Home Blog Page 3815

ஹட்டன் போடைஸ் ஊடான டயகம வீதியை புனரமைக்க நடவடிக்கை

நீண்டகாலமாக குன்றும் குழியுமாகவும், அகலப்படுத்தாமலும் காணப்பட்ட ஹட்டன் போடைஸ் ஊடான டயகம வீதியை, இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் அபிவிருத்தி செய்வதற்கான பணிகள் இன்று (17) ஆரம்பமானது.

குறித்த வீதி நீண்ட காலமாக புனரமைக்கபடாமையினால் பல விபத்துகள் இடம்பெற்றன.

கடந்த 02 ம் திகதி காலை 7.00 மணியளவில் டயகமவிலிருந்து ஹட்டன் நோக்கி சென்ற தனியார் பஸ் ஒன்று போடைஸ் என்.சி தோட்டப்பகுதியில் விபத்துக்குள்ளானதில் 24 பாடசாலை மாணவர்கள் உட்பட 51 பேர் காயமடைந்து டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

அதனை தொடர்ந்து நோர்வூட் பிரதேச சபையின் தலைவர் ரவி குழந்தைவேலு மற்றும் அக்கரபத்தனை பிரதேச தலைவர் ஆகியோர் இணைந்து குறித்த பாதையூடான பஸ் போக்குவரத்துக்கும் பார ஊர்தி போக்குவரத்துக்கும் தடை விதித்தனர்.

அதனை தொடர்ந்து இராஜங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் வேண்டுகோளுக்கமைய டிக்கோயாவிலிருந்து மன்ராசி வரை சுமார் 15.5. கிலோ மீற்றர் தூரம் 450 மில்லியன் ரூபா செலவில் பாதையினை அகலப்படுத்தி காபட் இட்டு புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வீதி அபிவிருத்தி புனரமைப்பு பணிகளை போடைஸ் பகுதியில் வனத்துறை அமைச்சர் சிபி.ரத்நாயக்க, தோட்ட வீடமைப்பு சமூதாய உட்கட்டமைப்பு இராஜங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், கிராமிய வீதிகள் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜங்க அமைச்சர் நிமல் லான்சா, பாராளுமன்ற உறுப்பினர் எம்.ரமேஸ்வரன், முன்னாள் மத்திய மாகாணசபை உறுப்பினர்கள் பிரதேச சபை தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைத்தனர்.

இதேவேளை, அக்கரபத்தனையிலிருந்து போபத்தலாவ ஊடாக மெனிக்பாலமிற்கு செல்லும் 9 கிலோ மீற்றர் தூரம் கொண்ட வீதியை 186 மில்லியன் ரூபா செலவில் காபட் இட்டு புனரமைக்க இதன் போது பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

க.கிசாந்தன்

டில்லியை தோற்கடித்து பதிலடி கொடுக்குமா சென்னை?

சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கேப்பிட்ல்ஸ் அணிகள் இன்று மாலை பலப்பரீட்சை நடத்துகின்றன.

3 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை ஒருபோதும் இல்லாத வகையில் இந்த சீசனில் தடுமாற்றத்தை சந்தித்து வருகிறது. 8 ஆட்டத்தில் விளையாடி இருக்கும் சென்னை அணி 3 வெற்றி ( மும்பை, பஞ்சாப், ஐதராபாத் அணிகளுக்கு எதிராக ), 5 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்றுள்ளது.

சென்னை அணியின் பேட்டிங்கில் டுபிளிஸ்சிஸ், ஷேன் வாட்சன், அம்பத்தி ராயுடு ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். இருப்பினும் அவர்கள் ஒருசேர நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் தான் சென்னை அணியால் நிமிர முடியும்.

ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்கும் ஆற்றல் படைத்த டோனி நல்ல பார்மில் இல்லாமல் திணறுவது சென்னை அணிக்கு பின்னடைவாக இருக்கிறது.

பந்து வீச்சில் சாம் கர்ரன், ஷர்துல் தாகூர், தீபக் சாஹர், பியுஷ் சாவ்லா ஆகியோர் நன்றாக செயல்பட்டு வருகிறார்கள். கடைசி லீக் ஆட்டத்தில் சென்னை அணி ஐதராபாத்தை வென்றது. அந்த ஆட்டத்தில் சாம் கர்ரன் தொடக்க வீரராக களம் இறக்கப்பட்டதுடன், பல புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதுபோல் இந்த ஆட்டத்திலும் புதிய வியூகங்களை எதிர்பார்க்கலாம்.

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 8 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 2 தோல்வியுடன் (ஐதராபாத், மும்பை அணிகளிடம்) 12 புள்ளிகள் பெற்று கம்பீரமாக வலம் வருகிறது. அந்த அணியின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு ஒருசேர ஜோராக உள்ளது.

கடந்த லீக் ஆட்டத்தில் டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக பாதியில் வெளியேறினார். அவர் உடல் தகுதி பெற்று இந்த ஆட்டத்தில் ஆடுவாரா? என்பது தெரியவில்லை.

ஒருவேளை அவர் ஆடவில்லை என்றால் ஷிகர் தவான் கேப்டன் பொறுப்பை கவனிப்பார் என்று தெரிகிறது. ‘சென்னை அணியில் அனுபவம் வாய்ந்த சிறந்த வீரர்கள் உள்ளனர். சிறப்பு வாய்ந்த அந்த அணியை நாங்கள் எளிதாக எடுத்து கொள்ளமாட்டோம்’ என்று டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்தார்.

சென்னைக்கு எதிரான முந்தைய லீக் ஆட்டத்தில் டெல்லி அணி 44 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. அந்த நம்பிக்கையுடம் களம் இறங்கும் டெல்லி அணி வெற்றியை தொடர முயற்சிக்கும். அதேநேரத்தில் முந்தைய தோல்விக்கு பழிதீர்க்க சென்னை அணி போராடும். டெல்லி அணியில் ரபடா (18 விக்கெட்), நோர்டியா (10 விக்கெட்) ஆகியோர் தங்களது அதிவேக வேகப்பந்து வீச்சு மூலம் மிரட்டி வருகிறார்கள்.

கெலிவத்தை தோட்டத்தில் மீன் பிடி பூனையின் சடலம் மீட்பு

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெலிவத்தை தமிழ் வித்தியாலயத்திற்கு முன்பாக உள்ள தேயிலை மலையில் இன்று (17) மதியம் சுமார் இரண்டடி நீளமான மீன் பிடி பூனையின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது என பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத்தே குறித்த மீன் பிடி பூனையின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இந்த மீன் பிடி பூனை விஷ உணவு உட் கொண்டு உயிரிழந்துள்ளதா அல்லது எவரேனும் கொன்றுவிட்டனரா? என்பது தொடர்பாக பத்தனை பொலிஸார் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதன் உடலில் இரண்டு காயங்கள் காணப்பட்டன. இது மனிதர்களுக்கு தீங்கு செய்யும் விலங்கு அல்ல என வன விலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.
குறித்த மீன் பிடி பூனையின் சடலத்தை நல்லதண்ணி வனஜீவராசிகள் எடுத்து சென்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

‘நோர்வூட் எல்லைக்குள் வெளி வியாபாரிகளை அனுமதிக்க வேண்டாம்’

கொரோனா வைரஸ் தாக்கத்தை கருத்திற்கொண்டு, நோர்வூட் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளுக்கு வெளி வியாபாரிகள் வருவதற்கு தடைவிதிக்கப்படவேண்டும் என்று நோர்வூட் பிரதேச சபை உறுப்பினர் சிவநேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் கூறியதாவது,

” தீபாவளி பண்டிகையை முன்னிட்டு , வியாபார நடவடிக்கைகளுக்காக வெளி பிரதேசங்களில் இருந்த நோர்வூட்வரும் வியாபாரிகளுக்கு தற்காலிக தடைவிதிக்கப்படவேண்டும். கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து நாட்டையும், மக்களையும் பாதுகாக்கவேண்டிய பொறுப்பு மக்கள் பிரதிநிதியாகிய எமக்கு இருக்கின்றது.

சபையிலும் இந்த கோரிக்கையை விடுத்தேன். இதனை ஏற்றுக்கொண்ட உறுப்பினர்கள், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடைபெறும் வர்த்தக செயற்பாடுகளை சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றியே முன்னெடுக்கப்படவேண்டும் எனக்குறிப்பிட்டனர்.” – என்றார் சிவநேசன்.

20 இற்கு ஆதரவு திரட்டவா ரிஷாட்டை குறிவைக்கிறது அரசாங்கம்?

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு ஆதரவை பெற்றுக்கொள்வதற்காகவா ரிஷாட் பதியுதீனை அரசாங்கம் குறிவைத்துள்ளது என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது – என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

நுவரெலியாவில்  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” புத்தளத்திலிருந்து மன்னாருக்கு வாக்காளர்களை ரிஷாட் பதியுதீன் சட்டப்பூர்வமாகவே அழைத்துசெல்லப்பட்டுள்ளார். அப்படியிருந்தும் அவரை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகின்றது. இது முற்றிலும் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாகும். இதனை அனுமதிக்கமுடியாது.

20 இற்கு எதிர்ப்பு வலுத்துவரும் நிலையில் ரிஷாட் தரப்பின் ஆதரவை பெற்றுக்கொள்வதற்காகவா ரிஷாட்டை கைது செய்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது என்ற சந்தேகம் எழுகின்றது.” எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதேவேளை, முல்லைத்தீவில் ஊடகவியலாளர்கள் இருவர் தாக்கப்பட்ட சம்பவத்தையும் அவர் வன்மையாகக் கண்டித்தார்.

உலகளவில் 3 கோடியே 95 லட்சம் பேருக்கு கொரோனா!இலங்கையிலும் எகிறும் எண்ணிக்கை!!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 லட்சத்து 9  ஆயிரத்தை கடந்தது.

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

தற்போதைய நிலவரப்படி, 3 கோடியே 95  லட்சத்து 86 ஆயிரத்து 909 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வைரஸ் பரவியவர்களில் 88 லட்சத்து 19 ஆயிரத்து 204 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 71 ஆயிரத்து 469 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனாவில் இருந்து 2 கோடியே 96 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர்.

அதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 354 ஆக அதிகரித்துள்ளது.

முரளிக்கு ஆதரவாக ராதிகா களத்தில்!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிராக வலுத்து வரும் குரல்களுக்கு பிரபல தமிழ் திரைப்பட நடிகை ராதிகா சரத்குமார் எதிர்வினையாற்றியிருக்கிறார்.

இந்த விவகாரத்தில் கடந்த மூன்று தினங்களாக விஜய் சேதுபதி, தமிழ் இன வெறுப்பாளரான முத்தையா முரளிதரனின் கதாபாத்திரத்தில் நடிக்கக் கூடாது என்று பிரபல திரைப்பட இயக்குநர் பாரதிய ராஜா, கவிஞர் தாமரை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகர் விவேக், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்து கருத்துகளை வெளியிட்டனர்.

தமிழக அமைச்சர் கடம்பூர் ஜனார்த்தனனும் இந்த விவகாரத்தில் விஜய் சேதுபதி தமிழ் உணர்வுக்கு மதிப்பளிக்காமல் போனால் அது அவரது எதிர்காலத்துக்கு நல்லது அல்ல என்று கூறியிருந்தார். இந்த நிலையில், நடிகை ராதிகாவின் கருத்து வெளி வந்துள்ளது.

இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராதிகா, “முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுக் கதையில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது’ என்று கூறுபவர்களுக்கு வேறு வேலையில்லையா? ஏன் இவர்கள் “சன் ரைஸர்ஸ்” குழுவின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் முத்தையாவை நீக்கும்படி கோரவில்லை? அது அரசியல் பின்புலமுள்ளது என்பதாலா..?

விஜய் சேதுபதி ஒரு நடிகர். நடிகரை மட்டுமே கட்டுப்படுத்தக் கூடாது. விஜய் சேதுபதி, விளையாட்டு இரண்டையும் முட்டாள்தனமாக அணுகக் கூடாது..” என்று குறிப்பிட்டுள்ளார்.

ராதிகாவின் இந்த டிவிட்டர் பதிவு வைரலானவுடன் ஒன்றரை மணி நேரம் கழித்து மீண்டும் இரண்டு இடுகைகளை அவர் மீண்டும் தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில் “சன் டிவி மற்றும் சன் ரைசர்ஸ் உரிமையாளர்கள் வலுவான அரசியல் பின்புலத்துடன் இருந்தாலும் தங்களுடைய அரசியலுடன் விளையாட்டு மற்றும் சினிமா துறைகளை கலக்காமல் தொழில்முறையில் அவற்றை தனியாகக் கையாண்டு வருகிறார்கள். அதுபோல, நமது சினிமா துறையும் அரசியலலில் இருந்து விலகியிருந்தால் என்ன..?” என்று ராதிகா கேள்வி எழுப்பினார்.

பிறகு மூன்றாவதாக பதிவிட்ட டிவிட்டில், “நான் அந்த ட்வீட்டை பதிவிட்டது சர்ச்சைகளை உருவாக்குவதற்காக அல்ல. நமது திரையுலகையும், சக கலைஞர்களையும் ஆதரிப்பதற்காகத்தான். அதனால்தான் நடுநிலை மற்றும் தொழில்முறையுடன் அணுகும் போக்குக்கு சாட்சியாக சன் ரைசர்ஸ் பெயரை இணைத்து எழுதினேன்,” என்று ராதிகா கூறியுள்ளார்.

‘கொரோனா தாக்கம்’ – பாடசாலைகளில் நவராத்திரி விழா நடத்த வேண்டாம்!

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக மத்திய மாகாணத்திலுள்ள சகல தமிழ்மொழிமூலமான பாடசாலைகளிலும் நவராத்திரி விழா பூஜைகளையோ அல்லது விழாக்களையோ, அது தொடர்பான  ஒன்றுகூடல்களையோ நடத்த வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய மாகாண கல்விச் செயலாளரின் பணிப்புரையில் மத்திய மாகாண மேலதிக மாகாணக் கல்வி பணிப்பாளர் திருமதி. சத்தியேந்திராவால், சகல வலயக் கல்விப் பணிப்பாளர்கள் ஊடாக அதிபர்களுக்கு கடிதம்மூலம் இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய பாடசாலை அதிபர்களும், பாடசாலை நிர்வாகங்களும் செயற்படவேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

வருடாந்தம் நாடு முழுவதுமுள்ள தமிழ் பாடசாலைகளில் நவராத்திரி விழா அனுஷ்டிக்கப்படுவது வழமையான நடைமுறை. எனினும், கொரோனா வைரஸ் அச்சத்தால் நாட்டில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

பண்டாரவளையில் ஐந்து சிறார்கள் தப்பியோட்டம் – காப்பக பொறுப்பாளர் கைது!

சிறுவர் காப்பகத்தின் 5 சிறுவர்கள் அங்கிருந்துதப்பிச் சென்றுள்ளனர். இதற்கு உதவிய காப்பக உதவிப் பொறுப்பாளர் பண்டாரவளைப் பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.பண்டாரவளை சிறுவர் காப்பகத்திலேயே, நேற்று இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பெற்றோரினால் கைவிடப்பட்ட மற்றும் நீதிமன்ற உத்தரவிற்கமைய இக்காப்பகத்தில் தடுத்துவைக்கப்பட்ட சிறுவர்களில் ஐவரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளனர்.

இது குறித்த தகவல் கிடைத்ததும் பண்டாரவளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சந்தன ஜயதிலக்க தலைமையிலான குழுவினர் விரைந்து,சிறுவர்களை மீட்டதுடன், இச் சிறுவர்கள் தப்பிச் செல்லஉதவியகாப்பக உதவிப் பொறுப்பாளரும் கைதுசெய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட காப்பக உதவிப் பொறுப்பாளர் தற்போது விசாரணைக்குற்படுத்தப்பட்டுள்ளார். விசாரணைகள் நிறைவுற்றதும், காப்பக உதவிப் பொறுப்பாளர் பண்டாரவளை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவாரென்று, பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிசந்தன ஜயதிலக்கதெரிவித்தார்.

எம். செல்வராஜா

’20’ இற்கு 4 பிரதான கட்சிகள் கடும் எதிர்ப்பு

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் எதிர்வரும் 21, 22 ஆம் திகதிகளில் விவாதம் நடைபெறவுள்ளது. 22 ஆம் திகதி இரவு வாக்கெடுப்பும் நடத்தப்படவுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று (16) நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் தொடர்பான கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகளின் தலைவர்களும் இக்கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.

20 தொடர்பில் 5 நாட்களாவது விவாதம் அவசியம் என ஆரம்பத்தில் கோரியிருந்த எதிரணி தலைவர்கள் இறுதியில் மூன்று நாட்களாவது நடத்தப்படவேண்டும் என வலியுறுத்தினர். எனினும், இரண்டு நாட்களை மாத்திரமே விவாதத்துக்கு வழங்குவதற்கு அரசாங்கம் இணக்கம் வெளியிட்டுள்ளது.

இதன்படி 21, 22  நாட்களிலும் முற்பகல் 10 மணி முதல் இரவு 7.30வரை விவாதம் நடைபெறவுள்ளது. 22 ஆம் திகதி மாலை முதல் வாக்கெடுப்பு நடத்தப்படும்.  குழுநிலை விவாதத்தின்போது திருத்தங்களை அரசாங்கம் மேற்கொள்ளவுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி, இலங்கை தமிழ் அரசுக்கட்சி, தேசிய மக்கள் சக்தி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகியன எதிராக வாக்களிக்கவுள்ளன.

ஐக்கிய தேசியக்கட்சி, எமது மக்கள் சக்தி ஆகிய கட்சிகள் இன்னும் உறுப்பினர்களை நாடாளுமன்றத்துக்கு நியமிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

செய்தி

“பாரதியன்ஸ் பிரிமியர் லீக்” கிரிக்கெட் போட்டி!

0
பதுளை பாரதி மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் "பாரதியன்ஸ் பிரிமியர் லீக்" கிரிக்கெட் போட்டி! பதுளை கல்வி வலயத்திற்குட்பட்ட பாரதி மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கம் முதன்முறையாக ஏற்பாடு செய்துள்ள...

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் மீது சாணம் வீச்சு!

0
நிதி அமைச்சின் செயலாளரின் வீட்டுக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் மீது சாணம் வீச்சு! நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷண சூரியப்பெருமவின் பத்தரமுல்ல, பெலவத்த பகுதியில் உள்ள வீட்டுக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்மீது சிலரால் முட்டை...