Home Blog Page 3755

கொரோனா – மேலும் இருவர் உயிரிழப்பு! இன்று 487 பேருக்கு வைரஸ் தொற்று!!

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர்.

கொழும்பு – 02 ஐ சேர்ந்த 76 வயதுடைய ஆணொருவரும்,  கொழும்பு – 08 ஐ சேர்ந்த 96 வயதுடைய பெண்ணொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 109  ஆக அதிகரித்துள்ளது.

அதேவேளை, கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்து 988 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 16 ஆயிரத்து 656 பேர் குணமடைந்துள்ளனர். 6 ஆயிரத்து 225 பேர் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.

இன்று இதுவரையில் 487 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தம்புள்ள வைகிங் அணி வெற்றிநடை – கண்டி அணிக்கு 2ஆவது தோல்வி!

லங்கா பிரீமியர் லீக் தொடரில் இன்று நடைபெற்ற 3ஆவது ஆட்டத்தில் தம்புள்ள வைகிங் அணி 4 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

கண்டி டஸ்கர்ஸ் , தம்புள்ள வைகிங் ஆகிய ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற கண்டி அணி, தம்புள்ள அணியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.

இதன்படி களமிறங்கிய தம்புள்ளை அணி 20 ஒவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 195 ஓட்டங்களைக் குவித்தது. அவ்வணி சார்பாக தலைவர் தசுன் சானக்க 37 பந்துகளில் 73 ஓட்டங்களையும்,  பட்டேல் 38 பந்துகளில் 58 ஓட்டங்களையும் குவித்தனர். திக்வெல்ல 25 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பின்னர் 195 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய கண்டி அணி 9.4 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 84 ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில் மழை குறுக்கிட்டது. இதனால் போட்டி நிறுத்தப்பட்டது.

டக்வர்த் லூயிஸ் முறைப்படி வெற்றி கணிக்கப்பட்டது. இதன்படி தம்புள்ளை அணி 4 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. கண்டி அணி சார்பாக மெண்டிஸ் 34 ஓட்டங்களைப் பெற்றார்.

‘கொரோனா’வால் கொழும்பு மாவட்டத்தில் இதுவரை 79 பேர் உயிரிழப்பு’

கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2ஆவது அலையால் இலங்கையில் நேற்றுவரை 94 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப்பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று மாத்திரம் எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். அனைவரும் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் கடந்த மார்ச் மாதம் முதல் ஒக்டோபர் 22 வரையான சுமார் 8 மாத காலப்பகுதியில் கொரோனாவால் 13 பேரே உயிரிழந்திருந்தனர்.31 ஆம் திகதியாகும்போது மரண எண்ணிக்கை 20 ஆக அதிகரித்தது.

எனினும் கடந்துள்ள 28 நாட்களில் மாத்திரம் 87 பேர் உயிரிழந்துள்ளனர். நாளாந்தம் கொரோனா மரணங்கள் நிகழ்ந்த வண்ணமுள்ளன. கொழும்பு மாவட்டத்திலேயே அதிக மரணங்கள் பதிவாகியுள்ளன.  கொரோனாவால் கடந்த மார்ச் முதல் நேற்றுவரை 107 பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மாவட்ட ரீதியாக வருமாறு,

கொழும்பு – 79
கம்பஹா – 13
களுத்துறை – 06
குருணாகலை – 04
புத்தளம் – 03
நுவரெலியா – 01
இனந்தெரியாதவர் – 01

‘மாஸ்டர்’ படம் எப்போது, எப்படி வெளிவரும்?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி, ஆண்டிரியா, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இப்படத்தின் டீசர் இதுவரை 4 கோடி பேர்களால் பார்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்திற்கு ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளதை அடுத்து இப்படத்தின் டிரைலர் மற்றும் வெளியீட்டுக்காக ரசிகர்கள் எதிர்ப்பார்த்துள்ளனர்.

இந்நிலையில் மாஸ்டர் படத்தை தியேட்டரில் கோலாகலமாகக் கொண்டாடிப் பார்ப்பதையே பெரும்பாலான ரசிகர்கள் விரும்புகின்றனர்.

இந்நிலையில் மாஸ்டர் படக்குழுவினர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், நீங்கள் அனைவரும் இந்த பெருந்தொற்றுக் காலத்தில் பத்திரமாக இருப்பீர்கள் என்று நம்புகிறோம். மாஸ்டர் திரைப்படம் தியேட்டரில் வெளியாவது குறித்து நீங்கள் பெரிய ஆர்வத்துடன் இருப்பதைப் புரிந்துகொள்கிறோம்.

அதற்கு ஒரு பெரிய நாளுக்காக நாங்களும் உங்களுடம் காத்திருக்கிறோம். கடந்த சில நாட்களாக வதந்திகள் நிறையப் பரவிவருகிறது. அதற்கு விளக்கமளிக்க வேண்டிய நிலையில் உள்ளோம்.

எங்களுக்கு ஒடிடியில் இருந்து வெளியிடகூறி வேண்டுகொள் வந்தது. ஆனால் தற்போது தமிழ் திரயுலகம் இக்கட்டான நிலையில் உள்ளதால் அதனைக் கருத்தில் கொண்டு தியேட்டர் ஓனர்களுடம் கலந்து பேசி அவர்களையும் எங்களுக்கு ஆதரவாக நின்று திரைத்துறைக்கு உதவும் படி கேட்டுகொண்டுள்ளோம்.

இதுகுறித்த அறிவிப்பு விரைவில் நல்ல செய்தியாக வெளியாகும். பத்திரமாக இருக்கவும் என்று தெரிவித்து தயாரிப்பாளர் தரப்பு தியேட்டரில்தான் மாஸ்டர் படம் வெளியாகும் எனத் தெரிவித்துள்ளனர்.

‘கொரோனா’ தொற்றாளர்களின் எண்ணிக்கை 22,775 ஆக உயர்வு!

நாட்டில் மேலும் 274 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பேலியகொடை கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.

அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்து 775 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் இதுவரையில் 107 பேர் உயிரிழந்துள்ளனர். 16 ஆயிரத்து 656 பேர் குணமடைந்துள்ளனர்.

பொகவந்தலாவயில் தனிமைப்படுத்தலில் இருந்த மூதாட்டி திடீர் மரணம்!

பொகவந்தலாவ கெம்பியன் கீழ்பிரிவு தோட்டத்தில் சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டிருந்த வயோதிப பெண்ணொருவர் இன்று (28.11.2020) காலை திடீரென உயிரிழந்துள்ளார்.

4 பிள்ளைகளின் தாயான 69 வயதுடைய கந்தையா தெய்வானை என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறித்த பெண்ணின் மகளும், பேரப்பிள்ளையும் கொழும்பு, பத்தரமுல்ல பகுதியில் இருந்து கடந்த 16 ஆம் திகதியே கெம்பியன் கீழ்பிரிவு தோட்டத்திலுள்ள வீட்டுக்கு வந்துள்ளனர்.

இதனையடுத்து கொழும்பில் இருந்து வந்த இருவரும், அவர்களின் குடும்ப அங்கத்தவர்கள் நால்வருமாக மொத்தம் 6 பேரை சுய தனிமைக்கு உட்படுத்த சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

இந்நிலையிலேயே அவர் இன்று காலை திடீரென உயிரிழந்துள்ளார். சடலம் பிரேத பரிசோதனைக்கான கிளங்கள் வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட நால்வரும், சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் வீடுகள் – ஜீவன் உறுதி!

நோர்வூட்டில் தீ விபத்தால் நிர்க்கதியாகியுள்ள மக்களுக்கு வெகுவிரைவில் பாதுகாப்பான இடத்தில் தனி வீடுகள் அமைத்துக்கொடுக்கப்படும். அதேபோல பெருந்தோட்டப்பகுதிகளில் ஏற்கனவே அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீட்டுத்திட்டங்களும் துரிதப்படுத்தப்படும் என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

நோர்வூட், நிவ்வெளிகம தோட்டத்தின் தொழிற்சாலை பிரிவிலுள்ள மூன்றாம் இலக்க லயன் குடியிருப்பில் நேற்றிரவு (27) ஏற்பட்ட திடீர் தீவிபத்தால் 13 குடும்பங்களைச் சேர்ந்த, 57 பேர் பாதிக்கப்பட்டனர்.

இதனையடுத்து அவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்கவைப்பதற்கான நடவடிக்கைகளை, இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஆலோசனையின் பிரகாரம் நோர்வூட் பிரதேச சபையின் தவிசாளரும், அரச அதிகாரிகளும் முன்னெடுத்திருந்தனர்.

இதன்படி அயரபி பாடசாலையிலும், அத்தோட்டத்திலுள்ள பழைய தொழிற்சாலை கட்டடத் தொகுதியிலும் நிர்க்கதியான மக்கள் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டனர். அவர்களுக்கான அத்தியாவசிய தேவைகளும் நிறைவேற்றப்பட்டன.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து, அவர்களுடன் கலந்துரையாடுவதற்காக இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் நிவ்வெளிகம பிரிவுக்கு இன்று (28.11.2020) களப்பயணம் மேற்கொண்டார்.

மக்களை சந்தித்து ஆறுதல் கூறியதுடன், அவர்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என உறுதியளித்தார்.

குறிப்பாக தனி வீடுகள் அமைத்துக்கொடுக்கப்படும் என கூறியதுடன், அதற்காக பாதுகாப்பான இடம் தெரிவுசெய்யப்படும். தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகளுக்கு இது தொடர்பில் அறிவிக்கப்பட்டு, விரைவில் இடம் ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் கூறினார்.

அத்துடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை தனது அமைச்சின் ஊடாகவும், நோர்வூட் பிரதேச சபை ஊடாகவும் வழங்குமாறும் ஜீவன் பணிப்புரை விடுத்தார்.

அதேவேளை, மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் ஏற்கனவே அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீடமைப்புத் திட்டம் துரிதப்படுத்தப்படும் என்ற உறுதிமொழியையும் இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் இதன்போது வழங்கினார்.

க.கிசாந்தன்

22,501 பேருக்கு கொரோனா – 16,656 பேர் மீண்டனர் – 107 பேர் உயிரிழப்பு!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 430 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 656 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் 5 ஆயிரத்து 738பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 107பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்து 501 ஆக அதிகரித்துள்ளது.

மாட்டுக்கு புல் அறுக்க சென்றவர் மஸ்கெலியாவில் சடலமாக மீட்பு!

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாமிமலை ஸ்டஸ்பீ தோட்டத்தில் அவரவத்தை பிரிவில் இன்று (28) காலை 6 மணியளவில் புல் அறுக்கச்சென்ற இளம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

25 வயதுடைய முனியாண்டி சதிஸ் என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நீண்டநேரம் ஆகியும் இவர் வீடு திரும்பாததால் உறவினர்களும், பிரதேச வாசிகளும் தேடுதல் நடத்தியுள்ளனர். இதன்போதே அவர் ஆறொன்றில் சடலமாக மிதப்பதை கண்டுள்ளனர். இது தொடர்பில் மஸ்கெலியா பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் ஸ்தல விசாரணையை முன்னெடுத்தனர். சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

மஸ்கெலியா நிருபர் – பெருமாள்

ஆயிரம் ரூபா கிடைக்குமா? இம்முறையும் ஏமாற்றமே என்கிறார் திகா!

” வரவு – செலவுத் திட்டத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபா சம்பள உயர்வு யோசனை முன்வைக்கப்பட்டிருந்தாலும் அது அடிப்படை சம்பளமா என்பது பற்றி விபரிக்கப்படவில்லை. இது தொடர்பில் ஆளுங்கட்சி உறுப்பினர்களும் எவ்வித கருத்தையும் வெளியிடவில்லை. எனவே, இதுவொரு ஏமாற்று வித்தை. அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொடுக்கமாட்டார்கள்.”

இவ்வாறு தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் வழங்கியுள்ள நேர்காணல் வருமாறு,

சினிமா

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

செய்தி

மலையக தியாகி சிவனு லெச்சுமணன் நினைவேந்தல்….!

0
மலையகத் தமிழர்களுக்கான உரிமைப் போராட்டத்தின் உயிர்க்கொடையாளி மலையக தியாகி சிவனு லெச்சுமணனின், 49 ஆம் ஆண்டு நினைவுதினத்தில் செவ்வஞ்சலி நிகழ்வு எதிர்வரும் 11 ஆம் திகதி நடைபெறவுள்ளது. ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் ஏற்பாட்டில் அன்றைய...

யாழ்.வைத்தியசாலையில் தீ விபத்து: விசாரணை தீவிரம்!

0
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதான மருந்து களஞ்சியசாலையில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில், பல கோடி ரூபா பெறுமதியான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் தீக்கிரையாகியுள்ளன. இன்று அதிகாலை வேளையில் மருந்து...

தவெகவுக்கு விடுதலை சிறுத்தைகள் ஆதரவு: உறுதியானது 118!

0
தமிழகத்தில் ஆட்சியமைப்பதற்குரிய 118 என்ற அறுதிப்பெரும்பான்மையை தவெக இன்று மாலை உறுதிப்படுத்தியுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சி நிபந்தனையற்ற ஆதரவை உறுதிப்படுத்திய பின்னரே ஆட்சியமைப்பதற்குரிய சூழ்நிலை உறுதியாகியுள்ளது. சென்னை மீனம்பாக்கம் நட்சத்திர விடுதிக்கு சென்ற த.வெ.க. நிர்வாகி...