Home Blog Page 3817

கடும் காற்று, மண்சரிவு – மத்திய மாகாணத்தில் 82 வீடுகள் பாதிப்பு

கடும் காற்று, அடை மழையுடன்கூடிய சீரற்ற காலநிலையால் மத்திய மாகாணத்தில் 96 குடும்பங்களைச் சேர்ந்த 345  இற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் கடும் காற்று, மண்சரிவால் 80 வீடுகள் பகுதியளவு தேமடைந்துள்ளன என்றும், இரு வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதேவேளை, அடை மழையால் நுவரெலியா மாவட்டத்திலுள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் சடுதியாக அதிகரித்துள்ளது.

‘தோட்டத்தில் மூடப்பட்ட வாசிகசாலையை மீண்டும் திறக்க நடவடிக்கை’

பதுளை மாநகரிலிருந்து சுமார் 18 கிலோமீற்றர் தொலைவில், நமுனுகுல மலைத்தொடரின் அடிவாரத்தில் அமைந்துள்ளது ஸ்பிரிங்வெளி மேமலைத் தோட்டம்.
இங்கு கற்றுயர்ந்தவர்கள் பலர். இப்பகுதியில் தான் பெருந்தோட்டப்பாடசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்ற மலையகத்தின் முதலாவது பாடசாலையாகிய பதுளை –
ஸ்பிரிங்வெளி தமிழ் மகா வித்தியாலயம் எனும் பிரபல பாடசாலையும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்தோடு இத்தோட்ட ஊரெங்கும் காணப்பட்ட படிப்பகங்கள் ஓய்வுநேரத்தை பயன்மிக்கதாக கழிப்பதற்கு துணையாக இருந்துள்ளதென இங்குள்ள மூத்த தலைமுறையினர் குறிப்பிடுகின்றனர்.

1970 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மேமலைத் தோட்டத்தில் தோற்றம்பெற்ற அண்ணா படிப்பகம் இங்குள்ள சிறுவர், சிறுமியர், இளைஞர், யுவதிகள், வளர்ந்தோர், முதியோர் என அனைவரும் ஒன்றுகூடி நல்ல பல நூல்களை வாசித்து அறிவை வளர்த்துக்கொள்ள பேருதவியாக இருந்துள்ளது. இருப்பினும் நாளடைவில் முறையான பராமரிப்பின்மை காரணமாக அண்ணா படிப்பகம் மூடப்பட்டு தோட்டத்தின் இதர தேவைக்காக இக்கட்டம் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.

இதனால் இன்றைய கால இளைஞர், யுவதிகள் தமக்கிருந்த நூலகப்பயனை அனுபவிக்க முடியாத துர்ப்பாக்கிய நிலையை அடைந்துள்ளனர்.இதன்காரணமாக மேமலை தோட்டத்தில் பயன்பாடில்லாமல் மூடப்பட்டிருந்த கட்டிடத்தை புனரமைத்து புதிய நூலகமாக மாற்றும் பணிகளை இத்தோட்ட இளைஞர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.

இவர்களின் நல்லெண்ண செயற்பாட்டுக்கு அனைவரும் வாழ்த்துக்களை தெரிவிப்பத்தோடு புதிய நூலகம் பொலிவு பெற சமூக ஆர்வலகர்களின் உதவிகளை எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர். உதவிகளை வழங்கும் ஆர்வலர்கள் தொடர்புகொண்டு

( தங்கவேல் தேவகுமார் – 0767595363 ) உதவுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

நடராஜா மலர்வேந்தன்

இரத்தினபுரியில் மீண்டும் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

இலங்கையில் அதிகமாக எலிக்காய்ச்சல் பரவும் மாவட்டமாக இரத்தினபுரி மாவட்டம் இருந்து வருவதாக மாவட்டத் தொற்று நோய் வைத்திய பிரிவின் அதிகாரி லக்மால் கோனார தெரிவித்தார்.

இரத்தினபுரி மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் துரிதமாக பரவி வருவதையிட்டு நேற்று ஊடகங்களுக்கு அறிவுறுத்தல் வழங்குகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

எலிக்காய்ச்சல் தொடர்பாக இதுவரை நடத்தி வந்த பரிசோதனை முடிவுகளில் திடீர் திருப்பு முனையாக இரத்தினக்கல் அகழும் தொழிலாளர்கள் மற்றும் வயல்வெளிகளில் வேலை செய்யும் விவசாயிகள் ஆகியோரிடம் அதிகமாகப் பரவி வந்தது. எனினும் தற்போது 40 வீதமானவர்கள் மட்டுமே இத்துறை சார்ந்தோரிடம் பரவுகன்றது.

60 வீதமான நோயாளர்கள் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், தொழிலாளர்கள், வியாபாரிகள், சிறார்கள் ஆகியோர் மத்தியிலேயே அதிகமாக பரவி வருவது இனம் காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

3ஆவது அலையின் ஆரம்ப புள்ளி எது? மர்மம் நீடிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் மூன்றாவது அலை தாக்கத்தின் ஆரம்ப புள்ளி இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. புலனாய்வுப் பிரிவினரும், சுகாதார அதிகாரிகளும் தொடர்ந்தும் இது பற்றி அவதானம் செலுத்திவருகின்றனர்.

மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிந்த திவுலப்பிட்டிய பகுதி பெண்ணொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதையடுத்து அத்தொழிற்சாலை ஊழியர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனையில் பலருக்கு வைரஸ் தொற்றியுள்ளமை கண்டறியப்பட்டது. அவர்களுடன் நெருங்கி பழகியவர்களுக்கும் வைரஸ் பரவியுள்ளது.

இதன்படி மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலை கொரோனா கொத்தணி பரவல்மூலம் கடந்த 3 ஆம் திகதி முதல் நாட்டில் நேற்றுவரை ஆயிரத்து 770 மேற்பட்டவர்களுக்கு வைரஸ் தொற்றியுள்ளமை பீசீஆர் பரிசோதனைமூலம் கண்டறியப்பட்டுள்ளது.

திவுலப்பிட்டிய பெண்ணுக்கு எவ்வாறு வைரஸ் தொற்றியது என்பது தொடர்பில் பலகோணங்களில் கருத்துகள் முன்வைக்கப்பட்டுவருகின்றன. எனினும், பல நாட்கள் கடந்தும் ஆரம்ப புள்ளியை இன்னும் கண்டறியமுடியாமல் உள்ளது.

‘தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறுவோருக்கு இனி கடும் நடவடிக்கை’

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான தனிமைப்படுத்தல் சட்டங்களை உள்ளடக்கிய விசேட வர்த்தமானியில் சுகாதார அமைச்சர் பவித்ரா தேவி வன்னியாராச்சி இன்று கைச்சாத்திட்டுள்ளார்.

இதன்படி மக்கள் நடமாடும் பொது இடங்களில் சமூக இடைவௌியைப் பேணுதல், முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட பிரதான சுகாதார பாதுகாப்பு முறைகள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளன.

இச்சட்டங்களை மீறுவோருக்கு எதிராக 10 ஆயிரம் ரூபாவைவிட அதிகரிக்காத அபராதம் விதிப்பது, 6 மாத சிறைத்தண்டனை என்பவற்றில் ஒரு தண்டனை அல்லது இரண்டு தண்டனைகளையும் நீதிமன்றத்தினால் வழங்க முடியும் என்று சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.

அத்துடன், வர்த்தக நிலையங்களிலும் சேவை நிலையங்களிலும் பின்பற்றப்பட வேண்டிய சுகாதார வழிமுறைகளும் இதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

சேவை நிலையங்களுக்குள் அல்லது வர்த்தக நிலையங்களுக்குள் பிரவேசிக்கும் போது அனைத்து ஊழியர்களும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.

இருவருக்கு இடையில் ஒரு மீட்டருக்கு குறையாத சமூக இடைவௌி பேணப்படவேண்டும்.சேவை நிலையங்களுக்குள் பிரவேசிக்கும் முன்னர் ஊழியர்களின் உடல் வெப்பம் பரிசோதிக்கப்பட வேண்டும்.

சேவை நிலையங்களுக்குள் பிரவேசிப்போரின் தகவல்கள் அடங்கிய பதிவேடு முறையாக பேணப்படவேண்டும் போன்ற விடயங்கள் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளன.

வளர்பிறையில் கறை எதற்கு?

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு கூறும் ‘800’ படத்தில் நடிக்கவுள்ள நடிகர் விஜய் சேதுபதியிடம், கவிஞர் வைரமுத்து விடுத்துள்ள கோரிக்கை வருமாறு,

கலையாளர் விஜய் சேதுபதிக்கு…

கலையாளர்
விஜய் சேதுபதிக்கு…

சில நேரங்களில்
செய்து எய்தும் புகழைவிடச்
செய்யாமல் எய்தும் புகழே
பெரிதினும் பெரிது செய்யும்.

நீங்கள் வளர்ந்து வருகிறீர்கள்.
வளர்பிறையில் கறை எதற்கு?

இன உரிமைக்காகக்
கலை உரிமையை
விட்டுக் கொடுப்பதே விவேகம்;
நீங்கள் விவேகி

‘மினுவாங்கொடயில் இருந்து மொக்கா தோட்டத்துக்கு வந்தவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை’

மஸ்கெலியா , மொக்கா தோட்டத்தில் மிட்லோஜியன் பிரிவைச் சேர்ந்த இளைஞர்கள் இருவருக்கும், யுவதிக்கும் கொரோனா வைரஸ் தொற்றவில்லை என்பது பீசீஆர் பரிசோதனைமூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலைக்கு அருகாமையில் உள்ள குடியிருப்பில் தங்கியிருந்து தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றிய மஸ்கெலியா, மொக்கா தோட்ட மிட்லோஜியன் பிரிவைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களும், ஒரு யுவதியும் கடந்த 3 தமது வீடுகளுக்கு வந்துள்ளனர்.

மினுவாங்கொட கொரோனா கொத்தணி பரவல் தாக்கத்தையடுத்து, மேற்படி மூவரும் அவர்களின் குடும்பங்களைச்சேர்ந்த 17 பேரும் கடந்த 7 ஆம் திகதி இரவு முதல் வீடுகளுக்குள்ளேயே சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டனர்.

மறுநாள் 8 ஆம் திகதி மினுவாங்கொடையில் இருந்து வந்த மூவரும் பீசீஆர் பரிசோதனைக்காக சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் ரந்தம்பே தனிமைப்படுத்தல் முகாமுக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் வெளியாகியுள்ள பீசீஆர் பரிசோதனை முடிவுகளின் பிரகாரம் மூவருக்கும் வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது. எனினும், தனிமைப்படுத்தல் நடவடிக்கை தொடர்கின்றது.

‘3ஆவது அலைக்கான முழு பொறுப்பையும் அரசு ஏற்கவேண்டும்’

இலங்கையில் கொரோனாவின் 3ஆவது அலை ஏற்பட்டதற்கான பொறுப்பை அரசாங்கம் ஏற்கவேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம், வைரஸைக்கூட அரசியலுக்காக பயன்படுத்துவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” கொரோனா வைரஸ் சீனாவில் உருவாகி உலக நாடுகளுக்கு பரவும் நிலையில் அது தொடர்பில் கடந்த டிசம்பர் மாதமே நாம் அரசுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தோம். எமது கோரிக்கைக்கு செவிமடுத்திருந்தால் கொரோனா வைரஸ் நாட்டுக்குள் வருவதை தடுத்த நாடு என்ற பெருமை இலங்கைக்கு கிடைத்திருக்கும்.

எனினும், குதிரை ஓடிய பிறகு லாயத்தைமூடுவதுபோலதான் கொரோனா விடயத்தில் அரசின் அணுகுமுறைகள் அமைந்தன. மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலை கொத்தணி பரவலின் ஆரம்பப்புள்ளி எது என்பது தொடர்பில் அரசாங்கம் இன்னும் அறிவிக்கவில்லை.எனவே, இனியாவது அரசாங்கம் பொறுப்புணர்வுடன் செயற்படவேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.

பொதுத்தேர்தலின் பின்னர் கொரோனா ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணி இரண்டு மாதங்களாக கூடவில்லை எனக்கூறப்படுகின்றது. எனவே, ஜனாதிபதி , சுகாதார அமைச்சர் முதல் மேற்படி செயலணியில் இருந்த அனைவரும் இதற்கான பொறுப்பை ஏற்கவேண்டும்.

தேர்தல் முடிவடைந்த பிறகு கூடவில்லையெனில் அதற்கு முன்னர் வைரஸைக்கூட அரசியலுக்காகவே இந்த அரசு பயன்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியபோது, நேரடி பதில்களை வழங்காமல் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் பற்றியே சுகாதார அமைச்சர் கதைத்தார். எனவே, இலங்கையில் 2ஆவது முறையும் வைரஸ் பரவல் ஏற்பட்டதற்கான பொறுப்பை அரசாங்கம் ஏற்கவேண்டும்.

அத்துடன், ஜனாதிபதி மற்றும் பொதுத்தேர்தல்களின்போது வழங்கிய வாக்குறுதிகளை அரசு நிறைவேற்றவில்லை. அதனை மறைப்பதற்கும் இன்று வைரஸ் பரவலை பயன்படுத்திவருகின்றனர் ஆளுங்கட்சியினர். நாட்டு மக்களுடன் விளையாட வேண்டாம் என்பதுடன், அவர்களை பலிக்கடாக்களாக்கி அரசியல் நடத்த முற்படவேண்டாம் எனவும் குறிப்பிடுகின்றோம்.” – என்றார்.

நாட்டில் மேலும் 49 பேருக்கு கொரோனா

மினுவாங்கொட கொரோனா கொத்தணி பரவல்மூலம் இலங்கையில் மேலும் 49 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்த 13 பேருக்கும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணிய 36 பேருக்குமே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி மினுவாங்கொட கொரோனா கொத்தணி பரவலின் எண்ணிக்கை ஆயிரத்து 770 ஆக அதிகரித்துள்ளது.

நவராத்திரி தினத்தை முன்னிட்டு ஆலயங்களுக்கு பிரதமர் நிதி உதவி

நவராத்திரி தினத்தை முன்னிட்டு இந்து சமய விழுமியங்களை ஊக்குவிக்கும் வகையில் நாடளாவிய ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட 40 இந்து ஆலயங்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கும் நிகழ்வு  பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் இன்று (2020.10.15) அலரி மாளிகையில் இடம்பெற்றது.

கொவிட்-19 கொடிய தொற்றினால் முழு உலகமும் பெரும் அச்சுறுத்தல்களுக்கும், நெருக்கடிகளுக்கும் முகங்கொடுத்துள்ள போதிலும், அரசாங்கம் என்ற ரீதியில் இந்து மதத்தின் விழுமியங்களையும் காப்பாற்ற வேண்டியது எமது பொறுப்பாகும் என்று பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

நிகழ்வில் குறியீட்டு ரீதியாக 10 ஆலய பரிபாலன சபைத் தலைவர்களுக்கான நிதியுதவிகளை பிரதமர் மஹிந்த ராஜபக்ச வழங்கி வைத்தார்.

இதன்போது அங்கு உரையாற்றிய பிரதமர், இவ்வாறானதொரு நெருக்கடியான காலப்பகுதியில் நாம் இந்து ஆலயங்களுக்கு தலா 50,000 ரூபாய் நிதியை பெற்றுக் கொடுத்து சமய விழுமியங்களை பாதுகாப்பதுடன், நாட்டின் நலத்திற்காக பிரார்த்திப்பதற்கும் இச்சந்தர்ப்பத்தை வாய்ப்பாக்கிக் கொள்கிறேன்.

சமய விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சர் என்ற ரீதியில் இந்து மதத்தையும், இந்து மதத்தின் விழுமியங்களையும் காப்பாற்ற வேண்டியது எமது பொறுப்பாகும்.

ஆரம்பிக்கும் அத்தனை காரியங்களும் வெற்றியில் முடியும் என்ற நம்பிக்கையில் நற்காரியங்களைத் தொடங்கும் இந்த நவராத்திரி காலப்பகுதியில் இந்த புண்ணிய நிகழ்வை ஆரம்பித்திருக்கின்றோம்.

கொவிட்-19 தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஆலயங்களில் இடம்பெறும் திருவிழாக்களின் போது அனைவரும் சுகாதார அமைச்சின் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி செயற்படுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம் என பிரதமர் குறிப்பிட்டார்.

குறித்த சந்தர்ப்பத்தில் கடற்றொழில் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச, தோட்ட வீடமைப்பு உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான்,பிரதமரின் பதுளை மாவட்ட இணைப்பு செயலாளர் செந்தில் தொண்டமான், நுவரெலிய மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரமேஸ்வரன், பிரதமரின் செயலாளர் காமினி செனரத், புத்த சாசன,மத விவகார மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

சினிமா

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

செய்தி

“நாம் நீலகாமம்” போராட்டத்துக்கு “பிடிதளராதே” அமைப்பு பேராதரவு!

0
"மலையக மக்களுக்கான காணி உரிமையின் அவசியத்துவத்தை வலியுறுத்தியும், பெருந்தோட்ட மக்களின் இருப்பை உறுதிசெய்யும் நோக்கிலும், நீலகாமம் மக்களுக்கு நீதிகோரியும் நடைபெறவுள்ள அறவழிப் போராட்டத்துக்கு முழு ஆதரவை வழங்குகின்றோம்.” இவ்வாறு “பிடிதளராதே” அமைப்பு அறிவித்துள்ளது. நீலகாமம் தோட்டத்தில்...

பொகவந்தலாவையில் விபத்து: மாணவர்கள் காயம்!

0
பொகவந்தலாவை, கெம்பியன் பகுதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் பஸ்ஸொன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் மாணவர்கள் காயமடைந்துள்ளனர். பஸ்ஸில் 25 பேர்வரை பயணித்துள்ளனர் எனவும், 9 பேர்வரை காயமடைந்துள்ளனர் எனவும் தெரியவருகின்றது. காயமடைந்த...

பஞ்சாப் கிங்ஸ் அணியின் வெற்றிநடை தொடருமா?

0
ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு நியூ சண்டிகர் முலான்பூரில் உள்ள மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்...