரிவின் வனாதமுல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவு ஆகியவற்றுக்கான தனிமைப்படுத்தலும் தொடர்ந்து அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்குளி பொலிஸ் பிரிவிலுள்ள ரந்திய உயன வீடமைப்பு திட்டம் மற்றும் பெர்கியுசன் வீதியின் தென் பகுதி ஆகியன நாளை அதிகாலை 5 மணி முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளன.

வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவின் லக்சந்த செவன வீடமைப்பு திட்டம், சாலமுல் கிராம உத்தியோகத்தர் பிரிவு, விஜயபுர கிராம உத்தியோகத்தர் பிரிவு ஆகியனவும் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் விடுவிக்கப்படும் பகுதிகள்

1.நீர்க்கொழும்பு

2.ராகம

தொடர்ந்தும் முடக்கப்பட்டிருக்கும் பகுதிகள்

1.வத்தளை

2.பேலியகொடை

3.களனி

இதேவேளை, நாட்டின் ஏனைய பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பகுதிகள் மறுஅறிவித்தல் பிறப்பிக்கப்படும் வரை தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில் இருக்கும்.

சினிமா

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

செய்தி

மலையக தியாகி சிவனு லெச்சுமணன் நினைவேந்தல்….!

0
மலையகத் தமிழர்களுக்கான உரிமைப் போராட்டத்தின் உயிர்க்கொடையாளி மலையக தியாகி சிவனு லெச்சுமணனின், 49 ஆம் ஆண்டு நினைவுதினத்தில் செவ்வஞ்சலி நிகழ்வு எதிர்வரும் 11 ஆம் திகதி நடைபெறவுள்ளது. ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் ஏற்பாட்டில் அன்றைய...

யாழ்.வைத்தியசாலையில் தீ விபத்து: விசாரணை தீவிரம்!

0
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதான மருந்து களஞ்சியசாலையில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில், பல கோடி ரூபா பெறுமதியான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் தீக்கிரையாகியுள்ளன. இன்று அதிகாலை வேளையில் மருந்து...

தவெகவுக்கு விடுதலை சிறுத்தைகள் ஆதரவு: உறுதியானது 118!

0
தமிழகத்தில் ஆட்சியமைப்பதற்குரிய 118 என்ற அறுதிப்பெரும்பான்மையை தவெக இன்று மாலை உறுதிப்படுத்தியுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சி நிபந்தனையற்ற ஆதரவை உறுதிப்படுத்திய பின்னரே ஆட்சியமைப்பதற்குரிய சூழ்நிலை உறுதியாகியுள்ளது. சென்னை மீனம்பாக்கம் நட்சத்திர விடுதிக்கு சென்ற த.வெ.க. நிர்வாகி...