Home Blog Page 3912

சிறிகொத்தவை எமக்கு தந்துவிடுங்கள் – வடிவேல் சுரேஷ்

” பொதுத்தேர்தலில் பதுளை மாவட்டத்தில் எனது முதல்நிலை வெற்றியை உறுதிப்படுத்திக் கொடுத்த எனது தொப்புள் கொடி உறவுகள் அனைவருக்கும் எனது சிரம் தாழ்த்திய, உணர்வுப் பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.” – என்று வடிவேல் சுரேஸ் தெரிவித்தார்.

அவரது இல்லத்தில் நடைபெற்ற ஆதரவாளர்கள் சந்திப்பின்போதே இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

“ எனதும், அண்ணன் அரவிந்தகுமாரின் வெற்றிகளைத் தடுப்பதற்கு பல்வேறு வகையில் மேலினவாதிகளை விட எம்மவர்களே பாரிய பிரயத்தனங்களை மேற்கொண்டிருந்தனர். ஒப்பந்த அடிப்படையில் சுயேச்சைக் குழுக்களை பேரினவாதிகள் களம் இறக்கியிருந்தனர்.

குறிப்பாக எம்மிருவரது வெற்றியைத் தடுப்பதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அம் முயற்சிகள் அனைத்தையும் எனது தொப்புள் கொண்டி உறவுகள் முறியடித்து, எம்மிருவரையும் முதல் நிலையிலேயே, வெற்றியடைய வைத்தனர். அத்துடன், எமக்கு எதிராக செயற்பட்ட அனைவரையும் மண் கவ்வச் செய்தார்கள்.

எமது வெற்றியைத் தடுப்பதற்கு செயற்பட்ட சுயேச்சைக் குழுக்களுக்கு தகுந்த பாடத்தினை எமது உறவுகள் புகட்டிவிட்டனர். அக் குழுக்கள் ஏற்பட்ட பாரிய பின்னடைவிலிருந்து அவர்களினால் மீளவே முடியாது. அந்தளவில் எமது மக்களின் செயற்பாடுகள் அமைந்துவிட்டன.

எமது நாட்டின் பிரதான தேசியக் கட்சியொன்றில் சிறுபான்மையினத்தாரின் பெறுமதி மிக்க வாக்குகளினால் முதல் நிலையில் தமிழர்கள் இருவருமே வெற்றிபெற, எம்மக்கள் பூரண பங்களிப்புக்களை வழங்கினர்.

நான் 49 ஆயிரத்து எழுநூற்று அறுபத்தி இரண்டு வாக்குகளைப் பெற்று முதல் நிலையில் வெற்றி பெற்றதுடன் எனக்கு அடுத்த படியாக 45 ஆயிரத்து நானூற்று தொன்னூற்று ஒரு வாக்குகளை, அண்ணன் அரவிந்தகுமாரும் பெற்றுள்ளார். இதனை எம்மால் என்றுமே மறக்க முடியாது.

அத்துடன் ரணில் விக்கிரமசிங்கவின் கட்சியையும் நாட்டு மக்கள் அனைவருமே, புறக்கணித்து விட்டனர். இதற்கு பின்பும் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவரது குழுவினரால், எம்மை ஆட்டிப் படைக்க முடியாது.

ஶ்ரீகொத்தவை ஐக்கிய மக்கள் சக்தியிடம் ஒப்படைக்க வேண்டும். அத்துடன் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தையும் எமது பொறுப்பில் விடப்படல் வேண்டும். தவறின் ஜனநாயக ரீதியிலான பாரிய எதிர் விளைவுகளை ரணில் விக்கிரமசிங்கவுவும், அவரது குழுவினரும் அனுபவிக்க நேரிடும்.” – என்றார்.

‘கொரோனா’வின் பிடிக்குள் இருந்து 2,576 பேர் மீண்டனர்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 12 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்.

இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 2,576 ஆக அதிகரித்துள்ளது.

252  பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

‘தோல்வியடைந்தவர்களுக்கு தேசியப்பட்டியலில் இடமில்லை’ – சஜித் திட்டவட்டம்

தேர்தலில் தோல்வியடைந்த எந்தவொரு வேட்பாளருக்கும் தேசியப்பட்டியல் ஊடாக நியமனம் வழங்கப்படமாட்டாது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அத்துடன், ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமைப்பதவியை பொறுப்பேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டால் அது தொடர்பில் பரீசிலிக்கப்படும் எனவும், சிறிகொத்தவை பலவந்தமாக கைப்பற்றும் எண்ணம் எதுவும் இல்லை எனவும் அவர் கூறினார்.

பொதுத்தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் இன்று சஜித் பிரேமதாச ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டார். இதன்போது தேசியப்பட்டியல் விவகாரம் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

‘கண்டி மாவட்டத்துக்கான எனது சேவை தொடரும்’ – பாரத்

கண்டி மாவட்டத்தில் முதன் முறையாக போட்டியிட்ட எனக்கு எவ்வித மத, இன பேதங்களுமின்றி என் மீது நம்பிக்கை வைத்து ஒரே மாதத்தில் 23000 இற்கு அதிகமான வாக்குகளை அளித்த அனைத்து மக்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன் என கண்டி மாவட்டத்தில் போட்டியிட்ட பாரத் அருள்சாமி தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
“இது கண்டி மாவட்ட இளைஞர் யுவதிகளுக்கான வெற்றி. கண்டி மாவட்டத்தில் போட்டியிட்டு பாராளுமன்றத்திற்கு தெரிவாகாத போதிலும்  போதிலும் 2/3 பெரும்பான்மைக் கொண்ட எங்களுடைய அரசாங்கத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் அங்கம் வகிப்பதால் அவரின் ஊடாக கண்டியில் நான் முன் வைத்த அனைத்து அபிவிருத்தித் திட்டங்களும் முறையாக முன்னெடுக்கப்படும்.
அரசாங்கத்தின் சார்பில் கண்டியில் போட்டியிட்ட எனக்கு மக்களின் பேரதரவு கிடைத்துள்ள போதிலும் கண்டி வாழ் தமிழ் பேசும் மக்கள் எதிர்க் கட்சியின் மீது அதிக நம்பிக்கை வைத்து எதிர்கட்சியில் ஒரு பிரதிநிதியை பாராளுமன்றம் அனுப்பியிருந்தாலும் அவரினால் கண்டியில் இனி வரும் காலங்களில் எவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்பதை மக்களுடன் இணைந்து நாங்கள் தொடர்ந்து அவதானிப்போம்.
எவ்வாறாயின் நான் பாராளுமன்ற வேட்பாளராக நான் முன்வைத்த அனைத்து செயற்பாடுகளையும் என்னை நம்பி வாக்களித்த மக்கள் ஊடாக அனைத்து கண்டி வாழ் மக்களுக்காக நிறைவேற்றுவேன்.
இனிவரும் காலங்களில் கண்டியில் முன்னெடுக்கப்படும் வீடமைப்புத் திட்டமாக இருக்கட்டும் அல்லது அபிவிருத்தித்திட்டங்களாக இருக்கட்டும் அனைத்தும் எங்களின் ஊடாக சிறப்பாக முன்னெடுப்போம்.
கண்டியில் இதுவரை காணப்பட்ட இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தேர்தலின் ஊடாக மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளதால் கண்டி வாழ் மக்களுக்கான அனைத்து உரிமைகள் மற்றும் வசதிகளையும் அரசாங்கத்திடமிருந்து பெற்றுக் கொடுக்க தயார் நிலையில் உள்ளோம்.
கண்டியில் நான் புதுமுகமாக இருந்த போதிலும் என் மீது அதீத நம்பிக்கைக் கொண்டுள்ள கண்டி வாழ் மக்களுக்கு இனி வரும் காலங்களிலும் நான் தொடர்ந்து நம்பிக்கையுடன் சேவையாற்றுவேன்.” – என்றார்.
க.கிசாந்தன்

நாமல் வசமாகிறது இளைஞர் விவகார அமைச்சு!

இளைஞர் விவகார மற்றும் தொழில்பயிற்சி அமைச்சராக நாமல் ராஜபக்ச நியமிக்கப்படவுள்ளார் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை எதிர்வரும் 14 ஆம் திகதி கண்டி தலதாமாளிகையிலுள்ள பாரம்பரிய மண்டபத்தில் பதவியேற்கவுள்ளது.

இதன்போதே நாமல் ராஜபக்சவும் அமைச்சராக பதவியேற்கவுள்ளார். 2010, 2015 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் நாமல் ராஜபக்ச வெற்றிபெற்றிருந்தாலும் அவருக்கு எவ்வித பதவிகளும் வழங்கப்படவில்லை.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே இம்முறை அவர் அமைச்சரவைக்கு உள்வாங்கப்பட்டுள்ளார்.

மைத்திரி, பீரிஸ், நிமலுக்கு அமைச்சுப்பதவிகள்! 14 இல் அமைச்சரவை பதவியேற்பு!!

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை எதிர்வரும் 14ஆம் திகதி பதவியேற்கும் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் அமைச்சரவையின் எண்ணிக்கை 30 ஆக இருக்கின்றபோதிலும் 26 பேருக்கு மாத்திரமே அமைச்சுப்பதவி வழங்கப்படவுள்ளது எனவும் தெரியவருகின்றது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நிமல்சிறிபாலடி சில்வா, ஜீ.எஸ். பீரிஸ் ஆகியோருக்கு அமைச்சுப்பதவிகள் வழங்கப்படவுள்ளன.

 

ராசி இல்லாத ராஜா – அரசியலில் ரணில் கடந்துவந்த பாதை….!

இலங்கை அரசியல் வரலாற்றிலேயே தொடர்ச்சியாக  42 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்து சாதனை படைத்துள்ள ரணில் விக்கிரமசிங்க, கொழும்பு மாவட்டத்தில் 5 பொதுத்தேர்தல்களில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றும் சாதனை நிகழ்த்தியிருந்த நிலையில் இம்முறை படுதோல்வியடைந்துள்ளார். இது ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் வாழ்வில் பெரும் தோல்வியாகக் கருதப்படுகின்றது.

ஐக்கிய தேசியக்கட்சிக்கு தேசியப்பட்டியல்மூலம் ஆசனமொன்று கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், அதன் ஊடாக ரணில் விக்கிரமசிங்க சபைக்கு வருவார் என எதிர்ப்பார்க்கப்பட்டாலும் மக்கள் நீதிமன்றம் முன் அவர் தோல்வியடைந்துள்ளார்.

அரசியலில் தந்திரம், மந்திரம், நெளிவு, சுழிவு, சூழ்ச்சி, சதி என அத்தனை அம்சங்களையும் கரைத்து குடித்துள்ள ரணில் விக்கிரமசிங்க, கால்நூற்றாண்டுக்கு மேலாக ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமைப்பதவியையும் தக்கவைத்துக்கொண்டுள்ளார்.

இதுவும்கூட ஒருவகையான சாதனையாகவே பார்க்கப்படுகின்றது. ஏனெனில் இதற்கு முன்னர் ஐ.தே.கவுக்கு தலைமை தாங்கியவர்கள் இத்தனை ஆண்டுகள் பதவியில் நீடிக்கவில்லை.

1947  முதல் 2015 வரை நடைபெற்றுள்ள 15 பொதுத்தேர்தல்களிலும் ஐக்கிய தேசியக்கட்சி யானை சின்னத்திலேயே போட்டியிட்டது. இதில் 5 தேர்தல்களுக்கு ரணில் விக்கிரமசிங்க தலைமை வழங்கியுள்ளார். இரண்டு தேர்தல்களில் மட்டுமே ஐ.தே.கவால் வெற்றிநடைபோடமுடிந்தது. (2001,2015).

இதற்கு முன்னரும் ஐக்கிய தேசியக்கட்சிக்குள் பிளவுகள் ஏற்பட்டிருந்தன. முக்கிய உறுப்பினர்கள் வெளியேறியிருந்தனர். ஆனால், சஜித் தலைமையிலான அணியின் வெளியேற்றமே பெரும் தாக்கமாக கருதப்படுகின்றது. பொதுத்தேர்தலில் ஒரு தொகுதியைக்கூட கைப்பற்றமுடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக ஐக்கிய தேசியக்கட்சியால் பிரதான எதிர்க்கட்சி என்ற பதவியைக்கூட தக்கவைத்துக்கொள்ள முடியாமல் போயுள்ளது, கொழும்பு மாவட்டத்தில் விருப்புவாக்கு பட்டியலில் ரணிலுக்கு இடமே இல்லை என்ற நிலையும் ஏற்பட்டுள்ளது.

ரணில் சந்தித்த பொதுத்தேர்தல்கள்…….

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க 1970 ஆம் ஆண்டுமுதல் செயற்பாட்டு அரசியலில் இறங்கினாலும் 1977 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில்தான் முதல் தடவையாக போட்டியிட்டார்.

1977 ஜுலை 21 ஆம் திகதி நடைபெற்ற பொதுத்தேர்தலில் கம்பஹா மாவட்டத்திலுள்ள பியகம தொகுதியில் – கன்னி தேர்தலை எதிர்கொண்ட ரணில் விக்கிரமசிங்க, 22 ஆயிரத்து 45 வாக்குகளைப் பெற்று பாராளுமன்ற அரசியல் பயணத்தை ஆரம்பித்தார். இத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி ஆறில் ஐந்து பெரும்பான்மையைப்பெற்றது. ஜே.ஆர்.ஜயவர்தனவே தலைமைத்துவம் வழங்கினார்.

1978 இல் புதிய அரசியல் யாப்பு இயற்றப்பட்ட பின்னர், சர்வஜன வாக்கெடுப்புமூலம் பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் மேலுமொரு தவணைக்கு நீடிக்கப்பட்டதால்  பொதுத்தேர்தல் 1989 இல்தான் நடைபெற்றது. இத்தேர்தலிலும் ரணில் விக்கிரமசிங்க கம்பஹா மாவட்டத்தில் களமிறங்கினார். 86 ஆயிரத்து 477 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார்.

ரணசிங்க பிரேமதாச தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சியே தேர்தலில் வெற்றிபெற்றது. கொழும்பு மாவட்டத்தையும் கைப்பற்றியது.

1994 ஆகஸ்ட் 16 ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் களமிறங்கிய ரணில் விக்கிரமசிங்க, 2 லட்சத்து 91 ஆயிரத்து 194 வாக்குகளைப்பெற்று மாவட்டத்தில் முதலிடம் பிடித்தார். எனினும், இத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி தோல்விகண்டது. சந்திரிக்கா தலைமையிலான மக்கள் கூட்டணி வெற்றிபெற்றது. கொழும்பு மாவட்டத்தில் ஐ.தே.க. இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டது.

இத்தேர்தலின் பின்னர் 1994 இல் கட்சி தலைவராக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டார். கட்சியிலிருந்து வெளியேறி மீண்டும் தாய்வீடு திரும்பிய காமினி திஸாநாயக்க பிரதான எதிர்க்கட்சி தலைவரானார்.

2000 ஒக்டோபர் 10 ஆம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் பிரதம வேட்பாளராக கொழும்பு மாவட்டத்தில் களமிறங்கிய ரணில் விக்கிரமசிங்க 3 லட்சத்து 63 ஆயிரத்து 668 வாக்குகளைப்பெற்றார். இத்தேர்தலில் மக்கள் கூட்டணி வெற்றிபெற்றிருந்தாலும் கொழும்பு மாவட்டத்தில் ஐ.தே.கவே வெற்றிநடைபோட்டது. 10 ஆசனங்களைக் கைப்பற்றியது.

எனினும், 11 மாதங்களில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு,2001 டிசம்பர் 05 ஆம் திகதி தேர்தல் நடைபெற்றது.  இத்தேர்தலில் ஐ.தே.க. வெற்றிபெற்றது. 4 லட்சத்து 15 ஆயிரத்து 686 வாக்குகளைப்பெற்று கொழும்பு மாவட்டத்தில் ரணில் விக்கிரமசிங்க முதலிடம் பிடித்தார். ஐ.தே.க.வே கொழும்பு மாவட்டத்தில் வெற்றிநடைபோட்டது.

2004 ஏப்ரல் 02 ஆம் திகதி நடைபெற்ற பொதுத்தேர்தலில் கொழும்பில் போட்டியிட்ட ரணில் விக்கிரமசிங்க, 3 லட்சத்து 29 ஆயிரத்து 524 விருப்பு வாக்குகளைப்பெற்று வெற்றிபெற்றார். இத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வெற்றிபெற்றிருந்தாலும் கொழும்பு மாவட்டத்தில் ஐ.தே.கவே வெற்றிக்கொடி நாட்டி, 9 ஆசனங்களைக் கைப்பற்றியது.

2010 நடைபெற்ற பொதுத்தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் களமிறங்கிய ரணில் விக்கிரமசிங்க, 2 லட்சத்து 32 ஆயிரத்து 957 வாக்குகளைப்பெற்று ஐ.தே.க. பட்டியலில் முதலிடம் பிடித்தாலும் மாவட்டத்தில் இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டார். விமல்வீரவன்ஸவே முதலிடம் பிடித்தார். கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியே 10 ஆசனங்களைக் கைப்பற்றி முன்னிலை வகித்தது.

2015 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் ரணில் விக்கிரமசிங்க வரலாற்று வெற்றியைப் பதிவுசெய்தார். 5 லட்சத்து 566 விருப்பு வாக்குகளைப் பெற்றார். பொதுத்தேர்தலில் வேட்பாளர் ஒருவர் பெற்ற அதிகூடிய விருப்பு வாக்குகள் இதுவாகும்.

இதற்கு முன்னர் 1994 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் சந்திரிக்கா அம்மையார் கம்பஹா மாவட்டத்தில் 4 லட்சத்து 64 ஆயிரத்து 588 வாக்குகளைப் பெற்றிருந்தார்.கொழும்பு மாவட்டத்திலும் ஐ.தே.கவே கோலோச்சியது.

2020 பொதுத்தேர்தலில் அவர் தோல்வியடைந்துள்ளார்.

10 தமிழர்கள் உட்பட முன்னாள் எம்.பிக்கள் பலர் ‘அவுட்’!

பொதுத்தேர்தலில் 60 இற்கும் மேற்பட்ட முன்னாள் எம்.பிக்கள் தோல்வியடைந்துள்ளனர்.

ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் போட்டியிட்ட 16 பேரும், ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் களமிறங்கிய 26 பேரும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் போட்டியிட்ட 15 பேரும், தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட மூவருமே இவ்வாறு தோல்வியடைந்துள்ளனர்.

அதன் விபரம் வருமாறு,

கொழும்பு மாவட்டம்

ஐக்கிய தேசியக்கட்சி

1.ரணில் விக்கிரமசிங்க
2.ரவி கருணாநாயக்க
3. தயாகமகே

ஐக்கிய மக்கள் சக்தி

1.ஹிருணிக்கா பிரேமச்சந்திர
2.சுஜீவ சேனசிங்க
3.பௌசி

கம்பஹா மாவட்டம்

ஐக்கிய தேசியக்கட்சி
1.அர்ஜுன ரணதுங்க
2.ருவான் விஜேவர்தன

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன
1.துலித் விஜேசேகர

ஐக்கிய மக்கள் சக்தி
1.அஜித் மானப்பெரும
2.வஜித் விஜயமுனி சொய்சா
3.சதுர சேனாரத்ன
4.எட்வட் குணசேகர

களுத்துறை மாவட்டம்

ஐக்கிய தேசியக்கட்சி
1.பாலித தெவரப்பெரும
2.லக்‌ஷ்மன் விஜேமான்ன

ஐக்கிய மக்கள் சக்தி
1.அஜித் பி பெரேரா

தேசிய மக்கள் சக்தி

1.நளின் ஜயதிஸ்ஸ

காலி மாவட்டம்

ஐக்கிய தேசியக்கட்சி

1.வஜிர அபேவர்தன

ஐக்கிய மக்கள் சக்தி

1.விஜேபால ஹெட்டியாராச்சி
2.பந்துலால் பண்டாரிகொட
3.பியசேன கமகே

மாத்தறை மாவட்டம்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன

1.லக்‌ஷ்மன் யாப்பா அபேவர்தன
2.மனோஜ் சிறிசேன
3.நிரோஷன் பிரேமரத்ன

தேசிய மக்கள் சக்தி

1.சுனில் ஹத்துனெத்தில்

அம்பாந்தோட்டை மாவட்டம்

1. நிஹால் கலப்பதி – தேசிய மக்கள் சக்தி

குருணாகலை மாவட்டம்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன

1.எஸ்.பி. நாவின்ன
2.பஸ்நாயக்க
2.டி.பி. ஏக்கநாயக்க

ஐக்கிய தேசியக்கட்சி
1.அகில விராஜ் காரியவசம்

ஐக்கிய மக்கள் சக்தி
1.இந்திக்க பண்டாரநாயக்க

புத்தளம் மாவட்டம்

பாலித ரங்கே பண்டார – ஐ.தே.க.
சாந்த அபேசேகர – ஐ.ம.ச.

அநுராதபுரம் மாவட்டம்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன

1. வீரகுமார திஸாநாயக்க
2.எஸ்.ஏ. முத்துகுமாரன

ஐக்கிய மக்கள் சக்தி

1. சந்ராணி பண்டார
2.பி. ஹரிசன்
3. சந்திம கமகே

பொலன்னறுவை மாவட்டம்

1. ஐக்கிய தேசியக் கட்சி
நாலக கொலன்னே

ஐக்கிய மக்கள் சக்தி
1.எஸ். ஜயரத்ன

பதுளை மாவட்டம்

ஐக்கிய மக்கள் சக்தி

1. லக்‌ஷ்மன் செனவிரத்ன
2.ரவி சமரநாயக்க

மொனறாகலை மாவட்டம்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன
1.பத்ம உதயசாந்த குணசேகர
2.சுமேதா ஜயசிங்க

ஐக்கிய மக்கள் சக்தி
1.ஆனந்தகுமாரசிறி

நுவரெலியா மாவட்டம்

ஐக்கிய தேசியக்கட்சி

1.நவீன் திஸாநாயக்க
2.கே.கே. பியதாச

மாத்தளை மாவட்டம்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன
1.லக்‌ஷ்மன் வசந்த பெரேரா

ஐக்கிய மக்கள் சக்தி
1.வசந்த அளுவிகார
2.ரஞ்சித் அளுவிகார

கேகாலை மாவட்டம்

ஐக்கிய தேசியக்கட்சி
1.சந்தீப சமரசிங்க

ஐக்கிய மக்கள் சக்தி
1.துசிதா விஜேமான்ன

இரத்தினபுரி மாவட்டம்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன
1.துனேஷ் கங்கந்த

ஐக்கிய மக்கள் சக்தி
1.கருணாரட்ன பரணவித்தாரன
2.ஏ.ஏ. விஜேதுங்க

மட்டக்களப்பு மாவட்டம்

தமிழரசுக்கட்சி

1.எஸ். யோகேஸ்வரன்
2.எஸ். ஶ்ரீநேசன்

முஸ்லிம் காங்கிரஸ்
1.அலிசாஹீர் மௌலானா

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்
1.அமீர் அலி

திருகோணமலை மாவட்டம்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன

1.சுதந்த புஞ்சி நிலமே

ஐக்கிய மக்கள் சக்தி
1.அப்துல் மஹ்ரூப்

யாழ்.மாவட்டம்

ஐக்கிய தேசியக்கட்சி
1.விஜயகலா மகேஸ்வரன்

தமிழரசுக்கட்சி
1.மாவை சேனாதிராஜா
2.ஈ.சரவணபவன்

அம்பாறை

ஐக்கிய தேசியக்கட்சி
1.அனோமா கமகே

தமிழரசுக்கட்சி
1.கோடிஸ்வரன்

கண்டி மாவட்டம்

ஐக்கிய மக்கள் சக்தி

1.லக்கி ஜயவர்தன

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன

2.ஆனந்த அளுத்கமகே

யாழ்ப்பாணம் மாவட்டம்

தமிழரசுக்கட்சி

1.மாவைசேனாதிராஜா

2.ஈ.சரவணபவன்

வன்னி மாவட்டம்

தமிழரசுக்கட்சி

1.சிவமோகன்

2.சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா

1.சிவசக்தி ஆனந்தன்

 

மல்லியப்புச்சந்தி திலகர் வேண்டும் #WeNeedthilagar

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் தேசியப் பட்டியல் ஊடாக உள்ளீர்க்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதற்காக #WeNeedthilagar என்ற ஹேஷ் டெக் ஒன்று உருவாக்கப்பட்டு, இதன்மூலமும் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டு வருகிறது.

ஐக்கிய மக்கள் சக்தியில் தேசிய பட்டியல் வழங்கப்பட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜவுக்கு உறுதியளிக்கப்பட்டது போல தேசிய பட்டியலை வழங்க வேண்டுமென பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மயில்வாகனம் திலகராஜ் நாடாளுமன்ற காலத்தில் சிறப்பாக செயற்பட்டிருந்ததோடு, நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களில் அதிக முறை நாடாளுமன்றத்தில் மக்களின் பிரச்சினைகள் குறித்தும் பேசியிருந்தார்.

இந்த நிலையில், #WeNeedthilagar என்ற ஹேஷ் டெக் பகிரப்பட்டு வருகிறது.

‘ஒரு லட்சத்துக்கும்மேல் விருப்புவாக்கு பெற்ற ஒரேயொரு தமிழ் வேட்பாளர்’

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் தலைமையில் 5 ஆசனங்களைக்கைப்பற்றி நுவரெலியா மாவட்டத்தில் தாமரை மொட்டு கூட்டணி வெற்றிவாகை சூடியுள்ளமை பல தரப்புகளினதும் பாராட்டுகளை பெற்றுள்ளது.

குறிப்பாக 10 ஆண்டுகளுக்கு பிறகே ராஜபக்ச தரப்புக்கு நுவரெலியா மாவட்டத்தில் முதலிடத்தை பெறக்கூடிய சூழ்நிலை இம்முறை உதயமானது. ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச அமோக வெற்றிபெற்றிருந்தாலும் மொட்டு கட்சியால் நுவரெலியாவை வெல்லமுடியாமல்போனது.

இந்நிலையிலேயே அந்நிலைமையை ஜீவன் மாற்றியமைத்துள்ளார். அவர் தலைமையில் களமிறங்கிய மொட்டு அணி மாவட்டத்தை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

அதேவேளை, ஜீவன் தொண்டமான்  109,155 விருப்பு வாக்குகளை பெற்று மாவட்டத்தில் முதலிடம் பிடித்தார். பொதுத்தேர்தலில் போட்டியிட்ட தமிழ் வேட்பாளர்களில் ஒரு லட்சத்துக்கும் மேல் அதிக விருப்புவாக்குகளைப்பெற்ற ஒரேவொரு வேட்பாளர் ஜீவன் தொண்டமானாகும். அதுவும் 26 வயதில் அவர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

இளம் தலைமைத்துவம்மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையின் பலனாகவே இந்த வெற்றி கிடைத்துள்ளது எனவும், எனவே, சமூகத்துக்கு தலைமைதாங்கக்கூடிய வல்லமை ஜீவனுக்கு இருக்கின்றது எனவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

இன்று மதியமும் அடை மழை!

0
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அநுராதபுரம் மாவட்டத்திலும்...

நோர்வூட் பகுதியில் மின்னல் தாக்கி வயோதிபர் பலி!

0
நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரொக்வூட் தோட்டத்தில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு 7 மணியளவிலேயே அவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது. 86 வயதான வயோதிபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவர் கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு...

மரக்கறி விலைப்பட்டியல் (21.04.2026)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (21) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...