Home Blog Page 3769

கொழும்பில் 13 பொலிஸ் பிரிவுகள் தொடர்ந்தும் முடக்கம்!

கொழும்பு மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நான்கு பொலிஸ் பிரிவுகளுக்கான கட்டுப்பாடுகள் நாளை (23) காலை 5 மணி முதல் தளர்த்தப்படவுள்ளது என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.

பொரள்ளை, வெல்லம்பிட்டி, கொழும்பு கோட்டை மற்றும் கொம்பனிவீதி ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கான தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகள் இவ்வாறு தளர்த்தப்படவுள்ளன.

எனினும், பொரள்ளை பொலிஸ் பிரிவின் வனாதமுல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவு மற்றும் கொம்பனிவீதி பொலிஸ் பிரிவின் சகந்த கிராம உத்தியோக்தர் பிரிவும் மறு அறிவித்தல் பிறப்பிக்கப்படும் உரை தனிமைப்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, கொழும்பு மாவட்டத்தில் கீழ்வரும் பொலிஸ் பிரிவுகள் தொடர்ந்தும் முடக்கப்பட்டிருக்கும்.

1.மட்டக்குளிய

2.மோதரை

3.ப்ளூமண்டல்

4.கொட்டாஞ்சேனை

5.கிராண்ட்பாஸ்

6.கரையோரப்பகுதி

7.ஆட்டுப்பட்டித்தெரு

8.மாளிகாவத்தை

9.தெமட்டகொடை

10.வாழைத்தோட்டம்

11.மருதானை

12.புறக்கோட்டை

13.வெல்லவீதி

‘கொரோனா’ ஊழித்தாண்டவம்! 29 நாட்களில் 70 பேர் உயிரிழப்பு!!

இலங்கையில் கொரோனா வைரஸ் 2 ஆவது அலைமூலம் நேற்றிரவுவரை (20) 16ஆயிரத்து 252 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இவர்களில் இதுவரையில் 70 பேர் பலியாகியுள்ளனர். (ஒக்டோபர் 24 முதல் நேற்றுவரை)

மினுவாங்கொட கொத்தணிமூலம் 3 ஆயிரத்து 59 பேருக்கும், பேலியகொடை கொத்தணிமூலம் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.
இவ்வாறு 2ஆவது அலைமூலம் கொரோனா தொற்றியவர்களில் நேற்றுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.

அதேவேளை, இலங்கையில் நேற்றுவரை மொத்தமாக 19 ஆயிரத்து 771 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இவர்களில் 13 ஆயிரத்து 590 பேர் குணமடைந்துள்ளனர்.

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் நேற்றும் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் கொழும்பு பகுதியைச் சேர்ந்தவர்கள்.

இதன்படி இலங்கையில் கொரோனா தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 83 ஆக அதிகரித்துள்ளது.

லிந்துலை,அக்கரப்பத்தனை, பூண்டுலோயாவில் மூவருக்கு கொரோனா!

நுவரெலியா மாவட்டத்தில் லிந்துலை லிப்பகலை, அக்கரப்பத்தனை மற்றும் பூண்டுலோயா ஆகிய பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் மூவர் நேற்று (21.11.2020) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தலவாக்கலை – லிந்துல, லிப்பகல தோட்டம், அக்கரபத்தனை பெல்மோர் தோட்டம் கிளைட்ஸ்டேல் பிரிவு, பூண்டுலோயா சீன் தோட்டம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மூவருக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது என சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவர்கள் மூவரும் சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் அம்பாந்தோட்டையில் அமைந்துள்ள கொரோனா வைரஸ் தடுப்பு சிகிச்சை நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

லிந்துலை லிப்பகல தோட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நபர், தலவாக்கலை சென்கிளயார் பகுதியில் நேற்று முன்தினம் (20) வைரஸ் தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட பெண்ணின் கணவராவார்.

கடந்த 16 ஆம் திகதி கொழும்பு, தெமட்டகொடை பகுதியில் இருந்து வந்து  தோட்டத்தில் உள்ள தனது வீட்டில் இவர் இரகசியமாக தங்கியுள்ளார். எனினும், இவர் தொடர்பில் பொலிஸார் மற்றும் சுகாதார பிரிவினருக்கு தகவல் கிடைத்ததையடுத்து பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.  பரிசோதனை முடிவில் அவருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், அக்கரப்பத்தனை பெல்மோர் தோட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ள நபர் கொழும்பு 12 பகுதியில் இருந்து வந்துள்ளார். இதனால் அவரிடம் பி.சி.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டன. பரிசோதனை முடிவுகள் வெளியான நிலையில் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை, கொழும்பில் கூலித்தொழிலாளியாக வேலைசெய்த 25 வயதுடைய இளைஞர் ஒருவர் பூண்டுலோயா சீன் தோட்டத்திலுள்ள தனது வீட்டுக்கு கடந்த 16 ஆம் திகதி வந்துள்ளார். பி.சி.ஆர் பரிசோதனை மூலம் அவருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர் பல இடங்களுக்கு சென்று வந்துள்ளார் என்பதை பொலிஸார் கண்டறிந்துள்ளனர். எனவே, அவருடன் தொடர்பில் இருந்த 50ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தற்போது சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

க.கிசாந்தன்

நாட்டில் இன்று மாத்திரம் 487 பேருக்கு கொரோனா!

நாட்டில் மேலும் 230 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பேலியகொடை கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.

இன்று இதுவரை 487  தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 537 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் இதுவரையில் 74 பேர் உயிரிழந்துள்ளனர். 13 ஆயிரத்து 590 பேர் குணமடைந்துள்ளனர்.

முற்போக்கு கூட்டணியினரின் விமர்சனங்களுக்கு சபையில் ஜீவன் பதிலடி!

” எம்மை நோக்கி நீங்கள் ஒருவிரல் நீட்டும்போது ஏனைய நான்கு விரல்களும் உங்களை சுட்டிக்காட்டிக்கொண்டிருப்பதை மறக்கவேண்டாம். நல்லாட்சியின்போது ஏன் சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்கமுடியாமல்போனது.”

இவ்வாறு தமிழ் முற்போக்கு கூட்டணி உறுப்பினர்களிடம் கேள்வி எழுப்பினார் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான்.

பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு  -செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்புமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜீவன் தொண்டமான் மேலும் கூறியவை வருமாறு,

” மறைந்த எமது தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் ஐயாதான் அவிசாவளை பகுதியில் முதன் முதலில் தனிவீட்டுத் திட்டத்தை ஆரம்பித்தார். அதன்பின்னர் அமரர் சந்திரசேகரன், எனது தந்தை ஆறுமுகன் தொண்டமான் ஆகியோரும் தனிவீடுகளை அமைக்க நடவடிக்கை எடுத்தனர்.

2021 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தில் எமது மக்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.குறிப்பாக மலையக பல்கலைக்கழகத்துக்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்காக ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்களான ஜீ.எல்.பீரிஸ், பந்துல குணவர்தன, மஹிந்தானந்த அளுத்கமகே ஆகியோருக்கு எமது மக்களின் சார்பிலும், இதொ.காவின் சார்பிலும் நன்றிகளைத் தெரித்துக்கொள்கின்றேன்.

அத்துடன், ஆயிரம் ரூபா சம்பள உயர்வுக்கான யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அது எவ்வாறு சாத்தியம் என எதிரணி உறுப்பினர்கள் கேட்கின்றனர். அது பற்றி நிதி அமைச்சர் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். ஆயிரம் ரூபாவை வழங்க மறுக்கும் நிறுவனங்களின் முகாமைத்துவ உரித்து மீள்பரிசீலனை செய்யப்படும்.

அரச நிர்வாகத்தின்கீழ் உள்ள கம்பனிகள் ஆயிரம் ரூபாவை வழங்கலாம்தானே எனவும் எதிரணி உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டார். அது பற்றி நாம் பெருந்தோட்ட அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்துகின்றோம். ஆனால் அவர்கள் நான்கரை வருடங்கள் ஆட்சியில் இருக்கும்போது அரச நிறுவனங்களால் ஏன் சம்பள உயர்வை வழங்கமுடியாமல்போனது? எங்களை நோக்கி ஒருவிரலை நீங்கள் நீட்டும்போது ஏனைய நான்கு விரல்களும் உங்களை சுட்டிக்காட்டிக்கொண்டிருப்பதை மறக்கவேண்டாம்.” – என்றார்

நாட்டில் மேலும் 257 பேருக்கு கொரோனா! தொற்றாளர்களின் எண்ணிக்கை 19,537 ஆக உயர்வு!!

நாட்டில் மேலும் 257 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பேலியகொடை கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.

அதேவேளை, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 537 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் இதுவரையில் 74 பேர் உயிரிழந்துள்ளனர். 13 ஆயிரத்து 590 பேர் குணமடைந்துள்ளனர்.

அதேவேளை, 2ஆம் அலைமூலம் இதுவரை 16 ஆயிரத்து 22 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

2021 ஆம் ஆண்டுக்கான பட்ஜட் நிறைவேற்றம்!

2021 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பமீதான வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் இன்று 99 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தின் அடுத்தாண்டுக்கான பாதீடு கடந்த 17 ஆம் திகதி நிதி அமைச்சர் மஹிந்த ராஜபக்சவால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.

மறுநாள் 18 ஆம் திகதி முதல் இன்று மாலைவரை 2 ஆம் வாசிப்புமீதான விவாதம் நடைபெற்ற நிலையிலேயே மாலை 5.45 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் பட்ஜட்டுக்கு ஆதரவாக 151 வாக்குகளும், எதிராக 52 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதன்படி 99 மேலதிக வாக்குகளால் பட்ஜட் நிறைவேறியது.

‘கொரோனா’ -13,590 பேர் மீண்டனர்! 5,616 பேருக்கு சிகிச்சை!!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 319 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 590 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் 5 ஆயிரத்து 616 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 74 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 280 ஆக அதிகரித்துள்ளது.

‘கொரோனா தடுப்பூசிக்கான பிரதான ஆய்வாளராக இலங்கை வம்சாவளி பெண்’

உலகம் முழுவதும் வேகமாக பரவும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் முன்னெடுத்து வருகிறது. இது தொடர்பாக மேற்கொள்ளப்படும் ஆய்வின் பிரதான ஆய்வாளர்களாக இலங்கையை பூர்வீகமாக கொண்ட பேராசிரியர் மஹேஷி என்.ராமசாமி உள்ளடக்கப்பட்டுள்ளார்.

இலங்கையில் பிறந்த அவர் பிரித்தானியாவில் வைத்தியராக கல்வியை தொடர்ந்துள்ளார். இந்த நிலையில் கொரோனா வைரஸிற்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிப்பது தொடர்பில் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற ஆய்வின் பிரதான ஆய்வாளராக உலகம் முழுவதும் அவர் பிரபலமடைந்துள்ளார்.

அந்த தடுப்பூசி தொடர்பில் மேற்கொள்ளப்படுகின்ற மருத்துவ வேலை தொடர்பில் ” The Lancet” என்ற சஞ்சிகையில் பதிவிடப்படும் அறிக்கையில் முதன்மை இடம் ஒன்று பேராசிரியர் மஹேஷி ராமசாமிக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், க்ரைஸ்ட் வித்தியாலயத்தின் வைத்தியம் தொடர்பான பட்டம் பெற்றுள்ள அவர் தொற்று நோய் தொடர்பில் ஒக்ஸ்போர்ட் மற்றும் லண்டன் வைத்திய நிறுவனத்தில் அவர் பட்டம் பெற்றுள்ளார்.

தற்போது பல்கலைகழக பேராசிரியராக பணியாற்றும் அவர் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் NHS அறக்கட்டளையில் பணியாற்றுகிறார். அதற்கமைய அவர் மேகன் மருத்துவ கல்லூரியின் பிரதான பேராசிரயராகவும் பணியாற்றி வருகின்றார்.

அவர் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி குழுமத்தின் முன்னணி ஆராய்ச்சியாளராக உள்ளார் மற்றும் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் விருது பெற்ற மூத்த மருத்துவ விரிவுரையாளராகவும் உள்ளார்.

பேராசிரியர் மஹேஷி என். ராமசாமியின் பெற்றோரும் புகழ்பெற்ற விஞ்ஞானிகளாகும். அவரது தாயார் பேராசிரியர் சமரநாயக்க ராமசாமி என்பவராகும் கொழும்பின் விசாகா கல்லூரியின் பழைய மாணவரான இவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் விலங்கியல் துறையில் பட்டம் பெற்றாராகவும்.

பின்னர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பொதுநலவாய உதவித்தொகைக்கு தேர்வு செய்யப்பட்டார். பின்னர் அவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற முதல் இலங்கையர் ஆனார். மஹேஷி என். ராமசாமியின் தந்தை ரஞ்சன் ராமசாமியும் ஒரு விஞ்ஞானியாகும். மூன்று பிள்ளைகளின் தாயான மஹேஷி ராமசாமி, ஒக்ஸ்போர்ட் கொவிட் -19 தடுப்பூசி ஆய்வில் இணைந்துள்ளமை குறித்தும் அவரது ஆராய்ச்சிக்கு சர்வதேச அங்கீகாரம் பெற்றமையும் இலங்கையர்கள் அனைவரும் மிகவும் பெருமைப்பட வேண்டிய விடயமாகும்.

‘வெட்டுப்புள்ளி அதிகரிப்பால் மாணவர்கள் உளரீதியாக பாதிப்பு’

” தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான வெட்டுப்புள்ளி அதிகரிப்பு காரணமாக மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான தகவல்களை உள்ளடக்கி கல்வி அமைச்சர் ஜி எல் பீரிசுக்கு, அவசர கடிதமொன்று அனுப்பட்டுள்ளது. ” – என்று இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் உப தலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களில் வெட்டு புள்ளிக்கு மேல் புள்ளிகளை பெற்ற மாணவர்கள் சித்தியடைந்தவர்கள் எனவும், அதற்கு குறைவாக பெற்றவர்கள் சித்தியடையாதவர்கள் எனவும் வகைப்படுத்தப்படுவதால் மாணவர்கள் உளரீதியாக பாதிக்கப்படுகின்றனர். இது அம்மாணவர்களுக்கு இழைக்கப்படும் பெரும் அநீதியாகும்.

இம்முறை புலமைப் பரிசில் பரீட்சையில் பல மாவட்டங்களில் கூடிய வெட்டுப் புள்ளியாக 169 ஐ உயர் மதிப்பெண்ணாகக் குறிப்பிட்டதன் காரணமாக வினாத்தாளில் 84% புள்ளிகள் பெற்ற பிள்ளைகளும் புலமைப் பரீட்சையில் தேர்ச்சி பெறாதவர் என்ற நிலையில் பார்க்கப்படுவது மனிதாபிமானமற்ற செயற்பாடாகும். இவ்வாறான மாணவர்களின் மனநிலையைப் புரிந்துகொண்டு செயற்படவேண்டும். நாட்டின் கல்வித்துறையில் பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் தான்னிச்சையான முடிவுகளால் பிள்ளைகளை மன உளைச்சலுக்கு உட்படுத்துவதனை நாம் தெரியப்படுத்துகிறோம்.

இங்கே பிள்ளைகளை மன உளைச்சலுக்கு உட்படுத்தாமல் அவர்கள் இந்தப் பரீடாசையில் பெற்ற பெறுபேறுகளுக்கு அமைய மாற்று வழியில் அவர்களுக்கான ஆறுதலைப் பெற்றுக் கொடுப்பதற்கான முறைகள் இருக்கும்போதும் கல்வி அமைச்சும் நடப்பு அரசாங்கமும் அவற்றைப் புறந்தள்ளிச் செயற்படுவது வருத்தப்படவேண்டிய விடயமாகும்.

மேலும் மாணவர்கள் நாட்டில் தொடரும் மிகவும் கடினமான சூழ்நிலையில் கொரோனா நோயின் ஆபத்தினை எதிர்கொண்டுதான் இந்த நிலைமையை வெளிக்காட்டியுள்ளார்கள். என்பதனை இந்த அரசாங்கத்துக்கும் கல்வி அதிகாரிகளுக்கும் அது தொடர்பாக விரிவாக விவரித்துக் கூறவேண்டிய அவசியமில்லை.

எது எவ்வாறாயினும் நாட்டு மாணவர்களின் கல்வி வளர்ச்சி தொடர்பாக செயற்படுத்தப்பட்ட நிகழ்நிலை(online) கற்பித்தலின் ஊடாக யதார்த்தமற்ற நடைமுறைச் சாத்தியமற்ற செயற்பாடுகள் வெற்றியளிக்கவில்லை என்பதனை கல்வி அமைச்சும் அரசாங்கமும் இந்த நிலைமைகளின் மூலம் விளங்கிக்கொள்ள முடியும்.

எனவே இந்த மாணவர்கள் எதிர்காலத்தில் கல்விச் சவால்களுக்கு முகம்கொடுத்து மனோதிடத்தினைச் சீர்குலைக்கும் செயற்பாட்டினை மேற்கொள்ளாமல், மாணவர்களுக்குப் பெற்றுக் கொடுக்கும் புலமைப் பரிசில்களின் அளவை அதிகரித்து மேற்குறிப்பிட்ட அதிக புள்ளிகளைப் பெற்ற மாணவர்களுக்கு நீயாயத்தைப் பெற்றுக் கொடுக்கும்படி இலங்கை ஆசிரியர் சேவைச்சங்கம் சார்பில் நாம் உங்களிடம் மிகவும் தேவைப்பாட்டோடு கேட்டுக் கொள்கிறோம்.” – என்றார்.

சினிமா

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

செய்தி

மலையக தியாகி சிவனு லெச்சுமணன் நினைவேந்தல்….!

0
மலையகத் தமிழர்களுக்கான உரிமைப் போராட்டத்தின் உயிர்க்கொடையாளி மலையக தியாகி சிவனு லெச்சுமணனின், 49 ஆம் ஆண்டு நினைவுதினத்தில் செவ்வஞ்சலி நிகழ்வு எதிர்வரும் 11 ஆம் திகதி நடைபெறவுள்ளது. ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் ஏற்பாட்டில் அன்றைய...

யாழ்.வைத்தியசாலையில் தீ விபத்து: விசாரணை தீவிரம்!

0
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதான மருந்து களஞ்சியசாலையில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில், பல கோடி ரூபா பெறுமதியான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் தீக்கிரையாகியுள்ளன. இன்று அதிகாலை வேளையில் மருந்து...

தவெகவுக்கு விடுதலை சிறுத்தைகள் ஆதரவு: உறுதியானது 118!

0
தமிழகத்தில் ஆட்சியமைப்பதற்குரிய 118 என்ற அறுதிப்பெரும்பான்மையை தவெக இன்று மாலை உறுதிப்படுத்தியுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சி நிபந்தனையற்ற ஆதரவை உறுதிப்படுத்திய பின்னரே ஆட்சியமைப்பதற்குரிய சூழ்நிலை உறுதியாகியுள்ளது. சென்னை மீனம்பாக்கம் நட்சத்திர விடுதிக்கு சென்ற த.வெ.க. நிர்வாகி...