Home Blog Page 3756

கொழும்பிலிருந்து புப்புரஸ்ஸ வந்த பெண்ணுக்கு கொரோனா!

கொழும்பிலிருந்து கம்பளை, புப்புரஸ்ஸ மணிக்கட்டி தோட்டத்தின் எச்.எம். பிரிவுக்குவந்த பெண்ணொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கொழும்பு, கிருளப்பனை பகுதியில் தொழில் செய்த குறித்த பெண் கடந்த 11 ஆம் திகதி தனது வீட்டுக்கு வந்துள்ளார். எனினும், கிருளப்பனை பகுதியில் அவருடன் தங்கியிருந்த சிலருக்கு அண்மையில் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

இது தொடர்பில் சுகாதார அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்ட பின்னர் மணிக்கட்டி தோட்டத்துக்கு வந்த குறித்த பெண் தனிமைப்படுத்தப்பட்டார். 26 ஆம் திகதி அவரிடம் பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டன. பிரசோதனை முடிவுகள் 27 ஆம் திகதி வெளியானது. அதில் அவருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் பிசிஆர் பரிசோதனையும் நடத்தப்படவுள்ளது.

606 சிறைக்கைதிகளை விடுவிக்க தீர்மானம்!

ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் பேரில் சிறைக் கைதிகள் 606   பேரை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக சிறைச்சாலைகள் தலைமையகம் தெரிவித்துள்ளது

சிறு குற்றங்களுக்காக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் சிறைக் கைதிகள் 606 பேரே இவ்வாறு விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் தலைமையக ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் தொற்று சூழ்நிலையில் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறு குற்றங்கள் புரிந்தவர்களை விடுதலை செய்வது தொடர்பில் சிறைச்சாலைகள் மற்றும் நீதித்துறை முக்கியஸ்தர்களுக்கிடையில் அது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.

மிகக் குறைந்தளவு போதைப்பொருள்வைத்திருந்து குற்றவாளிகளாக்கப்பட்டு சிறைத்தண்டனை அனுபவித்து வருபவர்களை விடுவிப்பது தொடர்பில் அங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது.அதன்படி ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் பேரில் 606 பேர் விடுதலை செய்யப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

‘தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய 800 பேர் கைது’

தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய 800 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண  தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

”   முகக்கவசம் அணியாத, சமூக இடைவெளியை பேணாத மற்றும் முடக்கப்பட்ட பகுதிகளில் பொதுவெளியில் நடமாடியமை ஆகிய குற்றச்சாட்டுகளுக்காக கடந்த ஒக்டோபர் 30 முதல் இன்றுவரை 800 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று மாத்திரம் 52 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. சிலருக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. ஏனையோருக்கு எதிராக எதிர்காலத்தில் நிச்சயம் வழக்கு தாக்கல் செய்யப்படும். ” – என்றார்.

ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி வெற்றிநடை!

லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர்பில் நேற்று நடைபெற்ற 2ஆவது ஆட்டத்தில் காலி கிளேடியட்டர்ஸ் அணியை, ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி தோற்கடித்தது.

ஹம்பாந்தோட்டையிலுள்ள மஹிந்த ராஜபக்ச சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற காலி அணி முதலில் களத்தடுப்பை தெரிவுசெய்தார்.

இதன்படி, துடுப்பெடுத்தாட களமிறங்கிய காலி அணியின் விக்கெட்டுகள் சரிய ஆரம்பித்தனர். இறுதி நேரத்தில் அப்ரிடி அதிரடி காட்டினார். அவர் 23 பந்துகளில் 58 ஓட்டங்களைப் பெற்றார். ஒரு ஓவரில் நான்கு சிக்ஸர்களை விளாசி வாண வெடிக்கையும் காட்டினார்.

இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் காலி அணி 8 விக்கட்டுக்களை
இழந்து 175 ஓட்டங்களை குவித்தது.

பின்னர் 176 என்ற வெற்றியிலக்கை நோக்கு துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணம் அணி 19.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. பெர்ணான்டோ 92 ஓட்டங்களைப் பெற்றார். ஆட்ட நாயகனாகவும் தெரிவுசெய்யப்பட்டார்.

வரலாற்று சாதனை படைத்த ஹொப்டன் விக்னேஸ்வரா தமிழ் வித்தியாலயம்

பசறை கல்வி வலயத்திற்குட்பட்ட ஹொப்டன் விக்னேஷ்வரா தமிழ் வித்தியாலயத்தில் 2020 ஆம் ஆண்டு தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேற்பட்ட பெறுபேறோடு பதினொரு மாணவர்கள் சித்தியடைந்து பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்கள்.
அத்தோடு பரீட்சைக்கு தோற்றிய ஏனைய அனைத்து மாணவர்களும் எதிர்பார்க்கப்படும் உரிய அடைவு மட்டத்திற்குரிய  எழுபதுக்கு மேற்பட்ட புள்ளியைப்பெற்று  புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இம்முறை வெளியாகியுள்ள பெறுபேறுகளின் அடிப்படையில் ஊவா மாகாண பாடசாலைகளில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் மாணவி புண்ணியமூர்த்தி அகல்யா 194 புள்ளிகளைப் பெற்று  வரலாற்று சாதனையோடு பெருமை சேர்த்துள்ளார்.
 இம்மாணவர்களையும் இவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக நடராஜா புவனேஸ்வரனையும்  அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பாடசாலை சமூகத்தினர் பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவிக்கின்றனர்.
படத்தில் சித்தியடைந்த மாணவர்களும் அதிபர், ஆசிரியர்களை இங்கு காணலாம்.
வி.யுகேந்தினி (162), பி.அகல்யா (194), அதிபர். எஸ்.தியாகசுந்தரம், வகுப்பாசிரியர் நடராஜா புவனேஸ்வரன், டீ.தர்ஷாயினி (164), பி.ஜனப்ரியன் (159), ஜி. பதுஷன் (175), பி.கிஷான் (177), எஸ். சருஷிரக்‌ஷன்யா (169), பி.யஷ்வின் – (168), எம்.சந்தீபன் -(179), எம்.ஹரிபிரசஷாத் -( 186)
மலர்வேந்தன்

‘மலையக தொழிற்சங்க துறவியின் 102ஆவது ஜனன தினம்’

தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஸ்தாபகத் தலைவர் வி.கே வெள்ளையனின் 102ஆவது ஜனன தினம் இன்றாகும்.
வி.கே. வெள்ளையன் (வெள்ளையன் காளிமுத்து வெள்ளையன், நவம்பர் 28, 1918 – டிசம்பர் 2, 1971) இலங்கையின் மலையகத் தொழிற்சங்கவாதியும், அரசியல்வாதியும் ஆவார்.
பெருந்தோட்டக் கூலிகளாக இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட இந்தியர்களைத் தொழிலாளர்கள் என்ற வரையறைக்குள் கொண்டு வந்தவர் எனப் போற்றப்படுகிறார்.
உலக தொழிற்சங்க அமையத்தின் பிரதான செயற்பாட்டாளராக பன்னாடுகளால் மதிக்கப்பட்டவர். இவர் தனக்கென ஒரு குடும்பம், வீடு, மனைவி, மக்கள் எதனையும் வைத்துக் கொள்ளாது தொழிலாளர்களுக்காகவே தன்னை அர்ப்பணித்து துறவி வாழ்க்கை வாழ்ந்ததால், மலையக தொழிற் சங்க வரலாற்றில் “தொழிற்சங்கத் துறவி” என இவர் போற்றப்படுகின்றார்.
#தொழிற்சங்க #வரலாறு
1942 ஆம் ஆண்டு இலங்கை-இந்தியர் காங்கிரஸ் தலைவர்களான கே. இராஜலிங்கம், எஸ். சோமசுந்தரம் ஆகியோரின் தொடர்பு கிடைத்தது. இவர்கள் பொகவந்தலாவை பகுதிகளுக்கு வருகை தரும் போது முத்துலெச்சுமி தோட்டத்தில் அமைந்துள்ள வெள்ளையனின் வீட்டிலேயே தங்கிச் செல்வர்.
இவர்களது ஆலோசனையின் பேரில் தொழிற்சங்கத்துறையைத் தெரிவு செய்தார். இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பொதுச் செயலாளராக மிகக்குறுகிய காலத்தில் தெரிவு செய்யப்பட்டார்.
தனக்கென ஒரு தனி வழியில் செயற்படும் நோக்கில் காங்கிரசிலிருந்து வெளியேறி 1965ஆம் மே நாள் அன்று தொழிலாளர் தேசிய சங்கத்தை நிறுவினார்.
சிந்தாமணி பத்திரிகை வெளியீடான “தந்தி” இதழில் மலையகப் பிரச்சினைகள் யாவை? எனும் தொடர் பத்தி ஒன்றினை ஓராண்டுக்கும் மேற்பட்ட காலமாக எழுதி வந்தார். இதன் சில பகுதிகள் ”மலையகப் பிரச்சினைகள் யாவை?” எனும் தலைப்பில் நூலுருவாக வெளிவந்தது. ஆங்கிலப் பத்திரிகைகளிலும் மலையகத்தவர்களின் பிரச்சினைகளை வெளிக் கொணர்ந்தார். முதன் முதலாக தோட்டத் தொழிலாளர்களுக்கு மாதச் சம்பளம் தேவை என்ற கோரிக்கையை முன்னெடுத்தார்.
ஒரு வருடத்தில் ஒரு தொழிலாளி வேலை செய்த 14 நாள் சம்பளத்தை சேவைக் காலப் பணமாக (இது “14 நாள் காசு” எனப்படுகிறது) பெற்றுக் கொடுகக் வேண்டும் என தொழில் நியாய சபையில் வலியுறுத்தி வெற்றியும் கண்டார்.

அனுசா அதிரடி! உதயமானது ‘சந்திரசேகரன் மக்கள் முன்னணி’!!

மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபகத் தலைவர் அமரர். சந்திரசேகரனின் புதல்வி சட்டத்தரணி அனுசா சந்திரசேகரன் தலைமையில் ‘சந்திரசேகரன் மக்கள் முன்னணி’ என்ற பெயரில் புதியதொரு அரசியல் கட்சி உதயமாகியுள்ளது.

அத்துடன், ‘அண்ணா சந்திரசேகரன் தொழிலாளர் முன்னணி’ எனும் தொழிற்சங்க பிரிவும் அமைக்கப்பட்டுள்ளது. இவ்விரு அமைப்புகளினதும் பொதுச்செயலாளராக அனுசா சந்திரசேகரன் செயற்படுவார். ஏனைய உறுப்பினர்கள் விபரம் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.

புதிய அரசியல் கட்சி ஆரம்பித்தமை தொடர்பில் கருத்து வெளியிட்ட அனுசா சந்திரசேகரன் கூறியவை வருமாறு,

” கடந்த பொது தேர்தலில் எனக்கு நேரடியாக வாக்களித்த பதினேழாயிரத்துக்கும் அதிகமானோர் வாக்களிக்க முயற்சித்த ஐயாயிரத்துக்கும் அதிகமானோர் கொடுத்த ஆதரவினை தேர்தலோடு நான் மட்டுப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை.இதற்கும் சமமாக இத் தொகுதியில் வாக்காளர்கள் அல்லாத நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் வழங்கிய ஆதரவின் வெளிப்பாடே இது.

இதனை எனக்கு வழங்கப்பட்ட அரசியல் அங்கீகாரமாக எடுத்துக்கொண்டு என் தந்தை வழியில் எனது மக்கள் சேவையை ஆரம்பித்துள்ளேன்.

நான் எதிர்ப்பார்த்ததை விடவும் வஞ்சகம் நிறைந்த களமாக இது இருந்தாலும் கூட அதனை வென்று சாதிக்கும் மனோ தைரியத்தை என் தந்தை எனக்கு தினமும் வழங்குகிறார். கற்றவர்கள் அரசியலுக்கு வருவதில்லை அல்லது தகுதியானவர்களுக்கு மக்கள் அங்கீகாரம் வழங்குவதில்லை என்ற பிழையான குற்றச்சாட்டுக்களுக்கு அப்பால் இளைஞர்கள் மத்தியில் இருக்கும் அரசியல் தாகத்தை நான் தெளிவாகப்புரிந்துக் கொண்டுள்ளேன்.

அர்த்தமுள்ள கருத்துக்கள் அவர்கள் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் கூறப்பட்டால் நிச்சயமாக இளைஞர்களை ஓரணி திரட்ட முடியும் இதனை வரலாறு நிருபித்துள்ளது.
தேர்தலில் போட்டியிட்டு வென்றோம் தோற்றோம் இனி அடுத்த தேர்தல் என்றில்லாமல் தேசிய அரசியலில் எமது சமூகத்தினை இணைப்பதற்கு ஏற்பட்டுள்ள இடைவெளியை நாம் நிரப்ப வேண்டும்.

பெருந்தோட்ட துறைசார்ந்த இதுவரை அரசாங்கத்தின் பார்வையே படாத எம் தொழிலாளர்களுக்காகமட்டுமல்லாது தொழிலாளர்கள் அல்லாத எமது மலையக உறவுகளையும் இணைத்துக் கொண்டு பயணளிப்பதற்காகவே  இவ் இரு அமைப்புகளையும் அமைத்துள்ளேன்.

எல்லா பாகுபாடுகளுக்கும் அப்பால் மலையகம் என்ற அடித்தளத்தில் இருந்து ஏனைய அனைத்து முற்போக்குசக்திகளுடனும் இணைந்து என் தந்தை எவ்வாறு அரசியல் பிரளயத்தினை ஏற்படுத்தினாரே அதே வழியில்எனது செயற்பாடுகளும் அமையும்.

ஆகவே கபடத்தன தலைமையில் வெறுப்புற்றுள்ள ம.ம.மு யின் அங்கத்தவர்கள் மட்டுமின்றி என் தந்தையின் ஆதரவாளர்கள் என்பதால் ஒதுக்கப்பட்டவர்கள். அல்லது
ஒதுங்கி இருப்பவர்கள் அனைவரும் என்னோடு இணைந்து செயற்படுமாறு அழைப்பு விடுக்கிறேன். அதே போன்று எம் சமூகத்தின் மாற்றத்துக்காக உணர்வோடு செயற்படும் அனைத்து சக்திகளும் எனக்கு ஆதரவு தருமாறு அழைக்கின்றேன்.

துணிவுடனும் தெளிவுடனும் செயற்பட்டால் மாற்ற முடியாது ஒன்றுமே இல்லை என உறுதி செய்வோம்.” – என்றார்.

 

கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் நால்வருக்கு கொரோனா!

கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் மேலும் நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்று இன்று காலை (28.11.2020) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கொழும்பில் இருந்து வந்தவர்களென்பது குறிப்பிடத்தக்கது. இவர்களை சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு கொண்டுசெல்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

இதன்படி பத்தனை கிரேடி தோட்டத்தில் 18 வயதுடைய யுவதிகள் இருவருக்கு வைரஸ் தொற்றியுள்ளது. கொழும்பு, தெமட்டகொடை பகுதியில் இருந்து கடந்த 16 ஆம் திகதியே இவர்கள் ஊருக்கு வந்துள்ளனர். கொழும்பில் இருந்து வந்தவர்கள் என்பதால் தனிமைப்படுத்தப்பட்டு கடந்த 26 ஆம் திகதி பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டன. முடிவுகள் இன்று காலை வெளியாகின. இதில் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், கொட்டகலை வூட்டன் தோட்டத்தில் 36 வயதுடைய ஆணொருவருக்கும் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர் கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் இருந்து வந்துள்ளார்.

அதேபோல கொழும்பு, கிரிபத்கொடை பகுதியில் இருந்து தலவாக்கலை, கிரேகிரேட்வெஸ்டன் தோட்டத்தின் லூபா பிரிவிலுள்ள வீட்டுக்கு வந்த 18 வயது இளைஞர் ஒருவருக்கும் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை, கொழும்பில் இருந்து எவராவது வந்திருந்தால், தகவல்களை மறைக்காமல் அதனை உரிய தரப்பினருக்கு வழங்குமாறு கொட்டகலை பிரதேச சபையின் தவிசாளர் ராஜமணி பிராசாந்த், கொட்டகலை பிரதேச சுகாதார பரிசோதகர் சௌந்தராகவன் ஆகியோர் தெரிவித்தனர்.

கொழும்பில் இருந்து வந்தர்களிடம் தொடர்ச்சியாக பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும் எனவும் அவர்கள் கூறினர்.

‘கொரோனா’ – மேலும் 8 பேர் உயிரிழப்பு! பலி எண்ணிக்கை 107 ஆக உயர்வு!!

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் மேலும் எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். நான்கு ஆண்களும், நான்கு பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இவர்கள் அனைவரும் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள். இதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 107 ஆக அதிகரித்துள்ளது.

அதேவேளை, கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்து 501 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 16 ஆயிரத்து 226 பேர் குணமடைந்துள்ளனர். 6 ஆயிரத்து 186 பேருக்கு சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. இன்று மாத்திரம் 472 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்களின் விபரம் வருமாறு,

 

நோர்வூட்டில் தீக்கிரையானது லயன் குடியிருப்பு! 50 இற்கும் மேற்பட்டோர் நிர்க்கதி!!

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிவ்வெளிகம தோட்டத்தின் தொழிற்சாலை பிரிவில் இன்றிரவு (27.11.2020) ஏற்பட்ட தீ விபத்தால் 13 அறைகளைக்கொண்ட லயன் குடியிருப்பு முழுமையாக தீக்கிரையாகியுள்ளது. இதனால் 50 இற்கும் மேற்பட்டோர் நிர்க்கதியாகியுள்ளனர்.

அவர்களின் உடமைகளும், முக்கியமான ஆவணங்களும்கூட எரிந்து சாம்பலாகியுள்ளன.

தொழிற்சாலை பிரிவிலுள்ள லயன் குடியிருப்பொன்றில் இன்றிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மக்கள் கூச்சலிட்டுக்கொண்டு வெளியில் வந்தனர். அதற்கு தீ வேகமாக பரவியது. பிரதேச மக்களை தீயை கட்டுப்படுத்துவதற்கு முயற்சித்தனர்.

அத்துடன், தீயணைப்பு பிரிவினருக்கும் அறிவித்தனர். எனினும், தீயணைப்பு பிரிவினர் சம்பவ இடத்துக்கு வருவதற்குள் லயன் குடியிருப்பு முழுமையாக எரிந்து சாம்பலாகிவிட்டது.

தீவிபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. விசாரணைகள் இடம்பெறுகின்றன.

பாதிக்கப்பட்டுள்ள மக்களை பாதுகாப்பாக தங்கவைப்பதற்கான ஏற்பாடுகள் தற்போது நோர்வூட் பிரதேச சபை ஊடாக செய்யப்பட்டுவருகின்றது.

க.கிசாந்தன்

சினிமா

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

செய்தி

மலையக தியாகி சிவனு லெச்சுமணன் நினைவேந்தல்….!

0
மலையகத் தமிழர்களுக்கான உரிமைப் போராட்டத்தின் உயிர்க்கொடையாளி மலையக தியாகி சிவனு லெச்சுமணனின், 49 ஆம் ஆண்டு நினைவுதினத்தில் செவ்வஞ்சலி நிகழ்வு எதிர்வரும் 11 ஆம் திகதி நடைபெறவுள்ளது. ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் ஏற்பாட்டில் அன்றைய...

யாழ்.வைத்தியசாலையில் தீ விபத்து: விசாரணை தீவிரம்!

0
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதான மருந்து களஞ்சியசாலையில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில், பல கோடி ரூபா பெறுமதியான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் தீக்கிரையாகியுள்ளன. இன்று அதிகாலை வேளையில் மருந்து...

தவெகவுக்கு விடுதலை சிறுத்தைகள் ஆதரவு: உறுதியானது 118!

0
தமிழகத்தில் ஆட்சியமைப்பதற்குரிய 118 என்ற அறுதிப்பெரும்பான்மையை தவெக இன்று மாலை உறுதிப்படுத்தியுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சி நிபந்தனையற்ற ஆதரவை உறுதிப்படுத்திய பின்னரே ஆட்சியமைப்பதற்குரிய சூழ்நிலை உறுதியாகியுள்ளது. சென்னை மீனம்பாக்கம் நட்சத்திர விடுதிக்கு சென்ற த.வெ.க. நிர்வாகி...