Home Blog Page 3771

4 துப்பாக்கிகளுடன் மடுல்சீமையில் ஒருவர் கைது!

மடுல்சீமை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எக்கிரிய தெமோதர கிராமத்தில் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட நான்கு துப்பாக்கிகளுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மடுல்சீமை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து, எக்கிரிய தெமோதர கிராமத்திற்கு விரைந்த ம பொலிஸார், சந்தேக நபரின் வயலில் உள்ள குடிசையை சுற்றிவளைத்து தேடுதல் நடத்தினர்.

இதன்போத அங்கு மறைத்து வைக்கப்பட்டு இருந்த உள்ளூரில் தயாரிக்கப்பட்ட நான்கு துப்பாக்கிகள் மீட்கப்பட்டன. அத்துடன் 45 வயது மதிக்கத்தக்க சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபரை எதிர்வரும் 26 ஆம் திகதி பசறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மடூல்சீமை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பசறை நிருபர் – ராமு தனராஜா

100 கிலோ ஹெரோயினுடன் மூவர் கைது!

மாத்தறை – வெலிகம பகுதியில் 100 கிலோ ஹொரோயின் போதைப்பொருள் இன்று கைப்பற்றப்பட்டுள்ளன. அத்துடன், மூன்று சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடி படையினரே சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு போதைப்பொருட்களை மீட்டுள்ளதுடன், சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர்.

‘பண்டாரவளை கல்வி வலயத்தில் 23 மாணவர்கள் 190 புள்ளிகளை பெற்று சித்தி’

பண்டாரளை கல்வி வலயத்தின் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் 589 மாணவர்கள் சித்திபெற்றுள்ளனர். இவர்களின் 23 மாணவர்கள் 190 மற்றும் அதற்கு மேற்பட்டபுள்ளிகளைப் பெற்றுமுன்னிலையில் இருக்கின்றனர் என்று வலயக் கல்விப் பணிப்பாளர் ஆர்.எம். ஆரியதாச தெரிவித்தார்.

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேற்றுக்கள் குறித்து ,பண்டாரவளை கல்விவலயப் பணிப்பாளரிடம் வினவியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

தொடர்ந்துஅவர் கருத்துத் தெரிவிக்கையில், “தரம் ஐந்து புலமைப்பரிசில் பெறுபேற்றுக்கள் திருப்தியைத் தருகின்றன. இம்முறைநகர்ப் பாடசாலைகளைவிட கிராமியப் பகுதிகள்,தோட்டப்புறப் பகுதிகள் ஆகியவற்றில் மாணவர்கள் சிறந்தபெறுபேற்றுக்களைப் பெற்றுள்ளனர்.

எமது கல்விவலயத்தில் இப் புலமைப்பரிசில் பரீட்சைக்கு 3225 மாணவர்கள் தோற்றியருந்தனர். இவர்களில் 2991 பேர்,வெட்டுப்புள்ளிக்குமேல் செல்லாவிட்டாலும் வெட்டுப்புள்ளியைஅண்மித்தவகையில் பெறுபேற்றினைப் பெற்றுள்ளனர்”என்று கூறினார்.

‘கொரோனா’ தொற்றாளர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்தை தாண்டியது!

நாட்டில் மேலும் 220 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பேலியகொடை கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.

அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 61 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் இதுவரையில் 73 பேர் உயிரிழந்துள்ளனர். 13 ஆயிரத்து 271 பேர் குணமடைந்துள்ளனர்.

கொரோனாவின் பிடிக்குள் இருந்து 13,271 பேர் மீண்டனர்!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 368 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 271 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் 5 ஆயிரத்து 497 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 73 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 841 ஆக அதிகரித்துள்ளது.

நல்லாட்சி 50 ரூபாவை கொடுத்ததா ? ரமேஷ் கேள்வி

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு  ஆயிரம் ரூபா சம்பள உயர்வு நிச்சயம் பெற்றுக்கொடுக்கப்படும் என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு – செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்புமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வு, மலையகத்துக்கான பல்கலைக்கழகம் ஆகிய உறுதிமொழிகள் வரவு – செலவுத்திட்டத்தில் வழங்கப்பட்டுள்ளன. இதனை நாம் வரவேற்கின்றோம். எனினும், எதிர்க்கட்சிகள் ஆயிரம் ரூபா தொடர்பில் விமர்சனங்களை முன்வைக்கின்றன.

நல்லாட்சியின்போது ஏன் ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொடுக்கமுடியாமல்போனது? 50 ரூபாவைக்கூட பெற்றுகொடுக்கமுடியாத இவர்கள் ஆயிரம் ரூபா பற்றி கதைப்பது அரசியல் நோக்கம் கொண்டது. மஹிந்த ராஜபக்ச ஆட்சிகாலத்தில்தான் மலையகத்தில் அபிவிருத்திகள் நடைபெற்றன.

சம்பள உயர்வு தொடர்பில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளனர். நிச்சயம் ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொடுப்போம்.” என்றும் ரமேஷ் குறிப்பிட்டார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம், மலையகத்துக்கான பல்கலைக்கழகம் ஆகிய உறுதிமொழிகள் வழங்கப்பட்டுள்ளன. இதனை வரவேற்கின்றோம்.

வழங்கமுடியாமல். போனது மஹிந்த ஆட்சிகாலத்தில்தான் தோட்ட மக்களுக்கு விசேட சலுகைகள் வழங்கப்பட்டன. ஆயிரம் , வீடமைப்புதிட்டம் ஐந்த வருடங்களில் அபிவ வேலைகள் செய்வோம்.

பேச்சு நடத்தியுள்ளோம். தோட்டக்கம்பனிகள் – பெற்றுக்கொடுப்போம். மறந்துவிட்டனர். நான்கரை வருடங்களில் –

மலையக மக்களுக்கு உதவியது – உதவும் கரங்கள் மற்றும் விழித்தெழு அறக்கட்டளை அமைப்புக்கள்

”அர்த்தமுள்ள தீபாவளியை கொண்டாட அனைவரும் உதவுவோம்” என்ற தொனிப்பொருள் கீழ் உதவும் கரங்கள் அமைப்பு மற்றும் விழித்தெழு அறக்கட்டளை ஒன்றியம் ஆகியன இணைந்து மக்களுக்கு உதவும் திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இரத்தினபுரி மாவட்டத்தின் காஹவத்தை – நாபுலுவ தோட்டத்தின் முதலாம் மற்றும் இரண்டாம் பிரிவு மக்களுக்கும், பலாங்கொடை வளவை தோட்டத்திலுள்ள மக்களுக்கும் உதவிகள் வழங்கப்பட்டன.

கொவிட் தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள மக்களுக்கும், கொழும்பு வாழ் உறவுகளுக்கும், கேகாலை மாவட்ட வரகாபொல, தொடந்தெனிய, எட்னாவள, கணிதபுர தோட்ட மக்களுக்கும், நூரித்தோட்ட மக்களுக்கும் சுமார் இரண்டரை லட்சம் ரூபா பெறுமதியான நிவாரண பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

அதேபோன்று, கேகாலை – நூரி தோட்டத்தில் விசேட தேவையுடையோருக்கு, சக்கர நற்காலி, ஊன்று கோல் மற்றும் சீமெந்து ஆகியனவும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

ஊவாவில் வரலாற்று சாதனை படைத்த தமிழ்ப் பாடசாலை!

தெமோதரை, சவுதம் தமிழ் மகா வித்தியாலயத்தில் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் 21 மாணவர்கள் சித்தியடைந்து வரலாற்று சாதனையை ஏற்படுத்தியுள்ளனர்.

ஊவா மாகாணத்திலுள்ள தமிழ் மொழி மூலமான பாடசாலைகளில் ஆகக்கூடிய புள்ளிகளை பெற்றும், அதிகமான மாணவர்களின் சித்தியடைந்த வகையிலும் மாகாணத்தில் முதலாம் இடங்களை தனதாக்கி கொண்டுள்ளது.

இவ் வரலாற்று சாதனையை ஏற்படுத்தியமைக்கு அதிபர் எஸ். யோகேஸ்வரனின் வழிநடத்தலில் வகுப்பாசிரியர்களான எஸ். சசிகுமார் மற்றும் ஆசிரியை டி. சுலோசனா ஆகியோரின் அயராத உழைப்பும் அர்ப்பணிப்பான கல்வி சேவையே காரணமாகுமென்று கல்வியாளர்களும் பெற்றோர்களும் கருத்து தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

வெட்டுபுள்ளிக்கு மேல் புள்ளிகளைப்பெற்று சித்தி அடைந்த மாணவர்களின் விபரங்கள் பின்வருமாறு

1. எஸ். சபேசன் – 185 புள்ளிகள்
2. ஐ. திவாணி – 184 புள்ளிகள்
3. எஸ். கிஷான் – 182 புள்ளிகள்
4. பி. ஹிலாலனி -182 புள்ளிகள்
5. பி. யுனேஷசன் – 178 புள்ளிகள்
6. ஆர். ஆதித்யா – 177 புள்ளிகள்
7. ஆர். பவித்ரன் – 177 புள்ளிகள்
8. பி. பவித்ரா – 176 புள்ளிகள்
9. பி. டிலுக்சன் – 176 புள்ளிகள்
10. ஏ. லஷரன் – 175 புள்ளிகள்
11. வி. கவின் கிர்ஷான் – 174 புள்ளிகள்
12. ஏ. ஷமீரா -169 புள்ளிகள்
13. எஸ். துஷாத் – 168 புள்ளிகள்
14. எம். டிலுக்சிகா — 168 புள்ளிகள்
15. வை. சுப்ரியா – 168 புள்ளிகள்
16. என். ஷிம்லா பானு -166 புள்ளிகள்
17. எஸ். ஹரிதா – 165 புள்ளிகள்
18. எஸ். டிரஷன் – 164 புள்ளிகள்
19. ஜே. சபேஷன் – 164 புள்ளிகள்
20. எஸ். சரண்யா – 161 புள்ளிகள்
21. எஸ். கஜீபன் – 159

எம். செல்வராஜா

கினிகத்தேனயில் 19 வயது யுவதிக்கு கொரோனா!

கினிகத்தேன பிளக்வோட்டர் பகுதியில் 19 வயது யுவதியொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கொழும்பில் வேலை செய்த நிலையில் கடந்த 10 ஆம் திகதி இவர் ஊர் திரும்பியுள்ளார்.

கொழும்பில் இருந்து வந்ததால் இவரிடம் நேற்று 19.11.2020 பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில் வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கொழும்பிலிருந்து தலவாக்கலைவந்த யுவதிக்கு கொரோனா!

தலவாக்கலை, சென் கிளாயர் தோட்டத்தில் 22 வயதுடைய யுவதியொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு – தெமட்டகொடையிலிருந்து குறித்த யுவதி தனது கணவர் சகிதம் கடந்த 16 ஆம் திகதி  சென் கிளாயர் பிரிவுக்கு வந்துள்ளார். கணவர் தனிப்பட்ட முரண்பாடு காரணமாக லிந்துலை லிப்ட் லிப்பகலை தோட்டத்திலுள்ள தனது வீட்டுக்கு சென்றுள்ளார்.

கொழும்பில் இருந்து வந்தகாரணத்தால் குறித்த யுவதி பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் அவருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து கணவர் உட்பட அவருடன் பழகியவர்கள் சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ள யுவதி கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு கொண்டுசெல்லப்படவுள்ளார்.

க.கிசாந்தன்

சினிமா

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

செய்தி

பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இலங்கை, வியட்நாம் ஆராய்வு!

0
வியட்நாம் துணை பிரதமரும், பாதுகாப்பு அமைச்சருமான General Phan Van Giang இற்கும், இலங்கை பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா ஆகியோருக்கும் இடையில் கொழும்பில் நேற்று உயர்மட்ட இராஜதந்திர...

மலையகத்தில் மாலைவேளையில் அடை மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

0
மலையகத்தில் நுவரெலியா, பதுளை, கண்டி, இரத்தினபுரி உட்பட பல மாவட்டங்களில் மாலைவேளையில் கடும் மழை பெய்துவருகின்றது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுவருகின்றது. மழை பெய்யும் போது இடி மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும் என்பதால்,...

மத்திய மாகாண உள்ளூராட்சிப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் கௌரவிப்பு

0
மத்திய மாகாணத்தின் உள்ளூராட்சி நிறுவனங்களிடையே 2025 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட பொது நூலக வாசகர் செயல்பாடுகள் போட்டிகள், நகர அழகுபடுத்தல் மற்றும் பொதுச் சேவைகள் எண்ணிமமாக்கல் திட்டங்களில் வெற்றி பெற்றவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கும்...