Home Blog Page 3816

22 மாலை வாக்கெடுப்பு – ’20’ நிறைவேற்றுவதில் அரசுக்கு திண்டாட்டம்

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டமூலத்தை நிறைவேற்றிக்கொள்வதற்கான பெரும்பான்மையை திரட்டுவதில் அரசாங்கம் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. இதனால் ஆரம்பத்தில் எதிர்ப்பார்த்ததுபோல் அல்லாமல் பல திருத்தங்களுடனேயே ‘20’ ஐ நிறைவேற்றவேண்டிய நிலை ஏற்பட்டது.

நடைபெற்றுமுடிந்த பொதுத்தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு போனஸ் ஆசனங்கள் சகிதம் 145 ஆசனங்கள் கிடைத்தன. ஆளுங்கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள ஈ.பி.டி.பிக்கு இரு ஆசனங்களும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கு ஒரு ஆசனமும், தேசிய காங்கிரசுக்கு ஒரு ஆசனமுமாக ஆளுங்கூட்டணி வசம் 149 எம்.பிக்கள் இருக்கின்றனர்.

இதில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு வாக்கெடுப்பதில் சர்ச்சை நீடிக்கின்றது, சபாநாயகரும் நடுநிலை வகிக்ககூடும். எனவே, மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை (150) பெறுவதற்கு கட்டாயம் எதிரணி எம்.பிக்கள் சிலரின் ஆதரவு அவசியம். அதற்கான நடவடிக்கையில் தற்போது பஸில் ராஜபக்ச ஈடுபட்டுள்ளார்.

அத்துடன், அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலத்தை கைவிடுமாறு கத்தோலிக்க ஆயர்கள் பேரவை வலியுறுத்தியுள்ளதால் ஆளுங்கட்சியில் உள்ள கத்தோலிக்க எம்.பிக்களும் ‘20’ விடயத்தில் தாம் முன்பு எடுத்திருந்த முடிவை மீள்பரிசீலனை செய்யவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மறுபுறத்தில் விமல்வீரவன்ஸ உள்ளிட்ட ஆளுங்கட்சி உறுப்பினர்களும் திருத்தங்கள் முன்வைத்துள்ளனர். எனவே, ஆரம்பத்தில் எதிர்ப்பார்த்ததுபோல் அல்லாமல் பல திருத்தங்களுக்கு மத்தியிலேயே அரசு ‘20’ ஐ நிறைவேற்றும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இது அரசுக்கான பின்னடைவாகவே கருதப்படுகின்றது.

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் சட்டவியாக்கியானம் எதிர்வரும் 20 ஆம் திகதி சபாநாயகரால் நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்படும். 21,22 இல் விவாதம் நடத்தப்பட்டு 22 மாலை வாக்கெடுப்பு நடத்தப்படும்.

‘தமிழினத்திற்கு எதிரானவன் போல என்னை சித்தரிப்பது வேதனை அளிக்கிறது’

“என்னை தமிழினத்திற்கு எதிரானவன் போல சித்தரிப்பது வேதனை அளிக்கிறது.” – என்று இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

முத்தையா முரளிதரனின் கிரிக்கெட் வாழ்க்கையை சித்தரிக்கும் வகையிலான ‘800’ படத்துக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. அப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்ககூடாது எனவும் வலியுறுத்தப்பட்டுவருகின்றது.

இந்நிலையில் முரளிதரன் இன்று (16) விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ளார். அவ்வறிக்கை வருமாறு,

20 தொடர்பில் சபையில் இரு நாட்கள் விவாதம்!

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் பாராளுமன்றத்தில் இரு நாட்கள் விவாதம் நடைபெறவுள்ளது.

இதன்படி எதிர்வரும் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் குறித்த விவாதத்தை நடத்துவதற்கு கட்சி தலைவர்கள் கூட்டத்தில் இன்று இணக்கம் எட்டப்பட்டுள்ளது.

சபநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று நடைபெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்திலேயே இது பற்றி கலந்துரையாடி முடிவெடுக்கப்பட்டுள்ளது.

‘நுவரெலியாவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு அரச உதவிகள் இல்லை’

ரிஷாட் பதியுதீனை கைது செய்வதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கையானது அரசியல் பழிவாங்கலாகும் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவருமான நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

அத்துடன், கொரோனா வைரஸ் தாக்கத்தையடுத்து நுவரெலியாவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு அரசாங்கத்தின் சார்பில் உரிய உதவிகள் இன்னும் வழங்கப்படவில்ல எனவும் தெரிவித்தார்.

நுவரெலியாவில் இன்று (16.10.2020) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” மன்னாரில் இருந்து இடம்பெயர்ந்து புத்தளத்தில் தங்கியுள்ள வாக்காளர்களுக்கு வாக்குரிமையை வழங்கும் நோக்கில், தேர்தல் காலங்களில் புத்தளத்தில் இருந்து அவர்களை மன்னாருக்கு அழைத்து செல்வது வழமை. அந்த நடவடிக்கை சட்டபூர்வமாகவே செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியின்போதும் இடம்பெற்றுள்ளது.

அப்படியிருந்தும் ரிஷாட்டை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. ராஜித சேனாரத்தன, சம்பிக்க ரணவக்க ஆகியோரை கைது செய்து அரசியல் ரீதியில் பழிவாங்கல்களை தீர்த்துக்கொண்ட அரசாங்கம், அதன் அடுத்தக்கட்டமாக ரிஷாட்டையும் இலக்குவைத்துள்ளது. அரசியல் பழிவாங்கல் செயற்பாட்டை ஒருபோதும் அனுமதிக்கமுடியாது.

அதேவேளை, முல்லைத்தீவில் ஊடகவியலாளர்கள் இருவர் தாக்கப்பட்டுள்ளனர். அந்த 1சம்பவத்தை வன்மையாகக்கண்டிக்கின்றோம். ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்பட்டால்தான் அந்த நாட்டில் ஜனநாயம் மற்றும் இறையாண்மை பாதுகாக்கப்படும். எனவே, இத்தாக்குதலுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக உரிய சட்டநடவடிக்கை எடுக்கப்படவேண்டும். அதுமட்டுமல்ல ஊடகவியலாளர்களை பாதுகாக்கவேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பும்கூட.

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு நாட்டில் எதிர்ப்புகள் வலுத்துள்ளன. மதத் தலைவர்களும், ஆளுங்கட்சி எம்.பிக்கள்கூட எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். எனவே, நாமும் அதனை ஆதரிக்க தயாரில்லை. தற்2போது 20 பற்றி கதைப்பது பயன் இல்லை. வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்தி நாட்டை பாதுகாப்பதற்கு 20 ஐ கைவிடுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

கொரோனா வைரஸ் தாக்கத்தால் நுவரெலியா மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு அரசாங்கத்தால் உரியவகையில் உதவித்திட்டங்கள் இன்னும் வழங்கப்படவில்லை.” – என்றார்.

க.கிசாந்தன்

நாட்டில் மேலும் 61 பேருக்கு கொரோனா தொற்று

இலங்கையில் மேலும் 61 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுடன் நெருங்கிப் பழகிய 58 ​பேருக்கும் மற்றும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்ட 3 பேருக்கும் இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.

இதன்படி மினுவங்கொடை கொரோனா கொத்தணியில் இதுவரை பதிவான கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,850 ஆக அதிகரித்துள்ளது.

அதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் ஐவர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 3,385 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் ஆயிரத்து 846 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

‘நாயாளர்கள்’ – பதுளை வைத்தியசாலையில் தமிழ் மொழி கொலை!

பதுளை வைத்தியசாலையில் நோயாளர்கள் கவனத்திற்கெடுத்துக் கொள்ளப்படும் வகையிலான பல்வேறு அறிவுறுத்தல்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் அவ் அறிவுறுத்தல்கள் தவறான வார்த்தைப் பிரயோகங்களைப் குறிப்பதினால் நோயாளர்கள் பெரும் அசௌகரியங்களுக்குள்ளாகி வருகின்றனர்.

இவ்விடயங்களை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டுவருவதாக பதுளைமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமார், பதுளை மாவட்ட சுகாதாரப் பணிப்பாளருக்கு அனுப்பியுள்ள அவசரக் கடிதமொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

இக்கடிதத்தின் பிரதிகள்,  ஏ.கே.எம். முசாம்மில், ஊவா மாகாண சுகாதாரப் பணிப்பாளர் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளன.

தொடர்ந்து அக்கடிதத்தில்  “ ஊவாமாகாணத்தில் மிகப்பிரதான அரசினர் மருத்துமனையாக இருந்துவருவது, பதுளைஅரசினர் மருத்துவமனையாகும். இம் மருத்துமனையில் பெருமளவிலான நோயாளர்கள் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சைகளைப் பெற்றுச் செல்லவும், கடினமான நோயாளர்கள் தங்கிச் சிகிச்சைபெற்றும் வருகின்றனர்.

அத்துடன் பதுளை மாவட்டமென்பது தமிழ் பேசும் மக்கள் கணிசமானளவில் வாழ்ந்துவரும் ஒருபிரதேசமாகும். இம் மாவட்டம் பெருந்தோட்டங்கள் பலவற்றை சூழ்ந்திருப்பதினால், தமிழ் மக்கள் அநேகமானளவிலும் இருந்து வருகின்றனர்.இத்தகையவர்களுக்கு சிங்கள மொழியில் போதியபரிச்சியமில்லை. தமிழ் மொழியினைமட்டுமே  இம்மக்கள் தெரிவித்துள்ளனர்.

ஆகவே இம் மருத்துவமனையில் பல்வேறு வகையிலான சிகிச்சைகள்இநோய்கள், நோயாளர்கள் அனுமதிக்கப்படும் விதிமுறைகள்இமருந்துவகைகளைப் பெற்றுக்கொள்ளல், நோயாளர்கள் அமர்ந்திருக்கும் இடங்கள், மருத்துவமனையில் தங்கிசிகிச்சைப் பெறும் நோயாளர்களைபார்வையிடும் நேரங்கள் மற்றும் அது தொடர்பான சுகாதார விதிமுறைகள் ஆங்காங்கே காட்சிப்படுத்தப்பட்டிருந்தபோதிலும் அவைகள் தனிச்சிங்களமொழி மூலமும், பெரும்பாலான அறிவுறுத்தல் காட்சிப் பலகைகளில் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும் சிங்கள மொழியில் மட்டும் சரியாகவும் தமிழ் மொழியில் முற்று முழுதாக தவறானவார்த்தைப் பிரயோகங்களினாலும், ஆங்கில மொழி உச்சரிப்பிலும் பிழையாகவும் குறிப்பிடப்பட்டுள்ளன.

இதனால் சிங்கள மொழிபுரியாத தமிழ் மொழிமட்டும் தெரிந்தநோயாளர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கிய வண்ணமுள்ளனர். இது குறித்து மருத்துவமனை ஊழியர்களிடம் வினவினாலும் உரிய பதில் கிடைக்காமல், தமிழ் நோயாளர்கள் தரக்குறைவாக நடாத்தப்பட்டுவருகின்றனர்.

வெளிநாடுகளைச்சேர்ந்த உல்லாச பிரயாணிகள் தேவைகருதி  இம் மருத்துவமனையினை நாடினாலும் இதேநிலையினையே அவர்களும் எதிர்நோக்கிவருகின்றனர்.

ஆகவே தயவுசெய்து மேற்படிவிடயங்களை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டுவருகின்றேன். சகல நோயாளர்களும் பயன்பெறும் வகையில்  இம் மருத்துவமனையைமாற்றியமைக்கும்படிகேட்டுக்கொள்கின்றேன்.

நோயாளர் காத்திருக்கும் பகுதி

நாயாளர்கள் பகுதி என்ற வகையிலும் மலசல கூடத்தை நோக்கில் ஆண்கள் என்பதற்கு பெண்கள் பகுதியென்றும் பெண்கள் என்பதற்கு ஆண்கள் பகுதியென்றும் மிகத் தவறாககுறிப்பிடப்பட்டிருக்கும் ஒருசிலவற்றைமட்டும் தங்களின் கவனத்திற்குமுன்வைக்கின்றேன்.

5,244 பேருக்கு கொரோனா – 3,385 பேர் குணமடைவு! 1,846 பேருக்கு சிகிச்சை!!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் ஐவர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 3,385 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் ஆயிரத்து 846 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை, இலங்கையில் கடந்த மார்ச் மாதம் முதல் இற்றைவரை கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 224 ஆக அதிகரித்துள்ளது.

இதில் மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலை கொத்தணி பரவலாலேயே அதிகளவானோருக்கு வைரஸ் தொற்றியுள்ளது. மினுவாங்கொட கொத்தணிபரவல்மூலம் இதுவரையில் ஆயிரத்து 710 இற்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

மரம் முறிந்து விழுந்ததால் பலியான தாய்மாருக்கு முற்போக்கு கூட்டணி அஞ்சலி!

பலாங்கொடை வலவ்வ தோட்டத்தில் மரம் முறிந்து விழுந்ததால் பலியான பெண் தொழிலாளர்கள் இருவருக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பாக இன்று(16 ) இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான சோ. ஸ்ரீதரன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர் சந்திரகுமார், தொழிலாளர் தேசிய சங்கத்தின் உதவிச் செயலாளர் கல்யாணகுமார் உட்பட முக்கியஸ்தர்கள் இந்த அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இதேவேளை உயிரிழந்த குடும்பத்தினருக்கும் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்ற குடும்பத்தினருக்கும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரத்தின் ஆலோசனைக்கேற்ப தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஊடாக நிதியுதவி வழங்கப்பட்டது.

புதிய சம்பள கட்டமைப்புடன் அரசுடன் பேச்சு நடத்துவதாக பெருந்தோட்ட சங்க புதிய தலைவர் பாத்திய புலுமுல்ல தெரிவிப்பு

புதிய சம்பள கட்டமைப்பு தேவையை கவனத்தில் கொண்டு அதற்காக புதிய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக புதிய தலைவர் பாத்திய புலுமுல்ல தெரிவிப்பு

அல்லது புதிய சம்பள கட்டமைப்பு தேவை குறித்து புதிய அரசின் கவனத்திற்கு கொண்டு வரும் நோக்கில் புதிய தலைவர், இலங்கை பெருந்தோட்ட சங்கத்தின் 166ஆவது வருடாந்த பொதுக் கூட்டத்தில் தெரிவிப்பு

அனைத்து தோட்டப் பிரிவையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பெருந்தோட்ட தொழிலாளர்களின் முக்கிய பிரச்சினையான சம்பள உயர்வு திருத்தம் குறித்து மட்டுமன்றி அரசினால் முள் தேங்காய் செய்கை தொடர்பில் விதிக்கப்பட்டுள்ள தற்காலிக தடைகள் குறித்தும் எதிர்வரும் வருடத்தின் ஆரம்பத்திலிருந்து இலங்கை பெருந்தோட்ட தொழிலாளர்களின் சங்கத்திற்கு (PAC) மிகுந்த சவால்கள் நிறைந்த மற்றும் தீர்மானம் மிக்க எதிர்காலத்தை எதிர்நோக்க வேண்டி ஏற்படுமென அண்மையில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இலங்கை பெருந்தோட்ட சங்கத்தின் 166ஆவது வருடாந்த கூட்டத்தில் உரையாற்றுகையில் அதன் புதிய தலைவர் பாத்திய புலுமுல்ல தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வின் போது உரையாற்றிய தலைவர் புலுமுல்ல, இந்த தீர்மானம் மிக்க பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் மற்றும் எதிர்கால பெருந்தோட்டத் துறை குறித்து புதிய கண்ணோட்டத்தை உருவாக்கும் நோக்கில் இலங்கை பெருந்தோட்ட சங்கம் தற்போது புதிய அரசு மற்றும் அந்த விடயங்களுக்கு பொறுப்பான அமைச்சர்களுடனும் மிகவும் நெருக்கமாக இருந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

மிக முக்கியமாக பாரிய பிரச்சினைகளை மேலும் காலம் தாழ்த்தாமல் தீர்க்க வேண்டுமெனவும், அனைத்து தரப்பினரும் தமது பேதங்களை மறந்து பெருந்துதோட்டத் துறையின் மேம்பாட்டிற்காக ஒத்துழைப்புடன் நடவடிக்கைகளை மேற்கொண்டு இவ்வாறான பிரச்சினைகளை நிரந்தரமாக தீர்க்க வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில் 150 வருட பழைமை வாய்ந்த இந்த நன்மதிப்பு பெற்ற துறையின் சுபீட்சமான எதிர்காலத்தை நோக்கி முன்னெடுத்துச் செல்வதற்கு தேவையானது நிலையான சம்பள வியூகத்தை நடைமுறைப்படுத்துவதாகும் என தெரிவித்தார்.

“எமது கண்ணோட்டமானது தோட்டத் தொழிலாளர்களுக்கு நன்மையான மாற்று சம்பளத் திட்டம் குறித்த நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கும் பின்னர் எதிர்கால சந்ததியினருக்காக எமது துறையில் தொடர்ச்சியாக கொண்டு நடத்திச் செல்வதாகும். தோட்டத்திலிருந்து நகர்புரங்களுக்கு இளைஞர் யுவதிகள் இடம்பெயர்கின்றமை தொழிலாளர்களின் துரிதமான பற்றாக்குறைக்கு காரணமாக இருப்பதுடன் இந்த சிக்களைத் தீர்ப்பது மற்றும் எமது துறையை மேம்படுத்துவதற்காக மாற்று முறையில் சிந்திக்க வேண்டியுள்ளது.” என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த நீண்டகால தடைகளிலிருந்து மீண்டு உச்ச அளவில் சிறந்த நன்மையை பெற்றுக் கொள்வதற்காக புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்வது முக்கியமானதாகும் என சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் தேயிலை வளர்ப்பு வர்த்தக ரீதியாக மேற்கொள்வதற்கு 13 வருடங்களுக்கு முன்னர் அதாவது 1854ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இலங்கையின் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் சங்கம் ஒன்றரை நூற்றாண்டு முழுவதும் இலங்கையின் பெருந்தோட்டத் துறை மட்டுமன்றி தேசிய பொருளாதாரத்திற்கும் பாரிய பங்களிப்பினை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

23 பிரதேசத்திலுள்ள பெருந்தோட்ட நிறுவனங்கள் உள்ளிட்ட 180க்கும் அதிகமான உறுப்பினர்கள் அங்கம் வகிக்கும் தோட்டத் தொழிலாளர்கள் சங்கமானது இலங்கையில் தேயிலை, றப்பர், ஃபாம் எண்ணெய் மற்றும் தெங்கு போன்ற தோட்ட போகங்களில் 40%க்கும் அதிகமான அளவில் அதனுடன் தொடர்புடைய 332 தொழிற்சாலைகளை நிர்வகித்து வருகின்றது. அத்துடன் இதன் கீழ் நேரடியாக இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான வேலை வாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளதுடன் அதனுடன் தொடர்புடைய மறைமுக வேலை வாய்ப்புக்கள் மூலம் ஒட்டுமொத்தமாக பத்து இலட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு அவர்களது வாழ்வாதாரத்தை திட்டமிடுவதற்கு தோட்டத் தொழிலளர் சங்கத்தால் முடிந்துள்ளது.

அதன் இணை நிறுவனங்களை கவனிக்கும் இடத்து மாவட்ட பெருந்தோட்ட சங்கமானது விசேட பங்கொன்றை ஆற்றியுள்ளது. விசேடமாக தோட்ட நிறைவேற்று தனிநபர் மேம்பாடு குறித்து உள்நாட்டு அதிதிகளை அழைத்து தொடர்ந்து நடத்தப்படும் வேலைத் திட்டங்கள் பாரிய வரவேற்பைப் பெற்றுள்ளன.

ஆரம்பத்திலிருந்தே இலங்கை தோட்டத் தொழிலாளர்கள் சங்கம் நாட்டில் பெருந்தோட்டத் துறைக்காக பாரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. 1857இல் அமைக்கப்பட்ட மலையக ரயில் பாதை வேலைத் திட்டத்தின் நான்கில் ஒரு பங்குகிற்கான செலவினை மேற்கொள்ளல், 1894இல் முதலாவது தேயிலை மேம்பாட்டு வேலைத் திட்டத்தை மேற்கொண்டதை போன்றே 1925இல் தேயிலை பரிசோதனை நிறுவனத்தை அமைப்பதற்காக பாரிய ஒத்துழைப்புக்களை வழங்கியமை பிரதானமாக கருதப்படுகிறது. அத்துடன் தற்போதைய சவால்கள் தொடர்பில் இலங்கையின் பெருந்தோட்ட சங்கம் தீர்க்கமான பங்கினை மேற்கொண்டுள்ளது.

இலங்கையில் பெருந்தோட்ட சங்கத்தின் தோட்ட முகாமைத்துவ கமிட்டி 21 பிரதேச தோட்ட கமிட்டிகளில் பிரதம நிறைவேற்று அதிகாரிகளைக் கொண்டுள்ளது. பெருந்தோட்ட துறையில் பிரச்சினைகள் மற்றும் தேவைகளை ஆராய்வதற்காக இந்த குழு எப்பொழுதும் ஒன்று கூடுவதுடன், சம்பளம், உற்பத்தி திறன், பயிர் பல்வகைப்படுத்தல் மற்றும் ஏனைய தொடர்புபட்ட விவசாய நடவடிக்கைகள் உள்ளிட்ட இலங்கையின் பெருந்தோட்ட துறையின் தொடர்ச்சியான சாத்தியக் கூறுகளை உறுதிப்படுத்தி முன்னோக்கி செல்லக் கூடிய கொள்கைகளுக்கு இசைவாக முன் நிற்கும். அத்துடன் பல்வேறு கொள்கைகளின் கீழ் தொழிலுக்கும் மற்றும் அதில் தொடர்புடையவர்களுக்கும் ஏற்படும் அளுத்தங்கள் குறித்தும் வெளிப்படுத்துவதற்காக இந்த கமிட்டியினால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

 

கண்டியில் ‘லிப்ட்’ உடைந்து விழுந்ததில் இருவர் பலி!

கண்டி, லெவல்ல பகுதியில் இன்று முற்பகல் தற்காலிக மின் உயர்த்தி ( temporary elevator) உடைந்து விழுந்ததில் இருவர் பலியாகியுள்ளனர்.

குறிப்பிட்ட அளவை விடவும் அதிகமான கட்டுமானப் பொருட்களை ஏற்றிச்சென்றதாலேயே இவ்வாறு உடைந்து விழுந்துள்ளது.

இதனையடுத்து ஒருவர் சம்பவ இடத்திலும் மற்றையவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலும் உயிரிழந்துள்ளனர்.

55 மற்றும் 57 வயதுகளுடைய இருவரே இவ்வாறு பலியாகியுள்ளனர். மூன்றாவது மாடியில் இருந்தே அறுந்து விழுந்துள்ளது.

சினிமா

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

செய்தி

டித்வா அனர்த்தத்தினால் வீடுகளை இழந்தவர்களுக்குக் காணி வழங்க பெருந்தோட்ட நிறுவனங்களுடன் பேச்சு

0
டித்வா (Ditwa) அனர்த்தத்தினால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்குப் பதிலாக, புதிய காணிகளைப் பெற்றுக் கொடுப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சில் நேற்று (27) நடைபெற்றது. பெருந்தோட்ட மற்றும்...

அடுத்த வாரம் இரு நம்பிக்கையில்லாப் பிரேரணைகள்?

0
நிதி அமைச்சராக பணியாற்றும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர ஆகியோருக்கு எதிராக, நம்பிக்கையில்லா பிரேரணைகளை கொண்டு வர எதிர்க்கட்சி திட்டமிட்டுள்ளது. திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன்...

“நாம் நீலகாமம்” போராட்டத்துக்கு “பிடிதளராதே” அமைப்பு பேராதரவு!

0
"மலையக மக்களுக்கான காணி உரிமையின் அவசியத்துவத்தை வலியுறுத்தியும், பெருந்தோட்ட மக்களின் இருப்பை உறுதிசெய்யும் நோக்கிலும், நீலகாமம் மக்களுக்கு நீதிகோரியும் நடைபெறவுள்ள அறவழிப் போராட்டத்துக்கு முழு ஆதரவை வழங்குகின்றோம்.” இவ்வாறு “பிடிதளராதே” அமைப்பு அறிவித்துள்ளது. நீலகாமம் தோட்டத்தில்...