Home Blog Page 3864

சபாநாயகர் அரசமைப்பை மீறிவிட்டார் – எதிர்க்கட்சி தலைவர் குற்றச்சாட்டு

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஒருவருக்கு நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்வதற்கு அனுமதி வழங்கியதன் ஊடாக சபாநாயகர் அரசியலமைப்பை மீறிவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (11) சபையில் சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்றம் நேற்று முற்பகல் 10.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. இதன்போது ஒழுங்குப்பிரச்சினையொன்றை எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச,

” 1982 இல் ரெலோவின் தலைவரான குட்டி மணி என்றழைக்கப்படும் செல்வராஜா யோகச்சந்திரனின் பெயர் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டது. அவரின் பெயரை தேர்தல் ஆணையாளர் வர்த்தமானியிலும் அறிவித்தார்.அது தொடர்பில் நாடாளுமன்ற செயலாளருக்கும் கடிதம் அனுப்பட்டிருந்தது.

பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்டிருந்த குட்டி மணிக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில் அதற்கு எதிராக அவர் மேன்முறையீடும் செய்திருந்தார். எனினும், அவர் நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்வதற்கான வாய்ப்பை அப்போதைய சபாநாயகர் பாக்கீர் மாக்கார் வழங்கவில்லை. அரசியலமைப்பின் 89 மற்றும் 91 ஆவம் சரத்துகளுக்கமையவே அன்று சபாநாயகர் கொள்கை அடிப்படையில் இந்த முடிவை எடுத்து சிறந்த முன்னுதாரணத்தை வழங்கினார்.

இவ்வாறு வழங்கப்பட்டிருந்த முன்னுதாரணத்தையும், அரசியலமைப்பின் 89 மற்றும் 91 ஆம் சரத்துகளையும் மீறியே நீங்கள் (சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன) அண்மையில் தீர்மானம் எடுத்துள்ளீர்கள். நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டிய அதேவேளை அரசியலமைப்பை பாதுகாக்க வேண்டிய கடப்பாடும் சபாநாயகருக்கு இருக்கின்றது.” – என்றார்.

இதற்கு பதிலளித்த சபாநாயகர்,

” மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்மானத்தின் பிரகாரமே நாம் செயற்பட்டோம்.” – என்றார்.
எனினும், நீதிமன்றம் தீர்ப்பு வழங்கினாலும் சுயாதீனமாக முடிவெடுக்கும் அதிகாரம் சபாநாயகருக்கு இருக்கின்றது என சஜித்தும், லக்‌ஷ்மன் கிரியல்லவும் சுட்டிக்காட்டினர். சபாநாயகராக இருந்த அனுர பண்டாரநாயக்கவால் எடுக்கப்பட்ட தீர்மானத்தையும் சுட்டிக்காட்டினர்.

‘GOPIO’ அமைப்புடனான உறவை துண்டிக்க முற்போக்கு கூட்டணி முடிவு!

‘Global Organisation of People of Indian Origins’ என்ற அமைப்புடன் எவ்வித உறவுகளையும் பேணாதிருக்க தமிழ் முற்போக்கு கூட்டணி தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் கூட்டணியின் தலைவர் மனோ கணேசனின் முகநூல் பதிவு வருமாறு,

இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்களை உலகளவில் பிரதிநிதித்துவம் செய்வதாக கூறிக்கொள்ளும், GOPIO என்ற (Global Organisation of People of Indian Origins) அமைப்பு நேற்று முதல் நாள் இரவு கொழும்பின் பிரபல ஐந்து நட்சத்திர விடுதியில், புதிய இந்திய தூதர் கோபால் பாக்லேவுக்கு வரவேற்பு நிகழ்வை நடத்தியது.

புதிய இந்திய தூதுவரை, தமிழ் முற்போக்கு கூட்டணி ஏற்கனவே அதிகாரபூர்வமாக சந்தித்து உரையாடல்களை நடத்தியிருந்தாலும், சமூக நலனையும், பண்பாட்டு நாகரீத்தையும் கருதி,இந்த நிகழ்வு ஏற்பாட்டாளர்களின் அழைப்பை ஏற்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் எம்பீக்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.

எனினும் இந்நிகழ்வின் ஏற்பாட்டுக்குழுவில் இருக்கும் ஒருசில பெரிய மனிதர்களின் சிறிய மதி காரணமாக, தமிழ் முற்போக்கு கூட்டணி அவமானப்படுத்தபட்டுள்ளது.

கடைசியாக நடைபெற்ற தேர்தலில், 345,000 மொத்த வாக்குகளுடன் மீண்டும் ஆறு எம்பீக்களை பாராளுமன்றத்துக்கு கொண்டு வந்து, வடக்கு கிழக்குக்கு வெளியே வாழும் மலையக மக்களின் மிகப்பெரிய அரசியல் இயக்கமாக பரிணமித்துள்ள தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு, உரிய அந்தஸ்த்தை தருவதற்கு, இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்களை உலகளவில் பிரதிநிதித்துவம் செய்வதாக கூறிக்கொள்ளும், GOPIO என்ற அமைப்புக்கு தெரியவில்லை.

ஆளும் தரப்பில் இருந்தாலும், எதிர்தரப்பில் இருந்தாலும், மிக அதிகமான மக்கள் பிரதிநிதிகளை கொண்ட அமைப்பை அங்கீகரிக்கும் சமூக நாகரீகம் இந்த அமைப்புக்கு புரியவில்லை.

தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு தரப்படும் மரியாதை, இந்த இயக்கத்துக்கு நுவரெலியா, கொழும்பு, கண்டி, பதுளை, இரத்தினபுரி, கேகாலை, கம்பஹா ஆகிய மாவட்டங்களில் இருந்து வாக்களித்த மக்களுக்கு தரப்படும் மரியாதை என்பதை இவர்கள் அறியவில்லை.

இந்த அமைப்பை தனது தனிபட்ட செல்வாக்குக்கு உள்ளாக்கி வைத்திருக்கும் ஒரு வயதான முன்னாள் எம்பி ஒருவர், தான் இப்போது இருக்கின்ற கட்சி விசுவாசத்தின் அடிப்படையில், தனது வங்குரோத்து அரசியல் காழ்ப்புணர்வின் காரணமாக, இந்த அமைப்பை பயன்படுத்தி, இந்த அமைப்பில் இருக்கும் ஏனையோரையும் தவறாக வழிநடத்தியுள்ளார் என நேற்று, பாராளுமன்ற வளாகத்தில் கூடிய தமிழ் முற்போக்கு கூட்டணியின் பாராளுமன்ற குழு கூட்டத்தில் கருத்துகள் பரிமாறப்பட்டு கண்டறியப்பட்டது.

இனிவரும் எதிர்காலத்தில் GOPIO என்ற இந்த அமைப்புடன் எந்தவித உறவுகளையும் தமிழ் முற்போக்கு கூட்டணி பேணக்கூடாது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

இது தொடர்பில் தமுகூ பாராளுமன்ற குழு கொறாடா அருண் அரவிந்தகுமார் எம்பி உரிய தரப்புகளுக்கு அதிகாரபூர்வமாக அறிவிப்பார்.

‘மக்களின் இதயங்களில் வாழ்கிறார் எனது தந்தை – அவரின் கொள்கையும் சாகாது’

தலைவர் ஆறுமுகன் தொண்டமான் மறைந்திருந்தாலும் அவரின் கொள்கைகள் இன்னும் வாழ்கின்றது. அதனை தொடர்ந்தும் முன்னெடுப்போம். மக்களின் மனங்களில் அவர் வாழ்கின்றார் – என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
அமரர் ஆறுமுகன் தொண்டமானுக்கு சபையில் இன்று அனுதாபம் தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்து உரையாற்றுகையிலேயே ஜீவன் தொண்டமான் மேற்கண்டவாறு கூறினார்.
” அனுதாப பிரேரணை ஊடாக தலைவர் அமரர். ஆறுமுகன் தொண்டமானுக்கு மரியாதை செலுத்திய, அனுதாபம் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்.
 
மறைந்த தலைவர் எனது தந்தை ஆறுமுகன் தொண்டமான் கடந்த 26 ஆண்டுகளாக எமது மக்களுக்காக பல சேவைகளை ஆற்றியுள்ளார். தொழிற்சங்கம், அரசியல் என மக்களுக்கு உண்மையான சேவையை வழங்கியுள்ளார்.
 
பெருந்தோட்ட மக்களின் குழந்தைகளுக்கு கணணி கல்வி வழங்குவதற்கு அன்றே நடவடிக்கை எடுத்தார். தூரநோக்கு சிந்தனை அடிப்படையில் அவர் செயற்பட்டார்.
 
தந்தை இறந்திருந்தாலும் லட்சக்கணக்கான மக்களின் இதயங்களில் அவர் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார். அவரின் கொள்கைகளும் ஒருபோதும் சாகாது.” – என்றும் ஜீவன் தொண்டமான் குறிப்பிட்டார்.

‘பாடசாலை மாணவர்களுக்கு தினமும் ஒரு முட்டை’ – பிரதமர் மஹிந்த யோசனை

பாடசாலை மாணவர்களின் போசணை மட்டத்தை மேம்படுத்துவதற்கு தினமும் ஒரு முட்டையை வழங்குவது தொடர்பில் ஆராயுமாறு கல்வி அமைச்சருக்கு அறிவுறுத்தியுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று 2020.09.11 தெரிவித்தார்.

பேக்கரி உரிமையாளர்களின் சங்கத்தினர் மற்றும் முட்டை உற்பத்தியாளர்களின் சங்கத்தினர் ஆகியோரை விஜேராம உத்தியோகப்பூர்வ இல்லத்தில் சந்தித்த போதே பிரதமர் இதனை குறிப்பிட்டார்.

பேக்கரி உற்பத்திகளில் முட்டை விலை தாக்கம் செலுத்தும் விதம் குறித்து பேக்கரி உரிமையாளர்களின் சங்கத்தினர் பிரதமருக்கு தெளிவுபடுத்தியதுடன், முட்டை உற்பத்தியில் ஏற்படும் அதிக செலவினங்கள் தொடர்பில் முட்டை உற்பத்தியாளர்கள் விளக்கமளித்தனர்.

நாட்டின் அனைத்து பேக்கரி உற்பத்தி நிறுவனங்களுக்கும் நிலையான மொத்த விலைக்கு முட்டையை பெற்றுக் கொடுப்பதற்கு முடியுமானதாக அமையும் என முட்டை உற்பத்தியாளர்களின் சங்கம் குறித்த சந்திப்பின் போது தெரிவித்தது.

அதற்கமைய நுகர்வோருக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் இரு சங்கங்களுக்கும் இடையே ஒரு உடன்பாட்டிற்கு வருமாறு சம்பந்தப்பட்ட பிரதிநிதிகளுக்கு பிரதமர் அறிவித்தார்.

கோழி குஞ்சு ஒன்றின் விலையை ரூபாய் 175-200 இற்கும் இடையே குறைப்பது தொடர்பிலும் முட்டை உற்பத்தியாளர்கள் மற்றும் பேக்கரி உரிமையாளர்களுக்கான உடன்பாடு விடயத்தில் தலையீடு செய்யுமாறும் துறை சார்ந்த அமைச்சர்களுக்கு இச்சந்திப்பின் போது பிரதமர் அறிவுறுத்தினார்.

குறித்த சந்தர்ப்பத்தில் சந்தைப்படுத்தல் கூட்டுறவு சேவைகள் சந்தை அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன, கால்நடை வளங்கள், பண்ணைகள் மேம்பாடு, பால் மற்றும் முட்டை சார் தொழில் இராஜாங்க அமைச்சர் டி.பி. ஹேரத், பிரதமரின் மேலதிக செயலாளர் அமந்தா கருணாதிலக மற்றும் முட்டை உற்பத்தியாளர்கள் மற்றும் பேக்கரி உரிமையாளர்கள் சங்கங்களின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

‘கோப், கோபா குழுக்களில் மலையக எம்.பிக்கள் இல்லை’

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் கோப் மற்றும் கோபா குழுக்குகளுக்கு மலையக பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் உள்வாங்கப்படவில்லை.

அரச பொறுப்பு முயற்சிகள் பற்றிய (கோப்) குழு மற்றும் அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவுக்கு (கோபா) நியமிக்கப்பட்டுள்ளவர்களின் பெயர் விபரங்களை சபாநாயகர் இன்று பாராளுமன்றில் அறிவித்தார்.

பாராளுமன்றில் இரண்டு குழுக்களாக இவை இரண்டும் உள்ளன. என்றாலும் இந்த இரண்டு குழுக்களுக்கும் மலையகத்தின் சார்பில் எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும் உள்வாங்கப்படவில்லை.

கோப் குழுவின் உறுப்பினர்களாக, மஹிந்த அமரவீர, மஹிந்தானந்த அளுத்கமகே, ரோஹித அபேகுணவர்தன, சுனில் பிரேமஜயந்த, ஜயந்த சமரவீர, திலும் அமுனுகம, இந்திக அனுருத்த, சரத் வீரசேகர, டி.வி.சானக்க, நாலக கொடஹெவா, அஜித் நிவாட் கப்ரல், ரவூப் ஹக்கீம், அனுரகுமார திஸாநாயக்க, சம்பிக்க ரணவக்க, ஜெகத் புஷ்பகுமார, எரான் விக்ரமரட்ன, ரஞ்சன் ராமநாயக்க, நளின் பண்டார, எஸ்.எம். மரிக்கார், பிரேம்நாத் சி.தொலவத்த, இரா.சாணக்கியன், சரித ஹேரத் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கோபா குழுவின் உறுப்பினர்களாக உதய கம்மன்பில, துமிந்த திஸாநாயக்க, தயாசிறி ஜயசேகர, லசந்த அழகியவன்ன, சுதர்ஷினி பெர்னாந்துப்புள்ளே, செஹான் சேமசிங்க, பிரசன்ன ரணவீர, திஸ்ஸ அத்தநாக்க, திஸ்ஸ விதாரண, ஹரின் பெர்னாந்து, நிரோஷன் பெரேரா, பைஸால் காசிம், அசோக அபேசிங்க, புத்திக பத்திரன, காதர் மஸ்தான், சிவஞானம் சிறீதரன், உபுல் கலப்பத்தி, பீ.வை.ஜீ.ரத்னசேக்கர, வீரசுமன வீரசிங்க, ரஞ்சித் பண்டார, மொஹமட் முஸாமில், ஹரினி அமரசூரிய ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

‘கொரோனா’ – இலங்கையில் மேலும் 14 பேர் குணமடைவு

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில்  மேலும் 14 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்.

இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 2,969  ஆக அதிகரித்துள்ளது.

174  பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

‘மலையக மக்களை தமிழ்க் கூட்டமைப்பு ஒருபோதும் கைவிடாது- ஜீவனுக்கு முழு ஆதரவு’

” மலையக மக்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் கைவிடாது, அம்மக்களுக்காக தொடர்ந்தும் குரல் கொடுப்போம். ஜீவன் தொண்டமானின் அரசியல் பயணத்துக்கும் உதவிகளை வழங்குவோம்.” – என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

மறைந்த தலைவர் அமரர். ஆறுமுகன் தொண்டமானுக்கு அனுதாபம் தெரிவித்து பாராளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

” எனது நண்பன் ஆறுமுகன் தொண்டமானின் மறைவின் பின்னர், அவரின் மகனான தம்பி ஜீவன் தொண்டமானின் பாரிய பொறுப்பு கையளிக்கப்பட்டுள்ளது. எனவே, தேசிய இனமான மலையக மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான இந்த பணியை சுமையாக கருதவேண்டமாம், புனிதமான செயலாக கருதி செயற்படுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

மலையக மக்களுக்கு பிரச்சினை ஏற்படுகின்றபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நாமும், எமது வடக்கு, கிழக்கு மக்களும் உங்களுடன் நிற்போம், குரல் கொடுப்போம், இணைந்து பயணிப்போம். என்னுடைய நண்பனின் ஆத்மா சாந்தி அடைய வேண்டுமெனில் மலையகத்தில் வாழும் மக்களின் வாழ்க்கை மேம்பட வேண்டும்.

அந்த இலக்கை நோக்கி ஜீவன் தொண்டமான் பயணிக்க வேண்டும், அதற்கு எமது முழு ஒத்துழைப்பையும், ஆதரவையும் நாம் வழங்குவோம்.” – என்றார்.
சந்தர்ப்பம்.

லிந்துலையில் லொறிக்கு தீ வைப்பு – பலகோணங்களில் விசாரணை!

லிந்துலை பாமஸ்டன் பகுதியில் வீட்டிற்கு முன்பாக நிறுத்தி வைத்திருந்த லொறியை இனந்தெரியாத நபர்கள் தீயிட்டு கொளுத்திருக்கலாம் என சந்தேகிப்பதாக லொறியின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லிந்துலை, பாமஸ்டன் ரட்ணகிரி கிராம பகுதியில் 11.09.2020 அன்று அதிகாலை நேரத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

லிந்துலை பாமஸ்டன் ரட்ணகிரி கிராம பகுதியில் வசிக்கும் வீரசேகர பண்டார என்பவரின் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரின் லொறியே இவ்வாறு தீ வைக்கப்பட்டுள்ளது.

 காலை வேளையில் பார்த்த போது, லொறி எரிந்த நிலையில் காணப்பட்டதையடுத்து, இது தொடர்பாக லிந்துலை பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். அத்தோடு தீயினால் குறித்த நபரின் லொறி முழுமையாக சேதமாகியுள்ளது.

இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் லிந்துலை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

க.கிசாந்தன்

புலம்பெயர் தமிழ் முதலீட்டாளர்களை அலரி மாளிகைக்கு அழைத்து பிரதமர் பாராட்டு!

கனடா தமிழ் முதலீட்டாளர்களை இன்று, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, அலரி மாளிகைக்கு அழைத்திருந்தார்.

வடக்கு – கிழக்கில் இருக்கக்கூடிய முதலீடுகளை ஊக்கப்படுத்தும் முகமாகவும், மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் முகமாகவும் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பில் கனடாவில் இருக்கக்கூடிய முதலீட்டாளர்களான சுகந்தன் சண்முகநாதன் மற்றும் சதீஸ் ராஜலிங்கம் ஆகியோர் கலந்துக் கொண்டிருந்தனர்.

பனை அபிவிருத்தி நிறுவனத்துடன் இணைந்து சில வேலைத்திட்டங்களை செய்து வரக்கூடிய குறித்த இரண்டு முதலீட்டாளர்களும் வடக்கு – கிழக்கு மக்களை தொழில் ரீதியாக உள்ளவாங்கியதற்காக பிரதமர் பாராட்டுக்களை தெரிவித்தார்.

இச் சந்திப்பில் மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் கலந்துக் கொண்டிருந்தார்.

இச்சந்திப்பின்போது பிரதமர் அவர்கள் தற்போது நாட்டில் உள்ள சூழ்நிலையில் வடக்கு – கிழக்கு பகுதியில் தங்களின் முதலீடுகளை ஊக்கப்படுத்தி, அங்கு இருக்கக்கூடிய மக்களுக்குத் தொழில் வாய்ப்புகளை அதிகரித்துக் கொடுப்பதனூடாக அப் பகுதிகளில் தனியார் நிறுவனங்களை வெகுவிரைவில் அதிகரிக்க வேண்டுமெனவும், அம்முயற்சிக்குத் தான் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ உறுதியளித்தார்.

‘ஈழ விடுதலைப் போராட்டத்தை தொண்டமான் எதிர்க்கவில்லை’

” பெருந்தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமானின் வழியில் பெருந்தோட்ட மக்களின் எழுச்சிக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்தவர்தான் அமரர் ஆறுமுகன் தொண்டமான்.” – என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று அமரர் ஆறுமுகன் தொண்டமானுக்கு அனுதாபம் தெரிவித்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” சௌமியமூர்த்தி தொண்டமானும், ஆறுமுகன் தொண்டமானும் ஈழ விடுதலைப் போராட்டத்தை ஏற்றுக்கொள்ளாதவர்கள் என இங்கு கூறப்பட்டது.அது உண்மை அல்ல, ஈழத்தில் தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கு முழுமையான ஒத்துழைப்பை அவர்கள் வழங்கியிருந்தனர். பல மலையக இளைஞர்கள் போராட்டத்தில் மாவீரர்களாக மடிந்துள்ளனர்.

கிளிநொச்சிக்கு வருகைதந்திருந்த ஆறுமுகன் தொண்டமான், பிரபாகரனை சந்தித்து கலந்துரையாடியிருந்தார். அதேபோல் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி உதயமானபோது சௌமியமூர்த்தி தொண்டமான் அதன் இணைத் தலைவராக செயற்பட்டார். எனவே, ஈழ விடுதலையில் அவர்கள் ஒருபோதும் எதிர்க்கருத்தை கொண்டிருக்கவில்லை. மலையக மக்களும் எதிர்கருத்தைக்கொண்டிருக்கவில்லை. எனவே, ஈழத் தமிழர்களின் சார்பில் அமரர் ஆறுமுகன் தொண்டமானுக்கு அனுதாபம் தெரிவிக்கின்றேன்.” – என்றார்.

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

‘கடல் கடந்த இந்தியக் குடியுரிமை’ – இந்திய அரசுக்கு இதொகா நன்றி!

0
இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மக்கள் கடல் கடந்த இந்தியக் குடியுரிமையை பெற்றுக் கொள்வதற்கான நடைமுறையை இலகுபடுத்தியுள்ள இந்திய அரசாங்கத்துக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், முன்னாள் பாராளுமன்ற...

வரலாறு படைத்த தமிழக தேர்தல்: 84,29 சதவீத வாக்கு பதிவு!

0
2026 தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில், மாலை 6 மணி நிலவரப்படி 84.41% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக கரூரில் 91.97% வாக்குகள் பதிவாகியுள்ளன. குறைந்தபட்சமாக கன்னியாகுமரியில் 75.48% வாக்குகள் பதிவாகியுள்ளன. 6 மணிக்குப் பின் டோக்கன்...

ஹார்முஸ் நீரிணையில் கண்ணிவெடி வைக்கும் படகுகளை அழிக்க ட்ரம்ப் உத்தரவு!

0
ஹார்முஸ் நீரிணையில் கண்ணிவெடிகளை வைக்கும் படகுகளை சுட்டு வீழ்த்துமாறு அமெரிக்க கடற்படைக்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். ஈரானுக்கு அருகிலுள்ள முக்கிய கடல் பகுதியில் சிறிய ரக படகுகள் இத்தகைய செயல்களில் ஈடுபட்டால், தயக்கமின்றி...