Home Blog Page 3770

அமெரிக்க ஜனாதிபதியின் மூத்த மகனுக்கு கொரோனா!

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பின் மூத்த மகனான, டொனால்ட் டிரம்ப் ஜூனியர் (வயது 42) கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

அறிகுறிகள் எதுவும் இன்றி அவருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தற்போது மருத்துவ வழிகாட்டுதல்களை பின்பற்றி வருவதாகவும் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

அதேபோல், டிரம்பின் தனிப்பட்ட வழக்கறிஞர் ருடி கியுலியனியின் மகன் ஆண்ட்ரூ கியுலியானியும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப், இளைய மகன் பாரன் டிரம்ப் ஆகியோர் தொற்று பாதிக்கப்பட்டு பின்னர் குணம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பசறையில் கஞ்சா வளர்ப்பில் ஈடுபட்டவர் கைது!

பசறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெல்கொல்ல கமயில் கஞ்சா வளர்ப்பில் ஈடுபட்ட நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பசறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பாலித செனவிரத்னவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து, அவரின் வழிகாட்டலுடன் சம்பவ இடத்துக்கு பொலிஸார் விரைவந்தனர்.

வெல்கொல்ல கமயில் வயலுக்கு பின்னால் உள்ள சதுப்பு நில பகுதியில் அனுமதி ப்பத்திரம் இன்றி மிகவும் சூட்சுமமான முறையில் வளர்க்கப்பட்ட இரண்டு கஞ்சா செடிகளை ( ஒன்று உயரம்12 அடி
மற்றையது உயரம் 4 அடி) கைப்பற்றினர். அத்துடன், 65 வயது மதிக்கத்தக்க சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. கைது செய்யப்பட்ட நபரை இன்று பதுளை நீதிவான் முன்னிலையில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தி ராமு தனராஜா

ஊடகவியலாளர் சந்திரமதி காலமானார்!

இளம் ஊடகவியலாளர் சந்திரமதி குழந்தைவேல் இன்று காலை (21) காலமானார். திடீர் சுகயீனம் காரணமாக வீட்டில் வைத்தே அவர் காலமானதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
கண்டி, புஸல்லாவை பிறப்பிடமாகக்கொண்ட சந்திரமதி, புஸல்லாவை இந்து தேசியக் கல்லூரியில் உயர்தரம் வரையிலும் , பட்டப்படிப்பை இந்தியாவிலும் நிறைவுசெய்துள்ளார்.
தினக்குரல் பத்திரிகை ஊடாக தனது ஊடகப்பயணத்தை ஆரம்பித்த அவர், கடந்த 4 வருடங்களாக நியூஸ்பெஸ்ட் ஊடக நிறுவனத்தில் பணியாற்றினார்.
அவரின் ஆன்மா இறைப்பாறட்டும்.

ஆயிரம் ரூபா நிச்சயம் கிடைக்கும் – அமைச்சர் தினேஷ் உறுதி!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 2020 ஜனவரி மாதம் முதல் நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாவை நிச்சயம் பெற்றுக்கொடுப்போம் – என்று அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

வரவு – செலவுத்திட்டத்தின் 2ஆம் வாசிப்புமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

” பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா வழங்கப்படவேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இதனை விமர்சிக்காது, பெற்றுக்கொடுப்பதற்கு எதிரணி ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.

ஆயிரம் ரூபா தொடர்பில் அமரர். ஆறுமுகன் தொண்டமான் பலசுற்று பேச்சுகளை நடத்தியிருந்தார். நிச்சயம் அதனை பெற்றுக்கொடுப்போம்.” – என்றார்.

மலையக எம்.பிக்களில் வேலுகுமார் முன்னிலை! பாராளுமன்றத்தில் 7ஆம் இடம்!

பாராளுமன்றத்தில் ஒக்டோபர் மாதம் சிறப்பாக செயற்பட்ட 10 பாராளுமன்ற உறுப்பினர்களுள் மலையக எம்.பியொருவரும் இடம்பிடித்துள்ளார்.

ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட எம்.பியுமான வேலுகுமாரே 7 ஆவது இடத்தில் உள்ளார்.

பாராளுமன்றம் வருகை, விவாதங்களில் பங்கேற்பு உள்ளிட்ட விடயங்களை அடிப்படையாகக்கொண்டே   manthri.lk என்ற இணையத்தால் குறித்த பட்டியல் தயாரிக்கப்படுகின்றது.

முதல் பத்து இடங்களை பிடித்த எம்.பிக்கள் விபரம் வருமாறு,

1.அநுரகுமார திஸாநாயக்க.

2.அஜித் நிவாட் கப்ரால்.

3.சஜித் பிரேமதாச.

4.ஹர்ஷ டி சில்வா.

5.மஹிந்தானந்த அளுத்கமகே

6.பந்துல குணவர்தன.

7.வேகுமார்.

8.புத்திக்க பத்திரண.

9.எஸ்.சேமசிங்க.

10.எஸ.எம். மரிக்கார்.

 

கொஸ்லாந்தையில் மண்சரிவு அபாயம்! 36 குடும்பங்கள் வெளியேற்றம்!!

நாட்டின் பல பிரதேசங்களில் நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக, பெரகல- கொஸ்லாந்தைப் பகுதியில், மண்மேட்டுடன் பாரிய கற்பாறைகள் சரியும் அபாயம் நிலவுகின்றது. இதனால் அப்பகுதியிலிருந்து 36 குடும்பங்களைச் சேர்ந்த 153 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக , ஹப்புத்தளை பிரதேச செயலாளர் சுனில் அபேகோன் தெரிவித்தார்.

அக்குடும்பங்கள், மண்சரிவு ஏற்படக்கூடிய அதி அபாய வலயத்தில் வசிப்பதாக, தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையம் ஏற்கெனவே அறிவித்துள்ளதாகவும் இவர்களில் 16 குடும்பங்கள் ஏற்கெனவே பாதுகாப்பான இடமொன்றில் குடியமர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மீதமுள்ள குடும்பங்களையும் பாதுகாப்பான இடங்களில் நிரந்தரமாகக் குடியமர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்

2ஆவது அலைமூலம் 15,761 பேருக்கு கொரோனா! 61 பேர் உயிரிழப்பு!!

இலங்கையில் கொரோனா வைரஸ் 2 ஆவது அலைமூலம் நேற்றிரவுவரை (20) 15 ஆயிரத்து 761 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இவர்களில் இதுவரையில் 61 பேர் பலியாகியுள்ளனர். (ஒக்டோபர் 24 முதல் நேற்றுவரை)

மினுவாங்கொட கொத்தணிமூலம்  3 ஆயிரத்து 59 பேருக்கும், பேலியகொடை கொத்தணிமூலம் 12 ஆயிரத்து 702 வைரஸ் தொற்றியுள்ளது.

இவ்வாறு 2ஆவது அலைமூலம் கொரோனா தொற்றியவர்களில் நேற்றுவரை 9 ஆயிரத்து 905 பேர் குணமடைந்துள்ளனர்.

அதேவேளை, இலங்கையில் நேற்றுவரை மொத்தமாக 19 ஆயிரத்து 279 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இவர்களில் 13 ஆயிரத்து 270 பேர் குணமடைந்துள்ளனர்.

இலங்கையில்  கொரோனா வைரஸ் தாக்கத்தால் நேற்றும் ஒருவர் உயிரிழந்தார்.

இதன்படி இலங்கையில் கொரோனா தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 74ஆக அதிகரித்துள்ளது.

பட்ஜட்மீது இன்று வாக்கெடுப்பு! முற்போக்கு கூட்டணி எதிர்ப்பு – இ.தொ.கா. ஆதரவு!!

வரவு – செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்புமீதான வாக்கெடுப்பு இன்று மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது.

2021 ஆம் ஆண்டுக்கான மொட்டு அரசாங்கத்தின் பட்ஜட் கடந்த 17 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. 18 திகதி முதல் இன்றுவரை 2ஆம் வாசிப்புமீதான விவாதம் நடைபெற்ற நிலையிலேயே மாலை வாக்கெடுப்பு நடத்தப்படுகின்றது.

தமிழ் முற்போக்கு கூட்டணி பட்ஜட்டுக்கு எதிராக வாக்களிக்கவுள்ள நிலையில், அரச பங்காளியான இ.தொ.கா. ஆதரவாக வாக்களிக்கவுள்ளது. பட்ஜட்மீதான இறுதி வாக்கெடுப்பு டிசம்பர் 10 ஆம் திகதி நடைபெறும்.

புலிகளை ஒழித்து போரில் வென்றதுபோல பொருளாதார சமரிலும் வெற்றிபெறுவோம்

” ஒருபோதும் ஒழிக்கவே முடியாது எனக்கூறப்பட்ட புலிகள் அமைப்புக்கு முடிவுகட்டி போரில் வெற்றிபெற்றதுபோல் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் சமரிலும் கோட்டா – மஹிந்த தலைமையின்கீழ் நிச்சயம் வெற்றிபெறுவோம்.” – என்று அமைச்சர் உதய கம்மன்பில சூளுரைத்தார்.

நாடாளுமன்றத்தில்  நடைபெற்ற வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம்வாசிப்புமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு சூளுரைத்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” எதிர்க்கட்சிகள் இன்று வரவு – செலவுத்திட்டத்தை விமர்சிக்கின்றன. அரசாங்கம் செய்வது தவறெனவும் குற்றஞ்சாட்டுகின்றன. நாம் செய்வது தவறெனில், பட்ஜட்டில் உரிய திட்டங்கள் இல்லையெனில், மாற்று யோசனைகளை முன்வைக்குமாறு எதிரணிக்கு சவால் விடுக்கின்றேன். டிசம்பர் 10 ஆம் திகதிவரை அதற்கு அவகாசம் இருக்கிறது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டு மக்களுக்காக ஆற்றிய தேசிய உரையில் கூறியதுபோல ,நாம் நம்புவது எதிரணியையோ,  வெளிநாட்டு சக்திகளையோ அல்லது அரச சார்பற்ற நிறுவனங்களின் ஆலோசனைகளையோ அல்ல. நாட்டு மக்களையும், உள்நாட்டு பொறிமுறையையும், உள்நாட்டு வளங்கள்மீதுமே நம்பிக்கை வைத்துள்ளோம்.

குறிப்பாக புலிகள் அமைப்பை ஒழித்து போரை முடிவுக்கு கொண்டுவரமுடியாது எனக் கூறப்பட்டது. ஆனால் மஹிந்த, கோட்டா ஒருங்கிணைப்பின்கீழ் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தோம். தற்போது கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்கு தொடர்பில் உலகுக்கு முன்னுதாரணமாக செயற்படுகின்றோம். எனவே,  புலிகளை ஒழித்து போரை வெற்றிகொண்டதுபோல, பொருளாதார சமரையும் நிச்சயம் வெற்றிகொள்வோம்.” – என்றார்.

இன்று மாத்திரம் 435 பேருக்கு கொரோனா!

நாட்டில் மேலும் 215 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பேலியகொடை கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.

இன்று இதுவரை 435 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

கொரோனாவால் இதுவரையில் 73 பேர் உயிரிழந்துள்ளனர். 13 ஆயிரத்து 271 பேர் குணமடைந்துள்ளனர்.

சினிமா

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

செய்தி

யாழ்.வைத்தியசாலையில் தீ விபத்து: விசாரணை தீவிரம்!

0
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதான மருந்து களஞ்சியசாலையில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில், பல கோடி ரூபா பெறுமதியான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் தீக்கிரையாகியுள்ளன. இன்று அதிகாலை வேளையில் மருந்து...

தவெகவுக்கு விடுதலை சிறுத்தைகள் ஆதரவு: உறுதியானது 118!

0
தமிழகத்தில் ஆட்சியமைப்பதற்குரிய 118 என்ற அறுதிப்பெரும்பான்மையை தவெக இன்று மாலை உறுதிப்படுத்தியுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சி நிபந்தனையற்ற ஆதரவை உறுதிப்படுத்திய பின்னரே ஆட்சியமைப்பதற்குரிய சூழ்நிலை உறுதியாகியுள்ளது. சென்னை மீனம்பாக்கம் நட்சத்திர விடுதிக்கு சென்ற த.வெ.க. நிர்வாகி...

“மக்களின் குடிநீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான திட்டங்களை விரைவுபடுத்துங்கள்”

0
மக்களின் முதன்மையான பிரச்சினையாக உள்ள குடிநீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்குத் தேவையான திட்டங்களை விரைவாகக் கண்டறிந்து, அவற்றை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மக்களின் தற்போதைய தேவைகள் குறித்து...