Home Blog Page 3863

ஆஸ்திரேலிய அணி 19 ஓட்டங்களால் வெற்றி

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்ரேலிய அணி 19 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து களத்தடுப்பை தேர்வு செய்தது. இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலியா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்களை இழந்து 294 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

துடுப்பாட்டத்தில் அந்த அணியின் கிளேன் மெக் ஷ்வேல் 77 ஓட்டங்களையும் மிட்ஷல் மார்ஷ் 73 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டனர்.

பந்துவீச்சில் இங்கிலாந்து அணியின் ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் மார்க் ஹூட் ஆகியோர் தலா 3 விக்கட்களை வீழ்த்தினர். தொடர்ந்து 295 என்ற வெற்றியிலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்களை இழந்து 275 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.

துடுப்பாட்டத்தில் அந்த அணியின் சாம் பில்லிங்ஸ் 118 ஓட்டங்களையும் ஜோனி போர்ஸ்டவ் 84 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டனர். பந்துவீச்சில் அவுஸ்ரேலியா அணியின் அடம் ஷாம்ப்பா 4 விக்கட்களை வீழ்த்தினார்.

‘மரண அறிவித்தல்’ விடுத்து மீரா மிதும் மீண்டும் சர்ச்சை!

சர்ச்சைக்கு பெயர் போன நடிகை மீரா மிதுன் தன்னைத்தானே இறந்து விட்டதாக அறிவித்துக் கொண்டிருக்கிறார்.

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான மீராமிதுன் அவ்வப்போது தனது டுவிட்டரில் சர்ச்சைக்குரிய பதிவு செய்து பரபரப்பை ஏற்படுத்தி வருவார். குறிப்பாக முன்னணி நடிகர்கள் மீது அவர் கூறும் குற்றச்சாட்டுகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில் மீராமிதுன் இறந்து விட்டதாகவும் போஸ்ட்மார்ட்டம் பணிகள் நடைபெற்று வருவதாகவும் பொலிஸார் விசாரணையை தொடங்கி விட்டதாகவும் அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனை அடுத்து மீராவே இந்த பதிவை செய்தாரா அல்லது அவரது டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டு யாரேனும் மர்ம நபர்கள் பதிவு செய்தார்களா? என்ற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.

மூன்றாவது கணவருக்காக வனிதா நடத்திய ‘பண மாலை’ பூஜை

நடிகை வனிதா விஜயகுமார், தனது கணவர் பீட்டர் பாலுடன் கழுத்தில் பண மாலை அணிந்து வீட்டில் சிறப்பு பூஜை நடத்தி இருக்கிறார்.

நடிகை வனிதா விஜயகுமார் சில மாதங்களுக்கு முன்பு பீட்டர் பால் என்பவரை 3ஆவது திருமணம் செய்துக் கொண்டார். பீட்டர் பாலுக்கும் ஏற்கனவே திருமணமாகி மனைவியும், குழந்தையும் உள்ளனர். முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் வனிதாவை மணந்ததாக சர்ச்சை எழுந்தது. இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், பீட்டர் பாலுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை முடிந்து பீட்டர் பால் வீடு திரும்பி இருக்கும் நிலையில், வீட்டில் சிறப்பு பூஜை நடத்தி இருக்கிறார் வனிதா.

இரண்டு மகள்களுடன் வனிதா, பீட்டர் பால் இருவரும் கழுத்தில் பண மாலையுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்திருக்கிறார். தனது லட்சுமி குபேர பூஜை நடந்ததாகவும் 2020 ஆம் ஆண்டின் இனி வரக்கூடிய மாதங்களாவது அனைவருக்கும் நல்லதாக இருக்கட்டும் என்றும் இந்த ஆண்டை தன்னால் மறக்கவே முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தங்க சுரங்கம் இடிந்து 50 தொழிலாளர்கள் பலி

காங்கோ நாட்டில் தங்க சுரங்கம் இடிந்து விழுந்ததில் 50 தொழிலாளர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

காங்கோ நாட்டில் கிழக்கு பகுதியில் உள்ள கமிட்டுகா அருகே தங்க சுரங்கம் உள்ளது. இங்கு தொழிலாளர்கள் பலர் பணியாற்றி வருகிறார்கள். இந்தநிலையில் அப்பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் தங்க சுரங்கம் இடிந்து விழுந்தது. இதில் மண்ணுக்குள் தொழிலாளர்கள் பலர் சிக்கி கொண்டனர்.

50 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் சுரங்க தன்னார்வ தொண்டு நிறுவனம் தெரிவித்து உள்ளது. இது குறித்து அதிகாரிகள் கூறும்போது, “தங்க சுரங்கம் இடிந்ததில் தொழிலாளர்கள் பலர் சிக்கிக்கொண்டனர். ஒருவரால்கூட வெளியே வரமுடியவில்லை. சுமார் 50 தொழிலாளர்கள் சிக்கி உயிரிழந்துள்ளதாக தெரிகிறது” என்றார்.

இலங்கையில் ‘கொரோனா’வின் பிடிக்குள் இருந்து 2,983 பேர் தப்பினர்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில்  மேலும் 14 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்.

இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 2,983  ஆக அதிகரித்துள்ளது.

174  பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

‘அனுதாப பிரேரணை – உரையாற்றிய அனைவருக்கும் செந்தில் தொண்டான் நன்றி தெரிவிப்பு’

” மலையக மக்களுக்கு அரசியல் தலைமைத்துவம் வழங்கிவந்த தேசிய தலைவர் அமரர். ஆறுமுகன் தொண்டமானுக்கு அதிஉயர் சபையில் அனுதாபம் தெரிவித்து உரையாற்றிய அதேபோல் எங்களுக்கு ஆறுதல்கூறிய அனைத்து அரசியல் பிரமுகர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.” – என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும், பிரதம அமைச்சரின் பெருந்தோட்ட இணைப்பாளருமான செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் மறைந்த தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமானுக்கும் அனுதாபம் தெரிவிக்கும் பிரேரணைமீதான விவாதம் நேற்று (11) பாராளுமன்றத்தில் நடைபெற்றது.

அனுதாபம் தெரிவித்து உரையாற்றிய ஆளும், எதிரணி அரசியல் பிரமுகர்கள், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸினதும், மறைந்த தலைவர்களான சௌமியமூர்த்தி தொண்டமான், ஆறுமுகன் தொண்டமான் ஆகியோரினது அரசியல் மற்றும் தொழிற்சங்க வகிபாகத்தை பாராட்டி பேசியதுடன், மலையக மக்களுக்கான காங்கிரஸின் முக்கியத்துவத்தையும் பட்டியலிட்டுக்காட்டினர்.

இந்நிலையில் அனுதாபம் தெரிவித்த அரசியல் பிரமுகர்களுக்கு நன்றி தெரிவித்து செந்தில் தொண்டமானால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

” மறைந்த எமது தலைவர் ஆறுமுகன் தொண்டமானுக்கு அனுதாபம் தெரிவிக்கும் பிரேரணையை முன்வைத்து உரையாற்றிய பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கும், சபை முதல்வர் தினேஷ் குணவர்தனவுக்கும், ஆளுங்கட்சி பிரதம கொறடாவான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கும், எதிரணி பிரதம கொறடாவான லக்ஸ்மன் கிரியல்லவுக்கும் தொண்டமான் குடும்பத்தின் சார்பிலும், மலையக மக்களின் சார்பிலும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

அத்துடன், எமது தலைவரின் கடந்தகால அரசியல் பயணத்தை நினைவூட்டி அவருடனான அனுபவங்களை பகிர்ந்துகொண்டு, இன,மத, குல, கட்சி பேதங்களுக்கு அப்பால் அவர் மக்களுக்கு ஆற்றியுள்ள சேவைகளை பாராட்டிய இலங்கைத் தமிழரசுக்கட்சி, ரெலோ, புளொட், தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் தேசிய மக்கள் கூட்டணி, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஈ.பி.டி.பி, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சமசமாஜக்கட்சி, ஜனநாயக இடதுசாரி முன்னணி, பொதுஜன ஐக்கிய முன்னணி, தேசிய காங்கிரஸ் ஆகியவற்றின் தலைவர்களுக்கும், உறுப்பினர்களுக்கும் நன்றிகளை சமர்ப்பித்துக்கொள்கின்றேன்.

தலைவரின் மறைவால் சமுகமும், குடும்பமும் தவித்துக்கொண்டிருக்கையில் இரங்கல் தெரிவித்து, ஆறுதல்கூறி, அடுத்தக்கட்டம் நோக்கி பயணிப்பதற்கான நீங்கள் வழங்கிய ஆலோசனைகள் எங்களுக்கு உற்சாகமளிக்கின்றது. அதுமட்டுமல்ல எமது தலைவர்கள்மீது நாடும், அரசியல் தலைவர்களும் வைத்துள்ள நம்பிக்கையை கட்டிக்காக்கும் வகையில் அரசியல் பயணத்தை முன்னெடுப்போம். எனவே, அனைவருக்கும் மீண்டுமொருமுறை நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.” – என்றார்.

அரசுக்கு ஆதரவளிக்க 10 எதிரணி எம்.பிக்கள் முடிவு!

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு எதிரணியைச்சேர்ந்த 10 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளிக்கவுள்ளனர் என ‘மௌபிம’ என்ற சிங்கள வாரஇதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இவர்கள் இரு அடிப்படையில் ஆளுங்கட்சிக்கு ஆதரவு வழங்கவுள்ளனர் என சிரேஷ்ட அமைச்சரொருவரை மேற்கோள்காட்டி குறித்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி 20 வாக்கெடுப்புக்கு விடப்படும்போது ஒரு குழு ஆளுங்கட்சியுடன் இணையும் எனவும், மற்றைய தரப்பு எதிரணியில் இருந்தவாறே அரசின் திட்டங்களுக்கு ஆதரவு வழங்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘சர்வாதிகாரியாக செயற்படும் தோட்டதுரை’ – செம்புவத்தயில் தொழிலாளர்கள் போராட்டம்!

சர்வாதிகாரிபோல் செயற்படும் தோட்டதுரையை உடனடியாக இடமாற்றம் செய்யுமாறு வலியுறுத்தி ஹட்டன், செம்புவத்த தோட்ட தொழிலாளர்கள் (12.09.2020) இன்று தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

சம்பளத்தை குறைத்து, நிபந்தனைகளை விதித்து தொழிலாளர்களின் அடிவயிற்றில் அடிக்கும் துரையை வெளியேற்றும்வரை போராட்டம் தொடரும் எனவும் தோட்ட மக்கள் அறிவித்துள்ளனர்.

ஹட்டன் பிளான்டேசன் நிர்வாகத்தின் கீழ் தான் செம்புவத்த தோட்ட மக்கள் தொழில் புரிகின்றனர். அத்தோட்டத்துக்கு ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் புதிய முகாமையாளர் (துரை) ஒருவர் வந்துள்ளார். அவர் வந்த பின்னரே ‘அராஜக முகாமைத்துவம்’ ஆரம்பமானது என தொழிலாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

” வறட்சியான, குளிரான காலத்திலும் 18 கிலோ பறித்தால்தான் ஒரு நாள் பெயர், அவ்வாறு இல்லாவிட்டால் அரை நாள் பெயரே வழங்கப்படுகின்றது. இது தொடர்பில் பல தடவைகள் சுட்டிக்காட்டியும், தொழிற்சங்கங்களை நாடியும் தீர்வு கிடைக்கவில்லை. தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்ட முற்பட்டால் வெளியில் இருந்து ஆட்களை அழைத்துவந்து கொழுந்து பறிக்கும் நடவடிக்கையில் துரை ஈடுபடுகின்றார்.

சம்பளம் குறைவாக வழங்கப்படுவதை சுட்டிக்காட்டினால், மற்றையதொரு வவுச்சர்மூலமே எஞ்சிய கொடுப்பனவு வழங்கப்படுகின்றது. இதனால் ஊழியர் சேமலாப நிதி. சேவை கொடுப்பனவு உள்ளிட்டவற்றிலும் தாக்கம் ஏற்படுகின்றது. இப்படி பல அடக்குமுறைகள் தொடர்கின்றன. இவற்றுக்கு எதிராக தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தயாரானோம். பேச்சுவார்த்தைமூலம் தீர்வு காண்போம். தொழிலுக்கு செல்லுமாறு தொழிற்சங்க தலைவர்கள் அறிவித்தனர். ” என்றும் மக்கள் குறிப்பிடுகின்றனர்.

தொழிற்சங்க தலைவர்களின் கோரிக்கையை ஏற்று நாம் நேற்று தொழிலுக்கு சென்றோம். ஆனாலும் ‘நான்தான் துரை. எனது அனுமதியின்றி எப்படி நீங்கள் மலைக்கு செல்லமுடியும்’ என துரை மிரட்டியதுடன் கொழுந்து நெறுப்பதற்கும் மறுப்பு தெரிவித்துள்ளார். அதிகாரிகளையும் அனுப்பவில்லை. இதனால் நாம் கொழுந்தை மடுவத்தில் கொட்டி எதிர்ப்பில் ஈடுபட்டோம்.

இன்று (12) காலையும் பெரட்டுகளம் வந்தோம்.ஆனால் துரை வரவில்லை. அதிகாரிகளும் இல்லை. சிலவேளை நாங்கள் வேலைக்குசென்றால் வேறுகாரணங்களைக்கூறி பழிவாங்கலாம். எனவே. இந்த துரைக்கு இடமாற்றம் வழங்கப்படும்வரை நாம் போராடுவோம். தோட்டத்திலுள்ள 15 ஏக்கர் காணியையும் இவர் வெளியாருக்கு வழங்கியுள்ளார்.” – எனவும் தொழிலாளர்கள் உள்ளக்குமுறல்களை வெளிப்படுத்தினர்.

க.கிசாந்தன்

20′ ஆவது திருத்தச்சட்டமூலம் 22 இல் பாராளுமன்றத்தில் முன்வைப்பு

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டமூலம் எதிர்வரும் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது என அறியமுடிகின்றது.

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டத்தை இல்லாதொழித்து, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி வசம் அதிகாரங்களை குவிக்கும் விதத்திலான ’20’ ஆவது திருத்தச்சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் ’20’ உள்ள சில சரத்துகளுக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. குறிப்பாக இரட்டைக்குடியுரிமை தொடர்பில் ஆளுங்கட்சிக்கு சார்பான அமைப்புகள்கூட விசனம் வெளியிட்டுள்ளன. இவ்வாறான விடயங்களை பாராளுமன்றத்தில் குழுநிலை விவாதத்தின்போது அரசாங்கம் திருத்தக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

செப்டம்பர் மாதத்துக்கான இரண்டாவது பாராளுமன்ற கூட்டத்தொடர் எதிர்வரும் 22 ஆம் திகதி ஆரம்பமாகின்றது. அன்றைய தினமே நீதி அமைச்சரால் முதலாம் வாசிப்புக்கென ’20’ சபையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

அதேவேளை, அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலத்திலுள்ள சில சரத்துகளை சட்டரீதியாக உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்துவதற்கு சில சிவில் அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் தீர்மானித்துள்ளன.

‘சிங்கராஜா வனாந்தர எல்லைகளில் தேயிலை செய்கை வேண்டாம்’

சிங்கராஜா வனாந்தர எல்லைகளில் தேயிலை செய்கை மற்றும் காடழிப்புக்களில் ஈடுபட வேண்டாம் என்று பெருந்தோட்ட நிர்வாகங்களுக்கு நீர்வளத்துறை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சிங்கராஜா எல்லை கிராமங்களில் இடம்பெற்ற மரம் நாட்டும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

வெளிநாட்டவர்கள் ஆதிக்க காலத்தில் நாட்டில் இருந்த இலட்சக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டு நாசமாக்கப்பட்டன. இப்பிரதேசத்தில் உள்ள காணிகளின் பிரதான உரிமை சிங்கராஜா வனத்திற்குரியதாகும்

1818 களில் இலங்கையை ஆண்ட வெளிநாட்டு சக்திகள் நாட்டிலுள்ள பல இலட்சம் மரங்களை வெட்டி சாய்த்தனர். இவ்வாறு வெட்டியழிக்கப்பட்ட ஒவ்வொரு மரத்திற்கும் பதிலாக 10 மரங்களை நடுவதே எனது இலட்சியமாகும். நீர்நிலைகளை முகாமைத்துவம் செய்யும் பொறுப்பை நீ ர் விநியோக திணைக்களத்துக்கு வழங்குவது தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்தாலோசிக்கவுள்ளேன்.

சிங்கராஜா வனத்தின் வளம் மிக்க பிரதேசங்களில் நீர் நிலைகள் வற்றிக்காணப்படுகின்றன. காடுகளை துப்புரவு செய்வதும் நீரை வெளியே எடுத்துச் செல்வதும் இந்நிலைமைக்கு காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

நீரின் பெறுமதியை உணர்ந்து நாம் எமது பகுதிகளில் மிகுதியாக உள்ள மேலதிக நீரை கஷ்டப்படும் மக்களுக்கு முறையான விதத்தில் வழங்குவதற்கு கருணை காட்ட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

‘கடல் கடந்த இந்தியக் குடியுரிமை’ – இந்திய அரசுக்கு இதொகா நன்றி!

0
இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மக்கள் கடல் கடந்த இந்தியக் குடியுரிமையை பெற்றுக் கொள்வதற்கான நடைமுறையை இலகுபடுத்தியுள்ள இந்திய அரசாங்கத்துக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், முன்னாள் பாராளுமன்ற...

வரலாறு படைத்த தமிழக தேர்தல்: 84,29 சதவீத வாக்கு பதிவு!

0
2026 தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில், மாலை 6 மணி நிலவரப்படி 84.41% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக கரூரில் 91.97% வாக்குகள் பதிவாகியுள்ளன. குறைந்தபட்சமாக கன்னியாகுமரியில் 75.48% வாக்குகள் பதிவாகியுள்ளன. 6 மணிக்குப் பின் டோக்கன்...

ஹார்முஸ் நீரிணையில் கண்ணிவெடி வைக்கும் படகுகளை அழிக்க ட்ரம்ப் உத்தரவு!

0
ஹார்முஸ் நீரிணையில் கண்ணிவெடிகளை வைக்கும் படகுகளை சுட்டு வீழ்த்துமாறு அமெரிக்க கடற்படைக்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். ஈரானுக்கு அருகிலுள்ள முக்கிய கடல் பகுதியில் சிறிய ரக படகுகள் இத்தகைய செயல்களில் ஈடுபட்டால், தயக்கமின்றி...