Home Blog Page 3849

‘பலாங்கொடை மாணவி படுகொலை’ -வெளியானது திடுக்கிடும் தகவல்

இரத்தினபுரி, பலாங்கொடை பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த பாடசாலை மாணவி ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட நிலையில், அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்பது மரண பரிசோதனைமூலம் தெரியவந்துள்ளது.

இம்முறை சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவிருந்த குறித்த மாணவி கடந்த 22 ஆம் திகதி வீட்டில் இருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார். இது தொடர்பில் பொலிஸ் விசாரணைகளும் இடம்பெற்றன.

பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

‘நினைவேந்தல் உரிமைக்காக வடக்கு, கிழக்கில் 28 இல் பூரண ஹர்த்தால்’

நினைவேந்தல் உரிமையை வலியுறுத்தி எதிர்வரும் 28 ஆம் திகதி வடக்கு, கிழக்கில் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று (ஹர்த்தால்) தமிழ் தேசியக் கட்சிகள் இன்று அறிவித்துள்ளன.

அத்துடன், நாளை மறுதினம் 26 ஆம் திகதி யாழ். தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய வளாகத்தில் உணவுதவிர்ப்பு போராட்டமும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தியாகி திலீபன் உட்பட தியாகிகளுக்கான நிவேந்தல் உரிமையை வென்றெடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்கு தமிழ் தேசியக் கட்சிகள் நேற்று மாலை யாழில் கூடின. இது விடயம் தொடர்பில் நீதிமன்ற தீர்ப்பு வெளியான பிறகு முடிவு அறிவிக்கப்படும் என கூறப்பட்டது. இன்று நீதிமன்ற தீர்ப்பு வெளியானது. நினைவேந்தலுக்கான தடை உத்தரவுநீடிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே அறவழிப்போராட்டத்துக்கு தமிழ்த் தேசியக்கட்சிகள் அழைப்புவிடுத்துள்ளன.

யார் இந்த சிவராஜா?

பெருந்தோட்ட சேவையாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளராக மூத்த தொழிற்சங்கவாதி பொ. சிவராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.
 
இவர் 1972 ம் ஆண்டு அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் காலந்தொட்டு அவரது அமைச்சின் பொதுஜன தொடர்பு அதிகாரியாக, பிரத்தியேகச் செயலாளராக, தொழிற்சங்கத்தில் நிருவாகச் செயலாளராக, உபதலைவராக என பல பதவிகளை வகித்தார்.
 
1999ஆம் ஆண்டு அமரர் ஆறுமுகன் தொண்டமான் அமைச்சராக இருந்த காலத்தில் கால்நடை அபிவிருத்தி தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் ஊடாக லங்கா லிபியன் நிறுவனத்தின் தலைவராக சிறிதுகாலம் பணியாற்றினார்.
 
2005ஆம் ஆண்டு தொடக்கம் 2009ஆம் வரையிலும் நுவரெலியா மாநகர சபையின் பிரதிமேயராக செயலாற்றினார். அதன் பின்னர் 2007 தொடக்கம் 2014ம் ஆண்டு வரை முன்னாள் ஊவா மாகாணசபை அமைச்சர் செந்தில் தொண்டமானின் பிரத்தியேகச் செயலாளராக பணியாற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
பிரதியமைச்சராக முத்து சிவலிங்கம் கடமையாற்றும் பொழுது அவரது பிரத்தியேகச் செயலாளராக செயற்பட்டார். மனித வள அபிவிருத்தி நிதியத்தின் பணிப்பாளர் சபையின் பணிப்பாளராகவும் சேவையை முன்னெடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

கோப் குழுவின் புதிய தலைவரின் மறுபக்கம்!

சிரேஷ்ட அரச அதிகாரி, கல்வியலாளர் மற்றும் பல்வேறு துறைகளில் செயற்பாட்டாளராக இருந்து ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கு தெரிவுசெய்யப்பட்ட பேராசிரியர் சரித்த ஹேரத் அவர்கள் கோப் குழு என அழைக்கப்படும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
பேராசிரியர் சரித்த ஹேரத் 1995 ஆம் ஆண்டு முதல் இற்றைவரை பேராதனை பல்கலைக்கழக தத்துவவியல் மற்றும் உளவியல் கல்விப் பிரிவின் விரிவுரையாளராக நீண்ட காலம் பணியாற்றிய அனுவபவம் வாய்ந்த ஒரு கல்வியலாளராவார்.
அவர் சுற்றுச்சூழல் நெறிமுறை பாதுகாப்பு (Conservation in Environmental Ethics) தொடர்பில் தனது கலாநிதிப் பட்டத்தைப் பெற்றுள்ளார்.
அடிப்படையில், அவரது அறிவார்ந்த ஈடுபாடு நவீன பகுப்பாய்வு தத்துவவியல் (Contemporary Analytical Philosophy) துறையில் உள்ளதோடு அவரது ஆய்வு பிற்கால விட்கன்ஸ்டைன் தத்துவம் மற்றும் சுற்றுச்சூழல் நெறிமுறை (Later Wittgenstein’s Philosophy and the Environmental Ethics) தொடர்பில் இடம்பெற்றுள்ளது.
அவர் தனது கலாநிதிப் பட்டத்தை பெறுவதற்கு முன்னர் அமெரிக்க புல்பிரைட் புலமைப்பரிசில் பெற்று அமெரிக்காவின் ஒஹியோ (Ohio) பல்கலைக்கழகத்தில் சமூக மற்றும் அரசியல் தத்துவம் தொடர்பில் பட்டப்பின் பட்டத்தை பெற்றுள்ளதோடு, சீன சிச்சுவான் பல்கலைக்கழகத்தில் சீன – இலங்கை நட்புறவு தொடர்பில் பட்டப்பின் பட்டத்தையும் பெற்றுள்ளார். சரித்த ஹேரத் பேராதனை பல்கலைக்கழக தத்துவவியல் மற்றும் உளவியல் கல்விப் பிரிவின் தலைவராக 2016 முதல் 2018 வரை பணியாற்றியுள்ளார்.
அதற்கு முன்னர் அவர் 2012 ஆம் ஆண்டு ஜுலை மாதம் முதல் 2015 வரை வெகுசன ஊடகம் மற்றும் தகவல் அமைச்சின் நிரந்தர செயலாளராக சேவையாற்றியுள்ளதோடு, 2010 மே மாதம் முதல் 2013 வரை மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் தலைவராகவும் செயற்பட்டுள்ளார்.
அவர், 2005 ஆம் ஆண்டு முதல் 2010 வரை வெகுசன ஊடகம் மற்றும் தகவல் அமைச்சின் ஆலோசகர் ஒருவராகவும் நீண்ட காலம் பணியாற்றியுள்ளார்.

அண்ணாத்த படப்பிடிப்பு ஒக்டோபரில் ஆரம்பம்…

சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் அண்ணாத்த படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

படப்பிடிப்பு நடத்த தற்போது அரசு சில தளர்வுகள் அளித்துள்ள நிலையில் ஒக்டோபர் முதல் வாரத்தில் ஐதராபாத்தில் மீண்டும் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதுவரை அண்ணாத்த படத்தின் 50% படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. மீதமுள்ள காட்சிகளை சென்னையிலேயே படமாக்க படக்குழு திட்டமிட்டிருப்பதாக முதலில் கூறப்பட்டது. அதில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் மற்றும் பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெரப் போன்றோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தற்போது ஐதராபாத்திலேயே மீண்டும் படப்பிடிப்பைத் தொடர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐதராபாத்தில் ஏற்கனவே போடப்பட்ட அரங்குகள் இப்போது என்ன சூழலில் உள்ளன என்பதைப் பார்த்துச் சரிசெய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக ஒட்டுமொத்தக் குழுவினரிடமும் திகதிகள் வாங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது

அமெரிக்காவில் 5 லட்சத்து 87 ஆயிரம் சிறார்களுக்கு கொரோனா!

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு தொடங்கியதில் இருந்து இதுவரை 5 லட்சத்து 87 ஆயிரம் சிறுவர்களு;ககு தொற்று ஏற்பட்டு உள்ளது.

அமெரிக்காவில் இதுவரை 71.04 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளன. உலக நாடுகளில் முதல் இடத்தில் உள்ள அந்த நாட்டில் பலி எண்ணிக்கை 2லட்சத்தை தாண்டியுள்ளது.

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட பின்னர் இதுவரை 5 லட்சத்து 87 ஆயிரத்து 948 சிறார்களுக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது என தெரிய வந்துள்ளது.

அவர்களில் கடந்த 3 ஆம் திகதியில் இருந்து 15 ஆம்திகதி வரை 74,553 குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் 2 வாரங்களில் 15 சதவீதம் அளவுக்கு பாதிப்பு அதிகரித்து உள்ளது.

அமெரிக்காவில் கொரோனா தொற்றுகளால் கடுமையான பாதிப்புகள் ஏற்படுவது குழந்தைகளிடம் அரிதாகவே காணப்படுகின்றன. எனினும், அவர்களுக்கு பரிசோதனை செய்வது, மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பது உள்ளிட்ட விவரங்களை தொடர்ந்து அனைத்து மாநிலங்களும் வழங்க வேண்டும் என கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

வயது, இனம் அடிப்படையிலான உயிரிழப்பு விகிதங்களையும் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனடிப்படையிலேயே கொரோனா பாதிப்புகளால் குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தில் ஏற்படும் விளைவுகள் பற்றி அறிந்து அதற்கேற்ப அவர்களை கண்காணிக்க முடியும் என கூறப்படுகிறது.

புஸல்லாவை சரஸ்வதி கல்லூரிக்கு மேலும் 15 மில்லியன் ரூபா – இந்தியா நடவடிக்கை

புஸல்லாவை சரஸ்வதி மத்திய கல்லூரியில், இந்திய அரசின் 80 மில்லியன் ரூபா இந்திய நிதி உதவியின்கீழ் சகல வசதிகளுடன் கூடிய கணித , விஞ்ஞான ஆய்வு கூடங்கள், கணினிக் கூடம், வகுப்பறைகள் மற்றும் நிர்வாக அலகுகளை உள்ளடக்கிய 4 மாடிக் கட்டடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மேற்படி கட்டடத் தொகுதிக்கு தேவையான அனைத்து ஆய்வுக்கூட உபகரணங்களையும், கணினிகளையும் வழங்குவதற்கு மேலும் 15 மில்லியன் ரூபாவை ஒதுக்குவதற்கு இலங்கைக்கான இந்திய தூதரகம் நடவடிக்கை எடுத்துவருகின்றது.

இது தொடர்பான மீளாய்வு கூட்டமொன்று கொழும்பில் அமைந்துள்ள இலங்கைக்கான இந்திய தூதரக அலுவலகத்தில், அரசியல் மற்றும் மேம்பாட்டு ஒத்துழைப்பு ஆலோசகர் திருமதி பானு பிரகாஷ் தலைமையில் நேற்று (23) நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சருமான கலாநிதி வே.இராதாகிருஸ்ணன், பாராளுமன்ற உறுப்பினர்களான வேலுகுமார், எம். உதயகுமார், கல்வி அமைச்சின் பாடசாலைகளுக்கான கட்டட அபிவிருத்திற்கான பணிப்பாளர் கலாநிதி அபேசுந்தர, பெருந்தோட்ட பாடசாலைகளுக்கான அபிவிருத்திட்ட பணிப்பாளர் எஸ்.முரளிதரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அத்துடன் புஸ்ஸல்லாவை சரஸ்வதி மத்திய கல்லூரியின் அதிபர் ஆர்.எஸ். ரவிசந்திரன் , பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் பா.திருஞானம், ஆசிரியர்களான பி.கமல்நாதன், ஜி.லோகேஸ்வரன் ஆகியோரும் சந்திப்பில் பங்கேற்றனர்.

அதேவேளை, இந்திய மத்திய அரசின் 395 மில்லியன் ரூபா நிதி உதவியின்கீழ் மலையகத்தில் தற்போது 10 பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. எதிர்காலத்தில் மேலும் சில பெருந்தோட்டப்பாடசாலைகள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளன.

பா.திருஞானம்

ரம்பதெனியவில் சரிந்தது பாரிய கற்பாறை! முடக்கியது போக்குவரத்து!!

கினிகத்தேன – கொழும்பு பிரதான வீதியில் ரம்பதெனிய பகுதியில் 24.09.2020 அன்று காலை 7 மணியளவில் பாரிய கற்பாறையொன்று சரிந்து விழுந்துள்ளது. இதனால் அவ்வீதி ஊடான போக்குவரத்து முற்றாக முடங்கியது.

இப்பகுதியில் மண்சரிவு ஏற்பட்டு மேலும் சில கற்பாறைகள் சரியக்கூடிய அபாயம் இருப்பதால் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

கற்பாறையை அகற்றி இயல்பு நிலை திரும்பும் வரை அட்டனிலிருந்து கொழும்பு செல்லும் அதேபோல கொழும்பில் இருந்து அட்டன் வரும் பயணிகள் மாற்று வழியை பயன்படுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.இதன்படி கலுகல, நோட்டன் பிரிட்ஜ், லக்ஷபான வீதியையும், தியகல, நோட்டன் பிரிட்ஜ் வீதியையும் பயன்படுத்துமாறுஅறிவுறுத்தப்பட்டுள்ளது.

200 சிக்சர்கள், அதிக ஓட்டங்கள் – சர்மாவின் இரட்டை சாதனை!

மும்பை அணியின் தலைவர் ரோஹித் சர்மா நேற்றைய ஆட்டத்தில் அடித்த 6 சிக்சர்களையும் சேர்த்து ஐ.பி.எல். தொடரில் அவரது ஒட்டுமொத்த சிக்சர் எண்ணிக்கை 200 ஆக உயர்ந்தது.

இதன்படி ஐ.பி.எல். வரலாற்றில் இந்த மைல்கல்லை எட்டிய 4ஆவது வீரர் என்ற சிறப்பை பெற்றார். அதிக சிக்சர் விளாசியவர்களில் கிறிஸ் கெய்ல் (326 சிக்சர்), டிவில்லியர்ஸ் (214), டோனி (212) ஆகியோர் முதல் 3 இடங்களில் உள்ளனர்.

ஐ.பி.எல்.-ல் குறிப்பிட்ட ஒரு அணிக்கு எதிராக அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா நேற்று படைத்தார். அவர் கொல்கத்தா அணிக்கு எதிராக மட்டும் இதுவரை 904 ஓட்டங்கள் சேர்த்து இருக்கிறார். இந்த வகையில் 2ஆவது இடத்தில் உள்ள ஐதராபாத் கேப்டன் வார்னர் கொல்கத்தாவுக்கு எதிராக 829 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.

கொல்கத்தாவை பந்தாடி முதல் வெற்றியை பதிவு செய்தது மும்பை!

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தாவை பந்தாடி மும்பை அணி முதலாவது வெற்றியை நேற்று பதிவு செய்தது.

8 அணிகள் பங்கேற்றுள்ள 13ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு அபுதாபியில் நடந்த 5-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்சுடன் மோதியது.

‘டாஸ்’ வென்ற கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் முதலில் மும்பையை பேட் செய்ய பணித்தார். இதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை அணியில் குயின்டான் டி காக் (1 ரன்) ஷிவம் மாவியின் பந்து வீச்சில் கேட்ச் ஆனார்.

இதன் பின்னர் கேப்டன் ரோகித் சர்மாவும், சூர்யகுமார் யாதவும் ஜோடி சேர்ந்து, எதிரணியின் பந்து வீச்சை பின்னியெடுத்தனர். சந்தீப் வாரியரின் ஓவரில் சூர்யகுமார் 4 பவுண்டரி சாத்தினார். வேகப்பந்து வீச்சாளர் கம்மின்சின் ஓவரில் இரு பிரமாதமான சிக்சர்களை பறக்க விட்டு ரோகித் சர்மாவும் ரன்வேட்டையை துரிதப்படுத்தினார். இதனால் அவர்களின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.

அணியின் ஸ்கோர் 98 ரன்களாக உயர்ந்த போது சூர்யகுமார் யாதவ் (47 ரன், 28 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்) ரன்-அவுட் ஆனார். அடுத்து வந்த சவுரப் திவாரி 21 ரன்களில் வெளியேறினார். மறுமுனையில் 37-வது அரைசதத்தை கடந்து தொடர்ந்து அதிரடியில் மிரட்டிய ரோகித் சர்மா சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் 80 ரன்களில் (54 பந்து, 3 பவுண்டரி, 6 சிக்சர்) ஆட்டம் இழந்தார்.

ஷிவம் மாவி புல்டாசாக வீசிய பந்தை தூக்கியடித்த போது சிக்கினார். பின்னர் ஹர்திக் பாண்ட்யா (18 ரன்), பொல்லார்ட் (13 ரன், நாட்-அவுட்) ஆகியோரின் கடைசிகட்ட பங்களிப்புடன் மும்பை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் குவித்தது. கொல்கத்தா தரப்பில் ஷிவம் மாவி 2 விக்கெட்டும், சுனில் நரின், ரஸ்செல் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். ஏலத்தில் ரூ.15½ கோடிக்கு வாங்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் 3 ஓவர்களில் 49 ரன்களை அள்ளி கொடுத்தாரே தவிர ஒரு விக்கெட்டும் எடுக்கவில்லை.

அடுத்து 196 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய கொல்கத்தா அணி, பும்ரா, டிரென்ட் பவுல்ட், பேட்டின்சன் உள்ளிட்ட மும்பை பவுலர்களின் துல்லியமான பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறியது. அபாயகரமான பேட்ஸ்மேன்களான ஆந்த்ரே ரஸ்செல் (11 ரன்), மோர்கன் (16 ரன்) ஜொலிக்கவில்லை. அதிகபட்சமாக கம்மின்ஸ் 4 சிக்சருடன் 33 ரன்களும், கேப்டன் தினேஷ் கார்த்திக் 30 ரன்களும் எடுத்தனர்.

கொல்கத்தா அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 146 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் மும்பை அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது ஆட்டத்தில் ஆடிய மும்பை அணிக்கு இது முதலாவது வெற்றியாகும். தொடக்க ஆட்டத்தில் சென்னை அணியிடம் தோற்று இருந்தது.

சினிமா

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

செய்தி

அமைதி பேச்சை ரத்து செய்தார் ட்ரம்ப்!

0
ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையில் பாகிஸ்தானில் நடைபெறவிருந்த 2ஆம் கட்ட பேச்சுவார்த்தையை ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் திடீரென ரத்து செய்துள்ளார். ஈரான் தலைவர்களிடையே நிலவும் குழப்பமே இதற்குக் காரணம் எனக் கூறியுள்ள ட்ரம்ப், பேச்சுவார்த்தைக்கு ஈரான்...

110 கிலோ போதைப்பொருளுடன் 22 பிக்குகள் கைது!

0
1.1 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான மதிப்புள்ள, போதைப்பொருள்களை கடத்தி வந்த 22 பௌத்த பிக்குகள், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேசவிமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். புலனாய்வுத் தகவலின் அடிப்படையில், காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த...

ஹட்டனில் மே 1 சித்தர் யாகம்!

0
ஓம் ஸ்ரீ ராஜ ராஜேஸ்வர ஆஸ்ரமத்தின் குருநாதர் சுவாமி கணபதி அவர்களின் ஆசியுடன் எதிர்வரும் 01.05.2026 அன்று மாபெரும் சித்தர் யாகமும் அதனைத் தொடர்ந்து 02.05.2026 திருவாசகம் முற்றோதல் நிகழ்வும் இடம்பெற இருக்கிறது. சுவாமி...