Home Blog Page 3768

‘ஜீவன் தொண்டமான் தலைமையில் மலையகத்தை மாற்றுவோம்’ – ரமேஷ் சபதம்

” மலையக மக்களுக்காக அமரர் ஆறுமுகன் தொண்டமானால் முன்னெடுப்பதற்கு எதிர்ப்பார்க்கப்பட்ட அத்தனை அபிவிருத்தி திட்டங்களையும் தலைவர் ஜீவன் தொண்டமான் தலைமையில் வெற்றிகரமாக முன்னெடுப்போம்.” – என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்தார்.

கொட்டகலை – நுவரெலியா பிரதான வீதியை இணைக்கும் தோட்டப்பாதைகளில் ஒன்றான கொட்டகலை கிறிலஸ்பாம், கே.ஜி.கே ஆகிய தோட்டங்களுக்கு செல்லும் பிரதான பாதையை புனரமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் இன்று (22.11.2020) கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே  அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது  மறைந்த எமது தலைவர் ஆறுமுகன் தொண்டமானால் மலையகத்தில் பாரிய அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. மேலும் சில திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுவந்தன. எனினும் நல்லாட்சி வந்ததும் அரசியல் காரணங்களுக்காக அவை அனைத்தும் நிறுத்தப்பட்டன.

ஆனால் எமக்கு  மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது. மலையக மக்களுக்காக எவற்றையெல்லாம் செய்யவேண்டும் என எமது தலைவர் எதிர்ப்பார்த்தாரோ அவற்றையெல்லாம் தலைவர் ஜீவன் தொண்டமான் தலைமையில் நிச்சயம் செய்வோம். எமக்கு ஒத்துழைப்பு, உதவி வழங்கக்கூடிய இருவரே நாட்டின் ஜனாதிபதி, பிரதமராக இருக்கின்றனர். எனவே, எவ்வித தடையுமின்றி செய்வோம்.

மலையக பல்கலைக்கழகத்துக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மும்மொழி தேசிய பாடசாலை வரவுள்ளது. அதேபோல தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாவையும் நிச்சயம் பெற்றுக்கொடுப்போம். அதற்கான சக்தி இருப்பதாலேயே வரவு – செலவுத் திட்டத்திலேயே அதற்கான யோசனை முன்மொழியப்பட்டது.

வடக்கு, கிழக்கு, மலையகம் என தனித்தனியாக வரவு – செலவுத் திட்டங்களை முன்வைக்கமுடியாது. இலங்கை மக்களுக்காகவே வரவு – செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. மலையக மக்களும் இலங்கையர்களே, எனவே, அவர்கள் பட்ஜட்டில் புறக்கணிக்கப்பட்டுள்ளனர் எனக்கூறப்படுவதை ஏற்கமுடியாது.” – என்றார் ரமேஷ்.

க.கிசாந்தன்

 

ஆயிரம் ரூபாவை அடிப்படை சம்பளமாகவே ஆறுமுகனும் கோரினார் – ராதா

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக ஆயிரம் ரூபா கிடைக்கவேண்டும் என்பதே அமரர். ஆறுமுகன் தொண்டமானின் கோரிக்கையாகவும் இருந்தது. எனவே, அவருக்கு நன்றிக்கடன் செலுத்தும் வகையிலானது அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொடுக்க ஆளுங்கட்சி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வே.இராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார்.

அட்டனில் இன்று (22.11.2020) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.

3 ஆம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் நாளை திறக்கப்படவுள்ளமை தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர்,

” மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளைத்தவிர ஏனைய பகுதிகளில் தரம் 6 முதல் 13வரையான மாணவர்களுக்கு கல்வி நடவடிக்கைகள் நாளை முதல் ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. ஆனால் இந்த முடிவை பிற்போடுமாறு மக்கள் கோருகின்றனர்.

பாராளுமன்ற அமர்வு முடிவடைந்தபின்னர் நான் நேற்று நுவரெலியா வந்தேன். எமது மக்களும் அதே கோரிக்கையை முன்வைக்கின்றன. மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் பாடசாலைகளை திறப்பதற்கான சுகாதார பாதுகாப்பு தற்போதைய சூழ்நிலையில் இல்லை என்றும்இ தொற்றுநீக்கம் செய்யும் நடவடிக்கைகூட இடம்பெறவில்லை எனவும் குறிப்பிடுகின்றனர்.

அத்துடன் சுகாதார விதிமுறைகளை பின்பற்றி கற்பித்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்கமுடியாத சூழ்நிலையும் இருக்கின்றது. ஒரு மண்டபத்தில் நான்குஇ ஐந்து வகுப்புகள் உள்ளன. இதில் எவ்வாறு சமூகஇடைவெளியை பின்பற்றுவது? எனவேஇபாடசாலைகளை திறக்கும் முடிவை சற்று ஒத்திவைக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.” – என்று தெரிவித்தார்.

5000 ரூபா கொடுப்பனவு தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளித்த வே. இராதாகிருஷ்ணன் எம்.பி., கூறியதாவது,

” தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வாழும் மக்களுக்கு உரியவகையில் கொடுப்பனவு வழங்கப்படவில்லை. அரச அதிபருக்கு இதுபற்றி அறிவித்துள்ளோம். மக்கள் பட்டினியுடன் வாழ்கின்றனர். பொறுமையிழந்து கொழும்பு மக்கள் வீதிக்கு இறங்கி போராடும் நிலை ஏற்பட்டது. மக்கள் சார்பில் மனோ கணேசன் கருத்து வெளியிடும்போது, அவரை விமல்வீரவன்ஸ முட்டாள் என விமர்சிக்கின்றார். இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். மக்கள் பிரதிநிதிகள் உரிய வார்த்தைப் பிரயோகங்களை பயன்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றோம்.” – என்றார்.

ஆயிரம் ரூபா தொடர்பில் கருத்து வெளியிட்ட  அவர்,

” பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாகவே ஆயிரம் ரூபா வேண்டும். எல்லாவற்றையும் சேர்த்து ஆயிரம் வழங்கும் திட்டம் அவசியமில்லை. அடிப்படை சம்பளமாக ஆயிரம் ரூபா வேண்டும் என்றே அமரர். ஆறுமுகன் தொண்டமானும் குறிப்பிட்டிருந்தார். அவருக்கு நன்றிக்கடன் செலுத்தும் முகமாகவேனும் அரசாங்கம் அதனை பெற்றுக்கொடுக்க வேண்டும்.

ஆனால் தற்போதைய சூழ்நிலையில் கம்பனிகள் இதனை செய்யுமா என்பது கேள்விக்குறியே. எனவே, சம்பளம் கைக்கு கிடைக்கும்வரை நம்பமுடியாது. அதேபோல 2021 பட்ஜட்டில் மக்களுக்கு உரிய நிவாரணம் மற்றும் சலுகைகள் இல்லை.” என்று சுட்டிக்காட்டினார்.

நினைவேந்தல் நிகழ்வு தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு,

” பொதுவெளியில் ஒன்றுகூடி நினைவேந்தல் நடத்துவதற்கு நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. எனினும், தனிநபர்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி உயிரிழந்த உறவுகளை நினைவுகூரலாம். ஆனால், நீதிமன்ற தீர்ப்பையோ அல்லது தனிமைப்படுத்தல் சட்டத்தையோ சவாலுக்கு உட்படுத்தும் விதத்தில் செயற்படக்கூடாது.” – என்று பதிலளித்தார் இராதாகிருஷ்ணன் எம்.பி.

க.கிசாந்தன்

‘தொழிற்சங்க ரீதியில் அனைவரும் ஒன்றிணைவோம்’ – ஜீவன் அழைப்பு!

” தொழிலாளர்களைக் கட்டுப்படுத்துவதற்கு அல்ல, பெருந்தோட்டக் கம்பனிகளைக் கட்டுப்படுத்துவதற்காகவே கூட்டு ஒப்பந்தம் அமுலில் உள்ளது.  நாம் பிரிந்துநின்றால் அது கம்பனிகளுக்கே நன்மையாக அமைந்துவிடும். எனவே, தொழிலாளர்களின் நலன்களுக்காக தொழிற்சங்க ரீதியில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.” – என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

கொட்டகலை – நுவரெலியா பிரதான வீதியை இணைக்கும் தோட்டப்பாதைகளில் ஒன்றான கொட்டகலை கிறிலஸ்பாம், கே.ஜி.கே ஆகிய தோட்டங்களுக்கு செல்லும் பிரதான பாதையை புனரமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் இன்று (22.11.2020) கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே  அவர் மேற்கண்டவாறு கூறினார்.இது தொடர்பில் ஜீவன் தொண்டமான் மேலும் கூறியதாவது,

” பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள பாதைகள் புனரமைக்கப்படும் என தேர்தலின்போது நாம் உறுதியளித்தோம். அந்த உறுதிமொழி தற்போது நிறைவேற்றப்பட்டுவருகின்றது. இதற்கு அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ முழு ஒத்துழைப்பையும் வழங்கிவருகின்றார்.

விமர்சனங்களை மாத்திரம் முன்வைத்து, ஊடகங்களின் முன்னிலையில் வீராப்புபேசும் அரசியல் கலாச்சாரத்தை நான் பின்பற்றவில்லை. ஒரு அரசியல்வாதியாக அல்லாமல், மக்களுக்கு சேவையாற்றும் சிறந்த நிர்வாகியாக இருக்கவே நான் விரும்புகின்றேன். எனவே, என்னை வேலை செய்ய விடுங்கள், மக்களுக்கு நிச்சயம் நல்லது நடக்கும்.

பெருந்தோட்ட மக்களுக்கு வரவு – செலவுத்திட்டத்தில் எந்தவொரு ஒதுக்கீடும் இல்லை என முன்னாள் அமைச்சர் ஒருவர் குற்றஞ்சாட்டுகின்றார். பெருந்தோட்ட மக்கள் என்பவர்களும் இலங்கையர்களே, அவர்கள் தனித்துவிடப்பட்டவர்கள் அல்ல. எனவே, ஒட்டுமொத்த இலங்கையர்களுக்கே வரவு – செலவுத்திட்டத்தில் நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

ஆயிரம் ரூபா சம்பளம், மலையக பல்கலைக்கழகம், நுவரெலியா மாவட்டத்தில் மும்மொழி தேசிய பாடசாலை போன்ற நல்ல திட்டங்கள் பட்ஜட்டில் இருந்தும் எதிரணியிலுள்ள மலையக அரசியல்வாதிகள்இ அதனை ஆதரித்து வாக்களிக்கவில்லை. இதன்மூலம் மக்களைவிடவும் அவர்களுக்கு அரசியலே முக்கியம் என்பது உறுதியாகின்றது.

அதேவேளை, கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் மக்கள் மத்தியில் தவறான கருத்துகள் பரப்பட்டுவருகின்றன. உண்மையில் கூட்டு ஒப்பந்தமானது தொழிலாளர்களைக் கட்டுப்படுத்துவதற்கு அல்ல. மாறாக கம்பனிகளைக்கட்டுப்படுத்துவதற்காகவே அது அமுலில் உள்ளது.

ஆயிரம் ரூபாவுக்கான யோசனை வந்துள்ள நிலையில் தற்போது அடிப்படை சம்பளமாக ஆயிரம் வேண்டும் என கூறுகின்றனர். ஆனால் உண்மை எது என்பது மக்களுக்கு தெரியும். கட்சி ரீதியாக மக்கள் பிரிந்திருக்கலாம். சிலர் நடுநிலையாக இருக்கலாம். ஆனால் தொழிற்சங்க ரீதியில் நாம் ஒற்றுமையாக இருக்கவேண்டும். அப்போதுதான் கம்பனிகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கலாம். நாம் பிரிந்துநின்றால் அது கம்பனிகளுக்கே நன்மையாக அமைந்துவிடும்.  ” – என்றார்.

க.கிசாந்தன்

‘கொரோனா’வின் பிடிக்குள் இருந்து 14 ஆயிரம் பேர் மீண்டனர்!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 479 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 69 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் 5 ஆயிரத்து 619 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 83 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 771 ஆக அதிகரித்துள்ளது.

‘பெரிய சோலாங்கந்த தோட்டத்தில் துரை அடாவடி – தொழிலாளர்கள் எதிர்ப்பு’

மஸ்கெலியா – பெரிய சோலாங்கந்த தோட்டத்திலுள்ள துரை, தொழிலாளர்களை அடக்கி ஆள்வதற்கு முற்படுகின்றார் எனவும் , தொழில் ரீதியில் வன்முறைகளைப் பிரயோகிக்கின்றார் எனவும் தொழிலாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

அத்துடன் தொழிலாளர்களை பழிவாங்கும் நோக்கில் அவர்களால் பறிக்கப்படும் கொழுந்தைக்கூட அவர் நிராகரித்துவருவதாக கூறப்படுகின்றது. இன்றைய தினமும் (22.11.2020) அவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கொழுந்தை ஏற்றுக்கொள்ளமுடியாது என துரை குறிப்பிட்டதையடுத்து அதற்கு தொழிலாளர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர். இதனால் பதற்றநிலை உருவானது.

வழமைபோல தொழிலாளர்கள் இன்றும் வேலைக்குசென்றுள்ளனர். கொழுந்து பறித்துக்கொண்டுவந்து அவற்றை ட்ரெக்டர் வண்டியில் ஏற்றும்போது,

” கொழுந்து ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் இல்லை. அதனை ஏற்கமுடியாது.” என துரை குறிப்பிட்டுள்ளார். இதற்கு தொழிலாளர்கள் எதிர்ப்பை வெளியிட்டனர். இதனையடுத்து தோட்ட துரைக்கும், தலைவர்களுக்குமிடையில் சந்திப்பு நடைபெற்றது. அதன்பின்னர் கொழுந்தை ஏற்றுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

எனினும், குறித்த துரையின் இத்தகைய செயற்பாடுகளுக்கு எதிராக தொழிற்சங்க தலைவர்களிடம் முறையிடப்படும் என தொழிலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

தகவல் – நீலமேகம் பிரசாந்த்

சசிகலாவின் வாழ்க்கை வரலாறு படமாகிறது!

இயக்குநர் ராம்கோபால் வர்மா அடுத்ததாக சசிகலா எனும் பெயரில் திரைப்படத்தை எடுக்கப்போவதாக அறிவித்துள்ளார். அவரின் இந்த அறிவிப்பு புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

தனது டுவிட்டர் பக்கத்தில், மறைந்த தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவும் அவரது தோழி சசிகலாவும் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்திருக்கும் வர்மா,

“சசிகலா என்கிற திரைப்படத்தை இயக்க உள்ளேன். எஸ் என்கிற பெண்ணும், ஈ என்கிற ஆணும் ஒரு தலைவரை என்ன செய்தார்கள் என்பது பற்றிய கதை இது. தமிழக தேர்தலுக்கு முன் திரைப்படம் வெளியாகும்.” என குறிப்பிட்டுள்ளார்.

 

‘ருத்ரதாண்டவம் -2021’ – வடிவேலுவுக்கு பதிலாக சந்தானம்!

‘ருத்ரதாண்டவம்.’ சிவன் பூமிக்கு வந்தால் என்ன நடக்கும்? என்ற கருவை அடிப்படையாக வைத்து நகைச்சுவையாக கதை எழுதப்பட்டு இருந்தது. அது ஒரு நகைச்சுவை படம்.

சுமார் 40 வருடங்களுக்கு முன்பு திரைக்கு வந்த படம், ‘ருத்ரதாண்டவம்.’ அது ஒரு நகைச்சுவை படம். சிவன் பூமிக்கு வந்தால் என்ன நடக்கும்? என்ற கருவை அடிப்படையாக வைத்து நகைச்சுவையாக கதை எழுதப்பட்டு இருந்தது. சிவன் வேடத்தில் வி.கே.ராமசாமி நடித்து இருந்தார். சிவன் கோவில் பூசாரியாக நாகேஷ் நடித்து இருந்தார். கதைப்படி, நாகேஷ் வறுமையில் வாடுகிறார்.

ஒரு கட்டத்தில் அவருக்கு பெரிய தொகை தேவைப்படுகிறது. அதற்காக சிவன் முன்பு அழுது புலம்புகிறார். “உனக்கு தினம் பூஜை செய்கிறேனே…அதற்காக கண் திறந்து பார்த்து என் வேண்டுதலை நிறைவேற்றக் கூடாதா? உண்மையிலேயே நீ கடவுள்தானா? அல்லது வெறும் கல்லா?” என்று உரிமையோடு சிவனை திட்டுவார்.

அப்போது பெரும் புயல் போல் காற்று வீசும். நாகேஷ் முன்பு சிவன் (வி.கே.ராமசாமி) தோன்றுவார். “நீ எனக்கு பூஜை செய்வதால் கேட்டதை எல்லாம் கொடுக்க முடியுமா? வாழ்வும், வறுமையும் அவரவர் விதிப்படி நடக்கும். அதுதான் மனித வாழ்க்கை..” என்று வாழ்க்கையின் தத்துவத்தை எடுத்து கூறுவார். இது, ‘ருத்ரதாண்டவம்’ படத்தின் கதை.

இந்த கதையை தற்போதைய காலகட்டத்துக்கு ஏற்ப மாற்றி, அரசியல் நையாண்டி கலந்து நகைச்சுவையாக திரைக்கதை அமைத்து இருக்கிறார், டைரக்டர் சக்தி சிதம்பரம். இவர், ‘இங்லீஷ்காரன்,’ ‘கோவை பிரதர்ஸ்,’ ‘என்னம்மா கண்ணு,’ ‘சார்லி சாப்ளின்,’ ‘மகாநடிகன்’ உள்பட பல படங்களை தயாரித்து டைரக்டு செய்தவர். இப்போது யோகிபாபுவை கதை நாயகனாக நடிக்க வைத்து, ‘பேய் மாமா’ என்ற நகைச்சுவை படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படம் திரைக்கு வரயிருக்கும் நிலையில், சக்தி சிதம்பரம் அடுத்த படத்துக்கு தயாராகி விட்டார். ‘ருத்ரதாண்டவம்’ படத்தை ‘ருத்ரதாண்டவம் 2021’ என்ற பெயரில், மீண்டும் உருவாக்க அவர் திட்டமிட்டுள்ளார்.

வி.கே.ராமசாமி நடித்த கதாபாத்திரத்தில் சிவன் வேடத்தில் வடிவேலுவை நடிக்க வைக்கலாம் என்று ஒரு படஅதிபர் யோசனை சொன்னார். அவரிடம் வடிவேல் மீது தயாரிப்பாளர்கள் சங்கத்தில் சில வழக்குகள் இருப்பதால், அவரை நடிக்க வைக்க முடியாது என்பதை சக்தி சிதம்பரம் விளக்கினார். வடிவேலுவுக்கு பதில் சந்தானத்தை நடிக்க வைக்கலாம் என்ற முடிவுக்கு வந்து இருக்கிறார்கள்.

கொழும்பிலிருந்து பதுளை வந்த 8 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்!

கொழும்பிலிருந்து பதுளைக்குவந்த எட்டுப்பேர், அவரவர்களின் வீடுகளிலேயே சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக, பதுளை மாநகர பொதுசுகாதாரப் பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

பதுளை மாநகரசபைக்குற்பட்ட பதுளை பகலகம, கட்டுபெலல்லகம ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த மேற்குறிப்பிட்ட எட்டுப்பேர், கொழும்பில் தமது உறவினர் வீடுகள் மற்றும் தமது சொந்த தேவைகள் கருதி அரச திணைக்கங்கள் ஆகியவற்றுக்கு சென்றுள்ளனர்.

அந்நிலையில் அவர்கள் சென்றிருந்த பிரதேசங்கள்,கொரோனா தொற்று குறித்து தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக்கப்பட்டன. அதனால், இவர்கள் எட்டுப்பேருக்கும் சொந்த ஊரான பதுளைக்கு திரும்ப முடியாமல், உறவினர் வீடுகளிலேயே தங்கியிருந்தனர்.

தற்போது,கொழும்பிலிருந்து பதுளைக்கு பஸ் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதால், அவர்கள் அனைவரும் பதுளைக்கு வந்தனர். இதுகுறித்த தகவல்கள் பதுளை மாநகர பொது சுகாதாரப் பிரிவினருக்கு தெரியவரவே ,அவர்கள் விரைந்து, குறிப்பிட்ட எட்டுப்பேரையும், மேற்குறிப்பிட்ட பதுளை மாநகருக்குற்பட்ட பிரதேசங்களின் அவரவர்களின் வீடுகளிலேயே சுய தனிமைப்படுத்தியுள்ளனர்.

14 தினங்களுக்கு இவர்கள் சுய தனிமையிலிருக்கும் படியும், அக்காலப் பகுதியில் அவர்களின் வாழ்வாதாரத் தேவைக்கருதிபத்தாயிரம் ரூபாபெறுமதியானஉலர் உணவுப் பொதிகளும் வழங்கப்பட்டிருப்பதாகவும், இன்னும் ஒருசிலதினங்களில் அவர்களுக்குபி.சி. ஆர்.பரிசோதனைகள் செய்யப்படுமென்றும் பொதுசுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.

தனிமைப்படுத்தப்பட்ட இவ் எட்டுப்பேரில் ஒருபெண்ணும், ஏழு ஆண்களும் உள்ளடங்கியுள்ளனர்.

எம். செல்வராஜா, பதுளை

‘ விமல் என்ற துரோகிக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்’ – மனோ சாட்டையடி!

” விமல் வீரவன்சவுக்கு மண்டையில் முடியிருந்தாலும் மூளை இல்லை. அந்த துரோகி கட்சிக்கு மட்டுமல்ல கொழும்பு மாவட்ட மக்களுக்கும் இன்று துரோகம் இழைத்துள்ளார்.” – என்று  தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட எம்.பியுமான மனோ கணேசன் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” கொழும்பு மாவட்டத்தில் வாழும் மக்கள் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டுவருகின்றனர். எவராவது மரணித்தால் சவப்பெட்டி வாங்குவதற்குகூட திண்டாடவேண்டியுள்ளது. அவர்கள் இவ்வாறு துன்பப்படுகையில் மக்களை இழிவுப்படுத்தும் வகையில் விமல் கருத்து வெளியிடுகின்றார்.

விமல் வீரவன்சவின் வீட்டிலுள்ள நாயை பராமரிப்பதற்குகூட மாதமொன்றுக்கு 5 ஆயிரம் ரூபா செலவிடப்படுகின்றது என சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஆனால் கொரோனா தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை இழிவுபடுத்தும் வகையில் அவர் கருத்து வெளியிடுகின்றார்.

கொழும்பு மாநகரசபைக்கு சைக்கிளில் வந்த அவர் கட்சியைக் காட்டிக்கொடுத்துவிட்டு இன்று கோடிஸ்வரர் ஆகியுள்ளார். அடுத்த பொதுத்தேர்தலில் கொழும்பு மாவட்ட மக்கள் விமலுக்கு தக்க பாடத்தை புகட்டுவார்கள்.” – என்றார்.

கொழும்பு மாவட்டத்தில் 6,898 பேருக்கு கொரோனா – நுவரெலியாவில் 57!

கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2ஆவது அலையால் ஒக்டோபர் 4 ஆம் திகதியில் இருந்து நேற்றுவரை கொழும்பு மாவட்டத்தில் 6 ஆயிரத்து 868 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. நேற்று மாத்திரம் 292 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன், 2ஆவது அலைமூலம் நுவரெலியா மாவட்டத்தில் 5748 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இலங்கையில் மொத்த தொற்றாளர்கள் – 19,771

குணமடைவு – 13,590

உயிரிழப்பு – 83

சிகிச்சை – 6,098

மாவட்ட ரீதியில் தொற்றாளர்களின் விபரம்

சினிமா

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

செய்தி

மலையக தியாகி சிவனு லெச்சுமணன் நினைவேந்தல்….!

0
மலையகத் தமிழர்களுக்கான உரிமைப் போராட்டத்தின் உயிர்க்கொடையாளி மலையக தியாகி சிவனு லெச்சுமணனின், 49 ஆம் ஆண்டு நினைவுதினத்தில் செவ்வஞ்சலி நிகழ்வு எதிர்வரும் 11 ஆம் திகதி நடைபெறவுள்ளது. ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் ஏற்பாட்டில் அன்றைய...

யாழ்.வைத்தியசாலையில் தீ விபத்து: விசாரணை தீவிரம்!

0
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதான மருந்து களஞ்சியசாலையில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில், பல கோடி ரூபா பெறுமதியான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் தீக்கிரையாகியுள்ளன. இன்று அதிகாலை வேளையில் மருந்து...

தவெகவுக்கு விடுதலை சிறுத்தைகள் ஆதரவு: உறுதியானது 118!

0
தமிழகத்தில் ஆட்சியமைப்பதற்குரிய 118 என்ற அறுதிப்பெரும்பான்மையை தவெக இன்று மாலை உறுதிப்படுத்தியுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சி நிபந்தனையற்ற ஆதரவை உறுதிப்படுத்திய பின்னரே ஆட்சியமைப்பதற்குரிய சூழ்நிலை உறுதியாகியுள்ளது. சென்னை மீனம்பாக்கம் நட்சத்திர விடுதிக்கு சென்ற த.வெ.க. நிர்வாகி...