Home Blog Page 3851

பெங்களூரு அணியிடம் மண்டியிட்டது ஐதராபாத்

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி 10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

13ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது.  இந்த நிலையில் துபாயில் நேற்று இரவு நடந்த 3-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன் ரைசர்ஸ்-பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதின.

முதலில் துடுப்பெடுத்தாடிய  பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரராக இளம் அறிமுக வீரர் தேவ்தத் படிக்கல், ஆரோன் பிஞ்சுடன் இணைந்து களம் இறங்கினார். இருவரும் நிதானமாகவும், நேர்த்தியாகவும் ஆடி நல்ல தொடக்கம் ஏற்படுத்தினார்கள். நடராஜன் வீசிய ஒரு ஓவரில் தேவ்தத் படிக்கல் 3 பவுண்டரிகள் விளாசினார். பவர்பிளேயில் (முதல் 6 ஓவர்) அந்த அணி விக்கெட் இழப்பின்றி 53 ரன்கள் எடுத்தது. ரஷித் கான் வீசிய ஓவர் ஒன்றில் ஆரோன் பிஞ்ச் அடுத்தடுத்து பவுண்டரி, சிக்சருக்கு பந்தை விரட்டியடித்தார்.

அணியின் ஸ்கோர் 11 ஓவர்களில் 90 ரன்னாக உயர்ந்த போது தொடக்க ஜோடி பிரிந்தது. தேவ்தத் படிக்கல் 56 ரன்னில் (42 பந்து, 8 பவுண்டரி) விஜய்சங்கர் பந்து வீச்சில் போல்டு ஆனார். அடுத்த ஓவரில் ஆரோன் பிஞ்ச் 29 ரன்னில் (27 பந்து, ஒரு பவுண்டரி, 2 சிக்சர்) அபிஷேக் ஷர்மா பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டம் இழந்தார். இதனை தொடர்ந்து கேப்டன் விராட்கோலி 13 பந்தில் 14 ரன் எடுத்த நிலையில் நடராஜன் பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

இதனை அடுத்து ஷிவம் துபே, டிவில்லியர்சுடன் ஜோடி சேர்ந்தார். அதிரடியாக ஆடிய டிவில்லியர்ஸ் (51 ரன்கள், 30 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) கடைசி ஓவரில் ‘ரன்-அவுட்’ ஆனார். அதே ஓவரில் கடைசி பந்தில் ஷிவம் துபே (7 ரன்) ‘ரன்-அவுட்’ ஆகி பெவிலியன் திரும்பினார். 20 ஓவர்களில் பெங்களூரு அணி 5 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது. ஜோஷ் பிலிப் 1 ரன்னுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

பின்னர் 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரரான கேப்டன் டேவிட் வார்னர் 2-வது ஓவரில் 6 ரன்னில் ‘ரன்-அவுட்’ ஆகி நடையை கட்டினார். இதனை அடுத்து மனிஷ் பாண்டே, ஜானி பேர்ஸ்டோவுடன் இணைந்தார். இந்த ஜோடி நிலைத்து நின்று ஆடியது. மனிஷ் பாண்டே 33 ரன்னில் 3 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 34 ரன்கள் எடுத்த நிலையில் யுஸ்வேந்திர சாஹல் பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

சிறப்பாக ஆடிய பேர்ஸ்டோ 61 ரன்னில் (43 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) யுஸ்வேந்திர சாஹல் பந்து வீச்சில் போல்டு ஆனார். அதன் பிறகு விக்கெட்டுகள் வேகமாக சரிந்தன. அடுத்து வந்த விஜய் சங்கர் விக்கெட்டை சாஹல் முதல் பந்திலேயே கைப்பற்றினார். பிரியம் கார்க் 12 ரன்னிலும், அபிஷேக் வர்மா 7 ரன்னிலும், புவனேஷ்வர்குமார் ரன் எதுவும் எடுக்காமலும், ரஷித் கான் 6 ரன்னிலும், பவுலிங்கின் போது அடைந்த காயத்தை பொருட்படுத்தாமல் இறங்கிய மிட்செல் மார்ஷ் ரன் எதுவும் எடுக்காமலும், சந்தீப் ஷர்மா 9 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

19.4 ஓவர்களில் ஐதராபாத் அணி 153 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. இதனால் பெங்களூரு அணி 10 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நடராஜன் 3 ரன்னுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

’19’ நாட்டிற்கு சாபக்கேடு – ’20’ கட்டாயம் வேண்டும் என்கிறார் பீரிஸ்!

” 19ஆவது திருத்த சட்ட மூலம் நாட்டிற்கு ஓர் சாபக்கேடு.இதில் பகுதி பகுதியாக திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதில் பயன் இல்லை. இது இந்த நாட்டின் சட்டப்புத்தகத்தில் இருந்து நீக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.” – என்று அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமைகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாது,

20ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் நாளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். 20ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் தொடர்பாக விடுக்கப்பட்ட வர்த்தமானி அறிவிப்பை எந்தவகையிலும் விலக்கிக்கொள்வதற்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தயாராக இல்லை. தேவைப்படும் பட்சத்தில் குழுநிலையின் போது மாத்திரம் மாற்றங்களை மேற்கொள்வதற்கு உடன்பட்டுள்ளோம்.

திருத்த சட்ட மூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் ஏழு நாட்களுக்குள் இது தொடர்பான எதிர்ப்புக்களை உயர் நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கலாம். அது தொடர்பான விசாரணைகளை உயர் நீதிமன்றம் மேற்கொள்ளும்.

இதன்பின்னர் உயர் நீதிமன்றம் ஜனாதிபதிக்கும் பாராளுமன்றத்திற்கும் அதன் நிலைப்பாட்டை அறிவிக்கும்.

பொதுத் தேர்தலின் போது ஆரம்பம் முதல் இறுதி வரை நாம் தொடர்ச்சியாக 20 ஆவது அரசியல் திருத்தம் குறித்து எமது நிலைப்பாட்டைபொது மக்கள் முன் வைத்தோம்.19ஆவது திருத்த சட்ட மூலம் நாட்டிற்கு ஓர் சாபக்கேடு. இதில் பகுதி பகுதியாக திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதில் பயன் இல்லை .இது இந்த நாட்டின் சட்டப்புத்தகத்தில் இருந்து நீக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.” – என்றும் குறிப்பிட்டார்.

ஊவா தமிழ் கல்வியின் எதிர்காலம்: ஆளுநருடன் செந்தில் தொண்டமான் விசேட கலந்துரையாடல்!

பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டைமான் ஊவா மாகாண ஆளுநர் எ.ஜே.எம் முஸாமிலுடன் ஊவா மாகாணத்தின் எதிர்கால தமிழ் கல்வியின் மேம்பாடு தொடர்பாக இன்று முக்கிய கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டார்.

இக் கலந்துரையாடலின் போது ஆளுநர் செயலாளர், அமைச்சு செயலாளர் மற்றும் தமிழ் கல்வி இயக்குனர் ஆகியோரும் உடனிருந்தனர்.

இதன்போது தமிழ் கல்வி சார்ந்த பல்வேறு விடயங்கள் ஆழமாக ஆலோசிக்கப்பட்டன.

கடந்த காலங்களில் ஊவா தமிழ் கல்வி அமைச்சு ஒரு நிர்வாகத்தின் கீழ் அமைந்திருந்த காரணத்தினால் தமிழ் கல்வியின் தரம் சரியான முறையில் மேம்பட்டிருக்கவில்லை. அதன் காரணமாகவே தமிழ் கல்வி அமைச்சு தனியான நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டிருந்தது.

1.சிங்கள மொழி பாடசலைகளை விட தமிழ் மொழி பாடசாலைகளிலேயே அதிகமான ஆசிரியர் பற்றாக்குறை காணப்பட்டது. இவ்விரண்டு மொழி ஆசிரியர்களை ஒரு நிர்வாக கட்டமைப்பில் ஒன்று சேர்க்கும் பட்சத்தில் இரண்டு மொழிமூலங்களும் சமமான நிலையிலேயே பார்க்கப்படும். ஆனால், தமிழ் மொழிமூலமான ஆசிரியர்களே அதிகமாக குறைப்பாடகவுள்ளனர். சமமாக பார்க்கப்படும் பட்சத்தில் புதிய தமிழ் மொழி ஆசிரியர்களை உள்வாங்க வேண்டிய கட்டாயத்துக்கும் தள்ளப்படமாட்டார்கள். ஆகவே, தமிழ் கல்வி அமைச்சு தனியான நிர்வாகத்தின் கீழே நிர்வாகிக்ப்பட வேண்டும்.

2. அதேபோன்று நிதி ஒதுக்கீடு விடயத்திலும் சிக்கலான நிலைமையே எழக்கூடும். தமிழ் பாடசாலைகளிலேயே அதிகமான அடிப்படை வசதிகளுக்கான தேவைகள் உள்ளன. அதன் காரணமாக தமிழ் பள்ளிகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதுடன், பொதுவான நிதி ஒதுக்கீடுகள் மூலம் சமாந்திரத்தை பேண முடியாது என்பதுடன், தமிழ் பாடசாலைகளுக்கு தனி பட்;ஜெட்களை தயாரிப்பதே பொருத்தமானமாக அமையும்.

3. இடம்மாற்றம் தொடர்பிலான விடயத்தில் மொழிப்பிரச்சினைகள் எழக் கூடும் என்பதால் பெருந்தோட்டப் பகுதி ஆசிரியர்களை பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கே இடமாற்றங்களை வழங்குவது பொருத்தமானதாகும்.

4.இதன் மூலம் சிறந்த கல்வி தரங்கள் எளிய முறையில் கண்கானிக்க முடியும்.

உள்ளிட்ட விடயங்கள் இதன்போது செந்தில் தொண்டமானால் ஆளுநருக்கு எடுத்துரைக்கப்பட்டது.

’20’ அடுத்து என்ன? 11 பேரடங்கிய குழுவை அமைத்தார் சஜித்! மனோவுக்கும் இடம்!!

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் முன்னெடுக்கப்படவேண்டிய அடுத்தக்கட்ட நகர்வுகள் தொடர்பில் ஆராய்வதற்காக 11 பேரடங்கிய குழுவொன்றை ஐக்கிய மக்கள் சக்தி நியமித்துள்ளது.

இதில் 9 பாராளுமன்ற உறுப்பினர்களும், இரண்டு சட்டத்தரணிகளும் உள்ளடங்கியுள்ளனர்.

20 ஆவது அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஐக்கிய மக்கள் சக்தியின் விசேட செயலமர்வொன்று இன்று நடைபெற்றது. இதன்போதே மேற்படி குழு அமைக்கப்பட்டுள்ளது.

குழு உறுப்பினர்கள் விபரம் வருமாறு,

  1. ரஞ்சித் மத்தும பண்டார
  2. ராஜித சேனாரத்ன
  3. சரத் பொன்சேகா
  4. கபீர் ஹாசீம்
  5. மனோ கணேசன்
  6. எரான் விக்கிரமரத்ன
  7. இம்தியாஸ் பாக்கீர்மாகார்
  8. லக்‌ஷ்மன் கிரியல்ல
  9. ஹர்ஷ டி சில்வா
  10. சட்டத்தரணி சுரேஷ் பெர்ணான்டோ
  11. சட்டத்தரணி சிரால் லக்திலக்க

‘குருணாகலையிலுள்ள தோட்டத் தொழிலாளர்களுக்கு 100 வீடுகள்’

” குருணாகலை மாவடத்தில் பெருந்தோட்டங்களில் வாழும் தொழிலாளர்களுக்கும் தனித்தனி வீடும், காணியும் வழங்கப்பட வேண்டும் என்பதே மறைந்த தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் அபிலாஷையாகும். அவர் தொட்ட பணியை நிறைவேற்றி முடிக்க இலங்கை தெழிலாளர் காங்கிரஸ், இந்திய வீடமைப்புத்திட்டத்தின் கீழ் 100 வீடுகளை அமைத்து கொடுக்கவுள்ளதாக இ.தொ.கா சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளரும் சட்டத்தரணியுமான பரத் அருள்சாமி தெரிவித்துள்ளார்.

குருநாகலை மாநகரசபை கேட்போர் கூடத்தில் நேற்று   நடைபெற்ற ஒன்றுகூடலில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

” 80 ஆண்டுகளுக்கு மேலாக பயணித்துக் கொண்டிருக்கும் எமது ஸ்தாபனம் பெருந்தோட்ட மக்களுக்கு அர்பணிப்புடன் ஆற்றிய சேவைகள் ஏராளம். இந்த வகையில் நாம் குருநாகலை பெருந்தோட்ட மக்களின் மேம்பாட்டை கருத்தில் கொண்டு இவர்களது வாழ்வு செழிப்பாகவும் உயரவும் வழிவகைகளை செய்து கொடுக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாய தேவையாகும்.

இதற்கான ஒரு காத்திரமான தீர்வை அடைவதற்கு இங்கு வாழ்கின்ற அனைத்து மக்களின் நலனில், இ.தொ.கா. அக்கறை காட்டி வருகின்றது. அமரர் ஆறுமுகன் தொண்டமான், இங்கு அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கான கட்டிடங்களை வழங்கியுள்ளர். கல்வியில் தரமுயர்த்தப்பட வேண்டும் என்பது அவரது வாஞ்சையாகும். இ.தொ.கா. கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஒரு பிரதிநிதியை நிறுத்தியதன் காரணமாகவே, அங்கு பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவர் மாநகர சபைக்கு மேயராக வரும் வாய்ப்பு கிடைத்ததையிட்டு, குருநாகலையில ஒரு வரலாற்றுப் பதிவாகும்.

33 ஆயிரம் தமிழ் பேசும் மக்கள் செறிந்து வாழ்கின்ற இப் பிரதேசத்தில் மூன்று பெருந்தோட்டயாக்கங்களும், தனியார் தோட்டங்களும் அமைந்துள்ளன. 25 ஆயிரம் தமிழ் வாக்காளர்கள் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இம்மக்களுக்க இ.தொ.கா. அரசியல் ரீதியாகவும், தொழிற்சங்க ரீதியாகவும் தனது சேவைகளை விரிவுபடுத்த வேண்டிய தேவையுள்ளதால் இ.தொ.கா. பொதுச் செயலாளரும், தோட்ட வீடமைப்பு சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் ராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் ஆலோசனைக்கு அமைவாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

அவரது பரிந்துரைக்கேட்ப அங்கு வீடமைப்புத்திட்டம், தொழிற்சங்க விஸ்தரிப்பு, இந்துக் கோவில்கள் புனரமைப்பு, தமிழ் பாடசாலைகள், தரமுயர்தல் முதலானவைகள் வெகுவிரைவில் மேற்கொள்ளப்பட வேண்டியதோடு, எமது அடுத்த முதற்கட்டப்பணியாக அலுவலகம் ஒன்றை விரைவில் திறந்துவைத்து பணிகளை மேற்கொள்வதற்க்கு ஏதுவாக அமையும் என்பதை பரத் அருள்சாமி தெரிவித்துள்ளார்.

‘கொரோனா’ – இலங்கையில் 3,100 பேர் குணமடைவு

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 12 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்.

இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 3,100 ஆக அதிகரித்துள்ளது.

174  பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 287 ஆக அதிகரித்துள்ளது.

தோட்டதுரை அடாவடி! தொழிலாளர்கள் 10ஆவது நாளாகவும் போராட்டம்!!

தோட்ட முகாமையாளருக்கு இடமாற்றம் வழங்கப்படவேண்டும் என்பது உட்பட மேலும் சில கோரிக்கைகளை முன்வைத்து நுவரெலியா மாவட்டத்துக்குட்பட்ட நானுஓயா, உடரதல்ல தோட்ட தொழிலாளர்கள் இன்று 10 ஆவது நாளாகவும் வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமது கோரிக்கைகளை நிறைவேற்றப்பட வேண்டும் என பதாதைகளை தாங்கியவாறு கோஷமெழுப்பும் தொழிலாளர்கள், தீர்வு கிடைக்கும்வரை போராட்டம் தொடரும் எனவும் அறிவித்துள்ளனர்.

கெலனிவெளி பிளான்டேசன் நிர்வாகத்துக்குட்பட்ட நானுஓயா உடரதல்ல தோட்டத்தில் சுமார் 275 தோட்ட தொழிலாளர்கள் தொழில் புரிந்து வருகின்றனர். எனினும், இவர்களுக்கான தொழில்சார் உரிமைகளையும், சலுகைகளையும் தோட்டத்துரை (முகாமையாளர்) திட்டமிட்ட அடிப்படையில் தடுத்து வருகிறார். ஓராண்டு காலமாக அவரின் அடக்குமுறை தொடர்வதாகவும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், நீதி கோரியுமே கடந்த 12 ஆம் திகதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டுவருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் அவர்கள் மேலும் கூறியதாவது,

” பாடசாலை பிள்ளைகளை பாதுகாப்பாக அழைத்து செல்வதற்காக நியமிக்கப்பட்டிருந்த ‘கங்காணி’மாருக்கு பெயர் போடப்பட்டு நாட் சம்பளம் வழங்கப்பட்டது. இவ்வாறு நியமிக்கப்பட்டிருந்த இரு கங்காணிகளை தோட்டதுரை நீக்கிவிட்டு, குறைந்த சம்பளத்துக்கு இருவரை நியமித்துள்ளார். இதனை ஏற்கமுடியாது. முன்னர் இருந்த நடைமுறை தொடரவேண்டும்.

8 மணிநேரம் வேலைசெய்தாலும் அரைநாள் பெயரே போடப்படுகின்றது. கடும் மழையிலும் 18 கிலோ பறிக்குமாறு அழுத்தம். ஒரு கிலோ குறைந்தாலும் அரை நாள் பெயர். கொழுந்து அளவிடும் கருவியும் தொழில்நுட்பத்தில் இயங்குவது. இதனால் எமது உழைப்பு களவாடப்படுகின்றது. அதாவது குறைந்த அளவீடு போடப்படுகின்றது. இவற்றையும் நாம் எதிர்க்கின்றோம்.

தேர்தல் தினத்தில் வாக்களிக்க சென்றிருந்தோம். அன்றைய தினமும் அரை நாள் பெயரே போடப்பட்டுள்ளது. கேட்டால், அரசாங்கத்திடம் கேட்குமாறு துரை எச்சரிக்கின்றார். எமக்கு அன்றைய நாளுக்கான முழு சம்பளம் வேண்டும். இவ்வாறு சட்டரீதியாக, தொழில் ரீதியாக எமக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள் மறுக்கப்படுகின்றன.

தோட்டதுரையின் செயற்பாடே இதற்கு காரணம். தொழிற்சாலையும் மூடப்பட்டுள்ளது. இதனால் வெளி தோட்டத்துக்கே கொழுந்து அனுப்படுகின்றது. ஓய்வூதியம் பெற்றவர்களை அழைத்து, கொழுந்து உள்ள மலைகளில் கொழுந்து கொய்து அவர்களுக்கு குறைந்த ஊதியம் வழங்கப்படுகின்றது. தோட்டத்தில் வேலைசெய்யும் எம்மை, கொழுந்து இல்லாத மலைகளுக்கு சென்று பறிக்குமாறு அழுத்தம் கொடுக்கப்படுகின்றது.” எனவும் தொழிலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

க.கிசாந்தன்

இடிந்து விழுந்தது 3 மாடி கட்டிடம் – மகாராஷ்டிராவில் 10 பேர் பலி!

இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில் 3 மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழப்பு 10 ஆக உயர்ந்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தின் பிவண்டி பகுதியில் உள்ள படேல் காம்பவுண்டில் அமைந்துள்ள 3 மாடிக் கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. இன்று அதிகாலை 3.30 மணிக்கு கட்டிடம் இடிந்து விழுந்ததால், அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த மக்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.

விபத்து பற்றி தகவல் அறிந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் பொலிஸார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். காலையில் 8 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. சுமார் 20 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அதன்பின்னர் மேலும் 2 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதனால் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. ஏனையோரை மீட்கும் பணி தொடர்கின்றது.

‘அறவழியில் சமுகநீதிக்காக போராடி உயிர் தியாகம் செய்தவரே திலீபன்’ – வேலுகுமார்

” அறவழியில் சமுகநீதிக்காக போராடிமடிந்த தியாக தீபம் திலீபனுக்கான நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதற்கான அனுமதியை அரசாங்கம் வழங்கவேண்டும். மாறாக நினைவேந்தல் நிகழ்வுகளை முடக்க முற்பட்டால் அது எதிர்மறையான விளைவுகளுக்கே வழிவகுக்கும்.” – என்று தமிழ் முற்போக்கு கூட்டணி அறிவித்துள்ளது.

திலீபன் உட்பட தியாகிகளுக்கான நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடைவிதிக்கப்படக்கூடாது என வலியுறுத்தி ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்புவதற்கும், சாதகமான தீர்வு கிடைக்காதப்பட்சத்தில் அறவழிபோராட்டங்கள்மூலம் உரிமைகளை வென்றெடுப்பதற்கும் வடக்கிலுள்ள தமிழக்கட்சிகள் தீர்மானம் எடுத்துள்ளன.

இந்நிலையில் இது தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் நிலைப்பாடு என்னவென்று அக்கூட்டணியின் கண்டி மாவட்ட எம்.பியும், ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவருமான வேலுகுமாரிடம் வினவியபோது,

” சமுக  நீதிக்காக மகாத்மா காந்தியின் அஹிம்சை வழியில் போராடியே தீலிபன் உயிர் தியாகம் செய்தார். அறவழியிலான விடுதலைப்போராட்டத்துக்கும் முன்னுதாரணமாக திகழ்ந்தார். எனவே, அவருக்கான நினைவேந்தல் நிகழ்வுக்கு அனுமதி வழங்கப்படவேண்டும்.

அத்தகைய நிகழ்வுக்கு தடைவிதிப்பதானது மீண்டும் குரோத மனப்பான்மையையே மக்கள் மத்தியில் உருவாக்கும். சமாதானம், அமைதி என்பதெல்லாம் காணாமல் ஆக்கப்பட்ட பட்டியலில் இணைந்துவிடும்.

தமிழ் மக்கள் நலன்சார்ந்த விடயங்களுக்கு முழு ஆதரவும் வழங்கப்படும் என்பதே எமது கூட்டணியின் நிலைப்பாடாகும். இதன்காரணமாகவே ‘ தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம்’ அமைப்பதற்கான அழைப்பை எமது தலைவர் மனோ கணேசன் 8 ஆவது நாடாளுமன்றத்திலேயே விடுத்திருந்தார்.எனினும், அதற்கு தமிழ்த் தலைமைகள் சாதகமான பதிலை வழங்கவில்லை. ஆனாலும் தற்போது கூட்டு பயணம், ஒற்றுமையின் முக்கியத்துவம், அவசியத்தும் உணரப்பட்டுள்ளன. மக்களுக்காக இணைந்து செயற்படுவதற்கு நாமும் தயார். ” – என்றார்.

அதேவேளை, தியாகி திலீபனை நினைவுகூருவதற்கு அனுமதி வழங்கப்படவேண்டும் எனவும், தமிழ்க்கட்சிகள் ஒன்றிணைந்து பயணிப்பது வரவேற்ககூடிய விடயம் எனவும் மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வீ. இராதாகிருஷ்ணன் விசேட அறிக்கையொன்றின் ஊடாக அறிவித்துள்ளார்.

‘ZERO ERROR’ – குறுந்திரைப்பட வெளியீட்டு விழா 27 இல்….!

‘ZERO ERROR’ (தொடக்க பிழை) குறுந்திரைப்பட வெளியீட்டு விழா எதிர்வரும் 27 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு, ஹட்டன் சிவாலய கலாச்சார மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

சினிமா

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

செய்தி

அமைதி பேச்சை மீள ஆரம்பிக்குமாறு திருத்தந்தை கோரிக்கை!

0
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவர அமைதிப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் முன்னெடுக்குமாறு திருத்தந்தை லியோ, அறைகூவல் விடுத்துள்ளார். போரினால் அப்பாவி மக்கள் எதிர்நோக்கும் சொல்லொணாத் துயரங்களைக் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, மோதல்களைத் தவிர்த்து சர்வதேச...

யாழிலிருந்து சிவனொளிபாதமலைக்கு பாதயாத்திரை!

0
யாழ்ப்பாணத்திலிருந்து சிவனொளிபாதமலைக்கான புனித திருத்தல யாத்திரை, இன்று அதிகாலை வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலில் இருந்து பக்திப் பரவசத்துடன் ஆரம்பமானது. தொடர்ச்சியாகப் பத்தாவது ஆண்டாக இடம்பெறும் இந்த யாத்திரையில், சுமார் 60...

பிரதேச செயலகத்தை நோர்வூட்டுக்கு மாற்றுக: பொகவந்தலாவயில் நாளை கை எழுத்து இயக்கம் !

0
நோர்வூட் பிரதேச செயலகத்தை நோர்வூட் நகரத்தை அண்மித்து அமைக்கக் கோரும் கை எழுத்து இயக்கம் நாளை (25) பொகவந்தலாவ பகுதியில் இடம்பெறவுள்ளது. மலையக அரசியல் அரங்கம் முன்னெடுக்கும் இந்தத் தொடர் கை எழுத்துக்குத் தமது...