Home Blog Page 3850

’20’ ஐ ஆதரிக்க ’20’ எம்.பிக்கள் கட்சி தாவல்!

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு ஆதரவளிப்பதற்காக எதிரணியைச்சேர்ந்த 20 எம்.பிக்கள் அரசாங்கத்துடன் இணையவுள்ளனர் என்று அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

” அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலம் திருத்தியமைக்கப்படும். அது தொடர்பில் எதிர்க்கட்சிகள் திருத்தங்களை முன்வைக்கலாம். அதனைவிடுத்து போராட்டங்களை முன்னெடுப்பதற்கு பொருத்தமற்ற நடவடிக்கையாகும்.

இன்று எதிரணி பக்கம் இருப்பவர்களில் 20 பேர் ’20’ ஐ ஆதரிக்கவுள்ளனர். அதற்கான பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது. பெயர் விபரங்களை வெளியிடவிரும்பவில்லை.” -என்றார்.

‘கொரோனா’- இலங்கையில் மேலும் 18 பேர் குணமடைவு

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 18 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்.

இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 3,118 ஆக அதிகரித்துள்ளது.

168  பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 299 ஆக அதிகரித்துள்ளது.

நவலோக்க மருத்துவமனை இலங்கையின் முதலாவது ஒன்லைன் இரசாயனக்கூட இணையத்தளமான ‘LAB TESTS ONLINE’ஐ அறிமுகம் செய்கிறது

இலங்கையின் தனியார் மருத்துவனைத் துறையில் முன்னோடிகளான நவலோக்க மருத்துவமனை ஆய்வுக்கூட துறையில் புதிய புதிய பரிமாணத்தின் அடையாளமாகக் கொண்டு தமது 35வது வருட பூர்த்தியை முன்னிட்டு இலங்கையின் முதலாவது ஒன்லைன் (LAB TESTS ONLINE) ஆய்வுகூட இணையத்தளம் கடந்த 18ஆம் திகதி நவலோக்க மருத்துவமனை குழுமத்தின் தலைவர் கலாநிதி ஜயந்த தர்மதாஸ மற்றும் பிரதித் தலைவர் ஹர்ஷித் தர்மதாஸ ஆகியோரின் தலைமையில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

நவலோக்க மருத்துவமனையினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த புதிய எண்ணக்கருவிற்கு அமைய இணையத்தளத்தில் Nawaloka Lab Tests on-Line இணையத்தளத்திற்கு பிரவேசித்து டொக்டரினால் பெற்றுக் கொடுக்கப்படும் நோய் பரிசோதனை prescription மூலம் இணையத்தளத்திற்கு பிரவேசித்து, மேற்கொள்ளக் கூடிய ஆய்வுக்கூட பரிசோதனையை சரியாக தேர்வு செய்து இதற்காக செல்லும் நேரம் குறித்தும் தெரிந்து கொள்ளப்படுவதோடு சேவையைப் பெற்றுக் கொள்பவரால் பணத்தைச் செலுத்தும் முறை மற்றும் ஆய்வுக்கூட மாதிரியை வழங்கும் விதமும் குறிப்பிட வேண்டும். குறித்த மருத்துவ ஆய்வுக்கூட அறிக்கையை வாடிக்கையாளரினால் குறிப்பிடப்படும் காலப்பகுதிக்குள் இலத்திரனியல் தபால், இணையத்தளம் அல்லது Courier சேவையின் ஊடாக பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பம் இந்த சேவையின் மூலம் பெற்றுக் கொடுக்கப்படும். மருத்துவ ஆய்வுகூட மாதிரி மருத்வமனைக்கு வழங்கும் போது அற்காக சில விதிமுறைகள் இந்த இணையத்தளத்தின் ஊடாக வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதுடன் மாதிரியை சேகரித்து நடமாடும் சேவை, Drive Through சேவை அல்லது மருத்துவமனைக்கு பிரவேசித்து மருத்துவ ஆய்வுகூடத்திற்கு மாதிரியை வழங்க முடியும்.

இந்த முறைமையின் மூலம் வைத்திய பரிந்துரைகளுக்கு அமைய மேற்கொள்ள வேண்டிய பரிசோதனைக்கு உரிய நோயாளியினால் பெற்றுக் கொடுக்கப்படும் இரத்தத்தின் மாதிரிகளை நவலோக்க மருத்துவமனையினால் நோயாளியின் வீடுகளுக்கு சென்று பெற்றுக் கொள்வதுடன் மருத்துவ பரிசோதனை அறிக்கையும் வீட்டிற்கே வந்து வழங்குவதற்கான வசதியையும் பெற்றுக் கொள்வதன் ஊடாக நோயாளி ஓய்வான ஆரோக்கியத்தை அனுபவிக்க முடியும். நவலோக்க மருத்துமனையினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த புதிய இணையத்தளத்தினால் மருத்துவ ஆய்வுகூட சேவையை துரிதமாகவும் மற்றும் எளிமைபடுத்தப்பட்டுள்ளதுடன் வங்கி கார்ட் அட்டை மூலம் கொடுக்கல் வாங்கல் மேற்கொள்வதற்கான வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதனால் ஒட்டுமொத்த நடவடிக்கையின் ஆரம்பம் முதல் இறுதி வரை பணப் பயன்பாடு இல்லாமல் சேவைகளை பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பமும் நோயாளிக்கு வழங்கப்பட்டுள்ளது.

நோயாளியின் தேவைக்கு ஏற்ப அவரது மருத்துவ பரிசோதனை அறிக்கையை நேரடியாக அல்லது டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மூலம் டொக்டருடன் தொடர்புபடுத்த முடியும்.

நவலோக்க மருத்துவ ஆய்வுகூட ஊழியர்களினால் நிர்மாணிக்கப்பட்ட ‘Lab Tests On Line’ சேவையின் மூலம் நோயாளர்கள் தொடர்பில் பரிந்துரை செய்யப்பட்டுள்ள மருத்துவ பரிசோதனைகள் குறித்து விரிவான அறிவினைப்பெற்றுக் கொடுப்பதோடு இந்த அறிவுறுத்தலானது ஒட்டுமொத்த செயற்பாடுகளின் அங்கமாக இருப்பதோடு நோய் கண்டறிதல் குறித்து மேற்கொள்ளப்படும் விசேட பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் குறித்தும் சிறந்த அறிவினை நோயாளர்களுக்கு பெற்றுக் கொடுத்தல் கண்டிப்பாக மேற்கொள்ளப்படும்.

‘Lab Tests On Line’ சேவையினை ஆராயும் உங்களுக்கு மருத்துவ பரிசோதனை குறித்து விரிவான தகவல்கள், பரிசோதனையின் நொக்கம் மற்றும் தொடர்பினை ஏற்படுத்தியுள்ள சந்தர்ப்பத்தில் இந்த பரிசோதனையின் நோக்கம், நோயின் தன்மை மற்றும் செய்யவேண்டிய பரிசோதனை, பரிசோதனை அறீக்கை மற்றும் அதுதொடர்பான பிரச்சினைகள் மற்றும் ஆலோசனைகளை பெற்றுக் கொள்வதற்கான ஒத்துழைப்புகள் குறித்த தகவல்கள், மற்றும் இணையத்தளத்திற்கு பிரவேசிப்பதற்கான வசதிகள் போன்ற சேவைகள் பலவற்றை இந்த இணையத்தளத்தின் ஊடாக பெற்றுக் கொள்ள முடியும்.

அத்துடன் நோயாளரினால் மீண்டும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படும் திகதி, காலம் குறித்து ஞாபகமூட்டுதல்கள் மின்னஞ்சல் மூலம் அறிவிக்கப்படுகின்றமையும் விசேட அம்சமாகும்.

எளிமையாகக் கூறினால் இந்த இணையத்தளத்தின் ஊடாக நோயாளர்களின் அறிக்கைகள் மூலம் அவர்களது ஆரோக்கியம் குறித்த தெளிவான புரிந்துணர்வொன்றையுமு; பெற்றுக் கொள்ள முடியுமென்பதை எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இணையத்தளம் குறித்து கருத்து தெரிவித்த நவலோக்க வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவ ஆய்வுக்கூட சேவைகள் – கலாநிதி லால் சந்திரசேன, நோயின் நிலை குறித்த தெளிவு மற்றும் அறிவு, அந்த நபர்களின் ஆரோக்கிய நிலை குறித்தும் முன்னுரிமை அளிக்கப்பட்ட ஒரு சாதனமாக இது கருதப்படுகிறது.

நவலோக்க பரிசோதனை ஆய்வுகூடங்கள் இலங்கை அங்கீகார சபையினால் அங்கீகாரம் பெற்ற மருத்துவ பரிசோதனை ஆய்வுகூடமாக அத்தாட்சியளிக்கப்பட்டுள்ளதோடு இங்கு மேற்கொள்ளப்படும் அனைத்து வைத்திய பரிசோதனைகளும் பரிசோதனை ஆய்வு அங்கீகார சபையினால் சான்றிதழ் அளிக்கப்பட்ட குழுவின் கடுமையான மேற்பார்வைக்கு உட்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

நவலோக்க மருத்துவ ஆய்வுகூட குழுமம் நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள கிளை கட்டமைப்பு, சுயாதீன மருத்துவ பரிசோதனை ஆய்வுகூடங்கள் மற்றும் மாதிரிகளை சேகரிக்கும் மத்திய நிலையங்கள் பலவற்றுடன் வலைப்பின்னலில் தமது சேவைகளை நடத்திச் செல்கின்றது. எமது சேவைகள் எப்போதும் பயன்படுத்துவோருக்கு பல்வேறு நன்மைகள் கிடைப்பதுடன் எப்போதும் மேற்கொள்ளப்படும் மருத்துவ பரிசோதனைகளுக்காக கழிவுகளையும் பெற்றுக் கொடுத்தல், இலவசவமாக பெற்றுக் கொடுக்கப்படும் நடமாடும் சேவைகள் உள்ளிட்ட பலவும் அடங்கும்.

இந்த இணையத்தளத்திற்கு சென்ற பின்னர் அதனை பயன்படுத்தும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் விசேட தனிநபருக்கான அடையாளம் காணும் இலக்கம் (UPIN) ஒன்று தமக்கென கிடைப்பதோடு நவலோக்க மருத்துவமனையில் அனைத்து சேவைகளுக்காகவும் இணையத்தளத்தில் இணைந்து கொள்வதற்கு இதனால் சந்தர்ப்பம் கிட்டும்.

அண்மையில் நவலோக்க மருத்துவமனைக்கு சர்வதேச JCI (HOSPITAL ACCREDITATION From JOINT COMMISSION INTERNATIONAL) தரப்படுத்தலை பெற்றுக் கொள்ள முடிந்தது. தங்க முத்திரையினால் சான்றிதழ் அளிக்கப்படும் இந்த தரப்படுத்தலின் ஊடாக சர்வதேச தரத்தில் உடல் ஆரோக்கிய சேவையை பெற்றுக் கொடுக்கும் வகையில் நவலோக்க மருத்துவனை காட்டும் அர்ப்பணிப்பு சிறந்த விதத்தில் பிரதிபலிக்கின்றது.

நவலோக்க வைத்தியசாலையிடம் உள்ள நவீன தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு மற்றும் கணினி நிர்வகிப்பு நடவடிக்கை கட்டமைப்பின் கீழ் துரிதமான மற்றும் நோயாளர்களின் தனியுரிமை முழுமையாக பாதுகாக்கப்படுவதுடன் நோயாளர்களின் பாதுகாப்பு குறித்தும் சிறந்த கவனமும் செலுத்தப்படுகின்றது.

எதிர்காலத்தில் நவலோக்க மருத்துவமனையினால் இந்த வசதி கதிரியக்கவியல் மற்றும் ஏனைய பரிபூரண வைத்திய சேவைகளுக்காக விஸ்தரிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்போது பாவனையாளர்களுக்கு சீடீ / எம்.ஆர்.ஐ ஸ்கேன்> எக்ஸ் கதிர் ஸ்கேன்> US ஸ்கேன்> மெமோகிரஃபி மற்றும் டெக்ஸா போன்ற சேவைகளை பெற்றுக் கொள்ள முடியும். முன்கூட்டியே ஒதுக்கப்பட்டுள்ள மருத்துவமனை சேவைகளைத் தவிர ஏனைய சேவைகள் ஈ சேவைகள் ஊடாக மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

HNBஇன் பிலியந்தலை வாடிக்கையாளர் நிலையம் புதிய தளத்திற்கு இடமாற்றமடைகிறது

பிலியந்தலை நகரில் அதிகரித்து வரும் வர்த்தக சமூகத்தினருக்கு மிகவும் சிறந்த வங்கிச் சேவைகளை வழங்கும் நோக்கில் இலங்கையின் முன்னணி தனியார் வங்கியான HNB, தமது பிலியந்தலை வாடிக்கையாளர் நிலையத்தை இலக்கம் 92/A, மொரட்டுவை வீதி, பிலியந்தலை என்ற விலாசத்தில் அமைந்துள்ள சிறந்த இடவசதி கொண்ட புதிய கட்டிடத்திற்கு அண்மையில் இடமாற்றமடைந்துள்ளது.

வார நாட்களில் காலை 9.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை தமது வர்த்தக நடவடிக்கைகளுக்காக திறந்திருப்பதுடன் வங்கியின் இடவசதிகளுடன் கூடிய புதிய சூழலில் அனைத்து விதமான வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளதுடன் HNBஇன் முன்னணி வங்கி ஆலோசனை சேவையான Priority Circle Unit (முன்னணி வங்கிப் பிரிவு)ம் இந்த புதிய வாடிக்கையாளர் நிலையத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. பிலியந்தலை நகர் மற்றும் அதனை அண்டியுள்ள வாடிக்கையாளர்களுக்கு வங்கி சேவைகள் குறித்து புதிய அத்தியாயம் ஒன்றை அறிமுகப்படுத்தும் நோக்கில் இந்த நவீன வாடிக்கையாளர் நிலையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

புதிய வாடிக்கையாளர் மத்திய நிலையத்தின் திறப்பு நிகழ்வுக்கு HNBஇன் நிறைவேற்றுப் பணிப்பாளரும் மற்றும் பிரதான நடவடிக்கைகளுக்கான அதிகாரியுமான தில்ஷான் ரொத்ரிகோ, பிரதம அதிதியாக கலந்து கொண்ட கெஸ்பேவ பிரதேச செயலாளர் கே.பீ. பிரேமதாஸ ஆகியோர் கலந்து கொண்டதோடு HNBஇன் வலையமைப்பின் நிர்வகிப்பு தொடர்பான பிரதி பொது முகாமையாளர் வினோத் பெர்நான்தோ உள்ளிட்ட வங்கியின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

புதிய வாடிக்கையாளர் நிலையம் தொடர்பாக கருத்து தெரிவித்த HNBஇன் நிறைவேற்று பணிப்பாளரும் பிரதான நடவடிக்கைகளுக்கான அதிகாரியுமான தில்ஷான் ரொத்ரிகோ, பிரதேசத்தில் வர்த்தக மற்றும் வாடிக்கையாளர் பெருமக்களுடன் வங்கி ஏற்படுத்திக் கொண்டுள்ள விசேட கூட்டாண்மை குறித்து தெளிவுபடுத்தினார்.

“பிலியந்தலை மக்களின் கனவினை நனவாக்குவதற்கு அவர்களுடன் இணைந்து வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு சந்தர்ப்பம் கிடைத்தமை பெரும் பாக்கியமாகும். டிஜிட்டல் மற்றும் முன்னணி வங்கி நிலையமாக முழுமையான வசதிகளுடன் கூடிய இந்த புதிய கட்டிடமானது எதிர்காலத்திற்காக எமது அர்ப்பணிப்பு குறித்து சாட்சி பகர்கிறது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.” என தெரிவித்தார்.

HNB Payfast, HNB MOMO, HNB Solo, HNB AppiGo போன்ற டிஜிட்டல் தளங்கள் மற்றும் பன்முகப்படுத்தப்பட்ட டிஜிட்டல் வசதிகளுடன் கூடிய கட்டணம் செலுத்தும் தளத்தின் ஊடாக HNB பிரதேசங்களுக்குள் தமது வங்கிச் சேவைகளை பலப்படுத்தி முன்னேரிவரும் வர்த்தக சமூகத்தினருக்கு வசதிகளை டிஜிட்டலாக மேம்படுத்தியுள்ள வங்கிச் சேவைகளை வழங்குகிறது.

HNBஇன் நிறைவேற்று பணிப்பாளரும் மற்றும் பிரதான நடவடிக்கைகளுக்கான அதிகாரியுமான தினேஷ் ரொத்ரிகோ, பிரசாத் டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் சரத் தர்மசிறியிடமிருந்து முதலாவது வைப்பினை ஏற்றுக் கொள்ளப்படுவதையும், இந்த நிகழ்வில் கலந்து கொண்ட பிலியந்தலை HNB வாடிக்கையாளர் மத்திய நிலையத்தின் முகாமையாளர் சமிந்த சுது ஆராச்சி ஆகியோரும் படத்தில் இருப்பதை காணலாம்.

 

 

‘மலையக உதவி ஆசிரியர்கள் குறித்து பாராளுமன்றில் இன்று விவாதம் – வேலுகுமார் பிரேரணை முன்வைப்பு!

மலையக ஆசிரியர் உதவியாளர்களை, ஆசிரியர் சேவைக்கு உள்வாங்குமாறு வலியுறுத்தும் சபை ஒத்திவைப்புவேளை பிரேரணைமீதான விவாதம் இன்று பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.

ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமாரால் முன்வைக்கப்பட்டுள்ள இப்பிரேரணைமீதான விவாதம் மாலை 4.30 மணிக்கு ஆரம்பமாகி 5.30இற்கு நிறைவடையும்.

மலையக உதவி ஆசிரியர்கள் பிரச்சினைக்கு தீர்வு!

நீண்டகாலமாக இழுபறி நிலையில் இருந்துவந்த மத்திய மாகாண உதவி ஆசிரியர்களை , ஆசிரியர் சேவையின் மூன்றில் ஒன்றுக்கு உள்வாங்கி அவர்களுக்கான நியமனத்தை அடுத்த மாத இறுதிக்குள் வழங்குவதாக மத்திய மாகாண பிரதம செயலாளர் உறுதியளித்துள்ளார்.

மத்திய மாகாண பிரதம செயலாளர் உள்ளிட்ட கல்வி அதிகாரிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் மத்திய மாகாண ஆளுநர் லலித் கே கமகேயை சந்தித்து மத்திய மாகாண உதவி ஆசிரியர்களின் நியமன பிரச்சினைக்கு தீர்வு சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டது.

இதன்போது மத்திய மாகாணத்தில் தமது கோவைகளை பூர்த்தி செய்துள்ள எஞ்சியுள்ள 395 உதவி ஆசிரியர்களுக்கு நியமனத்தை வழங்குமாறு மத்திய மாகாண ஆளுநரிடம் வலியுறுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாகவே நேற்றைய சந்திப்பும் இடம்பெற்றது. இதன்போது கோவைகளை பரிசீலனை செய்வதற்கு ஒரு மாத காலம் தேவைப்படும் என அதிகாரிகள் தெரிவித்ததுடன் இதன் பிறகு நியமனத்தை வழங்குவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

இதன்படி அடுத்த மாத இறுதிக்குள் மத்திய மாகாண உதவி ஆசிரியர் நியமனத்தை முழுமையாக வழங்குவதாக மத்திய மாகாண பிரதம செயலாளர் காமினி ராஜரத்ன உறுதி அளித்துள்ளதாக மத்திய மாகாண முன்னாள் உறுப்பினர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.

நரியிடம் கோழிக்குஞ்சை ஒப்படைக்கலாமா? அரசுமீது சஜித் அணி பாய்ச்சல்

பொது நிறுவனங்கள் தொடர்பான  நாடாளுமன்றக்கு குழுவின் (கோப்) தலைமைப்பதவி ஆளுங்கட்சிக்கு வழங்கப்படுமானால் அது நரிகளிடம் கோழிக்குஞ்சுகளை ஒப்படைக்கும் செயல்போல் ஆகிவிடும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” எமது ஆட்சியின்போது கோப்குழுவின் தலைவர் பதவியை எதிரணி உறுப்பினருக்கு வழங்கி சிறந்த முன்னுதாரணத்தை வழங்கினோம். ஆனால் இம்முறை கோப் மற்றும் கோபா குழுக்களின் தலைமைப்பதவி ஆளுங்கட்சிக்கே வழங்கப்படவுள்ளது என எமக்கு தகவல் கிடைத்துள்ளது.
அவ்வாறு நடைபெறுமானால் அது நரிகளிடம் கோழிக்குஞ்சுகளை ஒப்படைக்கும் செயல்போல் ஆகிவிடும்.வகைதொகையின்றி ஊழல்கள் நடைபெறலாம். எனவே, இவ்விரு குழுக்களினதும் தலைமைப்பதவி எதிரணிக்கு வழங்கப்படவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தன்னை நடுநிலைவாதிபோல் காட்டிக்கொள்வதற்கு முயற்சிக்கின்றார். அது உண்மையானால் கோப் மற்றும் கோபா குழுக்களின் தலைமைப்பதவியை எதிரணிகளுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். ஏனெனில் இவ்விரு குழுக்களிலும் ஆளுங்கட்சி உறுப்பினர்களே பெரும்பான்மையாக உள்ளனர். ” – என்றார்.
அதேவேளை, அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் கருத்து வெளியிட்ட நளின் பண்டார், ’20’ ஐ சர்வஜன வாக்கெடுப்புக்கு உட்படுத்த வேண்டும் என நீதிமன்றத்தில் வலியுறுத்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி எதிர்ப்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.

‘இலங்கை மலையகத் தமிழர்கள் – நூல் விபரப் பட்டியல்’

பேராசிரியர் சோ.சந்திரசேகரன், கலாநிதி இரா.ரமேஷ் ஆகியோர் இணைந்து எழுதிய இலங்கை மலையகத் தமிழர்கள் – நூல் விபரப் பட்டியல்- என்ற நூலின் அறிமுக விழா எதிர்வரும் 29ஆம் திகதி சனிக்கிழமை மு.ப. 9.30 மணிக்கு ஹட்டன் நகரசபை மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

நூல் அறிமுக விழாவின் வரவேற்புரையை கொட்டகலை ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் விரிவுரையாளர் எம். அகிலனும், தலைமையுரையை கல்வி அமைச்சின் பெருந்தோட்ட கல்விப் பிரிவு பணிப்பாளர் சு. முரளிதரனும் நிகழ்த்தவுள்ளனர்.

நூலின் அறிமுக உரையை கொட்டகலை ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் விரிவுரையாளர் ஜெ. சற்குருநாதனும், வாழ்த்துரையைப் ஹட்டன் வலயக் கல்விப் பணிப்பாளர் பீ.ஶ்ரீதரனும், நூல் மதிப்பீட்டுரையை பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்த்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் எம். எம். ஜெயசீலனும் நிகழ்த்தவுள்ளனர்.

மலையக சமூகத்தில் ஆய்வும் அபிவிருத்தியும் என்ற தலைப்பில் சிறப்புரையை பேராசிரியர் தை. தனராஜும், சமகால மலையகத்தின் ஆய்வு முயற்சிகள் என்ற தலைப்பிலான சிறப்புரையை பேராசிரியர் ஏ.எஸ். சந்திரபோஸ் உம் நிகழ்த்தவுள்ளனர். ஏற்புரைகளை பேராசிரியர் சோ.சந்திரசேகரன், கலாநிதி இரா.ரமேஷ் ஆகியோரும் நன்றியுரையை ஏ.சி.ஆர். ஜோனும் நிகழ்த்தவுள்ளனர்.

மது பாவனையில் நான்காவது இடத்தில் இரத்தினபுரி மாவட்டம்!

இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள 11 லட்சம் மக்களில் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் மது பாவனைக்கு அடிமையாகி உள்ளதாக 2019 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு அறிக்கையின் பிரகாரம் தெரியவந்துள்ளதாக மருந்தக கட்டுப்பாட்டு நிறுவனத்தின் மூலம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதற்கமைய மதுபாவனையில் இரத்தினபுரி மாவட்டம் நான்காவது இடத்தில் உள்ளதாக இந்த நிறுவனத்தின் சப்ரகமுவ மாகாண வெளி சேவை அதிகாரி திருமதி சானிகா அபேசிங்க தெரிவித்தார்.

இந்த ஆய்வு அறிக்கையின் பிரகாரம் இரத்தினபுரி மாவட்டத்தில் மதுபாவனையில் 197,623 நபர்கள் உள்ளதுடன் இரத்தினபுரி மாவட்டத்தில் சிகரெட் பாவனை செய்யும் நபர்களையும் ஒப்பிட்டு பார்க்கும்போது ஆறாவது இடத்தில் அவர்கள் உள்ளதாக தெரிவித்தார்.

மேற்படி தகவல்களை அண்மையில் இடம்பெற்ற இரத்தினபுரி மாவட்ட இணைப்பு கமிட்டி கூட்டத்தில் அவர் வெளியிட்டார். சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ மற்றும் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அகில சாலிய எல்லாவல ஆகியோரின் தலைமையில் இரத்தினபுரி மாவட்ட செயலாளர் மாலினி லொகுபோதாகம தலைமையில் இந்த கமிட்டி கூட்டம் மாதந்தோறும் நடைபெற்று வருகின்றது.

அதேசமயம் சப்ரகமுவ மாகாண கல்வி திணைக்களத்தின் கீழ் உள்ள தற்பொழுது மூடப்பட்டுள்ள நிவித்திகல நொரகொல்ல வித்தியாலயத்திற்கு உரிய கட்டடங்களும் காணியும் இவ்வாறு போதைப்பொருளுக்கு அடிமையாகி உள்ளவர்களுக்கு சிகிச்சையளிக்கும் மத்திய நிலையமாக இனம் காணப்பட்டுள்ளதாக சானிகா அபேசிங்க இணைப்பு கமிட்டி கூட்டத்தில் சுட்டிக்காட்டினார்.

ஆயிரம் ரூபா? இலவுகாத்த கிளிகளாக தோட்டத்தொழிலாளர்கள்!

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு மார்ச் மாதம் முதல் குறைந்தபட்ச நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்படவேண்டும் என ஜனாதிபதி கட்டளை பிறப்பித்திருந்தாலும் இன்னும் சம்பள உயர்வு கிடைக்கவில்லை.

இன்று கிடைக்கும், நாளை கிடைக்கும் என தொழிற்சங்கங்கள் சமாளிப்பு அறிவிப்புகளை விடுத்தாலும், ஆயிரம் ரூபாவை வழங்கும் நிலைப்பாட்டில் பெருந்தோட்டக்கம்பனிகள் இல்லை.

ஆயிரம் ரூபாவை வழங்குவதற்கான திட்டமொன்று அவசியம் என முதலாளிமார் சம்மேளனம் அறிவித்துள்ளது. அப்படியானால் ஆயிரம் ரூபா எப்போது கிடைக்கும்?

ஆயிரம் ரூபாவை வழங்குவதற்கு முதலாளிமார் சம்மேளனம் தயாரென்றும், ஆனால் முன்வைக்கப்பட்ட நிபந்தனைகளை ஏற்பதற்கு தயாரில்லை எனவும் தொழிற்சங்க தரப்பில் தேர்தல் காலத்தில் கருத்துகள் வெளியிடப்பட்டன.

ஆயிரம் ரூபா சம்பளத்துக்காக பெருந்தோட்டத்தொழிலாளர்கள் ஐந்தாண்டுகளாக போராடிவருகின்றனர். எனினும், அவர்களுக்கு இன்னும் உரிய தீர்வு கிடைக்கவில்லை.

சினிமா

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

செய்தி

துறைமுக முற்றுகையை அமெரிக்கா கைவிட வேண்டும்: ஈரான் திட்டவட்டம்!

0
அமைதி பேச்சு தொடர வேண்டுமானால் ஈரான் மீதான துறைமுக முற்றுகையை அமெரிக்கா உடனடியாக நீக்க வேண்டும் என ஜெனிவாவுக்கான ஈரான் தூதுவர் Ali Bahreini வலியுறுத்தியுள்ளார். தற்போதைய தடையானது போர்நிறுத்த ஒப்பந்தத்தை அப்பட்டமாக மீறுகின்றது. எனவே,...

ஈரான் வெளிவிவகார அமைச்சர் இன்று பாகிஸ்தான் பயணம்!

0
ஈரானிய வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அரகச்சி, பாகிஸ்தான் அதிகாரிகளைச் சந்திப்பதற்காக இன்றிரவு இஸ்லாமாபாத் செல்லவுள்ளார். ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே நிலவும் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு முக்கிய முயற்சியாக இந்தப் பயணம் பார்க்கப்படுகிறது. தற்போது இரு நாடுகளுக்கும்...

கல்வி மறுசீரமைப்பு: பிரதமர் விடுத்துள்ள அறிவிப்பு!

0
" 2027ஆம் ஆண்டில் 6ஆம் தரத்திலிருந்து புதிய கல்விச் சீர்திருத்தங்கள் ஆரம்பிக்கப்படும்" - என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். கண்டியில் இன்று மல்வத்து பீடத்தின் மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரரைச்...