Home Blog Page 3865

‘ஆறுமுகன் தொண்டமானின் கோரிக்கைகளை நிறைவேற்றுவோம்’ – பிரதமர்

” மலையக மக்கள் தொடர்பில் அமரர் ஆறுமுகன் தொண்டமான் முன்வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.” – என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று அமரர் ஆறுமுகன் தொண்டமானுக்கு அனுதாபம் தெரிவிக்கும் பிரேரணையை முன்வைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

“சௌமியமூர்த்தி இராமநாதன் ஆறுமுகம் தொண்டமான் அவர்களை நினைவுகூறும் போது சௌமியமூர்த்தி தொண்டமான் முதல் இலங்கை அரசியலுக்கு தொண்டமான் தலைமுறையினர் ஆற்றிய பங்களிப்பு எனக்கு நினைவிற்கு வருகிறது.

அதனால் ஆறுமுகம் தொண்டமான் அவர்களின் மறைவு அனைத்து பெருந்தோட்ட மக்களுக்கு போன்றே தனிப்பட்ட ரீதியில் எனக்கும் ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்திய சம்பவமாகும். அவரது உயிர் பிரிவதற்கு ஒரு சில மணிநேரங்களுக்கு முன்புகூட என்னை சந்தித்தார். குறித்த சந்திப்பின்போதும் பெருந்தோட்ட தொழிலாளர்களின் வளர்ச்சி மற்றும் அவர்களின் இடர்களை கலைவது தொடர்பிலேயே கலந்துரையாடியிருந்தார்.

1964ஆம் ஆண்டு மே 29ஆம் திகதி இந்தியாவில் பிறந்திருந்தாலும் தனது பாட்டனாரின் வழியில் சென்று ஆறுமுகம் தொண்டமான் அவர்கள் 1985ஆம் ஆண்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸினூடாக தீவிர அரசியலுக்குள் நுழைந்தார். 1994ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்திலிருந்து முதல் முறையாக பாராளுமன்றத்திற்கு தெரிவான அவர் 26 வருட காலங்கள் தொடர்ச்சியாக நுவரெலியா மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவாகும் பாக்கியத்தை கொண்டிருந்தார்.

1999ஆம் ஆண்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமானின் மறைவின் பின்னர் அக்கட்சியின் தலைமைக்கு நியமிக்கப்பட்ட ஆறுமுகம் தொண்டமான் தோட்டத் தொழிலாளர்களின் போராட்டத் தலைவனாக அவர்களின் சம்பள உயர்விற்காக தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட தலைவராவார். குறிப்பாக இந்திய வம்சாவளியை சேர்ந்த 3 இலட்சத்திற்கும் அதிகமான தோட்டத் தொழிலாளர்களுக்கு குடியுரிமையை பெற்றுக் கொடுப்பதற்கு அவர் ஆற்றிய சேவை மகத்தானது.

ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்த ஆறுமுகம் தொண்டமான் அவர்கள் தோட்ட மக்கள் இடையே பயங்கரவாத சித்தாந்தங்கள் தோற்றம் பெற இடமளிக்கவில்லை. முப்பது ஆண்டுகால யுத்தத்தை நிறைவு செய்யும் மனிதாபிமான போராட்டத்திற்கு அது பெரும் ஆதரவாக அமைந்தது. ஆறுமுகம் தொண்டமான் அவர்கள் அனைத்து சந்தர்ப்பங்களிலும் நாட்டை பிரிக்கும் சக்திகளுக்கு எதிராக செயற்பட்டது மாத்திரமின்றி பயங்கரவாதத்தை ஒழிக்கும் செயற்பாடுகளுக்கும் அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்பட்டார். நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு அவரது அந்த ஜனநாயக பண்புகள் தீர்க்கமான தாக்கம் செலுத்தியது என்பதை இத்தருணத்தில் நினைவுபடுத்த வேண்டும்.

அமைச்சர் பதவியை பெற்றுக்கொண்ட அனைத்து சந்தர்ப்பங்களிலும் பெருந்தோட்ட மக்களுக்காக சேவையாற்றுவதற்கு முதன்மையாக செயற்பட்ட ஆறுமுகம் தொண்டமான் அவர்கள் பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கையுடன் தொடர்புடைய அத்தியவசிய தேவைகளை பூர்த்தி செய்ய போராடினார். சம்பளத்திற்கான போராட்டங்களின் போது மட்டுமன்றி தோட்ட வீடமைப்பு, சிறந்த வேலைவாய்ப்பை பெற்றுக்கொள்ளல், வைத்தியசாலை, நெடுஞ்சாலை, மின்சாரம், பாடசாலை மற்றும் பல்கலைக்கழகமொன்றை பெற்றுக் கொள்வது வரை பெருந்தோட்ட மக்களுக்கான ஒரு மாறுபட்ட அரசியல் நோக்கை அவர் கொண்டிருந்தார்.

அதேபோன்று ஆறுமுகம் தொண்டமான் அவர்கள் நாட்டை நேசித்த சிறந்த குடிமகனாவார். இன, மத, சாதி பாகுபாடின்றி செயற்பட்ட அவர் எப்போதும் மதத்திற்கு கட்டுப்பட்டு வாழ்வதற்கு மதிப்பளித்தார்.

பல இக்கட்டான சூழ்நிலைகளிலும் எம்மை கைவிடாத அவர் அரசியலில் நம்பிக்கைக்குரிய நண்பராவார்.

இறுதி தருணத்திலும் பெருந்தோட்ட மக்களுக்காக அவருக்கு இருந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் என்ற வகையில் நாம் கடமைப்பட்டுள்ளதாக நான் இந்த வேளையில் குறிப்பிட விரும்புகிறேன். அவரது புதல்வர் ஜீவன் தொண்டமான் அவரது பூட்டனாரின் வழியில் சென்று பெருந்தோட்ட மக்களுக்கும், நாட்டிற்கும் சேவையாற்றுவார் என நான் உறுதியாக நம்புகின்றேன்.” – என்றார்.

நடிகர் வடிவேல் பாலாஜியின் குடும்பத்துக்கு விஜய் சேதுபதி நிதியுதவி!

பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி உடலுக்கு விஜய் சேதுபதி நேரில் அஞ்சலி செலுத்தினார்.

சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர் வடிவேல் பாலாஜி. வடிவேலு மாதிரி கெட்டப் போட்டு நகைச்சுவை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்ததால் ‘வடிவேல் பாலாஜி’ என்று அழைக்கப்பட்டார்.

கடந்த 15 நாட்களுக்கு முன்னர் மாரடைப்பு ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வடிவேல் பாலாஜிக்கு அவருடைய கை, கால்கள் செயலிழந்தன. இதையடுத்து அவரை அரசு மருத்துவமனைக்கு மாற்றி சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி வடிவேல் பாலாஜி மரணமடைந்தார். 42 வயதாகும் அவருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

இந்நிலையில் சென்னை சேத்துப்பட்டில் உள்ள வீட்டில் வடிவேல் பாலாஜி உடலுக்கு நடிகர் விஜய் சேதுபதி நேரில் அஞ்சலி செலுத்தினார்.

நடிகர் வடிவேல் பாலாஜியின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறிய நடிகர் விஜய் சேதுபதி நிதி உதவியும் அளித்தார்.

‘எஜமானை காப்பாற்றுவதற்காக உயிரைவிட்ட நாய்’

இந்தியாவின் கேரள மாநிலம், கோட்டயம் அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை கடித்து எஜமானை காப்பாற்றிய நாய், மின்சாரம் தாக்கி உயிரிழந்தது. எஜமானரை காப்பாற்றுவதற்காக தன்னுடைய உயிரையே தியாகம் செய்த நாயின் விசுவாசம், அந்த பகுதியை சேர்ந்தவர்களை மெய்சிலிர்க்க செய்தது.

இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் கருகச் சாலையை சேர்ந்தவர் விஜயன். இவருடைய மகன் அஜேஷ் (வயது 32). இவர் தனது வீட்டில் அப்பு என்ற நாயை மிகவும் செல்லமாக வளர்த்து வந்தார். தினமும் அவர், நாயை வெளியே அழைத்துச் செல்வது வழக்கம். அப்போது அந்த நாய், அஜேஷின் முன்பு வீறு நடை போட்டு செல்லுமாம். அதே சமயத்தில் எஜமானரின் கட்டுக்குள் அந்த நாய் இருக்கும்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் காலையில் பால் வாங்குவதற்காக அஜேஷ் அருகில் உள்ள கடைக்கு புறப்பட்டார். அப்போது, அப்புவும் அவருக்கு முன்பு சென்றது. செல்லும் வழியில் மின்கம்பி ஒன்று அறுந்து கிடந்தது. இதனை கவனிக்காமல் அஜேஷ் செல்போனில் பேசிக்கொண்டு சென்றதாக தெரிகிறது.

அதே சமயத்தில் முன்னால் சென்ற நாய், கீழே ஏதோ கிடக்கிறது, அதில் எஜமானர் மிதித்து விடக்கூடாது என நினைத்து மின்கம்பியை கடித்துள்ளது. இதனால் அந்த நாய் மின்சாரம் தாக்கி அதே இடத்திலேயே துடிதுடித்து இறந்தது. இதனை பார்த்த அஜேஷ், தன்னை காப்பாற்றுவதற்காக செல்லமாக வளர்த்த நாய், உயிர் தியாகம் செய்து விட்டதே என கதறி அழுதார்.

இதுபற்றி தகவல் அறிந்த மின்வாரிய ஊழியர்கள் விரைந்து வந்து மின் இணைப்பை துண்டித்து நாயின் உடலை மீட்டனர். எஜமானரை காப்பாற்றுவதற்காக தன்னுடைய உயிரையே தியாகம் செய்த நாயின் விசுவாசம், அந்த பகுதியை சேர்ந்தவர்களை மெய்சிலிர்க்க செய்தது. மேலும் இந்த சம்பவம் பரபரப்பாக அங்கு பேசப்பட்டது.

உலக வல்லரசையே நிலைகுலைய வைத்த செப்டம்பர் – 11 தாக்குதல்

செப்டம்பர் 11. அமெரிக்கர்கள் மட்டுமல்ல. ஒட்டுமொத்த உலக மக்களாலும் மறக்க முடியாத நாள். அமெரிக்க வரலாற்று ஏடுகளில் குருதியை சிதறவிட்ட நாளாக மாறிய இந்த தினத்தில் என்ன நடந்தது?

2001 செப்டம்பர் 11. உலகின் ஒரு பகுதியில் சூரியன் மறைந்து கொண்டிருக்க, அமெரிக்காவில் பொழுது விடிந்து காலை 8 மணியை கடந்திருந்தது. நியூயார்க்கின் அடையாள கோபுரமாக வானுயர நின்று கொண்டிருந்த உலக வர்த்தக மைய கட்டடம் அடுத்த சில நிமிடங்களில் கான்கிரீட் இடிபாடுகளாக மாறப் போகும் பயங்கரத்தை அறியாமல் ஏராளமானோர் அப்பகுதியில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தனர்.

சரியாக காலை 8.46 மணிக்கு வானில் பறந்து வந்த ஒரு விமானம் உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுரத்தை தகர்த்து தீப்பிழம்புடன் எலும்புக்கூடுகளாக சாலையில் விழுந்தது. எங்கு பார்த்தாலும் அலறல் சத்தம், கொழுந்து விட்டு எரிந்த தீ, சீட்டுக் கட்டு போல சரிந்து கொண்டிருந்த இரட்டை கோபுர கட்டடம் என அடுத்தடுத்த பரபரப்புகள் அரங்கேறின.

வாஷிங்டனில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்துக்கு 81 பயணிகள் மற்றும் 11 பணியாளர்களுடன் பறந்த அமெரிக்க ஏர்லைன்ஸ் விமானத்தைக் கடத்தி, இரட்டை கோபுரத்தின்மீது மோதி வெடிக்கச் செய்தனர். ஆங்கில திரைப்படங்களை விஞ்சும் அளவுக்கு நடத்தப்பட்ட இந்த தாக்குதலை கண்டு பாதுகாப்பு அதிகாரிகளே உறைந்து போயிருந்த நிலையில், அடுத்த 18 ஆவது நிமிடத்தில் வாஷிங்டன் விமான நிலையத்தில் இருந்து 56 பயணிகள் மற்றும் 9 பணியாளர்களுடன் புறப்பட்ட மற்றொரு விமானத்தை கடத்தி காலை 9.03க்கு இரட்டை கோபுரத்தின் தெற்கு கட்டத்தின் மீது மோதினர் பயங்கரவாதிகள்.

அடுத்தடுத்த தாக்குதலால் வானுயர் கட்டடங்கள் சீட்டுக் கட்டு போல சரியத் தொடங்கின. இடிபாடுகள் விழுந்ததில் சாலையில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள் பலர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த தாக்குதல் நடந்த அதே நேரத்தில் ராணுவ தலைமையகமான பென்டகன், பென்சில்வேனியாவிலும் அல்கய்தா பயங்கரவாதிகள் விமானங்களை ஓட்டி வந்து தாக்குதல் நடத்தினர். வல்லரசு நாடான அமெரிக்காவை நிலைகுலைய வைக்கும் அளவுக்கு நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் சுமார் 3 ஆயிரம் பேர் வரை உயிரிழந்தனர்.

4 விமானங்களை கடத்தி, இரட்டை கோபுரத்தை தாக்கி, குடிமக்களையும் கொன்ற அல்கொய்தா பயங்கரவாத தலைவனான ஒசாமாவை பிடித்துக் கொல்ல, அன்றைய தினமே சபதம் மேற்கொண்டது அமெரிக்கா.

ஆட்சிகள் மாறினாலும் தேடுதல் பணியை தொய்வில்லாமல் பார்த்துக் கொண்ட அமெரிக்கப் படைகள், பாகிஸ்தானில் மறைந்திருந்தஒசாமாவை சத்தமே இல்லாமல் தேடிப் பிடித்து கடலில் ஜலசமாதி செய்து தன் நாட்டின் மீதான தாக்குதலுக்கு பழி தீர்த்துக் கொண்டது.

அமெரிக்கா மீது தாக்குதல் நடத்திய அல்கொய்தா அழிவை சந்தித்திருக்கும் நிலையில், தரைமட்டமான இரட்டை கோபுர பகுதியில் அந்த பயங்கரத்தின் சுவடுகள் மட்டும் அழியவில்லை

‘சப்ரகமுவ மாகாணத்தில் தமிழ்மொழிமூல மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி’

சப்ரகமுவ மாகாண தமிழ் மொழி மூலமான மாணவர்களுக்கு உயர்தர விஞ்ஞான, கணித பிரிவு பிரச்சினைகள் தொடர்பாக கல்வி அமைச்சர் ஜி எல் பீரிசுக்கு, இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது என்று சங்கத்தின் உப தலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.

மேற்படி கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,

சப்ரகமுவ மாகாணத்தில் உயர்தர கணித மற்றும் விஞ்ஞான பிரிவில் கல்வி கற்பதற்கு தமிழ் மொழி மூல மாணவர்களுக்கு எவ்வித பாடசாலைகளும் இன்மை தொடர்பாக கவனத்திற்கு கொண்டு வருவதோடு இது தொடர்பான தீர்வினைப் பெற்றுக்கொள்ள எமது சங்கமானது முன்னின்று செயற்படும் என்பதனையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

2022ஆம் ஆண்டிற்கான உயர்தர மாணவர்களது கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் ஆரம்பமாகி கொண்டிருக்கும் நிலையில் தமிழ் மொழி மூல மாணவர்களில் பெரும்பாலானோர் இவ்வாய்ப்பினை இழந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இப்பிரச்சினையானது நீண்ட காலமாக உள்ளதோடு இதற்கான தீர்வினை காணாமையினால் இன்று இப்பிரச்சினை பாரியளவில் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

அத்தோடு தமிழ் மொழி மூலமான மாணவர்களுக்கு அநீதி இழைத்திருப்பதோடு கல்வி கற்பதற்கான அடிப்படை உரிமையும் மீறப்பட்டுள்ளது.

72 வருடம் கடந்த நிலையில் இலங்கையின் முதலாளித்துவ ஆட்சியார்கள் இத்தகைய சிறிய பிரச்சினைக்கு தீர்வு காண முடியாமலிருப்பது வெட்கப்பட வேண்டிய விடயமாகும்.

கடந்த காலங்களில் மாணவர்களில் ஒரு பகுதியினர் வேறு மகாணங்களுக்குச் சென்று கற்றல் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில் குறித்த மாகாணங்களில் நிரந்தர வசிப்பிடமாக கொண்ட மாணவர்கள் பல்கலைக்கழக நுழைவின் போது அசாதாரணங்களும் முகம் கொடுப்பதாக குறிப்பிட்டு வெளி மாகாண மாணவர்களை உள்வாங்க முடியாது என கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளதால் பாடசாலைகளுக்கான அனுமதிகளை மாணவர்கள் இழந்துள்ளனர்.

ஆகையினால் இவ்வருடம் இது தொடர்பாக கவனத்தை செலுத்தி இவ்வாறு கற்றலுக்காக இடர்படும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக குறித்த வெளி மாகாண கல்வி அதிகாரிகளுடன் கலந்துரையாடி, சப்ரகமுவ மாகாண தமிழ் மொழி மூல விஞ்ஞான மற்றும் கணித பிரிவிற்கான ஆசிரியர் வளத்தையும், பாடசாலைகளுக்கான வசதிகளையும் ஏற்படுத்தி கொடுக்கும் வரை குறித்த வெளி மாகாண கல்வி அதிகாரிகளுக்கு சப்ரகமுவ மாகாணத்தைச் சேர்ந்த உயர்தர பிரிவிற்கான மாணவர்களுக்கான அனுமதியை வழங்க ஆணையிடுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

என கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது என சங்கத்தின் உப தலைவர் தெரிவித்தார்.

இங்கிலாந்து – ஆஸ்திரேலியா இன்று பலப்பரீட்சை!

இங்கிலாந்து-ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் இன்று நடைபெறவுள்ளது. இலங்கை நேரப்படி மாலை 5 மணிக்கு போட்டி ஆரம்பமாகும்.

ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 20 ஓவர் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்த ஆஸ்திரேலியா அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடுகிறது.

இதன்படி இங்கிலாந்து-ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகின்றது.

20 ஓவர் தொடரில் சொதப்பிய ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர் ஸ்டீவன் சுமித் ஒரு நாள் தொடரில் சாதிக்கும் முனைப்புடன் உள்ளார். அதே சமயம் இந்த சீசனில் உள்ளூரில் நடக்கும் கடைசி தொடரை வெற்றியுடன் நிறைவு செய்யும் வேட்கையுடன் இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து ஆயத்தமாக உள்ளது.

ஜோஸ் பட்லர், ஜோப்ரா ஆர்ச்சர், மார்க்வுட் ஆகிய இங்கிலாந்து வீரர்கள் கடந்த ஆண்டு உலக கோப்பையை வென்ற பிறகு முதல்முறையாக ஒரு நாள் போட்டி அணியில் இன்று களம் காண உள்ளனர். காயத்தில் இருந்து குணமடைந்து விட்ட அதிரடி வீரர் ஜாசன் ராயின் வருகை இங்கிலாந்தின் பேட்டிங் வரிசையை வலுப்படுத்தும்.

மொத்தத்தில் பலம் வாய்ந்த இரு அணிகள் மல்லுக்கட்டுவதால் ஆட்டம் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2023-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு தகுதி சுற்றான சூப்பர் லீக்கில் இந்த தொடரும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. அணியின் வெற்றிக்கு 10 புள்ளியும், டை அல்லது முடிவு கிடைக்காமல் போனால் 5 புள்ளியும் வழங்கப்படும். அந்த வகையிலும் இந்த தொடர் முக்கியத்துவம் பெறுகிறது.

162 கட்சிகளின் விண்ணப்பங்களில் 24 மட்டுமே அங்கீகரிக்கப்படும் நிலை!

இலங்கையில் புதிதாகப் பதிவு செய்வதற்காக விண்ணப்பித்த 162 அரசியல் கட்சிகளில் இருந்து 24 கட்சிகளின் விண்ணப்பங்களை மட்டுமே தேர்தல் கள் ஆணைக் குழு அங்கீகரிக்கும் நிலைமை இருப்பதாகத் தெரிகின்றது.

இலங்கையில் தற்போது 70 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் பதிவில் உள்ள நிலையில் புதிதாக பதிவு செய்வதற்காக 162 அரசியல் கட்சிகள் தேர்தல்கள் ஆணைக் குழுவிடம் விண் ணப்பம் செய்திருந்தன.

இவ்வாறுவிண்ணப்பித்த 162 விண்ணப்பங்களில் படிவ பரிசோதனையின்போதே 40 அரசியல் கட்சிகளின் படிவங்கள் நிரா கரிக்கப்பட்டன.

122 அரசியல் கட்சிகள் தேர்தல்கள் ஆணைக் குழுவினால் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டுநேர்முகத் தேர்விற்கும் அழைக்கப்பட்டன.

இவ்வாறு நேர்முகத் தேர்விற்கு உட்படுத் தப்பட்ட கட்சிகளில் இருந்தும் 27 அரசியல் கட்சிகளின் விண்ணப்பங்கள் தவிர்ந்து ஏனையவை நிராகரிக்கப்பட்டுள்ளன எனத் தெரிகின்றது.

27 அரசியல் கட்சிகளில் 20 கட்சிகள் இரண்டாம் நேர்முகத் தேர்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இதேபோன்று இரண் டாம் நேர்முகத் தேர்விற்கு மேலும் ஏழுஅரசியல் கட்சிகள் அழைக்கப்படவுள் ளன.

இவ்வாறு அழைக்கப்படவுள்ள 7 அரசி யல் கட்சிகளின் இரண்டாம் நேர்முகத் தேர்வுடன் கட்சிகள் மீதான ஆய்வு நிறைவுபெறும்.

இவ்வாறு இடம்பெற்ற ஆய்வுகள், நேர்முகத் தேர்வுகளின் அடிப்படையில் சுமார் 24 அரசியல் கட்சிகள் மட்டுமே பதிவுக்கு ஏற்றுக்கொள்ளும் நிலைமைகாணப்படுவதாக விடயமறிந்த வட்டா ரங்கள் தகவல் வெளியிட்டன.

பாராளுமன்ற அமர்வு நேரத்தில் மாற்றம்!

நாடாளுமன்ற அமர்வு நேரங்களில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி செப்டம்பர் 22 ஆம் திகதி முதல் நாடாளுமன்ற அமர்வுகள் முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகி, பிற்பகல் 5.30 மணிவரை நடைபெறும். பிற்பகல் 4.30 மணி முதல் 5.30 மணிவரை சபை ஒத்திவைப்பு பிரேரணைமீதான விவாதம் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது நாடாளுமன்றம் செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் பகல் ஒரு மணிக்கும், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் முற்பகல் 10 மணிக்கும் கூடுகின்றது. மாலை 6.30 அல்லது 7.30 மணிவரை சபை அமர்வு நடைபெறும். இந்த நேர கட்டமைப்பே அடுத்த தொடர் முதல் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடருக்கான வாய்மூல விடைக்கான கேள்விகள் எதிர்வரும் 22ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன. முற்பகல் 10.00 மணி முதல் முற்பகல் 11.00 வரையான காலம் இதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கறவைப் பசுக்களின் எண்ணிக்கை குறைவு

2018 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2019 இல் இலங்கையில் கறவைப் பசுக்களின் எண்ணிக்கை 1.8 வீதத்தாலும், கறவை எருமை மாடுகளின் எண்ணிக்கை 2.8. வீதத்தாலும் குறைவடைந்துள்ளது என்று மத்திய வங்கியின் வருடாந்த ஆண்டைறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 2019 ஆம் ஆண்டில் தேசிய பால் உற்பத்தியும் 6.3 வீதத்தால் வீழச்சி கண்டுள்ளது.

தேசிய முட்டை உற்பத்தி, கோழி இறைச்சி உற்பத்தின் ஆகியன 2019 இல் அதிகரித்துள்ளது

‘மலையக பிரதிநிதி அவசியம்’ – அதிஉயர் சபையிலும் மனோ கோரிக்கை!

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்காக நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவில் மலையக தமிழர்களின் சார்பில் பிரதிநிதி ஒருவர் கட்டாயம் உள்வாங்கப்பட வேண்டும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் இன்று பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.

”புதிய அரசியலமைப்பொன்று கொண்டுவரும் அரசாங்கத்தின் செயற்பாட்டை சாதகமாக பார்க்கின்றேன். புதிய அரசியலமைப்பை உருவாக்கும் செயற்பாடுகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவில் மலையகத்தின் சார்பில் ஒரு பிரதிநிதி இல்லை. இதனை ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு சுட்டிக்காட்டியுள்ளேன். வடக்கு, கிழக்கு சார்ந்த ஒரு தமிழ் பிரதிநிதியும் முஸ்லிம் பிரதிநிதி ஒருவரும் குழுவில் உள்ளனர்.

வடக்கு கிழக்குக்கு வெளியில் வாழும் 15 இலட்சம் இந்திய வம்சாவளி மலையக மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்காக மலையக பிரதிநிதியொருவர் கட்டாயம் உள்வாங்கப்பட வேண்டும்” என்றும் மனோ கணேசன் குறிப்பிட்டார்.

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

‘கடல் கடந்த இந்தியக் குடியுரிமை’ – இந்திய அரசுக்கு இதொகா நன்றி!

0
இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மக்கள் கடல் கடந்த இந்தியக் குடியுரிமையை பெற்றுக் கொள்வதற்கான நடைமுறையை இலகுபடுத்தியுள்ள இந்திய அரசாங்கத்துக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், முன்னாள் பாராளுமன்ற...

வரலாறு படைத்த தமிழக தேர்தல்: 84,29 சதவீத வாக்கு பதிவு!

0
2026 தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில், மாலை 6 மணி நிலவரப்படி 84.41% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக கரூரில் 91.97% வாக்குகள் பதிவாகியுள்ளன. குறைந்தபட்சமாக கன்னியாகுமரியில் 75.48% வாக்குகள் பதிவாகியுள்ளன. 6 மணிக்குப் பின் டோக்கன்...

ஹார்முஸ் நீரிணையில் கண்ணிவெடி வைக்கும் படகுகளை அழிக்க ட்ரம்ப் உத்தரவு!

0
ஹார்முஸ் நீரிணையில் கண்ணிவெடிகளை வைக்கும் படகுகளை சுட்டு வீழ்த்துமாறு அமெரிக்க கடற்படைக்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். ஈரானுக்கு அருகிலுள்ள முக்கிய கடல் பகுதியில் சிறிய ரக படகுகள் இத்தகைய செயல்களில் ஈடுபட்டால், தயக்கமின்றி...